Wednesday, January 6, 2010

MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எம் நன்றி.

MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எம் நன்றி.

ஒவ்வொரு வருடமும் 1 மாதம் முன்புதான் ரயில் பயணத்துக்கான முன்பதிவு செய்வது வழக்கம்.

விமான பயண தேதி கன்பர்ம் ஆனதுமே ரயில் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்..

அதே போல் இந்த வருடமும் செய்தால் நெல்லைக்கு செல்லும்போது RAC . திரும்பும்போது WL.

நெல்லைக்கு செல்லும்போது கன்பர்ம் ஆனது.. ஆனால் திரும்பும்போது WL ..15,16,17

சரி எப்படியும் கன்ஃப்ர்ம் ஆகிடும் என்று நம்பிக்கையோடு இருந்தேன்..

ரயில்வேயில் பொறியாளராய் இருக்கும் என் அக்கா கணவரிடம் சொன்னபோது EQ போடலாம் , பயம் வேண்டாம் என சொன்னார்.

ஆனால் ஸ்டேஷனுக்கு வரும்போதும் WL 5, 6 , 7 என்றே இருந்தது..

2 AC பெட்டியில் உள்ள உதவியாளரிடம் கேட்டால் வெயிட்டிங் லிஸ்ட் பயணியை

ஏற்ற விடமாட்டார்கள் , ஆனால் பரிசோதகர் மனது வைத்தால் ஒருவேளை முடியும் என சொன்னார்

6.30 க்கு வண்டி புறப்படும் நேரம்.

6 மணியளவில் திரு.பீட்டர் அல்போன்ஸ் குடும்பத்தினர் அதே பெட்டிக்கு வந்தார்கள்..

என்னை வழியனுப்ப வேறு அக்கா , அண்ணா, குழந்தைகள் என பெருங்கூட்டம்..

பரிசோதகர் 6.15 க்கு வந்தார் . கேட்டபோது தயவுசெய்து ஏறாதீங்கன்னு சொல்லிட்டார்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை..

ஆளாளுக்கு யோசனை.. வாகைக்குளத்திலிருந்து விமானத்தில் செல்லல்லாம் என்றால் அங்கும் உடனடியாக டிக்கெட் கிடைக்காதாம்.

சென்னை வரை காரிலேயே பயணிப்பது ????

பஸ்ஸில் இத்தனை பெரிய பெட்டிகளை எப்படி ஏற்றுவது?.பஸ்ஸில் டிக்கெட் வேறு உடனே கிடைக்காது..

6.20 ஆனதும் 2AC உதவியாளர் என் நிலைமையை பரிதாபத்தோடு பார்த்து பெட்டியை வண்டியில் ஏற்றிக்கோங்கம்மா என சொல்லிவிட்டு

நான் சொன்னதாக சொல்லிடாதீங்கன்னார்..

கடைசியில் வேறு வழியின்றி அருகிலிருந்த MP திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களிடம் நேரடியாக சென்று என் பிரச்னையை சொன்னேன்..

அவரும் நான் பேசி முடிப்பதற்குள்ளேயே உடனே வண்டியில் ஏறிக்கோங்க ன்னு சொன்னாங்க..

என் குடும்பத்தாருக்கு மிக்க மகிழ்ச்சி...

பின் பரிசோதகரிடம் அவர் சொன்னபோது கண்டிப்பா 2 AC யில் டிக்கெட் இல்லை என அவர் சொல்ல., 3 AC க்கு

மாற்றிக்கொடுத்தார்கள்.. MP ஐயாவின் உதவியாளர்கள் ( நெல்லை கவுன்சிலர் ஐயா - பேர் தெரியவில்லை..மன்னிக்கவும்.)ஓடி ஓடி எனக்கு உதவினார்கள்..

அவர்கள் கோட்டாவில் உள்ள டிக்கெட் கொடுத்து எனக்கு

உதவி குழந்தைகளோடான என் பயணம் மகிழ்ச்சியாக அமைய பெரிதும் உதவினார்கள் ,.

கடவுள் போல் தக்க சமயத்தில் வந்து உதவிய MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும் அவர்கள் உதவியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

1 comment:

மே. இசக்கிமுத்து said...

அரசியல் தலைவர்களில் சில நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்று சொல்லலாம்!!
பொதுவாகவே சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான (நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில்) ரயிலில் எப்போதுமே கூட்டம் அதிகம் தான். கன்பர்ம் டிக்கட் கிடைத்துவிட்டால் ஏதோ பரிசு கிடைத்த மகிழச்சி தான்!

இங்கு பெங்களுரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்கும் இதே நிலை தான். நான் ஊருக்கு பொவதென்றால் முன்கூட்டியே (90 நாட்கள்) பதிவு செய்துவிடுவேன் எப்போதுமே!!

தமிழமுதம் குழுமத்திலும் படைப்புகளை பகிர வலைதள முகவரி என்ன? எனது மெயில் ஐடி emuthutut@hotmail.com விவரங்களை தரவும்! நன்றி