
பள்ளி படிக்கையிலே
துள்ளி விளையாட
வள்ளி அவளோடு
வந்ததம்மா ஒரு காதல்..
பருவம் எய்கையிலே
உருவம் குழப்பினாலும்
குருவின் நல்வழியில்
கருத்தாய் கல்விமேல் காதல்.
தேசிய மாணவபடை
தேர்ச்சி சுடுததிலே
தேகம், மனம் ,ஆணாகி
தேடுதலில் ஒரு காதல்
பொறியியல் கல்லூரி
பொறுப்போடு படிப்பிங்கே
பொருந்தாத பலகாதல்
புத்தகமே முழு காதல்
வேலையில் முன்னேற
வேகத்தோடு விவேகமுமே
எப்பொழுதும் உழைப்பென்றால்
எங்கே வரும் ஒரு காதல்
இருமனம் இணைந்திட்ட
திருமணமே முதல்காதல்
மழலைகள் வருகையிலே
மனதெல்லாம் சுககாதல்
எதுவெல்லாம் காதலிங்கே
எனசொல்ல இயலாதே
இடற்பாடும் காதலென்றால்
இனிமைக்கு குறைவுண்டோ?

இறைவனைக்காதலித்தால்
ஏழ்மையை நீக்கிடலாம்
மகேசனை சேவிப்போர் -சக
மக்களை காதலிப்பார்.
இயற்கையை காதலித்தால்
இனி இல்லை அழிவிங்கே
உழைப்பை காதலிப்பவன்
உலகை வெல்வான் காதலினால்

தப்பை தட்டிகேட்க
துணிவை நீ காதலி
ஏழ்மை, அடிமை நீங்க
ஏட்டை நீ காதலி
சமூகம் மேம்படவே
சம உரிமையை காதலி
அகிலத்தை உயர்த்திடவே
அறிவை நீ காதலி
சுகாதாரமான வாழ்வுக்கு
சுத்தத்தை நீ காதலி
மல்யுத்த போர் நீங்க
மழலை பேச்சை நீ காதலி

அநியாய கொலை மறைய
ஆபாசத்தை நிறுத்திடுவாய்
வன்முறையை நீக்கிடவே
வஞ்சகக்கூட்டம் சேராமல்
வரம்புகளை மீராமல்
வழிகாட்டியாய் வாழ்ந்திடுவோம்.
ஆதலினால் காதலிப்பீர்
ஆகாயம் இனி தூரமில்லை
ஆர்வத்தோடு பகிர்ந்தளித்தால்
ஆனந்தமான உலகமிங்கே,..
படம் : நன்றி கூகுள்..
5 comments:
வணங்குகிறேன் வாழ்த்துகள் பயணமும் எண்ணங்களும்.
டைமிங்க் கவிதை
>>>இருமனம் இணைந்திட்ட
திருமணமே முதல்காதல்
மழலைகள் வருகையிலே
மனதெல்லாம் சுககாதல்
மனதைக்கவர்ந்த வரிகள்
//ஆதலினால் காதலிப்பீர்
ஆகாயம் இனி தூரமில்லை
ஆர்வத்தோடு பகிர்ந்தளித்தால்
ஆனந்தமான உலகமிங்கே,..//
அருமை!
வயதுக்கேற்ற காதல் வந்தால் வானமே வசப்படும்!
தமிழ்மனத்துல உங்க ஓட்டையே இன்னும் போட்டுக்கலையா? ஹா ஹா
Post a Comment