Friday, March 21, 2008

வேலாயி- பாகம் 10 - அன்பே சுகமா?..* *===================================*
டாக்டர் அறையிலிருந்து வெளியில் வந்த தீபாவை பார்த்ததும் சிவாவுக்கு அதிர்ச்சி..அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழியுது.. ஆனால் வாயை இரு கைகளாலும் மூடியுள்ளாள்.
அவள் அருகில் வந்து கையை எடுத்துவிட்டதும் தான் தெரிகிறது அவள் புன்னகை.. ஆனந்தக்கண்ணீரா?..
" என்னம்மா , என்னாச்சு, சொல்லு சீக்கிரம்..." அத்தை
"அத்.. தை...... சி..........வா.... வேலாயிக்கு....."
" வேலாயிக்கு..?.. என்னாச்சு?.."
" அத்தை இரட்டைக்குழந்தையாம் .. சிவா.. கடவுள்........ அத்தை...." சொல்ல வார்த்தைகளின்றி, தடுமாறுகிறாள்.... என்ன சொல்வதென்று தெரியவில்லை யாருக்கும்... மகிழ்ச்சி கடலில் அனைவரும்....அதே சமயம் வேலாயிமேல் பரிதாபம் வருகிறது...
" பயமாயிருக்கு சிவா...."
" ஒண்ணும் கவலப்படாத.. இந்த வருச திருவிழா நாம தான் நடத்துறோம் னு வேண்டிக்கிட்டேன்... எல்லாம் ஆத்தா பாத்துக்குவா... சரி டாக்டரம்மா என்ன சொல்றாக..?"
" 32 வாரம் கடந்துள்ளதால் குழந்தைக்கு பிரச்சனையிருக்காது... ஆனால் வேலாயி இந்த பிரசவத்தை எதிர்கொள்ளணும்... அறுவை சிகிச்சைக்கு அவள் உடம்பு தாங்குமான்னு சந்தேகமாம்... அதுதான் என் பயமும்..."
தீபா வேலாயியிடம் செல்கிறாள்..கைகளை எடுத்து கன்னங்களில் மெதுவாக வைத்துக்கொள்கிறாள்.. அழக்கூடாது என்று கட்டுப்படுத்த கண்ணீருக்கு அடக்கமில்லை,.. பிடிவாதமாய் ஊற்றெடுக்கிறது...அதை மறைக்க புன்னகைக்கிறாள்..
" வேலாயி.. எப்படி சொல்றதுன்னே தெரியலைமா... எல்லாருக்கும் பலவிதமான சந்தோஷம்.. குழந்தைகளும் நல்லபடியாக இருக்குமா...உன் உடம்பை பத்தி தான் எங்களுக்கு கவலை..."
" அட என்னம்மா என்னைப்பத்தி யோசிக்கிறீங்க... முத்துவப்பார்த்து நானே அசந்துட்டேன்.. என் புள்ளயான்னு... அம்மா ஒரு விசயம்மா.. என் வீட்டுக்காரரை வரச்சொல்ல முடியுமாம்மா?.."
" கண்டிப்பா வேலாயி... ஆமா.. ஏதாவது முக்கியமான விஷயமா என்ன?..?"
" அப்படி ஓண்ணுமில்லைமா.. சும்மாதான்..."
அவள் வாடிப்போவது புரிந்து மேலே தொடர விரும்பாமல்.,
" உடனே விமானத்திலே வர ஏற்பாடு செய்கிறேன் வேலாயி... இனி ஓவ்வொரு நாளும் கவனமா இருக்கணும்.. ஒரு வேலையும் செய்யக்கூடாது நீ சரியா?.."
" வேலாயி, நானும் சிவாவும் உனக்கு 5 லட்சம் போடுவதாக நினைத்திருந்தோம்..... இப்ப 5 , பத்து லட்சமா ஆகுது... உன் கணவர் பட்டாளத்திலிருந்து வந்ததும் இங்கேயே மெஸ் ஆரம்பிங்க... ஐடி காரங்களுக்கு தேவையாயிருக்கு.. நான் ஏற்பாடு செய்கிறேன் சரியா?.."
" அம்மா, தயவுசெய்து பணத்தைகொண்டு, என்னைப்பிரிச்சுராதீங்கம்மா...வேண்டாம்மா.. உங்க அன்பு ஒன்று இருந்தால் போதும்மா ஆயுசுக்கும்..."
கைகளை மறுபடியும் பிடித்து ஒன்றும் பேசாதே என்று கண்களால்சொல்லிவிட்டு வந்தாள்..
---------------------------------------------------------------------------­-----------------------------------------------------------------
சிவாவிடம் சொல்லி வேலாயியின் கணவர் வர ஏற்பாடு செய்யப்படுகிறது...
ஒவ்வோரு நாளும் மெதுவாக எதிர்பார்ப்புகளை அதிகரித்து நகர்கிறது...
அருமையான புத்தகங்களையும் , சுலோகங்களையும் வேலாயி அருகில் இருந்து தினமும் வாசிக்கிறாள்... 36 வாரம் கடந்ததும் வந்து அட்மிட் செய்ய சொல்கிறார்கள்.. படபடப்பாயிருக்கு... நார்மல் டெலிவரி ஆகணும் என்று வேண்டிக்கொள்கிறாள்..
" கடவுளே, எல்லா கோவிலுக்கும் வந்து அபிஷேகம் பண்ணுகிறேன்.. குழந்தைகள் நல்லபடியாக பிறக்கணும்.., ஒரு குழந்தையாவது, .. இல்லாவிட்டாலும், பரவாயில்லை, வேலாயிக்கு ஒண்ணும் ஆகக்கூடாது..."
மனம் குழம்பித்தான் போகுது... தீபாவின் பதட்டம்தான் வீட்டிலுள்ளவருக்கு பயம் தருகிறது...
---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------­-----------------
வேலாயியின் கணவர் நேரே மருத்துவமனைக்கு செல்கிறார் வேலாயியை பார்க்க.. ஒரு அழகான சிறுவன் அறை எண் 402, முன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.. அவனிடம்,
" தம்பி , இங்க, வேலாயின்னு ஒரு பேஷண்ட்.. இந்த அறை தானே?.."
" ஆமா.. நீங்க... ய...ப்பாஆஆஆஆஆ..நீயா...?"
தன் மகனை தனக்கே அடையாளம் தெரியாதவாறு மாறியுள்ளானே?..என்று ஆச்சர்யத்தில் வேலாயியிடம் சென்று சந்தோஷப்படுகிறார்...
---------------------------------------------------------------------------­---------------------
வேலாயிக்கு எந்த நேரமும் பிரசவம் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் விசேஷ மருத்துவர்கள், ஆனால் கர்ப்பவாசல் இன்னும் தயாரில்லை..( மன்னிக்க)
சீக்கிரம் நடந்தால்,. குழந்தைக்கு நல்லது..என்று பேசிக்கொள்கிறார்கள்.., இல்லாவிட்டல் குழந்தைக்கு போதுமான நீர் இருக்காது , என்றும், அறுவை சிகிச்சை நலம் என்றும் யோசிக்கிறார்கள்...ஆனாலும் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்..முக்கியமாக அறுவை சிகிச்சை அவள் தாங்குவாளா என்று சந்தேகப்படுகிறார்கள்..
_______________________________________________
மருத்துவமனைக்கு செல்லுமுன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீபா கோவிலுக்கு சென்றுவிட, வேலாயியை வழக்கம் போல் காலையில் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கு இருதய துடிப்பு கம்மியாக இருப்பதுபோல் சந்தேகப்பட,
வேலாயி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கிறாள்.. சிவாவுக்கு போன் வர, அவன் தீபாவை தொடர்பு கொண்டால்,
" சிறிது நேரத்துக்குபின் டயல் செய்யவும்..." மீண்டும் மீண்டும்...
என்ன செய்வதென்றே தெரியவில்லை... நேரமாகிக்கொண்டிருக்கிறது...
தொடர்ந்து போன் வர சிவாவும் சரியென்று சொல்லிவிட்டான்..
கோவிலிருந்து வந்த தீபா கேள்விப்பட்டதும் ஆத்திரமும் அதிர்ச்சியுமடைகிறாள்...
" ஏன் என்னைக்கேட்காமல் சரி என்றீர்கள்?..அவள் தாங்க மாட்டளே.. ஏன் அவசரம்..." அழுகிறாள்..
" உங்களுக்கெல்லாம் குழந்தைதான் முக்கியம்... எனக்கு வேலாயி வேண்டும்... "
" அவளுக்கேதாவது என்றால், ....................." விம்முகின்றாள்..
மாமியார் வந்து திட்டுகிறார்..
" ஏன் இப்ப என்ன நடந்துச்சுன்னு பயப்படுற.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. கடவுள் கைவிடமாட்டார்னு நம்பு.."
திட்டினாலும் ஆறுதலாயிருக்கு...
" அய்யோ, என்னை புரிஞ்சுக்கோங்க.. வேலாயிக்கு ஒண்ணுன்னா நான் தாங்கமாட்டேன்..சிவா நீங்க ஏன் சம்மதிச்சீங்க... " பைத்தியம் மாதிரி பயந்து நிலைகுலைகிறாள்..சிவாவும் பயப்படுகிறான்..
அவளை உடனே அப்படியே அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைவதற்குள்..................................
***********************************************தொடரும்...******************

No comments: