Thursday, September 9, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன்.?






































நம்மில்
எத்தனை பேர் உளவியல் ரீதியாக திருமணத்தை பற்றி அறிந்துள்ளோம்.?
திருமணம் என்ற சடங்கு தோன்றிய காலம்தொட்டே, ஆணும் பெண்ணும் தம்மை முழுதுமாய் ஆயுசுக்கும் அர்ப்பணித்து புது உயிரை உலகுக்கு கொண்டு வருவதே அதன் அர்த்தம்.. .

பின்
அக்குழந்தையும் மகிழ்வாய் வளர்ந்து சமூகத்துக்கு நம்பிக்கை, விசுவாசம், சேவை
கொண்டு வருதேயன்றி அன்புக்காக ஏக்கமடைவதல்ல..நான் நல்லபடியா வளர்ந்தேன் .. என்னை பார்த்து இல்லற வாழ்வை நம்புங்க.. நான் மகிழ்வாயிருக்கேன்.. ஆக நானும் இச்சமூகத்துக்கு திரும்ப ஏதாகிலும் செய்வேன் என்ற உயர்ந்த நோக்கத்தில் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டுமாயின் பெற்றோரும் மகிழ்வான இல்லறம் தரவேண்டியது கடமையாகும்..

ஆக
திருமணம் என்பதே ஒருவித சேவை மனப்பான்மை உடையவர்க்கு மட்டுமே..
அதைவிட்டு நம் உரிமையை நாம் நிலைநாட்டுமிடமல்ல..நமக்குள் இருக்கும் தனிமைக்கு தற்காலிக இடம் தேடுவதல்ல.. அப்படியான எண்ணம் கொண்டவர்கள் தயவுசெய்து திருமணத்தோடு நின்றுகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை 100% தவிர்த்திடணும்..

ஆனால்
காலம் செல்ல செல்ல , கலாச்சார மாற்றத்திலும் , திருமணம் என்பதே வெறும் பண , பதவி , அதிகார பறிமாற்றம்
கொண்ட ஒரு வியாபார ஒப்பந்தமாகிப்போனது..இச்சூழலில் வளரும் குழந்தைகளும் தமது வம்சாவழி நிரூபிக்க ஒரு வாரிசு என்ற நிலையிலே மட்டும் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்...இத்தகைய திருமணம் அன்புக்கோ காதலுக்கோ சிறிதும் சம்பந்தமில்லாதவை.. இலவசமாய் காமம், வசதி , மதிப்பு, அந்தஸ்து கிடைக்கும் ஒரு ஒப்பந்த திருமணம் என்றாலும் ஆழ்மனதில் அனைவரும் ஏங்குவது அன்புக்குத்தான்.

ஒரு
நிஜமான அக்கறை கொண்ட திருமணத்தில் குழந்தையின் வாழ்வு வளர்ப்பு முக்கிய பங்கு வகித்தே வந்தது காலந்தொட்டு..
இந்த அக்கறை குறையும்போது , பிரிவினால் சுதந்திரம் கிடக்கும் என நினைப்பது , வீட்டை விசாலமாய் அழகுபடுத்த எண்ணி முக்கிய தூணை/சுவற்றை நீக்குவது போலாகும்.. மெல்ல மெல்ல வீடு இடியலாம்..


ஒரு
திருமணத்தில் மிக முக்கிய முடிவுகள் குழந்தைகள் கொண்டே எடுக்கப்படணும்..
விவாகரத்தினால் அதிகம் பந்தாடப்படுவது குழந்தைகளின் எதிர்காலமும் , மனமும்.., அவர்களின் வளர்ச்சியும்தான்.. ஒரு குழந்தை தன் பெற்றோரில் ஒருவரை விவாகரத்தின் மூலம் இழக்கும் வலியானது மரணத்தில் அந்த ஒரு பெற்றோரை இழப்பதை விட கொடியதாம்.

அக்குழந்தை அச்செய்தியை எப்படி எடுக்க வைக்கப்படுகிறது.? வளர்க்கப்படுகிறது.?

" ஏய் குழந்தையே , உன்னை விட, உன் வளர்ச்சியை விட , என்னுடைய தனிப்பட்ட சுகமே முன்னுரிமை பெறுகிறது..குடும்பம் என்பது எனக்கு முக்கியமல்ல..
அதில் நீ ஒரு பொம்மை மட்டுமே ...நான் நினைத்தபடி உன்னை ஆட்டிவைத்து என் சந்தோஷங்களை அடைய முடியும்.." நம்ப முடியுதா.?... ஆனால் இதுதான் உண்மை..


குழந்தைகள் சிறு வயதிலேயே குடும்ப சண்டைகளால் பாதிப்படைகிறார்கள்..அவர்கள் குடும்ப சண்டையை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.. தங்களின் இயலாமையை சொல்ல தெரிவதில்லை.. ஆனால் அந்த கோபம் வேறு வழியில் கட்டாயம் காண்பிக்கப்படுகிரது குடும்பத்தில் , சமூகத்தில் அதிக உணவுண்பது, மது , புகை, காமம் , தற்கொலை போதை மருந்து , இன்னும் பல போபியாக்களோடு வலம் வர வைக்கப்படுகிறார்கள்..


குழந்தைக்கு சமூகத்தின் மேலே உள்ள நம்பிக்கை போய்விடுகிறது.. குழந்தையின் திறமை முழுக்க மழுங்கடிக்கப்படுகிறது.. வெளியே சொல்ல முடியா வெட்கம் , வருத்தம் , ஆத்திரமாய் மாறுகிறது..அவை பொருள்களால் பணத்தால் ஈடு செய்ய முடியாது.. பெற்றோரின் பிரிவில் ஒருவராவது அதை முழுதுமாக ஈடு செய்யக்கூடியவராய் , துணிவானவராய் , மிக அன்பானவராய் இருந்துவிட்டால் பரவாயில்லை.. ஆனால் அந்த பெற்றோரும் , பிரிவினால் ஏற்பட்ட கோபத்தோடு , இயலாமையோடு அக்குழந்தையை வளர்ப்பார்களானால் அவ்வாழ்க்கை நரகமாகிடும் குழந்தைக்கு..


சரி முடியாத பட்சத்தில் என்ன செய்யலாம்.. கண்டிப்பாக பிரியலாம் ..

ஆனால் அதற்கு முன்னால் சரி செய்துகொள்ள முடியுமா என பார்க்கணும்.. உணர்ச்சி வேகத்திலோ , ஈகோவினாலோ பிரியவே கூடாது..


முக்கியமா
நான்கு வகையான பிரச்னைகள் சரி செய்ய முடியுமா என பார்க்கணும்..தவறு யாரிடம் இருந்தாலும் பரவாயில்லை, ஒத்துக்கொண்டு சரி செய்ய முயலணும்..
துணையிடம் என்றாலும் மெதுவாக சொல்லி திருந்த அவகாசம் தரலாம்..


1. விமர்சித்தல்...


துணையை
மோசமாக விமர்சிப்பது.. குற்றத்தை கூட ஆக்கபூர்வமாக சொல்லாமல் சண்டையிழுக்கும் நோக்கில் சொல்வது..
" எங்க அம்மா கடிதம் வந்ததை கொடுக்க மறந்தாய் போல " என சிறு புன்னகையோட சொல்வதற்கும் , " எப்படி நீ எங்கம்மா கடிதத்தை மறைக்கலாம்.? என கோபமாக கேட்பதற்கும் வித்யாசம் உள்ளது... அதேபோல நடை ,உடை, வேலை என எல்லா விஷயத்திலும் விமர்சனம் ஆக்கபூர்வமாக ஊக்கமாக இருக்கணும்.


2. அதிகாரம்/அடிமைப்படுத்துதல்..


மரியாதை
குறைத்து நடத்துவது துணையை.. துணையின் இயலாமையை சுட்டிக்காட்டி பேசுவது , கோபம் வரவழைப்பது..
எங்கப்பா என்னை இப்படி வளர்த்தார். எங்கண்ணா ரொம்ப அழகு.. .. எங்கம்மா சமையல் கிட்ட நீ வர முடியாது.. நீ ஏழை. படிப்பு , அழகு ,அறிவு பத்தாது என குறைகளை மட்டுமே சொல்லி தான் உன்னைவிட உசத்தி என்று சொல்லியே ஆழ்மனதில் அடிமைத்தனத்தை உருவாக்குவது..


3. தற்காத்துக்கொள்ளல்.


இது
இயல்புதான் என்றாலும் , நாளடைவில் உதவாது ..
பிரச்னையை முழுமையாக புரிந்துகொள்லாமல் தற்காத்துக்கொள்வதிலேயே ( வெற்றிபெருவதிலேயே ) குறியாய் இருக்கும்போது பிரச்னையே திசை திருப்பப்பட்டு பலமாய் பூதாகரமாய் மாறிட வாய்ப்புள்ளது.. ஒருவர் கோபமாக இருக்கும் நேரத்தில் புரிய வைக்கவே முயலாமல் அவர் நிதனத்துக்கு வந்தபின் நாமும் நிதானமாக நம் பக்க நியாயங்களையும் துணையின் தவறுகளையும் பட்டியலிடலாம்.. துணையின் தவறுக்கு உதவியாய் நிற்பதாகவும் சொல்லலாம்.. மன்னிப்பை கூட எதிர்பாராமல் தாமே ஒரு குழந்தையை மன்னிப்பதுபோல மன்னித்தும் விடலாம். இல்லை தற்காத்துக்கொண்டு தம் நியாயத்தை நிரூபிக்க போய் , பொறுப்புகளை அலட்சியப்படுத்தவும், தப்பிப்பதற்கான காரணங்களை தேடவுமே வாழ்நாள் முழுதும் விரயம் செய்வோம்..

4. முழுதுமாக ஒதுங்குதல்..ஒதுக்குதல்..


சரி
இனி வழியேயில்லை.. என் பேச்சுக்கு மரியாதை இல்லை. அதனால் நான் ஒதுங்குறேன் என முற்றிலுமாக வெறுப்போடு ஒதுங்குவது..
தம்மையே தனிமைப்படுத்துவது.. இது தற்காலிகம் என்றால் பரவாயில்லை. ஆனால் நிரந்தரம் என்றால் ஆபத்தை நாமே விளைவிப்பதாகும்..பேச்சுவார்த்தையினால் பல பிரச்னைகளை தீர்க்க முடியும் என நம்பணும்.. பேச்சுக்கே வரமாட்டேன் என்றால் நான் செய்வதே சொல்வதே சரி என நிர்ப்பந்தப்படுத்துவதாகிடும்..


மேலே
சொன்ன நான்கையும் தம்பதியினர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர் நோக்கியிருக்கக்கூடும்தான்..
ஆனால் இதுவே அடிக்கடி நிகழுமாயின் , விவாகரத்து ஏற்பட்டே தீரும்.. இருவரில் ஒருவர் அனுசரிப்பதில்லை.. மாறப்போவதில்லை என்பதையே காண்பிக்கின்றது இது..


அடுத்ததாக
குடும்பத்தின் பிரச்சனைக்கு ஆணி வேறான நான்கு மிகத்தவறான கோல்களும் , அதற்கேற்ற தவறான நடவடிக்கைகளும் பார்க்கலாம்..


( இவை தம்பதிகளிடம் மட்டுமல்ல , வளரும் குழந்தைக்கும் பொருதும் இக்குணங்கள்..முக்கியமா , வாலிப வயதினருக்கு..)



--------
தொடரும்..

படம்
: நன்றி கூகுள்..




18 comments:

Udayakumar Sree said...

அன்புள்ள அக்கா,

இந்தப் பதிவிலும், இனி இது போன்ற உளவியல் சார்பான பதிவுகளிலும் "உளவியல்" என்று Label இட்டு எழுதிவாருங்கள். பின்னர் தொகுக்க வசதியாயிருக்கும்.

நன்றி,
உதயகுமார் ஸ்ரீ

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Udayakumar Sree said...

அன்புள்ள அக்கா,

இந்தப் பதிவிலும், இனி இது போன்ற உளவியல் சார்பான பதிவுகளிலும் "உளவியல்" என்று Label இட்டு எழுதிவாருங்கள். பின்னர் தொகுக்க வசதியாயிருக்கும்.

நன்றி,
உதயகுமார் ஸ்ரீ


சரி தம்பி அப்படியே செய்கிறேன்...

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு இன்னும் கூட சொல்லி இருக்கலாம்..!

குழந்தைகளை பற்றி கவலை கொள்ளாமல் தன் தேவையே முக்கியம் என நினைத்து பிரியும் அந்த ஜென்மங்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன..?

விவாகரத்து செய்யும் ஆணோ, பெண்ணோ தன் டேஸ்ட்டுக்கு ஏற்ப புதிய ஜோடியை ’’பொறுக்கி’’ எடுத்து கொள்ளலாம் ஆனால் அந்த குழந்தைக்கு ஒரு தாயையோ தந்தையையோ கொண்டு வர முடியுமா...?

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
எண்ணங்கள் 13189034291840215795 said...

--
நன்றிங்க..தமிழ் அமுதன்..

விட்டுக்கொடுப்பதும் தோற்பதும்தான் வெர்றி இங்கே நமக்கு குழந்தைக்கு சமூகத்துக்கு..

இன்னும் விரிவா எழுதுவேங்க..

pudugaithendral said...

மிக அவசியமான பதிவு.

இதை பேரண்ட்ஸ் கிளப்பிலும் எழுதுங்களேன். நல்ல புரிதல் உள்ள பெற்றோர் கிடைத்தால்தான் குழ்ந்தையின் வாழ்வு வளமாக இருக்கும்

எண்ணங்கள் 13189034291840215795 said...

துகைத் தென்றல் said...

மிக அவசியமான பதிவு.

இதை பேரண்ட்ஸ் கிளப்பிலும் எழுதுங்களேன். நல்ல புரிதல் உள்ள பெற்றோர் கிடைத்தால்தான் குழ்ந்தையின் வாழ்வு வளமாக இருக்கும்

-----------------------------


நன்றிங்க புதுகைத்தென்றல்..

நிச்சயம் பகிர்கிறேன் அங்கும்...

செல்வநாயகி said...

good post.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Thanks Selvanayaki.

சிங்கக்குட்டி said...

அற்புதமான ஒரு பதிவு, இன்றைய இளம் தம்பதிகள் அனைவரும் இதை படிக்க வேண்டும்.

நான் கூட இதில் உள்ள ஓரிரு சிறிய தவறுகளை அறியாமல் செய்து இருக்கிறேன், இந்த இடுகையை படிக்கும் பொது வெட்கி இனி ஒரு போதும் அத்தவறை செய்யக்கூடாது என்று நினைத்தேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி, இது போல் இன்னும் நிறைய எழுதுங்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Thanks Singakutti ..

tamil font problem

ரசிகன் said...

ஆழமான் சிந்தனை.பகிர்வுக்கு நன்றிகள்:)

சி.பி.செந்தில்குமார் said...

அருமையான பதிவு,இந்தப்பதிவை பெண்ணே நீ பத்திரிக்கைக்கு அனுப்புங்கள்.அட்ரஸ் pennaenee@gmail.com

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி செந்தில்..

நான் சும்மா எழுதுகிறேன்..

பத்திரிக்கை ஆவல் இல்லை இப்போது.

வால்பையன் said...

ரொம்ப கரெக்ட்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி வால்பையன்

mohamedali jinnah said...

அருமையான கட்டுரை .

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி நீடுரலி ஐயா