Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Monday, August 29, 2011

ஏன் சென்றாய் செங்கொடி?.





செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத்ததை தந்ததா?.சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது இது..அவரவரின் கொந்தளிப்பான, உணர்ச்சிகர சூழல் முக்கிய காரணம்..இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்களுக்கு தலைமை வழிநடத்தியிருக்கவேண்டியவர்கள் நீங்கள்..?. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பதார்க்கு.ஒருபக்கம் மக்கள் சக்தியை எளிதாக எடைபோட்டுவிட்டாரோ என தோணுது.. கொள்கையுடையோர் அவசரப்படலாமா?

லட்சம் பேரை தம் பின்னால் அணிதிரட்டக்கூடிய வலிமையுடையோர், பல்லாயிரம் தலைவர்களை உருவாக்கக்கூடியோர் நீங்கள்.. எப்போது மரணத்துக்கு அஞ்சாதவராக இருக்க முடியுதோ, அப்போது உலகம் உங்கள் கையிலல்லாவா?.. சாதித்திருக்கவேண்டாமா பல வழிகளில்..?. உங்கள் உணர்வுகளின் கொந்தளிப்பு பலரை அடைய செய்திருக்கணுமே தவிர, அவசரப்பட்டீரே..சாவை துச்சமென நினைப்போர் புதிதாக அல்லவா பிறக்கின்றனர் மக்களின் தலைமையாக..?

இந்த தூக்குதண்டனை பிரச்னை மட்டுமே நம் முன்னால் இருப்பதல்ல. பல சமூக பிரச்னைகள் , வாழ்வாதார பிரச்னைகள் நம் முன்னால் ஆயிரக்கணக்கில் உள்ளது.. பல அப்பாவி மக்களுக்கு இன்னும் அதுபற்றி தெரியக்கூட இல்லை.. அப்படியிருக்கையில் இப்படி உங்களைப்போன்ற கொள்கையுடையோர் பொசுக் னு முடிவெடுத்தால்?.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய.. அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்புகள் எக்கச்சக்கம் இங்கே.. இதே போல தொடர்ந்தால் நல்லவர் இல்லாத இடங்களில் நரிகளின் நாட்டாமைகள் தொடங்கிவிடும்.. கொள்கையுடையோரை இழப்பது லட்சம்பேரை இழப்பதற்கு சமம் என புரிந்துகொள்ளணும்..


கொள்கையுடையோர் உயிர் அவருக்கு மட்டுமானதல்ல.. எத்தனை பேருக்கு துணிவை தந்திருக்கலாம் நீங்கள்.. ?.. எத்தனை பேரை போராட வைத்திருக்கலாம் உங்கள் சொற்கள்..?.. உங்கள் மரணம் வலி தருது..சரி/தவறு என்ற விமர்சனமில்லை.. சகோதரி ஐரோம் சர்மிளா தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறாரே..ஏன்?.. ஏதிரிகளுக்கு உங்களைப்போன்ற கொள்கையுடையோரின் மரணம் வரவே..

மக்களுக்காக சிந்திக்கக்கூடியோராக பிறக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..இத்தகையோரின் உயிர் சாதாரண மக்களின் உயிரை ஒப்பிடுகையில் நிச்சயம் விலைமதிப்பில்லாதது.. உங்களுக்கான போராட்டத்தை செய்துவிட்டே சென்றுள்ளீர்கள்.. இருப்பினும் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பீர்கள் என்ற ரணம்.. எத்தனை பேரில் மாற்றம் கொண்டு வந்திருப்பீர்கள்?..அவை மிகப்பெரிய இழப்பல்லவா?.. மனதால் ஏற்கனவே மரணித்தோர் பலருண்டு இங்கே.. இருப்பினும் இறுதி மூச்சுவரை கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.. வெளிச்சத்துக்கு வராமல்..

விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே!

மூவருக்காக இங்கே மூன்று பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனரே..தன்னையே வருத்திக்கொண்டிருக்கும் அநத ச்கோதரிகளின் உணர்வுகள் வலிமையற்று போய்விடக்கூடாது.. அவையும் தற்கொலைக்கு ஈடானதுதான்.. உணவளிப்பது வயற்றுக்கு மட்டுமா?.. இல்லையே?.. எல்லாம் செயலற்று போகுமே அவர்களுக்கு?.. நிமிடங்கள் போகப்போக வலிகள் கூடுமே சகோதரி?..நொடிப்பொழுதில் உயிர் விடுவதை விட ரணமல்லவா இது?..வணங்குகின்றேன் அச்சகோதரிகளை..




செழுமையாக வளர்ந்து இன்னும் பலரை வளரச்செய்யவேண்டிய கொடி , இன்று கருகியதேன்..

உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம்.
தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே..

இனியும் இதுபோல நடக்காமல் பார்ப்பதும் நம் அனைவரின் கடமையே..

தோல்வி நிலையென நினைத்தால்?.

Each victim of suicide gives his act a personal stamp which expresses his temperament, the special conditions in which he is involved, and which, consequently, cannot be explained by the social and general causes of the phenomenon.
Emile Durkheim


படம்: கூகுள்
Link

Monday, August 22, 2011

வலிமையை கற்பது?



மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..





( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்




Friday, June 17, 2011

குழந்தைகளா அடிமைகளா , முதலீடுகளா ?..


வாழ்க்கை எனப்து எதற்கு?.. மிக சந்தோஷமாக வாழணும் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியாக வாழணும்..

முடியுமா?.. நிச்சயமாக முடியும்.?.

எப்படி.?.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அளவோடு வைத்துக்கொண்டோமானால்..

ஆனால் என்ன ஆகியுள்ளது?.. அளவுகோள்களே மாறிவிட்டது...

ஆசை பேராசையாக மாறியதை அறியவில்லை..

எதிர்பார்ப்புகள் திணிப்புகளாக மாறியதையும் அறியவில்லை..

சமீபத்தில் படித்திருப்பீர்கள் சரண்யா பார்த்தசாரதி பற்றி செய்திகளில்..

ஒரு காதலை ஏற்க முடியாமல் மருமகனை கொலை செய்த பெண்ணின் பெற்றோர்கள்..

இத்தனைக்கும் பெண்ணின் தாய் ஒரு ஆசிரியை..நம்பவே முடியாத செயல்..

தான் கொலை செய்வோம் என என்ணியிருப்பார்களா?..நிச்சயம் மாட்டார்கள்..

நல்ல ஒரு குடும்பமாகத்தான் இருந்திருக்கும்.. கஷ்டப்பட்டே குழந்தைகளை வளர்த்திருப்பார்கள்..

கொஞ்சி , கெஞ்சி நம்மைப்போலவே வளர்த்திருப்பார்கள்..

பணம் கொடுத்தே மெடிக்கல் சீட் வாங்கியிருப்பார்கள்.. குழந்தை படிக்க எல்லா உதவியும் தியாகமும் செய்திருப்பார்கள்..

ஆனால் எங்கே தவறு நடந்தது?..

அன்பு வைப்பதாக சொல்லி நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தை புகுத்துவதை நாமே அறிவதில்லைதான் சில சமயம்..

ஏனெனில் சுற்றமும் சூழலும் , நமக்கு அப்படி அமைகிறது.,.

மெடிக்கலோ , பொறியியலோ படித்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும் என எண்ண வைக்கப்படுகிறோம்..

இப்படி விழுந்து விழுந்து படிக்கும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துள்ளீர்களா.?


எல்லாத்துக்கும் டியூஷன், அல்லது சிறப்பு வகுப்புகள் என நேர இடைவெளி இல்லாமல் படும்பாடு..

இதில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அன்பா ஆதரவா உட்கார்ந்து பேசி குழந்தைகளிடம் மனம் திறந்து பேசக்கூட நேரமில்லை
இந்த வேகமான உலகில்..அதோடு நம் விருப்பப்படி பாடம் எடுத்து படிக்கும்போது வேண்டா வெறுப்பாகவும், பெற்றோரை எதிர்த்து பேச முடியாத மன அழுத்தமும்..

மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..

படிக்கவேண்டிய வயதில் படிக்கணும்தான்.. மறுப்பில்லை.. ஆனால் அதுவே திணிப்பாக இருந்திடக்கூடாது..

இதில் மட்டுமல்ல , மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் சிந்திக்க விடாமல்..


இத்தகைய குழந்தைகள் வெளியில் பாசம் கிடைத்தால் அதையே காதல் என நினைத்து தவறிவிட வாய்ப்புகள் அதிகம்..

வருகிற சினிமா எல்லாமே காதலைத்தான் சொல்கிறது.. தொலைக்காட்சியிலும் அதே..

பருவ வயது வந்ததும் காதல் வயப்படலாம் என நாம் அறியாததா?.. அதை மறைத்துத்தான் வைக்க இயலுமா?

அடிமைகளாக வளர்க்கப்படும் குழந்தைகள் , தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் வெளியே கிடைக்கும் பட்சத்தில் அதையே பெரிதாக
எண்ணுவதில்லை வியப்பில்லை..

இதேதான் திருமணம் தாண்டிய உறவுகளிலுமே காண்கிறோம்..

அடிமைத்தனமும், அதிகாரமும் இருக்குமிடமெல்லாம் இதே போல நடைபெற வாய்ப்புண்டு.. இது ஒரு சமூக பிரச்னையாக பார்க்கப்படவேண்டிய
விஷயம்..



வாலிப வயது வந்ததுமே பிள்ளைகளைன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்.. எரிச்சல் வரும் ஹார்மோன் மாற்றங்களால். நாம் சொல்வது எதுவுமே பிடிக்காது. நமக்கோ கோபம் வரும்.. நாம் நல்லதுதானே சொல்கிறோம் , இதுவரை நம் பேச்சை கேட்ட பிள்ளை நம்மை மதிக்கலையோ என்ற பயமும் ஈகோவும் நமக்கு..

கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டிய வயது.. சில குழந்தைகளுக்கு வீட்டை விட்டு தப்பிச்சா போதும் என்ற எண்ணம்.. ( வெளியே போய்
பார்த்தால்தான் தெரியும் வீட்டிலுள்ள சுகம் ) .

நாம் மட்டுமே வளர்க்கவில்லை குழந்தைகளை. புற சூழலுமே சேர்ந்துதான் அவர்களை நாலாபக்கமும் இழுக்கின்றது..

முரண்டு பிடிக்கும்போது விட்டுப்பிடித்தும் கண்டிப்பை கொஞ்சம் பொறுமையாகவும் எடுத்தாள வேண்டும்.

இங்கே சரண்யா விஷயத்தில் அவர் தன் காதலை சொன்னதும் அவசரம் அவசரமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ததாலேயே அவர்
உடனே திருமணம் செய்துள்ளார் பெற்றோர் சம்மதமின்றி..

இதே போல பெற்றோர் மிரட்டியதும் , பிளாக் மெயில் செய்ததும் , அவசரப்பட்டதுமாய் ஏகப்பட்ட கதைகளுண்டு..

ஏன் இந்த நிலைமை?..

ஆழுமைதான் காரணம்.. குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம்.. இது மிக தவறு..

என்னதான் நாம் பெற்றாலும் நம் குழந்தை என்றாலும் சொந்தம் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்கிறது..


இதை கலீல் ஜிப்ரான் மிக அழகாக சொல்கிறார் பாருங்கள்..


“Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you, and yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.





ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று அழுதபடி கண்ணீரில்.. அப்பாவோ சிறையில்..


சமீபத்தில் படித்திருப்போம் பஸ் விபத்து பற்றி.. அதில் திவ்யா என்ற பெண் நிச்சயதார்த்ததுக்காக சென்றவர்.. அந்த மகளையும் இழந்துவிட்டதே
அந்த குடும்பம்..


ஆனால் விபத்து என்றால் ஏற்கும் மனம் காதல் என்றால் கொலைவெறி வருவது ஏன்?.


ஏழை, பணக்காரன், சாதி, மதம் , இனம் என பல்வேறாக நம்மை நாமே பிரித்துக்கொண்டு கோழைகளாக வாழப்பழகியுள்ளோம்..

எது வந்தாலும் அதை ஒரு சேலஞ்சாக எடுத்து வாழப்பழகவில்லை.. அப்படி பழகியிருந்தால் இந்த வித்யாசங்களெல்லாம் எப்பவோ அழிந்து
போயிருக்குமே..


சக மனிதனை மனிதன் என்ற அளவுகோல் மட்டுமே கொண்டு நேசிக்க பழகியிருந்தா இத்தனை சுயநலமும் வெறித்தனமா பணம் சேர்க்கும் எண்ணமும் வந்திருக்காதே...

நானுமே திணிக்கப்பட்டே வளர்ந்தவள்தான்..( மதம் , சாதி, படிப்பு என ) .. இருப்பினும் இப்பதான் விபரங்கள் புரிய ஆரம்பித்தது..

என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்
எடுத்து சொல்வதுமே என் கடமை.. மற்றவை அவர்கள் பொறுப்பு..


லண்டனில் 16 வயதானதும் தனியே அனுப்பிடுவார்களாம் குழந்தைகள் பொறுப்பெடுக்க பழகிக்கொள்ள..அச்சமூகமும் அவர்களுக்கான
பாதுகாப்பையும் , பொறுப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.. பாலியல் குறித்த பயம் இல்லை.. ஒரே இடத்தில் ஆணும் பெண்ணுமாய் சேர்ந்தே
தங்குகின்றார்கள்.. இருவரின் பிரச்னைகளையும் புரிந்து கொள்கிறார்கள்.. சமாளிக்க பழகுகின்றார்கள்..

காமம் குறித்த தெளிவான பார்வையும் பாலியல் புரிதலும் இருக்கின்றது..

ஆனால் நமக்கோ ஆயுசுக்கும் குழந்தை என்றே கொஞ்சிக்கொண்டும் , அடிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்..அவர்களை சுயமாக சிந்திக்க
விடாமல்..வாழ்நாளெல்லாம் கைதியாக்கி சுமை சுமக்க வைத்து?..

நமக்கு பிடித்தமில்லாத காரியத்தை செய்துவிட்டு சிக்கலில் மாட்டினால் , சில நேரம் தோல்வி அடையவும் வாய்ப்பு கொடுங்கள்.. அவர்கள்
அதிலிருந்து மீண்டு வரும்போது துணையாக , ஆறுதலாக இருங்கள்.. அப்படி வளர்க்கப்படும் குழந்தை எல்லா சிக்கலையும் சமாளிக்கும் ..

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் னு சும்மாவா சொன்னாங்க.. நம்மைவிட பல விஷயம் தெரியுது இக்கால குழந்தைகளுக்கு..

நாம் யாருமே தவறே செய்யாதவர்கள் இல்லையே.. தவறிலிருந்தே பல பாடங்களை கற்கிறோம்..

வாழ்நாள் முழுதும் இறுதி மூச்சுவரை கற்றுக்கொண்டே இருக்கிறோம்..நமக்கு எல்லாம் தெரியும் என்ற பிரமையிலிருந்து விடுபடுவோம்..

நாமுமே குழந்தைகள் தான் சில நேரம்..

நம்மிடம் இருக்க போவது சில வருடங்களே அவர்கள்,.. சிறகு முளைத்ததும் பறந்துவிடுவார்கள்.. இந்த குறுகிய காலத்தை இனிமையாக கழிப்போம்..


மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்..



நீண்டு விட்டது பதிவு.. பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்..:)


இது தொடர்பான பதிவை படிக்க - http://www.vinavu.com/2011/06/14/chennai-murder/


(படம் : நன்றி கூகுள்.. அலுவல் வேளை பின்னூட்டம் தவிர்க்கவும்.. )



Wednesday, April 27, 2011

ஏழை என்ற இளக்காரம்?.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-school-urges-parents-to-protest-against-RTE/articleshow/8085252.cms

மேலே உள்ள சுட்டியில் ஏழைகள் வசதியான பள்ளியில் ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கும் உரிமையை மறுக்க ஒரு பள்ளி அழைப்பதாக செய்தி..

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School.


ஏழைகள் எல்லாரும் மொத்தமா நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தா என்னய்யா பண்ணுவீங்க?.. முட்டாள்கள்.

ஏழை என்றால் ஒழுக்கமில்லைனு உங்களுக்கு யார் சொல்லித்தந்தா.?

In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

ஒழுக்கத்த சொல்லித்தரவேண்டிய உங்ககிட்டயே ஒழுக்கமில்லையே..

வன்மையாக கண்டிக்கத்தக்கது..

எத்தனை துணிவு..?.. இதை சொல்ல?..

டிசிப்பிளீன் னா எது?,.. இந்த இங்கிலிபீசுல கெட்ட வார்த்தை பேசிட்டு அது சரின்னு அர்த்தம் சொல்ற கேவலமா?..

இல்ல பெரிய படிப்பு படிச்சுட்டு வொயிட்காலர் பிராடுதனம் , லாபியிங் பணறதா?..
குடிச்சுட்டு வேகமா கார் ஓட்டி பாதசாரிகளை கொல்வதா?.. ஈவ் டீஸிங் செய்து தற்கொலைக்கு தூண்டுவதா?.. எழுத்தில் விபச்சாரம் செய்வதா?..ரேகிங் ல் மாணவனை துண்டு துண்டாக வெட்டுவதா?.. நீதிக்கு 15 வருடம் காத்திருக்க வைப்பதா?.. எதை சொல்லுவோம் டிசிப்ளின் என.?..



ஆமா அது தெரியாதுதான் ஏழைகளுக்கு.

"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. //

குவாலிட்டியா?.. மாநில ரேங்க் எடுக்குது அரசு பள்ளிகள்..

(http://www.dinamalar.com/News_detail.asp?Id=19020, http://www.dinamalar.com/news_detail.asp?Id=215485 : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது,http://article.wn.com/view/WNAT7d5d8a4fa74cee7b251d08ec41ba41d9/ தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post.html ).

இந்த மாணவ/மாணவிகள் ஆசிரியர்கள் கேள்விப்பட்டால் எத்தனை வருத்தம் வரும்.. இதைவிட கேவலப்படுத்த முடியுமா இவர்கள் உழைப்பை..???

Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

குட் ஸ்கூல் கு அர்த்தம்/அளவுகோல் என்னென்ன?.. காமிராவில் சக மாணவியை படம் பிடித்து இணையத்தில் போடும் பிள்ளைகள் படிக்கும் பள்ளியா?..போதை மருந்துக்கு அடிமையாகும் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ.?.

இதை சொல்பவர் வீட்டில் சமையல்காரர், தோட்டக்காரர் , ஓட்டுனர், இவர்களெல்லாம் ஒழுக்கமற்றவர்களா?.. அப்படி இருந்தால் இவர்களால் இன்று இப்படி பேசமுடியுமா?..

கல்வி என்பது என்ன?..

அறிவியலும், பூகோளமும் , பொருளாதாரம் பற்றி படிப்பது மட்டுமா?.. வாழ்வில் பணம் சம்பாதித்து வெற்றி பெற்று பின் மன அமைதியின்றி வாழ்நாளெல்லாம் மருத்துவரே கதி என அலைவதா?..

நல்ல கல்வி வாழ்க்கைக்கான பாடமாக இருக்கணும்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சக மனிதனை மனிதத்தன்மையோடு நேசிக்க, அவனும் சுவாசிக்க வழி வகுக்குமாறு கல்வி இருக்கணும்..

முரண்களை ஏற்றத்தாழ்வுகளை ஏற்கும் பக்குவம் சொல்லித்தருவதாக அல்லவா இருக்கணும்.?

சிறு வயதிலேயே பிரிவினையை போதிக்கும் கூடங்களை மூடிவிட்டால்தான் என்ன?..

ஜப்பானில் சுனாமி வந்தா பதறாம இருக்கிறார்கள்.. ஏன்.. எப்படி வந்தது அந்த பொறுமை..?. பெருந்தன்மை..?.. எப்படியும் மண்ணுக்குள் போக போறோம்.. இப்பவோ எப்பவோ.. என வாழ்நாள் முழுதும் குழந்தைப்பருவத்திலிருந்தே தயார்படுத்தப்படுகின்றனர்.. வாழும் நாட்களில் நம்மால் முடிந்ததை சக மனிதருக்கு செய்யணும் என்ற ஆவல் அங்கே பழக்கப்படுத்தப்படுகிறது..


நம்மூர் தமிழர்கள் மலேஷியாவில் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்வதை பார்த்தேன்.. மகிழ்ச்சியாக , மரியாதையாக நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.. நம் நாட்டில்.?.. எப்ப இந்த மாற்றம் வரும்.. யார் செய்யப்போகிறார்கள்..?

டிஸ்கவரி சேனலில் , காட்டில் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் பாம்பை தின்று ஓடையில் ஓடும் நீர் குடித்து, மரணித்த ஒட்டகக்கறியை பிச்சி எடுத்து தின்பதாக காண்பிக்கின்றார்கள்.. ஆக மரணிக்கும் சூழல் வந்தால் அடுத்தவனை கொன்றாவது நாம் பிழைக்கணும் எனும் என்ணமுள்ள அல்ப மனிதர்களே நாம்.. ஆனால் நாகரீகம் என்ற பேரில் பல விதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும், எண்ணம் இன்னும் கீழ்த்தரமான சக மனிதனை பிரித்து பார்க்கும் விதமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது..

எத்தனை மதம் வந்தாலும், நான் மதவாதி என சொல்லத்தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே தவிர அதிலுள்ள நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படாமலே இருப்பது விந்தைதான்..

யோகா , ஆன்மீக சொற்பொழிவெல்லாம் யார் கேட்கிறார்கள் னு கவனித்துள்ளீர்களா?.. ஏழைகளின் யோகா, ஆன்மீகம் எது?.. ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக வயல் வேலையோ மற்ற வேலையோ ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் வெள்லந்தி மனதோடு.?.. ஏனெனில் அடுத்தவனை கெடுத்து , போட்டுக்கொடுத்து வாழ்க்கையில் எப்படி முன்னேற என்ற எண்ணம் அவர்களை அரிப்பதில்லை.. தெளிவா இருக்காங்க.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் னு தெரியுது.. உயர்தர சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில்லை..ஆனாலும் எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களிடமல்லவா இருக்கிறது..

கிலோமீட்டர் கணக்கில் நடக்க முடியும்.,. ஆனா நாம் வீட்டுக்குள்ளேயே மெஷின் வாங்கி வைத்து அதே நடையை வெட்டியாக நடக்கிறோம்.. உலகத்தை அவர்கள் சுமக்கிறார்கள்.. நம்மைப்போன்றவர் நவீன உபகரணங்களால் பாரமாக்குகின்றோம்..மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.. அவர்களுக்கு அப்படியில்லை.. எச்சூழலிலும் வாழ முடியும்.. யார் பலசாலி?.. யாரிடமய்யா ஒழுக்கம் அதிகமிருக்குது.?..

பசிக்காக ஏழை திருடுகிறான்.. ஏழைப்பெண் பாலியல் தொழில் செய்கிறாள்.. படித்தவன் பெரிய அளவில் ஊழல் செய்கிறான்.. சீதாம்மா தன் எழுத்தில் சொன்னது போல சில பணக்காரன் ( அந்த காலத்திலேயே ) கார் கீயை மாற்றிக்கொள்கிறான்.. சினிமாவில் பெண்ணை போகப்பொருளாய் காண்பிப்பது , உடை குறைய குறைய அவளுக்கு பணத்தை புகழை அள்ளி அள்ளிக்கொடுப்பது மேல்தட்டு நாகரீகம்..???. அப்படித்தானே?.


ஏழைகளில் சேற்றில் கைவைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறை உண்ணும்போதும் எண்ணணும் என குழந்தைகளை பழக்குவோம்.. இனியாவது நாமும் திருந்துவோம், இதுவரை எப்படி இருந்தாலும்..

சுத்தப்படுத்தும் வேலையில் அவர்கள் இல்லையென்றால் நாடே நாறிவிடும் என்ற நியாபகமிருக்கட்டும் நமக்கு..

நல்லவர் கெட்டவர் எல்லா நாட்டிலும், இனத்திலும் , உண்டு.. அதுக்கு ஏழை என்ற அப்பத்தமான காரணம் சொல்லும் அருவருப்பை களைவோம்.. பணக்காரரிலும் நல்லவர் உண்டு.. பணக்காரர் எல்லாம் கெட்டவர் என ஏழை ஒதுக்குவதில்லையே..

*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..


போலித்தனத்திலிருந்து இனியாவது வெளிவந்து சக மனிதனை நேசித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் ஏதாவது செய்தோம் என்ற மன நிறைவோடு மரணிப்போம்.. அப்போது யோகம் , தியானம் ஆன்மீகம் எதுவும் நமக்கு தேவையிராது...

( செய்தி பார்த்த அவசரத்தில் எழுதியது.. தவறிருப்பின் மன்னிக்கவும்..தயவுசெய்து அலுவலிலிருந்து பின்னூட்டம் தவிர்ப்போம்.. நன்றிகள்.)

லேட்டஸ்ட் செய்தி -




படம் .: நன்றி கூகுள்..

Saturday, April 9, 2011

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?






யார் இந்த அன்னா ஹசாரே.?.

நன்றி இட்லிவடை
அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

இந்த 71 வயது இளைஞர் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர்.

அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார்.

தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

--------

இப்படி அற்புதமா போகுது இவரைப்பற்றிய செய்தி.. ஆனால் நடப்பதென்ன?.

மத்திய அரசு பணிந்தது: உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறார் ஹசாரே.!!!!!!!

காந்தீயம் வென்றுவிட்டது ..

--------------------

இந்தியருக்கு மட்டும் வருடம்பூராவும் ஏப்ரல் ஃபூல் ஏன்.?..

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். - அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுக்கிற மாதிரி நடிக்கும்..

-
அன்னா ஹசாரே ஏழை.

அவர் மாசற்றவரே.. மிக நல்லவரே.. ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம?..

இந்த போராட்டத்தில் எனக்கு ஆதரவு தரும் அனைவரும் என்னைப்போல அப்பழுக்கற்றவராக மட்டுமே இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கணும்?..அது எத்தனை முக்கியம்..?




அவருக்காக மெழுகுவத்தி ஏந்தும்போது,



வாழ்நாளில் ஊழல் செய்தவன் , துணை போனவன், அடுத்தவன் உழைப்பை சுரண்டியவன் , அடுத்தவன் வாழ்வை அழித்தவன் , மிரட்டியவன், மிரட்டல் வந்ததா கதறி பொய் சொன்னவன் , அதுக்கு தொண போனவன் ,சாதீ ய மும்முரமா வளர்ப்பவன் , பெண்களை இழிவுபடுத்துபவன் , ஆபாசத்தை வளர்த்தெடுத்து சிறார் கொலைக்கு துணை போறவன், எப்பவும் கெட்ட வார்த்தை மட்டுமே பேசி சமூகத்தை கழிப்பிடமாக்குபவன் , மதவெறி பிடித்தவன் , வன்முறை செய்பவன், அதற்கு துணை போகிறவன் கையெல்லாம் பொசுங்கி போற மாதிரி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.. :)))) ( ன்/ள் போட்டுக்கலாம் )

எத்தனை பேரால் மெழுகுவத்தி ஏந்த முடியும்னு தெரிஞ்சிருக்குமே..

என் கையும் பொசுங்கியிருக்குமே..:)..எப்பவோ நானும் லஞ்சத்துக்கு துணை போயிருக்கேனே..அவ்வ்..


அன்பின் அண்ணா ஹசாரே,

அடுத்த முறை உண்ணாவிரதம் இருக்கும்போது உங்களை ஆதரிப்பவர்களும் உங்களைப்போல மாசற்றவராக மட்டுமே இருக்கணும் என வேண்டுகோளை மறக்காமல் சொல்லிடுங்கள்..( இல்லையென்றால் உங்களோடு சேர்ந்து உங்கள் போராட்டத்தையே அசிங்கப்படுத்துகிறோம் திருடர்களாகிய நாங்கள் )


ஊழல் என்ற பூதம் ஏதோ அரசிடம் மட்டுமே இருப்பதுபோல ஊடகம் பூச்சாண்டி காண்பிப்பதும் , அதை விரட்ட , மக்கள் படையெடுப்பதும் பங்கெடுக்கும் எமக்குள்ளே குறுகுறுப்பை தருது..

எங்ககிட்டே குடியிருக்கும் பேயை யார் விரட்டுவது.?..

உங்களிடம் உள்ள சக்தி அரசை திருத்துவதாக மட்டுமல்லாமல் , பொதுமக்களுக்கும் ஒரு பாடமாக இருந்தால் நன்று..


வேர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பலவிதத்தில் பரவியிருக்கு.. தாமிரபரணி தண்ணீரை கொக்கோ கோலா எடுத்தா கண்டுக்க மாட்டோம்,. ஏன்னா அதை பற்றி எடுத்து சொல்ல இன்னொரு காந்தியோ அன்னா ஹசாராவோ தேவை நமக்கு.. இவர் போராட்டம் ஒரு சட்டம் ஏற்ற தான்.. அப்படியென்றால் இதுவரை இருக்கும் சட்டங்கள் பயன்படவில்லை என்றுதானே அர்த்தம்.. அதை நேர்வழியில் செலுத்த எந்த அன்னா ஹசாரா வர காத்திருப்போம்..?

நாம் அன்றாடம் கண்டுகொள்ளவேண்டிய கலங்க வேண்டிய பிரச்னை ஆயிரம் நம்மைசுற்றி இருக்கிறது.. எப்பவும் ஒரு அன்னா ஹசாரேவுக்காக நாம் காத்திருக்கோம்.. அவர் எடுத்த காரியம் வெற்றி பெற்றதும் மறந்திடுவோம்.. எங்கேயோ ஏதோ வெற்றி பெற்றதாகவும் அதில் பங்கெடுத்ததற்காக நம்மை நாமே பாராட்டி ஏமாற்றிக்கொள்வோம்..


ஊழல்வாதி பிறப்பதில்லை.. நம்மிலிருந்துதான் உருவாகிறான்.. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்குமுன் நம்மை சுயபரிசோதனை செய்துகொண்டு இனி பங்கெடுப்போம்.. அதையே அன்னா ஹசாரே போன்றோரும் எதிர்பார்ப்பதோடு அழுத்தமும் தரணும்.. இல்லையென்றால் இது பத்தோடு பதினொன்று அவ்வளவே.. நாட்டை திருத்த கூட வேண்டாம்.. முதலில் அன்னா ஹசாராவைப்போல் நம்மால் மாற முடியுமா என எண்ணிப்பார்த்துக்கொள்வோமே.. அப்போது அந்த மெழுகுவத்திக்கும் ஒரு வெளிச்சம் இருக்குமே..

இங்குதான் நாம் தவறு செய்கிறோம்.. போராட்டத்தின் அர்த்தமே நமக்கு தெரியவில்லை.. எங்கோ நடக்கும் போராட்டத்துக்கு ஊடகத்தின் ஆதரவு இருப்பதால் மட்டுமே நாம் ஆதரவு தெரிவிப்பதோடு நின்றிடக்கூடாது.. அன்றாட வாழ்க்கையில் போராட பழக்கணும் குழந்தைகளை , சாதி வெறி, மத வெறி, பெண்ணடிமை , லஞ்சம் , ஊழல், சமூக விரோத செயல்கள் , ஏற்றத்தாழ்வு, திருநங்கை வாழ்வு, வன்முறை, இப்படி பலப்பல.. இதை செய்ய நாள் நட்சத்திரம், துணைக்கு ஆட்படை எண்ணி காத்திருக்க தேவையில்லை. சகஜமாக்கப்படணும் கேள்விகள் கேட்கணும்..தினமும்..

நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.. நம் நட்பிடம் தவறு என்றால் சொல்ல துணியணும்.. நம் கட்சி என்றாலும் நம் ஊர் , நம் இனம் , நம் மொழி என்றாலும் தவறை தவறு என எடுத்து சொல்ல துணிவை வள்:அர்க்கணும்.. இழிவுகளை பாராட்டுகளாக எடுக்க பழகணும்.. இல்லை நான் என் சொந்த பந்தங்களிலெல்லாம் தட்டி கேட்டால் விலக்கிடுவார்கள் , அதனால் நான் அரசை மட்டுமே கேட்பேன் , நானும் திருந்த மாட்டேன் என்றால் தயவுசெய்து அப்படியான நாடகத்தனமான ஆதரவு தருவதை விட நாடு எக்கேடும் கெட்டுப்போகட்டும் என விட்டுடுங்கள்..

மதுரையில் திரு.சகாயம் அவர்கள் பல சிக்கலில் மாட்டியுள்ளார்.. ஒரு நல்ல மனிதரை நல்லது செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.. நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம். ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவருக்காக போராடலாமா?.. பயம் வருகிறதல்லவா?..

இதுதான் நாம்.. அதனால், காந்தியம் வென்றுவிட்டது , என நம்மை நாமே இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக்கொள்ள பழகிவிட்டோம்..

சமூகத்தில் உள்ள அனைத்து விரோதப்போக்குக்காகவும் , மனிதத்தன்மையற்ற செயலுக்காகவும் போராடணும், அன்றாடம்..நின்றுவிட்டால் மூழ்கிடுவோம்.. இது ஓடும் தண்ணீர் .. இடைவிடாமல் எதிர்நீச்சல் தேவை நமக்கு.. நம்மைப்பார்த்து பின்னால் வருபவர்களும் பழகிடட்டும்..

மெரீனா பீச்சுக்கு போக கூட தேவையில்லை.. கணினி முன் உட்கார்ந்தே உங்கள் கோபமான எழுத்தால் போராடலாம் நாகரீகத்தோடு.. மக்களிடையே உண்மை எது பொய் எது என விழிப்புணர்ச்சி கொண்டு வர போராடலாம்..

போராட்டம் என்பது வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா அல்ல கூட்டம் கூட்ட , பங்கெடுத்து மகிழ..



( போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை காயப்படுத்தவோ அவமானப்படுத்தவோ இந்த பதிவு அல்ல...அவர்கள் பங்கெடுப்புக்கு என் வாழ்த்து, பாராட்டு ஒரு பக்கமுண்டுதான்.. ஆனால் போராட்டம் என்றால் என்ன என புரியாமல் இருக்கிறோமே என்ற வருத்ததில் சில கருத்துகளை பகிர மட்டுமே.. புரிவோம்.. பங்கெடுப்போம் தினமுமே.. )

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?..
-----------------------------------------------------------------------------------------------------------------

பதில் : நான் அன்னா ஹசாரே போல் சிறிதளவாவது மாறனும்..





படம் : நன்றி கூகுள்..





Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.

Thursday, March 24, 2011

எண்ண அலைகள்..- நேர்மறை எண்ணம் வளர்ப்பதெப்படி..? -1




எண்ண அலைவரிசை பற்றி அப்பப்ப ஆர்வமா

படிப்பதுண்டு.. அது குறித்து எழுதணும் என்ற ஆர்வமும்

எப்போதும் உண்டு..

நிதானமாக உட்கார்ந்து எழுதணும். அதற்கான நேரமும்

வாய்ப்பும் இப்பதான் கிடைத்துள்ளது..

எனக்கு எல்லா விஷயமும் தெரியாது,... நானும்

பயணித்து உங்களுக்கு தகவல்கள் அளிக்க போகிறேன்..

சந்தேகம் வந்தால் கேளுங்கள். பதில்

கண்டுபிடிக்கிறேன்.. ஏனெனில் என் ஆர்வம் இதில்

அப்படியானது..

வாருங்கள் பயணிப்போம்..


------------







ஒரு கல்லை நாம் குளத்தில் எறிந்தால் அது எப்படி

அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்குகின்றதோ

அதே போலத்தான் மன அலைகளும்..ஆனால் ஒரு

வித்யாசம் உண்டு இங்கே..

நீரின் அலைகள் ஒரே தளத்தில் பயணிக்கும்.. ஆனால்

மன அலைகளோ ஒரு மையத்திலிருந்து பல்வேறு

திசைகளிலும் பயணிக்கும்...பூமியில் நாம் எப்படி காற்றால்

சூழப்பட்டிருக்கோமோ , அதே போல மன

எண்ணங்களின் கடலால் சூழப்பட்டிருக்கோம்.. ஆக

இந்த எண்ணங்களின் அலைவரிசை பிரயாணப்படும்

போது தூரத்துக்கேற்ப அவைகளின் சக்தி

வேறுபடுவதோடு , எதிர்படும் எல்லாவிதமான

அலைவரிசைகளிலும் முட்டி மோதியே செல்கிறது..

நம்மிடம் வரும் தேவையற்ற எண்ண அலைவரிசைகளும்

கூட எங்கிருந்தோ வரும் மிக சக்திவாய்ந்த

எண்ணங்களின் அலைவரிசையின் வெளிப்பாடே..ஆனால்

நாம் அந்த அலைவரிசையோடு ஒத்து போவது நம்

மனதை பொறுத்ததே.. எத்தனை முயன்றாலும் நாம்

அதை ஏற்காமல் அதை தவிர்க்கவும், விலகிக்கொள்ளவும்

செய்யலாம்..

அதனால்தான் பல நல்ல விஷயங்களை நல்ல நட்புகளை

, ஆன்மீகமோ, நல்லறிஞர் நூல்களோ படிப்பது , அதை

உள்வாங்கிக்கொள்வது , நம் சிந்தனைகளை உயர்வாக

வைத்திருக்க செய்யுது.. எப்படி.?.. நாம் நல்ல

விஷயங்களை மட்டுமே பேச பிரியப்படும்பொழுது , நம்

எண்ணமும் அதே அலைவரிசை உடையவர்களையே

தேடி அலையும்.. ஒத்த அலைவரிசையும்

நல்லெண்ணமும் கிடைக்கும்போது அதை

பற்றிக்கொள்ளும் மனதானது..

இதே தான் தீய சக்திக்கான அலைவரிசையும்..தீய

எண்ணம் கொண்டவரது அலைவரிசை , அல்லது

எதிர்மறை எண்ணங்கள் கொண்டவரது அலைவரிசை

அதே போன்றவர்களோடு ஒத்துபோவதும் ,

எண்ணங்களை தம்மையறியாமல் பறிமாறி

உள்வாங்கிக்கொள்வதும் நடக்கின்றது..

இதுவும் ஒருவிதமான டெலிபதியே..

அதனால்தான் நாம் எத்தனை உறுதியாக இருக்கவேண்டுமென சொல்வதும் நல்லெண்ணங்களை வளர்த்துக்கொள்வதும், நல்லவர்கள் துணையோடு இருப்பதும் மிக அவசியமானது.. என்னதான் கெடுதல் எண்ண எத்தனை பேர் நினைத்தாலும் நாம் நம் மன எண்ணங்களி மிக உறுதியாக நேர்மறையாகவே இருக்க பழகிக்கொண்டாமோனால் நம்மை எந்த கெட்ட அலைவரிசையும் ஒன்றுமே செய்யாது..


ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியுமா? இந்த உலகில்.. நம்மை சுற்றி பொறாமை, வெறுப்பு, கோபம் , பயம் , இயலாமை , என பல விஷயங்கள் எதிர்மறையாக விதிக்க காத்திருக்கு..

அதே சமயம் , அன்பு, இறக்கம் , தாழ்ச்சி, கருணை , அமைதி, சமாதானம் , ஊக்கம், போன்ற பல நல்ல அலைவரிசையுடையவர்களும் இருக்கிறார்கள்..


இப்ப நம்மிடம்தான் இருக்கிறது நாம் எதை தேர்ந்தெடுக்க போகிறோம் என.. எப்படி நம்மையே , நம் சிந்தனையையே நாமே மேம்படுத்த பயிற்சி செய்யப்போகிறோம் என..


எண்ணங்களையெல்லாம் ஒன்றுகூட்டி , ஒரே புள்ளியில் குவித்து , அதை மாபெரும் சக்தியாக்கி , அற்புதங்களை நிகழ்த்தியவர்கள் பற்றியும் காண்போம்..



இன்னும் அலைவரிசை அவைகளின் வகைகள் ( ஆல்ஃபா, பீட்டா, காமா, தீட்டா, டெல்டா ), குறித்தும் , அவைகளின் பயன்கள்குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..


அடுத்து விலாவாரியாக தொடர்ந்து பயணிப்போம்..





படம் நன்றி : கூகுள்



.

Tuesday, March 22, 2011

மனம் தளராமல் - பதிவுலக ஊக்க கட்டுரை. ( சேட்டைக்கரன், Karthik L(LK) அம்பலமும் )



எனக்கு அமைந்த நட்புகள் மிக மென்மையானவர்கள்.. நான் காயப்படக்கூடாது என விரும்புபவர்கள்..

உனக்கேன் இந்த வேலை . சமூகத்தை பற்றி நீ ஏன் கவலைப்படணும் என்கிறார்கள்..

அனேக கட்டுரை வருவதை நாம் பார்க்கிறோம்.. அன்பா இருப்பது , மகிழ்ச்சியா இருப்பது எப்படி என..

அன்பானவர்களால் சூழ்ந்து இருங்கள்.. அமைதி தருபவற்றை படியுங்கள் என.. நிச்சயமா செய்யலாம்தான்.. ஆனால் அழ்மனதில் ஒரு குறுகுறுப்பு இருக்கும்..

சமீபத்தில் தனலட்சுமி என்ற சிறுமையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை , சூடு போடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்..

நாம் வாழும் காலத்தில் நம் அருகில் தான் நடக்குது.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த சிறுமி பட்ட வேதனையை..

கேட்ட தினத்திலிருந்து இன்றுவரை தூங்க முடியவில்லை எனக்கு.. என் குழந்தையாய் தான் பார்க்கிறேன்..

இது போல் 5000 குழந்தைகள்.. அடிமையாக.. என்ன செய்ய போகிறோம் நாம்.?

நிம்மதி தேடி ஆழியாருக்கும் , ஆலயத்துக்கும் , காணிக்கை போட்டும் , யோகா செய்தும் மன அமைதி கிட்டியது என பரப்புவோமா?..நாமே நம்மை ஏமாற்றுவோமா.?.

ஜப்பானில் அழிவு என்றால் அதிர்வு நம் மனதிலும் தான்..


நாளையே நான் மரணித்து போகலாம்.. ஏன் இப்பவே கூட.. என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போக..?. ஆனா ஒரு திருப்தி இருக்கணும் .. நம்மால் முடிந்த சிறு துரும்பை நகர்த்தினோம் .. அநீதியை எதிர்த்தோம். அதனால் அடி வாங்கினோம் என..நாட்டுக்கே விடுதலை வாங்கித்தந்த மஹானுக்கு கிடைத்த பரிசு துப்பாக்கி குண்டுதான்..

நமக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடணும்.. அதே போல் இன்பம் துன்பம் எல்லாம் அனுபவிச்சாச்சு என்ற நிறைவு நமக்கே வரணும்.. வாழ்வின் இறுதிவரை சுயநலத்தோடு " நான், " எனக்கு " என வாழணும் என நினைப்பவருக்கு எல்லாமே துன்பமயம் தான் என்னைப்பொறுத்த்வரை....இனி புகழ்ச்சி, இழிவு எல்லாம் எனக்கு சமமே..

சொல்லப்போனால் நான் சமூகத்துக்காக எடுக்கும் ஒவ்வொரு படியிலும் எனக்கு ஒவ்வொரு சவால்தான் காத்திருக்கு..அதிகமான இழிவுகளும் , மிரட்டல்களும்..
ஆனால் இவற்றையெல்லாம் வலி என்றே கணக்கிட கூடாது.. எது வலி.. இயலாமையில் தனலட்சுமி வெந்து மடிந்தாளே.. கொஞ்ச வேண்டிய
குழந்தையை மனம் செத்து அனுப்பி வைத்தாளே ஒரு தாய்..அவமானம் தாங்காது செத்து மடிந்தாளே திவ்யா.. அவள் தாய்க்கு இருக்குமே வலி. அதுதான் வலி.. ஈடு செய்ய முடியா இழப்பு..

இப்படி எத்தனை எத்தனை பேர் நம்ம மத்தியில் வாழ்ந்து மடிகிறார்கள் தினமும்?.. இதையெல்லாம் பார்த்துவிட்டும், " நான் " , " எனக்கு " என மன நிம்மதி தேடி அலைபவர்களை பார்க்க மிக கேவலமாக இருக்கு எனக்கு.. நிம்மதி, அன்பு, மகிழ்ச்சி எல்லாமே அருகில்தான் இருக்கு.. நம்மை சுற்றிதான் இருக்கு குப்பைகளும்.. அதை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , அல்லது எடுப்பவர்க்கு ஆதரவு தராமல் , இடைஞ்சல் தந்து தன் பலத்தால் எதிர்த்து இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.. இன்னொரு முக்கிய விஷயம் தமிழருக்கு தமிழர் மீதான நம்பிக்கை மிக குறைந்து வருகிறது.. நண்டு கதை போல.. அதற்கு முக்கிய காரணம் தமிழக தலைமையும், ஊடகத்தின் ஆதிக்கமும் .. தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிப்பதிலேயே இருக்கின்றார்கள்.. அப்படியான ஒரு சூழல் அமைந்துள்ளதும் சாபக்கேடு..





ரவுடியாக, அடாவடியாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பது எத்தனை கெடுதல்.. அதே தானே பதிவுலக அரசியலிலும் பார்க்கிறோம்?..ரவுடிக்கு ரவுடி பாஷையில் பதிலளித்தால் மட்டுமே பயம் வருது... சாபக்கேடுதானே?..

இருங்க அவர்கள் பாராட்டுகளையும் போடுறேன் பலரும் அறியணும்..

தினமும் என்னைப்பற்றி எழுதாவிட்டால் பொழுதே விடிவதில்லை அவர்களுக்கு.. :)

சேட்டைக்காரன் :-)))) • Mar 6, 2011 • Buzz
ரொம்ப நாளைக்கப்புறம் இங்கிட்டு வந்திருக்கோமப்பு! அதுவும் "தாய்"க்குலத்தின் தன்னிகரில்லா பிரதிநிதி, பெண்குலத்தின் விடியல் ஒருவர் சிலம்பில்லாம சலம்பிட்டிருக்கும்போது, அதாவது புலம்பிட்டிருக்கும்போது போய் ஒரு மைனஸ் ஓட்டுக்கூடவா போடாம இருப்பீங்க? ஷேம் ஷேம் பப்பி ஷேம்!


சேட்டைக்காரன் :-)))) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

சமுதாயம் என்பதில் சமு+"தாய்"+"அம்" என்று பிரித்து நோக்கிடில் நீங்கள் தாய்லாந்தில் இருக்கும் ஏதோ ஒரு அம்மணியைப் பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் ஒரு இடுகை போடுவதாக காற்றுவாக்கில் தகவல் வந்திருக்கிறது.

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.


சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணி - மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. மாக்களை அம்மணி என்று அழைப்பதில்லை.//

அப்போ ஜிம்மிணி-னு அழைக்கலாம்.பிராணிகளுக்கு எல்லாரும் அந்தப் பெயரைத்தான் வைப்பாங்க





Karthik L (LK) - அப்படி இல்லை பிரபாகர். இது ஒருவகை மனவியல்.தன் இருப்பை காட்டிக்கொள்ள இடைவெளி விட்டு விட்டு செய்வது


ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் - வாட் யூ மீன் பை புரட்சி ? கேன் இட் க்ளீன் தி சமுதாயம்
Mar 6, 2011
Karthik L (LK) - புரட்சி மீன்ஸ் இன்டர்நெட் புரட்சி
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - புரட்சி = புரட்டு + சீ

அதாகப்பட்டது, சீ என்று சொல்லுமளவுக்கு மல்லாந்து படுத்துத் துப்புவதும், எம்புட்டு புரட்டிப் புரட்டி அடி வாங்கினாலும் திரும்பத் திரும்ப மூத்திரப்பெரைக்கு வந்து சேருவதும் தான் புரட்சி!
Mar 6, 2011
Dhinesh Kumar (முகிலன்) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

எங்க வீட்டு டாய்லெட்டைக் கூட க்ளீன் செய்யாது.

சேட்டைக்காரன் :-)))) - ஆமாம் ஜீவ்ஸ்! அதுலேயும் அவங்க தாய்லாந்துலேயே கோனார் கைடு எழுதுறவங்களாம். :-)
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு//

அப்படீன்னா, அவங்க அம்மிணியில்லே; கொஞ்சம் கம்மிணி-ன்னு சொல்றீங்களா முகிலன்?
Mar 6, 2011
Karthik L (LK) - /கோனார் கைடு // தேன்மொழி நோட்ஸ் எழுத மாட்டாங்களா # சந்தேகம்





இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னன்னா . எப்படி இவர்களுக்கு நாள் முழுதும் கும்மியடிக்க மட்டுமே நேரம் செலவழிக்க முடியுது?..

நமக்கு வாசிக்கவே பத்துவதில்லை.. இத்தனைக்கும் நான் ஒண்ணும் பெரிய பிரபலமோ இலக்கியவாதியோ இல்லை.. என்னையே இப்படி ?:))))))))

ஆனா இப்ப சிலர் கொஞ்சம் ஒதுங்கி இருக்காங்க நான் சுட்டி காட்ட ஆரம்பித்த பின்..

தொடரணும் அவர்கள் சேவை.. என வாழ்த்த மட்டும் செய்வோம்..


அடுத்து தோழி என்பவர் ,

----------------------------


४१ தோழி १४ - வந்துட்டேன்.. எங்க சண்ட எங்க சண்ட//
४१ தோழி १४ - வேணாங்க பதிவு போட்டு பிரபலமாக பாத்த ஒருத்தர இன்னிக்கு பஸ்ல தான் தொங்க போட்டு அடிச்சோம்..

४१ தோழி १४ - ஒரு திரில்லர் படம் போட்டிருக்காங்க. பெயரு "சாந்தி நிலையம்".ஆஹா, ஜெமினி என்னமா பாடுறாரு...இயற்கையென்னும் இளையகன்னி.. //

இதுக்குமுதல்ல இந்த பாட்டுதான் வரும்.. சேட்டைக்கார அண்ணாச்சி பொய் சொல்றாப்ல..

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

----------------------------------------------------------------

இவர் படிப்பதெல்லாம் ராமாயணம் இடிப்பதெல்லாம் பெருமாள் கோவில் கதை...:)) http://siththarkal.blogspot.com/


இப்படியானவர்களின் போலி வேஷங்களை பார்த்துதான் மத வெறுப்பு வருது பலருக்கு..:) . நல்லவர் கூட கெட்டவர் கூட சேருவதாலும் இருக்கலாம்..

----------------------------------------------

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் • Mar 16, 2011 (edited Mar 16, 2011) • Buzz
மண்டையில மசாலாவே இல்லாம பிரபலமாவது எப்படி ?

296 more comments from Priya Siva, Karthik L (LK), Dhinesh Kumar (முகிலன்), KANNAN J NAIR and விஜி . and 10 others//

அலுவல் நேரத்தில் அடுத்தவரை பற்றி பேசி ஏசியே பொழுதை போக்கும் இவர்கள் திடீரென சமூக அக்கறையில் பதிவும் போடுவார்கள்..:)

--------------------------------------------------------------


இதையெல்லாம் போடுவதால் நான் அனுதாபம் தேடுகிறேன் என நினைக்கவேண்டாம்.. இவற்றையெல்லாம் தாங்க முடிந்தால் மட்டுமே நம் கருத்துகளை அழுத்தமாகவும் அதே சமயத்தில் நாகரீகமாகவும் சொல்லக்கூடிய துணிவு வரும் என்பதற்காகவே இந்த பகிர்தல்..


நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் இழிவுபடுத்தவோ, வருத்தப்படுத்தவோ , பொறாமைகொள்ள செய்யவோ முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரியணும்..


அல்டிமேட் ஆக என்னதான் செய்ய முடியும் எத்தனை தூரம் போக முடியும் என வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்ளணும்.. அதுதான் அஹிம்சை.. அதுதான் வீரம்.. அதுதான் வள்ளுவர் சொல்லும் துறவு நிலையும்.. எல்லா இழிவுகளும் சொன்னவருக்கே அர்ப்பணம்.. என்ற மனம் வந்திடணும்.. எல்லா இழிவையும் தாங்கியும் நம் பக்கமிருந்து அநாகரீகமாக ஏதுவுமே சொல்லாமல் இருக்கும்போது நம் எதிராளியும் அதே நிலைக்கு வந்தாகணும்.. (சிலர் நிதானத்துக்கு வந்துள்ளார்கள் என்பதையும் இங்கே மகிழ்வோடு பகிர்கிறேன்.. ) ..

இல்லாவிட்டால் குழுமமெல்லாம் நடத்தவே முடியாது..ஒரு பெண்ணால்..:)

அதுதானே நம் எண்ணம் .?.. நோக்கம்..? நம் வெற்றியும்.?..


-----------------------------------------------

நஜீபா said...


"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


சாந்தி : இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?

நஜீபா : அதை நீங்கள் தயங்காமல் செய்வீர்கள் என்று அறிவோம். உங்களைப் பற்றி யாரேனும் எழுதினால், உடனே அதில் மற்ற பெண்களையும் இழுத்து, உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் அசிங்கப்படுத்துவீர்கள் என்பதைத்தான் தமிழ் வலையுலகில் நேற்று வந்தவர்களும் சொல்கிறார்களே. ஆனால், நான் ஒரு பெண்ணின் பெயரை உபயோகிப்பதன் முன்னம் யோசிப்பேன். எனது சுயநலத்துக்காக இன்னொரு பெண்ணின் சுயகௌரவத்தைப் பலிகொடுக்க மாட்டேன்.-

----------------

சாந்தி :பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் ???? ஆரும்மா அந்த ஆயா?..
அத விட்டுட்டு பூசி மெழுகினா எப்படி?..

கடைசி வரை சொல்லவில்லை.. ஏன்?. சொல்ல முடியாது.. வம்பிழுப்பது மட்டுமே நோக்கமாயிருக்கும்போது.?.

வலிய உங்க பதிவில் வம்புக்கு இழுக்கும் உங்க செயலை அம்பலப்படுத்தவே அதையும் கேட்டேன்.. இப்ப கவலை வேண்டாம் நஜீபா என்பவர் யார் என பலருக்கும் தெரியும்.. உங்களுக்கும் புரிந்ததா நஜீபா யாரென...

உடனே நஜீபா க்கு வக்காலத்து வாங்கி சேட்டை பஸ் இல் இப்படி சொல்றார்
---------.

சேட்டைக்காரன் :-)))) - சொரணையிருக்கிற சென்மமாயிருந்தா நாண்டுக்கிட்டு சாகணும்! த்தூ.....!
Mar 18, 2011
Karthik L (LK) - அண்ணே அது கிலோ என்ன விலை ?
Mar 18, 2011
சேட்டைக்காரன் :-)))) - நமக்கெல்லாம் வேணாம் கார்த்தி. ஒரு ஷிப்மென்ட் தாய்லாந்து அனுப்பணும் போலிருக்குது.
Mar 18, 2011
Karthik L (LK) - அதுக்குதான் கேட்டேன்


----------------------------

நான் என் பஸ் ல் போட்ட பதில் கீழே.


//இப்படி வலிய வம்பு பேசி திரியும் புள்ளங்கள பெத்ததுக்காக சொரண அதிகமாயிருக்கும் உங்க அம்மா , உங்க வீட்டு பொண்ணுங்கள போய் நாண்டுகிட்டு சாக சொல்லு சேட்டைக்காரனே..:))..

Karthik L (LK).. ஓவரா இருக்கு உன்னோட அனாவசிய நக்கல்.. கவனிச்சுட்டுத்தான் இருக்கோம்.. என்னை சொல்ற அத்தனையும் உன் பெண்ணுக்கு சாபமா வரத்தான் செய்யும்.. நீயே அதை வரவேற்கிற.. அதை நீ புரிஞ்சுக்காத..பாவம் உன் பொண்ணு..

யார் யாருக்கு என்னென்ன சாபம் வேணுமோ அதை அடுத்தவங்களுக்கு சொல்லுங்க.. தாராளமா.. //

நாம் அடுத்தவர்களை சொல்வது நமக்கே திரும்பும்..என்ற பயம் இருக்கணும் . சும்மா இணையம் கிடைத்ததேன்னு எழுதி தள்ளக்கூடாது. வம்பு வளர்க்கும் இடமல்ல. வெத்து மிரட்டல்தான் இவையெல்லாம்.. நேரிலே போனால் காலில் விழும் ஜென்மங்கள் இவை..

இப்ப புரிந்தும் இருப்பீர்கள் என் பேரில் போலியாக வந்த நபர் யார் என்றும்..



சேட்டைக்காரன் , Karthik L (LK) பற்றி தகவல் இருந்தால் பகிரவும் தனிமடலில்.. இனி இப்படி பலரின் எழுத்துகள் அம்பலப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கணும்.. பதிவுலகை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர அனைவரும் பாடுபடணும்.. இல்லையென்றால் நல்லவர்கள் எல்லோரும் வெளியேறி கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சும் நிலை வரும்..

தமிழ் மீதான ஆர்வமும் குறையும்.. நானே 10 கட்டுரை வாசித்தால் 7 ஆங்கிலம்தான்.. தமிழ் பதிவுலகம் மீது அனேகருக்கு இப்படியானவர்களால் வெறுப்பு இருக்கிறது..

என்னிடம் ஒரு நண்பர் , " தாய்லாந்து பற்றி எழுதி தாருங்கள். புத்தகமாக இலவசமாகவே போடுகிறேன் " என்கிறார்,, என் ஆர்வம் அதிலெல்லாம் இல்லை.. என்னால் முடிந்தளவு நான் சமூகத்துக்கு குரல் கொடுக்கணும் என நினைத்தேன் செய்தும் விட்ட ஆத்ம திருப்தி இருக்கு..

பயமே வேண்டாம் திட்டுபவர் அலுத்து போகும்வரை திட்டட்டும்.. அவையெல்லாம் நம் சாதனைக்கான வாழ்த்து என மட்டும் எடுத்துக்கணும்.. தொடரணும் நம் நல்லெண்ணம் நாகரீகமான முறையில்..


திட்டுவதில் இல்லை வீரம்.. எல்லா இழிவையும் தாங்கிக்கொண்டும் , நம் கொள்கைக்காக நாகரீகமாக போராடுவதே வீரம்..


நான் இப்படி அம்பலப்படுத்த ஆரம்பித்ததும் கதிர் போன்றோர் பஸ் அழித்துள்ளனர்/அல்லது மூடியுள்ளனர்.. அதுவே நல்ல திருப்பம் தான்.. அந்த பயம் வரணும்.. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. நாம் காறி துப்பினா , செருப்பால் அடித்தா பலமடங்கு திருப்பி கிடைக்கும்னு இப்ப கதிருக்கும் , தண்டோராவுக்கு புரிந்திருக்கும்.. அவர்கள் கூட சேர்ந்தவர்க்கும்..

உங்க பதிவில் இப்படியானவர்களின் பின்னூட்டம் வரணுமா என யோசித்துக்கொள்ளுங்கள்.. அது உங்க மதிப்பையும், நல்லெண்ணத்தையும் கெடுக்கும்..


" என் தம்பிக்கு வேலை போயிடுச்சு . என் பாஸ் தாய்லாந்தில் அடிபட்டு கிடக்கிறார் " என சொல்லி உதவி கேட்டவரெல்லாம் எதிரணியில் சேர்ந்து கும்மியடிப்பார்கள்..எவ்வித முன்விரோதமுமில்லாமல்..:)

நல்லா யோசிச்சு பார்த்தா ஒருவித தாழ்வு மனப்பான்மை, அல்லது பயம்.. எங்கே நாம் கும்மியில் இணையாவிட்டால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற மிக தவறான புரிதல்.. பாவம்..துணிவற்றவர்கள்... எது தரம் , நிரந்தரம் என அறியாதவர்கள்..


நான் நன்றி எதிர்ப்பார்ப்பதில்லை என்றாலும்.. உளவியல் படிக்க கல்லூரிக்கு போகவேண்டியதில்லை.. பதிவுலகம் வந்தா போதும்.:). இருந்தாலும் நன்மை செய்வது நம் பணி என தொடரணும்தான் எத்தனை ஏமாற்றம் வந்தாலும்...

எல்லோராலும் சமூகத்துக்காக எழுதவோ பேசவோ முடியாதுதான்.. தப்பேயில்லை..அவரவர்க்கு பிடித்த நல்ல விஷயங்களை எழுதட்டும்.நானும் பல நல்ல நகைச்சுவை பதிவுகள் ஆங்கிலத்தில் படிப்பதுண்டு.. நகைச்சுவையும் தனி நபரை காயப்படுத்தாமல் நாகரீகமாக இருப்பது தேவையே.. ஆனால் ஒருபோதும் இத்தகைய சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாய் இருந்து , நாமும் கெட்டு நம் சூழலையும் கெட்டுப்போக உதவியாய் இருந்துவிடாதீர்கள்..



இன்னும் அதிகமா சில சமூக விரோத கும்பல் இவர்களை தூக்கி வைத்தும் ஆடும்.. அதுவும் எதிர்ப்பார்க்கணும்.. என்றாவது ஒருநாள் வசமா மாட்டவும் செய்யும்போது கதறலாம் , " உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்ட " என.. அதுவும் சமீபத்தில் நடந்தது..:)


ஆணுக்கு இணையான பெரிய பதவி வகித்து , வாழ்வில் பல சவால்களை வேலையிலும் , வாழ்க்கையிலும் சந்தித்த எனக்கே நாகரீகமாக , கருத்து பகிர இத்தனை தொந்தரவு தருகிறார்கள் என்றால் , நினைத்துப்பாருங்கள் சாதாரண தமிழ் பெண்ணின் நிலைமையை.. இதில் பெண்ணுரிமை கிடைத்துவிட்டதென எழுதும் சிலரின் பதிவை பார்த்து சிரிக்கத்தான் முடியுது.. . தான் சுகமா இருந்தா உலகமே சுபிட்சமா இருக்கு என எண்ணும் அப்பாவிகள்.. வேறென்ன சொல்ல..?.:)

ஏமாற்றமோ, அவதூறோ, புரளியோ, இழிவோ நம்மை ஒருபோதும் காயப்படுத்தாது , பல தனலட்சுமிகளை , திவ்யாக்களை நாம் காப்பாற்ற நினைத்தோமானால்..தூசியென தட்டிவிட்டு தொடருவோம்..



( பஸ் buzz வசதியாக இருக்கிறது படிக்கவும் மனதில் தோணுவதை உடனே எழுதவும்.. ஆக நல்ல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அங்கேதான் பகிர்கிறேன்.. நேரமும் மிச்சமாவதால்.. மேலும் பின்னூட்டமெல்லாம் எதிர்ப்பார்ப்பதேயில்லை எப்போதுமே நான்.. இப்பவும் அலுவல் சமயம் யாரும் பின்னூட்டம் போடவேண்டாம் தயவுசெய்து..பின்னூட்டம் முக்கியமேயல்ல.. நம் கருத்து போய் சேர்ந்தால் போதும்..)


பதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....!

கழுகில் வந்த கட்டுரையையும் படிக்க.


படம்: நன்றி கூகுள்




.

Wednesday, March 9, 2011

உழைக்கும் வர்க்கத்தினரின் (பெண்கள் தின ) வாழ்த்துகள்






உலகத்தில் பெண்களின் உழைப்பு 66 சதவீதம் , ஆனால் அவர்கள் அடையும் பயன் 10% சதம் .

உலகின் மொத்த உணவு உற்பத்தியில் 50% பெண்ணின் பங்கு.. ஆனால் 1% நிலமே பெண்களுக்கு உரிமையாயிருக்கு..

உலக ஏழைகளில் 70% பெண்கள்.. மேலும் படிக்க
http://www.trust.org/trustlaw/womens-rights/womens-voices


??????.
பெண் விடுதலை பற்றி பலர் பேசணும் .. அப்படி ஒரு அவசர தேவை இங்கிருக்கு..




தாய்லாந்து மகளிர் பற்றிய கட்டுரை படிக்க ,










தாய்லாந்தின் புன்னகை அரசிகள்


சில கவிதை பெண் பற்றி .

----------------------------------

தும்மினால் தொண்ணூறும்
சிரிப்பானுக்கே சில நூறும்
மெளனத்துக்கு கூட மறுமொழியிட்டு
பதிவுக்கு பாராட்டுவிழாவே அரங்கேறுதென்றால்

அந்த நியாத்தின் வலிமை என்ன ?
ஆட்டுவிக்கும் வித்தை என்ன?.

மிரட்டலிட்டு கத்தி கதறி
மிஞ்சுகிறதாம் ஒப்பாரிவீடு
கூடி நின்று தொண்டை கிழித்தவர்கள்
ஆடி ஓய்ந்து அடங்கலாம் ஒருநாள்

தளராது முன்னேறுதாம் பெண்ணின் போராட்டம்
தந்த பரிகாசத்தையே பரிசாகக்கொண்டு..

கவிதை - 2

அஹிம்சை யை நாட்ட
ஆயுதமாய் எழுத்தை எடு
இகழ்வாரைக்கண்டால்
ஈயென :) இளித்துவிட்டுசெல்.
உதவாக்கரை பேச்சுக்கு
ஊக்கமளிக்காதே
எண்ணிய செயல்முடி
ஏசினாலும் பேசினாலும்
ஐயமா அப்டீனா என்னன்னு கேள்
ஒதுங்கினால் ஒடுக்கிடுவார்
ஓடட்டும் அவருன் கருத்தில்
ஒளடதம் என்பதிங்கு மாற்றம்
ஃதே படைத்திடு எழுத்தில்..

பெண் மொழிகள் : பெண்ணுக்கு மட்டும் .. ( மறைமுக மிரட்டலோடு சொல்லப்பட்டவை :) )
-----------------------------

அன்பா இரு ( அடி வாங்கு )
பண்பா இரு ( பகடி தாங்கு )
இரக்கப்படு ( இழிவை தாங்கு )
ஆறுதலாயிரு ( ஆசாபாசம் அடக்கு )
நாணப்படு ( நாட்டுநடப்பு அறியாதே )
வெட்கப்படு ( வெறுமை கொள் )
அச்சப்படு ( அடங்கிப்போ )
எனை நேசி ( எதிர்த்து பேசாதே )
கருத்தரி (கருத்துக்களை அறியாதே )
குத்துவிளக்கு ( எரிந்துகொண்டே இரு )


Some Quotes about women :
-----------------------------

Because I am a woman, I must make unusual efforts to succeed. If I fail, no one will say, "She doesn't have what it takes." They will say, "Women don't have what it takes."
~Clare Boothe Luce

I wish someone would have told me that, just because I'm a girl, I don't have to get married.
~Marlo Thomas


The thing women have yet to learn is nobody gives you power. You just take it.
~Roseanne Barr


Man endures pain as an undeserved punishment; woman accepts it as a natural heritage.
~Author Unknown


Men are taught to apologize for their weaknesses, women for their strengths.
~Lois Wyse




அனைவருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் ( பெண்கள் தின ) வாழ்த்துகள்..



படம் : நன்றி கூகுள்..



Monday, February 21, 2011

நடுநிசி நாய்கள் - வாங்க சைக்கோவாகலாம்.



நாய்கள் என்ன பாவம் செய்ததுன்னு தெரியலை.?.. நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..

சரி எதாவது விலங்குகள் கிட்ட?.. அது ஒரு தொத்துவியாதிங்க.. பாடா படுத்திடும்..

இப்ப ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம உளறல்னு நினைக்கிறீங்க..ஆமா உளறலாத்தான் தெரியுது நாட்டு நடப்புகள்..


நாளையிலே இருந்து மருத்துவமனைகள் எல்லாம் அறுவை சிகிச்சைகளை பொது மேடை போட்டு நடுத்தெருவிலேயே கண்ணாடி திரைக்குள் செய்யணும்..

அப்புரம் ,

எல்லா தாம்யத்யங்களும் கூட இதே போல நடுத்தெருவில்..

குப்பை கூளங்களை குப்பை தொட்டியில் கொட்டலாமா ?.. கூடவே கூடாது.. ஏன் காட்டில் குப்பை தொட்டிகள் இருக்கா என்ன?.. விலங்குகள் சுத்தம் செய்வதில்லையா?...

அப்புரம் முக்கியமா யாருமே உடை உடுத்த கூடாது...

என்னங்க பைத்தியமா உங்களுக்கு னு கேட்குறீங்க..

விடை: நான் என்னங்க வித்யாசமா சொல்லிட்டேன்.. வீட்டில் சின்னத்திரையில் இவையெல்லாம் தானே விளம்பரம் என்ற பேரில் விருந்தாக படைக்கின்றீர்கள்.?.. பொழுதுபோக்க , நல்ல விஷயம் கற்க என இருந்த சினிமாக்கள் சைக்கோ ஆவது எப்படி என பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டனர்..

அதனால் இனி எல்லோருமே விலங்காகிவிட்டால் பிரச்னையேயில்லைதானே?..

அன்பா , - அப்படீன்னா என்னங்க.. ?.. அதுவா அது வந்து என் வீட்டில் , என் குழந்தை குடும்பத்தாரிடம் மட்டும் நான் போட்டுகாட்டும் நாடகம்.. அத மாதிரி எல்லாரும் நாடகம் போட்டுக்குவோம்.. பொதுவுல வரும்போது ஒருவரை ஒருவர் வசவுகளால், ஆபாச படங்களால் , மறைமுக மிரட்டலால் , கிசுகிசுக்களால் கிட்டத்தட்ட ஒரு சைக்கோவாக மாறிவிட்டு , பின் வீட்டுக்குள் சென்றதும் நம் நாடகத்தை தொடரணும்...

யுத்தம் செய், என சொல்லி யுத்தம் செய்ய பழக்குவோம்.. மறந்துபோய்கூட பெண்ணை சுயமா எதிர்கொள்ளும்படி கராத்தேவோ, தற்காப்பு கலையோ கற்றுக்கொடுக்காமல் , அவளை ஒருவன் மானபங்கபடுத்தியபின், அவள் தூக்கில் தொங்கியபின் வீரம் வந்து கொலைசெய்ய ஆரம்பிப்போம்.. அதாங்க யுத்தம் செய்ய.. ஏன்னா அதுதான் வீரம் , அதுதான் அழகு.. .அதை வரிக்கு வரி பாராட்டிட்டோம்னா வாழ்நாள் சாதனை செய்த மகிழ்ச்சி.. அப்பாட..நமக்கெதுக்குங்க சமூக அக்கறையெல்லாம் . அத கவனிக்க ஏதாச்சும் இ.வா வேல வெட்டியில்லாம இருப்பாங்க கவனிச்சுக்குவாய்ங்க..( படத்த எப்படி மோசமா எடுத்த என்ன ?. அதான் கலெக்ஷன் ஒரு பங்க அனாத குழந்தைங்களுக்கு குடுக்கோம்ல.. வாய மூடுங்க.. )

என்னோட அல்ப கட்டுரையோ, கவிதையோ, பதிவோ மிக மோசமான பத்திரிக்கையில் வெளிவந்தா கூட போதும். அதுக்காக யார் காலைவேணா பிடிக்க ரெடியாயிருக்கேன்.. யாரை வேணா புகழ்வேன்.. எனக்கு புகழ் முக்கியம்..

எழுத்துகளில் பாலியல் தொழில் செய்கிறாரா?. அவரை தூக்கி பிடிக்காட்டி என்னை அந்த நல்ல?? கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைப்பாங்க.. அதாவது பரவாயில்லை.. கூட்டமா சேர்ந்து தண்ணி அடிக்கும்போது என்னை பற்றி பேசுவாங்க.. பயமா இருக்கு எதுக்கு வம்பு.. பேசாம தலையாட்டிட்டு போறேன்...ஊரோடு ஒத்துவாழ்னு பெரியவா சும்மாவா சொல்லிருக்காங்க.. பெரியவா சொன்னா பெருமாள் சொன்னாப்ல.. கன்னத்துல போட்டுக்குறேன் குவாட்டரும் குடிச்சிக்கிறேன்.. பின்ன ஒசி வேற..


அட அவர் பகுத்தறிவாதிய்யா.. ரொம்ப அறிவாளி..

அப்படியா அப்ப ஏன் அசிங்க அசிங்கமா பேசுறார்?..

ஹ அது அப்படித்தான்.. ஏன்னா அது ஒரு கெத்து பாருங்க.. ஒரு பய கிட்ட வரமாட்டான். கெட்ட வார்த்தைக்கு பயந்தே என்னை அறிவாளின்னு ஒத்துக்குவானா இல்லையா?..

இத பாருங்க ரொம்ப நியாயம் பேசுனீங்கன்னா , உங்க பக்கம் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க அன்னந்தன்னி புழங்கமாட்டாங்க.. ஓஹ் . அப்படியா.. அப்ப நான் என்ன செய்யணும்.. ?.. பிடிக்குதோ பிடிக்கலையோ, தப்புன்னா தட்டி கேக்காம, எல்லா இடத்திலேயும் போய் நல்லபுள்ளையா அட்டெண்டன்ஸ் போட்டுரணும்.. அப்ப உங்களை முன்புறமா குறை சொல்ல மாட்டாங்க ( "1- அப்ப பின்புறமா ?".. "2- ஹலோ ரொம்ப கேள்வி கேட்டா..." " 1- அய்யோ சாரி இனி கேக்கல.. " ).


பெரியார் பெண்ணுரிமைன்னு சொன்னத சிலர் தப்பா புரிஞ்சுட்டாங்க போல.. பாலியல் சுதந்திரம்னு எண்ணி அதுக்கொருபக்கம் கிழி கிழி.. நோக்கமே மறந்து போச்சா இல்லை நோக்கமே இதுதானோ.?..


ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல்செய்து சிறை செல்வது கூட நட்சத்திர விடுதிக்கு சென்று ஏதோ பத்ம பூஷன் அவார்ட் ரேஞ்சுக்கு மதிப்பு போலவும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறோமே ...?.

ஆக மொத்தம் எவை எவை தடுக்கப்படணுமோ அவை அழகாக கூட்டமாக நிறைவேறிக்கொண்டேயிருக்குது.. சுயநலத்தோடு ஆங்காங்கே..

இதைவிடவா நடுநிசி நாய்கள் பயம் தந்துட போகுது..?.. என்ன மேலே சொன்னதுபோல இனி பொதுவெளியில் விலங்குகள் போல வாழ பழக்குது இத்தகைய அறிவார்ந்த , ஆழமான , கலைநயத்தோடான, கற்பனாசக்தி மிகுந்த , உயர்தர படங்கள்.. வாங்க சைக்கோவாகலாம்..

எல்லாத்தையும் சகிச்சுகிட்டு , தாங்கிகிட்டும் உங்களால அமைதியா இருக்க முடியுதுன்னா, பூர்வ ஜென்ம புண்ணியமா இருக்கலாம்.. அந்த புண்ணியாத்மாக்கள் வயோதிகர் இல்லங்களில் ( அனாதை, மனநிலை சரியில்லாதோர் இல்லம் ) இருந்தா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்.. .. ஒருமுறை விசிட் செய்வது அவர்களுக்கு 100நாள் பலம் தரும்..அது முடியாதவங்க, தப்புகளை துணிவா தட்டி கேட்கலாம்.. ஆனா உலகின் மொத்த சாக்கடையும் உங்க மீது கொட்டப்படும்..


எங்கே யாரிடமிருந்து ?..


நடுநிசி நாய்கள் - ஜாக்கிரதை... நம்முள்...

ஆனா சமூகத்தையும், சக மனிதர்களையும் அதிகமா, ஆழமா நேசிப்பவராலேயே தப்புகளை துணிவா தட்டி துணிவா கேட்க முடியும்.. அப்ப நீங்க?..



எனது கண்டனங்கள் இப்படி படம் எடுத்து சமூகத்தை கெடுக்கும் அனைவருக்குமே..

( அதில் உழைத்திருக்கும் அனைவருக்கும் எனது அனுதாபங்களும் )

மீண்டும் ,


நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..மனிதர்களை விட அன்பை கொட்டும்..

அவை மட்டுமல்ல எல்லா விலங்குகளையுமே அன்பால் கட்டிப்போட முடியும்போது மனிதர்கள் நாம் மட்டும் ஏன் இப்படி விசித்திரமாய் , விகாரமாய் ?...

அன்பும் கொட்டிக்கிடக்கு.. அள்ள தெரியாமல் , பகிர முடியாமல்... மென்மையை சொல்லும் படங்கள் எப்ப வரும்?..நம் குழந்தைகளுக்கு.?.










படம்: நன்றி கூகுள்..

Wednesday, February 2, 2011

வாழ்வின் எதிர்பாரா அதிர்ச்சிகள்






ஓவ்வொரு முறை ஊர் பயனத்தின் போதும் நல்ல சேதியோடு கெட்ட சேதியும் ரகசியமாக காத்திருக்கும்..

எதிர் வீட்டில் மெஸ் நடப்பதால் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரம் வாங்கிக்கொள்ளும் வசதி..

4 பெண் குழந்தையோடு செல்லமாக வளர்க்கப்பட்ட மகன்.சிவா ( கற்பனை பெயர் ) . அப்பா இலங்கையிலேயே ஹோட்டல் நடத்தி இந்தியாவுக்கு வந்தவர்கள் 50 வருடம் முன்பு.

கிட்டத்தட்ட 5 கிரவுண்ட் இடத்தில் முன்பக்கம் வீடும் பின்பக்கம் பால்மாடுகளும் தோட்டமும்..

நாங்கள் அனைவரும் ஓடி விளையாடி களைத்த இடம்..

தெருவுக்கே பால் சப்ளை அங்கிருந்துதான்..

தீபாவளிக்கு சிவா போடும் வெடிகள் கோபம் ஏற்படுத்துபவை.,. ஆனால் நம் கோபம் அவனுக்கு சிரிப்பு.:)

நான்கு பெண்களையும் சிறப்பா திருமணம் செய்துகொடுத்தாலும் , மகன் மட்டும் படிக்காமல் கெட்ட நட்போடு வீணாகிக்கொண்டிருந்தான்..

தந்தை அவனுக்கு ஒரு ஹோட்டல் வைத்து தந்தார் மருத்துவமனை எதிரில்.. நல்ல கூட்டம்..

கார் வாங்கினான்.. வசதி கூடியது.. அதோடு தீய நட்பும் அதிகரித்தது...

பெண் தர பலர் மறுத்ததால் ஏழை பெண்ணொருத்தி , அதிகம் படிக்காதவளை மணமுடித்து வைத்தனர்..

அவளுக்கு 16 வயது..

இரண்டு பெண் குழந்தைகள்.. மிக அருமையான குழந்தைகள்.. நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் எங்க வீட்டு பொடியனை கொஞ்ச வருவார்கள்..

விளையாடுவார்கள்..

போனமுறை அவசரமாக நான் வங்கிக்கு செல்லும்போது

" யக்கா , கண்ணே தெரியலையா?.. நானும் கவனிக்கிறேன் நாலு நாளா.. கண்டுக்காம போறீங்களே..!" என உரிமையா கோபக்குரல்..முகம் நிறைய சிரிப்போடு..

திரும்பிப்பார்த்து ,

" மன்னிச்சுக்கோ சிவா.. கவனியாமல் இல்லை.. உன் மனைவி, அம்மா, குழந்தைகளிடம் பேசினேன்.. நீ ரொம்ப பிஸி என்பதால் தொந்தரவு செய்ய

வேண்டாமேன்னு நினைத்தேன்.."

எல்லா விசாரிப்புக்கு பின் அவன் மெஸ் ஆரம்பித்து மீண்டும் நல்லபடியாக முன்னேறி வருவது குறித்து என் மகிழ்ச்சியை தெரியப்படுத்தி ஊக்கமளித்தேன்.

( அவன் தந்தை மறைவுக்கு பின் அந்த ஹோட்டலை வித்துவிட்டு வீட்டிலேயே மெஸ்.. இதற்கு காரணமும் குடி கெட்ட நட்பும் )

குடி போதையில் , அம்மாவை , மனைவியை அடிப்பதும் அவர்கள் கோவித்துக்கொண்டு போவதும் வழக்கமானது..

இப்படி போன வருடம் மனைவி முடிவோடு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னை சென்றுவிட , அம்மா, சகோதரி வீட்டுக்கு செல்ல ( எல்லோருமே சென்னை)

இவன போய் மனைவியிடம் சமாதானம் பேசி அழைக்க அவள் மறுக்க. , சகோதரி வீட்டுக்கு சென்று திட்டு வாங்கி கொஞ்சம் அழுதுவிட்டு ,

நேரே ஊருக்கு வந்து வெறுமையில் , தனிமையில் தற்கொலை செய்துவிட்டான்..

யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவன் நன்மைக்குத்தான் திட்டியிருப்பார்கள்..

கேள்விப்பட்டதுமே சென்று பார்த்தேன்.. அவன் அம்மா கட்டிபிடித்து கதறினார்..

மனைவி மெலிந்த தேகம் எப்பவுமே.. அவளுக்கு அழ கண்ணீர் இல்லை.,. எல்லாவற்றையும் ஏற்கனவே அழுது முடித்திருக்கணும்..

அந்த குழந்தைகள் சென்னையில். அவள் தம்பி வீட்டிலிருந்து படிக்கிறார்கள்.. . நல்லவேளை நான் காணவில்லை..:(

மனைவிக்கு 26 வயது.. !!!!!!!!!!..

இரண்டு பெண்கள் தனிமையில்..சொந்த வீட்டைவிட்டு , 50 வருடம் பழகிய இடத்தை விட்டு போக மனமின்றி அந்தம்மா..

அவன் என்னை அனுப்பியிருக்கணுமே.. அவன் குழந்தைக்காவது தகப்பனா இருக்கக்கூடாதா என கதறினார்கள்..

எங்கே நடந்தது தவறு?.. யாரை கேட்க?..

பெண் குழந்தைகளை மிக நன்றாக படிக்க வைக்க சொல்லி துணிவையும் ஆறுதலையும் மட்டுமே தர முடிந்தது..


தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்த தலையெழுத்து என்று மட்டும் நினைத்து வெளியேறினேன்..

யக்கா , கண்டுக்காம போறீங்களே.." ஒலித்துக்கொண்டே இருந்தது ஒவ்வொருமுறையும் முகம் நிறைய சிரிப்போடு.!!!!!!!

-------------------------------------------------------------------------------------






போன வாரம் வீட்டுக்கு வந்து தன் ஒரே மகன் படிப்பை பற்றியும் அவன் எதிர்கால கனவுகள் பற்றியும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தவர்,

திடீரென வேலை இழந்தார்..

குடும்பத்தை நினைத்து கதறி கதறி அழுதார் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல்...

ஆண் என்றால் அழமாட்டார்கள் என யார் சொன்னது?...

முடிந்தவரை தாங்குவார்கள்.. அதையும் தாண்டிய துக்கமென்றால்தானே அழுகை வந்திருக்க முடியும் , ?.

உடனடியாக ஏன் இப்படி வேலை விட்டு அனுப்புகின்றார்கள் என கோபம் வந்தது..:((..

அக்குழந்தையின் படிப்பு..?.

ஒவ்வொரு முறையும் இப்படி சிலர் வேலையை விடும்போது அந்த துக்கம் நம்மையும் வந்து சூழ்ந்து கொள்கிறது.. இயலாமை..

எதுவுமே நிரந்தரமற்ற தன்மை கொண்டது இவ்வுலகம்..என்னதான் புரிந்துகொண்டாலும் வாழ்வில் லட்சியம் , எதிர்பார்ப்புகள்

இலக்குகள் வைக்காமல் வாழ்வு நடத்தவும் முடியாதே..

ஓரளவு நாம் கடந்துவிட்டோம் என்றாலும் நம் குழந்தைகள் இதை கடக்கவேண்டியதை நினைத்தால் !!!!!!!..

-------------------------------------------------





ஊரிலிருந்து வந்ததுமே பெரிய மகனுக்கு முக பக்கவாதம் வந்தது ,பள்ளியில்..( Bell's Palsy ). பள்ளியிலிருந்து அழைத்து சென்று காண்பித்தார்கள்.

நானும் உடனே சென்றேன்.. என்னைவிட பள்ளி ஆசிரியர்கள்தான் அதிகம் வருந்தினர். ( அல்லது நான் காண்பித்துக்கொள்வதில்லை )

கண் இமை மூட முடியாது.. ஒரு பக்க உதடு செயலற்று..

இணையத்தில் பல தகவல் சேகரித்தேன்..

முக்கியமா மகனுக்கு ஊக்கம் தந்தேன்.. எதுவானாலும் வாழ்க்கையில் ஏற்க சொல்லி..

ஒரு கஷ்டம் வரும்போதுதான் நம்முடைய மறைந்திருக்கும் மற்ற திறமைகள் வெளிவரும் என நம்பிக்கை கொடுத்தேன்..

( சில நேரம் நினைப்பதுண்டு கஷ்டமே வராமல் இருந்தால் குழந்தைகளுக்கு தலைக்கனம் அதிகமாகுமோ என.

சக மனித உணர்வுகள புரிய தாங்கிக்கொள்ளும் கஷ்டம் வரணுமோ?.. Learning in the hard way?? )

தொடர்ந்து 3 வாரம் மருத்துவமனைக்கு சென்றோம் .. அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுக்கவில்லை..அதனால் அவனுமே கண்டுக்கொள்ளவில்லை.

இப்ப 2 நாளா நார்மலுக்கு திரும்பிவருகிறார்.. 90% நார்மல் இப்போது..

துணை நின்ற இணையத்துக்கும் தகவல் அளித்தவர்களுக்கும் நன்றிகள்..

( இத்தனைக்கும் குடும்பம் முழுவதும் மருத்துவர்கள் பல துறையில் இருந்தாலும்

யாரையும் அணுக விடாமல் செய்தது இணையமே.. :)) )

பெல்ஸ் பால்ஸி தகவல்

பெல்ஸ் பால்ஸி பயிற்சி




---------------------------------------------------------------------------

சுய புலம்பல் என்பதால் பின்னூட்டத்துக்கு நேரம் செல்வழிக்க வேண்டாமே..,.அதைவிட மீனவருக்காக டீவீட் செய்தால் மகிழ்வேன்..











படம்: நன்றி கூகுள்.