Sunday, November 28, 2010

பதிவுலக ச (சி )ங்கங்கள்



















நாட்டுல நல்ல மழை பொழிய ,

நாமெல்லாம் அகம் மகிழ ,

நாளெல்லாம் பதிவெழுத ,

நாலு பேரு பின்னூட்ட ,



இப்படியா ஓருலகம்

இணையத்தில் வந்ததய்யா

இதவெச்சு அரசியலில்

இப்போதே புரட்சிசெய்ய


ஆரம்பிப்போம் சங்கத்தினை

ஆளுக்கொரு பங்குபோட்டு

ஆர்ப்பரிப்போம் சிங்கங்களே

ஆட்டோ அனுப்ப மாட்டீகளே..


-------

பெருமதிப்பிறகும் மரியாதைக்கும் உரிய மக்களே , வேற்றுமையில் ஒற்றுமை காண

சங்கங்கள் ஆரம்பிக்க அழைக்கிறோம்...

எல்லோருக்கும் சம உரிமை..

ஆளாளுக்கு ஒரு சங்கம்.. ( காசா பணமா ?.. )

எனக்கு தெரிந்த கட்சி , சாரி சங்கம் பெயர் சொல்லுகிறேன் . நீங்களும் உங்களுக்கு தெரிந்த பெயர் சொல்லுங்கள்.

1, ஆன்மீக சங்கம்...

2. அதை எதிர்க்கும் சிங்கம்..சாரி சங்கம்.

3. பெண்ணுரிமை சங்கம்..

4. அதை எதிர்க்கும் ஆணாதிக்க சிங்கம்..

5. சினிமா மட்டுமே சங்கம்...

6. ஆபாச சங்கம்.

7. திமுக பதிவர் சங்கம்..

8. அதிமுக பதிவர் சங்கம்..

9. காங்கிரஸ் பதிவர் சங்கம்..

10. விஜயகாந்த் பதிவர் சங்கம்..

11. கட்சி மாறிட்டே இருப்போர் சங்கம்.

12. கலாச்சார சங்கம்.

13. அதை மாற்றுவோர் சங்கம்.

14. அம்மாக்கள் சங்கம்.

15. அப்பாக்கள் சங்கம்.

16.. வாலிபர் சங்கம்.

17. வயதான வாலிபர் சங்கம்..

18. இலக்கியவாதி சங்கம் .

19.அதை எப்போதும் விமர்சிக்கும் சங்கம்..

20. பஸ் , டீவிட்டர் முக புத்தக சங்கம்..

21. பெரியார் சங்கம்.

22. அதை தடுப்போர் சங்கம்..

23. கெட்ட வார்த்தை சங்கம்..

24. என் மதமே பெரிது சங்கம்.

25. எம்மதமும் சம்மதம் சங்கம்..

26. எதில் சேறணும்னு யோசிப்போர் சங்கம்..

27. ஆட்டு மந்தை சங்கம்..

28. நாந்தான் ஆடுமேய்ப்பேன் சங்கம்.

29. சந்திப்பு நடத்தும் சங்கம்..

30. சந்திப்பு முடிந்தபின் சிந்திப்போர் சங்கம்..





இப்போதைக்கு இவ்வளவுதான் நியாபகம் வந்தது.. மற்றதை நீங்க சொல்லுங்க...


( டிஸ்கி : யாரையும் காயப்படுத்த அல்ல.நகைச்சுவைக்கு மட்டுமே.. நிஜமாகவே நல்லது செய்ய நினைப்பவருண்டு.. அதற்கு குழுமம் ஆரம்பித்து அங்கிருந்து நல்ல பல விஷயங்களை தொடங்கலாம்...... )


படம் : நன்றி கூகுள்..




.

11 comments:

Unknown said...

heee.. semma comedy.. haa..haa..haa..

சிங்கக்குட்டி said...

எந்த சங்கத்திலும் சேராத சிங்கங்களை விட்டுடீங்க :-).

MEERAN MYDEEN said...

இத்தனையும் சேர்ந்தே இருப்பதுதான் குழுமம், வலை, வலைதளம், சினிமா, வாழ்க்கை, தவிர்க்க முடியாத நிலை - இவைகள் எல்லாம். பெருசா எது நடந்தாலும் அல்லது பேசினாலும், அதை ஓரத்தில் நின்று பார்த்துக்க கத்துக்கனும். அந்த காரியம் முடிந்து விட்டால் அந்த நிமிடமே அதை மறந்து, அடுத்த பணியில் நம்மை ஈடுபட கத்துக்கனும் - இவன் சுத்த தமிழன்.

சென்னை பித்தன் said...

ஆரம்பிப்போம் இன்றே ஆளொக்கொரு சங்கம்
நாட்டினில் சாதிக்கோ கட்சிக்கோ இல்லையே பஞ்சம்!
சங்கம் வளர்க என்று முழங்குவோம் சங்கம்!
இதனால் என்ன? இல்லை நமக்கொரு
பங்கம்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க அடங்காப்பிடாரி ..

-----------
சிங்கக்குட்டி said...

எந்த சங்கத்திலும் சேராத சிங்கங்களை விட்டுடீங்க :-).//

ஆஹா விடமாட்டோம்ல , அப்படி தப்பிக்க..:)

------------



MEERAN MYDEEN said...

இத்தனையும் சேர்ந்தே இருப்பதுதான் குழுமம், வலை, வலைதளம், சினிமா, வாழ்க்கை, தவிர்க்க முடியாத நிலை - இவைகள் எல்லாம். பெருசா எது நடந்தாலும் அல்லது பேசினாலும், அதை ஓரத்தில் நின்று பார்த்துக்க கத்துக்கனும். அந்த காரியம் முடிந்து விட்டால் அந்த நிமிடமே அதை மறந்து, அடுத்த பணியில் நம்மை ஈடுபட கத்துக்கனும் - இவன் சுத்த தமிழன்.

--------

மீரான் மைதீன் நல்ல விளக்கம் சுத்த தமிழனுக்கு.. சரி சுத்த தமிழன் சங்கம் ஆரம்பிப்போம்..:)

--------------------
சென்னை பித்தன் said...

ஆரம்பிப்போம் இன்றே ஆளொக்கொரு சங்கம்
நாட்டினில் சாதிக்கோ கட்சிக்கோ இல்லையே பஞ்சம்!
சங்கம் வளர்க என்று முழங்குவோம் சங்கம்!
இதனால் என்ன? இல்லை நமக்கொரு
பங்கம்!//

சென்னை பித்தன் சார் கவிதையிலே கலக்கிட்டீங்க.. :)

http://thavaru.blogspot.com/ said...

இதாங்க From peaceful minds do great ideas flow
ஆமா நீங்க எந்த சங்கம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...

இதாங்க From peaceful minds do great ideas flow
ஆமா நீங்க எந்த சங்கம்.//

வாங்க தவறு..

பாத்தீங்களா நம்மளையே மாட்டி விடுறீங்களே...:)

நசரேயன் said...

மொக்கை போடுவோர் சங்கமுன்னு ஆரம்பிச்சி உங்களை தலைவியா ஆக்கிடலாம்

எண்ணங்கள் 13189034291840215795 said...

நசரேயன் said...

மொக்கை போடுவோர் சங்கமுன்னு ஆரம்பிச்சி உங்களை தலைவியா ஆக்கிடலாம்//

ஆஹா.. இருக்கிற தலீவருங்கோ கோச்சுக்கபோறாய்ங்க . :)

Thekkikattan|தெகா said...

27. ஆட்டு மந்தை சங்கம்..

28. நாந்தான் ஆடுமேய்ப்பேன் சங்கம்.
///

:))) nice ones... enjoyed!

எண்ணங்கள் 13189034291840215795 said...

Thekkikattan|தெகா said...

27. ஆட்டு மந்தை சங்கம்..

28. நாந்தான் ஆடுமேய்ப்பேன் சங்கம்.
///

:))) nice ones... enjoyed!//

மனதில் நினைத்தது 50 க்கும் மேல் சங்கங்கள்.... ஆனால் எழுத்தில் கொண்டு வர இயலாதே....:)

நன்றி தெகா..