Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.

21 comments:

Anonymous said...

சிலருடைய ஸ்டேட்டஸ் மெசேஜுக்களைப் பார்க்கும் போது பத்திக்கொண்டு வரும். கொஞ்சம் ஆதங்கம் கொஞ்சம் கோவம் என்று சானியாவைப் பழித்தவர்களை கிழித்து நான் எழுதியபோது ரொம்ப வந்த பின்னூட்டங்களால ரொம்ப மன உளைச்சலுக்குள்ளானேன்.

பொதுவாழ்வில் இருப்பதால் மிகவும் மோசமாக அவர்களைப் பற்றி எழுதுவது மிகவும் தவறு. அந்த நடிகை மோசமானவராக இருந்தாலும் அருவருக்கும் விதமாக அவர்களைப் பற்றி எழுதும் மனவக்கிரம் பிடித்தவர்களை நினைச்சால் ரொம்பவே கோவம் வரும். எல்லாம் வளர்த்தவர்களின் பிழை. வேறு யாருடைய பிழையுமில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி அனாமிகா வருகைக்கு..

நீங்க துணிவான வித்தியாசமான சிந்தனையுடைய ( கிட்டத்தட்ட என்னைப்போலவே ) போலித்தனமற்ற பெண்மணி..

அதனாலேயே எதிர்கள் பல இருக்கலாம்..

முதன்முதலில் ஜாக்கியின் ஆபாசத்தை நீங்க எதிர்த்த போதே கண்டுகொண்டேன்..


இன்னும் பயந்துகொண்டிருக்கும் பல பெண்கள் துணிவா வரணும். ஆணாதிக்கத்தை ஒழிக்க..

வருவார்கள்..நம்பிக்கை இருக்கு.,.

Anonymous said...

In all comments cited men are also commented upon. For e.g ambika with vadivelu. Y didn't u ask fair treatment for such men ? Why women only ?

Actresses in Kollywood cant progress unless they compromise. U know that.

They r prepared for any adverse comments and they react to such comments by ignoring them. They dont bother like u. Kushboo lived with Prabhu, a married man, for six months b4 thrown out. Nayanthara case u know.

If these ppl enter politics, their private lives will be washed in public. They shd b prpared for that. Y r u shedding tears for such shamless ppl? Shameless coz they justify their acts, dont they ?

Pl preserve ur energy for poorer women who are kidnapped, raped and sold out to brothels.

ஜோதிஜி said...

மன வக்ரம் என்பது இயல்பாகவே பாரபட்சம் இல்லாம் ஆண் பெண் இல்லாமல் அவரவர் மனதிற்குள் எப்போதுமே இருப்பது.

இதில் நடிகை அரசியல்வாதி என்ற பாரபட்சம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்க. சாதரணமாக இருந்து திடீர் என்று வளர்ந்தவர்களைப் பார்க்கும் மற்றவர்கள் மனதிற்குள் உருவாக்கிக் கொள்ளும் புகைச்சலை ஏதோவொரு வழியில் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஒரு சந்துக்குள் ஒருவர் வாழ்க்கை இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் ஒரு மாநிலம் பார்க்கும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறு விதமாகவும் தான் இருக்கின்றது.

நடிகர் கார்த்திக் மேல் இருக்கும் விசயங்கள் அத்தனை பேர்களுக்கும் அத்தனை தூரம் சுவராஸ்யம் இல்லாதது. அதுவே குஷ்பு என்று வரும் போது இன்னும் கொஞ்சம் மெல்ல கிடைத்தது போல இருக்கும்.

பத்திரிக்கைகளே ஆண்களை விட பெண்களுக்குத்தானே இது போன்ற விசயங்களில் முக்கியத்துவம் தருகின்றது.

நடிகை விபச்சாரத்தில் கைது என்று போடுபவர்கள் உடன் இருக்கும் அந்த ஆண்களை பற்றி போடுவதில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பத்திரிக்கைகளே ஆண்களை விட பெண்களுக்குத்தானே இது போன்ற விசயங்களில் முக்கியத்துவம் தருகின்றது.//

மிக சரியா சொன்னீங்க..

இது இன்னொரு யுத்தி..

எப்படின்னா முக்கிய பிரச்னைகள் நீர்த்து போக செய்ய இது போல கிசுகிசு புரளி கிளப்பி விட்ட ஊழல், எரிப்பு வழக்குகள் போன்றவையை மக்கள் மறக்கக்கூடுமே..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Pl preserve ur energy for poorer women who are kidnapped, raped and sold out to brothels. //

வருகைக்கு நன்றி.

அது எப்போதுமே இருக்கும்.

நான் சொல்ல வந்தது , நடிகை தவறு செய்வது அவர் சூழல்..இங்கே நடிக்கணும்னா சில அனுசரிப்புகள் தேவையாயிருக்கு..

ஏன் வடிவேலுவை பெற்றி சொல்லவில்லை என்ற கேள்வி சரி..

ஏன்னா இது அவருக்கான எதிர்வினையாம்.. அவர் எதிர்கட்சியினரை ( விஜயகாந்த்) குடிகாரன் னு விமர்சிப்பதால் அம்பிகாவையும் வடிவேலுவையும் இணைப்பதில், அம்பிகா ஏன் வருகிறார், அனாவசியமாக..என்பதே..



//They r prepared for any adverse comments and they react to such comments by ignoring them. //


மற்றபடி நீங்க சொன்னது மிக சரி .They quickly outgrew this .

//Y r u shedding tears for such shamless ppl? //


Because we are compelled to forget our motives & what to fight for , in these unwanted personal Gossips.. & we dont see such defaming trend abroad .

Another truth is they will move from one party to another to campaign, if need arise.., & we the poor people are the one who feel cheated..wasting time in Gossips..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Kushboo lived with Prabhu, a married man, for six months b4 thrown out.//

Even this I dont wish to talk about now, when she is happily married & with kids..

But Prabhu could have prevented/stopped that right?..

And Prabhu Deva too?..

But still we are ready to blame the women more.. Why don't men take their share ?..

baleno said...

இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..

என்னை பொறுத்தவரையிலும் அப்படி தான்.பதிவுக்கு நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://thekkikattan.blogspot.com/2009/10/blog-post.html

இன்னொரு வித்தியாசமான கோணம் இங்கே

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://thekkikattan.blogspot.com/2009/10/blog-post.html

நான் சொல்ல வருவதும் இதே..

--------------------------------------------


சரி பிரிதொரு நாளில் அந்தப் பாத்திரம் தான் பிடித்து தள்ளப்பட்ட நிலையை நிலை நிறுத்தி வெளி வந்து, இனிமேல் இது போன்ற ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை என்று கருதி 'சோ கால்ட்' நேர் வழியில் சென்று வாழலாமென்று சிரத்தையுடன் வாழ எத்தனிக்கும் நாளில் கூட அது போன்ற 'கழுதைப் புலிகளும்' - புனித மஹாத்மாக்களும் சுலபமாக அவர்களை அவ்வாறு நல் வழி சமூக ஆற்றில் கலந்து விட விட்டுவிடுகிறார்களா என்ன? அது, அதுபோன்ற வாழ்ந்து கொண்டிருக்கும் 'பேசா பொருட்களின்' வாழ்வுச் சூழலில் இருந்து பார்த்தால்தான அதற்கான விடை காண முடியும் என்று நினைக்கத் தோன்றவில்லை.


முன்னமேயே அவர்களுடன் தொடர்புடைய "பெரியவர்கள்" துரத்தித் துரத்தி ஏதேதோ காரணங்களுக்காக மேலும் மேலும் பரிவாகப் பேசி, மசியாத பட்சத்தில் மிரட்டி, உருட்டி அது திருமணமே கட்டி நிம்மதியாக வாழலாமென்று புத்துணர்வுடன் வாழ்க்கையை தொடரும் முன்னால் 'பேசாப் பொருளாக' இருந்தாலும் கூட மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன ? இப்படியான ஒரு சமூகச் சூழலை நம்மைச் சுற்றியும் வைத்துக் கொண்டு, வெறுமனே இந்தப் பத்திரிக்கைகளும் ஏதோ அன்றைய வியாபாரத்தை அவசர அவசரமாக கூட்டிக் கொள்ள, அந்தப் பேசாப் பொருட்கள் நிர்பந்திக்கப்படுவதால் செய்வதனையே இவர்களும் எழுத்தின் மூலமாக மேம்போக்காக பேசிக் கொண்டே செல்வதனை எந்த தர்மத்தில் எடுத்துக் கொள்வது அல்லது சேர்ப்பது?

----------

So those who make any kind of profit by speaking ill about them ( like magazines ) & advertising their business using them , are equal sinners . Isn't it.?.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...//

Such discrimination against Women should be stopped.. நம் வீட்டிலுள்ள பெண்கள் , பாட்டியிலிருந்து , அம்மா, மனைவி வரை பிள்ளை பெற்றதும் அழகு குறைந்தும் , உடல் பெறுத்தும் இருந்ததில்லையா?..

நாம் அதை ஏன் மறந்தோம்?..

sivakumar said...

ஒரு பெண் என்றால் அவள் எதிரியாகவோ, எதிர்க்கருத்தோ கொண்டிருக்க வேண்டியதில்லை பாலியல் ரீதியான வக்கிரமான விமர்சனங்களையும், வன்மங்களையும் வீசுவதற்கு, பெண்ணாக இருப்பது மட்டுமே போதுமானது. அதுவும் பொது வாழ்வில் இருப்பவரென்றால் ? அடுத்த வீட்டுப் பெண்ணையே இது மாதிரியான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் முன்னாள், இன்னாள் கவர்ச்சி நடிகைகளை மதிப்புடன் பார்க்கவேண்டும் என்று கேட்பது வேலைக்காகாது. அரசியலுக்கு வந்த எல்லா நடிகைக்கும் இது நடக்கிறது. 80 வருடங்களுக்கு முன்பே தேவதாசிகள், விபச்சாரிகள் எனப்ப்டுவோர்கள் தம்முடைய(ஏதோ ஒரு பெண்ணுரிமை) மாநாட்டிற்கு வரவேண்டும் என்று பெரியார் அழைப்பு விடுத்தார். அவர் பரம்பரையில் வந்த திமுகவினரின் ஊர்ப்புறங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் போய்ப்பார்த்தால தெரியும் அவர்கள் பேணும் பெண்ணுரிமை, ஜெயலலிதாவைப் பற்றி அவர்கள் பேசுவதைக் கேட்டால் அவர்கள் வீட்டில் பெண்களே இல்லையா என்று எண்ணத்தோன்றுமளவுக்கு காது கூசும் வசைச்சொற்களைக் கேட்க நேரிடும். அவ்வாறு பேசிய சிலரையும் ஜெயலலிதா தமது கட்சியில் சேர்த்துள்ளார். அதனுடன் ஒப்பிட்டால் குஷ்பு, கனிமொழி பற்றிய கருத்துக்கள் எவ்வள்வோ பரவாயில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

திமுகவினரின் ஊர்ப்புறங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் போய்ப்பார்த்தால தெரியும் அவர்கள் பேணும் பெண்ணுரிமை, ஜெயலலிதாவைப் பற்றி அவர்கள் பேசுவதைக் கேட்டால் அவர்கள் வீட்டில் பெண்களே இல்லையா என்று எண்ணத்தோன்றுமளவுக்கு காது கூசும் வசைச்சொற்களைக் கேட்க நேரிடும். //

கண்டிக்கத்தக்கதே .. போலி பெண் ணியவாதிகளின் செய்கை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒரு பெண் என்றால் அவள் எதிரியாகவோ, எதிர்க்கருத்தோ கொண்டிருக்க வேண்டியதில்லை பாலியல் ரீதியான வக்கிரமான விமர்சனங்களையும், வன்மங்களையும் வீசுவதற்கு, பெண்ணாக இருப்பது மட்டுமே போதுமானது. //

இதைவிட அருமையா சொல்ல முடியாது.. அனுபவித்ததால் நன்று புரிகிறது.. இருப்பினும் இது போன்ற மன நோயாளிகளை தவிர்க்க , குப்பையென ஒதுக்கிடணும்.. ஒதுக்க பழகிவிட்டனர் பெண்கள்..

http://rajavani.blogspot.com/ said...

நடிகையையும் பெண்ணாய் மதிக்காததற்கு மீடியா பெரிய காரணியாக உள்ளது பயணமும் எண்ணங்களும். மீடியாக்கள் பெண்களைப் பற்றிய தரம்தாழ்ந்த விசயங்கள் வெளியிடுவதை குறைத்தாலே மிகப் பெரியமாற்றம் நிகழும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மீடியாக்கள் பெண்களைப் பற்றிய தரம்தாழ்ந்த விசயங்கள் வெளியிடுவதை குறைத்தாலே மிகப் பெரியமாற்றம் நிகழும்.//

அதேதாங்க..

அதான் இணையத்தையும் முடிந்தளவு ஆபாசமாக்க முயலுகிறார்கள்..கூட்டமாக சேர்ந்துகொண்டு..

எதிர்த்தால் ஏகப்பட்ட மிரட்டலும் கெடுதலும்,..

:)

J.P Josephine Baba said...

சில பெண்களுக்கு அடுத்தவர்களை இவ்வாறாக தரம் குறைத்து பேசி தங்களை நல்லவர்களாக காட்டி கொள்ளும் மன நோய் உண்டு!

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger J.P Josephine Baba said...

சில பெண்களுக்கு அடுத்தவர்களை இவ்வாறாக தரம் குறைத்து பேசி தங்களை நல்லவர்களாக காட்டி கொள்ளும் மன நோய் உண்டு!//

பொறாமை பெண்களுக்கேயுறிய குணம் போல..

:)

சரியா சொன்னீங்க..

முதல் வருகைக்கு நன்றி ஜோசப்பின்..

ஷர்புதீன் said...

:(

Anonymous said...

@ எண்ணங்கள் - நானும் இதுக் குறித்து பல காலம் எழுத நினைத்தேன் .. தாமாதமான வருகைக்கு வருந்துகின்றேன் .. இப்பதிவை இன்று தான் பார்த்தேன். பதிவுலகில் இதுக் குறித்து விரிவாக விவாதத்துக்கு கொண்டு வரவேண்டியுள்ளது ... பார்ப்போம் அதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரட்டும் !

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி ஷர்புதீன் இக்பால் செல்வன்..

பெண்ணை இழிவுபடுத்துவது ஒருவித தாழ்வு மனப்பான்மை , மனநோயும், பயமுமே..

எழுதுங்க கண்டிப்பா..