
தனியார் கல்வி நிறுவனங்களின் துறை சார்பில் தாய்லாந்து கல்வியியல் அதிகாரிகள் ஒரு அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்கள்..
எல்லா தனியார் வெக்கேஷனல் பள்ளிகளிலும் பெண்கள் கெளரவமாக உடை அணியும்வரை பள்ளி/கல்லூரிகள் மூடப்படும் என்பதே..
பாங்காக் நகரின் பொதுமக்கள் பலரிடமிருந்து வந்துள்ள புகார்கள் பெண்களின் குட்டப்பாவாடை மிக சங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்..
நகரின் முக்கிய சிறந்த பள்ளிகளில் பாவாடை முட்டிக்கு கீழ் இருக்கவேண்டும், சட்டைகள் தொள தொள எனவும் உடம்போடு ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு..
சட்டத்தை மீறி கவர்ச்சியாக உடை அணிந்து வரும் பெண்களை பார்க்க நேர்ந்தால் அப்படி அனுமதிக்கும் கல்லூரி / பள்ளிகளை மூடப்போவதாக தனியார் கல்வி நிறுவன உயர்மட்டகுழு அறிவித்துள்ளது..
அதிகமாய் கவர்ச்சியை காட்டுவதன் மூலம் , நாட்டில் அதிக குற்றங்கள் ஏற்பட வாய்ப்பளிப்பதாகவும், பெற்றோரும் தங்கள் குழந்தைகள் உடையில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்..
படங்கள் நன்றி - http://www.thaivisa.com/
5 comments:
good work :))) indiala eppa varapotho ippadi oru sattam
hehee
எங்கள் பழக்கவழக்கங்களை நாங்களே கிண்டல் அடிக்கிறோம். ஆனால், மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். என்னத்த சொல்ல.
அப்ப பாங்காக் ட்ரிப்ப கேன்சல் பண்ணிட வேண்டியதுதானா? :(
:)
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அப்ப பாங்காக் ட்ரிப்ப கேன்சல் பண்ணிட வேண்டியதுதானா? :(
-----------
நன்றி எல்.கே. ரமேஷ் , அனாமிகா , சங்கர்..
ஆமா சங்கர்ஜீ , இப்ப வேண்டாம் , பேரப்புள்ளைகளோட குடும்பமா வாங்க..
:))))))))
Post a Comment