Thursday, November 4, 2010
தீப ஒளி திருநாள்...
1. “Life is a festival only to the wise.”
Ralph Waldo Emerson
2. “You are invited to the festival of this world and your life is blessed”
Rabindranath Tagore
3. “Let no one judge you in food or in drink, or regarding a festival or a new moon or sabbaths”
Bible
4. “Revolution is the festival of the oppressed”
Germaine Greer
5. “The truth is that existence wants your life to become a festival...because when you are unhappy, you also throw unhappiness all around. ”
Rajneesh
பாருங்க ஒவ்வொருத்தர் பார்வையிலும் திருவிழா என்பது மாறுபடுகிறது...
சிலருக்கு கிரிக்கெட், ஃபுட்பால், இசை, நடன , சினிமா திருவிழாக்கள் வருடமுழுவதுமே..
ஏழைகளுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் வருடமொருமுறை மட்டுமே..
போராடி பெறும் வெற்றியே திருவிழா சிலருக்கு..
எது எப்படியோ ,
பண்டிகை என்பது மகிழ்ச்சியை பரவவிடுவது பகிர்வதின் மூலம்..எனக்கு.( Christmas meant for sharing)
பட்டாசுகளும் , தீபாவளி விளக்கும் அலங்காரம் செய்யப்பட்டு வந்துள்ளது வீட்டுக்கு..தீபம் ஏற்றினால் அதன் அழகு போய்விடுமே என வருத்தமே மிச்சம்..
விளக்கில் கூட கல் , மணி வேலைப்பாடுகள் செய்வார்களா என்ன?..
மக்கள் அனைவரையும் பாரபட்சம் பாராது திருவிழாக்கள் ஒன்றிணைக்குமானால் தவறேயில்லை கொண்டாட்டங்கள்..
மகிழ்ச்சியான மனிதனால் எளிதில் சாதிக்க முடியும்...
முக்கியமா குழந்தைகள் பகிர ஆரம்பிப்பது இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களிலேதான்..
தன்னுடைய உழைப்பில் தன் குடும்பத்தை மகிழ்வித்த மகிழ்ச்சி குடும்ப தலைவன் தலைவிக்கு...
உற்றார் உறவினரை சந்திப்பதும் ஆசி பெறுவதும் அதன் மூலம் பெரியவர்களுக்கு மரியாதை , மதிப்பளித்து சந்தோஷப்படுத்துவதும் மன நிறைவான செயல்...
வெடிகள் வெடிப்பது ஒரு வகையில் கல்வி..அதில் நிறைய விஷயம் ஒளிந்துகிடக்கின்றது..
பயந்த குழந்தைக்கு நம்பிக்கையோடு தந்தை கைபிடித்து மத்தாப்பு கொழுத்தி பயம் போக்குவார்..
ஒரு பட்டாசு தயாரிப்பில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்பும் , வேதியியலும் அழகுணர்ச்சியும் , அதிசயமே குழந்தைக்கு.. அதோடு தீ விபத்து பற்றிய விழிப்புணர்ச்சியும் முதலுதவியும் கூட.. அதை எடுத்து சொல்வோம்..மறவாது...
இந்த முறை இஸ்லாமிய , புத்த மதத்தினரோடு , எம் கிறுஸ்தவ குழந்தைகள் பகிர்ந்து வெடிப்பார்கள்...
இங்கு சீன வெடிகள் குறைந்த விலையில் கிடைக்குது....
ஏனெனில் தலைநகரில் வெடி வெடிக்க தடை..அல்லது அபராதம் கட்டணும்..
ஊருக்கு ஒதுக்குபுறம் சென்று வெடிக்கணும்..
( வெடினா 1000 வாலா லாம் இல்லை.. மத்தாப்பு வகை மட்டுமே ).
முக்கிய விழாவின் போது ( புது வருடம் அரச விழா போன்று ) பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் , அரசே மணிக்கணக்காய் வெடித்திருவிழா நடத்தும்.. அதை ஊரே வேடிக்கை பார்க்கும்..
சின்னாவருக்கு லியோனி என்ன பேசுறார் என புரியாவிட்டாலும் , லியோனியின் பாடி லேங்குவேஜ்+ குரல் விழுந்து விழுந்து சிரிப்பை வழவழைக்குது..நமக்கு அறுவை என தெரிவது குழந்தைக்கு இனிமை,..
நாமும் குழந்தையாக ரசிக்க பழகணுமோ?..
தீபத்திருநாளில் மகிழ்ச்சியை பகிர்ந்து பரப்பிட வாழ்த்துகள்..
( இதே நேரத்தில் குழந்தைகளை பலிகொடுத்து நிற்கும் கோவை குடும்பத்தார்க்கும், அம்பிகாவின் குடும்பத்தார்க்கும் , இன்னும் பலருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்..
இத்தகைய விபத்துகள் இனி நேராமல் தடுக்க நம்மால் முடிந்ததை சமூகத்தில் கண்டிப்பாக செய்வோம் )
----------
படம் : நன்றி கூகுள்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
பண்டிகை என்பது மகிழ்ச்சியை பகிர்வதின் மூலம் கிடைக்கும் குதுகலம்தான்.
ஆனால் தொலைகாட்சி வியாபாரம் வந்த பின் உண்மையான பண்டிகை குதுகலம் தொலைந்து போய் விட்டது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
//ஆனால் தொலைகாட்சி வியாபாரம் வந்த பின் உண்மையான பண்டிகை குதுகலம் தொலைந்து போய் விட்டது.//
நிஜம்தான்.. :(
//தீபாவளி வாழ்த்துக்கள்.//
நன்றி .. வாழ்த்துகள் தங்களுக்கும்..
தீபாவளி வாழ்த்துகள்
ஜோதிஜி said...
தீபாவளி வாழ்த்துகள்
//
நன்றி .. வாழ்த்துகள் தங்களுக்கும்..
பண்டிகை என்பதன் பொருளே பகிர்வுதான்.
சின்ன அளவில் ஆரம்பிக்குது வீடுகளில். பலகாரங்களை அக்கம்பக்கம் கொடுக்கும் வழக்கம் ஒன்னு இருக்கு பாருங்க!
கிறிஸ்மஸ் முடிஞ்ச மறுநாள் மாளிகைகளில் மீந்துவிட்ட கேக்குகளையும் தின்பண்டங்களையும் பெட்டிகளில் நிறைச்சு ஆதரவில்லாத மக்களுக்கும் அநாதை இல்லங்களுக்கும் அனுப்புவாங்களாம் அந்தக் காலத்துலே இங்கிலாந்து நாட்டில். அதுதான் Boxing Day ஆரம்பிச்ச கதை. இதுக்கு அரசு விடுமுறை உண்டு.
ஆங்கிலேயர்கள் அதிகம் உள்ள நாடுகளில்/அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் இப்பவும் அந்தப் பழக்கம் இருக்கு.
விடுமுறையைச் சொல்றேன்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பு டேனிக்கும் தீபாவளிப்பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.
நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரஜின்
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பு டேனிக்கும் தீபாவளிப்பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
//
அன்பு அம்மா மிக்க நன்றி .. தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..
மிக அருமையான விளக்கமும் அம்மா..
மிக்க நன்றி..
அன்பின் ரஜின், அருமையான நல்லெண்ண வாழ்த்துக்கு மிக்க நன்றி..
தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..
நல்லதொரு பகிர்வு, இனிய தீபாவளி வாழ்த்துகள்.
V.Radhakrishnan said...
நல்லதொரு பகிர்வு, இனிய தீபாவளி வாழ்த்துகள்.
----------
நன்றி சார் வருகைக்கு..
தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
Post a Comment