Sunday, May 1, 2011

மே தினம்


அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
குற்றம் குறை சொல்வதுமுனக்கு அழகல்ல...


பணக்கூலிபெற்றால் தொழிலாளிவர்க்கமாம்
பத்துதேய்ப்பவள் பட்டியலில் இல்லையாம்.:(

செவிலியரென்றால் ஊதியம் மரியாதை,
செத்துமடியும்வரை முடிவில்லாத வதை?..

பாட்டிலோடு ஓய்வுக்கு தேவை ஒரு டாஸ்மாக்
பாலியல் தொழிலாளி உன் தேவை ஒரு மாஸ்க்..

குடும்பத்துக்கு உழைக்கும் பெண்ணே உனக்கும்
குடிமக்கள் துயர்நீக்க உழைக்குமனைவருக்கும்


எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.




படம்: நன்றி கூகுள்..





.

8 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியான கவிதை
நான் கூட மே தினக் கூட்டத்துக்கு போகவேண்டும்
சீக்கிரம் டிபன் செய்ய்ச் சொல்லி
சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன்
இன்று லீவு நாள் ஒரு நாள் கூட
எனக்கு கொஞ்சம் ஓய்வு தரக் கூடாதா என
மனைவி சொன்னபோது புரியாதது
உங்கள் கவிதை படித்ததும் கொஞ்சம்
மனதை என்னவோ செய்தது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

சீக்கிரம் டிபன் செய்ய்ச் சொல்லி
சாப்பிட்டுவிட்டுத்தான் போனேன்
இன்று லீவு நாள் ஒரு நாள் கூட
எனக்கு கொஞ்சம் ஓய்வு தரக் கூடாதா என
மனைவி சொன்னபோது //

உங்க நேர்மை உங்க பதிவு கவிதையில் பார்த்தது போக, இப்ப இங்கேயும்..

வியக்கிறேன்..

//நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

நன்றி ரமணி சார்..

சென்னை பித்தன் said...

வாழ்க்கையின் யதார்த்தம்!
அருமை!

ம.தி.சுதா said...

வியர்வையை உணர்த்தும் உணர்வுகள் உரைக்கும் வரிகள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

எண்ணங்கள் 13189034291840215795 said...

கருத்துக்கு நன்றி சென்னை பித்தன் சார், மற்றும் ம.தி .சுதா.சகோ

இராஜராஜேஸ்வரி said...

எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.//
அருமை!

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருகைக்கு நன்றி இராஜேஸ்வரி..


உங்க வலைப்பூ பார்த்தேன்..

ரொம்ப சுவாரஸயமான தகவல்கள் சொல்லியிருக்கீங்க. படங்களும் நன்று..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Rajeswari

அவல நிலையை அருமையாய் காட்சிப்படுத்திய தங்களுக்குப் பாராட்டுக்கள்//


நன்றிங்க.