எப்படி அழைப்பேன் இனி ?
அதே கை, அதேபோல் கால்
அதேபோல் உடம்பும், உணர்வும்
அன்னைக்கும்தானே இருக்கு அண்ணா?
என் தோழியை விரசமாக எண்ணி
எனக்கெதிரிலேயே சரசமாட மனதில்
எப்படியண்ணா முடிந்தது உன்னால்?
தாய்மீது நீ கொண்ட பாசமும்
தங்கை என்மீது பொழிந்த நேசமும்
தவிடாகிடுமோ என அஞ்சுகிறேன்
தரணியில் இனி யாரை நம்பிட
தவிக்கின்றேன் சொல்ல வார்த்தையின்றி
தவக்கோலத்தில் நீ, நெருப்பில் நான்...
முடிவெடுத்தேன் முன்னிற்பேன்
முகமுடி களைவேன் மிருகத்திடமிருந்து
முன்வைத்த காலை பின்வாங்கிடமாட்டேன்
அதே சமயம் இறைபற்றால் மன்னிப்பேன்
அவற்றை நீ மனதாற தவறென உணர்ந்தால்
அன்றே நான் அழைப்பேன் அண்ணா என..
Wednesday, March 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மைச் சம்பவம் புதைந்த வரிகளாக இருக்குமோ என நினைக்கிறேன்...
விக்னேஷ் சொல்வது போல ஏதாவது அவலத்தின் ஆற்றாமையால் விளைந்த கவிதையா?
சாட்டையடியாக இருக்கிறதே!
அதேநேரத்தில் கடைசிவரிகளில் தாய்மையின் கனிவும்.
Post a Comment