Saturday, June 5, 2010

பதிவுலக பந்து இப்ப பொதுஜனம் கையில்....





நர்சிம் , கார்க்கி செய்தது மிகப்பெரிய தவறே.. ஆனால் மனமாற மன்னிப்பு
கோரியுள்ளனர்..

அதை துச்சமென மதித்த சந்தனமுல்லை , தோற்று போக தயாராகிவிட்டார்..:(


தன் கையில் பந்து கிடைத்ததும் தாறுமாறாக விளையாட ஆரம்பித்துள்ளார் , சில கெட்டவர்களின் , கொலைகார எண்ணம் கொண்டவர்களோடு..( பின்னூட்டம் பார்த்தவருக்கு புரியும்..)

கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து ஒரு உன்னதமான காரியம் செய்திருக்கலாம்..தன்
மதிப்பை பன்மடங்கு அவர் உயர்த்தியிருக்கலாம்..

பதிவுலகமே அவருக்காக பரிதாபப்பட்டது. நர்சிம் மை எதிர்த்தது..

இப்ப நிலைமை தலைகீழாக மாறும்..


மனதார மன்னிப்பு கேட்ட நர்சிம்மை மன்னிக்க மெஜாரட்டி பதிவுலகத்தினர்
தயாராகவே உள்ளனர்..

பதிவுலகம் என்பது சந்தனமுல்லையும் வினவும் மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ளணும்..


பெண்ணியம் போற்ற மனிதநேயத்தை கீழே போட்டு மிதித்துவிட்டார்கள்..

ஒரே நாளில் பிரபலாமானவர் பிரபலத்தை தக்க வைத்துக்கொள்ள தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார்.. அவருக்கு தூபம் போடுபவர்கள் எத்தனை நாட்கள் அவரோடு இருக்காங்கன்னு புரிந்துவிடும்....:)

கண்டிப்பா மற்றோரு பெண்ணுக்கு இதே பிரச்னை வந்தாலும் வினவின் பக்கம்
தலைஎன்ன கால் வைத்து கூட படுக்க மாட்டார்கள்..

கொலைகாரன் ஒருவனுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் உலகில் கொலைகளே இல்லாமல்
செய்துவிடலாம் என்கிற இவர்களின் கண்டுபிடிப்பை என்ன சொல்ல?.. குழந்தைத்தனம் என்றா?,,.:)

பெண் என்பவள் முதலில் மனுஷி . மனிதநேயம் , தாய்மை உணர்வு கொண்டவள்..
பழிவாங்க துடிப்பவள் அல்ல..

உன் நண்பரை சொல் உன்னை சொல்கிறேன் என்பது சந்தனமுல்லை க்கு மிக பொருத்தம்..


படகு என நினைத்து முதலையின் முதுகில் பயணம் செய்ய நினைப்பதை என்ன சொல்ல..?????????


முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள்
, சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..

உங்க பழிவாங்கும் எண்ணம் என்ன முடிவை தரப்போகிறது என பொருந்திருந்து பார்ப்போம் ..


அரசியலில் கூட மன்னிப்பும் மறப்பும் அதிகமா இருக்கும்போது !!!!!!!!!!!

சந்தனமுல்லை இதுவரை வாசனை. இனி..????????

வருந்துகிறேன்... நர்சிம் ஐ / கார்க்கி யை அழைத்து நேரில் ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை அன்போடு கேட்டிருந்தாலே அவர்கள் ஒடிந்து போய் அழ வைத்திருக்க முடியும்..

அன்பால் கையாள வேண்டியதை அறிவாளால் கையாளப்போகிறீர்கள் கவனம் . உங்களை
பதம் பார்த்துவிடப்போகிறது...

பிரச்னைகளை தீர்ப்பதில் மிக தவறான வழியை தேர்ந்தெடுத்து தோற்றுபோக
தயாராகிவிட்டீர்கள்...

தமிழமுத குழுமத்தில் என்னை நேராகவே வேசி என்றும் தாய்லாந்தில் தொழில்
நடத்துபவள் , உனக்கு நல்ல மரணமே கிடையாது என்றும் சபித்தவர் பகலவன் என்ற நண்பர்.. அவரை மட்டுறுத்தி வெளியேற்ற மட்டுமே செய்தோம்.. எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..

பின்னர் அவராகவே புரிந்துகொண்டு ஒரு மாதம் கழித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்...

எல்லாரையும் திருத்த முடியாது திருத்த புறப்பட்டால் வேலைக்காவாது..

சிலர் சொன்னால் திருந்துவார். சிலர் உணர்ந்து திருந்துவார்..

மற்றொன்று எனக்கு வேசி , ஸ்த்ரீ லோகர் என்பவர்கள் கெட்டவர்கள் என்ற
எண்ணத்தையெல்லாம் தாண்டியவள் நான்..

அவர்களை சமமாகவே எண்ணுகிறேன்..


அதனால் என்னை வேசி என்பதால் நான் வேசியாகிடப்போவதுமில்லை.. தெய்வம்
என்பதால் நான் கடவுளாகப்போவதுமில்லை... :)

இங்கு தினந்தோறும் வேசி என நீங்கள் சொல்லும் தொழிலாளிகளை புன்னகையோடே
கடந்து செல்கிறேன் .. கூடவே பயணிக்கிறார்கள்.. என் குழந்தைகளிடம் ஆசையாக பேசுகிறார்கள் பொது இடங்களில்...அதே போல திருநங்கைகளும் .. வித்யாசம் ஏதுமின்றி..

நம் நாட்டு மக்கள் அப்படியான பார்வையை எப்போது விசாலப்படுத்துவோம்.?


சர்ச் மூலம் சிறைச்சாலையிலுள்ளவர்களையும் பாலியல் தொழிலாளிகளையும்
சந்திக்கிறோம்..மனிதர்களாகவே பார்க்க முடியுதே தவிர குற்றவாளிகளாய் அல்ல... அவர்கள் மாட்டிக்கொண்டவர்கள்/ உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள் அவ்வளவே...

நாட்டில் நல்ல மனிதராய் வேடமிடுபவர்களிடம்தான் கவனமாய் இருக்கவேண்டிய
காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்...

மன்னிப்பு கேட்டபின்னும் பழிவாங்க துடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்..
அதில் வீரமோ விவேகமோ இல்லை..காயங்களும் வலிகளும் மட்டுமே மிஞ்சும்...

தண்டனைகள் மட்டுமே மனிதர்களை திருத்துமென்றால் உலகமே ஊனமாயிருக்கும்..


புரட்சி என்றாலே வெறுப்பாயுள்ளது..:(


இத்தனைக்கும் நான் சந்தனமுல்லையின் பப்புவை பற்றிய பதிவுகளை ஆசையாக படிப்பேன். நானும் ஒரு குழந்தைப்பையித்தியம் என்பதால்..

நர்சிம் கார்க்கி எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள்..


-------- தொடரும்.... தொடரலாம் கண்ணியமாக மட்டுமே....பிரச்னைக்குரிய பதில்கள் பிரசுரிக்கப்படமாட்டாது...

34 comments:

எல் கே said...

//முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள் , சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..
//

+1

i am also in same feeling

Robin said...

நியாயமான பதிவு.

ராம்ஜி_யாஹூ said...

In principle I agree with your views.

But its Santhanmullai to take the decision.

As AR Rahman said Love and Violence- 2 paths were in front of him when his started his carreer. He opted the Love path.

smart said...

தனது கணவரிடமே தலையிட வேண்டாம் தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன சகோதரி சந்தனமுல்லை வினவின் வலைக்குள் வராமல் செய்திருந்தால் அவர் உண்மையில் அருவாள் எடுக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அதை பைத்தியக்காரன் மற்றும் பலரின் உதவியை ஏற்றுக்கொண்டு செய்தலில் அவர் பலரின் அருவாளையும் சேர்த்து எடுத்துள்ளார் என நினைக்கிறேன். அதான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை.

Renga said...

//மாதவராஜ், முல்லை & முகிலை பிரித்துவிடாதீர்கள், இது Employer & Employee பிரச்சினையில்லை.. மேலும் எண்ணை ஊற்றாமல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர உதவுங்கள்....

As per communist agenda... don't live within problem... let them resolve their issue.. //

இந்த கமெண்டை சந்தன முல்லை இன் "'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு" என்ற பதிவில் நேற்று இட்டேன் ஆனால் பிரசுரம் செய்ய மறுத்து விட்டார்...

இதில் இருந்து இவர்கள் இந்த issue வில் இருந்து வெளியில் வரவிரும்பவில்லை என்றே தோன்றுகிறது... எனவே நம் போன்றவர்கள் இதைப்பற்றி கவலை கொள்வதை விட்டு வேறு வகையில் கவனம் செய்வோம்

எல் கே said...

sarithan rengaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியா சொன்னீங்க சாந்தி. இவங்க காதுல விழுந்துருக்கும்னு நினைக்கிறீங்க. இது செவிடன் காதில ஊதின சங்குதான்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger LK said...

//முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள் , சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..
//

+1

i am also in same feeling
----------------------------

ஆம். அவர் பிரச்னையை முடிக்க எண்ணாதது வருத்தமே..:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Robin said...

நியாயமான பதிவு.

நன்றிங்க ராபின்.

பொதுவா நான் தலையிடுவதில்லை.. ஆனால் சில நியாயமான விஷயங்களை சொல்லிட தோணியது..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger ராம்ஜி_யாஹூ said...

As AR Rahman said Love and Violence- 2 paths were in front of him when his started his carreer. He opted the Love path.

சரிதாங்க.. அன்பான பாதை மட்டும்தான் கடைசியில் நிம்மதி தரும்..

சிலர் அன்பு காட்டுவதால் இளிச்சவாய் என்றோ, தோற்றுவிட்டோம் என்றோ எண்ணுகிறார்கள்.. ஆனால் தோற்பதே ( விட்டுகொடுப்பதே ) வெற்றியும்..

நன்றிங்க ராம்ஜி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger smart said...

ஆனால் அதை பைத்தியக்காரன் மற்றும் பலரின் உதவியை ஏற்றுக்கொண்டு செய்தலில் அவர் பலரின் அருவாளையும் சேர்த்து எடுத்துள்ளார் என நினைக்கிறேன். அதான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை.

அதே...

வருகைக்கு நன்றி ஸ்மார்ட்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Renga said...

//மாதவராஜ், முல்லை & முகிலை பிரித்துவிடாதீர்கள், இது Employer & Employee பிரச்சினையில்லை.. மேலும் எண்ணை ஊற்றாமல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர உதவுங்கள்....

As per communist agenda... don't live within problem... let them resolve their issue.. //

இந்த கமெண்டை சந்தன முல்லை இன் "'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு" என்ற பதிவில் நேற்று இட்டேன் ஆனால் பிரசுரம் செய்ய மறுத்து விட்டார்...

----------------

அதே தான்.. மாதவராஜ் பதிவுக்கு நான் " அதான் நர்சிம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டாரே.. மன்னிக்கலாமே " னு சொன்னதை பிரசுரிக்கவில்லை..

இதிலிருந்தே இவர்களின் கெட்ட எண்ணமும் பிரச்னையை நீட்டிக்கும் வித்தையையும் புரியலாம்..

நன்றி ரெங்கா..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியா சொன்னீங்க சாந்தி. இவங்க காதுல விழுந்துருக்கும்னு நினைக்கிறீங்க. இது செவிடன் காதில ஊதின சங்குதான்..


------------------
ஆமாங்க..
தனக்கு 2 கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்ற மனப்பான்மையா இருக்குமோ?..

நன்றி ரமேஷ்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Forgiveness quotes

“When you hold resentment toward another, you are bound to that person or condition by an

emotional link that is stronger than steel. Forgiveness is the only way to dissolve that link and

get free.”
john7

“Always forgive your enemies - nothing annoys them so much.”

Oscar Wilde quotes (Irish Poet, Novelist, Dramatist and Critic, 1854-1900)


“To forgive is to set a prisoner free and discover that the prisoner was you.”

“The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.”

Mahatma Gandhi quotes (Indian Philosopher, internationally esteemed for his doctrine of

nonviolent protest, 1869-1948)


“You can't undo anything you've already done, but you can face up to it. You can tell the truth.

You can seek forgiveness. And then let God do the rest.”

“Sincere forgiveness isn't colored with expectations that the other person apologize or change.

Don't worry whether or not they finally understand you. Love them and release them. Life feeds

back truth to people in its own way and time.”

“The stupid neither forgive nor forget; the naive forgive and forget; the wise forgive but do not

forget.”

Thomas S. Szasz quotes (Hungarian psychiatrist and Professor of Psychiatry Emeritus at State


“Love is an act of endless forgiveness, a tender look which becomes a habit.”

Peter Ustinov quotes (English actor and writer, b. 1921)

“You will know that forgiveness has begun when you recall those who hurt you and feel the

power to wish them well.”

“When a deep injury is done us, we never recover until we forgive”

Alan Paton quotes (South African Writer and Educator, 1903-1988)

“Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it.”

Mark Twain quotes (American Humorist, Writer and Lecturer. 1835-1910)

“Forgiveness is the oil of relationships”

Josh McDowell quotes

“We achieve inner health only through forgiveness - the forgiveness not only of others but also

of ourselves”

Joshua Loth Liebman quotes



“The secret of forgiving everything is to understand nothing”

George Bernard Shaw quotes (Irish literary Critic, Playwright and Essayist. 1925 Nobel Prize

for Literature, 1856-1950)

“He who is devoid of the power to forgive, is devoid of the power to love.”

Martin Luther King, Jr. quotes (American Baptist Minister and Civil-Rights Leader. 1929-1968)

“Forgiveness does not change the past, but it does enlarge the future.”

Paul Boese quotes

“To forgive is human, to forget divine. . .”

James Grand quotes

“Forgiveness means letting go of the past.”

Gerald Jampolsky quotes (American psychiatrist)
“Let us forgive each other - only then will we live in peace”

Leo Nikolaevich Tolstoy quotes (Russian moral Thinker, Novelist and Philosopher, notable for his influence on Russian literature and politics. 1828-1910)

“God pardons like a mother, who kisses the offense into everlasting forgiveness.”

Henry Ward Beecher quotes (Liberal US Congregational minister, 1813-1887)
Similar Quotes. About: Forgiveness quotes, God quotes.

“Without forgiveness, there's no future”

Desmond Tutu quotes

எண்ணங்கள் 13189034291840215795 said...

REVENGE

-----------


By taking revenge, a man is but even with his enemy; but in passing over it, he is superior.
Author:



Women do most delight in revenge.
Author: Sir Thomas Browne

Sweet is revenge--especially to women.
Author: Lord Byron (George Gordon Noel Byron)

Anyone can rat, but it takes a certain amount of ingenuity to re-rat.
Author: Sir Winston Leonard Spencer Churchill (3)

'Tis more noble to forgive, and more manly to despise, than to revenge an Injury.
Author: Benjamin Franklin
Source: Poor Richard

Revenge is sweeter than life itself. So think fools.
Author: Juvenal (Decimus Junius Juvenal)

Revenge is always the weak pleasure of a little and narrow mind.
Author: Juvenal (Decimus Junius Juvenal)

Revenge, at first though sweet, Bitter ere long back on itself recoils.
Author: John Milton

I will not leave you until I have seen you hanged.
Author: Jean Baptiste Poquelin Moliere


Those who plot the destruction of others often perish in the attempt.
Author: Thomas Moore

Those who plot the destruction of others often fall themselves.
Author: Phaedrus (Thrace of Macedonia)

All the old knives That have rusted in my back, I drive in yours.
Author: Phaedrus (Thrace of Macedonia)

Revenge is an inhuman word. [Lat., Inhumanum verbum est ultio.]
Author: Seneca (Lucius Annaeus Seneca)

Live well. It is the greatest revenge.
Author: The Talmud

Revenge converts a little right into a great wrong.
Author: German Proverb


One good act of vengeance deserves another.
Author: John Jefferson

A man that studieth revenge keeps his own wounds green, which otherwise would heal and do well.
Author: Francis Bacon

Little, vicious minds abound with anger and revenge, and are incapable of feeling the pleasure of forgiving their enemies.
Author: Earl of Chesterfield

Revenge is an act of passion; vengeance of justice. Injuries are revenged; crimes are avenged.
Author: Samuel Johnson

Revenge has no more quenching effect on emotions than salt water has on thirst.
Author: Walter Weckler

Revenge is often like biting a dog because the dog bit you.
Author: Austin O'Malley

Don't get mad, get even.
Author: Robert F. Kennedy

Hatred is the coward's revenge for being intimidated.
Author: George Bernard Shaw

Revenge is the naked idol of the worship of a semi-barbarous age.
Author: Percy Bysshe Shelley

தமிழ் அமுதன் said...

தெள்ளத் தெளிவான பதிவு..!

இராகவன் நைஜிரியா said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

உங்களின் இடுகைக்கு தலை வணங்குகின்றேன் சகோதரி..

Raghu said...

//முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள் , சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை//

மிக‌ச் ச‌ரியா சொல்லியிருக்கீங்க‌, முகில் எழுதிய‌ வார்த்தைக‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ த‌லைவண‌ங்க‌லாம். ஆனா முல்லை, முகிலைக்கூட‌ ஏன் த‌லையிட்டீர்க‌ள் என்று கேட்ப‌து ச‌ரியாக‌ப்ப‌ட‌வில்லை. ம‌னைவிக்கு ஒரு பிர‌ச்னை என்றால், க‌ண‌வ‌ர் ஓர‌மாக‌ உட்கார்ந்து வேடிக்கை பார்க்க‌வேண்டும் என்று நினைக்கிறாரா? எல்லோர் ம‌ன‌திலும் முகில் உய‌ர்ந்து நிற்கிறார் இப்போது. ஆனால் முல்லை?

//மன்னிப்பு கேட்டபின்னும் பழிவாங்க துடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்.. அதில் வீரமோ விவேகமோ இல்லை..காயங்களும் வலிகளும் மட்டுமே மிஞ்சும்...//

தெளிவான‌ வார்த்தைக‌ள், ஆனா இதை அவ‌ங்க‌ புரிஞ்சுப்பாங்க‌ங்க‌ற‌ ந‌ம்பிக்கை என‌க்கில்ல‌

அகல்விளக்கு said...

இப்பிரச்சனை குறித்து நான் இதுவரை எங்குமே கருத்து சொல்லவில்லை...

ஆனால் இப்போது இந்நிலையில் நான் உங்களை வழிமொழிகிறேன்...

U R Right....

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger தமிழ் அமுதன் said...

தெள்ளத் தெளிவான பதிவு..!

நன்றிங்க தமிழமுதன்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger இராகவன் நைஜிரியா said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

உங்களின் இடுகைக்கு தலை வணங்குகின்றேன் சகோதரி..

---------

நன்றி சகோதரரே..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger அகல்விளக்கு said...

இப்பிரச்சனை குறித்து நான் இதுவரை எங்குமே கருத்து சொல்லவில்லை...

ஆனால் இப்போது இந்நிலையில் நான் உங்களை வழிமொழிகிறேன்...

U R Right....

------------
நன்றிங்க அகல்விளக்கு ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger ர‌கு said...



மிக‌ச் ச‌ரியா சொல்லியிருக்கீங்க‌, முகில் எழுதிய‌ வார்த்தைக‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ த‌லைவண‌ங்க‌லாம். ஆனா முல்லை, முகிலைக்கூட‌ ஏன் த‌லையிட்டீர்க‌ள் என்று கேட்ப‌து ச‌ரியாக‌ப்ப‌ட‌வில்லை. ம‌னைவிக்கு ஒரு பிர‌ச்னை என்றால், க‌ண‌வ‌ர் ஓர‌மாக‌ உட்கார்ந்து வேடிக்கை பார்க்க‌வேண்டும் என்று நினைக்கிறாரா? எல்லோர் ம‌ன‌திலும் முகில் உய‌ர்ந்து நிற்கிறார் இப்போது. ஆனால் முல்லை?

----------------------
யோசிக்கணும் முல்லை பல கோணத்திலும்..

நன்றிங்க ரகு..

அமுதா கிருஷ்ணா said...

மிக நியாயமான வார்த்தைகள் ஒவ்வொன்றும். கோபத்தில் இருக்கும் போது நாம் எடுக்கும் எந்த முடிவும் தவறாக தான் இருக்கும்.படித்தவர்களுக்கு அட்வைஸ் அதிகம் தேவை இல்லை.

a said...

தோழி,

தங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். சந்தனமுல்லை பிரச்சினையை மேலும் மேலும் வளர்க்காமல் சரியான தீர்வு நோக்கி செல்ல வேண்டும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வழிப்போக்கன்... said...

தோழி,

தங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். சந்தனமுல்லை பிரச்சினையை மேலும் மேலும் வளர்க்காமல் சரியான தீர்வு நோக்கி செல்ல வேண்டும்.

----

ஆமாங்க வழிப்போக்கன்.,.நன்றிங்க

K.MURALI said...

For followup

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க அமுதா கிருஷ்ணா...

நம்மைப்போன்ற படித்தவர்களுக்குத்தானே ஈகோ அதிகமா இருக்கு..

படிக்காதவர்கள் கூட சரி விட்டுத்தள்ளு என்கிற மனப்போக்கை எளிதில் அடைகிறார்கள்..

நன்றிங்க முரளி ..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

மறப்போம் மன்னிப்போம்...இதுதான்
தமிழர் பண்பாடு

எண்ணங்கள் 13189034291840215795 said...

தமிழ் வெங்கட் said...

மறப்போம் மன்னிப்போம்...இதுதான்
தமிழர் பண்பாடு
--------------

மிக சரி தமிழ் வெங்கட்.

கடினமான காரியம்தான். ஆனால் பழக பழக எளிதாகும் மன்னிப்பு..

Anonymous said...

தனது கணவரிடமே தலையிட வேண்டாம் தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக சொன்ன சந்தனமுல்லை பைத்தியக்காரன், வினவு போன்றவர்களிடமும் அப்படியே சொல்லி இருந்தார் நேர்மையானவர் என்று ஏற்றுக்கொண்டிருப்பேன். சாதியை ஒழி என்று சொல்பவர் தனது சாதி குழுவில் சேர்ந்ததில் தெரிகிறது அவரது நேர்மை. எதுவுமே நடவாதது போல போஸ்ட் வேறு போடுகிறார். என்ன பெண் அவர்? அவரை கண்டித்து போடும் எந்த பின்னூட்டத்தையும் அவர் அனுமதிக்கவில்லை. தன்னை பெரிய புரட்சிப்பெண் என்று காட்டுவதற்காகவே இவ்வளவு பந்தாவும் காட்டுகிறார். நாம் முதலில் புறக்கணிக்க வேண்டியது சந்தனமுல்லையையே.

எண்ணங்கள் 13189034291840215795 said...

msgoofy said...

தனது கணவரிடமே தலையிட வேண்டாம் தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக சொன்ன சந்தனமுல்லை பைத்தியக்காரன், வினவு போன்றவர்களிடமும் அப்படியே சொல்லி இருந்தார் நேர்மையானவர் என்று ஏற்றுக்கொண்டிருப்பேன். சாதியை ஒழி என்று சொல்பவர் தனது சாதி குழுவில் சேர்ந்ததில் தெரிகிறது அவரது நேர்மை. எதுவுமே நடவாதது போல போஸ்ட் வேறு போடுகிறார். என்ன பெண் அவர்? அவரை கண்டித்து போடும் எந்த பின்னூட்டத்தையும் அவர் அனுமதிக்கவில்லை. தன்னை பெரிய புரட்சிப்பெண் என்று காட்டுவதற்காகவே இவ்வளவு பந்தாவும் காட்டுகிறார். நாம் முதலில் புறக்கணிக்க வேண்டியது சந்தனமுல்லையையே.]]

வருகைக்கு நன்றிங்க..

அனுபவத்தில் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்..

யாரையுமே புற்க்கணிக்க வேண்டாமே..

எல்லாம் சரியாகும் என நம்புவோம்..:)

சாமக்கோடங்கி said...

மனமார மன்னிப்புக் கேட்கும்போது அதைக் கொடுப்பதே மிகப் பெரிய மனிதம்.. அவர்கள் திரும்பவும் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்..அனால் பதிலடியில் இறங்கினால், இன்னும் அவர்களின் மூர்க்கம் அதிகமாகலாம்.. பிரச்சினையை முடித்துக் கொள்ள நினைப்பவர்கள் செய்யும் காரியமல்ல இது.. நேருக்கு நேர் நின்று சண்டை போடும் இரண்டு பேரைக் கூட விட்டு விடலாம்.. சைடில் நின்று தூபம் போடுபவர்களை என்ன செய்வது..?

எண்ணங்கள் 13189034291840215795 said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மனமார மன்னிப்புக் கேட்கும்போது அதைக் கொடுப்பதே மிகப் பெரிய மனிதம்.. அவர்கள் திரும்பவும் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள்..அனால் பதிலடியில் இறங்கினால், இன்னும் அவர்களின் மூர்க்கம் அதிகமாகலாம்.. பிரச்சினையை முடித்துக் கொள்ள நினைப்பவர்கள் செய்யும் காரியமல்ல இது.. நேருக்கு நேர் நின்று சண்டை போடும் இரண்டு பேரைக் கூட விட்டு விடலாம்.. சைடில் நின்று தூபம் போடுபவர்களை என்ன செய்வது..?]]

மிக சரி..

செய்த தவறை இனி சரி செய்ய முடியாது.. என்ன தண்டனை வேணுமானால் கொடுங்கன்னு சொன்ன பின்பும்....???

மன்னிக்க முடியாதவருக்கே வலி அதிகம் இனி..