Thursday, April 24, 2008


காஞ்சனாபுரி..இயற்கையில் ஒர் சொர்க்கபுரி.


மன்னர் ராமா I ( Rama I) காஞ்சனாபுரியை பர்மா படையினரிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏதுவாக விசாலமாக்கிய இடம்..த்ரீ பகோடா பாஸ்( Three Pagodas Pass ) வழியாக பார்மாவினர் தாய்லாந்துக்குள் நுழையாமல் இருக்க காஞ்சனாபுரியில் படைத்தளம் அமைக்கப்பட்டது.உலகப்போர் I ன் போது தாய்லாந்து கலந்து கொள்ளவில்லை..ஆனால் ஜப்பானிய படை பர்மாவில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு சாமான்கள் அனுப்ப மிகப்பெரிய ரயில் பாதை தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் இடையே கட்டியது.இதில் ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாலந்து மற்றும் தாய்லாந்து வீரர்களும் உண்டு..
1.அதில் முக்கியமானது க்வாய் (Bridge on the River Kwai ) எனும் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம்..இதில் 100,000 க்கும் மேல் சிறைக்கைதிகள் கட்டுமானத்தின்போதும், நோயினாலும்,மரணமடைந்தனர்.அதிலிருந்து இந்த பாலம் டெத் ரெயில்வே ( Death Railway ) அன் அழைக்கப்பட்டு வரலாற்று சின்னமானது.. இது பற்றி ஆங்கிலப்படங்களும் வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.இது பற்றி ஒரு ஜெத் வார் மியூசியம் விரிவாக சொல்கிறது.(The JEATH War Museum War & Art Museum
JEATH stands for Japan, England, America, Australia, Thailand and Holland,)
2. பிரசித்தி பெற்ற புலி கோவில் இங்குள்ள புத்த பிட்சுக்களால் பாதுகாக்கப்படுகிறது.. புலிகள், பூனைகள் போல பழக்கப்பட்டு அன்பு செலுத்தப்படுகிறது...பார்வையாளர்களும் புலியை தொட்டு விளையாடலாம்.. (நாங்கள் புலி பூங்காவில் புலி குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.. புலியை மடி மீது அமர்த்த பெரியவன் பால் புட்டியை வைத்து புலிக்கு குடுக்க , சின்னவன் வாலைப்பிடித்துக்கொண்டு விட மறுத்தான்...)மேலும் குரங்கு பள்ளிக்கூடத்தில், தேங்காய் பறிக்கவும், கூடைப்பந்து விளையாடவும் பழக்குகின்றனர்.
3. நிறய விலங்குகள் கொண்ட சஃபாரி பார்க். இதனை பூங்காவின் பேருந்திலோ, மகிழ்வுந்திலோ சென்று விலங்குகளை பார்க்கலாம்..விலங்குகள் அதன் இயற்கையான சூழ்நிலையிலேயே பார்ப்பது சிறப்பு.
4.எரவான் நீர்வீழ்ச்சி: தாய்லாந்தின் மிக அழகான , நீர்வீழ்ச்சி.. இது 7 அடுக்குகளையும் , 1500 மீட்டர், நீளமும் கொண்டு, ஓடிவரும் அழகு நெஞ்சை கொள்ளை கொள்ளும்..இதில் அனைவரும் குளித்து குதூகலிக்க ஏற்றதாய் உள்ளது.இதன் அருகில் பல குகைகள் உள்ளன. அதனுள் சுண்ணாம்பு கற்களால் ஏற்பட்ட ஸ்டலக்மைட்ஸ், ஸ்டலக்டைட்ஸ்,( limestone formations, stalagtites and stalagmites ) தூண்கள் கண்டுகளிக்கலாம்.
5. பொழுதுபோகு அம்சங்கள்..
கோல்ஃப் விளையாட்டு மைதானம், பாறைகள் ஏறுதல், கயாக் என்ற சின்ன தோணியில் காட்டாற்றில் முரட்டுத்தனமாக பயணம் செய்தல், ஆற்றினிடையில், காட்டுக்குள் யானைசவாரி, போன்ற நிறைய உள்ளன..
6. எப்படி செல்வது: தாய்லாந்து தலைநகரிலிருந்து 150 கி.மீ மேற்கே உள்ளது..காரில் 1.30 மணி நேரத்தில் சென்றாலும், ரயிலில் 4 மணிநேரம்.. ரயிலில் செல்லும் போது ஒரு பக்கம் க்வாய் ஆற்றின் வளைவில் , மற்றொரு பக்கம் மலைகளைத்தொட்டுக்கொண்டு, ஆபத்தான சரிவில் மெதுவாக ஊர்ந்து செல்லுவது மிக ரம்மியமாக, அதே சமயம் ஆபத்தானதாகவும் , த்ரில்லிங்காகவும் இருக்கும்..கீழே சுற்றுலாவுக்கென்றே ஆற்றில் படகு வீடுகள் இருக்கின்றது..வருடம் முழுதும் ஒடும் தண்ணீர், மழைக்காலத்தில் வேகத்தோடு சீறி வருவது, மிக அழகு.மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்க..
No comments: