Thursday, January 21, 2010

சிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..




சிக்கு புக்கு ரயில் அண்ணா..




[ என் மகனுக்கு தினசரி கதை சொல்வது வழக்கம்.. சொல்லாவிட்டால் தூங்க மாட்டார்..இதற்காக நானும் பெரிதாக தயாரித்துவைத்துக்கொள்ளவும் முடியாது.. படுத்ததும் கற்பனையில் என்ன தோணுதோ அதுதான் கதை..

அப்படி நேற்று இந்தக்கதையை சொன்னதும் அவருக்கு ரொம்ப பிடித்து ரயில் அண்ணாவோடு
ஒன்றிவிட்டார்.. இதே போல மரங்கள் விலங்குகளோடும்..

அவருக்கு சொன்ன கதைகளை , பாட்டுகளை வைத்து ஒரு புத்தகமே போட்டிருக்கலாம்..:)
இப்பவாவது சில கதைகளை எழுதி வைக்கலாம்னு தோணியது..

இக்கதைகளை படிக்குமுன்பு 4-5 வயது சிறுவறாய் மாறிடுங்கள் ரசித்திட..]


" கூஊஊஊஊஊஊஊஊ. குச்...குச்...குச்...குச்.................."

" வந்தாச்சு வந்தாச்சு ரயில் அண்ணா , வந்தாச்சு...."


" பேராண்டி ஒனக்கும் ரயில் அண்ணாவா?.. எங்களுக்குத்தான் அவர் அண்ணா. உங்களுக்கெல்லாம் ரயில் மாமா.."


" இல்ல தாத்தா எங்களுக்கும் ரயிலண்ணா தான் .."

" என்ன முத்தையா சார், பேரப்பிள்ளையோடு பேரம் ? ." ரயிலண்ணா..

இப்படித்தான் அந்த தானியங்கி ரயில் எல்லோர் மனதிலும் உறவாய் ஆக்கிரமித்திருந்தது கடந்த பல வருடங்களாக... மலை தேச ரயில் மட்டுமல்ல , இதுவரை ஒருமுறை கூட விபத்து ஏற்படாமல் பயணிகளை பத்திரமாக சேர்ப்பதோடு அவர்களுக்கு பிடித்த வளைவு நெளிவான மலைகளில் நிறுத்தி நிதானமாக இயற்கை எழில் காட்சிகளை கண்டுகளித்திடவும் செய்வார் ரயிலண்ணா.

ஆறிலிருந்து அறுபது வரை அவருக்கு விசிறிகள் உண்டு...


ரயிலில் ஏறி அமர்ந்ததுமே இசைக்க ஆரம்பித்துவிடுவார்... அந்த மகிழ்ச்சியில் இணைந்து பயணிகளும் தாளத்துக்கேற்ப பாடலோடு ஆடவும் ஆரம்பித்திடுவார்கள்.. ரயிலை யாரும் அசுத்தப்படுத்துவதும் கிடையாது.. கீழே இறங்குமுன் தன்னால் முடிந்தளவு சுத்தப்படுத்திவிட்டே செல்வார்கள்.. இதை காணும் ரயிலண்ணாவுக்கு விழிகளில் நீர் முட்டும்... அதை அவர் சில சமயம் ஆவியாய் வெளியிடுவார்...

இப்படி மகிழ்வோடு இருந்த நாளில் வந்தது சோதனை...
நீலகிரி மலையில் சென்று கொண்டிருந்தபோது கனத்த மழையினால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தமையால் கவனமாகவே சென்ற ரயிலண்ணா சிறிது தடம் புரண்டுவிட்டார்... உடனே நிறுத்தியும் விட்டார், பயணிகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல்... எல்லோரும் இறங்கி வந்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புவதுமாய் பாதையை செப்பனிட உதவுவதுமாய் இருந்தார்கள்..

அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு இந்த ரயிலுக்கு வயதாகிவிட்டது கேரேஜில் வைத்திடலாம் என அறிக்கை சமர்ப்பித்து சென்றார்கள்..

கேரேஜில் வைக்கப்பட்ட ரயிலண்ணாவுக்கு மிகுந்த கவலையாகிவிட்டது...ஆனாலும் அங்கும் வந்து குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பத்தோடு வந்து விளையாடி சென்றனர்.. இருப்பினும் ரயிலண்ணா கவலை தீரவில்லை...

இதை கவனித்த குழந்தைகள்


" ரயிலண்ணா, ரயிலண்ணா, ஏன் முன்பு மாதிரி நீங்க மகிழ்ச்சியா இல்லை ?.."


" குழந்தைகளே , எனக்கு இன்னும் நல்ல தெம்பு இருக்குது பயணம் செய்ய.. ஆனால் சின்ன விபத்தால் என்னை இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டார்கள்.
ஏதோ புது ரயில் வரப்போகிறதாம்.. அதான் ... என்னோட உறவுகள் ஒவ்வோரு ஊரிலும் இருக்காங்களே அவர்களெல்லாம் என்னை தேடுவார்களே.. இப்படி சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டால் அவர்கள் பாடு பரிதாபமல்லவா?.." என வருந்தியது...

" அழாதீங்கண்ணா ...நாங்கல்லாம் இருக்கோம்.."

[[ இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னவருக்கு பொத்துக்கொண்டு வருது வீரமும் , சோகமும்..... அதுவரை ..ம்..ச்.. கொட்டிக்கொண்டிருந்தவர் , " நான் அந்த கேரேஜை திறந்து அந்த ரயிலண்ணாவை
உடனே விடுவித்துவிட்டு வெளியில் ஓட செய்வேனே... ".. பொறுமை பொறுமை என அடக்கவேண்டியிருந்தது.. ]]]

" நீங்கல்லாம் சின்ன பிள்ளைகள் .. என்ன செய்ய முடியும்.. பரவாயில்லை...நான் உங்களுக்காக இனி மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறேன்.." ரயிலண்ணா கண்ணீரை துடைத்துக்கொண்டார்..

எல்லா சிறுவர்களும் வீடு சென்று எப்படியாவது இந்த ரயிலண்ணாவை விடுதலை செய்யணும்னு ஒரே பிடிவாதம் . அன்றிரவே ஊர் கூடியது..குழந்தைகளின் தொல்லை தாங்காமல்


அதிகாரிகளிடம் பேசினார்கள் பெரியவர்கள்... அதிகாரிகளும் வந்து பார்த்து சின்ன சின்ன கோளாறுகளை செப்பனிட்டார்கள்...


ரயிலண்ணா ஓட தயாரானார்.. அப்பதான் ரயில் அழுக்கேறி இருப்பதை பார்த்த குழந்தைகள் ரயிலண்ணாவுக்கு வண்ணம் தீட்டினால் என்ன என யோசனை சொன்னார்கள்.


அதற்கு அதிகம் செலவாகும் என சொன்னதும் எல்லோரும் வீட்டுக்கு சென்று உண்டியலையும் தம் சேமிப்பையும் எடுத்து வந்தார்கள்..
மொத்தமே ஆயிரம் ரூபாய் கூட தேரவில்லை...எல்லோருக்கும் சிரிப்பு..

இருப்பினும் குழந்தைகளின் உற்சாகத்தை பார்த்த அதிகாரிகள் ரயிலுக்கு வண்ணம் தீட்டுவதோடு பலவிதமான விலங்குகள், இயற்கை காட்சிகள் நிறைந்த
படங்களையும் ரயிலில் வரைய உத்தரவிட்டார்..

ரயிலண்ணா இப்போது மிக இளமையாக தோற்றமளித்தார்... முன்பை விட பன்மடங்கு உற்சாகத்தில் விசிலடித்துக்கொண்டே கிளம்பியதும் அந்த
உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக்கொள்ள எல்லோரும் ஏறிக்கொண்டனர் அந்த சோதனை ஓட்டத்தில்...

குழந்தைகளுக்கோ பெருமை பிடிபடவில்லை....

14 comments:

அண்ணாமலையான் said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு.. வாழ்த்துக்கள்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க...அண்ணாமலையார்..

Chitra said...

If I remember correct, I saw the similar episode of "Thomas and friends" a while back........

எண்ணங்கள் 13189034291840215795 said...

I haven't seen that. May be will search ..

Is there a book?..

But I say lots of stories about animals, trees and objects speaking ...

Because he loves Tom & Jerry and assumes he is Jerry mouse always...:)

Thanks for comments Chitra..

தமிழினிமை... said...

i loved it shanthu..
this is not an imaginary one..
its atrue story..
thats what happened at neelgiri..
nice write-up..
me too became a child..
the power of the INANIMATE OBJECTS in our life are well shown..

எண்ணங்கள் 13189034291840215795 said...

i loved it shanthu..

Thx Ammoo..

this is not an imaginary one..
its atrue story..
thats what happened at neelgiri..

Wow really.. ?. I combined the stroy with news..:)

me too became a child..
the power of the INANIMATE OBJECTS in our life

- True. Kids make us kids too.Ammoo...:)

சாமக்கோடங்கி said...

நான் படித்த ப்லோக்'களிலேயே இது மிக வித்தியாசமாக உள்ளது... தொடருங்க..
நன்றி...

எண்ணங்கள் 13189034291840215795 said...

--------------------
மிக்க நன்றி பிரகாஷ். உங்கள் கட்டுரைகள் மிக உபயோகமானவை. அதை தமிழமுதத்தில் மறுபிரசுரம் செய்கிறேன்...பலரை அடையச்செய்ய..

சாமக்கோடங்கி said...

http://www.tamizhamutham.org/

இதைத் தானே குறிப்பிடுகிறீர்...?

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://groups.google.co.th/group/tamizhamutham?hl=en

இதுதாங்க..

சாமக்கோடங்கி said...

மிக்க நன்றி...
என் ப்ளாக்'ல் வந்ததை விட நிறைய பின்னூட்டங்கள், கருத்துரைகள் தமிழமுதத்தில் வந்துள்ளன.பெருமகிழ்வடைகிறேன். ஆனால் சில தமிழெழுத்துக்கள் சரியாகத்த் தெரியவில்லை. பதிவிறக்கம் செய்ய வேண்டும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.. நல்ல விஷயங்களை எழுதும் எழுத்தாளர் பலரை பதிவுலகம் காணணும்..

வாழ்த்துகள்.

மே. இசக்கிமுத்து said...

...இக்கதைகளை படிக்குமுன்பு 4-5 வயது சிறுவறாய் மாறிடுங்கள் ரசித்திட..

எங்களை சிறுவனாய் மாற்றியமைக்கு நன்றி!!

சாமக்கோடங்கி said...

ரொம்ப நாளா ஆளையே காணோமே..