Monday, August 29, 2011

ஏன் சென்றாய் செங்கொடி?.





செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத்ததை தந்ததா?.சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது இது..அவரவரின் கொந்தளிப்பான, உணர்ச்சிகர சூழல் முக்கிய காரணம்..இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்களுக்கு தலைமை வழிநடத்தியிருக்கவேண்டியவர்கள் நீங்கள்..?. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பதார்க்கு.ஒருபக்கம் மக்கள் சக்தியை எளிதாக எடைபோட்டுவிட்டாரோ என தோணுது.. கொள்கையுடையோர் அவசரப்படலாமா?

லட்சம் பேரை தம் பின்னால் அணிதிரட்டக்கூடிய வலிமையுடையோர், பல்லாயிரம் தலைவர்களை உருவாக்கக்கூடியோர் நீங்கள்.. எப்போது மரணத்துக்கு அஞ்சாதவராக இருக்க முடியுதோ, அப்போது உலகம் உங்கள் கையிலல்லாவா?.. சாதித்திருக்கவேண்டாமா பல வழிகளில்..?. உங்கள் உணர்வுகளின் கொந்தளிப்பு பலரை அடைய செய்திருக்கணுமே தவிர, அவசரப்பட்டீரே..சாவை துச்சமென நினைப்போர் புதிதாக அல்லவா பிறக்கின்றனர் மக்களின் தலைமையாக..?

இந்த தூக்குதண்டனை பிரச்னை மட்டுமே நம் முன்னால் இருப்பதல்ல. பல சமூக பிரச்னைகள் , வாழ்வாதார பிரச்னைகள் நம் முன்னால் ஆயிரக்கணக்கில் உள்ளது.. பல அப்பாவி மக்களுக்கு இன்னும் அதுபற்றி தெரியக்கூட இல்லை.. அப்படியிருக்கையில் இப்படி உங்களைப்போன்ற கொள்கையுடையோர் பொசுக் னு முடிவெடுத்தால்?.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய.. அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்புகள் எக்கச்சக்கம் இங்கே.. இதே போல தொடர்ந்தால் நல்லவர் இல்லாத இடங்களில் நரிகளின் நாட்டாமைகள் தொடங்கிவிடும்.. கொள்கையுடையோரை இழப்பது லட்சம்பேரை இழப்பதற்கு சமம் என புரிந்துகொள்ளணும்..


கொள்கையுடையோர் உயிர் அவருக்கு மட்டுமானதல்ல.. எத்தனை பேருக்கு துணிவை தந்திருக்கலாம் நீங்கள்.. ?.. எத்தனை பேரை போராட வைத்திருக்கலாம் உங்கள் சொற்கள்..?.. உங்கள் மரணம் வலி தருது..சரி/தவறு என்ற விமர்சனமில்லை.. சகோதரி ஐரோம் சர்மிளா தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறாரே..ஏன்?.. ஏதிரிகளுக்கு உங்களைப்போன்ற கொள்கையுடையோரின் மரணம் வரவே..

மக்களுக்காக சிந்திக்கக்கூடியோராக பிறக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..இத்தகையோரின் உயிர் சாதாரண மக்களின் உயிரை ஒப்பிடுகையில் நிச்சயம் விலைமதிப்பில்லாதது.. உங்களுக்கான போராட்டத்தை செய்துவிட்டே சென்றுள்ளீர்கள்.. இருப்பினும் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பீர்கள் என்ற ரணம்.. எத்தனை பேரில் மாற்றம் கொண்டு வந்திருப்பீர்கள்?..அவை மிகப்பெரிய இழப்பல்லவா?.. மனதால் ஏற்கனவே மரணித்தோர் பலருண்டு இங்கே.. இருப்பினும் இறுதி மூச்சுவரை கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.. வெளிச்சத்துக்கு வராமல்..

விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே!

மூவருக்காக இங்கே மூன்று பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனரே..தன்னையே வருத்திக்கொண்டிருக்கும் அநத ச்கோதரிகளின் உணர்வுகள் வலிமையற்று போய்விடக்கூடாது.. அவையும் தற்கொலைக்கு ஈடானதுதான்.. உணவளிப்பது வயற்றுக்கு மட்டுமா?.. இல்லையே?.. எல்லாம் செயலற்று போகுமே அவர்களுக்கு?.. நிமிடங்கள் போகப்போக வலிகள் கூடுமே சகோதரி?..நொடிப்பொழுதில் உயிர் விடுவதை விட ரணமல்லவா இது?..வணங்குகின்றேன் அச்சகோதரிகளை..




செழுமையாக வளர்ந்து இன்னும் பலரை வளரச்செய்யவேண்டிய கொடி , இன்று கருகியதேன்..

உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம்.
தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே..

இனியும் இதுபோல நடக்காமல் பார்ப்பதும் நம் அனைவரின் கடமையே..

தோல்வி நிலையென நினைத்தால்?.

Each victim of suicide gives his act a personal stamp which expresses his temperament, the special conditions in which he is involved, and which, consequently, cannot be explained by the social and general causes of the phenomenon.
Emile Durkheim


படம்: கூகுள்
Link

4 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியான நேரத்தில் ஆழமாகச் சிந்தித்து
மிகச் சரியாக பதிவிடப் பட்ட பதிவு
நமது ஆழ்ந்த மனவருத்தத்தை பதிவு செய்கிற
அதே வேளையில் இதுபோன்ற துயரம் இனியும்
நேர்ந்துவிடக்கூடாதே என்கிற அச்சம் நம்முள்
பரவுவதைத் தவிர்க்க இயலவில்லை

ஷஹன்ஷா said...

மிக ஆழமான பதிவு....

சென்னை பித்தன் said...

//உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம். தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே.. //

உண்மையே! போராட்டங்கள் இவ்வாறு முடிவதில் என்ன பயன்?

நல்ல பதிவு.

சார்வாகன் said...

/விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே! /
மிக சரியான் வார்த்தைகள்.