Friday, July 2, 2010

சம்மர் ஸ்கூல் என்ற பகல் கொள்ளையும் திடீர் சம்மர் வகுப்பும்..குழந்தைகளுக்கு
இரு மாதம் விடுமுறை விட்டாச்சு.. அனேகம்பேர் ஊருக்கு செல்லும்
நேரம்.. சிலர் போவதில்லை.. கணவர்மார் உணவுக்கு கஷ்டப்படனுமேன்னு..!!!

இதை
சாக்காக வைத்து எல்லா பள்ளிகளும் இப்ப சம்மர் ஸ்கூல் என ஒரு பகல்
கொள்ளை திட்டத்தை ஆரம்பித்துள்ளன...

15 நாளுக்கு 15, 000... அதுவும் எத்தனை மணி நேரம்?. 9-12 , - 3 மணி நேரத்துக்கு..

அப்படி
என்னதான் சொல்லிக்கொடுப்பாங்க னு பார்த்தா கலரிங், கொஞ்சம் பேப்பர்
கட்டிங் , விளையாட்டு ஏற்கனவே நடத்திய பாடங்களை ரிவிஷன்..

சரி வீட்டுல தொல்லை பண்ணாமல் எங்கேயாவது ஒரு 3 மணி நேரம் போய்விட்டு வரட்டும் என அனுப்பலாம்தான்..

ஆனா
பாவம் குழந்தைகள் லீவிலும் அதே 6 மணிக்கு எழுந்து அவசர அவசரமா பல்
தேய்த்து , குளித்து , அறைகுறையா சாப்பிட்டு ( அதுக்கும் திட்டு வாங்கி ) தூக்கத்தோடே வேனில் ஏறி டிராபிக்கில் சிக்கி 1 மணி நேர பிரயாணத்துக்கு பின் பள்ளி அடையணும்..

அதுவும்
ஒரே வகுப்பு தோழ, தோழியர் என்றால் பரவாயில்லை.. எல்லா
வயதினருகும் ஒரே வகுப்பு.. ஏனெனில் ஒரு வகுப்புக்கு 4, 5 குழந்தைகளே சேருவதுண்டு..

இந்த
முறை பணம் கட்ட சென்ற போது எங்க இடத்துக்கு வேன் வராது .. ஏன்னா
உங்க பையன் மட்டுமே வருவதால் எனவும் , நானே கூட்டி வந்து விடணும் எனவும் சொல்ல நான் பரவாயில்லை வேண்டாம் என முடிவு செய்தேன்..

சரி இப்ப என்ன செய்ய பையனுக்கு பொழுது உபயோகமாக கழியணும்.. ஏன் நாமே சம்மர் ஸ்கூல் ஆரம்பிக்க கூடாது.?

எங்க
வீடே ஒரு பிளே ஸ்கூல் மாதிரிதான் வைத்துள்ளேன்.. சருக்கு , ஊஞ்சல் ,
டேபிள் டென்னிஸ் , கார் , ஸ்கூட்டி, சைக்கிள் , என இப்படி.. மேலும் இப்ப முயல்குட்டி வேற இருக்கு விளையாட..

படிப்புக்கு தேவையான புத்தகங்களும் கலர் பென்சில் , கிரயான்ஸ், பெயிண்ட் , பிளே டோவ் ( களிமண் போல ) , காகிதங்களும் ரெடி செய்தேன்.. குழந்தைகளுக்கு தேவையான வரையும் நோட்களும்..வாங்கி வைத்தேன்.

பின் எங்க குழுமத்தில் அறிவித்தேன் .. " சம்மர் பள்ளி இலவசம் " என

உடனே அழைப்புகள் வர தொடங்கின..

ஜூலை
1ம் தேதியிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்தேன் ஆனால் போட்ட
அன்றே ஆள் வந்தாச்சு.. ஜூன் 29ம்தேதியிலிருந்து ஆர்வமாய் குழந்தைகள் வந்து இப்ப வீடு பள்ளியாகிவிட்டது..

குழந்தைக்கு
தேவையான ஆர்ட் ஒர்க் எல்லாம் இண்டெர்நெட்டில் அப்ப அப்ப பார்த்து
சொல்லி கொடுக்கலாம்.. லட்சக்கணக்கில் இருக்கு ஐடியாக்கள்..

வகுப்பு 10 மணிக்கு ஆரம்பிப்பதால் குழந்தைகள் நன்றாக தூங்கி மெதுவா எழுந்து குளித்து நிதானமா உணவருந்தி மகிழ்ச்சியோடு வருகிறார்கள் ..

மதிய உணவுக்கு 1-2 மணிக்கு அன்னையர் அழைக்கும்போது போக மாட்டேன் னு பிடிவாதமாய் சொல்கிறார்கள்.. ஒரு குழந்தை சாயங்காலம் வரையிலும் என் வீட்டிலேயே விளையாடுது..:), முயல் குட்டியை கவனிப்பதே அவர்கள் வேலை..

நேரம்
கிடைத்தால் கொஞ்சம் நடனமும் சொல்லிக்கொடுப்பேன்.. ( ச,.....ரி ச...ரி
பயம் வேண்டாம் )

இலவசம்
என்றாலும், ஒரு குஜராத்தி பெண்மணி , நான் ஏதாச்சும் உதவட்டுமா,
ஏதாவது வாங்கி தரட்டுமா என அன்போடு கேட்கிறார்..நான் அன்போடு மறுக்கவேண்டியுள்ளது...

நான் ஏற்கனவே குழந்தைகளுக்காக இப்படி இலவசமா பல முறை நிகழ்ச்சிகள் ( புதுவருட நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டி, அம்மாக்களுக்கு போட்டி , விளையாட்டு என ) நடத்தியதால் , பூங்கா , சுற்றுலா என அழைத்து சென்றுள்ளதால் எனக்கு இது கஷ்டமேயில்லை..


குழந்தைகளோடு அவர்கள் உலகத்தில் சஞ்சரிப்பது பிடித்தமான
விஷயம்.. நம்மை அவர்களுக்கு பிடித்துவிட்டால் நாம் சொல்வதையெல்லாம் கேட்பார்கள்.. ( என்ன, அப்பப்ப கொஞ்சம் சாக்லேட் , ஜூஸ் தந்தா போதும்..)

இடையில் சிறிது நேரம் கீழிருக்கும் பூங்கா சென்று உதிர்ந்த மலர்கள் , இலைகள் குச்சிகளை எடுத்து வர செய்து ஒட்ட சொல்வேன்.. இப்படி சின்ன சின்ன வேலைகள் பழக்கலாம்..

அப்புரம்
ஓடி ஆடி விளையாட்டு.. ஓய்ந்ததும் கொஞ்ச நேரம் கார்டூன் படம் டிவிடி
யில்..

வாரம்
ஒருமுறை நானே காரில் அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு சின்ன
சுற்றுலா செல்லவும் என்ணியிருக்கேன்.. அவர்கள் அன்னையரோடு..

இப்படி
திடீர் சட்னி, திடீர் குழம்பு போல " திடீர் சம்மர் வகுப்பு " தயார்..

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என சும்மாவா சொன்னாங்க..?

இதுபோல குழந்தைகளுக்கு மட்டுமல்ல நம் வீட்டில் வயோதிகர்கள் இருந்தால் அருகிலுள்ள வயோதிகர்களாய் அழைத்து இப்படி வாரம் ஒரு முறை ஒவ்வொருவர் வீட்டிலும் பொழுதுபோக்கிட செய்யலாம்.. நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடும்..

நாம் முன்னின்று சுயநலம் கருதாது ஒரு காரியத்தை ஏற்பாடு செய்தோமானால் அதுக்கு கைகொடுக்க பலர் தயாராகவே இருக்கிறார்கள்..

புரிந்துகொண்டு
பலனடைவோம் நாமும்...

( சுயபுலம்பல் , தற்பெருமை வகையிது.. வழக்கம்போல் பின்னூட்டம் தவிர்க்கவும்.)

14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் முயற்சிக்கும் எண்ணத்துக்கும் வாழ்த்துக்கள்

புன்னகை தேசம். said...

வாழ்த்துக்கு நன்றி ரமேஷ்.. (

அடாது மழை பெய்தாலும் விடாது வருவார் நல்லவரு..)

LK said...

vaalthukal saanthi. nalla muyarchi

புன்னகை தேசம். said...

Thanks LK..

புன்னகை தேசம். said...

Thanks LK..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நீங்க ரொம்ப நல்லவங்க!! :))

ஆனாலும் பொருள் தருவேன் என்று சொல்பவர்களை மறுக்காது அவர்கள் விருப்பப்பட்டதை வாங்கி ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கலாமே அல்லது வழங்கச் செய்யலாமே. உதவிகள் பரவலாக வாய்பிருப்பதால்..

புன்னகை தேசம். said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நீங்க ரொம்ப நல்லவங்க!! :))

----------

நான் நெனச்சது நடந்துடுச்சே.. நல்லவள்னு நினைக்க வைக்கும்படி எழுதிட்டேன்..

----------------ஆனாலும் பொருள் தருவேன் என்று சொல்பவர்களை மறுக்காது அவர்கள் விருப்பப்பட்டதை வாங்கி ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கலாமே அல்லது வழங்கச் செய்யலாமே. உதவிகள் பரவலாக வாய்பிருப்பதால்..
----------------------------------

நல்ல ஐடியா..நன்றி..

பொதுவா அவர்களையே கோவிலுக்கு செய்ய சொல்வதுண்டு..

முன்பொறு பிரச்னையில் ஒருவருக்கு உதவ போய் எங்களிடம் பணம் வாங்கிவிட்டு எஸ்கேப் ஆனார்.. பின் அவரை சந்தித்த போது இந்தாருங்கள் பணம் என்றோம்..

பணத்துக்காக மட்டுமே அலையும் மக்கள் மத்தியில் நாம் செய்யும் சிறு உதவி..அவ்வளவே..

துளசி கோபால் said...

சம்மர் ஸ்கூலுக்கு ஒரு புது அட்மிஷன் வருதுங்க. சேர்த்துக்குவீங்களா?

புன்னகை தேசம். said...

துளசி கோபால் said...

சம்மர் ஸ்கூலுக்கு ஒரு புது அட்மிஷன் வருதுங்க. சேர்த்துக்குவீங்களா?

-------

வாங்க டீச்சர்.. ஆவலோடு காத்திருக்கோம்..:))

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தங்களின் நிகரற்ற சேவைக்கு
தலை வணங்குகிறேன் சாந்தி.....

Anonymous said...

Wow. இப்படியே கொஞ்ச கொஞ்சப் பேராக அம்மாமாரே எடுத்து நடத்தினால் காசும் மிச்சம். குழந்தைகளுக்கும் சந்தோசம். ஆனால், சொக்லட் கொடுப்பதற்குப் பதிலாக பழங்கள் கொடுக்கலாமே. சத்தானவை மட்டுமல்ல‌ மலிவானவையும் கூட. நாங்களும் யோசிப்போம்ல =))

புன்னகை தேசம். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தங்களின் நிகரற்ற சேவைக்கு
தலை வணங்குகிறேன் சாந்தி.....

July 2, 2010 10:28 PM

---------------------------

பரந்த மன பாராட்டுக்கு நன்றிங்க..

ஆனா நிகரற்ற சேவை னும் சொல்ல இயலாது.. என்னுடைய சுயநலமும் மகிழ்ச்சி என்ற எதிர்பார்ப்பும் இதில் இருக்குதேங்க..

ஏதோ என் சக்திக்கு முடிந்தது.

புன்னகை தேசம். said...

அனாமிகா துவாரகன் said...

Wow. இப்படியே கொஞ்ச கொஞ்சப் பேராக அம்மாமாரே எடுத்து நடத்தினால் காசும் மிச்சம்.
---

ஆமாங்க..ஒரு சின்ன பாப்பாவோடு அவர் அம்மாவும் வந்து அமர்ந்து சொல்லிகொடுக்கிறார்..

குழந்தைகளுக்கும் சந்தோசம். ஆனால், சொக்லட் கொடுப்பதற்குப் பதிலாக பழங்கள் கொடுக்கலாமே. சத்தானவை மட்டுமல்ல‌ மலிவானவையும் கூட. நாங்களும் யோசிப்போம்ல =))
-----

நல்ல யோசனைங்க.. ஆனா இங்க தாய்லாண்டில் பழங்கள் மிக மலிவு . அதோடு எந்த சீசனிலும் வீட்டில் பழங்கள் இருக்கும்..

இப்பவும் என் மேசையில் 3 வகை பழங்களுக்கு குறையாமல் இருக்கும். தேவையான குழந்தைகள் எடுத்துக்கொள்ளலாம்தான்.. ஆனால் அவர்களுக்கு விளையாட்டும் கேண்டியுமே விருப்பம்.:)July 3, 2010 12:44 AM

தமிழ் வெங்கட் said...

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு