Friday, October 16, 2009

ஆமா, நானும் புகை பிடிக்கிறேன்






விடியற்காலையில் ஆதவன் வருகையை
விழிவைத்து பார்த்து ரசிக்கையில் விரைவாய் நாசி ஏறுது கீழ்வீட்டிலிறுந்து
விழுங்குவது போல் சிகெரெட் புகை


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


அரக்க பரக்க அலுவல் செல்ல

அள்ளிபோட்டதை வாயில் மெல்ல

அருகே புகை வர , பிடிக்கிறேன்

அஞ்சு பைசா செலவில்லாமல்


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


மனம் மகிழ சினிமாவுக்கு போனா
மப்போடு மனிதன் பின்னாலிருக்க

மயக்கமாய் வருது புகை நெளிந்து

மன்றாடினேன் , புகை பலமாய் வருது.


ஆமாம் நானும் புகை பிடித்தேன் விரும்பாமலே..



( கீழ் வீட்டில் இருந்து புகை வருது பால்கனி வழியே. புகைபிடிப்பவனை திட்ட முடியாமல் அவசரமாய் ஒரு கவிதை..:)) )

பாசிவ் ஸ்மோகிங் தான் அதிக ஆபத்தும்.. தயவுசெய்து நிறுத்துங்க மக்களே...:)

4 comments:

Unknown said...

Hello mam, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil
bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady
bloggers. we planned to publish your blog in this issue. i want just
your o.k. and a recent photograph.
my mobile no is. 9500019222
thanks
Navaneethan

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்க இமெயில் என்ன நவநீதன்?

தமிழினிமை... said...

hai,im amudhadevi..your school mate.hwru?keep writing...good job .take care

ஷண்முகப்ரியன் said...

எனது எழுத்துக்களுக்குப் படித்துப் பகிர்ந்து கொண்ட தங்கள் பாராட்டுக்கு நன்றி,மேடம்.
புகை பிடிப்பதனால் அடுதவர்களையும் பாதிக்கும் கொடுமை அனுபவித்தவ்ர்களுக்குத்தான் தெரியும்.