Friday, May 21, 2010

முன்னாள் காதல்..சிறுகதை







மீரா
: ஹேய் ரகு ஆன்லைன்லயா இருக்க?.


ரகு : யெப் வாட்ஸ் த மேட்டர்...?

மீரா
: ஹேய் ஆன்லைன்ல பேசி எவ்ளோ நாளாச்சு..


ரகு
.: ம் . சோ ஹவ் ஆர் யூ..


மீரா
..: ஃபைன் டா. நீ?


ரகு
..: ம் வெரி ஃபைன்..


மீரா
: ம். பட் நாட் ஃபைன் டூ..:(


ரகு
.: அட இப்பத்தான் ஃபைன் னு சொன்ன..?


மீரா.: ம். ஆமாடா அவரால் ரொம்ப பிராப்ளம் டா..


ரகு
.: என்னாச்சு.?


மீரா.: நீ லாம் எவ்ளோ ஜாலி டைப்.. அவர் எப்பவும் மூடி டைப்தான்..


ரகு
.: ம்.


மீரா
.: ஒரு டிரெஸிங் சென்ஸ் இல்ல , வெளில கூட்டிட்டு போணும்னு அக்கறையில்ல..


ரகு
.: ம்.


மீரா
.: காலைல எழுந்தா ஒரே டென்ஷன்.. என் சாக்ஸ் எங்க வெச்ச டை காணோம் , ஃபைல்
எங்கன்னு.

ரகு
.: ம்.


மீரா
.: ஆனா ராத்திரி சாரி சொல்லிடுவார்..


ரகு
.: ஹாஹா.


மீரா
.: என்ன சிரிப்பு .. நான் சீரியஸா பேசிட்டிருக்கேன் டா..


ரகு
.: ம். சரி சரி சொல்லு..


மீரா
..: நீ லாம் எவ்ளோ அழகா டிரெஸ் பண்ணுவ.. இன் ஃபேக்ட் உன் டிரெஸிங் சென்ஸுல
மயங்கினவ தான் நான்...

ரகு
.: கம்பேர் பண்ணகூடாது மீரா.. டோண்ட் திங் அபவ்ட் பாஸ்ட்..


( அதற்குள் ரகுவின் காரியதரசி வடநாட்டு ரேஷ்மா வந்து அழைக்கவும் ,

" ரேஷ்மா , பிலீஸ் டூ எ
ஃபேவர் பார் மி.. ஜஸ்ட் பிரஸ் திஸ் லெட்டெர்

" எம் ".. ஐல் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்..திஸ்
இஸ் மை எக்ஸ் கேர்ல்பிரண்ட்..எ வெரி பொஸசிவ் கேர்ல் " . ஹோப் யு டோண்ட் நோ டமில்..ஹ?..:) ..

ரேஷ்மா
சிரித்துக்கொண்டே " சுயர்.." )


மீரா
.: என்னோட அப்பா அம்மாவுக்கு ஒண்ணுன்னா நீ எப்டி ஓடி வருவ.? ஆனா அவரோட அப்பா
அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போலாம்னு சொன்னா கூட " நீயே ஆட்டோ புடிச்சு போயிடேன் " னு சொல்றார்.. ஹவ் ரூட்..

ரகு
.: ம்.


மீரா
.: காலையில அலுவல் போகும்போது ஒரு ஹக் , ஒரு கிஸ், ஒரு ஐ லவ் யூ.. ம்ஹூம்.. சோ
அப்செட் டா.

ரகு
.: ம்.


மீரா
.: எங்கேயாவது விசேஷம்னா கூட நான் நிதானமா சேலை கட்டி நகை போட்டு சடை பின்னி
பூ வைத்தால் , " இதுக்கு இவ்ளோ நேரமா..? சிம்பிளா சுடிதார் இல்லையா "னு கேட்டு வெறுப்பேத்துறார்.

ரகு.: ம்.

மீரா.: நான் சேலை கட்டினா அன்னிக்கு பூரா என்னை ரசிச்சுட்டே இருப்பியேடா நீ.. அதுக்கு
மேட்சா ஜ்வெல்லரி வாங்க என்னை அழைச்சுட்டு போவ..ஐ மிஸ் ஆல் தட் டா.

ரகு
.: ம்.


மீரா.: உங்க வீட்டுக்கு என்னை அழைச்சுட்டு போனப்ப நான் என்ன கலர்ல புடவை கட்டியிருந்தேன்
?. சொல்லு பாப்போம்.?..

ரகு
.: ம்.


மீரா
.:ம் சொல்லு..


ரகு
.: ம்.


மீரா
.: யோசிக்கிறியா?.


ரகு
.: ம்.


மீரா.: டேய் என்ன நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கேன் சும்மா " ம். , " ம்" னு சொல்ற..
கோபப்படுத்தாதே ..

ரகு
.: ம்.


( அதற்குள் ரகு வந்துவிட , )


ரகு
.: அயோ சாரிமா.. ஸ்கை ப்ளூ கலர்தானே..


மீரா
.: அதான பார்த்தேன்.. உங்க வீட்டுல எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் " ஏய் என்ன
சொக்குப்பொடி போட்ட " னு நீயே கேட்குமளவுக்கு எனக்கு ஆதரவு எல்லாரும் உங்க வீட்டில். இங்க என்னடான்னா தலைகீழ் .." பாவம் என் மகன் ஓடா உழைக்கிறான்"...னு அத்தையும், " எப்படி இருந்த என் தம்பி இப்படி ஆயிட்டான் னு அவர் அக்காவும் ..:((.. அழுகையா வருது டா.

ரகு.: ஹேய் அதெல்லாம் அவங்க ஒரு அக்கறையில சொல்வாங்க அதெல்லாம் சீரியஸா எடுக்காத..

மீரா
..: ஆமா நீயும் ஒரு ஆண்தானே.. உனக்கு எப்படி பெண்களை அவங்க மனதை புரியும்..?


ரகு
.: சாரி . அப்படி சொல்லல..சரி கோச்சுக்காத..


மீரா
,.: என்னமோ டா.. இப்படித்தான் இருக்கும்னா கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்..


ரகு
.: இப்ப என்ன டிவோர்ஸ் பண்ணிடலாமா..?


மீரா
.: அட சே.. நீயும் உன் ஐடியாவும்..


ரகு
.: இல்ல தற்காலிகமா கணவன் என்ற பதவியை டிவோர்ஸ் பண்ணிடலாமா னு சொல்றேன்..


மீரா
.: என்ன சொல்ற .. சும்மாவே நான் குழல்விளக்கு..ஏதாச்சும் இடக்கு மடக்கா சொன்ன
கொன்னுபுடுவேன் கொன்னு..

ரகு
.: அம்மா தாயே உன் கோபம் எனக்கும் நல்லா தெரியும்.. நான் சொல்ல வந்தது இன்னும் ஒரு
வருடம் கணவன் என்ற பதவியிலிருந்து விலகி காதலனாகப்போகிறேன் மீண்டும்..ஆமா டா நான் ஸ்டேட்ஸ் கு போகணும்னு இப்பத்தான் என் பாஸ் சொன்னார்.. சோ. நாம இனிமே போன்லயே காதலிக்க போறோம்.. வருட முடிவில் உன்னை அமெரிக்கா அழைத்து நம்ம இரண்டாவது ஹனிமூன் செரியா..?

மீரா..: ரகு நிஜம்ம்ம்ம்ம்மாவா சொல்ற..சந்தோஷமா இருக்குடா.. ஆமா ஏண்டா நீ மாறிப்போன கல்யாணத்துக்கப்புரம்..?

ரகு
.: அதுதாண்டா ரியல் லைஃப்.. நான் உன்னை கடிந்துகொள்வதோ திட்டுவதோ அன்பில்லைன்னு
ஆயிடாது மா.. ரொம்ப உரிமை எடுத்துகிட்டேன் போல.. இப்ப உன்னோட உள்ள குமறலை சொல்லிட்டல்ல. ஐ வில் டிரை டு சேன்ஞ்..சரி எனக்கு பிடித்த டின்னர் செய்து வை..

மீரா
.: பாத்தியா மீண்டும்..கணவராகிறியே.. என் காதலனாகவே இருடா..


ரகு
.: சரி சரி.. உனக்கு பிடித்ததே பண்ணும்மா என் ராட்சசி... குட்பை..


22 comments:

Paleo God said...

ரசித்தேன்! :))

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி..

KUTTI said...

NICE...

MANO

எண்ணங்கள் 13189034291840215795 said...

Thanks Mano..

Anonymous said...

யதார்த்தம் :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி சின்ன அம்மிணி

சாமக்கோடங்கி said...

நல்ல கற்பனை.... அருமையான நடை.. வாழ்த்துக்கள்...

நன்றி..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி பிரகாஷ்..

Unknown said...

எங்க வீட்டுலயும் இப்படித்தான் சொல்றாங்க...

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[ எங்க வீட்டுலயும் இப்படித்தான் சொல்றாங்க...]]


அட ஒங்க கத தான்.. சீக்கிரம் டைம் மெஷின் ல ஏறி பின்னால போங்க...சுவையை கூட்டுங்க..வாழ்வில்..

prince said...

ஹி! ஹி! ஹீ!

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எல்லா குடும்பத்திலும் இப்படித்தான் இருக்குமோ..என் மனைவியும் இப்படித்தான் சொல்லுகிறாள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தமிழ் வெங்கட் said...

எல்லா குடும்பத்திலும் இப்படித்தான் இருக்குமோ..என் மனைவியும் இப்படித்தான் சொல்லுகிறாள்..]]


ஆமாங்க பெண்கள் சின்ன சின்ன விஷய்த்துக்கு முக்கியம் தேடுவாங்க..வீட்டுக்கு வீடு இதான் போல..:))

நன்றி வெங்கட்

எல் கே said...

நான் காதலிச்சு கல்யாணம் பண்ணல. தப்பிச்சேன்.

நல்ல இருந்தது. தொடர்ந்து எழுதுங்க

எண்ணங்கள் 13189034291840215795 said...

நான் காதலிச்சு கல்யாணம் பண்ணல. தப்பிச்சேன்.


அட தப்பிச்சுட்டீங்களே.. :)

நல்ல இருந்தது. தொடர்ந்து எழுதுங்க]]

நன்றிங்க.. முயலுகிறேன்..:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

superaa irukku

Raghu said...

என்ன‌டா இதுன்னு கொஞ்ச‌ம் அச‌ந்துட்டேன்.... ந‌ல்லா இருக்குங்க‌ :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

ர‌கு said...

என்ன‌டா இதுன்னு கொஞ்ச‌ம் அச‌ந்துட்டேன்.... ந‌ல்லா இருக்குங்க‌ :) ]]

----------

:)) ஹிஹி.

நன்றிங்க...

விக்னேஷ்வரி said...

வாவ், டிஃபரெண்ட் ட்ரை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger விக்னேஷ்வரி said...

வாவ், டிஃபரெண்ட் ட்ரை.

-------
நன்றிங்க விக்னேஷ்வரி..

Hai said...

இப்போதான் படிக்க வந்தேன். ரசித்தேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க அறைகிறுக்கன்.

( என்ன கொடுமைடா இது .)