Thursday, September 18, 2008

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*





*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*


*ஒருமாலை இளவெயில் நேரம்,*


" நீ பண்ற ஒவ்வோர் சேட்டைக்கும் ஒன்பது முத்தம் தரட்டுமா?..." ஜென்னி என்ற 8ம் வகுப்பு படிக்கும் ஜெனிபர் நாய்க்குட்டியை துக்கி வைத்துக்கொஞ்சிக்கொண்டிருந்தாள்...தன் அழகான பெரிய தோட்டத்தில்


" அப்போ நானும் சேட்டை பண்ணவா ஜென்னி.?.என்னை மட்டும் அடிக்கிற..?."


5ம் வகுப்பு படிக்கும் பிரபு பக்கத்தில் இருந்து அக்காவின் மேல் பட்டும் படாமல் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுக்கொண்டிருந்தவனை பாய்ந்து அடிக்கச் சென்றாள்..


" சீ. போடா. என்னை முழுவதுமா நனைத்துவிட்டாயே?. இரு அப்பாகிட்ட சொல்லித்தாரேன்..."


" ஏய் அக்கா, என் செல்ல அக்கா, பிளீஸ் போட்டுக்குடுக்காதேக்கா.. உனக்கு இன்னிக்கு நூலகம் போய் புத்தகம் எடுத்து தருகிறேன்.."


" ...ம்.. அப்படி வா.. வழிக்கு..."


" ஏய் பிரபு, ஜென்னி எதாவது வம்பு பண்ணினால் என்கிட்ட சொல்லு சரியா, நான் கவனிச்சுக்கிறேன் ....அவள் ஜம்பம் என்கிட்ட பலிக்காது..ஹாஹாஹா.."


மழை நீர் தேக்கிவத்த மரத்தை ஜெனி மீது உலுக்கியபடி சண்டைபிடிக்க வருகிறான் டோனி என்ற அந்தோணி..



ஜெனி ஒன்றும் சொல்லாமல் புள்ளிமான் போல் மருதாணி கைபோல் சிவந்து உள்ளே ஓடுகிறாள்...


டோனிக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.. எப்பவும் நேரெதிராக மல்லுக்கு நின்று திண்டாட வைக்கும் ஜெனிக்கு என்னாச்சு இன்னிக்கு?..


அவள்கூட சண்டைபோடாவிட்டால் அன்றைய நாள் கழியாதே..


அவள்தான் பிரபுவுக்கும் ,டோனிக்கும் முக்கியமான பொழுதுபோக்கு..


டோனி பக்கத்துவீட்டு தேவராஜின் இரண்டு பிள்ளைகளில் கடைசி...12 ம் வகுப்பு படிக்கிறான்.மூத்தவள் பாப்பி.. இந்த வருடம்தான் திருமணம் ஆனது..ஜெனியின் அப்பா கல்லூரி பிரின்சிபால், தாமஸ்..


இரு குடும்பமும் அருகருகில் இருப்பதால் பல வருட நட்பு...
ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் டோனி..


" டேய் , பிரபு, என்னாச்சு, அண்டி ஏதாவது திட்டினாங்களா, ஜெனியை..?"


" இல்லை.."


" அப்ப நீ ஏதாவது.குசும்பு பண்ணினாயா.?."


" இல்லை.."


" பரிட்சை ஏதாவது...?. அந்த நல்ல பழக்கமெல்லாம் நம்ம ஜெனிகிட்ட கிடையாதே.. நான்தான் மண்டையில் குட்டி கணக்கு சொல்லிக்கொடுக்கணும் அவளுக்கு..." வாயில் ஒத்தை விரல் வைத்து துப்பறிகிறவன் போல் தலையை அங்கும் , இங்கும் ஆட்டி, யோசிப்பதுபோல் ...


" டேய் என்னடா ஆச்சு.."


" எனக்கொண்ணும் தெரியாதுண்ணா.. போங்க அவகிட்டயே கேளுங்க..."


" அன்டி, அன்டி, (aunty) ஜெனி எங்க..?.." நாலு கால் பாய்ச்சலில் வீட்டுக்குள் செல்கிறான்..


" வா டோனி, என்ன விஷயம்.. படிப்பெல்லாம் எப்படி இருக்கு?.."


" அது கிடக்கு அன்டி.. ஜெனி எங்க..?" மாடிப்படி ஏறுகிறான்...


" டோனி ஒரு நிமிஷம்... "
" ஏன் அண்டி.. அங்க இல்லயா ஜெனி?.."
" ..ம்.. இருக்கிறாள் ... அங்கு...தான்... ஆனால்..."
" ஆனால், என்ன அன்டி..?... "
"...ம்.. நீ. இங்கு இரு .. அவளே வருவா கீழே..கொஞ்சம் பொறு டோனி."
புரியாதவனாய் தடுமாறுகிறான் டோனி... முதன்முறையாக வித்தியாசமாய் உணருகிறான்..
காத்திருக்க விரும்பாதவனாய் வீடு சென்று அம்மாவிடம் சலிப்புடன் சொல்கிறான்..
" என்னாச்சுமா ஜென்னிக்கு?. இன்னிக்கு தான் என்கிட்ட அடிவாங்காம , என்னையும் அடிக்காம தப்பிச்சுருச்சு.."


அன்னை சிரிக்கிறார்... ஆனால் இந்த சிரிப்பில் வித்தியாசம் தெரிகிறது...
" என்னம்மா.. " வெகுளியாய் ...


மண்டையில் செல்லமாய் குட்டிவிட்டு சிரிப்புடன் போகிறார் அம்மா...தன் தலையை தடவிக்கொண்டே யோசித்தவனுக்கு
மெதுவாக சிரிப்பு வருது.. அசடு வழிகிறான், புருவத்தை தூக்கி..


************தொடரும் ( வெள்ளிதோறும் வாரம் ஒருமுறைதான் சொல்லிப்புட்டேன்..)*****************************
இது 5 வருடத்திற்கு முன்பு உள்ள சம்பவம்தான் .. கதை பின் தொடரும்..

No comments: