அன்புள்ள கலைஞருக்கு , தமிழக மக்கள் அன்போடு எழுதுவது ,
வணக்கம்..
பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினீர்கள்.. மறுப்பில்லை.. பணக்காரனுக்கு கிடைத்தாலுமே ஏழைக்கு கண்டிப்பாக கிடைக்கணும் என இலவச திட்டம் பல கொண்டுவந்தீர்கள் .. மறுப்பில்லை..108 நோய் சிகிச்சையும் குடிசையை மாற்றி வீடுகளும், பெண்களுக்கான சிறப்பு சலுகைகளும் கொண்டு வந்து எம் மனதில் நீங்கா இடம் பிடிக்க நினைத்தீர்கள் . மறுப்பேயில்லை..சென்னையை அழகுற மட்டுமல்ல , போக்குவரத்து வசதியோடும் , பல பூங்காக்களும் , நூலகமும், சட்டமன்ற கட்டிடமும் , தண்ணீர் வசதியும் , தொழில் வளர்ச்சியும், மெட்ரோ ரயில் திட்டமும் மிக நன்றுதான்.. மறுப்புண்டா.?
துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உழைப்பும் , கனிமொழியின் பங்கெடுப்பும், இருவரின் எளிமையும் கவர்ந்துள்ளதுதான். மறுக்கலாமோ.?.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாக மிகப்பெரிய ஊழல் இருந்துள்ளதே தலைவரே..?..!!!
ஒரு விவசாயி வயற்றில் அடித்து மற்றவருக்கு பசியாற்ற நினைத்தது ?..
மின் வெட்டினால் மக்களை அவஸ்தைப்பட வைத்தது..
மேலும் மதுரை என்றாலே அராஜகம் தானே நியாபகத்துக்கு வந்தது ?..
எல்லாவற்றுக்கும் மேலே ஈழத்தமிழர் துயர் துடைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது..?. தமிழினத்தலைவர் மேலுள்ள நம்பிக்கையே போனதே..
இதுதான் பெரியார் வழி வந்த திராவிடமா?.. அசிங்கப்படுத்திவிட்டதே பெரியாரையும் அண்ணாவையும்..
குடும்ப ஆட்சி என ஆளாளுக்கு வாய்ப்பினை பிரித்துக்கொடுத்து தமிழகத்தில் தலை நிமிர்ந்தல்லவா நின்றிருக்கணும் நீங்களும் உங்கள் குடும்பமும்..அதைவிடுத்து தமிழகத்தையே கைக்குள் போடுவது போலல்லவா எல்லா துறையிலேயும் உங்க குடும்ப ஆட்சி சகிக்க முடியாமல் ?..
தமிழக மக்களின் பொறுமையை சகிப்புத்தன்மையை தவறாக நினைத்துவிட்டீர்கள் தலைவரே..
எத்தனை வெறுப்பு இருந்தால் எம்மால் விரும்பாத இன்னொரு அராஜக தலைமைக்கட்சிக்கு நாங்கள் ஓட்டுப்போட விதிக்கப்பட்டோம்?..வேறு வழியில்லாமல்தானே.?.. அந்த நிலைமைக்கு எம்மை தள்ளலாமா தலைவரே.?.
இன்னமும் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.. மதுரை அராஜகம் , ஊழல் , குடும்ப ஆட்சி இன்னும் பலவற்றை சரிபடுத்தி திரு.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடத்த முடியும் என்று..
அடுத்த முறை வரும்போது எவ்வித இலவசமும் இல்லாமலேயே மக்கள் உங்களை தேர்ந்தெடுக்குமளவுக்கு கட்சி முன்னேறியிருக்கணும் கட்டுப்பாட்டோடு, கண்ணியத்தோடு, மக்கள் சேவையே முக்கியம் என்ற கடமையுணர்ச்சியோடு, என்ற ஆவலோடு இப்போதைக்கு விடை கொடுத்துள்ளோம்..
நாங்கள் ஏழைகள் தலைவரே. ஏற்கனவே அம்மையார் வீட்டு ஆடம்பர திருமணத்துக்கு பாடம் கற்பித்தோமே மறந்தீர்களா?..
அதே தானே மதுரையில் உங்கள் குடும்ப திருமணத்திலும், மருத்துவர் ராம்தாஸ் அவர்கள் இல்லத்திலும் நடந்ததாக தொலைக்காட்சியில் பெருமைப்பட்டுக்கொண்டது?..
எமக்கு எளிமையான தலைவர்கள் திரு,காமராஜ் போல , திரு.நல்லக்கண்ணு போல தேவை.. . நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம் என ஒருபோதும் சொல்லவில்லை...ஆனால் அதை உங்கள் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்.. தொலைக்காட்சியில் போட்டு கிட்னி கொடுத்து கடனடைத்த விவசாயியான நாங்களெல்லாம் வயிறு எரியும்படி செய்யணுமா?..யோசிக்கத்தான் சொல்கிறோம் தலைவரே..
பெரியார் தம் சொத்தை இழந்து மக்களுக்கு சேவை செய்ய வந்தார்.. அவர் வழி வந்ததாக சொல்லும் கட்சிகள் அதுக்கு நேர் மாறாக...?????...
எத்தனையோ பேர் தங்கள் உயிரைக் கொடுத்து, கல்வியை பறி கொடுத்து, உணர்வுகளை ஊட்டி வளர்த்த கட்சியல்லவா திராவிடக்கட்சி .....
மிக வருத்தமாக இருக்கிறது .. ( நன்றி - நட்பின் வரிகள் )மொத்தத்தில் ஆட்சி மாறியதில் எங்களுக்கு பெரிதாக மகிழ்ச்சியாக எல்லாம் இல்லை.. :(
கடந்த ஆண்டுகளில் மக்களுக்காக செய்த நல்ல பல திட்டங்களுக்கு மனதில் நன்றியுடனுமே...
நன்றி ,
தமிழக மக்கள்..
படம்: கூகுள் நன்றி..
.
29 comments:
//எமக்கு எளிமையான தலைவர்கள் திரு,காமராஜ் போல , திரு.நல்லக்கண்ணு போல தேவை.//
இன்றைய காலகட்டத்தில் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை சாந்தி!
குடும்ப போட்டோ என்பது ஒவொரு குடும்பத்தின் சந்தோஷமான தருணம். ஆனால் இந்த குடும்ப படத்தை பார்த்தாலே ஒட்டு மொத்த தமிழகத்தின் வயிறு எரிகிறது.
சிறந்த பதிவு.வாழ்க.
இதெல்லாம் நடந்துடுமா பயணமும் எண்ணங்களும்...நீங்க சொல்லியதை எத்தனையோ ஊடகங்கள் காட்டியும் அறிக்கை ஒன்றினாலயே பதில் கொடுத்து மௌனமாகியவர்.
காலத்தின் கட்டயமாய் அ.தி.மு.க. அரசு விருப்பம் கிடையாதுங்க...
ஒவொவொரு திமுக அனுதாபியின் (தொண்டன் , கட்சிக்காரன் அல்ல) கருத்தின் பிரதிபலிப்பு
பந்திக்கு முந்து என்பார்கள் அது போல பதிவு போடுவதற்கும் முந்த வேண்டும், ஏனென்றால் நான் பதிவு போட நினைத்த செய்தியை நீங்கள் நல்ல முறையில் போட்டுள்ளீரகள்
இவை அனைத்தும் அவருக்கு தெரியாமல் இருக்காது, ஆனாலும் வாரிசுகளே பிரச்சனையை உண்டு பண்ணி விட்டதுதான் வருத்தம், அதிலும் ஸ்டாலினின் உழைப்பும் வீண் போகிவிட்டது
சென்னை பித்தன் said...
இன்றைய காலகட்டத்தில் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை சாந்தி!//
ஆம சார்.. அப்படி இருப்போரும் புறக்கணிக்கபப்டுகிறார்கள்..
மக்களாகிய நாமும் இலவசங்களை எதிர்த்து பேராசையை துரத்தணும்..
வசதியுள்ளோரும் டிவி க்கு வரிசையில் நின்றால்.?
ஜீவன்சிவம் said...
குடும்ப போட்டோ என்பது ஒவொரு குடும்பத்தின் சந்தோஷமான தருணம். ஆனால் இந்த குடும்ப படத்தை பார்த்தாலே ஒட்டு மொத்த தமிழகத்தின் வயிறு எரிகிறது.//
அதே தாங்க..
பாராட்டு விழா னு அடிச்ச கூத்துகள் சகிக்க முடியலை..
Blogger suji said...
சிறந்த பதிவு.வாழ்க.//
வருகைக்கு நன்றி சுஜி..
தவறு said...
இதெல்லாம் நடந்துடுமா பயணமும் எண்ணங்களும்...நீங்க சொல்லியதை எத்தனையோ ஊடகங்கள் காட்டியும் அறிக்கை ஒன்றினாலயே பதில் கொடுத்து மௌனமாகியவர்.//
திருந்தணும், இல்லையென்றால் மக்கள் ஒட்டுமொத்தமாக அப்படி ஒரு கட்சி இல்லாமலே ஆக்கிடுவார்கள்..
மக்கள் கோபத்தை புரியணும்..
// காலத்தின் கட்டயமாய் அ.தி.மு.க. அரசு விருப்பம் கிடையாதுங்க...//
எரியுற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலைமை தான் மக்களுக்கு..
வேலவன் said...
ஒவொவொரு திமுக அனுதாபியின் (தொண்டன் , கட்சிக்காரன் அல்ல) கருத்தின் பிரதிபலிப்பு//
வாங்க வேலவன்..
மக்கள் கோபம் , அவர்களை எதிர்கட்சி தலைமைக்கு கூட வழியில்லாமல் செய்ததை உணரணும்..
இனி உட்கார்ந்து பாராட்டு விழா கேசட், செம்மொழி கேசட் , கல்யாண கேசட் போட்டு பாக்கணும்தான்..
Avargal Unmaigal said...
பந்திக்கு முந்து என்பார்கள் அது போல பதிவு போடுவதற்கும் முந்த வேண்டும், ஏனென்றால் நான் பதிவு போட நினைத்த செய்தியை நீங்கள் நல்ல முறையில் போட்டுள்ளீரகள்//
வாங்க . வாங்க..
நான் யோசித்தெல்லாம் போடுறதில்லீங்க.. தோணியதும் எழுதுற ரகம் நாம்.:)
நீங்க இன்னும் சிறப்பா தொகுத்து எழுதியிருப்பீங்க தமிழ் கை..
கண்டிப்பா எழுதுங்க, உங்க வெர்ஷனும் வரணும்...பலருக்கு தெரியணும்..
இரவு வானம் said...
இவை அனைத்தும் அவருக்கு தெரியாமல் இருக்காது, ஆனாலும் வாரிசுகளே பிரச்சனையை உண்டு பண்ணி விட்டதுதான் வருத்தம், அதிலும் ஸ்டாலினின் உழைப்பும் வீண் போகிவிட்டது.//
ஆமாங்க..
ஸ்டாலின் தனியாக கட்சி நடத்தினால் மாற்றம் வரலாம் என்ற நம்பிக்கை இருக்கு..
எல்லாம் கலைஞர் இருக்கும்வரை நடக்காது..
மதுரை ஒரு கரும்புள்ளி கட்சிக்கு என்பதை எப்ப உணருவார்கள்..
கனிமொழி, ஊழலுக்காவது பதில் கிடைக்கும்னு நம்புவோம்..
நடுநிலைமையோடு எழுதப்பட்ட பதிவு.அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.ஊழல் நிரூபிக்கப் பட்டால்(?) யாராக இருந்தாலும் தண்டனை பெற வேண்டும்.கடந்த அரசின் செயல்களில் இருந்து புதிய அரசு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம்.இந்த் அரசு எந்த தவறும் செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்போம்.
நாம் நமது அரசாள்பவர்களை தேர்ந்தெடுப்பது நமக்கு பணி செய்யவே.இதனை பதவியேற்கும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
பதிவுக்கு நன்றி
சார்வாகன் said...
நடுநிலைமையோடு எழுதப்பட்ட பதிவு.அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.ஊழல் நிரூபிக்கப் பட்டால்(?) யாராக இருந்தாலும் தண்டனை பெற வேண்டும்.//
அதே..
நீதி மேல் மக்களுக்கு நம்பிக்கையும் அரசுக்கு பயமும் இருக்கணும்..
கடந்த அரசின் செயல்களில் இருந்து புதிய அரசு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அனேகம்.இந்த் அரசு எந்த தவறும் செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்போம்.
நாம் நமது அரசாள்பவர்களை தேர்ந்தெடுப்பது நமக்கு பணி செய்யவே.இதனை பதவியேற்கும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.//
சரியா சொன்னீங்க சர்வாகன்.. நமக்குத்தான் அவர்கள் பயம் கொல்லணுமே தவிர அவர்களின் அடிமையல்ல மக்கள்..
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.
எனக்கு என்னவோ திரும்பவும் தி.மு.க எழுமா? என்று சந்தேகமாக இருக்கிறது.. காரணம் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி என்று பலர் இந்த கட்சியில் பேசப்படுகிறார்கள்.. இவர்களை கலைஞர் ஒருவரால் தான் கட்டுப்படுத்த முடியும்.. அதற்கு பின்னால் சிதறிவிடும் என்பது என்னுடைய கருத்து....
நாடோடி said...
எனக்கு என்னவோ திரும்பவும் தி.மு.க எழுமா? என்று சந்தேகமாக இருக்கிறது.. காரணம் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி, கனிமொழி என்று பலர் இந்த கட்சியில் பேசப்படுகிறார்கள்.. இவர்களை கலைஞர் ஒருவரால் தான் கட்டுப்படுத்த முடியும்.. அதற்கு பின்னால் சிதறிவிடும் என்பது என்னுடைய கருத்து....//
நிச்சயமா சிதறிவிடும்..
கனிமொழி கலைஞர் இருக்கும்வரைதான். அப்புரம் சம்பாதித்தை வைத்து செட்டிலாகலாம்..
தயாநிதி சகோதரர்களுக்கு அரசியல் ஆதாயம் கருதி அழகிரி , ஸ்டாலினோடு சேர முயன்றால் ஸ்டாலினோடு மட்டுமே சேரலாம்..
அழகிரி க்கு வாய்ப்பு பிரகாசமா இல்லை ஸ்டாலினை ஒப்பீடு செய்யும்போது..
அவர் ஒதுங்கலாம்.. அல்லது ஸ்டாலின் நிழலில் வரலாம்..
வித்தியாசமான ஆனால் மிகச் சரியான
தேர்தல் முடிவு விமர்சனம்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்..
காமராஜ்,நல்லகண்ணு எளிமை யாருக்கு பயன்பட்டது?
வலிபோக்கன் said...
காமராஜ்,நல்லகண்ணு எளிமை யாருக்கு பயன்பட்டது?//
காமராஜரின் எளிமை குறித்து அருகிலிருந்தவருக்காவது பயத்தை , படிப்பினையைத்தந்தது..
ஆனால் நல்லகண்ணு அவர்களின் எளிமை இங்கே பேசப்படுவதே அரிது என்பது மக்களின் நுகர்வோர் கலாச்சாரத்துக்கான முக்கியத்துவத்தையே காட்டுதுன்னு சொல்லலாமா,?..
இருப்பினும் அந்த எளிமையை மதித்து பாராட்டுபவரும் நம்மில் இருக்காங்க னு திருப்திதான்
நல்லா சொன்னீங்க ...
நன்றிங்க நண்டு
தமிழக மக்களின் மனநிலையே அப்படியே வரைந்துள்ளீர்கள்.
நன்றி ஜோசப்பின்..
ரொம்ப ரொம்ப வரப் பிந்திட்டனோ...
பதிவு ரசிக்க வச்சுதுங்க...
♔ம.தி.சுதா♔ said...
ரொம்ப ரொம்ப வரப் பிந்திட்டனோ...
பதிவு ரசிக்க வச்சுதுங்க...//
:)
நாம எழுதுவது மனசுல தோணியதுமே.. மற்றபடி பின்னூட்டம் எதிர்ப்பார்ப்பதில்லைன்னு எல்லாருக்கும் தெரியும்தானே?..
ரசித்தமைக்கு நன்றிங்க..
பதிவெழுத சோம்பேறித்தனம் . படிக்கவே ஆர்வம் .:)
Post a Comment