Tuesday, March 30, 2010

முயல் வாங்க மூணு கால்.சொந்தக்காரரின்
பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை ஒனிடாவுக்கு மட்டுமில்லீங்க,

செல்லப்பிராணி வளர்த்தாலும்தான்.

பக்கத்து வீட்டு சிறுவன் மிக பெருமையாக இரண்டு வெள்ளெலிகளை தூக்கி வந்து எம் அனைவர்

மடியிலும் விளையாடி மகிழ்ந்தான். போதாதா?.. பழைய நியாபங்களை குழந்தைகள் மனதில்

கிளறிவிட்டது..

சிறுவன் சென்றதுமே நச்சரிப்புகள் தொடங்கிவிட்டது..

" அம்மா , பிளீஸ் , ஒரு முயல் வாங்கித்தாங்களேன்.."

" அம்மா, எனக்கும்." சின்னவர்..

" இருக்கிற வேலை போதாதா இன்னும் அது வேறயா?.. "

" இல்லம்மா, எல்லாத்தையும் நானே பாத்துப்பேன்.."

" அதுக்கு கூண்டு வாங்குவது பெரிய செலவாச்சே..கூட முயலும் அதிக விலைதானே?.."

" என்ன வேலைனாலும் சொல்லுங்க செய்யுறேன்.. பாக்கெட் மணி தாங்க அதை சேர்த்து வெச்சு

முயல் வாங்கிடலாம்.."

" என்ன வேலைனாலும் செய்வியா?.."

" சரிம்மா.."

" சரி மொதல்ல அடுப்படியில் பாத்திரம் கழுவணும்.."

" ங்ஏ..........ஏஏஏஏஏஏஏஏஏ........ வேற ஏதும் வேலை இல்லையா மா.. இந்த வாஷிங் மெஷின்

போடுற மாதிரி.?.."

" இல்லை.."

சரி என அனைத்து பாத்திரத்தையும் கழுவி முடித்தார்...அப்பாவுக்கு பிடிக்கவில்லை மகன் வேலை

செய்வது...ஏன் ஆண் குழந்தைகள் வேலை செய்ய கூடாதா என ஒரு கருத்தாடல் மேகம் சூழ்ந்தது

ஆனால் மழை பெய்யவில்லை.. ஏனெனில் பையனே மிக ஆர்வமாய் வேலையில் இறங்கியதால்..

வேலை முடிந்து மகிழ்வோடு பணம் பெற்றார்..


அடுத்த நாள் என்ன வேலை செய்யட்டும் என அதிக ஆர்வமாய்..

" சரி இன்னிக்கு சப்பாத்தி போடுறியா?.. "

" சரிமா. அதென்ன பெரிய வேலையா..? .. பாருங்க ஐந்தே நிமிஷத்தில் போட்டு தருகிறேன்.."

மாவு பிசைவதிலிருந்து உருண்டை பிடித்து தேய்ப்பது வரை பாடம் எடுத்தேன்..தேய்த்து தட்டில்

அடுக்கினார்.

என்ன ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவத்தில் அமைந்தது..சரி

பரவாயில்லை..வெட்டிக்கொள்ளலாம் னு சொல்லியதும் திருப்தி..

கடாய் காய்ந்ததும் ஒவ்வொண்ணாக எடுத்து போட முயன்றால் எல்லாம் ஒட்டிக்கொண்டு வரவே

மாட்டேன் னு பிடிவாதம்..

கடைசியில் அத்தனையையும் சுருட்டி மொத்தமாக பந்தாக்கினேன்.. மீண்டும் நானே தேய்த்து

காண்பித்தேன் விரைவாக..

" அட இவ்வளவு கஷ்டமா மா, சப்பாத்தி தேய்க்க..?." னு ஒத்துக்கொண்டார் ஒருவழியாக..:)

அடுத்து வீடு கூட்டுவது.. என்னவோ ஜன்னலை தூசு தட்டுவது போல நினைத்துக்கொண்டார்.

அவர் தூக்க தூக்க தூசி எஸ்கேப் ஆகுது..

" இந்த வேக்கூம் கிளினர் எங்கேயிருக்கும்மா..?"

" . அதெல்லாம் வேலைக்காரிக்கு கொடுத்தாச்சு எப்பவோ.. கொஞ்சம் குனிந்து வேலை

செய்தால் எளிதாயிருக்கும் முயன்று பாரேன்.."

" அய்யோ . வேற வேலை தாங்க.. "

" சரி வெங்காயம் வெட்டுறியா..?"

" அது ரொம்ப ஈஸி.. அதோடு இன்னிய பாக்கெட் மணி வரும்தானே?."

" கண்டிப்பா... ஆனா 3 பெரிய வெங்காயத்தையும் உரித்து நறுக்கணும்.."

கண்ணில் கண்ணீரோடு வெங்காயத்தை வெட்டி முடித்து வந்தார் , பரிதாபமாக..

சரி இதுக்கு மேலும் கொடுமை படுத்தக்கூடாது என 4 முயல் கடைக்கு அழைத்து சென்று

எல்லாவற்றையும் எல்லா கலரிலும் பார்த்து கடைசியாக வெள்ளை வெளேரென்ற சிவப்பு

கண்கள் , ரோஸ் நிற காதுகள் கொண்ட முயல் வாங்குவதாய் முடிவெடுக்கப்பட்டது..

காசு கொடுக்கும்போது ,

" அம்மா, அது தனியா இருந்தா போரடிக்கும்.,.. அதுக்கு துணையா இன்னொண்ணு பிளீஸ்மா.."

கெஞ்சல்..

" மொதல்ல இதை ஒழுங்கா பராமரிக்கின்றாயா னு பார்க்கலாம்.. ஒரு மாதம் கழித்து அடுத்து.."

அரை மனதோடு அடுத்து கூண்டு வாங்க சென்றால் முயலை விட 3 மடங்க்மு கூண்டும் ,

உபகரணங்களும்..( அதுக்கெல்லாம் பாக்கெட் மணி பத்தலைன்னாலும் கண்டிப்பா வேலை செய்து

பணம் கொடுப்பதாய் சொல்லிட்டார்..)

வீட்டுக்கு வந்ததும் கேரட்டையும் கீரைகளையும் கழுவு கழுவு னு கழுவி, வெட்டிப்போட்டு, அதை

மெதுவாக தொடுவதெப்படி என வகுப்பெடுத்தார் அனைவருக்கும்.. பவ்யமாக

கேட்டுக்கொண்டோம்.. சிறுவனுக்கு வாய் ஓரமா லேசா சிரிப்பு.. " நீ ஸ்கூலுக்கு போனதும்

நாந்தானே தூக்க போறேன்." னு நினைத்தாரோ என்னவோ..கை இரண்டும் குறுகுறுன்னு எப்படா

தூக்கலாம்னு.. பெரியவர் விட்டாதானே?..

தரை வழுக்கியதால் முயல்குட்டியால் நடக்க முடியவில்லை..

" அம்மா, கார்பெட் விரிக்கலாமா?.."

" விட்டா பஞ்சு மெத்தை போடுவாய் போல.. அது பழ்கிக்கும்.." இப்ப அது ஓடுது..தரையில்..துள்ளி

துள்ளி..

இண்டெர்நட்டில் முயல் பற்றிய விபரம் அனைத்தையும் விடிய விடிய படித்து காலங்காத்தாலயே

எமக்கு பாடம் ..:(

முயல் எப்படி மலம் கழிக்கும் என்றும் அதில் எத்தனை வகை என்றும்..

முயல் மகிழ்வாக இருக்கின்றதா என அறிவது எப்படி ..?

முயலை காது பிடித்து தூக்கணும்னு நான் வேற சொல்லிட்டேன்.

அது மிக தவறுன்னு அதற்குண்டான கட்டுரைகளை அனுப்பி என் மெயில் பாக்ஸை நிரப்பிட்டார்...

வேணுமா எனக்கு.?..

இப்படி ஒரு ரிசர்ச் க்கு உண்டான அனைத்து தகவல்களும் அத்துப்படி.. இப்படி படிப்பில் இந்த

ஆர்வத்தை காண்பிக்கப்டாதா?.. நம் தொண்டை கத்துவதாவது மிச்சமாகுமே..:(

முயலுகுக்கு விளையாட பெரிய பெரிய தெர்மாகோல் பெட்டிகளை வெட்டி நீள குகை போல

செய்து பல வாசல்கள் வைத்து அதை விளையாட செய்தால் அதுவும் மிக சுவாரஸ்யமாக

ஒருவழியாய் நுழைந்து மறுவழியாய் துள்ளி ஓடி வந்து மீண்டும் மீண்டும் விளையாடுது..

பள்ளி புராஜக்ட் னா நாம உதவணும்.. முயலுக்குன்னா நாம தூங்கின பிறகு இண்டெர்நட்ல

வாசிச்சே இவரா செய்வாராம்...

எப்படியோ முயலார் வந்ததில் பையன் கொஞ்சம் வீட்டு வேலை செய்ய கத்துக்கிட்டார்..

காலியில் எழுப்ப இனி நான் சுப்ரபாதம் பாடவேண்டியதில்லை.. முயல் தண்ணி பத்தல போல னு

போற வாக்கில் சொல்லிட்டா போதும்.. அடித்து பிடித்து பெட்ஷீட் போர்வையோட முயல் முன் 5

மணிக்கே ஆஜர்..மூன்று காலில்..

முயலுக்கு மூணு காலோ இல்லையோ , இப்ப வீட்டில் எல்லோருக்கும் மூணு கால் அது

சோபாவின் பின்னால் ஒளிந்துகொண்டால் தேட..

இப்ப பள்ளிக்கு போயாச்சு இருவரும்.. நானும் முயலும் வீட்டில்..அது வேற ஆர்டர்

போட்டிருக்கார்.. " அம்மா சும்மா இருக்கும்போது முயலை தோட்டத்துக்கு அழைத்து

செல்லுங்கள்.." என..

" ஆமாப்பா , அடுத்து ஜிம், நீச்சல் குள்ம், டென்னிஸ், இதுக்கும் அழைத்து போக சொல்லுவியே.."

எனக்கும் முயல் வளர்க்கும் ஆசை சின்ன வயதிலிருந்தே உண்டு.. நாய்கள் மட்டுமே இருந்தது

வீட்டில் அப்போது..எப்படியோ என் ஆசையும் ஒருவழியா தீர்ந்தது.. இந்த விஷயம் பசங்களுக்கு

தெரியாது..:)

முயல் பின்னங்காலில் நின்றுகொண்டு, முன்னங்காலால் விளையாடுவது பார்க்க நன்றாகத்தான்

இருக்கின்றது...பக்கத்து வீட்டு சிறுவன் வெள்ளெலியை கொண்டு வந்து கூண்டினில் விட அதை

முயல் கொஞ்சுவதை பார்ப்பது இன்னும் அழகு..

செல்லப்பிராணி வளர்ப்பு மனதுக்கு குதூகலம்தான், சிறுவர்/சிறுமியர் இருக்கும் வீட்டில்..

7 comments:

அண்ணாமலையான் said...

முயல விட நீங்க பாடம் நடத்துனது அருமை

புன்னகை தேசம். said...

:) வேற வழி இப்படித்தான் கொஞ்சமாவது பழக்கப்படுத்தவேண்டியிருக்குங்க...

நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என் மகனின் ஆசைக்காக ஒரு ஜோடி நாய் வளர்த்து அது நாலு குட்டி போட்டு அதை இலவசமாக யாரும் இல்லாது நாங்களே வளர்த்து அக்கம்பக்கம் ஒரே சச்சரவு. தாயைவிட்டு குட்டிகளைப்பிரிக்க முடியாது தாயையும் வேற்றிடத்தில் கொண்டு தொலைத்து விட்டு வந்து ஒரே கண்ணீரும்,மன உளைச்சலும். ம்ச்...

புன்னகை தேசம். said...

:((


அதுதான் மிகப்பெரிய சோகம்..

பிரிவென்பது மிக வருத்தமே..

அதிலும் நாய்க்குட்டிகள் வாலை ஆட்டிக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு நம்மையே சுத்தி சுத்தி வரும். சொன்னபடி கேட்கும்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நான்கு பூனைகள், மூன்று நாய்கள் வைத்திருந்தோம்.. இப்போஷு இரண்டு பூனைகளும், மூன்று நாய்களும்(மூன்றும் புதியவை - பழையவை இறந்து விட்டன)உள்ளன.. எதுவும் நாங்கள் காசு கொடுத்து வாங்க வில்லை.. பிரிய மனமில்லாத என் தாயின் அரவணைப்பாலும், எங்கள் வீட்டில் உள்ளோரின் பிரியத்தாலும், எப்போதும் மழலைப் பட்டாளங்கள்(மழலைகள் = பிராணிகள்)..குட்டிகள் போடும்போதும், எண்ணிக்கை கூடி விடக் கூடாது என்று அவற்றைக் கொண்டு போய் விட்டு விடும்போதும், வீட்டிற்குள் முடி பறக்கிறது, அலர்ஜி உருவாகிறது என்று அப்பா சண்டை போடும்போதும் ஒரே ரகளை தான்.(அவருக்கு செல்லப் பிராணி என்றாலே பிடிக்காது.. அப்படியிருக்கும்போதே குடும்பத்தலைவரின் எதிர்ப்பினூடே நாங்கள் இத்தனை பிராணிகள் வளர்க்கிறோம்.. மற்றவர்கள் எங்களைப் பைத்தியக் காரர்களைப்போல பார்க்கிறார்கள். குறிப்பாக என் தாயை.. ஆனால் எங்களுக்கு அவர்களைப் பார்க்கும்போதே அப்படித் தோன்றுகிறது.. குறுகிய மனத்தோடு எந்த விஷயத்தையும் அணுகும் இந்த மனிதர்களுக்கு, மனிதர்களைத் தாண்டி மிருகங்களுக்கும் பறந்து விரியும் இந்த அன்பைப் புரிந்து கொள்ளுதல் சாத்தியம் இல்லை.. மனம் இளகி மன சாந்தி கொடுத்து உளைச்சலைக் குறைக்கும் அவைகள் மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்து. காலையில் காலைச் சுற்றி அடம்பிடித்து பால் வாங்கிக் குடித்தும், தூங்கும் நேரம் வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டி கதவைத் திறக்கச் சொல்லி ஆர்பாட்டம் செய்தும் இவைகள் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம்.. ஆனால் நான் கட்டிலில் உக்கார்ந்து டிவி பார்க்கும்போதும் படிக்கும்போதும், என் மடியில் வந்து உர்க்காந்து என்னுடன் உரையாடும்போது எல்லாப் பிரச்சினையும் ஓடிப் போய் விடுகின்றன.. குறிப்பாக குழந்தைகளைச் செல்லப் பிராணிகளுடன் பழக்கவேண்டும்.. அவற்றைத் துன்புறுத்தாமல் எப்படிப் பாது காப்பது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்..(எனக்கு நாய் பூனை'னாலே அலர்ஜி .. என்று சொல்வோரைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் பாவமாகத் தோன்றும்.. அவர்கள் சிலவற்றை வாழ்க்கையில் இழக்கிறார்கள் என்பது உறுதி..)

புன்னகை தேசம். said...

------------------------------------------------
[[குறிப்பாக குழந்தைகளைச் செல்லப் பிராணிகளுடன் பழக்கவேண்டும் ]]


மிக சரி.. வலிமை இழந்தவர்களையும் நேசிக்க கற்பார்கள்..

அருமையான கருத்துகள்.. ..
--

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in