Thursday, September 18, 2008

சில்லென்ற கண்ணாமூச்சி காதல்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 2*

அன்பென்ற மழையிலே -----.

டோனிக்கு இப்போது புரிந்தது.. ஜெனியின் ஓட்டத்தின் , வெட்கத்தின் காரணம்...ஆனாலும் குழப்பமாயிருந்தது.. நான் என்ன வேறு புது ஆளா என்ன?. சரி இன்னும் 2 நாளில் பழையபடி வலம் வருவாள், என்று மறந்து போயிருந்தவனுக்கு, ஒருவாரமாக ஜெனி தன் வீட்டுக்கும், பள்ளிக்கும் தன் கூட வராமல் இருப்பதும், வியப்பு எழுகிறது...

ஜெனியின் அம்மாவின் குடும்பம் இந்துக்கள் , ஆதலால், அவர்கள் முறைப்படியும், கிறுஸ்தவ வழக்கப்படியும் சொந்தத்திற்கு மட்டும் தெரியப்படுத்தி, வீட்டிலேயே ஜெபமும் விருந்தும் வைக்கிறார்கள்..
டோனி, குடும்பத்தினருடன் செல்ல, ஜெனி தன் பெற்றோரிடம் மட்டும் பேசிவிட்டு தன்னிடம் பேசாதது புதிராக இருந்தது.. ஆனால் அவள் தோழிகளுக்கு குசும்புக்கு குறைவில்லை.. என்னவோ சொல்லி சிரிக்கிறார்கள்.. சரி பள்ளியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..


திங்களன்று பள்ளிக்குச்செல்ல ஜெனி வீட்டில் வாசலில் சைக்கிளுடன் நின்று,
" பிரபு, என்னாச்சு, வரீங்களா, நான் செல்லட்டுமா?.."அதிகாரமாக..


" இருங்க அண்ணா, வாறேன்..."
" பிரபு, டோனிய முன்னால் போகச்சொல்லு, நாம பின்னால் வருவோம்னு சொல்லு.."
குரல் வந்த திசையை பார்த்தால், பினோஃபோர்ம் உடையிலில்லாமல்,ஜெனி புதிதாக பாவாடை தாவணியில்...அதுவும் பொம்மையாட்டம்..சிரிப்பு வருது டோனிக்கு... வாயைப்பொத்தி சிரிக்கிறான்..


ஜெனிக்கு கோவமாய், வெட்கமாய் வருகிறது... அவள் அன்னையை அழைத்து வருகிறாள்...அம்மாவிடம் டோனியை போகச்சொல்கிறாள்..
" ஆன்டி, என் உதவி இல்லாமல் அவள் எப்படி மேட்டிலும் , சரிவிலும் ஓட்டுவாள்.. அதுவும் பிரபுவை வைத்துக்கொண்டு..பெ.............ரி.............ய மனுஷி ஆயிட்டாளோ?.."


" பிரபு, நீ என்னுடன் வந்திரு.. ஜெனி உன்னைக்கண்டிப்பா கீழே போட்டுடுவாள்.." விழுந்து விழுந்து சிரிக்க, உடனே வந்துட்டான் பிரபுவும்..
முறைத்துக்கொண்டே, சைக்கிள் மிதிக்கிறாள் ஜெனி...அவளுக்கு அவள் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வருது... இனி அதிகமா, பசங்ககூட பேசக்கூடாது என்று.. அமைதியாக கொஞ்சம் எரிச்சலுடன் மெதுவாக,ஓட்டுகிறாள்..


" ஏய், என்ன , நீ?. இப்படி போனா, நாளைக்குத்தான் போய் சேரமுடியும்.. " அவசரப்படுத்துகின்றான்...எப்பவும் போட்டிபோட்டு ஓட்டும் ஜெனியா இது...ஆணுக்கு சரிசமமா ஓட்டுவாளே..

" டோனி , உனக்கு அவசரம்னா , நீ போய்க்கோ..உன்கிட்டலாம்பேசக்கூடாதுன்னு மாமா சொல்லிருக்கார்..."
" எ.ன்.ன...து...........?.. பேசமாட்டியா?. ரொம்ப சந்தோஷம் .. தொல்லை விட்டது..."
" அப்ப, நான் விரசலா போறேன்.. நீ மெதுவாவே வா.. " கோவத்தோடு,
சைக்கிளை அழுத்தி மிதித்து வேகமாய்ச்செல்கிறான்...சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தால் ஜெனி வரவில்லை.. நிப்பாட்டி மறுபடியும் காத்துகிடக்கிறான்.. நேரமாக, வந்தவழியே சென்று, தேடிப்பார்க்கையில்,
தாவணி , சக்கரத்தில் மாட்டி, ஜெனி எடுக்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறாள்...பாவமாயும், அதே சமயம் கோவமாயும் வருகிறது...பக்குவமாய் தாவணியை எடுத்துவிடுகிறான்...


" கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?.. இன்னிக்குதானே தாவணி போடுற?. அதுக்குள்ள ஏன் சைக்கிள்?.. பழகியபின் ஓட்டியிருக்கலாமே?.."
அழுகிறாள்..
" அதுக்குதான் நான் கூட வாறேன்னு சொன்னேன்.. மாமா சொன்னாராம், இவ கேட்டாளாம்.. லூஸு.." ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க, பரிதாபப்பட்டு, தன் சைக்கிளை பக்கத்து கடையில் நிறுத்திவிட்டு, அவளை பின்புறம் உட்கார வைத்து, பிரபுவை முன்னால் வைத்து, பள்ளிக்கு அழைத்துச்செல்கிறான்...வேறு ஒன்றும் பேசாமல்..


டோனியின் கரிசனம் , அன்பு கசக்குது ஜெனிக்கு...பயம்தான் வருகிறது..
---------------------------------------------------------------------------­-----------------------
+2 படிப்பென்பதால் அதிலேயே வாரம் முழுதும் ஓடினாலும், லீவு நாட்களில், தன் வீட்டு ரோஜா தோட்டத்தை ஒருவழி பண்ணகூட வராதது ஏமாற்றமாயிருந்தது.. தான் பண்ணுவதுதான் சரியென்று சண்டை பிடிப்பாளே?.. ஜெனி வீட்டு கொய்யா மரம் , தன் வீட்டு மொட்டைமாடியில் காய்ப்பதால் , அத்தனையையும் எண்ணிவைத்துவிட்டு, தன் தோழர்கள் யாராவது கைவைத்தால் ஊரைக்கூட்டுவாளே.. இதற்கே அப்பாவிடம் திட்டு வாங்கித்தருவாள் , அடிக்கடி..


இப்ப சண்டைபோடக்கூட வராமால் அப்படியென்ன, விரதமாம்?..
ஞாயிறு காலையிலேயே கொயர் ( பாட்டு) வகுப்புக்கு செல்ல அவளை அழைக்க அவள் வீட்டுமுன் சைக்கிளில் நின்று கொண்டு பிரபுவிடம் கூப்பிட்டனுப்ப,
" நான் இனி பாட்டு வகுப்புக்கு வரலைன்னு சொல்லு..பிரபு.." சத்தமாக...


" வரலன்னா காது திரும்பிரும்.. னு சொல்லு பிரபு.."

" எனக்கு நிறய வேலையிருக்கு னு சொல்லு..பிரபு.."

" ஃபாதர்கிட்ட போய், இந்த பொய்யை சொல்லச்சொல்லு..பிரபு.."


பிரபு மண்டையைப்பிடித்தபடி...

ஜெனியின் அம்மாவும் போகச்சொல்கிறார்கள், ஆனாலும் மறுக்கிறாள்..அப்பா வெளியில் சென்றுள்ளார்.அப்பா இருந்தாலாவது சப்போர்ட் பண்ணுவார்...

சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வருகிறான் டோனி..

" ஏய் என்ன , நீ பாட்டுக்கு பாதில வரமாட்டேன்னு சொல்லுவ, பண்டிகை வருது... வந்து ஒழுங்கா பாடு..."

" ஆன்டி , இவளை வரச்சொல்லுங்க.. கடைசி நேரத்தில் என்ன பிடிவாதம் இவளுக்கு..?"

" அங்க நிறய பசங்க இருப்பாங்க.. கிண்டல் பண்ணுவாங்க... நான் வரல.."
" ஆமா , நீ பெரிய ரதி.. வேறு பொண்ணுங்களே இல்ல பாரு..எனக்குத்தெரியாது இன்னிக்கு நீ வந்தாகணும்..."


முணுமுணுத்துக்கொண்டே கிளம்புகிறாள்...கோவிலுக்கான பூக்களை பரித்துக்கொண்டு செல்கிறார்கள்.. ஜெனி ஏன் இப்படி மாறிவிட்டாள்.. போகும் வழியெல்லாம் என்ன பேசினாலும் பதிலளிக்க விருப்பமில்லாமல், சோகமாய்....

நான்தான் அவளை அதிகம் தொந்தரவு செய்கிறேனோ?....ஏதோ நினைத்தவனாய் டோனி, வேறு மாதிரி முடிவெடுக்கிறான்.....

******************************************************தொடரும்..************­***************************

1 comment:

VIKNESHWARAN said...

ஒன்று, இரண்டு, நான்குதான் இருக்கு மூன்றாம் பாகத்தை காணலயே? :( உங்க இடுகைகள் தேர்வு செய்ய கொஞ்சம் சிரமமாக இருக்கு... மூன்றாம் பாகத்தின் லிங் கொடுங்க அக்கா..

நானும் தொடர்கதை முயற்சியில் இருக்கிறேன்... மொத்தம் ஏழு பாகம் எழுதிட்டேன்... நேரம் இருந்தா பார்த்து சொல்லுங்க...

http://vaazkaichittiram.blogspot.com/