Saturday, November 27, 2010

மந்திர புன்னகை...பெண்ணை அவமானப்படுத்தும் படம்..

















நாம சினிமா பார்ப்பதே அரிது.. அதிலும் விமர்சனம் பண்ற ஆளில்லே..

ஆனா பார்த்து தொலைச்சிட்டோம்..



-----------------------------

ஒரு ஆண் எல்லா விதமான கெட்ட பழக்கம் கொண்டிருந்தாலும் , அவனை துரத்தி துரத்தி காதலித்து அவன் நோயை தீர்ப்பாளாம் ஒரு பெண் காதலினால்..

ஏன்.?

ஏன்னா அவள் தமிழ்நாட்டு பெண் அல்லவா?..

ஆனா இதே தவறுகளை செய்யும் ஒரு பெண்ணை இதே போல துரத்தி துரத்தி காதலித்து குணப்படுத்துவானா .?

அத விடுவோம்..

தவறில்லாத பெண் என்றாலே செய்வானா?.
..ஒரு இளிச்சவாயன் கணவன் செய்வானாம் , செய்தும் ஓடிப்போவாளாம்.... :))

காசில்லாமல் கல்யாணமே கேள்விக்குறியாகும் சமூகத்தில் , பெண் தான் ஆணை துரத்தி துரத்தி... ஓடி ஓடி சேவை செய்வாள்.. ஏன்னா அவள்தான் அடிமை.. அவள் மட்டும் தான்...

யோசிக்க கூட மாட்டோம்ல..:))

ஏன்னா தமிழ்நாட்டு ஆண் க்கு உள்ள சினிமா ஃபார்முலா மட்டுமல்ல , நிஜமும் ...:)



முக்கியமான சம்மரீஸ்

1. பாத்து பாத்து துணி துவைத்து போடுகிற கணவன் ,
தன்னை எப்பவும் எதுக்கும் பாராட்டிக்கொண்டே இருக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தான் மிக நேசிக்கும் பிள்ளையை கூட விட்டுட்டு காதலனுடன் ஓடிப்போவாராம் மனைவி..

-- அப்ப தமிழ்நாட்டுல ஒரு மனைவி கூட கணவனோட வாழ முடியாது.:)))


2. பெண் என்பவள் ஆணை சந்தோஷப்படுத்த மட்டுமே பிறந்தவள்..

அவள் பாலியல் தொழிலாளி னா திருமணத்துக்கு ஆசைப்படக்கூடாது.. ஆனா அவன் எல்லா பெண்களிடமும் செல்வான். எல்லா கெட்ட பழக்கமும் இருக்கும்.. ஆனா அதை பெருமையா சொல்வதற்கு பெயர் "* நேர்மை"*.. அந்த நேர்மைக்காகவே /மட்டுமே அவனை துரத்தி துரத்தி காதலிப்பாள் ..
ஏன்னா அதுக்கு பெயர் தான் அன்பு...:).. இத்தனைக்கும் மிக நல்ல குணமுடையவனை , தன்னை விடாப்பிடியாக காதலிப்பவனை ஒதுக்கிவிட்டு..:))))))))

3. கார் விற்க வருபவன் பெண் உடம்பை பார்த்து கார் வாங்கினால் தப்பேயில்லை.. ஏன்னா பெண் அதுக்கு மட்டும்தானே படைக்கப்பட்டுள்ளாள்..
.?...சோ டேக் இட் ஈஸி சேல்ஸ் பெண்களே..

4.அநாகரீகம் என்பதே நேர்மை.. குடித்துவிட்டு இரவோடு இரவாக காதலி வீட்டுக்கு சென்று எழுப்பி கேள்வி கேட்பதே நேர்மை.. தனக்கு கீழுள்ள இஞ்சீனியர் மனைவிக்கு போன் போட்டு தான் குடிப்பதையும் , தன் நட்புகள் கெட்டவர் என்பதை சொல்வதையும் தாங்கிக்கொள்ளும் பெண் நேர்மை.. அடடா நேர்மைக்கு என்ன ஒரு அற்புதமான விளக்கம்...?:)

5. 500 பேர் கூட படுத்தாலும் ஒருத்தனை மட்டுமே வந்து மருத்துவமனையில் பார்ப்பாள்.. ஏன்னா அவன் சேலை வாங்கி கொடுத்தானாம்... அடடா 499 ஆண்கள் இத்தனை மோசமானவர்களா?.. தெரியாதே.?.

6. ரொம்ப ரொம்ப நல்ல மனிதன் , மனைவி சென்றதும் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்வான்... ஏன்னா குழந்தையை விட கவுரத ரொம்ப
முக்கியம்... குழந்தை எப்படி போனா என்ன?.. ஆனா அந்த நல்ல மனுசன் இல்லூஷன்ல வந்து அட்வைஸுவார்...

7. காசு பணம் + கொஞ்சம் அறிவு இருந்தா போதும்.. எல்லாரையும் அடிமைப்படுத்தலாம் , மட்டுமல்ல , இஷ்டப்படி நடந்துக்கலாம்.. நல்லா உடுத்தணும் னு இல்லை.. தொழிலாளி கூட சேர்ந்து குடிக்கலாம்.. தானும் கெட்டு மத்தவனும் கெட்டாதானே நல்லது?..

இதே ஒரு ஏழையென்றால்?.... நோ . நோ.. கேள்விகேக்கப்டாது...மூச்...!!!!!.

1970 க்கு அப்புரம் குடிக்காதவனே இல்லையாம் - வாழ்க டாஸ்மாக்..( விளம்பரமோ ?. ) . வால்க டமில்நாட்.


8. அப்பனும் ஆத்தாவும் விட்டுபோட்டு போனப்புறம் வளர்த்து ஆளாக்கி ஆர்கிடெக்ட் ஆனப்புறம் , " கெழவி செத்து போகட்டும் .. ஏன்னா என்னை பார்த்தா கெழவிக்கு வாழ ஆசை வரும் " னு இன்னாமா பாச டயலாக்...?..

அதே கிழவி என்பவர் இவனை வந்து மருத்துவமனையில் பார்த்து வருந்துவார்...

ஆக மஹா சனங்களே , படிச்சு ஆளாக்கினவுகளை ஒரு காசுக்கு மதிச்சுராதீக...

-- மொத்தத்தில் ஆண் னா அப்படித்தான் இருப்பான்.. பெண் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு அவனுக்கு சேவை செய்வதே வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமும் புண்ணியமும்...இன்ன பிறவும்...:)


தேடுங்க பெண்களே ஊரிலுள்ள அயோக்கியன் ஆனால் நேர்மையா அதை ஒத்துக்கிறவனை., ஆனா பணமுள்ளவன்.... ஏன்னா அதுக்கு மட்டும்தான் படைக்கப்பட்டார்கள் பெண்கள்..


படத்தில்
4 பெண்களையும் இதுக்கு மேல கேவலப்படுத்த முடியாது..

படத்துல நல்ல விஷயமே இல்லையா?.. இருந்தது.. குழந்தைகளை அழைத்து வீடு கட்டி விளையாடுவது... டெக்னிகல் விஷயம் உழைப்பு இல்லாமல் இருக்குமா?..

ஆனால் என்ன இருந்து என்ன மோசமான கரு எல்லாத்தையும் அழித்திடுதே..



மொத்தத்தில் பணம் இருந்துட்டா என்ன வேணா செய்யலாம் . எப்படி வேணா படம் எடுக்கலாம்..:). ஏன்னா பணத்துக்காக , புகழுக்காக நம்மை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.. நோ ஒர்ரீஸ்... எஞ்சாய்...:)



பிரிவோம் சந்திப்போம் , பார்த்திபன் கனவு திரைப்படத்தினை எடுத்தவர் இவர் என்பதை நம்ப முடியலை...அது நான் ரசித்த படம்..


இன்னொரு மைனஸ் பாயிண்ட் உணர்ச்சியற்ற முகத்தை வைத்துக்கொண்டே நடித்த இயக்குனர்..

கொல்லாதீங்க சாமிகளா !!!.. டமில் மக்கள்ஸ் நாங்க ரொம்ப பாவமில்ல...


பெண் அடிமைத்தனம் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தொடர வெச்சிடுவாய்ங்க..
... வாழ்த்துகள் ...அதை பார்த்து சில ஆட்டு மந்தை ஆண்களும் தந்திரமா சந்தோசப்படுவாங்க.

மந்திர புன்னகை...ஆணின் தந்திரபுன்னகை...:)




படம் : நன்றி கூகுள்


.




11 comments:

என்னது நானு யாரா? said...

Gender Consciousness சமூகத்தில நிறைய பேர்களிம் இல்லை. அதனால் தான் பெண்களை எல்லாமட்டத்திலும் மட்டம் தட்டும்படியான இழிநிலை உள்ளது. பெண்களே அந்தப் போக்கிற்கு உடன்படுகின்றன கொடுமையும் கூடத்தானே நடக்கின்றன. இல்லையென்றால் ஆடைக்குறைத்து, விளம்பரப்படங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து, ஏன் தன்னை தானே கீழ் நிலைக்கு அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொள்ள வேண்டும்.

பணம் அனைவரையும் ஆட்டி வைக்கின்றது. பெண்கள் தாங்களே உணர்ந்தால் அன்றி பெரிய மாற்றம் வந்து விடும் என்று நம்ப முடியவில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger என்னது நானு யாரா? said...

Gender Consciousness சமூகத்தில நிறைய பேர்களிம் இல்லை. அதனால் தான் பெண்களை எல்லாமட்டத்திலும் மட்டம் தட்டும்படியான இழிநிலை உள்ளது. //


மிக சரியா சொன்னீங்க ..

புலவன் புலிகேசி said...

//பெண் அடிமைத்தனம் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தொடர வெச்சிடுவாய்ங்க..... வாழ்த்துகள் ...அதை பார்த்து சில ஆட்டு மந்தை ஆண்களும் தந்திரமா சந்தோசப்படுவாங்க.//

ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க...

எண்ணங்கள் 13189034291840215795 said...

புலவன் புலிகேசி -

ரொம்ப கம்மியா சொல்லிட்டீங்க...//


நான் கொஞ்சம் ஆப்டிமிஸ்டிக் ஆ சிந்திச்சிட்டேன் போல..

எப்படியும் என்னை மாதிரி பல பெண்கள் இருப்பாங்களேன்னு...:)

http://rajavani.blogspot.com/ said...

வெளுத்து கட்டுங்க..அப்பனாவது திருத்திகிறாங்களான்னு பார்ப்போம்.

RMD said...

/ஆனா இதே தவறுகளை செய்யும் ஒரு பெண்ணை இதே போல துரத்தி துரத்தி காதலித்து குணப்படுத்துவானா .?//

1.கதையின் நாயகன் பல தவ‌றான பழக்க வழக்கங்களை உடையவன்.ஆனால் அதை நியாயப் படுத்தும் பலமான காரனம் உண்டென்று காட்டப் படுகிறது. ஆகவே அவன் இயல்பாகவே ரொம்ப நல்லவன்.

2. அவனை தவ‌றாக வளர வைத்த அவனுடைய கடந்த கால சூழ்நிலை இயல்பிலேயே கெட்டவராக உள்ளவர்களால் ,தவ‌று செய்வதில் இன்பம் காண்பவர்களால், ஏற்பட்டது. ஆகவே அவன் ரொம்ப நல்லவன்.

3.அவனுடைய தவறான பழக்க வழக்கங்களை வைத்து பார்க்காமல் அவனுடைய இயல்பான,மறைந்து இருக்கும் நல்ல குணங்களுக்காக ஒரு பெண் காதலிக்கிறார்.
அவனை திருத்த முயல்ல்கிறார்.அவளும் ரொம்ப நல்லவள்தான்.அவள் ஒரு கலியுக கண்ணகி.

4. ஒரு ரொம்ப நல்லவனும்,ரொம்ப நல்லவளும் காதலித்தால் உங்களுக்கு என்னங்க?.

நல்ல கேள்விதான் .நீங்க கேள்வி கேட்கிற மாதிரி படம் எடுத்தால ஓடுமா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger RMS Danaraj said...


4. ஒரு ரொம்ப நல்லவனும்,ரொம்ப நல்லவளும் காதலித்தால் உங்களுக்கு என்னங்க?.//



வருக தன்ராஜ்..

அதானே எனக்கென்ன?..


ஆகவே பெண்களே , இனி ரொம்ப நல்லவங்களா நீங்க இருக்கணும்னா பசையுள்ள ( அதான் பணமுள்ளவன் ) நேர்மையா தப்பை ,பெருமையா ஒத்துக்கிறவனிடம் , உங்க பாட்டில் திறக்கும் வித்தையை மதிப்பவனிடம், உங்க உடம்பை காட்டி கார் விற்பதை ஏற்பவனிடம் அன்பு செலுத்துங்கள்..

ஆயா வளர்த்து முடித்ததும் போய் சேர்ந்திடணும்.. அதுக்கான வழிகளை யோசிங்க..

அக்கம் பக்கம் ஒருத்தனும் கெட்டவனா( ??? ) இருக்கப்டாது .கூப்பிட்டு வெச்சு தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்துங்க..

இப்படித்தான் வாழணும் இனி...அப்பதேன் நீங்க நல்லவிங்க..

Ramesh said...

செம கோபத்தோட நியாயமா கேள்வி கேட்டிருக்கீங்க.. உங்களுக்கு பதில் கிடைக்காது.. ஏன்னா.. நீங்க நியாயமா கேள்வி கேட்டிருக்கீங்க.. நியாயமே சிந்திச்சாலே இந்த காலத்துல தப்புங்க.. அது தெரியாதுங்களா உங்களுக்கு...

எண்ணங்கள் 13189034291840215795 said...

r பிரியமுடன் ரமேஷ் said...

செம கோபத்தோட நியாயமா கேள்வி கேட்டிருக்கீங்க.. உங்களுக்கு பதில் கிடைக்காது.. ஏன்னா.. நீங்க நியாயமா கேள்வி கேட்டிருக்கீங்க.. நியாயமே சிந்திச்சாலே இந்த காலத்துல தப்புங்க.. அது தெரியாதுங்களா உங்களுக்கு...//


:))

ஆமாங்க .. நாம விதை போட்டு வைப்போம்.. வளரும் பெண் குழந்தைகள் அறுவடை செய்யட்டும்..

நான் இப்ப அனுபவிக்கிற மாதிரி...:)

நன்றி ரமேஷ்.

சீனு said...

//பெண் அடிமைத்தனம் இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தொடர வெச்சிடுவாய்ங்க//

அப்ப சீக்கிரமா போய் பெண்களுக்கு அறிவுரை சொல்லி காப்பாத்துங்க... :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி சீனு..

உங்க அட்வைஸ் ஏற்கப்பட்டது.:)