skip to main |
skip to sidebar


நர்சிம் , கார்க்கி செய்தது மிகப்பெரிய தவறே.. ஆனால் மனமாற மன்னிப்பு கோரியுள்ளனர்..
அதை துச்சமென மதித்த சந்தனமுல்லை , தோற்று போக தயாராகிவிட்டார்..:(தன் கையில் பந்து கிடைத்ததும் தாறுமாறாக விளையாட ஆரம்பித்துள்ளார் , சில கெட்டவர்களின் , கொலைகார எண்ணம் கொண்டவர்களோடு..( பின்னூட்டம் பார்த்தவருக்கு புரியும்..)
கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து ஒரு உன்னதமான காரியம் செய்திருக்கலாம்..தன் மதிப்பை பன்மடங்கு அவர் உயர்த்தியிருக்கலாம்..
பதிவுலகமே அவருக்காக பரிதாபப்பட்டது. நர்சிம் மை எதிர்த்தது..
இப்ப நிலைமை தலைகீழாக மாறும்..
மனதார மன்னிப்பு கேட்ட நர்சிம்மை மன்னிக்க மெஜாரட்டி பதிவுலகத்தினர் தயாராகவே உள்ளனர்..
பதிவுலகம் என்பது சந்தனமுல்லையும் வினவும் மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ளணும்..
பெண்ணியம் போற்ற மனிதநேயத்தை கீழே போட்டு மிதித்துவிட்டார்கள்..
ஒரே நாளில் பிரபலாமானவர் பிரபலத்தை தக்க வைத்துக்கொள்ள தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார்.. அவருக்கு தூபம் போடுபவர்கள் எத்தனை நாட்கள் அவரோடு இருக்காங்கன்னு புரிந்துவிடும்....:)
கண்டிப்பா மற்றோரு பெண்ணுக்கு இதே பிரச்னை வந்தாலும் வினவின் பக்கம் தலைஎன்ன கால் வைத்து கூட படுக்க மாட்டார்கள்..
கொலைகாரன் ஒருவனுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் உலகில் கொலைகளே இல்லாமல் செய்துவிடலாம் என்கிற இவர்களின் கண்டுபிடிப்பை என்ன சொல்ல?.. குழந்தைத்தனம் என்றா?,,.:)
பெண் என்பவள் முதலில் மனுஷி . மனிதநேயம் , தாய்மை உணர்வு கொண்டவள்.. பழிவாங்க துடிப்பவள் அல்ல..
உன் நண்பரை சொல் உன்னை சொல்கிறேன் என்பது சந்தனமுல்லை க்கு மிக பொருத்தம்..
படகு என நினைத்து முதலையின் முதுகில் பயணம் செய்ய நினைப்பதை என்ன சொல்ல..?????????
முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள் , சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..
உங்க பழிவாங்கும் எண்ணம் என்ன முடிவை தரப்போகிறது என பொருந்திருந்து பார்ப்போம் ..
அரசியலில் கூட மன்னிப்பும் மறப்பும் அதிகமா இருக்கும்போது !!!!!!!!!!!
சந்தனமுல்லை இதுவரை வாசனை. இனி..????????
வருந்துகிறேன்... நர்சிம் ஐ / கார்க்கி யை அழைத்து நேரில் ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை அன்போடு கேட்டிருந்தாலே அவர்கள் ஒடிந்து போய் அழ வைத்திருக்க முடியும்..
அன்பால் கையாள வேண்டியதை அறிவாளால் கையாளப்போகிறீர்கள் கவனம் . உங்களை பதம் பார்த்துவிடப்போகிறது...
பிரச்னைகளை தீர்ப்பதில் மிக தவறான வழியை தேர்ந்தெடுத்து தோற்றுபோக தயாராகிவிட்டீர்கள்...
தமிழமுத குழுமத்தில் என்னை நேராகவே வேசி என்றும் தாய்லாந்தில் தொழில் நடத்துபவள் , உனக்கு நல்ல மரணமே கிடையாது என்றும் சபித்தவர் பகலவன் என்ற நண்பர்.. அவரை மட்டுறுத்தி வெளியேற்ற மட்டுமே செய்தோம்.. எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..பின்னர் அவராகவே புரிந்துகொண்டு ஒரு மாதம் கழித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்...
எல்லாரையும் திருத்த முடியாது திருத்த புறப்பட்டால் வேலைக்காவாது..
சிலர் சொன்னால் திருந்துவார். சிலர் உணர்ந்து திருந்துவார்..
மற்றொன்று எனக்கு வேசி , ஸ்த்ரீ லோகர் என்பவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணத்தையெல்லாம் தாண்டியவள் நான்..
அவர்களை சமமாகவே எண்ணுகிறேன்..
அதனால் என்னை வேசி என்பதால் நான் வேசியாகிடப்போவதுமில்லை.. தெய்வம் என்பதால் நான் கடவுளாகப்போவதுமில்லை... :)
இங்கு தினந்தோறும் வேசி என நீங்கள் சொல்லும் தொழிலாளிகளை புன்னகையோடே கடந்து செல்கிறேன் .. கூடவே பயணிக்கிறார்கள்.. என் குழந்தைகளிடம் ஆசையாக பேசுகிறார்கள் பொது இடங்களில்...அதே போல திருநங்கைகளும் .. வித்யாசம் ஏதுமின்றி..
நம் நாட்டு மக்கள் அப்படியான பார்வையை எப்போது விசாலப்படுத்துவோம்.?
சர்ச் மூலம் சிறைச்சாலையிலுள்ளவர்களையும் பாலியல் தொழிலாளிகளையும் சந்திக்கிறோம்..மனிதர்களாகவே பார்க்க முடியுதே தவிர குற்றவாளிகளாய் அல்ல... அவர்கள் மாட்டிக்கொண்டவர்கள்/ உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள் அவ்வளவே...
நாட்டில் நல்ல மனிதராய் வேடமிடுபவர்களிடம்தான் கவனமாய் இருக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்...
மன்னிப்பு கேட்டபின்னும் பழிவாங்க துடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்.. அதில் வீரமோ விவேகமோ இல்லை..காயங்களும் வலிகளும் மட்டுமே மிஞ்சும்...
தண்டனைகள் மட்டுமே மனிதர்களை திருத்துமென்றால் உலகமே ஊனமாயிருக்கும்..
புரட்சி என்றாலே வெறுப்பாயுள்ளது..:( இத்தனைக்கும் நான் சந்தனமுல்லையின் பப்புவை பற்றிய பதிவுகளை ஆசையாக படிப்பேன். நானும் ஒரு குழந்தைப்பையித்தியம் என்பதால்..நர்சிம் கார்க்கி எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள்.. -------- தொடரும்.... தொடரலாம் கண்ணியமாக மட்டுமே....பிரச்னைக்குரிய பதில்கள் பிரசுரிக்கப்படமாட்டாது...



மீரா : ஹேய் ரகு ஆன்லைன்லயா இருக்க?.ரகு : யெப் வாட்ஸ் த மேட்டர்...?
மீரா: ஹேய் ஆன்லைன்ல பேசி எவ்ளோ நாளாச்சு..
ரகு.: ம் . சோ ஹவ் ஆர் யூ..
மீரா..: ஃபைன் டா. நீ?
ரகு..: ம் வெரி ஃபைன்..
மீரா: ம். பட் நாட் ஃபைன் டூ..:(
ரகு.: அட இப்பத்தான் ஃபைன் னு சொன்ன..?
மீரா.: ம். ஆமாடா அவரால் ரொம்ப பிராப்ளம் டா..
ரகு.: என்னாச்சு.?
மீரா.: நீ லாம் எவ்ளோ ஜாலி டைப்.. அவர் எப்பவும் மூடி டைப்தான்..
ரகு.: ம்.
மீரா.: ஒரு டிரெஸிங் சென்ஸ் இல்ல , வெளில கூட்டிட்டு போணும்னு அக்கறையில்ல..
ரகு.: ம்.
மீரா.: காலைல எழுந்தா ஒரே டென்ஷன்.. என் சாக்ஸ் எங்க வெச்ச டை காணோம் , ஃபைல் எங்கன்னு.
ரகு.: ம்.
மீரா .: ஆனா ராத்திரி சாரி சொல்லிடுவார்..
ரகு.: ஹாஹா.
மீரா.: என்ன சிரிப்பு .. நான் சீரியஸா பேசிட்டிருக்கேன் டா..
ரகு.: ம். சரி சரி சொல்லு..
மீரா..: நீ லாம் எவ்ளோ அழகா டிரெஸ் பண்ணுவ.. இன் ஃபேக்ட் உன் டிரெஸிங் சென்ஸுல மயங்கினவ தான் நான்...
ரகு.: கம்பேர் பண்ணகூடாது மீரா.. டோண்ட் திங் அபவ்ட் பாஸ்ட்..
( அதற்குள் ரகுவின் காரியதரசி வடநாட்டு ரேஷ்மா வந்து அழைக்கவும் ,
" ரேஷ்மா , பிலீஸ் டூ எ ஃபேவர் பார் மி.. ஜஸ்ட் பிரஸ் திஸ் லெட்டெர்
" எம் ".. ஐல் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்..திஸ் இஸ் மை எக்ஸ் கேர்ல்பிரண்ட்..எ வெரி பொஸசிவ் கேர்ல் " . ஹோப் யு டோண்ட் நோ டமில்..ஹ?..:) ..
ரேஷ்மா சிரித்துக்கொண்டே " சுயர்.." )
மீரா.: என்னோட அப்பா அம்மாவுக்கு ஒண்ணுன்னா நீ எப்டி ஓடி வருவ.? ஆனா அவரோட அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போலாம்னு சொன்னா கூட " நீயே ஆட்டோ புடிச்சு போயிடேன் " னு சொல்றார்.. ஹவ் ரூட்..
ரகு.: ம்.
மீரா.: காலையில அலுவல் போகும்போது ஒரு ஹக் , ஒரு கிஸ், ஒரு ஐ லவ் யூ.. ம்ஹூம்.. சோ அப்செட் டா.
ரகு.: ம்.
மீரா.: எங்கேயாவது விசேஷம்னா கூட நான் நிதானமா சேலை கட்டி நகை போட்டு சடை பின்னி பூ வைத்தால் , " இதுக்கு இவ்ளோ நேரமா..? சிம்பிளா சுடிதார் இல்லையா "னு கேட்டு வெறுப்பேத்துறார்.ரகு.: ம்.
மீரா.: நான் சேலை கட்டினா அன்னிக்கு பூரா என்னை ரசிச்சுட்டே இருப்பியேடா நீ.. அதுக்கு மேட்சா ஜ்வெல்லரி வாங்க என்னை அழைச்சுட்டு போவ..ஐ மிஸ் ஆல் தட் டா.
ரகு.: ம்.
மீரா.: உங்க வீட்டுக்கு என்னை அழைச்சுட்டு போனப்ப நான் என்ன கலர்ல புடவை கட்டியிருந்தேன் ?. சொல்லு பாப்போம்.?..
ரகு.: ம்.
மீரா.:ம் சொல்லு..
ரகு.: ம்.
மீரா.: யோசிக்கிறியா?.
ரகு.: ம்.
மீரா.: டேய் என்ன நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கேன் சும்மா " ம். , " ம்" னு சொல்ற.. கோபப்படுத்தாதே ..
ரகு.: ம்.
( அதற்குள் ரகு வந்துவிட , )
ரகு.: அயோ சாரிமா.. ஸ்கை ப்ளூ கலர்தானே..
மீரா.: அதான பார்த்தேன்.. உங்க வீட்டுல எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் " ஏய் என்ன சொக்குப்பொடி போட்ட " னு நீயே கேட்குமளவுக்கு எனக்கு ஆதரவு எல்லாரும் உங்க வீட்டில். இங்க என்னடான்னா தலைகீழ் .." பாவம் என் மகன் ஓடா உழைக்கிறான்"...னு அத்தையும், " எப்படி இருந்த என் தம்பி இப்படி ஆயிட்டான் னு அவர் அக்காவும் ..:((.. அழுகையா வருது டா.
ரகு.: ஹேய் அதெல்லாம் அவங்க ஒரு அக்கறையில சொல்வாங்க அதெல்லாம் சீரியஸா எடுக்காத..
மீரா..: ஆமா நீயும் ஒரு ஆண்தானே.. உனக்கு எப்படி பெண்களை அவங்க மனதை புரியும்..?
ரகு.: சாரி . அப்படி சொல்லல..சரி கோச்சுக்காத..
மீரா,.: என்னமோ டா.. இப்படித்தான் இருக்கும்னா கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்..
ரகு.: இப்ப என்ன டிவோர்ஸ் பண்ணிடலாமா..?
மீரா.: அட சே.. நீயும் உன் ஐடியாவும்..
ரகு.: இல்ல தற்காலிகமா கணவன் என்ற பதவியை டிவோர்ஸ் பண்ணிடலாமா னு சொல்றேன்..
மீரா.: என்ன சொல்ற .. சும்மாவே நான் குழல்விளக்கு..ஏதாச்சும் இடக்கு மடக்கா சொன்ன கொன்னுபுடுவேன் கொன்னு..
ரகு.: அம்மா தாயே உன் கோபம் எனக்கும் நல்லா தெரியும்.. நான் சொல்ல வந்தது இன்னும் ஒரு வருடம் கணவன் என்ற பதவியிலிருந்து விலகி காதலனாகப்போகிறேன் மீண்டும்..ஆமா டா நான் ஸ்டேட்ஸ் கு போகணும்னு இப்பத்தான் என் பாஸ் சொன்னார்.. சோ. நாம இனிமே போன்லயே காதலிக்க போறோம்.. வருட முடிவில் உன்னை அமெரிக்கா அழைத்து நம்ம இரண்டாவது ஹனிமூன் செரியா..?மீரா..: ரகு நிஜம்ம்ம்ம்ம்மாவா சொல்ற..சந்தோஷமா இருக்குடா.. ஆமா ஏண்டா நீ மாறிப்போன கல்யாணத்துக்கப்புரம்..?
ரகு.: அதுதாண்டா ரியல் லைஃப்.. நான் உன்னை கடிந்துகொள்வதோ திட்டுவதோ அன்பில்லைன்னு ஆயிடாது மா.. ரொம்ப உரிமை எடுத்துகிட்டேன் போல.. இப்ப உன்னோட உள்ள குமறலை சொல்லிட்டல்ல. ஐ வில் டிரை டு சேன்ஞ்..சரி எனக்கு பிடித்த டின்னர் செய்து வை..
மீரா.: பாத்தியா மீண்டும்..கணவராகிறியே.. என் காதலனாகவே இருடா..
ரகு.: சரி சரி.. உனக்கு பிடித்ததே பண்ணும்மா என் ராட்சசி... குட்பை..




பள்ளிக்கு போமாட்டேன்.." அம்மா, குஷி இன்னிக்கு வாட்டர் பாட்டிலை எடுத்து வெச்சிட்டா."" நீங்கல்லாம் டேர்டி ( அசைவம் ) சாப்பிடுறீங்கன்னு சொல்றா குஷி.. "" என் கலர் பென்சிலை எடுத்து லெட் ஒடிச்சிட்டு குடுக்குறா.."" என்னைய குண்டு பச்சா ன்னு சொல்லிட்டா.."இப்படி தினமும் புலம்பல்.. நாளையிலிருந்து பள்ளிக்கு செல்லமாட்டேன் னு அழுகையும்..இதற்கு காரணமான குஷி குஷ்பு மாதிரி ஒரு அழகிய ராட்சச குட்டி சுட்டிப்பெண்..எங்கள் அடுக்ககத்திலேயே குடியிருந்தாலும், இப்பதான் இருவரும் ஒரே பள்ளிக்கு ஒரு மாதமாய் செல்கிறார்கள்..(இவனை வேறு பெரிய பள்ளியில் சேர்க்க இப்பள்ளி சிறப்பு பயிற்சிக்கு மட்டும்..)குஷியின் சேட்டை தாங்காமல் வேன் டிரைவர் அவளை தனியா வைத்தாலும் அங்கிருந்தே ஏதாவது பேசி அழ வைக்கிறாளாம் எல்லா குழந்தைகளையும்..இவனை விட ஒரு வகுப்பு மூத்தவள்..இரட்டை குதிரை வாலோடு துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பாள்..அவளை பார்த்து கொஞ்சம் அனுசரித்து போக சொல்லலாம்னு கீழே போனால் ," ஹாய் " னு நமக்கே வணக்கம் சொல்கிறாள்.. மனசு வருமா?.. அதுவும் பெண்குழந்தையை பார்த்து..?. கொஞ்சணும்னுதான் தோணுது..:)நானும் , " ஹாய் குஷி.. எப்படி இருக்கே..? " னு ஒரு பேச்சுக்கு கேட்டதும் , சின்னவருக்கு கோபமாய் வருது.." அம்மா யு ஆர் சோ பேட்... நீங்க குஷிக்கு சப்போர்ட் பண்றீங்க.?"." இல்ல கண்ணே. கொஞ்சம் பொறு.. மெதுவா பேசணும் அவகிட்ட...குழந்தைதானே.."எப்படியோ சொல்லியாச்சு..ஆனா அம்மா மேல் நம்பிக்கை போச்சு..:(படித்துக்கொண்டிருந்த அண்ணா கிட்ட போய் , " அண்ணா மா , ( தேவைக்கு மட்டும் அண்ணா மா னு ஐஸ்.... ) இந்த குஷி ரொம்ப டிஸ்டர்ப் பண்றா.."" ஒஹ். அப்படியா.. டோண்ட் ஒர்ரி.. அவளை புடிச்சு ரேபிட் கூண்டுக்குள்ள போட்ரலாம்.."" ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.." னு ஒரே சிரிப்பு..அவளை பிடிப்பதாகவும் பிடித்து அடைப்பதாகவும் கற்பனை பண்ணி பண்ணி ஒரே சிரிப்பு அடக்க மாட்டாமல்.." ஏண்டா இப்படிலாம் சொல்ற ?. " னு நான் கண்டிச்சா , விடுங்கம்மா ஒரு டெம்பரரி சொல்யூஷன்.. இப்ப பாருங்க நிம்மதியா பள்ளி செல்வான்.." ஆமா , அவளை எப்படிண்ணா தூக்கிட்டு வருவது?.."" ( மனதுள் - ஆரம்பிச்சுட்டான்யா ) . அத நான் பாத்துக்குறேன்.. நீ சமத்தா தூங்கு..."இப்படியே தினம் தினம் குஷியால் குஷி இழந்து போனார்..இன்று பள்ளி விழாவுக்காக நடன பிராக்டிஸ் செய்ய அழைத்தார்கள்.. பாங்காக்கில் பிரச்னை என்பதால் பள்ளி வேன் வரவில்லை.. சரி என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்..எல்லா குழந்தையும் ஒழுங்கா ஆடியது 3 இடியட்ஸ் பாட்டுக்கு..இவனை தவிர.. ( நான் இருப்பதால் வெட்கமாம்.. நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு ).ஆமா அது யாரு சின்னவர் பக்கத்தில் ரொம்ப மகிழ்ச்சியா ஆடுவது...?அட, அதே குஷிதான்...ஹாஹா..இவருக்கு அவள்தான் பார்ட்னர்.. அதான் ஐயா இம்புட்டு வெட்கப்பட்டாரா..?இவன் அவள் கையை பிடிக்க மாட்டேன் னு சொல்ல அவளோ அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க எனக்கு ஒரே சிரிப்பு.. ஆனா சிரிக்க முடியாதே.. இன்னிக்கு பூரா கோபப்படுவாரே ன்னு அடக்குவதற்குள்.. :)))" அம்மா பள்ளியை மாத்த போறீங்களா இல்லையா?.. "" அடுத்த 2 மாதம் கழித்து வேறு பெரிய பள்ளிக்கு போறார்.. சரி அதை காண்பித்திடுவோம்னு சொல்லி அங்கு அழைத்து செல்ல வேண்டியதாயிற்று..பெரியவர் கதை வேற மாதிரி .. அது அடுத்த பதிவில்...--------------------------------------------------------------இதற்கு பின்னூட்டம் போட நேரம் செலவழிக்காமல் அந்நேரத்துக்கு வேறு உபயோகமான பதிவை படிங்கப்பூ..
மூளையில்லையா டா உனக்கு.. ?.." ப்ளைட் எத்தனை மணிக்குடா?..மதன் "" காலையில 8 மணிக்கு தான்க்கா.. பொண்ணு பார்க்கிறேன் .. புஜ்ஜு குட்டி டான்ஸ் அட்டெண்ட்பண்றேன் சாயங்காலம் .. உடனே அடுத்த பிளைட் புடிச்சு வந்தாகணும் .. "" ஏண்டா எப்ப பாத்தாலும் காலுல வெந்நீர் ஊத்திகிட்டு..நீ ஆசப்பட்ட மாதிரியே அழகு படிப்பு,இளமை எல்லாம் நிறஞ்ச பொண்ணுடா..21 வயசுதான் ஆகுது..அவ அக்கா , உன் அத்தான்கூடதான்வேலை செய்யுறா.. ரொம்ப தெறமைசாலியாம்..அனேகமா அவதான் வருவா ஏர்போர்ட்டுக்கு..அப்படியே நீ பொண்ணு பார்க்க வந்துடு அத்தான் கூட .."" எப்படியோ அக்கா. நம்ம சொந்த ஊருல நீ ஆசப்பட்ட மாதிரியே, வேதமெல்லாம் ஓதி சொந்தபதங்களையெல்லாம் அழைத்து கொண்டாடணும்..என்னோட வெளிநாட்டு நண்பர்களுக்கெல்லாம்நம்ம கலாச்சாரம் புரியிற மாதிரி விமர்சையா நடத்திடுவோம்...சந்தோஷம்தானே?.."" பொண்ணு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா.."" உனக்கே பிடிச்சாச்சா..அப்ப எனக்கும் பிடிக்கும்னு சொல்ற..?"---------------------------------------------------------------------------------------" ஐயம் சாரி.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேனா?..பிளைட் லேட்.."" நோ..நோ. நோ பிராப்ளம்..அக்சுவலா ரொம்ப நாளா படிக்கணும்னு நெனச்சுட்டிருந்த புத்தகத்தைபடிச்சு முடிச்சுட்டேன்..ஐ ஷுட் தேங் யூ ஃபார் தட்.." 40 வயதான நந்தினி, அட்டகாசமானபுடவையில் மிக நேர்த்தியான மேக்கப்புடன் வீடு சேரும்வரை கலகலப்போடு பேசி வந்தாள் உலகவிஷயம் அனைத்தையும்..நீண்ட விமானப்பயண அலுப்பையும் மறந்து ஆச்சர்யத்தில் சிரிக்க கூட மறந்து கேட்டான் மதன்..இடையில் வந்த தொலைபேசி அழைப்புகளையெல்லாம் மிக நாசூக்காக பேசி சமாளிப்பதையும்,அவளின் நகைச்சுவை கலந்த பேச்சையும் ரசித்தவன், பெண்ணும் இப்படி இருப்பாள் என கற்பனைசெய்ய ஆரம்பித்தான்...பெண் பார்க்கும் படலம் நிறைவாய் நடந்தது.. பெண் ப்ரியா அமைதியாய் அடக்கமாய் வந்துவிட்டுபோனாள்.. தான் நினைத்த கனவுக்கன்னிக்கும் மேலாகவே இருந்தாள் அழகில்.. நந்தினியை விடஅதிக அழகாயும்..நந்தினிதான் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தாள்..-----------------------------------------------------------------------------------வீடு வந்ததுமே அக்கா ," என்ன நான் சொன்னேன்ல .. பொண்ணு ஒக்கே தானே?.."" ம்.."" என்னடா.?.. சம்மதம்தானே..?. புடிச்சுருக்கா.?""ம். புடிச்சுருக்கு.."" என்னது இவன் மந்திரிச்ச கோழி மாதிரி இருக்கான்..?..என்னங்க நீங்க கேளுங்க.."" என்னடா அப்ப அவங்க கிட்ட தேதி குறிக்க சொல்லிரலாமா?..""ம்."" என்னடா என்ன கேட்டாலும் தலைய மட்டும் ஆட்டுற.. மயக்கத்துல இருக்கியா என்ன?.."" ம்."" அட .. என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.. வாய தொறந்து சொல்லுடா.. அவங்க பொண்ண கட்டிக்க சம்மதம்தானே?..""ம். .ஆமா. ஆனா பிரியாவ இல்ல.. நந்தினிய.."" பைத்தியாமா மூளையில்லாயா டா உனக்கு.?. உன்ன விட 8 வயது மூத்தவ.. விதவை.."" நந்தினிய பார்த்து பேசுற வரைக்கும் எனக்கு அப்படி ஏதும் எண்ணமில்லைக்கா.. ஆனா அவளை மாதிரி ஒரு பொண்ணோடு வாழ்க்கைன்னா அது பெரிய அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்..அவள் உடம்புக்கு வேணா வயசாயிருக்கலாம்.. அவ மனதுக்கு வயது 20 தான்.. அறிவுக்கோ 60 வயது..கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அப்படி ஒரு பெண்ணோடு வாழணும்னு முடிவு பண்ணிட்டேன் கா.."" நம்ம சொந்தம்லாம் " முடிப்பதற்குள் தடுத்தான் மதன்.." யார பற்றியும் எனக்கு கவலையில்லை அக்கா.. எந்த சம்பிராதயமும் வேணாம்,...நந்தினியோட சம்மதம் மட்டும் முடிந்தா வாங்கித்தா...இல்லாட்டி நான் பேசுறேன் நந்தினி கிட்ட....ப்ரியா மாதிரி இளமையான பொண்ணு என்னோட பசிகளை வேணா நிரப்பலாம்.. ஆனா நந்தினி மாதிரி பொண்ணுங்க கூட வாழ்வதே ஒரு உற்சாகம்..நந்தினி தவிர வேறு யாரையும் இனி நெனச்சு கூட பார்க்க முடியாது.."திறந்த வாயை மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அக்கா..