Monday, August 29, 2011

ஏன் சென்றாய் செங்கொடி?.

செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத்ததை தந்ததா?.சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது இது..அவரவரின் கொந்தளிப்பான, உணர்ச்சிகர சூழல் முக்கிய காரணம்..இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்களுக்கு தலைமை வழிநடத்தியிருக்கவேண்டியவர்கள் நீங்கள்..?. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பதார்க்கு.ஒருபக்கம் மக்கள் சக்தியை எளிதாக எடைபோட்டுவிட்டாரோ என தோணுது.. கொள்கையுடையோர் அவசரப்படலாமா?

லட்சம் பேரை தம் பின்னால் அணிதிரட்டக்கூடிய வலிமையுடையோர், பல்லாயிரம் தலைவர்களை உருவாக்கக்கூடியோர் நீங்கள்.. எப்போது மரணத்துக்கு அஞ்சாதவராக இருக்க முடியுதோ, அப்போது உலகம் உங்கள் கையிலல்லாவா?.. சாதித்திருக்கவேண்டாமா பல வழிகளில்..?. உங்கள் உணர்வுகளின் கொந்தளிப்பு பலரை அடைய செய்திருக்கணுமே தவிர, அவசரப்பட்டீரே..சாவை துச்சமென நினைப்போர் புதிதாக அல்லவா பிறக்கின்றனர் மக்களின் தலைமையாக..?

இந்த தூக்குதண்டனை பிரச்னை மட்டுமே நம் முன்னால் இருப்பதல்ல. பல சமூக பிரச்னைகள் , வாழ்வாதார பிரச்னைகள் நம் முன்னால் ஆயிரக்கணக்கில் உள்ளது.. பல அப்பாவி மக்களுக்கு இன்னும் அதுபற்றி தெரியக்கூட இல்லை.. அப்படியிருக்கையில் இப்படி உங்களைப்போன்ற கொள்கையுடையோர் பொசுக் னு முடிவெடுத்தால்?.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய.. அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்புகள் எக்கச்சக்கம் இங்கே.. இதே போல தொடர்ந்தால் நல்லவர் இல்லாத இடங்களில் நரிகளின் நாட்டாமைகள் தொடங்கிவிடும்.. கொள்கையுடையோரை இழப்பது லட்சம்பேரை இழப்பதற்கு சமம் என புரிந்துகொள்ளணும்..


கொள்கையுடையோர் உயிர் அவருக்கு மட்டுமானதல்ல.. எத்தனை பேருக்கு துணிவை தந்திருக்கலாம் நீங்கள்.. ?.. எத்தனை பேரை போராட வைத்திருக்கலாம் உங்கள் சொற்கள்..?.. உங்கள் மரணம் வலி தருது..சரி/தவறு என்ற விமர்சனமில்லை.. சகோதரி ஐரோம் சர்மிளா தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறாரே..ஏன்?.. ஏதிரிகளுக்கு உங்களைப்போன்ற கொள்கையுடையோரின் மரணம் வரவே..

மக்களுக்காக சிந்திக்கக்கூடியோராக பிறக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..இத்தகையோரின் உயிர் சாதாரண மக்களின் உயிரை ஒப்பிடுகையில் நிச்சயம் விலைமதிப்பில்லாதது.. உங்களுக்கான போராட்டத்தை செய்துவிட்டே சென்றுள்ளீர்கள்.. இருப்பினும் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பீர்கள் என்ற ரணம்.. எத்தனை பேரில் மாற்றம் கொண்டு வந்திருப்பீர்கள்?..அவை மிகப்பெரிய இழப்பல்லவா?.. மனதால் ஏற்கனவே மரணித்தோர் பலருண்டு இங்கே.. இருப்பினும் இறுதி மூச்சுவரை கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.. வெளிச்சத்துக்கு வராமல்..

விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே!

மூவருக்காக இங்கே மூன்று பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனரே..தன்னையே வருத்திக்கொண்டிருக்கும் அநத ச்கோதரிகளின் உணர்வுகள் வலிமையற்று போய்விடக்கூடாது.. அவையும் தற்கொலைக்கு ஈடானதுதான்.. உணவளிப்பது வயற்றுக்கு மட்டுமா?.. இல்லையே?.. எல்லாம் செயலற்று போகுமே அவர்களுக்கு?.. நிமிடங்கள் போகப்போக வலிகள் கூடுமே சகோதரி?..நொடிப்பொழுதில் உயிர் விடுவதை விட ரணமல்லவா இது?..வணங்குகின்றேன் அச்சகோதரிகளை..
செழுமையாக வளர்ந்து இன்னும் பலரை வளரச்செய்யவேண்டிய கொடி , இன்று கருகியதேன்..

உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம்.
தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே..

இனியும் இதுபோல நடக்காமல் பார்ப்பதும் நம் அனைவரின் கடமையே..

தோல்வி நிலையென நினைத்தால்?.

Each victim of suicide gives his act a personal stamp which expresses his temperament, the special conditions in which he is involved, and which, consequently, cannot be explained by the social and general causes of the phenomenon.
Emile Durkheim


படம்: கூகுள்
Link

Monday, August 22, 2011

வலிமையை கற்பது?மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..

( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்
Monday, July 4, 2011

மிஸ் யுவகிருஷ்ணா- புதிய தலைமுறை ?.:)யுவகிருஷ்ணாவின் அராஜக , வக்கிரமான பேச்சு யாவரும் அறிந்ததே..

பல முறை தொடர்ந்து எரிச்சலூட்டி வந்தார் பஸ் ல்.

நானும் இவன் தரம் அறிந்து கண்டுகொள்ளாமலே சென்றேன்..

இவனைப்போன்றவரிடம் மோதுவது வெட்டி வேலை நேர விரயம் மட்டுமே. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியா கோழைகள்..

சமீபத்தில் மீண்டும் மீண்டும் வம்பு செய்ததோடு ஏழர யின் விளக்கம் கேட்டமையால் பதிலளிக்க வேண்டி வந்தது இந்த சாருவின் ஆதரவாளரிடம்..

அவன் பேச ஆரம்பித்த விதத்தை பாருங்கள்..அப்ப புரியும் நான் ஏன் இவனை மிஸ் என தலைப்பில் போட்டேன் என..:)

என்னை ஆணாக கருதுவது எனக்கு இழிவல்ல. பெருமையே..:). இந்திரா காந்தி சொன்னது போல்..

------------------


யுவ கிருஷ்ணா - மிஸ்டர் சாந்தி!

எனக்கு பொம்பளைகளை திட்டுவதில் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.

எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...
6/௩0

jmm s - ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.//

ரொம்ப நன்றி..

உங்களை பார்த்தாலும் ஆண் மாதிரியே தெரியலை..

:))
Edit6/௩0

யுவ கிருஷ்ணா - அப்படிங்களா சார்? :-) உற்றுப் பாருங்க என் மூக்குக்கு கீழே மீசை தெரியும்... உங்க லெவலுக்கு எனக்கு மீசை வளரலேன்னாலும், ஏதோ கொஞ்சம் வளர்ந்திருக்கு....6/௩0

யுவ கிருஷ்ணா - //எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...//

இந்த கேள்விக்கு துப்பிருந்தா விடை சொல்லுங்க மிஸ்டர் சாந்தி....

அப்படி செருப்படி கொடுக்கணும்னு நெனைச்சா, நேர்லே வாங்க. நானும் கூட பாட்டா ஷூ போட்டிருக்கேன். ஒருத்தரை ஒருத்தர் ஜோட்டாலே அடிச்சி விளையாடிக்கலாம்

:-)
6/30 (edited 6/30)

jmm s - மொக்கைக்கு எனக்கு நேரமில்லை

--------------------

இவனோடு இவன் தரத்துக்கு பேச மனமில்லாமல் விலகினால் மீண்டும் அசிங்கமா பேசினான்..


செருப்பால் அடிப்பேன் என சொன்னது அவன்தான். ஜாக்கி கு குழந்தை பிறந்த போது நான் சொன்ன விஷயம் இது

நான் போட்ட கமெண்ட் இது கீழே..

----------------


jmm s - இனியாவது நிர்வாணப்படத்தை பற்றி பேசும்போதும் போடும்போதும் தன் பெண் குழந்தை முகம் நியாபகத்துக்கு வரட்டும்..

நாட்டிலுள்ள மற்ற பெண் குழந்தைகளும் காப்பாற்றப்படட்டும்...

பெண் குழந்தை பெறுவது அதிர்ஷ்டம்.. வாழ்த்துகள் ஆபாச படம் போடாத தந்தைக்கு-------

ஆக குழந்தை பற்றி பாராட்டியேயுள்ளேன்..

ஆனால் இவன் அதை திரித்து பஸ் விட்டதோடு நான் குழந்தையை திட்டியதாய் பொய் பரப்பினான்..அவன் நோக்கம் என்னை பற்றி அவதூறு பரப்புவது . அதை தொடர்ந்து செய்கிறான்..

----------------
யுவ கிருஷ்ணா • 1:36 PM • Buzz

சமீபத்தில் ஒரு நண்பருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால், ஒரே ஒரு ஜென்மம் மட்டும் இந்த மகிழ்ச்சியை பொறுக்க மாட்டாது, குழந்தை பெற்ற நண்பர் குறித்த மோசமான கமெண்டுகளை எழுதி தனக்குதானே மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.


கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இணையத்தில் சகஜம். ஆயினும் இது மாதிரியான சந்தர்ப்பங்களையும் தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்வுக்கு தீனியாக்கி அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஜென்மங்கள் செருப்பால் அடிக்கப்பட வேண்டியவர்கள்.


--------------

.. ஜாக்கி சேகர் ரோட்டில் போகும் பெண்களை வர்ணித்து போடுவது மிக மிக அசிங்கமான செயலும் . ஆபாசமானதும்.. சின்ன குழந்தையை கூட விமர்சிக்காமல் விட்டதில்லை ஜாக்கி...

ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்.. பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே .. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------------

மேலே வர்ணிக்கப்பட்டுள்ள பெண் நீங்களாகவோ, இல்லை உங்க வீட்டு பெண்ணாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள்.. ஜாக்கியை பாராட்டுவீர்களா?.

உங்க வீட்டு குழந்தையை பிராய்லர் கோழிக்கு ஒப்பீடு செய்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்..?


நான் போட்ட கமெண்ட் ஆபாசமா இல்லை இவர் பதிவும் வழிநடத்தலும் ஆபாசமா என..?

இதை பதிவுலகில் தொடர விடலாமா ?..யோசித்துக்கொள்ளுங்கள்..


நான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது தட்டிக்கேட்கத்தான் போகிறார்கள்..


நான் மட்டும் அறிவுரை சொல்லவில்லை என்பதையும் கவனிக்க..பலருமே..

ஸ்ரீராம் பதிவிடும்போது


ஜாக்கி.. ஒரு பெண்ணுக்கு தகப்பனாயிட்டே.. இனிமேலாவது அடங்குவியா நீயீ????

னு தான் போட்டார்.. சில பின்னூட்டங்களும் அதே போல் வந்ததா இல்லையா னு ஸ்ரீராமிடம் கேட்டுக்கொள்ளவும்..-----------------

யுவ கிருஷ்ணா - மொக்கை சாந்தி அவர்களே!

ஜாக்கிசேகரின் குழந்தையை திட்டியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இதற்கு செருப்படியா?

யுவ கிருஷ்ணா - jmm s என்கிற பைத்தியக்கார சாந்தி!

தில்லு இருந்தால் சென்னைக்கு வா. என்னிடம் ’பாட்டா’ ஷூ இருக்கிறது. நீ அடிப்பதற்கு முன்னால் நான் அடிக்கிறேன் செருப்பால் உன்னை.

யுவ கிருஷ்ணா - தோழர!

ஒரு பெண்மணி மனம் பிறழ்ந்து போகிற வருகிறவனை எல்லாம் செருப்பால் அடிப்பேன் என்று உளறிக் கொண்டிருந்தால், பெண் என்ற ஒரே காரணத்துக்காக சும்மா இருக்க முடியாது.

இந்த மெண்டலுக்கு இன்றே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

யுவ கிருஷ்ணா - லூசு சாந்தி!

அவன் இவன்னு ஏக வசனத்துலே பேசினா, அவ இவன்னு பேசுவேன்.

பொதுவெளியில் பேசுறோம்னு கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏழு கழுதை வயசாவுதுல்லே?

என்னை விட உனக்கு பதினைஞ்சி வயசு அதிகம் இருக்குமில்லே? சின்னப்பய கிட்டே வந்து செருப்படி படப்போறேன்னு சொல்றே? வெட்கமாயில்லே... த்தூ.. என்ன ஜென்மமோ...


யுவ கிருஷ்ணா - அடிங்... அறிவில்லே முண்டம்..


-----
மீண்டும் எப்படி திரிக்கிறான் பாருங்கள்..

குழந்தையை எங்கேயாவது திட்டினேனா?..

இவனுடைய மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவோம்னு நினைத்தான் போல.

என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இப்படியே பேசி வருகிறான்.. வேணுமென்றே இடைஞ்சலும்..

இதைக்கூட எனக்கு பதிவா போட விருப்பமில்லாமலே இருந்தது.. நண்பர்கள் சிலர் இவனை பற்றி கண்டிப்பாக அறிவிக்கணும் என்பதால் பகிர்கிறேன்..
------------------

jmm s - அறிவில்லே முண்டம்..//

உன் அம்மாவை சொல்றியா?..:))

சரியுவ கிருஷ்ணா - இந்த பைத்தியக்கார முண்டம் பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மாவையெல்லாம் இழுக்கிற்து .

-------------------

கவனித்தீர்களா , அவன் கேவலமான பேச்சை அவனிடமே திருப்பியதும் அவனுக்கு வரும் கோபத்தை..?

அதாவது இவனைப்போன்றவர் என்ன வேணா ரவுடித்தனமா பேசலாம்.. ஆனால் அதையே நாம் அவர் குடும்ப உறுப்பினரிடம் திருப்பினால் கோபம் வருது..

இவனெல்லாம் ஒரு பத்திரிக்கையாளனாம்.. உடன்பிறப்பாம்.. அந்த பத்திரிக்கையையே கேவலப்படுத்தும் விதமாய் இருக்கு இவன் பேச்சு.. ( இவனலாயே திமுக மீது எரிச்சலடைந்தோர் உண்டு )

இதையெல்லாம் அந்த பத்திரிக்கை அலுவலுக்கு அனுப்பி வைத்தால்?..

இது மட்டும்அல்ல இன்னும் நிறைய பேசி இருக்கிறான்.. பஸ் ல். நான் கண்டுகொள்வதில்லை..

செருப்பால் அடிப்பது என்ன அத்தனை எளிதா என்ன தமிழ்நாட்டில்?.. ஏன் இந்த வெத்து சவடால்.?..:)))

இவன் அடித்தால் இவன் வீட்டிலுள்ளவர்களை சும்மா விடுவாங்களா என்ன , அடி வாங்கியவர்கள்..?..

பதிவுலகம் வன்மம் வளர்க்கும் இடமா?..

இதை அவன் அலுவலகம் அனுப்பினால் என்னாகும்?..( ஏற்கனவே ஒருவர் அதை செய்ததாய் தகவலுண்டு )


ஆனால் இதுவே இறுதியாக இருக்கட்டும்.. இது மன்னிப்பும் அவனுக்கு..

(Abraham Lincoln"I have always found that mercy bears richer fruits than strict justice." )


யாராலும் சவடால் விட முடியும். வன்மம் வளர்க்க முடியும் .. ஆனால் அது தேவையற்றது என்றே விலகி இருக்கிறார்கள்..

வன்முறை என்பது வீரமல்ல..கோழைத்தனம்..


ஏன் அமைதியாக போவது?..என இந்த விடீயோவை க்ளிக் செய்து பாருங்கள்..

ஜெயம் கொண்டான் பட க்ளைமேக்ஸ்

இதுதான் அனைவருக்குமான பதில்..


இது போன்ற பதிவை போட்டமைக்கு வருந்துகிறேன்.. நட்புகளிடம் என் மன்னிப்பும்.. வன்முறையாளர்களை அம்பலப்படுத்தவே இது..

சில கருத்துகளை நான் சொன்னால் அதை கருத்தால் எதிர்கொள்ள பழகணும்..

சிலருக்கு பயம்.. எங்கே தன்னுடைய இடம் பறிக்கப்படுமோ என.. அதனாலேயே சிலரை பழித்து ஒதுக்குவது.. முக்கியமா பெண்கள் பயந்து ஓடுவார்கள் என்ற எண்ணம்..

இதையெல்லாம் தாண்ட பழகிக்கொண்டார்கள் பெண்கள்.. இனிமேலும் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் பலிக்காது..

மதார் என்ற பெண்ணும் , முகிலனும் இத்தகையோரொடு சேர்ந்து பேசிய மிக ஆபாசமான வார்த்தைகள் நேரமிருப்பின் தனிப்பதிவாக வரும்..

இவையெல்லாம் பதியப்படணும்.. வன்முறை எப்படி வளருகிறது , ஒரு கூட்டத்தினரின் சுயநலத்தால் வளர்த்து எடுக்கப்படுகிறது என்பதை புரியணும்...

"நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும் "


தொடரும்....

(The Nagpur bench of the Bombay High Court has held that abusing or using filthy language to annoy someone can be an offence, even if it does not take place in a public place. The accused in this case had been convicted by a lower court under Section 294 (obscene acts and songs) of the Indian Penal Code.

According to this section, “whoever, to the annoyance of others... sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment which may extend to three months.

http://www.hindustantimes.com/Verbal-abuse-need-not-be-in-public-place-to-attract-punishment/Article1-526477.அச்ப்க்ஸ் )


..

Friday, June 17, 2011

குழந்தைகளா அடிமைகளா , முதலீடுகளா ?..


வாழ்க்கை எனப்து எதற்கு?.. மிக சந்தோஷமாக வாழணும் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியாக வாழணும்..

முடியுமா?.. நிச்சயமாக முடியும்.?.

எப்படி.?.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அளவோடு வைத்துக்கொண்டோமானால்..

ஆனால் என்ன ஆகியுள்ளது?.. அளவுகோள்களே மாறிவிட்டது...

ஆசை பேராசையாக மாறியதை அறியவில்லை..

எதிர்பார்ப்புகள் திணிப்புகளாக மாறியதையும் அறியவில்லை..

சமீபத்தில் படித்திருப்பீர்கள் சரண்யா பார்த்தசாரதி பற்றி செய்திகளில்..

ஒரு காதலை ஏற்க முடியாமல் மருமகனை கொலை செய்த பெண்ணின் பெற்றோர்கள்..

இத்தனைக்கும் பெண்ணின் தாய் ஒரு ஆசிரியை..நம்பவே முடியாத செயல்..

தான் கொலை செய்வோம் என என்ணியிருப்பார்களா?..நிச்சயம் மாட்டார்கள்..

நல்ல ஒரு குடும்பமாகத்தான் இருந்திருக்கும்.. கஷ்டப்பட்டே குழந்தைகளை வளர்த்திருப்பார்கள்..

கொஞ்சி , கெஞ்சி நம்மைப்போலவே வளர்த்திருப்பார்கள்..

பணம் கொடுத்தே மெடிக்கல் சீட் வாங்கியிருப்பார்கள்.. குழந்தை படிக்க எல்லா உதவியும் தியாகமும் செய்திருப்பார்கள்..

ஆனால் எங்கே தவறு நடந்தது?..

அன்பு வைப்பதாக சொல்லி நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தை புகுத்துவதை நாமே அறிவதில்லைதான் சில சமயம்..

ஏனெனில் சுற்றமும் சூழலும் , நமக்கு அப்படி அமைகிறது.,.

மெடிக்கலோ , பொறியியலோ படித்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும் என எண்ண வைக்கப்படுகிறோம்..

இப்படி விழுந்து விழுந்து படிக்கும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துள்ளீர்களா.?


எல்லாத்துக்கும் டியூஷன், அல்லது சிறப்பு வகுப்புகள் என நேர இடைவெளி இல்லாமல் படும்பாடு..

இதில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அன்பா ஆதரவா உட்கார்ந்து பேசி குழந்தைகளிடம் மனம் திறந்து பேசக்கூட நேரமில்லை
இந்த வேகமான உலகில்..அதோடு நம் விருப்பப்படி பாடம் எடுத்து படிக்கும்போது வேண்டா வெறுப்பாகவும், பெற்றோரை எதிர்த்து பேச முடியாத மன அழுத்தமும்..

மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..

படிக்கவேண்டிய வயதில் படிக்கணும்தான்.. மறுப்பில்லை.. ஆனால் அதுவே திணிப்பாக இருந்திடக்கூடாது..

இதில் மட்டுமல்ல , மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் சிந்திக்க விடாமல்..


இத்தகைய குழந்தைகள் வெளியில் பாசம் கிடைத்தால் அதையே காதல் என நினைத்து தவறிவிட வாய்ப்புகள் அதிகம்..

வருகிற சினிமா எல்லாமே காதலைத்தான் சொல்கிறது.. தொலைக்காட்சியிலும் அதே..

பருவ வயது வந்ததும் காதல் வயப்படலாம் என நாம் அறியாததா?.. அதை மறைத்துத்தான் வைக்க இயலுமா?

அடிமைகளாக வளர்க்கப்படும் குழந்தைகள் , தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் வெளியே கிடைக்கும் பட்சத்தில் அதையே பெரிதாக
எண்ணுவதில்லை வியப்பில்லை..

இதேதான் திருமணம் தாண்டிய உறவுகளிலுமே காண்கிறோம்..

அடிமைத்தனமும், அதிகாரமும் இருக்குமிடமெல்லாம் இதே போல நடைபெற வாய்ப்புண்டு.. இது ஒரு சமூக பிரச்னையாக பார்க்கப்படவேண்டிய
விஷயம்..வாலிப வயது வந்ததுமே பிள்ளைகளைன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்.. எரிச்சல் வரும் ஹார்மோன் மாற்றங்களால். நாம் சொல்வது எதுவுமே பிடிக்காது. நமக்கோ கோபம் வரும்.. நாம் நல்லதுதானே சொல்கிறோம் , இதுவரை நம் பேச்சை கேட்ட பிள்ளை நம்மை மதிக்கலையோ என்ற பயமும் ஈகோவும் நமக்கு..

கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டிய வயது.. சில குழந்தைகளுக்கு வீட்டை விட்டு தப்பிச்சா போதும் என்ற எண்ணம்.. ( வெளியே போய்
பார்த்தால்தான் தெரியும் வீட்டிலுள்ள சுகம் ) .

நாம் மட்டுமே வளர்க்கவில்லை குழந்தைகளை. புற சூழலுமே சேர்ந்துதான் அவர்களை நாலாபக்கமும் இழுக்கின்றது..

முரண்டு பிடிக்கும்போது விட்டுப்பிடித்தும் கண்டிப்பை கொஞ்சம் பொறுமையாகவும் எடுத்தாள வேண்டும்.

இங்கே சரண்யா விஷயத்தில் அவர் தன் காதலை சொன்னதும் அவசரம் அவசரமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ததாலேயே அவர்
உடனே திருமணம் செய்துள்ளார் பெற்றோர் சம்மதமின்றி..

இதே போல பெற்றோர் மிரட்டியதும் , பிளாக் மெயில் செய்ததும் , அவசரப்பட்டதுமாய் ஏகப்பட்ட கதைகளுண்டு..

ஏன் இந்த நிலைமை?..

ஆழுமைதான் காரணம்.. குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம்.. இது மிக தவறு..

என்னதான் நாம் பெற்றாலும் நம் குழந்தை என்றாலும் சொந்தம் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்கிறது..


இதை கலீல் ஜிப்ரான் மிக அழகாக சொல்கிறார் பாருங்கள்..


“Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you, and yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.

ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று அழுதபடி கண்ணீரில்.. அப்பாவோ சிறையில்..


சமீபத்தில் படித்திருப்போம் பஸ் விபத்து பற்றி.. அதில் திவ்யா என்ற பெண் நிச்சயதார்த்ததுக்காக சென்றவர்.. அந்த மகளையும் இழந்துவிட்டதே
அந்த குடும்பம்..


ஆனால் விபத்து என்றால் ஏற்கும் மனம் காதல் என்றால் கொலைவெறி வருவது ஏன்?.


ஏழை, பணக்காரன், சாதி, மதம் , இனம் என பல்வேறாக நம்மை நாமே பிரித்துக்கொண்டு கோழைகளாக வாழப்பழகியுள்ளோம்..

எது வந்தாலும் அதை ஒரு சேலஞ்சாக எடுத்து வாழப்பழகவில்லை.. அப்படி பழகியிருந்தால் இந்த வித்யாசங்களெல்லாம் எப்பவோ அழிந்து
போயிருக்குமே..


சக மனிதனை மனிதன் என்ற அளவுகோல் மட்டுமே கொண்டு நேசிக்க பழகியிருந்தா இத்தனை சுயநலமும் வெறித்தனமா பணம் சேர்க்கும் எண்ணமும் வந்திருக்காதே...

நானுமே திணிக்கப்பட்டே வளர்ந்தவள்தான்..( மதம் , சாதி, படிப்பு என ) .. இருப்பினும் இப்பதான் விபரங்கள் புரிய ஆரம்பித்தது..

என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்
எடுத்து சொல்வதுமே என் கடமை.. மற்றவை அவர்கள் பொறுப்பு..


லண்டனில் 16 வயதானதும் தனியே அனுப்பிடுவார்களாம் குழந்தைகள் பொறுப்பெடுக்க பழகிக்கொள்ள..அச்சமூகமும் அவர்களுக்கான
பாதுகாப்பையும் , பொறுப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.. பாலியல் குறித்த பயம் இல்லை.. ஒரே இடத்தில் ஆணும் பெண்ணுமாய் சேர்ந்தே
தங்குகின்றார்கள்.. இருவரின் பிரச்னைகளையும் புரிந்து கொள்கிறார்கள்.. சமாளிக்க பழகுகின்றார்கள்..

காமம் குறித்த தெளிவான பார்வையும் பாலியல் புரிதலும் இருக்கின்றது..

ஆனால் நமக்கோ ஆயுசுக்கும் குழந்தை என்றே கொஞ்சிக்கொண்டும் , அடிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்..அவர்களை சுயமாக சிந்திக்க
விடாமல்..வாழ்நாளெல்லாம் கைதியாக்கி சுமை சுமக்க வைத்து?..

நமக்கு பிடித்தமில்லாத காரியத்தை செய்துவிட்டு சிக்கலில் மாட்டினால் , சில நேரம் தோல்வி அடையவும் வாய்ப்பு கொடுங்கள்.. அவர்கள்
அதிலிருந்து மீண்டு வரும்போது துணையாக , ஆறுதலாக இருங்கள்.. அப்படி வளர்க்கப்படும் குழந்தை எல்லா சிக்கலையும் சமாளிக்கும் ..

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் னு சும்மாவா சொன்னாங்க.. நம்மைவிட பல விஷயம் தெரியுது இக்கால குழந்தைகளுக்கு..

நாம் யாருமே தவறே செய்யாதவர்கள் இல்லையே.. தவறிலிருந்தே பல பாடங்களை கற்கிறோம்..

வாழ்நாள் முழுதும் இறுதி மூச்சுவரை கற்றுக்கொண்டே இருக்கிறோம்..நமக்கு எல்லாம் தெரியும் என்ற பிரமையிலிருந்து விடுபடுவோம்..

நாமுமே குழந்தைகள் தான் சில நேரம்..

நம்மிடம் இருக்க போவது சில வருடங்களே அவர்கள்,.. சிறகு முளைத்ததும் பறந்துவிடுவார்கள்.. இந்த குறுகிய காலத்தை இனிமையாக கழிப்போம்..


மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்..நீண்டு விட்டது பதிவு.. பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்..:)


இது தொடர்பான பதிவை படிக்க - http://www.vinavu.com/2011/06/14/chennai-murder/


(படம் : நன்றி கூகுள்.. அலுவல் வேளை பின்னூட்டம் தவிர்க்கவும்.. )Saturday, May 14, 2011

விடைகொடுத்தனுப்பியது விரும்பியபடி மீண்டு(ம்) வரவே.:
அன்புள்ள கலைஞருக்கு , தமிழக மக்கள் அன்போடு எழுதுவது ,

வணக்கம்..

பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினீர்கள்.. மறுப்பில்லை.. பணக்காரனுக்கு கிடைத்தாலுமே ஏழைக்கு கண்டிப்பாக கிடைக்கணும் என இலவச திட்டம் பல கொண்டுவந்தீர்கள் .. மறுப்பில்லை..108 நோய் சிகிச்சையும் குடிசையை மாற்றி வீடுகளும், பெண்களுக்கான சிறப்பு சலுகைகளும் கொண்டு வந்து எம் மனதில் நீங்கா இடம் பிடிக்க நினைத்தீர்கள் . மறுப்பேயில்லை..சென்னையை அழகுற மட்டுமல்ல , போக்குவரத்து வசதியோடும் , பல பூங்காக்களும் , நூலகமும், சட்டமன்ற கட்டிடமும் , தண்ணீர் வசதியும் , தொழில் வளர்ச்சியும், மெட்ரோ ரயில் திட்டமும் மிக நன்றுதான்.. மறுப்புண்டா.?

துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உழைப்பும் , கனிமொழியின் பங்கெடுப்பும், இருவரின் எளிமையும் கவர்ந்துள்ளதுதான். மறுக்கலாமோ.?.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாக மிகப்பெரிய ஊழல் இருந்துள்ளதே தலைவரே..?..!!!

ஒரு விவசாயி வயற்றில் அடித்து மற்றவருக்கு பசியாற்ற நினைத்தது ?..

மின் வெட்டினால் மக்களை அவஸ்தைப்பட வைத்தது..

மேலும் மதுரை என்றாலே அராஜகம் தானே நியாபகத்துக்கு வந்தது ?..

எல்லாவற்றுக்கும் மேலே ஈழத்தமிழர் துயர் துடைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது..?. தமிழினத்தலைவர் மேலுள்ள நம்பிக்கையே போனதே..

இதுதான் பெரியார் வழி வந்த திராவிடமா?.. அசிங்கப்படுத்திவிட்டதே பெரியாரையும் அண்ணாவையும்..

குடும்ப ஆட்சி என ஆளாளுக்கு வாய்ப்பினை பிரித்துக்கொடுத்து தமிழகத்தில் தலை நிமிர்ந்தல்லவா நின்றிருக்கணும் நீங்களும் உங்கள் குடும்பமும்..அதைவிடுத்து தமிழகத்தையே கைக்குள் போடுவது போலல்லவா எல்லா துறையிலேயும் உங்க குடும்ப ஆட்சி சகிக்க முடியாமல் ?..

தமிழக மக்களின் பொறுமையை சகிப்புத்தன்மையை தவறாக நினைத்துவிட்டீர்கள் தலைவரே..

எத்தனை வெறுப்பு இருந்தால் எம்மால் விரும்பாத இன்னொரு அராஜக தலைமைக்கட்சிக்கு நாங்கள் ஓட்டுப்போட விதிக்கப்பட்டோம்?..வேறு வழியில்லாமல்தானே.?.. அந்த நிலைமைக்கு எம்மை தள்ளலாமா தலைவரே.?.

இன்னமும் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.. மதுரை அராஜகம் , ஊழல் , குடும்ப ஆட்சி இன்னும் பலவற்றை சரிபடுத்தி திரு.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடத்த முடியும் என்று..

அடுத்த முறை வரும்போது எவ்வித இலவசமும் இல்லாமலேயே மக்கள் உங்களை தேர்ந்தெடுக்குமளவுக்கு கட்சி முன்னேறியிருக்கணும் கட்டுப்பாட்டோடு, கண்ணியத்தோடு, மக்கள் சேவையே முக்கியம் என்ற கடமையுணர்ச்சியோடு, என்ற ஆவலோடு இப்போதைக்கு விடை கொடுத்துள்ளோம்..

நாங்கள் ஏழைகள் தலைவரே. ஏற்கனவே அம்மையார் வீட்டு ஆடம்பர திருமணத்துக்கு பாடம் கற்பித்தோமே மறந்தீர்களா?..

அதே தானே மதுரையில் உங்கள் குடும்ப திருமணத்திலும், மருத்துவர் ராம்தாஸ் அவர்கள் இல்லத்திலும் நடந்ததாக தொலைக்காட்சியில் பெருமைப்பட்டுக்கொண்டது?..

எமக்கு எளிமையான தலைவர்கள் திரு,காமராஜ் போல , திரு.நல்லக்கண்ணு போல தேவை.. . நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம் என ஒருபோதும் சொல்லவில்லை...ஆனால் அதை உங்கள் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்.. தொலைக்காட்சியில் போட்டு கிட்னி கொடுத்து கடனடைத்த விவசாயியான நாங்களெல்லாம் வயிறு எரியும்படி செய்யணுமா?..யோசிக்கத்தான் சொல்கிறோம் தலைவரே..

பெரியார் தம் சொத்தை இழந்து மக்களுக்கு சேவை செய்ய வந்தார்.. அவர் வழி வந்ததாக சொல்லும் கட்சிகள் அதுக்கு நேர் மாறாக...?????...

எத்தனையோ பேர் தங்கள் உயிரைக் கொடுத்து, கல்வியை பறி கொடுத்து, உணர்வுகளை ஊட்டி வளர்த்த கட்சியல்லவா திராவிடக்கட்சி .....
மிக வருத்தமாக இருக்கிறது .. ( நன்றி - நட்பின் வரிகள் )

மொத்தத்தில் ஆட்சி மாறியதில் எங்களுக்கு பெரிதாக மகிழ்ச்சியாக எல்லாம் இல்லை.. :(


கடந்த ஆண்டுகளில் மக்களுக்காக செய்த நல்ல பல திட்டங்களுக்கு மனதில் நன்றியுடனுமே...


நன்றி ,

தமிழக மக்கள்..
படம்: கூகுள் நன்றி..
.

Sunday, May 1, 2011

மே தினம்


அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
குற்றம் குறை சொல்வதுமுனக்கு அழகல்ல...


பணக்கூலிபெற்றால் தொழிலாளிவர்க்கமாம்
பத்துதேய்ப்பவள் பட்டியலில் இல்லையாம்.:(

செவிலியரென்றால் ஊதியம் மரியாதை,
செத்துமடியும்வரை முடிவில்லாத வதை?..

பாட்டிலோடு ஓய்வுக்கு தேவை ஒரு டாஸ்மாக்
பாலியல் தொழிலாளி உன் தேவை ஒரு மாஸ்க்..

குடும்பத்துக்கு உழைக்கும் பெண்ணே உனக்கும்
குடிமக்கள் துயர்நீக்க உழைக்குமனைவருக்கும்


எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.
படம்: நன்றி கூகுள்..

.

Wednesday, April 27, 2011

ஏழை என்ற இளக்காரம்?.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-school-urges-parents-to-protest-against-RTE/articleshow/8085252.cms

மேலே உள்ள சுட்டியில் ஏழைகள் வசதியான பள்ளியில் ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கும் உரிமையை மறுக்க ஒரு பள்ளி அழைப்பதாக செய்தி..

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School.


ஏழைகள் எல்லாரும் மொத்தமா நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தா என்னய்யா பண்ணுவீங்க?.. முட்டாள்கள்.

ஏழை என்றால் ஒழுக்கமில்லைனு உங்களுக்கு யார் சொல்லித்தந்தா.?

In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

ஒழுக்கத்த சொல்லித்தரவேண்டிய உங்ககிட்டயே ஒழுக்கமில்லையே..

வன்மையாக கண்டிக்கத்தக்கது..

எத்தனை துணிவு..?.. இதை சொல்ல?..

டிசிப்பிளீன் னா எது?,.. இந்த இங்கிலிபீசுல கெட்ட வார்த்தை பேசிட்டு அது சரின்னு அர்த்தம் சொல்ற கேவலமா?..

இல்ல பெரிய படிப்பு படிச்சுட்டு வொயிட்காலர் பிராடுதனம் , லாபியிங் பணறதா?..
குடிச்சுட்டு வேகமா கார் ஓட்டி பாதசாரிகளை கொல்வதா?.. ஈவ் டீஸிங் செய்து தற்கொலைக்கு தூண்டுவதா?.. எழுத்தில் விபச்சாரம் செய்வதா?..ரேகிங் ல் மாணவனை துண்டு துண்டாக வெட்டுவதா?.. நீதிக்கு 15 வருடம் காத்திருக்க வைப்பதா?.. எதை சொல்லுவோம் டிசிப்ளின் என.?..ஆமா அது தெரியாதுதான் ஏழைகளுக்கு.

"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. //

குவாலிட்டியா?.. மாநில ரேங்க் எடுக்குது அரசு பள்ளிகள்..

(http://www.dinamalar.com/News_detail.asp?Id=19020, http://www.dinamalar.com/news_detail.asp?Id=215485 : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது,http://article.wn.com/view/WNAT7d5d8a4fa74cee7b251d08ec41ba41d9/ தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post.html ).

இந்த மாணவ/மாணவிகள் ஆசிரியர்கள் கேள்விப்பட்டால் எத்தனை வருத்தம் வரும்.. இதைவிட கேவலப்படுத்த முடியுமா இவர்கள் உழைப்பை..???

Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

குட் ஸ்கூல் கு அர்த்தம்/அளவுகோல் என்னென்ன?.. காமிராவில் சக மாணவியை படம் பிடித்து இணையத்தில் போடும் பிள்ளைகள் படிக்கும் பள்ளியா?..போதை மருந்துக்கு அடிமையாகும் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ.?.

இதை சொல்பவர் வீட்டில் சமையல்காரர், தோட்டக்காரர் , ஓட்டுனர், இவர்களெல்லாம் ஒழுக்கமற்றவர்களா?.. அப்படி இருந்தால் இவர்களால் இன்று இப்படி பேசமுடியுமா?..

கல்வி என்பது என்ன?..

அறிவியலும், பூகோளமும் , பொருளாதாரம் பற்றி படிப்பது மட்டுமா?.. வாழ்வில் பணம் சம்பாதித்து வெற்றி பெற்று பின் மன அமைதியின்றி வாழ்நாளெல்லாம் மருத்துவரே கதி என அலைவதா?..

நல்ல கல்வி வாழ்க்கைக்கான பாடமாக இருக்கணும்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சக மனிதனை மனிதத்தன்மையோடு நேசிக்க, அவனும் சுவாசிக்க வழி வகுக்குமாறு கல்வி இருக்கணும்..

முரண்களை ஏற்றத்தாழ்வுகளை ஏற்கும் பக்குவம் சொல்லித்தருவதாக அல்லவா இருக்கணும்.?

சிறு வயதிலேயே பிரிவினையை போதிக்கும் கூடங்களை மூடிவிட்டால்தான் என்ன?..

ஜப்பானில் சுனாமி வந்தா பதறாம இருக்கிறார்கள்.. ஏன்.. எப்படி வந்தது அந்த பொறுமை..?. பெருந்தன்மை..?.. எப்படியும் மண்ணுக்குள் போக போறோம்.. இப்பவோ எப்பவோ.. என வாழ்நாள் முழுதும் குழந்தைப்பருவத்திலிருந்தே தயார்படுத்தப்படுகின்றனர்.. வாழும் நாட்களில் நம்மால் முடிந்ததை சக மனிதருக்கு செய்யணும் என்ற ஆவல் அங்கே பழக்கப்படுத்தப்படுகிறது..


நம்மூர் தமிழர்கள் மலேஷியாவில் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்வதை பார்த்தேன்.. மகிழ்ச்சியாக , மரியாதையாக நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.. நம் நாட்டில்.?.. எப்ப இந்த மாற்றம் வரும்.. யார் செய்யப்போகிறார்கள்..?

டிஸ்கவரி சேனலில் , காட்டில் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் பாம்பை தின்று ஓடையில் ஓடும் நீர் குடித்து, மரணித்த ஒட்டகக்கறியை பிச்சி எடுத்து தின்பதாக காண்பிக்கின்றார்கள்.. ஆக மரணிக்கும் சூழல் வந்தால் அடுத்தவனை கொன்றாவது நாம் பிழைக்கணும் எனும் என்ணமுள்ள அல்ப மனிதர்களே நாம்.. ஆனால் நாகரீகம் என்ற பேரில் பல விதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும், எண்ணம் இன்னும் கீழ்த்தரமான சக மனிதனை பிரித்து பார்க்கும் விதமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது..

எத்தனை மதம் வந்தாலும், நான் மதவாதி என சொல்லத்தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே தவிர அதிலுள்ள நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படாமலே இருப்பது விந்தைதான்..

யோகா , ஆன்மீக சொற்பொழிவெல்லாம் யார் கேட்கிறார்கள் னு கவனித்துள்ளீர்களா?.. ஏழைகளின் யோகா, ஆன்மீகம் எது?.. ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக வயல் வேலையோ மற்ற வேலையோ ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் வெள்லந்தி மனதோடு.?.. ஏனெனில் அடுத்தவனை கெடுத்து , போட்டுக்கொடுத்து வாழ்க்கையில் எப்படி முன்னேற என்ற எண்ணம் அவர்களை அரிப்பதில்லை.. தெளிவா இருக்காங்க.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் னு தெரியுது.. உயர்தர சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில்லை..ஆனாலும் எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களிடமல்லவா இருக்கிறது..

கிலோமீட்டர் கணக்கில் நடக்க முடியும்.,. ஆனா நாம் வீட்டுக்குள்ளேயே மெஷின் வாங்கி வைத்து அதே நடையை வெட்டியாக நடக்கிறோம்.. உலகத்தை அவர்கள் சுமக்கிறார்கள்.. நம்மைப்போன்றவர் நவீன உபகரணங்களால் பாரமாக்குகின்றோம்..மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.. அவர்களுக்கு அப்படியில்லை.. எச்சூழலிலும் வாழ முடியும்.. யார் பலசாலி?.. யாரிடமய்யா ஒழுக்கம் அதிகமிருக்குது.?..

பசிக்காக ஏழை திருடுகிறான்.. ஏழைப்பெண் பாலியல் தொழில் செய்கிறாள்.. படித்தவன் பெரிய அளவில் ஊழல் செய்கிறான்.. சீதாம்மா தன் எழுத்தில் சொன்னது போல சில பணக்காரன் ( அந்த காலத்திலேயே ) கார் கீயை மாற்றிக்கொள்கிறான்.. சினிமாவில் பெண்ணை போகப்பொருளாய் காண்பிப்பது , உடை குறைய குறைய அவளுக்கு பணத்தை புகழை அள்ளி அள்ளிக்கொடுப்பது மேல்தட்டு நாகரீகம்..???. அப்படித்தானே?.


ஏழைகளில் சேற்றில் கைவைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறை உண்ணும்போதும் எண்ணணும் என குழந்தைகளை பழக்குவோம்.. இனியாவது நாமும் திருந்துவோம், இதுவரை எப்படி இருந்தாலும்..

சுத்தப்படுத்தும் வேலையில் அவர்கள் இல்லையென்றால் நாடே நாறிவிடும் என்ற நியாபகமிருக்கட்டும் நமக்கு..

நல்லவர் கெட்டவர் எல்லா நாட்டிலும், இனத்திலும் , உண்டு.. அதுக்கு ஏழை என்ற அப்பத்தமான காரணம் சொல்லும் அருவருப்பை களைவோம்.. பணக்காரரிலும் நல்லவர் உண்டு.. பணக்காரர் எல்லாம் கெட்டவர் என ஏழை ஒதுக்குவதில்லையே..

*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..


போலித்தனத்திலிருந்து இனியாவது வெளிவந்து சக மனிதனை நேசித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் ஏதாவது செய்தோம் என்ற மன நிறைவோடு மரணிப்போம்.. அப்போது யோகம் , தியானம் ஆன்மீகம் எதுவும் நமக்கு தேவையிராது...

( செய்தி பார்த்த அவசரத்தில் எழுதியது.. தவறிருப்பின் மன்னிக்கவும்..தயவுசெய்து அலுவலிலிருந்து பின்னூட்டம் தவிர்ப்போம்.. நன்றிகள்.)

லேட்டஸ்ட் செய்தி -
படம் .: நன்றி கூகுள்..