Showing posts with label தாய்லாந்து. Show all posts
Showing posts with label தாய்லாந்து. Show all posts

Tuesday, October 26, 2010

திரில்லர் மலை /தீவு பயணம்.. - 4























































-------------------------------

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 330 கிமீ தூரம் அமைந்துள்ளது கோ சாங் ( KO CHANG) என்ற தீவு.. , திராட் ( TRAT ) மாநிலத்தில்..சாங் என்றால் யானை என்று அர்த்தம்..

கிட்டத்தட்ட 4 மணி நேர பயணம் , படகு பயணமும் சேர்த்து.. காரிலேயே படகில் தீவுக்கு செல்லும் வசதி உள்ளது..


கம்போடியாவின் பார்டர் அருகில் அமைந்துள்ள இத்தீவு தாய்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய தீவு புக்கெட் ( Phuket ) க்கு அடுத்ததாக..

வெள்ளி மணற்கடற்கறைகளும், நீர்வீழ்ச்சிகளும், பவளப்பாறைகளும் , மழைக்காடுகளும் பசுமை மாறாமல் காட்டுலாகாத்துறையினரால் மிக அருமையாக பராமர்ரிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாவுக்கு மிக சிறந்த இடம்..

கிட்டத்தட்ட 5000 குடியிருப்புகள்...

ஸ்நார்கெலிங் , ட்ரெக்கிங் , டைவிங் , விரும்பிகளுக்கு ஏதுவான இடம்..யானை மேலே ஆற்றில் பயணம் , காட்டு மரங்கள் பயணம் போன்ற அட்வென்சர் விளையாட்டுகளும்..

http://www.treetopadventurepark.com/

http://www.koh-chang.com/banchangthai/INDEX.HTM


http://www.kohchangbookingandinformation.com/Koh_Chang_elephant_ride_Trek_jungle.asp


திரில் விரும்புபவருக்கு சொர்க்கம்.. ( மலைப்பாதையில் வண்டி ஓட்டுவது மிக ரிஸ்கான விஷயம்.. அதுவும் நாங்க சென்றது இரவு நேரம் , மழையில் )

வழக்கம் போல இரவு நேரம் களை கட்டுது கடற்கரை..பாடல் ஆடலுடன்..

http://www.koh-chang.com/

தங்கும் விடுதிகளின் விலையும் அதிகமில்லை.. .. இணையம் மூலம் முன்பதிவு செய்யலாம்..

அனேக இடங்களில் ரோட்டின் மேலேயே ஆற்றின் நீர் ஓடுகிறது.. அங்கேயே இறங்கி குளிக்கவும் செய்கிறார்கள் .. அத்தனை தெளிவான சுத்தமான நீர்..

275 சதுர கி.மீ உள்ள தீவை சுற்றி பார்க்க மோட்டார் பைக்/சைக்கிள் வாடகைக்கும் எடுக்கலாம்..சில இடங்களில் காரின் சக்கரம் மண்ணில் சிக்கினால் தள்ளவும் வேண்டும்.. ஆங்காங்கே மலை உச்சியில் வியூ பாயிண்ட் வைத்துள்ளார்கள்.. மேகத்துக்கு நடுவே சாரலில் நனைந்தபடி சுற்றியுள்ள இடங்களை பார்ப்பது பிரம்மாண்டம்..கூடவே அதிகளவு கழிப்பிடங்களும் வசதியாக சுத்தமாக உள்ளது..

திரும்பும் வழியில் பத்தயாவில் தங்கி வரலாம்..

அடுத்து சந்தபுரி மாவட்டத்தில் உலக புகழ் மிக்க ஜெம் கற்கள் விற்பனை செய்யும் இடம்.. அனேக இந்தியர்கள் அங்குதான் வாங்குவதுண்டு...

http://www.khulsey.com/jewelry/gems_thailand.html

அங்கேதான் சுமார் 275 வருடம் பழமை வாய்ந்த தேவாலயம் Cathedral of the Immaculate Conception இருக்கின்றது..


http://thailand-cathedral-catholic.blogspot.com/2009/06/immaculate-conception-cathedral.html


அங்கேயே பல நீர்வீழ்ச்சிகளும் ..கட்டணம் வாங்கிக்கொண்டு பராமரிப்பதால் மிக பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளது.

http://www.naturethai.net/National-Park-in-Eastern-Thailand/Namtok-Phlio-National-Park.html

http://www.thailandbethere.com/Provinces/ENG/Files/Chanthaburi/EG_Phlio_Waterfall.htm


அடுத்த முக்கிய இடம் அலையாத்தி காடுகள் , அவை சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகள்...குங் க்ரபேன் பே ( Kung Krabean Bay )

http://www.google.co.th/images?hl=en&biw=1280&bih=834&gbv=2&tbs=isch:1&aq=f&aqi=&oq=&gs_rfai=&q=kung%20krabaen

http://iluvthailand.wordpress.com/2008/01/29/mangrove-forests-at-kung-krabaen-bay/



அடுத்து குழந்தைகளுக்கான விளையாடும் இடமான ஒயாசிஸ் சீ வேர்ல்ட்.. டால்பினோடு குளித்து விளையாடி மகிழலாம்..


http://www.laemsing.com/23_oasis_sea_world_laemsing.html


http://www.swimwithdolphinsthailand.com/




எல்லாம் பார்த்து முடித்து வருவதற்கும் , மகனின் பள்ளி தோழர்கள் கூடைப்பந்து போட்டிக்கு வர சொல்லி விடாப்பிடியான அழைப்புகள்

வரவும் சரியாக இருந்தது..என்னமோ இவர் இல்லைன்னா மேட்ச்சே விளையாட முடியாத மாதிரி.. பில்டப்..

உலக மஹா அன்பையும் , ஐஸ் ஸையும் பொழிந்து இன்னும் 1 மணி நேரத்தில் பாங்காக் செல்லணும் என பத்தயாவில் சொல்ல ,

முதன்முறையாக 140 வேகத்தில் வீடு வந்து சேர்ந்து , உடுப்பு , ஷூ எடுத்துக்கொண்டு பள்ளி சென்று விட்டால் ,

" பரவாயில்ல நல்லாத்தான் ஓட்டுறீங்க " னு ஆணாதிக்கத்தோடு பாராட்டிய மகனையும் , அவன் தோழர்களையும் என்ன சொல்ல..?..:)

( பசங்களை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் , " முந்துங்க , முந்துங்க, இன்னும் வேகம் , லேன் மாறுங்க ,

போன்ற பேச்சுகள் இலவசம்... அதுவும் இங்கு மலைப்பகுதியில் கரணம் தப்பினால் மரணம்தான்.. மிகப்பெரிய லாரிகளை/கண்டெய்னர்களை லாவகமாய் கூட ஓட்டும் பெண்கள் அதிகம் இங்கே,.. )


ஆக தாய்லாந்து வந்தால் த்ரில்லோடு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் ... முக்கியமா இம்மக்களின் இனிதான உபசரிப்பும் சேவையும்....


படம் : நன்றி கூகுள்..

------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவு குறித்து , தனிமடலில் பாராட்டிய , நன்றி கூறிய , பல தகவலகள் தந்தவர்களுக்கு என் நன்றிகள்..

பாராட்டுக்காக நான் எழுதவில்லை.. " சகோதரி நாங்க சொல்ல தயங்கியதை நீங்கள் எடுத்துறைத்தமைக்கு நன்றிகள் " போன்ற கடிதங்களுக்கு நன்றி..

அதே போல எதிர்ப்பார்த்த சில திட்டு பின்னூட்டங்களும் , கேள்விகளும்..

இதை விவாதமாக்கி என்னை நிரூபிக்க போட்ட பதிவல்ல , எதிர்வினை மட்டுமே என புரியவும்...

இங்கு யாரையும் திருத்த வேண்டியது என் வேலையல்ல..நமக்கு உபயோகமான/கற்றுக்கொள்ள முக்கிய வேலைகள் இதை விட நிறைய இருக்கிறது..

ஆனாலும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதை சொல்லிச்செல்வோம் அவ்வளவே...


ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் பலருக்கும் சமூகத்தின் மீதான அக்கறை கண்டு வியந்தேன்.. முக்கியமா இள வயதினர்... என் நன்றிகள்..


--------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, August 25, 2009

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும்..- பாகம் 2


ஒருவழியாக அந்த நண்பர் முன்னால் பைக்கில் செல்ல நாங்கள் பின்தொடர்ந்தோம்..

பின்தொடர்வது எம்புட்டு ரிஸ்க் அதுவும் ஹைவேயில்.?

அவர் பாட்டுக்கு சிக்னல் கிராஸ் பண்ணிவிட்டால் அவரை தேடோ தேடுன்னு ஆளாளுக்கு

ஒட்டகச்சிவிங்கி போல கழுத்தை நீட்டி " அதோ அவர்தான் நீல சட்டை.."

" இல்லை இங்கே போறார் " னு கன்னா பின்னான்னு லேன் மாறி மன்னிப்பு கேட்டு அசடு வழிந்து

ஒருவழியா போனால் நாங்க ஏற்கனவே சென்றுள்ள ஒரு பெரிய விளையாட்டு மால் பக்கம்..

இத மொதல்லே சொல்லிருக்கப்டாதா?.. இங்க சந்திச்சுருக்கலாமே..

அத தாண்டி இப்ப சிட்டிக்கு வெளியே சென்றார் சுமார் 10 கிமீ..

அட இதுதான் நான் ஓட்டுனர் உரிமம் வாங்கிய இடம் .. இதுவும் எனக்கு தெரியுமே...ப்ச்ச்...

அப்புரம் சின்ன சின்ன சந்துக்குள் புகுந்து ஒரு கடை முன் நிப்பாட்டினார்.. மீனுக்கான உணவு வாங்க...

ஒருவழியாக அந்த மீன் பிடிக்கும் இடம் அடைந்தோம்...

ஆங்காங்கே உப்பளம் போல தண்ணீர் தேக்கி வைத்து மீன் வளர்க்கிறார்கள் .. பெரிய பாத்தி கட்டி, தென்னை மர நிழலில் குடில் ( குடிசை )

போட்டுள்ளார்கள்.. அங்கே குடும்பம் குடும்பமாய் வந்து அமர்ந்து மீன் பிடிக்கின்றார்கள்..பெரிய பெரிய கார்களில் வந்து..

பார்த்ததும் ஆச்சர்யம்.. கார் பார்க் செய்ய இடமில்லாத அளவுக்கு கார்கள்... அட இப்படி கூட பொழுது போக்குவார்களா என்ன?..

ஒவ்வொரு தோட்டத்திலும் ஸ்பீக்கர் வைத்து மென்மையான இசையோடு பாடல்கள் வேறு..

தென்னை தோப்பில் அடிக்கும் காற்றுக்கு படுத்தால் தூக்கம் வந்துடும் .. அவ்வளவு சுகம்..( ஐயா கொஞ்சம் படுக்கலாம் னு பார்த்தாரே.. விடல்லையே..)

வரப்போரம் பல பூச்செடிகள், கத்திரி , மிளகாய் கீரை என பாத்தி போட்டிருந்தார்கள் வேறு..

முதலில் நுழையும்போது இவர் கடிந்து கொண்டார்தான்.. ஏன் இப்படிப்பட்ட இடங்களுக்கு வரணுமா என..

நாம் வளராத சூழ்நிலையா...?வாய்க்கால், வரப்பு என...

அதுக்கில்லை , இவர்களுக்கு புதிதாக பழகும்போது ஒத்துக்கொள்ளாதே என்ற கவலை.. ( சொன்னதுபோல்

வீடு வந்தததுமே தொடர்ந்து இருவருக்கும் வயற்று வலி..மருத்துவமனை, வாந்தி..இத்யாதி.)

தன்னுடைய உபகரணங்களை எடுத்து வைத்து அவர்கள் இருவரும் ஒரு குடிலில் செட்டில் ஆனார்கள்..

நாங்களும் அமர்ந்தோம்.. ஒரு நடை போய்விட்டு வந்து..

ஆனா எல்லோரும் ( சுமார் 50 பேர் ) பொறுமையா ஏதும் பேசாமல் மீன் பிடிப்பதை

பார்த்தால் எனக்கு சிரிப்பாய் வருது.. என்னாலையும் டேனியாலும் இப்படி சும்மா உட்காரெல்லாம் முடியாதே..

பெரியவன் புரிந்துகொண்டான்.. " அம்மா நீங்க அந்த மால் க்கு தம்பியை கூட்டி சென்று விளையாட வையுங்கள்..

சாயங்காலமா வந்து என்னை கூட்டி செல்லுங்கள் என்று..

எங்களுக்கு பயம். அவனை தனியே அந்த ஆளோடு விட்டு செல்ல..

நல்ல அன்பானவராய் தான் தெரியுது.. பொதுவாகவே தாய் மக்கள் குழந்தைகளை

மிக நேசிப்பவர்கள்.. இருப்பினும் நாமும் கவனமாய் இருக்கணுமே..

தொலைபேசியை கொடுத்துவிட்டு பாதி மனதாக வெளி வந்தோம்..அடிக்கடி தொலைபேசச்சொல்லி..

அங்கேயே உணவு விடுதியும் இருக்கு..அதனால் உணவு பிரச்னையில்லை..

கிளம்பி வரும்போது அவர் சொன்னார் அருகில் ஒரு குரங்கு தோப்பு இருப்பதாக..

அதை பார்த்துவிட்டு செல்ல கிளம்பினோம்..

அப்பதான் முருங்கை மரம் ரோட்டோரமாய் கண்ணில் பட்டது...

மின்னலைக்கண்ட பிரகாசம்.. அடடா.. எத்தனை நாளாச்சு முருங்கை கீரை சாப்பிட்டு...

ஆனா இது யாருக்கு சொந்தம்..? ஆள் அரவமே இல்லையே.. ரோட்டில் இருக்கு.

பறிக்கலாமா கூடாதா என பல கேள்விகள்.. ஆனா கண்டிப்பா பறிக்கணும்னு மனம் சொல்லுது..

இங்கு முருங்கை கீரை சாப்பிட மாட்டார்கள்.. மார்க்கெட்டிலும் கிடைக்காது...

எனக்கோ எங்க வீட்டு மரம் நியாபகத்துக்கு வந்துவிட்டது.. அதுவும் அம்மா கை பக்குவ சமையல் வாசனையும்..

விட முடியுமா?.. வண்டியை ஓரமாக நிப்பாட்டி அக்காம் பக்கம் பார்த்தா ஒருவரையும் காணோம்..

சரி அப்படியே வந்தாலும் பணம் தரலாம் என முடிவோடு பறிக்க சொன்னேன்..

ஒரு ஐஸ் வண்டி வந்தது அவனிடம் கேட்டோம்.. பரிச்சுக்கோங்க என்றான்..

( அதனால அவன்கிட்ட நன்றியோடு ஐஸ் வாங்க வேண்டியதா போச்சு பாருங்க..)

அவரோ ஒரு சின்ன கொப்பை பறித்துவிட்டு சட்டென்று காரி ஏறி உட்கார.,

" அட இம்புட்டுதானா ?"

" பத்தாதா?. நீ உனக்கு மட்டும் கேட்கிறாய இல்லை உன் தோழிகளுக்குமா..?"

" அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கூட கொஞ்சம் பறிச்சா என்னவாம்..?"

" ம். என்னை மாட்டிவிடாம இருக்க மாட்ட.. " னு சொன்னாலும், ஏதோ வைர நகையே வாங்கி தருவது போல்

ரொம்ப பெருமையா பறிச்சுட்டார்..கொஞ்சம் அகத்து கீரையும் கிடைத்தது..

முருங்கை காயெல்லாம் முற்றி போய் இருக்க பரிதாபமாக பார்த்தேன்..

பேருக்கு 4 காய் மட்டும் கிடைத்தது..:(

அதை முடித்து குரங்கு பார்க்க சென்றோம்..அதோடு விளையாடிவிட்டு

மால் போய் குழந்தையை விளையாட விட்டு, உணவருந்திவிட்டு .. ( இப்ப தூக்கம் வருது..)

இதுல இடையில் அரைமணிக்கொருமுறை ரன்னிங் கமெண்ட்ரியாய் மீன் வந்துச்சா, னு விசாரிப்பு வேற..

சரியாக மணி 4 க்கு திரும்பி வந்தோம்..அவர்களுக்கும் உணவு வாங்கிக்கொண்டு.

மகன் மகிழ்ச்சியா சொன்னார் " அம்மா 3 மீன் பிடிச்சேன்" னு..


( யார் அதிகமா மீன் பிடிக்காங்காளோ அவர்களுக்கு பரிசும் உண்டாம்.. )

அப்பாடா வந்த வேலை நல்லபடியா முடிந்ததே..

இல்லாவிட்டால் அடுத்த நாட்டில் மீன் கிடைக்கும் அங்கே போகலாம்னு ஒரு புது பிளான் போடாமல் இருந்தானே..

மீனையும் அழகாக ஒரு பையில் நீரோடு போட்டு தந்தார்கள்..

கொடுத்த காசுக்கு ஏதோ..

அவன் மகிழ்ச்சியா அதை உள்ளே வைக்க போனான்..

நான் கத்தினேன்.." அதையேன் கொண்டு வார..? அத அவர்கிட்டயே கொடுத்திடு." னு

அவனுக்கு அதிர்ச்சி..

அட அது என்ன நீரோ அதெல்லாம் வேண்டாம்னு விளக்கம் அளித்ததும் ஏற்றான்.

ஆனாலும் கொஞ்சம் வருத்தம் அவனுக்கு..

திரும்ப வரும்போதும் முருங்கை கண்ணில் பட்டதே.. பக்கத்து வீட்டு

தோழிக்கு" என வாய் எடுப்பதற்குள் மகன் அட்வைஸ் ஆரம்பித்துவிட்டான்..

" அம்மா தப்பு " என..

ஆசையை அடக்கிக்கொண்டு , சோகமா ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு

திரும்பினோம்..


அடுத்த 2 நாள் அகத்து கீரை சமையல்..முருங்கைக்காய் சாம்பாரோடு.

ஆனா முருங்கை கீரை வரவே இல்லை.. 4 வது நாள் கேட்டால்,

" பாபி அந்த கீரை வாடி விட்டது தூக்கி போட்டேன் " னு வேலையாள் குண்டை போட்டா பாருங்க..

அதிர்ச்சியில் என் முகத்தை பார்த்தவர்,

" சரி விடு நான் அலுவலில் இருந்து வரும்போது ஒரு இடத்தில் பார்த்தேன் எப்படியாவது கேட்டு வாங்கி வருகிறேன்"

என
.

தோழிக்கு போன் பேசினால் ,

" கவலை படாதீங்க நான் ஒரு ரகசிய இடம் பார்த்து வெச்சுருக்கேன் .
உங்களை கூட்டி செல்கிறேன் . ஆனா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க " என

முருங்கைக்கு வந்த மவுசைப்பார்த்தீங்களா.?

எப்படியோ ஒரு வழியா மீன் பிடிக்க கத்துகிட்டான்...

இனி படிக்காட்டி எனக்கு திட்ட ஒரு வாக்கியம் கிடைச்சாச்சு..

மாடு மேய்க்க போக சொல்லாட்டியும் , நீ மீன் பிடிக்க தான் லாயக்குன்னு திட்டலாம் பாருங்க..


ஆனா ஒரு நாள் முழுதும் பொறுமையாய் தவம் போல மீன் பிடிப்பதை பார்ப்பதே ஆச்சர்யமாய் தான் இருக்கு.. நானெல்லாம்.. ம்ஹூம் .விடு ஜூட்...

மீன் பிடித்தலும் பிள்ளை வளர்ப்பும். 1


நகர்ப்புற வாழ்க்கையில் எவ்வளவு இழக்கிறோம் என்பது கிராமப்புரத்தில் வாழ்ந்தவர்களுக்கே புரியும்..

விசாலமான தெருக்கள் , அருகிலேயே வாய்க்கால் , அதைத்தாண்டி வயல்வெளி , தோப்புகள் , என இயற்கையோடு குளிர்ச்சியாய் ஒன்றி வாழ்ந்தவருக்கு செயற்கையாய் கான்கிரீட் காடுகளின் வெப்பத்தில் , குழந்தை வளர்ப்பென்பது ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது..

இங்கு வீட்டை ஒட்டியே பிரமாண்டமான சவ் பிரயா ( Chao-phraya )ஆறு அமைதியாக கப்பல்களையும் சுமந்து கொண்டு அசடுகள் ஏதுமின்றி ரம்மியமாக
பாய்ந்தோடுவதை பார்ப்பதே மிகச்சிறந்த பொழுதுபோக்கு..

எனக்கு
இரவு வந்தால் அதன் மீது பட்டுத்தெறிக்கும் விளக்கொளிகள் , நிலவு ஒரு சங்கீதம்..

பார்க்கும்போதே அதில் குதித்து நீந்தி அக்கறை சென்றிடமாட்டோமா என ஆவல் பிறக்கும்.


குட்டி குட்டி விசைப்படகுகள் மட்டுமே சீறிக்கொண்டு செல்வதும் , சில பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் கொஞ்சம் பெரிய படகுகளும்
கப்பலில் வந்து சரக்குகள் இறக்கி வைக்கும் குடோன்களும் , ஆற்றின் அக்கறையில் இருந்து பாடலோடு எமை எழுப்பும் புத்த கோவில்களும் ஏதோ கனவு போல் தோன்றுவதோடு இக்காட்சியை பார்க்கும் ஒவ்வோரு பொழுதும் மறக்காது நன்றி செலுத்த தோணும் படைத்தவனுக்கு.

சரி ஏன் இவ்வளவு பில்டப் என கேட்டால் , ?
இப்படி ஒரு ஆறு பக்கம் இருக்கும்போது யாருக்குத்தான் மீன் பிடிக்க ஆசை வராது..?

வரக்கூடாதே என நான் தவித்திருந்த வேளையில் வந்துவிட்டது அந்த மீன்பிடிக்கும் கம்புகள் கடையில் மகன் கண்ணில் பட்டதுமே..


தொடர்ந்து 2 வாரம் தொணதொணப்புகள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள், மிரட்டல்கள், பேசாவிரதங்கள்... அப்பப்பா..
கணவர் பதில் எப்போதும் ரெடியாக "நோ" :)) ஒருவழியாக வாங்கியாகிவிட்டது..

வீடு வந்து பார்த்ததும் தான் அதன் கைப்பிடி உடைந்து போயிருப்பது தெரிந்தது..( அப்பாகிட்ட சொல்லலையே..)
சரி என தாமே வேறொரு கடைக்கு சென்று தனியே வாங்கி வருவதாக சொன்னார் மகன்..

எங்குமே தனியாக ( பள்ளி தவிர ) செல்லத்துணியாதவன் மீன் பிடிக்க என்றதும் தனியாக பஸ் ஏறி செல்வதென்றால்..?.

பயத்தோடு அனுப்பி வைத்தேன் .மகிழ்வோடு வாங்கியும் வந்தாச்சு...
சாயங்காலமாய் அருகில் உள்ள கறைக்கு சென்று மீன்பிடிப்பவரோடு இவனும் உட்கார்ந்துகொண்டான்..

முதலில் அப்பாவை மட்டும் அழைத்து சென்றான்.. 3 மணி நேரம் செலவிட்டும் ஒரு மீனும் மாட்டவில்லை.

ஆனால் அதற்குள் அங்குள்ளவர்களோடு நட்பாகி பல விஷயம் தெரிந்துகொண்டானாம்.. ( பின்ன , முள்ளில் புழுவை மாட்ட ஆள் வேண்டாமா?.. அதை தொடமாட்டாராம்..:).

அப்பா தான் செய்யணும் )


இப்படியே அடுத்த 3 நாளும் சென்றும் பொறுமையாக நாள் முடுதும் அமர்ந்தும் மீன் கிடைத்தபாடில்லை..


நாங்களும் ஒரு நாள் இரவு நிலா வெளிச்சத்தில் க்உடும்பத்தோடு சென்றோம்.. ம்ஹூம். எல்லோருக்கும் கிடைக்குது ஒன்றோ இரண்டோ ஆனால் இவனுக்கு மட்டும் கிட்டவில்லை..

அதற்குள் அங்குள்ள ஒருவர் இவன் மேல் பரிதாபம் கொண்டு நகர் விட்டு வெளியே ஓரிடத்தில்
மீன் பிடிக்க என்றே பொழுதுபோக்க பல இடங்கள் கடற்கரையை ஒட்டி இருப்பதாகவும் தானே அழைத்து செல்வதாகவும் சொல்ல அடுத்த கெஞ்சல் ஆரம்பமானது..

பள்ளி விடுமுறை தானே என நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தாலும் மொத்தமாக இப்படி ஈடுபடுவது ஏற்கமுடியவில்லைதான்.
அதற்குள் கூகிளில் தேடி தாய்லாந்தில் மீன் பிடிக்கும் இடங்களையும் வித்தைகளையும் கற்றதுதான் மிச்சம்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே பேச்சு மீன் பற்றியதாகத்தான் இருக்கும்.
( அடேய் நெல்லைக்கு போகும்போது மாமா , மச்சான்ஸ் கிட்ட சொல்லப்டாதா ஜாலியா செய்வாங்களே, என்னை ஏண்டாப்பா படுத்துற..? )

என் வாயில் இருந்து சரி என சம்மதம் சொல்லும்வரை என்னை ஒரு வேலை செய்யவிடாமல் பின் தொடர்கிறான்.எல்லா அறைக்கும். இதுக்கு தம்பியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு.. ( அம்மா , சிங்கு பாவம் மா , பிளீஸ் மா- தம்பியார்.)

ஒருவழியா கடந்த ஞாயிறன்று சர்ச்சுக்கு கூட போகாமல் அந்த நண்பர் வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்தோம் அவரை , மீன் பிடிக்கும் இடத்துக்கு..

-------------------தொடரும்..--
--------------------------------------------------------

Wednesday, April 29, 2009

பாற்கடல் பாங்காக்கில்...



தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வு பற்றிய சிலைவடிவம் உள்ளது...

வண்ணமயமான சிலைகளோடு, பார்ப்பவர் மனம் மயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது...


suvarnabhumi-airport1.jpg

படத்தில் காணுவது தேவர்களும் அசுரர்களும் வாசுகிப்பாம்பை மந்தர மலையில் கட்டி ( மேரு மலை ) இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்றனர்..நடுவில் விஷ்ணு , கீழேஆமையும்...turtle.jpg..


Suvarnabhumi_Airport,_Bangkok.jpg
-----------------------------




devarkal.jpg




asuraas.jpg


churning milk1.jpgairport1.jpg
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம்.
நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை
அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். பாற்கடலைக் கடைந்தால்
அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது


இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது,
அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள்.
அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள்.
மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ரம்பித்தார்கள்.


படத்தில் காணுவது தேவர்களும் அசுரர்களும் நாக தலவனின் இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்றனர்..

முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும்
நாசம்.
நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன் விஷ்ணுவை
அணுகி தாள் பணிந்து காப்பாற்றும்படிக் கோரினர். அப்போது விஷ்ணு சொன்னார். பாற்கடலைக் கடைந்தால்
அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது


இந்த தகவல் அசுரர்களுக்கும் எட்டியது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது,
அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள்.
அசுரர்கள் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள்.
மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையவும் ரம்பித்தார்கள்.

புராணக் கூற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன.
அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை
க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த
கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும்
தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்)
வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக்
பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் மகா கும்பமேளா
ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

புராணக் கூற்றுகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன.
அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை
க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த
கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும்
தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்)
வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக்
பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் மகா கும்பமேளா
ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE

Friday, January 23, 2009

பாற்கடல் பாங்காக் விமான நிலையத்தில்.

Tuesday, June 10, 2008






பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 4*


மலைமேலே விளையாட்டுகள்..
முதலில் நாங்கள் சென்றது, மலையிலிருந்து கீழே சருக்குவது.. ஒரு மிதவைமேல் படுத்துக்கொண்டு.. உண்மையிலேயே பயம் . ஏனேன்றால், அந்த மிதவை குப்புற கவிழுமோ என்ற பயம்.. பையன் மட்டும் சென்றான்..நான் உற்சாகப்படுத்தியதில்...மீண்டும் மேல வந்தவன் , " அம்மா நல்லாருக்கு " எனவும், சரி நீயேஇன்னோரு முறை எனக்கு பதிலாக போ என அனுப்பினேன்..
கிட்டத்தட்ட 7 மாடி உயரத்திலிருஃது நீண்ட பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதில் இந்த மிதவையை தள்ளிவிடுகிறார்கள், அது வழுக்கிக்கொண்டே செல்ல கூட தண்ணீரும் தெளிக்கிறார்கள் அங்கங்கே.. அதை கவனிப்பது ஒரு கர்ப்பிணி பெண்.. அவள் ஒருமுறை தண்ணீரி பைப்பை எடுக்க அது சீரிக்கொண்டு அவள்மேலேயே தண்ணீரை கொட்ட, அடுத்த பாவம்...கொஞ்சம் கவனக்குறைவென்றாலும் அவள் வழுக்கலாம்...
ஏன் இந்த இடத்தில் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு வருத்தம்..அதுவும் கர்ப்ப காலத்தில்..
அது முடிந்ததும் , அதே போல் ஒரு மிகப்பெரிய பந்து , அதனுள்ளும் தண்ணீர் செலுத்தி, ஆளையும் செலுத்தி, மூடி விட்டு மலையிலிருந்து சருக்கில் உருட்டி விடுகிறார்கள்.. இது பயங்கர சிரிப்பாயிருந்தது... உள்ளே உள்ள ஆள் கண்டபடி புரட்டி போடுது , முகத்தில் தண்ணீர் வேறு பாய்கிறது.. வேகம் வேறு.. விழுந்து விழுந்து சிரித்தேன், எல்லாரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தாலும்.. ( சில நேரம் சிரிப்பை அடக்கமுடியாது.. அடக்க அடக்க வெடிக்குது..ஏன் என தெரியலை..)
நேரமாச்சு குழந்தை பற்றி விசாரிக்க , தகவல் சொல்ல ,என கைபேசியில் கணவரை அழைத்தால் செல்லமாட்டேங்குது.. நெட் ஒர்க் பிரச்சனை போல..சோதனை இப்படித்தானே வரும்..
அடுத்து ஃபிளையிங் ஃபாக்ஸ் அன கயற்றில் மலை உச்சியில் இருந்து தொங்கிக்கொண்டே கீழே இறங்குவது...8 80 வயது வரை செல்லலாம் பயமில்லை...
அடுத்து நீரில் சருக்கு... மேலே ஒரு படகில் ஏறி சடாரென்று கீழே நீரில் இறங்குவது..இதெல்லாம் பழசு..
அடுத்து கார்ட் க்ராஸ்.. இதுக்கு பையனை அனுப்பலாம் என்றால்
" உங்க பையன் வயது என்ன?.18 க்கு மேலே கீழா?." ஒருவேளை இது சின்னப்பசங்களுக்கு மட்டும் போல என எண்ணி, " ஹிஹி 18 க்கு கீழே " என்றேன்..
" அய்யோ மன்னிக்கவும் , முடியாதே." எனவும்,
" ஆனா அவன் நல்லா ஓட்டுவான் " நம்பிட்டாங்க.. அவன் பார்க்க 20 வயசு பையன் போல் இருக்கான்.. , 12 வயதுக்காரன்..
" சரி அப்ப நீங்களும் அமருங்கள்.. "
"அடப்பாவமே இது என்ன சோதனை...சரியென்று நானும் ஹெல்மெட் போட்டு நானே ஓட்டினேன்..பையனுக்கு ஓட்ட முடியவில்லை என வருத்தம்...
ஒருவழியா முடிந்து மீண்டும் ரயில் வண்டி ஏறி வர, எதிர்வண்டியில் சின்னவனும் அப்பாவும்.. ஹஹஹா
திரும்பி அவர்கள் வரும் வரை கடையில் சென்று சூடா காஃபி குடிக்க சென்றோம்..
பையன் சூடா சூப், நான் 2 காஃபி தயாரிக்க, கணவர் குழந்தையுடன் வந்து சேர்ந்தார். அவரை படுத்தி எடுத்துவிட்டானாம், அம்மாவை தேடி..ஏன் போன் , பேசலை?. , 1001 கேள்விகள்...
" சரி எதுக்கு 2 காஃபி.?. எனக்கு வேண்டாம்.."
" ஹிஹி.. நன்றிங்க.. இது ஓட்டுனருக்கு.. பாவம்.. மழைவேறு..அசதியாயிருப்பாரே.."
" அவர் இதெல்லாம் குடிக்கமாட்டார்.."
நான் சென்று குடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்..பெரியவனுக்கு ரொம்ப சந்தோஷம்.. " ரொம்ப நன்றிம்மா. நீங்க ரொம்ப நல்ல அம்மா" , என கொஞ்சினான்..
" ஆமா , இப்ப இப்படி சோலு, படிக்க சொன்னா மட்டும், கோச்சுக்கோ"
" சாஆஆஆரிம்மாஆஆ"மறுபடியும் கொஞ்சல்..
அதோடு போட்டிபோட்டு சின்னது முத்த மழை பெய்து கொஞ்ச, அப்பாவுக்கு கோவம் வருது..
" என்னதான் நான் கவனித்தாலும் , பாரு 2ம் உன்கிட்டதான் வருது...என்னவோ வசியம் பண்ற..ஊரிலுள்ளவர்கள் மேலெல்லாம் பாவம் பார்க்க என்னவிடுத்து..என்கிட்ட இருக்காமல் அம்மா என்று தேடுகிறான் சின்னவன்.."
அங்கேயே தங்குவதற்கும் அழகான கூடரங்கள், விடுதிகள் உள்ளன.
எல்லாம் முடிந்து அசதியுடன் கிளம்பும்போது எஸ் எம் எஸ் வருது..
அலுவலகத்திலிருந்து, மடல் பார்க்கச்சொல்லி...
எல்லோரும் வீடு வந்து சேரும் வரை நன்றாக தூங்க, சின்னவன் ஏற்கனவே தூங்கிவிட்டதால் என்னுடன் விளையாடிக்கொண்டே ,பேசிக்கொண்டே வர, எனக்கு மட்டும் அசதி..
வந்ததும் மடல் பார்த்து பதில் அனுப்பி, குளித்து , ஒதுங்க வைத்து படுத்ததுதான் தெரியும்.. தூக்கம் இழுத்துக்கொண்டு சென்றது..
சில விளையாட்டுகள் ஆபத்தானவை, நம் உடல் நலம் தெரிந்து விளையாடணும்.. எனக்கு சிறு வயதிலிருந்தே இதில் ஆர்வமிருந்ததால் , பிள்ளைகளை பழக்கும் பொருட்டு, கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் செயல்பட்டேன். படிப்பவர்கள் தயவுசெய்து எளிதாக எண்ணவேண்டாம்... என்னுடைய network வேலையும் அப்படி, மேலும் , நானும், வீட்டுக்காரரும், விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்றதால் , அடிவாங்கியதால்,கொஞ்சம் பயம் குறைவு.. அவ்வளவே. குழந்தைகளை சிறு வயதிலேயே பயம் போக்கி, வளர்ப்பது நல்லது.. அதற்கான சிறு முய்ற்சி இது...
வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..





பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 3



அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடம், மலை அருவியிலிருந்து கயறு கட்டி கீழே இறங்குவது...தேடினோம் வந்தது... அப்போதுதான் ஞாபகம் வந்தது , பணம் எடுக்கவேண்டும்.. எடிஎம் இயந்திரம் அங்கு இல்லை.. ஊருக்குள் தான் வரணும்... 30 கி.மீ ஊருக்குள் வந்து திரும்பி சென்றோம்.. மலையழகை ரசிப்பதிலேயும், சரக்கொன்னை, பூமரங்கள் ( flame of forest ) வழி நெடுகிலும் பந்தல் போட்டதுபோல் இருந்த அழகும், வயல்வெளியும், அதில் உள்ள தனித்தனி பண்ணை வீடுகளும், குதிரை லாயங்களும், ஏறி இறங்கி மீண்டும் ஏறி இறங்கி வளைந்து செல்லும் சாலையும்,மிக அழகு..க‌ண்ணுக்கும் , ம‌ன‌துக்கும் குளிர்ச்சி..

அருவியிலிருந்து க‌ய‌று க‌ட்டி இற‌ங்கும் இட‌த்துக்கு வ‌ந்தால் அருவியும் இருக்கு, கீழே ஓடையும் இருக்கு ஆள்க‌ள்தான் இல்லை... காலில் ஷூ மாட்டிக்கொண்டு ப‌ந்தாவாக‌ இற‌ங்கி விசாரித்தால் வார‌த்தில் 3 நாள் ம‌ட்டுமே விளையாட்டு உண்டாம்... ச‌ரியான‌ ஏமாற்ற‌ம்...என‌க்கும் பெரிய‌வ‌னுக்கும்.. அப்பாவுக்கு குஷி கேக்க‌ணுமா?..
ச‌ரி இன்னும் இதே போன்று இட‌ம் வேறு க‌ண்டிப்பாக‌ இருக்கும் என்று ஆறுத‌ல்ப‌டுத்திக்கொண்டு, முய‌ற்சி உடையார் இக‌ழ்ச்சி அடையார் போல், பாதையெங்கும் விள‌ம்ப‌ர‌ப்ப‌ல‌கை பார்த்துக்கொண்டே வ‌ந்த‌தில் ஒரு விளையாட்டு (அம்யூஸ்மென்ட் ) பூங்கா க‌ண்ணில் ப‌ட்ட‌து..
குழ‌ந்தை தூங்கிவிட்டான்.. " பெரிய‌வ‌னுட‌ன் நீங்க‌ போறீங்க‌ளா , இல்லை நான்?."

" அய்யோ ஆள‌ விடும்மா... நான் காரிலேயே இருக்கிறேன் குழ‌ந்தை பார்த்துக்கொண்டு.."

நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு வ‌ந்தால் ஒரு நீள ர‌யில் வ‌ண்டி த‌யாராய்.. அங்கிருந்து ம‌லைக்குள் 3 கி.மீ செல்ல‌ணுமாம்.. பைய‌னுக்கு எங்கே உட்காருவ‌து என்று குழப்பம்... முன்னால‌, இல்ல‌ இல்ல‌ , பின்னால‌..
" வேண்டாய்யா, ந‌டுவில் உட்கார‌லாம், ம‌ழை வ‌ந்தாலும் வ‌ரும்..."
" இல்ல‌ம்மா, வாங்க‌ முன்னால்.."

ஏறி உட்கார்ந்து வ‌ண்டி கிள‌ம்பிய‌தும், ம‌ழை சோரென்று அடித்து பெய்த‌து, முக‌த்தில்.. முழுதும் ந‌னைந்தோம்.. என் கைபேசியை ம‌ட்டும் நனையாம‌ல் பார்த்துக்கொண்டேன்.. டிக்கெட், பணம் அனைத்தும் நீரில்.குளிர் தாங்க‌ முடியாம‌ல் டைப் அடிக்குது விர‌ல்க‌ளும், உத‌டுக‌ளும்..

.மேக‌ங்க‌ள் எங்கள்மேல்பட்டு விரைவாக‌ க‌ட‌ந்து செல்லுது...அடுத்த‌ சிறிது தூர‌த்தில் வெயில் அடிக்குது... ம‌ழை நின்று.. ஆச்ச‌ர்ய‌மாய் இருக்குது..வ‌ண்டி ஏற்ற‌ இற‌க்க‌த்தில் ர‌ம்மிய‌மான‌ தாய் பாட‌ல்க‌ளுட‌ன், க‌வ்பாய் ஸ்டைலில் போகுது..

அனைவ‌ரும் க‌வ்பாய் போல‌ உடையும்.. எதோ அவ‌ர்க‌ள் கூட்ட‌த்தில் இருப்ப‌துபோல‌ உண‌ர்ச்சி..

எல்லோரும் ம‌ழையிலும் பாட்டுபாடி கைத‌ட்டிக்கொண்டு..என‌க்கோ த‌லையிலிருந்து த‌ண்ணீர் (+ முகத்தில் அசடு) சொட்டுகிற‌து துடைக்க‌கூட‌ துணியில்லாம‌ல்...பைய‌னுக்கோ குஷி..ம‌ழையில் ந‌னைவ‌து... ( பின்னால் பாடு என‌க்குத்தானே?.)
இப்ப‌ எதை விளையாடுவ‌து என்று.????..

விட்டு விட்டு ம‌ழை.



ஆனாலும் விளையாட்டு ந‌ட‌க்குது...

கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே விளையாட்டை நடத்தும் பெண் ஊழியர்களும் ..பாவமாயிருக்கு .." "அம்மா, பாவம் 3 ஹிஹி."


ச‌ரி என்று ஒவ்வொன்றாக‌ போனோம்...
நாளை க‌டைசி பாக‌த்தில் விளையாட்டுக‌ள்....

*************************************தொட‌ரும் க‌டைசி பாக‌ம்********
ப‌ர‌ப‌ர‌ப்பூட்டும் காட்டாறு , ம‌லை , அருவி விளையாட்டுக‌ள் ‍ பாக‌ம் 2

தலை குப்புர விழுந்ததும் எழலாம் என்றால் தண்ணீர் இழுக்கிறது... அப்போதுதான் சின்னவன் ஞ்ஜாபகம் வருது.. எங்கே சத்தத்தையே காணோம்.. அப்பாவும் மகனும் சுமார் 30 அடி தூரத்தில் , பத்திரமாக எழுந்து நிற்கிறார்கள்...என்னையும் பெரியவனையும் மட்டும் இழுத்து வந்துள்ளது தண்ணீர்.. ( ஆமா கொஞ்சம் கனம் அதிகம்..)
அங்கங்கே வலிக்குது , ஆனா எங்கெங்கேன்னு தெரியலை..
தண்ணீரில் எதிர்த்து சின்னவன் கிட்ட போனோம்... பேயரைந்தது போல் அப்பா..

" அப்பா, ஒன்னுல்ல‌, அப்பா, ஒன்னுல்ல‌, " என்று ஆறுத‌ல்ப‌டுத்துகிறான் குழ‌ந்தை...
ஏதோ எல்லாரும் உயிரோட‌தான் இருக்கோம் என்று ச‌ந்தோஷ‌ம்...ஆழ‌ம் அதிக‌மில்லை...
அத‌ற்குள் க‌விழ்ந்த‌ ப‌ட‌கை திருப்பிப்போட்டு ஏறும்போது தேடுகிறான் ப‌டகின் துடுப்பை..
அது கோவித்துக்கொண்டு விரைவாக‌ செல்லுது.. மீன் போல் ஒரே பாய்ச்ச‌லில் நீந்தி அதை எடுக்கிறான் ப‌ட‌கோட்டி..
ஒருவ‌ழியாக‌ மீண்டும் ஏறி உட்கார்ந்தோம்.. அப்போதுதான் யார் யாருக்கு என்னென்ன‌ காய‌ம் என்று லிஸ்ட் த‌யாரித்தோம்.. பாவ‌ம் அவ‌ருக்கு கை முழ‌ங்கையில் அதிக‌ சிராய்ப்பு.. என‌க்கு காலில்... பிள்ளைகளுக்கு ஒன்றுமில்லை க‌ட‌வுள் கிருபையால்..( இருந்தாலும்தான் என்ன‌.. ப‌ழ‌க‌ட்டும்)
என் காலில் ர‌த்த‌ம் பார்த்து கூச்ச‌லிடுகிறான் ம‌க‌ன்..
" ஐய‌ இது ஜூஜூபி.. நானெல்லாம் சின்ன‌ வ‌ய‌சுல..."
" அய்யோ ஆஅர‌ம்பிச்சுட்டாளா உங்க‌ அம்மா?.. இதுக்கு நான் த‌ண்ணீரிலேயே இருப்பேனே.."

ச‌ரி ஏற்கென‌வே வெந்த‌ புண்ணில் வேல் , ஞாய‌மில்லைதான் என்று நிப்பாட்டிக்கொண்டேன் என் பிராத‌ப‌ங்க‌ளை..
ஒருவ‌ழியா இப்ப‌ அடுத்து வ‌ந்த‌ 10 ப‌டிக‌ளையும் உல‌க‌ க‌ட‌வுளை வேண்டிக்கொண்டு ம‌றுப‌டியும் விழாம‌ல் வெற்றிக‌ர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்.
அந்த‌ ஆற்றின் இரு க‌ரையிலும் வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌ன் அக‌ன்ற‌ கிளைக‌ளை , நீரில் ப‌ர‌ப்பி விளையாட‌, அத‌னூடே நாங்க‌ள் செல்லும்போது எங்க‌ளையும் கொஞ்ச‌ம் பிடித்து கொஞ்சிய‌தில், சின்ன‌வ‌னுக்கு க‌ன்ன‌த்தில் சிராய்ப்பு..
இடையில் திடீரென்று பெரிய‌வான் " அப்பா உங்க‌ க‌ழுத்தில் பூச்சி " என்று ஏதோ டைனோச‌ர் இருப்ப‌துபோல் க‌த்த‌, நானும் ப‌ய‌ந்துபோய் பார்த்தால் ஒரு சின்ன‌ வ‌ண்டு...
பிள்ளைக‌ளுக்கு பூச்சி, எறும்பு கூட‌ பார்ப்ப‌து அரிதாகிக்கொண்டே வ‌ருகிற‌தே...
ப‌ட‌கோட்டி ம‌ட்டும் துடுப்பு போட‌, என் அருகில் இருந்த‌ துடுப்பை எடுத்து நானும் போட‌,
" நீ பேசாம‌ இருக்க‌மாட்டியா.. உன‌க்கு தெரியாது.."
" இல்லீங்க‌ அவ‌ன் பாவ‌ம்... ஒரு ஆள் எப்ப‌டி த‌னியாக‌ "
" பாவ‌ம் பார்க்க‌ ஆர‌ம்பிச்சுட்டீயா...இனி எங்க‌ளை ஒழுங்கா போய் சேர்க்க‌ மாட்ட‌.." பாவ‌ம் 1 என்று எண்ண‌ ஆர‌ம்பித்துவிட்டார்.
" இல்ல‌ அங்க‌ பாருங்க‌ ம‌த்த‌ ப‌ட‌கில் எல்லாரும் துடுப்பு போடுராங்க‌..நாம‌ளும் போட‌ணும்.. என‌க்கு ஆசை என்று விடுங்க‌ளேன் " உண‌மையில் பாவ‌மாயிருந்த‌து.. நானும் போட‌ ம‌க‌னும் போட‌, எளிதாக‌ இருந்த‌து...
ப‌டிக‌ள் வ‌ரும்போது நான் கொஞ்ச‌ம் பேல‌ன்ஸ் ப‌ண்ணி ப‌ட‌கை திருப்ப‌, அது ச‌ரியாக‌ இற‌ங்கிய‌து.. ஆனா இவ‌ர்க‌ள் ப‌ய‌ம்தான் தாங்க‌முடிய‌வில்லை..." அம்மா, ஆடாம‌ அசையாம‌ இருங்க‌ என்று.."
ஒருவ‌ழியா க‌ரை வ‌ந்த‌தும் ஒரு வாலிப‌ கூட்ட‌ம் கொஞ்ச‌ம் எங்க‌ளை பொறாமையாக‌ பார்த்த‌து.. நாங்க‌ள் ப்ரிதாப‌மாக‌ பார்க்கிறாங்க‌ என்று நினைத்தால் அப்ப‌டியில்லையாம்..
ஆற்றில் விழுந்து எழுவ‌தே கிள‌ர்ச்சியாம்.. அந்த‌ வாய்ப்பு அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌வில்லையாம்... அத‌னால் இன்னொருமுறை போக‌லாமா என்று யோசிக்கிறாங்க‌ளாம்... ந‌ல்லா யோசிங்க‌ப்பா.உங்க‌ வ‌ய‌சு அப்ப‌டி... இருந்தாலும் என் க‌ண‌வ‌ருக்கு இப்ப‌ கொஞ்ச‌ம் திருப்தி... ஏதோ நாமும் கொஞ்ச‌ம் சாத‌னை ப‌ண்ணிட்டோம் என்று...( இல்லாட்டி திட்டு ம‌ழை பெய்திருக்க‌லாம் .. த‌ப்பித்தேன்..)

அடுத்து, சின்ன‌வ‌னுக்கு உடுப்பு மாத்தி சாப்பாடு கொடுக்க‌ணும் .. அது தான் பெரிய‌ வேலை.. ந‌ல்ல‌வேளை ஒரு நாய் க‌ட்டிப்போட்டிருந்தார்க‌ள்.. மேலும் அருகில் மாம‌ர‌த்தில் மாங்காய் காய்த்து ப‌றிப்பாரில்லாம‌ல் இருந்த‌து அருகில் துர‌ட்டியும் ( ச‌ரியா??) ப‌றிப்ப‌த‌ற்கு.
ஓட்டுன‌ர் மாங்காய் ப‌றித்து போட‌ ஒருவ‌ழியாய் சாப்பாடு சென்ற‌து...
அனைவ‌ரும் குளித்து உடுப்பு மாற்றி இப்ப‌ திரும்ப‌வும் அதே ஆற்றை க‌ட‌க்க‌ணும்.. இந்த‌ முறை த‌யாராக‌ அங்கிருந்த‌வ‌ர்க‌ள் இன்னோரு வ‌ண்டியில் வ‌ர‌, நாங்க‌ள் ஆற்றில் சென்று இற‌ங்கி த‌ள்ள‌ த‌யாராக‌ இருக்கும்போது ச‌ர்ரென்று எங்க‌ளை ஏமாற்றிவிட்டு கார் விரைவாக‌ மேலேறிய‌து... சே எங்க‌ அனைவ‌ரின் வீர‌மும் காட்ட‌ முடியாம‌ல் போய்விட்ட‌து..

ச‌ரி முடிந்த‌தா , வீட்டுக்கு போக‌லாமா"
" அட‌ என்ன‌ இப்ப‌தான் ம‌ணி 12 ஆகுது.. இன்னும் இருக்கு விளையாட்டுக‌ள்... முத‌லில் ச‌ன்னாவும் ச‌ப்பாத்தியும் சாப்பிடுங்க‌ள் " என‌ ஆசுவாச‌ப்ப‌டுத்தி அடுத்த‌ விளையாட்டான‌ அருவியில் க‌யிறு பிடித்து இற‌ங்கும் ஆபத்தான விளையாட்டை நோக்கி சென்றோம்..


" ஆமா ஓட்டுன‌ர் சாப்பிட்டாரா. பாவ‌ம் அவ‌ர்.."
" பாவ‌ம் 2..அப்ப‌வே ச‌ப்பிட்டார்."




பாகம் 1


ஞாயிறன்று சுமார் 200 கி.மீ தூரத்திலுள்ள சாராபுரி எனுமிடத்திற்கு சென்றோம்..இயற்கை சூழ்ந்த இடத்தில் பலவிதமான சாகச விளையாட்டுகள் அமைத்துள்ளனர்.. அதில் முக்கியமானது, விரைந்து ஓடும் காட்டாற்றில் மிதவை படகில் துடுப்பு போடுவது..சுமார் 6 மாடி உயரமுள்ள அருவியிலிருந்து கயறு பிடித்து கீழே இறங்குவது , போன்ற ஆபத்தான , அதே சமயம், கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்..
இது தாய்லாந்து வந்ததிலிருந்தே ஆசை .. இப்போதுதான் நிறைவேறியது...
ஓட்டுனரிடம் சொன்னால் அவருக்கு அப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாதாம்...கேக்கணுமா, பிள்ளைக்கும் , அப்பாவுக்கும், முணுமுணுப்புக்கு...
பேசாமல் வாருங்கள், நான் அழைத்துச்செல்கிறேன் என்று தைரியப்படுத்திக்கொண்டு, மலையில் வண்டியில் ஏற ஆரம்பித்தோம்...
கடைசியில் ஒருவழியாக கண்டும்பிடித்துவிட்டோம்...
அது ஒரு பள்ளத்தாக்கு, நடுவில் காட்டாறு.. அதில் ரோடு உள்ளது ரோட்டுக்கு மேல் முக்கால் அடி தண்ணீர்.. கடந்து அந்த பகுதி போனால் தான் விளையாட முடியும் ..யோசிக்கும்போதே எதிர் பக்கம் கார் வந்ததால், தைரியமாக ஓட்டுனர் காரை செலுத்த கார் சரியாக ஆற்றின் மையப்பகுதியில் சென்று நின்றுவிட்டது... கேக்கணுமா, எனக்கு விழுந்த வசவுகளை... ( எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில்...ஹிஹி.. பழகிவிட்டது..)
இப்ப காரை தள்ளணும்.. என் பக்கம் கதவை திறக்க முடியாது.. கணவரும் , ஓட்டுனரும் , இறங்கி காரைத்தள்ள, முடியவில்லை... ( பின்ன உள்ளே இருப்பது யாரு?..) இதை பார்த்துக்கொண்டிருந்த எதிர் காரிலிருந்தவர்கள் உதவ ஓடி வந்தார்கள்..
நான் இற‌ங்க‌லாம் என்றால் சின்ன‌வ‌ன் ப‌ய‌ப்ப‌டுகிறான்..ஒருவ‌ழியாக‌ நானும் இற‌ங்கி த‌ள்ளிய‌தும் கார் முன்னேறிய‌து... ந‌ன்றி சொல்லிவிட்டு மேட்டிற்கு சென்றோம்... குதிரை ப‌ழ‌க்கும் இட‌மும், சூரிய‌காந்தி தோட்ட‌மும், ம‌லைக‌ளின் ப‌ச்சை ப‌ட்டாடையும், அலுப்பு ச‌லிப்புக‌ளை நீக்கிய‌து..ர‌ம்மிய‌ம் தொற்றிக்கொண்ட‌து..
முத‌லில் எடிவி ( ATV- ALL TERRAIN VEHICLE/SPORT UTILITY )எனும் 4 ச‌க்க‌ர‌ மோட்டார்வாக‌ன‌ம்..க‌ர‌டு முர‌டான பாதையில் போக‌க்கூடிய‌து... நானும் என் பெரிய‌ ம‌க‌னும் ஏறிக்கொண்டோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ 4 கி.மீ ப‌ய‌ண‌ம், ம‌லைமேலே ஏற்ற‌மும், ச‌ர்ரென்று கீழே இற‌க்க‌மும்.களிமண் சகதியிலும், பாறைகளிலும். ப‌ய‌மாக‌த்தானிருக்குது, இருந்தாலும் பைய‌னிட‌ம் காண்பிக்க‌ முடியாதே...கீழே இற‌ங்கும்போது க‌த்துறான், " அம்மா ஆக்ஸிலேட்ட‌ரை போடாதீங்க‌, பிரேக‌ ம‌ட்டும் பிடிங்க‌ என்று.." சும்மாவே உத‌ற‌ல்..அக்க‌ம் ப‌க்க‌ம் பார்க்க‌க்கூடாது.. ப‌ள்ள‌த்தாக்கை பார்த்தால் போச்சு.! க‌ண்டிப்பாக‌ ஓட்ட‌ முடியாது...
ஒருவ‌ழியாக‌ ப‌த்திர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்... அடுத்து காட்டாற்றில் மித‌வை ப‌டகில் ப‌ய‌ண‌ம்.. தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை உட‌ம்புக்கும் , த‌லைக்கும் போட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு, ப‌ட‌கில் குடும்ப‌த்தோடு உட்கார்ந்தோம்..
"உன‌க்கு தெரிய‌மா, எப்ப‌டி போக‌ணும்னு"
" ம். அதெல்லாம் ப‌ய‌மில்லை , வாங்க‌ "..என்று தைரிய‌ம் சொல்லியாச்சு , இருந்தாலும் உள்ளுக்குள் உத‌ற‌ல்.. சின்ன‌ப்பைய‌ன் இருக்கானே என்று.. ப‌ட‌கோட்டியும் எங்க‌ளுட‌ன்.. ஆற்றில் ஆழ‌ம் அதிக‌மில்லை.. இடுப்ப‌ள‌வே த‌ண்ணீர், இருந்தாலும் இழுப்பு அதிக‌ம்...

நான் ( தைரியசாஆஆஆஆஆ...லி) முன்னால் உட்கார‌ அவ‌ர்க‌ள் மூவ‌ரும் பின்னால் ப‌ய‌ந்துகொண்டே..
ப‌டிப்ப‌டியாக‌ கீழே இற‌ங்கும் த‌ண்ணீர் பாய்ச்ச‌ல் மிக‌ அழ‌கு.. அழ‌குதானே ஆப‌த்தும்..?.
முத‌ல் ப‌டியில் மித‌வை அழ‌காக‌ இற‌ங்கிய‌து... தைரிய‌ம் வ‌ந்துவிட்ட‌து...
அடுத்தும்.... ப‌ர‌வாயில்லையே...
மூன்றாவ‌து கொஞ்ச‌ம் பெரிதும் சிக்க‌லான‌தும்...நேரே செல்ல‌ வேண்டைய‌ ப‌ட‌கு,
ஒரு பாறையில் முட்டி, மோதி, ச‌டாரென்று திரும்பிய‌து.. என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகுதோ என்று எண்ணும்போதே ப‌ட‌கு க‌விழ்ந்து அனைவ‌ரும் ப‌ட‌குக்கு அடியில்.....

Thursday, April 24, 2008










ஆயுத்தயா- 1350-1767 ( அயோத்தியா)ஆயுத்தயா என்ற நகரம் மன்னர் யு-தாங் என்பவரால் 1350 ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது..இது தான் தாய்லாந்தின் பழைய தலைநகராகும். இதனை சியாம் என்றும் அழைப்பர்.இந்த நகரத்துக்கு ராமாயணத்தில் வரும் ராமர் பிறப்பிடமானஇந்தியாவில் உள்ள அயோத்தியா எனும் இடமே மூலகாரணமாய் விளங்குகிறது...
1767 ம் ஆண்டு பர்மா படையினரால் அழிக்கப்பட்டு , பின் வரலாற்றுச் சிறப்பிடமாக இன்றுவரையிலும் யுனெஸ்கோ வால் கருதப்பட்டு, அரசுத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இது தற்போதைய தலைநகரமான பாங்காக்கிலிருந்து, 85 கி.மீ வடக்கே அமைந்துள்ளது..இது தாய்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார , வரலாற்று சுற்றுலாத் தளமாகும்..இதனுடைய முழு பெயர் ஃபிர நகோன் சி அயுத்தயா.முக்கியமான சொள ஃபிரயா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது..
அயுத்தயா என்பதற்கு " வெல்லமுடியாத நகரம் " என்றொருபொருளும் உண்டாம்.இங்கு இன்னும் பழைய பிரசித்தி பெற்ற கோவில்கள் பராமரிக்கப்பட்டுள்ளன.
வாட் பிரா சி சன்பேட் என்பதுதான் மிகப்பெரிய கோவில். இதில் நிறைய தூண்கள் உண்டு..இதுதான் பழையஅரண்மனை பூஜை, விசேஷங்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டது..இதில் 340 கிலோ தங்கத்திலான ,16 மீட்டர் உயரமான புத்தர் சிலைமுன்பு இருந்ததாகவும், அதனை தீவைத்து பர்மாவினர், எடுத்துகொண்டதாகவும் வரலாறு கூறுகிறது..
விஹார்ன் பிர மொங்கோல் போபிடாஹ் வில் பெரிய வெண்கல புத்தர் சிலை உள்ளது..
வாட் தம்மிகரட் டிலும், இன்றும் கோவிலும் பூஜைகளும் நடைபெறுகிறது.. மேலும் அதிசயமாகசுவரிலிருந்து பெரிய மரம் ஒன்று வளர்ந்து வருவது அதிசயமானதும்.
வாட் ரட்சபுரானா வில் நிறைய தங்கச்சிலைகள் இருந்ததாகவும், கலை வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தனவாம்.இதனுள் உள்ளே உள்ள படிக்கட்டு வழி சென்றால் இன்னும் பழங்கால ஓவியங்களை காணலாம்.
வாட் பிரா மஹாதட் ஒரு மாபெரும் கோவில். இதில் புத்தரின் சிலையில் உள்ள தலையை சுற்றி மரம் வளர்ந்திருப்பதை காணலாம்.
வாட் பிர ராம் ல் இருந்து ஆயுத்தயாவின் இடங்கள் முழுவதையும் காணலாம்.பிர சேடி சி சூரியோதாய் , வெள்ளை மற்றும் தங்க நிற தூண்கள் நிறைந்தவை.. இவை முன்னாள்,அரசியாரின் நினைவுக்காக கட்டப்பட்டது..தோட்டத்துடன் அழகாக காட்சியளிக்கிறது..
வாட் பு காவ் தாங் பெரிய வெள்ளை தூண்களால் கட்டப்பட்டுள்ளது. அதனுள் பெரிய உருவிலான சிரித்தபடி இருக்கும் புத்தர் சிலை உள்ளது.
வாட் சியுங் தா, வாட் நா பிரா மெரு, வாட் ப நான் சேர்ங் போன்றவையும் சிறியதும் , பெரியதுமாக பல புத்தர் சிலைகள் கொண்டவை.
வாட் யாய் செய் மொங்கோன் ஒரு பெரிய கோவில், படுத்தபடி இருக்கும் புத்தர் சிலை பிரசித்தம்.








தாய்லாந்தில் வருடப்பிறப்பு ( ஏப்ரல் 13-15)


----------------------------------------------------------
தாய்லாந்தில் கொண்டாடப்படும் அனைத்து விசேஷங்களிலும் முக்கியமானது "சொங்க்ரான்"( songkran) எனப்படும் தாய்லாந்து வருடப்பிறப்பே..இது பக்கத்திலுள்ள கம்போடியா, லாவோஸ், மற்றும் பர்மாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது...



சொங்க்ரான்" என்பது சமஸ்கிருதத்திலிருந்து வந்த வார்த்தையாகும். அதாவது சூரியன் மற்ற ராசிக்குள் பிரவேசிப்பதை குறிப்பது..முக்கியமாக மேஷ ராசிக்குள்..அதன் முழுப்பெயர் மஹா சொங்க்ரான் எனவும் அழைக்கப்படுகிறது...



இந்த விடுமுறை நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. ஏப்ரல் மாதம் 13ம் தியதி ஆரம்பித்து 15ம் தியதி முடிவடையும்..சிலசமயம் 16ம் தியதியும்..
இது இந்தியாவில் ஹோலி பண்டிகையைப்போலவும் கொண்டாடப்படுகிறது...



இதுதான் தாய்லாந்து மக்களின் பாரம்பரிய திருநாள், விழா எனலாம்..அவர்கள் முழுமையாக விடுமுறையுடன் குடும்பத்தாருடன் இன்பமாக தண்ணீர் தெளித்து கொண்டாடுவார்கள்.
இத்திருநாளில் புத்த கடவுளுக்கும் பெரியவர்களுக்கும் வாசனை திரவியத்துடன் கலந்த தண்ணீர் வழங்கி மரியாதை செலுத்துவார்கள்.பழையன கழித்து ,வீடு கோவிலை சுத்தம் செய்வார்கள்.



ஊர் முழுவதும் தண்ணீர் லாரிலாரியாக வைத்து போவோர் வருவோர் எல்லோர் மேலும் அடித்து விளையாடுவர் வயது வித்தியாசமில்லாமல்.. எல்லோரும் அதை நகைச்சுவையாகவே ஆசீர்வாதமாகவே ,எடுத்தும்கொள்வர்...மேலும் முக்கிய காரணம் கொளுத்தும் வெயில் காலத்துக்கு தண்ணீர் விளையாட்டு சுகமாகவும் இருக்கலாம்..
இது சிஃபி.காம் இல் சித்திரை சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை.


















காஞ்சனாபுரி..இயற்கையில் ஒர் சொர்க்கபுரி.






மன்னர் ராமா I ( Rama I) காஞ்சனாபுரியை பர்மா படையினரிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏதுவாக விசாலமாக்கிய இடம்..த்ரீ பகோடா பாஸ்( Three Pagodas Pass ) வழியாக பார்மாவினர் தாய்லாந்துக்குள் நுழையாமல் இருக்க காஞ்சனாபுரியில் படைத்தளம் அமைக்கப்பட்டது.உலகப்போர் I ன் போது தாய்லாந்து கலந்து கொள்ளவில்லை..ஆனால் ஜப்பானிய படை பர்மாவில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு சாமான்கள் அனுப்ப மிகப்பெரிய ரயில் பாதை தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் இடையே கட்டியது.இதில் ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாலந்து மற்றும் தாய்லாந்து வீரர்களும் உண்டு..
1.அதில் முக்கியமானது க்வாய் (Bridge on the River Kwai ) எனும் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம்..இதில் 100,000 க்கும் மேல் சிறைக்கைதிகள் கட்டுமானத்தின்போதும், நோயினாலும்,மரணமடைந்தனர்.அதிலிருந்து இந்த பாலம் டெத் ரெயில்வே ( Death Railway ) அன் அழைக்கப்பட்டு வரலாற்று சின்னமானது.. இது பற்றி ஆங்கிலப்படங்களும் வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.இது பற்றி ஒரு ஜெத் வார் மியூசியம் விரிவாக சொல்கிறது.(The JEATH War Museum War & Art Museum
JEATH stands for Japan, England, America, Australia, Thailand and Holland,)
2. பிரசித்தி பெற்ற புலி கோவில் இங்குள்ள புத்த பிட்சுக்களால் பாதுகாக்கப்படுகிறது.. புலிகள், பூனைகள் போல பழக்கப்பட்டு அன்பு செலுத்தப்படுகிறது...பார்வையாளர்களும் புலியை தொட்டு விளையாடலாம்.. (நாங்கள் புலி பூங்காவில் புலி குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.. புலியை மடி மீது அமர்த்த பெரியவன் பால் புட்டியை வைத்து புலிக்கு குடுக்க , சின்னவன் வாலைப்பிடித்துக்கொண்டு விட மறுத்தான்...)மேலும் குரங்கு பள்ளிக்கூடத்தில், தேங்காய் பறிக்கவும், கூடைப்பந்து விளையாடவும் பழக்குகின்றனர்.
3. நிறய விலங்குகள் கொண்ட சஃபாரி பார்க். இதனை பூங்காவின் பேருந்திலோ, மகிழ்வுந்திலோ சென்று விலங்குகளை பார்க்கலாம்..விலங்குகள் அதன் இயற்கையான சூழ்நிலையிலேயே பார்ப்பது சிறப்பு.
4.எரவான் நீர்வீழ்ச்சி: தாய்லாந்தின் மிக அழகான , நீர்வீழ்ச்சி.. இது 7 அடுக்குகளையும் , 1500 மீட்டர், நீளமும் கொண்டு, ஓடிவரும் அழகு நெஞ்சை கொள்ளை கொள்ளும்..இதில் அனைவரும் குளித்து குதூகலிக்க ஏற்றதாய் உள்ளது.இதன் அருகில் பல குகைகள் உள்ளன. அதனுள் சுண்ணாம்பு கற்களால் ஏற்பட்ட ஸ்டலக்மைட்ஸ், ஸ்டலக்டைட்ஸ்,( limestone formations, stalagtites and stalagmites ) தூண்கள் கண்டுகளிக்கலாம்.
5. பொழுதுபோகு அம்சங்கள்..
கோல்ஃப் விளையாட்டு மைதானம், பாறைகள் ஏறுதல், கயாக் என்ற சின்ன தோணியில் காட்டாற்றில் முரட்டுத்தனமாக பயணம் செய்தல், ஆற்றினிடையில், காட்டுக்குள் யானைசவாரி, போன்ற நிறைய உள்ளன..
6. எப்படி செல்வது: தாய்லாந்து தலைநகரிலிருந்து 150 கி.மீ மேற்கே உள்ளது..காரில் 1.30 மணி நேரத்தில் சென்றாலும், ரயிலில் 4 மணிநேரம்.. ரயிலில் செல்லும் போது ஒரு பக்கம் க்வாய் ஆற்றின் வளைவில் , மற்றொரு பக்கம் மலைகளைத்தொட்டுக்கொண்டு, ஆபத்தான சரிவில் மெதுவாக ஊர்ந்து செல்லுவது மிக ரம்மியமாக, அதே சமயம் ஆபத்தானதாகவும் , த்ரில்லிங்காகவும் இருக்கும்..கீழே சுற்றுலாவுக்கென்றே ஆற்றில் படகு வீடுகள் இருக்கின்றது..வருடம் முழுதும் ஒடும் தண்ணீர், மழைக்காலத்தில் வேகத்தோடு சீறி வருவது, மிக அழகு.மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்க..