skip to main |
skip to sidebar




மதத்தால் என்னென்ன பலன்கள் என போன பதிவில் பார்த்தோம்..http://punnagaithesam.blogspot.com/2010/10/2.html எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தானே.. அதேதான் மதப்பற்றுக்கும்.. மதப்பற்று மத வெறியாகும் போதுதான் பிரச்னைகள் தலைதூக்குவது.. இதிலும் அதிக பயந்த சுவாபமுள்ளவர்கள் , நல்லது கெட்டதை சிந்தித்து ஆராய முடியாதவர்களே பலியாக்கப்படுகின்றார்கள் மத பெயரை சொல்லி.. மதம் என்பதை ஒரு நிறுவனம் போலாக்கி வியாபார நோக்குடன் செயல்படுவது..ஆள் சேர்ப்பது.. இப்படி செய்யாவிட்டால் , சேராவிட்டால் பாவம், பழி என பயமுறுத்துவது... உதாரணத்துக்கு , ஒரு கூட்டத்தினர் சிலர் , " ஏன் பொட்டு வைத்திருக்கிறாய்.. பொட்டை அழித்துவிடு . அது கடவுளுக்கு உகந்ததல்ல " என பொய் சொல்லி , மிரட்டல் விடுவது.. இதை கேட்கும் சில அப்பாவிகள் குழம்பி போவதுண்டு.. இதை செய்தால் சொர்க்கம் , செய்யாவிட்டால் நரகம் என்றும் பயமுறுத்தியே காரியம் சாதிப்பது.. சில புத்திசாலிகள் , இதுவே நரகம் தான் இதைவிடவா பெரிய நரகம் ஒன்று இருக்க போகிறது என்று சொல்லி தப்பிப்பார்கள்.. ஆக இந்த மாதிரியான புரளிகள் பயன் ஏதும் தராது நீண்ட நாளுக்கு...மக்களை ஏமாற்றமுடியாது.. அடுத்து , மதப்பற்றின் காரணமாய் அதீத நம்பிக்கையால் சிலர் மருத்துவரிடம் கூட செல்ல மாட்டார்கள்.. குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளாத பெற்றோரைக்கூட பார்த்துள்ளேன்.. குழந்தை கடும் வயற்றுப்போக்கோ, காய்ச்சலிலோ இருக்கும்போதும் , குழந்தையை கிடத்தி விடிய விடிய ஜெபம் செய்வதும் பாட்டு பாடுவதும், விபூதி பூசுவதும் , பேய் ஓட்டுவதும்... இவர்களை இவர்களின் செயல்களை பார்த்தாலே கோபம் வரும் .. வரணும் நமக்கு... கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது நல்லதுதான்.. ஆனால் அதீத நம்பிக்கை மூட நம்பிக்கையாகிவிடும் அபாயம் இருக்கே.... இது எப்படியென்றால் நீச்சல் தெரியாமல் ஆழத்தில் குதித்து கடவுளே காப்பாத்து என்பது போல... பாவம் கடவுளுக்கு வேற வேலையே இல்லை .. இத்தகைய மூட நம்பிக்கையைத்தான் வேறோடு களையப்படவேண்டும்... மருத்துவத்தையும், மருத்துவரையும் படைத்ததும் இறைவந்தான்.. நமக்கு அறிவையும் கொடுத்து நமக்கான பாதையை தேர்ந்தெடுக்க சொன்னதும் அதே இறைவன் தான்... இறைவன் என்பதே கற்பனை என்றாலும் , ஒருவேளை நிஜம் என்று வைத்துகொண்டால் ,அவனுடைய மக்கள் மேல் அவனுக்கு பாரபட்சம் இருக்க முடியுமா?.. இந்துக்கள் சாமிக்கு படைத்ததை ஒரு கிறுஸ்தவனுக்கு தந்தால் , அதை சாப்பிட்டால் இறைவனுக்கு கோபம் வந்துவிடுமா?.. தீட்டு என்ற ஒன்றை அப்ப ஏன் அந்த இறைவன் படைக்கணும்,.? சாமிக்கு படைத்ததை அந்த இறைவனுக்கு கொடுத்தால் அவரே வாங்கி உண்ணக்கூடும்.. இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும் .? . பாரபட்சமற்றிருப்பதே முதல் தகுதி அல்லவா?..மத பாகுபாடு மனிதனுக்குத்தான்.. இறைவனுக்கு இருக்க முடியாதே.. கூடாதே.. ஒரு தாயானவளே மற்றொரு குழந்தை மேல் அதே போல பாசம் கட்ட முடியும் போது நம் அனைவரையும் படைத்த இறைவனால் நம் கற்பனைக்கு எட்டாத அளவல்லவா நேசிப்பு இருக்கும்..? ஆனால் நம் மக்கள் / மத பரப்பிகள் பலர் இறைவனை ஒரு ஹீரோவாகத்தான் காண்பித்தார்களே தவிர , எல்லா மனிதரையும் , அவர் எப்படியிருந்தாலும் நேசிக்க கூடிய நல்லவராக அல்ல.. அதனால்தான் வந்தது குழப்பம்.. அடுத்து இறைவன் பெயரால் நடக்கும் போர்கள்...ஏதோ ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு அதை திரித்து தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு , அப்பாவிகளை அந்தபோரில் ஈடுபடுத்தி அதை புனிதப்போர் என பெயரிட்டு... !!!!. நாம் கவனிக்க வேண்டியதெல்லாம் , உலகின் மிகச்சிறந்த சேவைகளும் இறைவன்/மதம் பெயராலேயே நடந்துள்ளன ,.. நடக்கின்றன... அதே போல் உலகின் மிகக்கொடிய செயல்களும் இறைவன்/மதம் பெயராலேயே நடந்துள்ளன ,.. நடக்கின்றன... நாம் அனைவருமே பிறக்கும்போது மிருகத்துக்குண்டான அனைத்து குணநலன்களோடும் தான் பிறக்கிறோம்.. எப்படி பட்டை தீட்டப்படுகிறோம் என்பதில்தான் நாம் வித்தியாசப்படுகின்றோம்.. அதுக்கு மதம் ஒரு நல்வழிகாட்டி அவ்வளவே.. மதத்தின் கடமை , தனி மனிதனை சுற்றப்படுத்தி அவனின் மிக சிறந்த குணங்களான , அன்பு , கருணை , பகிர்தல், உதவுதல், இரக்கப்படுதல் , போன்ற அனைத்து நற்குணங்களையும் வெளிக்கொணர்வதாக இருக்கவேண்டும்... மொத்தத்தில் தனி மனித ஒழுக்கத்தினை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும்..விவேகானந்தரின் என்ன சொல்கிறார்?..
அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும். இதை நாம் இயற்கை சீற்றத்தின் போதும் சுனாமி , பூகம்பம் , எரிமலை ,புயல் , வெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற பல அழிவுகளின் போதும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மனிதன் இன்னொரு மூலையில் இருக்கும் சக மனிதனுக்கு மதத்தின் பெயரால் செய்த உதவிகளின் போது உணர்ந்துள்ளோம்...ஆக மனிதாபிமானம் இல்லாத மனிதனில்லை.. மாறாக சில இடங்களில் என்ன நடக்குது.? மதத்தின் பெயரால் , மனிதனையே தற்கொலை குண்டுகளாக மாற்றி, அழிவை நோக்கி ஆக்ரோஷமாக வழிநடத்தப்படுகிறான்..அவனின் சிந்திக்கும் திறன் முழுவதையுமே இழக்க வைக்கப்படுகிறான்... அடுத்து மதத்தில் இணைந்திருப்பதால் நாம் மெளனியாகத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும் என்ற ஒரு தப்பான அபிப்ராயம். தப்புகள் நடந்தால் நமக்கெதுக்கு வம்பெல்லாம்.. எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார்,.. அவர் தண்டிப்பார் என கண்டுகொள்ளாமல் செல்வது , பொறுத்து போவது , தியாகம் செய்வது..., குற்றவாளி என தெரிந்தும் மன்னித்து விடுவது... இது ஒதுங்குதல் , பிரச்னைகளையே புறக்கணித்தல்... இவர்கள் என்ன சொல்லி தப்பிப்பார்கள் தெரியுமா?. " எல்லாம் அவன் செயல்.." .." நம்ம கையில என்ன இருக்கு..? " ... " எல்லாம் ஏதோ ஒரு காரணத்துக்குத்தான் நடத்துவார் கடவுள் ." என.. இவை மத பார்வையில் ஓரளவு தவறல்ல என்றாலும் இதன் பாதிப்புகள் சமுதாயத்தில் அதிகம் இருக்கும்.. இறைவனால் எல்லாம் செய்ய முடியும் என்றால் சட்டம் எதற்கு, அரசாங்கம் எதற்கு, நாம் உழைப்பது எதற்கு.? கண் முன்னால் நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பது வேறு.. கடவுள் மீது கண்மூடித்தனமான பக்தி செலுத்துவது வேறு.. இப்படி மதத்தையும் சட்டம் ஒழுங்கையும் போட்டு குழப்பிக்கொள்வர் சிலர்.. பல்லாண்டுக்கு முன் ஒரு மதத்தில் பல தார திருமணம் சரி என சொல்லப்பட்டிருக்கும்.. அதற்கும் சில வலுவான காரணங்களும் உண்டு என்பதையும் நாம் அறிந்துள்ளோம்.. ஆனால் அதையே இன்னும் பிடித்துக்கொண்டிருந்து பொறுத்துக்கொண்டிருந்தால்..? எந்த ஒரு மதமும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளரணும்.. அதுதான் மக்களை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தவும் ஒரு சுமூக சூழலை உருவாக்கவும் முடியும்.. கிறுஸ்தவ மதங்களிலும் ஆரம்பத்தில் கருத்தடை செய்துகொள்ளக்கூடாது என சட்டம் இருந்தது.. அதனால் ஏற்படும் பாதிப்புகள் அறிந்த பின் இப்ப அந்த தடை நீக்கப்பட்டிருக்கு,.. இதுபோல லெஸ்பியன் , கே திருமணங்கள் , பாலியல் சார்ந்த விஷயங்கள் என பல விஷயங்களை மதம் ஆராயணும்... மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்துக்காக மனிதன் அல்ல... கடவுளுக்கும் மதம் கிடையாது..:) மதத்தால் இங்கு யாருக்கும் பிரச்னையில்லை.. மத சம்பந்தப்பட்ட வாழ்க்கை முறையில் தான் பிரச்னை... ஆக அதிகமாய் நோய்வாய்ப்பட்டிருக்கும் மதத்தினை காப்பாற்ற வேண்டி நடவடிக்கை எடுக்கணும்.. ------------------ தொடரும்.. படம் : நன்றி கூகுள்..




கடவுள் என்பது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை .
எதன் மீது.?
இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட , வியக்கத்தக்க ஒரு சக்தியின் மீது..
ஏன்.?
ஏனெனில் அந்த மஹா சக்திக்கு மட்டுமே எல்லாவற்றின் தலையெழுத்தையும் மாற்றும் வல்லமை இருப்பதாக நம்புவதால்..
ஆக இந்த நம்பிக்கையை பரப்பிட ஒரு நிலையம் , பொது நோக்கத்துக்கான அமைப்பு , நிலையான ஏற்பாடுடைய ஒழுங்கமைப்பு முறை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது தான் ஒவ்வொரு மதமும்.. ஆக ஆரம்பத்தில் ஒரு சின்னமாக ( சூரியன், சந்திரன் , நெருப்பு, ஆறு போல ) ஆரம்பித்த இந்த கடவுள் பக்தி வளர்ந்து உருவம் அற்ற நிலைமைக்கு , அல்லது உருவம் தர இயலா நிலைமைக்கு வந்துள்ளது..
எது எப்படியோ இத்தகைய பக்தியால் மனிதன் தன்னை பற்றியே ஆராய , சிந்தனை செய்ய பின், நல்வழிப்பட பயன்படுத்திக்கொண்டான்.. மொத்ததில் தான் நிம்மதியாக வாழ ஒரு நல்ல சமூக சூழலை உருவாக்கினான்.. அவை எப்படி உதவியாய் இருந்தது என ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
1. மதம் ஆன்மீக வளர்ச்சிக்கு , ஞான உபதேசத்துக்கும் வித்திடுது..
ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மிக உதவியாய் இருப்பது மதம்தான்..வியக்கத்தக்க ஒரு சக்தி மனித பலத்தினையும்மீறி இருப்பது உறுதிப்படுத்தப்படுவதோடு , நிச்சயமாக்கப்படுகிறது..ஆக ஆன்மீக தேடல் ஒரு மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவனது வழி வருவோருக்கும் வளர்ச்சிப்பாதையையே அமைத்து தருகின்றது..ஒரு ஆன்மீகவாதியின் நிம்மதியை , மகிழ்ச்சியான வாழ்க்கையை காண்பவர் தாமும் அதே பாதை சென்றால் தனக்கும் அதே நிம்மதி கிடைக்கும் என்பது இதுதான்..
2. உளநலம் சிறப்படைகிறது..
ஒரு மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட நலம் எப்போதும் நல்ல வளர்ச்சியிலேயே உள்ளது...அதனால் அந்த தனிமனிதனை பின்பற்றுவோருக்கும் மன நலம் நன்றாகவே உள்ளது..நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பலம் படுத்தப்படுவதால் /வலுவூட்டப்படுவதால் உள நலத்துக்கு மிக உதவியாய் இருக்கின்றது..ஒருவரின் உள நலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே உடல் நலம் சிறப்பாக இருக்க முடியும்..
3. மதம் ஒரு நல்ல ஊடகம் , சாதனம் , நட்புக்கு.
எம்மதம் என்றாலும் பிராத்தனைக் கூட்டமோ ,ஒன்று கூடுதலோ ஒரு மிக சிறந்த நட்பு வட்டத்தை ஏற்படுத்தி தருகின்றது..ஒருவரின் பிரச்னை நேரம் பல ஆலோசனைகள் உதவிகள் கேட்காமலேயே தரப்படுகின்றது.. மனிதனின் அத்தியாவசிய தேவைகளை கூட இக்கூட்டம் பகிர்ந்து அளித்து உதவி இன்புறுகிறது... பொது நல சேவைகளை முன்னின்று நடத்தவும் ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கை உடையவராக மாற்றவும் இந்த நட்பு வட்டம் பெரிதும் துணை நிற்கிறது... மனிதனுக்கு செய்வது காண முடியாத அந்த இறை சக்திக்கு செய்வதாய் எண்ணச்செய்து மகிழ்ச்சியை தருகின்றது ....
4. ஆக்கபூர்வமான வேலைகளை ஊக்குவிக்கின்றது..
பிராத்தனை மூலமும் , பாட்டுக்கள் மூலமும், பிராத்தனை கூடங்களை சுத்தப்படுத்தும் செயல்கள் , அலங்காரப்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் பலரது படைப்புத்திறன் வெளிக்கொணரவும் கூட்டவும் முடிகிறது..இசையில் நாட்டமுள்ள ஒருவர் தன் திறனை இலவசமாக மேம்படுட்த்திக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது..இப்படி உருவான இசை அமைப்பாளர்களையும் நாம் அறிவோமே..அதே போல சிறு தொழில்கள் , கற்பித்தல் போன்ற பல நல்ல செயல்களை செய்ய பழக்கப்படுத்துகின்றது.. திறமைசாலிகளை உருவாக்கி சமூகத்துக்கு மிக உபயோகமாய் இருக்கின்றது...
5.மனிதனின் இக்கட்டான நேரத்தில் அவனுக்கு துணிவை தருகிறது
மத நம்பிக்கை ஒருவனின் கெட்ட , துன்பமான நேராத்தில் ஒரு பிடிமானம் தருகின்றது.. அவன் நம்பிக்கை வைக்க ஒரு மதம் தேவைப்படுகின்றது .. அந்த நம்பிக்கையே அவனுக்கு தேவையான ஊக்கத்தையும் , பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் தைரியத்தையும் , தெம்பையும் தருகின்றது அவன் சோர்வடைந்துவிடாமல்..எத்தனையோ நீதிக்கதைகளும் , பிரச்னைகளையும் அவைகள் தீர்க்கப்பட்ட விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்கிறான்..மத நட்புகளின் ஆறுதல் , உதவி பெறுகின்றான்.. துணிவோடு எதிர்கொள்கிறான் மீண்டும் இந்த வாழ்க்கைப்பயணத்தை தொடர்கிறான்..நம்பிக்கையோடு..அதுமட்டுமல்லாது மற்றவருக்கு துன்பம் நேருகையில் தனக்கு கிடைத்த ஆறுதலை , உதவியை திரும்ப அளிக்கின்றான்.. நன்றியோடு..6. ஆழ்ந்த துக்கத்திலிருப்பவனுக்கு பரிவு தருகின்றது
தனிமையிலிருக்கும் ஒரு மனிதனுக்கும், பல்வேறு கவலையிலிருப்பவனுக்கும் உதவிடுது..தங்களின் மிக நெருங்கிய ஒருவரின் இழப்புக்கு பின் பலரின் மத நம்பிக்கை அதிகரித்துள்ளது.தனிமைப்பட்டிருக்கும்போது ,துன்பம் அடையும் போதும் மதமும் மத வசனங்களும் , பரிவு காட்டி அவர்களை அத்துன்பத்திலிருந்து மீள வழி செய்துள்ளது..பூரண அமைதியை தருகின்றது.. கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தருகின்றது...
7.. ஒருவரின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது..மனிதனின் உடல்நலம் மத நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு இன்னும் அதிகமாய் மேம்பட உதவுது..ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, வழி முறைகளையோ பின்பற்ற ஆரம்பித்த பின் அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிரூப்பதாய் ஆராய்ச்சிகள் சொல்கிறது..உடல் நலமில்லாவிட்டாலும் தம் உடல் விரைவில் நல்லபடியாக தேறும் என்ற நேர்மறை எண்ணம் மத நம்பிக்கையுள்ளவருக்கே அதிகம் இருக்கின்றதாம்...அந்த நேர்மறை எண்ண அலைகளே பலருக்கு ஆச்சர்யமூட்டும் , அதிசயிக்கும் வகையில் நலமும் தந்துள்ளதாம்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆக இப்படி பல்வேறு நலன்கள் மதங்களில் இருப்பதனால் தான் இத்தனை ஆண்டுகள் இன்னும் மதம் அழியாமல் பின்பற்றப்பட்டுவருகின்றது... இல்லையென்றால் இந்நேரம் மதத்தால் ஏற்பட்ட பிரச்னைகளால், போர்களால் எப்பவோ அழிந்து போயிருக்கக்கூடும்..மதம் பின்பற்றாதவர்களெல்லாம் மோசமானவர்கள் என்று அர்த்தமில்லை..அதே போல மதம் பின்பற்றுபவரெல்லாம் நல்லவர்கள் என்றும் அர்த்தமில்லை.. அது அவரவர் வளர்ப்பு சூழலும் காரணம்..
நாம் இங்கே பார்ப்பது மத நம்பிக்கை உள்ளவனுக்கு மதம் எவ்வாறு உதவியாய் இருக்கிறதென்றே..
அடுத்து மதத்தால் ஏற்படும் நேர்மறை எண்ணம் , ஞானம் பற்றி அலசுவோம்..
----------------------------------------------------------------------------
தொடரும்...
படம் : நன்றி கூகுள்
------------------------
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மடல் இங்கே பகிற்கிறேன் அவரின் அனுமதியோடு..
மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.
--------------------------------------------
வணக்கம் மேடம்
சாந்தி தெரு பதிவு எதேச்சையாக எங்கள் தெருவில் நடந்த சம்பவத்தை நகைச்சுவை கலந்து எழுதிய பதிவு. உங்களை புண்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. முதலில் எனக்கு பதிவுலகில் யாரையும் தெரியாது. தெரிந்தவர் பகலவன் மட்டுமே. அவர் சொல்லித்தான் இப்போதுதான் உங்கள் பெயர் சாந்தி என்பது எனக்கு தெரியும்.
அந்த பதிவு எழுதும் போது சத்தியமாக உங்கள் பெயர் எனக்கு தெரியாதுங்க.
உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.
Really Sorry ....
--
yalini
jmms: இந்த மன்னிப்பை நான் பொதுவில் போடலாமா யாழினி அவர்களே..?.
yalini : சரிங்க..போட்டுக்கோங்க..
--------------------------
சாந்தி (சண்டை) தெரு http://yohannayalini.blogspot.com/2010/09/blog-post_9927.html
என்ற பதிவு பற்றி..
யாழினி உங்க பெருந்தன்மைக்கு என் வாழ்த்துகளும் பாராட்டும்..
நன்றி யாழினி.
யாழினியின் மேலும் பல படைப்புகள்..http://yohannayalini.blogspot.com/



மதமும் மனித உறவுகளும்.. உளவியல் ரீதியாக கட்டுரை எழுதும் வரிசையில் பல விஷயங்கள் படித்தாலும் எதை எழுதுவது என்று நான் கேட்டிருந்த நேரத்தில் நண்பரொருவர், " மதங்களும் மனித உறவுகளும் " என்ற தலைப்பில் எழுத சொன்னார்.. இது குறித்து தமிழமுதம் குழுமத்திலும் பல விவாதங்கள் நடத்தியுள்ளோம் 1000 மடல்களுக்கு மேல்..பல்வேறு மதத்தினரோடு , பார்வையோடு.. ஆக இதை எழுதுவதே ஒரு மகிழ்வான செயல்... நன்றி அந்த நண்பருக்கு.. ------------------------------------------------------- "Doubling the rate of religious attendance raises household income by 9.1 percent, decreases welfare participation by 16 percent from baseline rates, decreases the odds of being divorced by 4 percent , and increases the odds of being married by 4.4 percent."
மதம் என்பது நான் இங்கு பொதுவாக மட்டுமே உபயோகிக்க போகும் வார்த்தை.. வாசிப்பவர்கள் அவரவருக்கு பிடித்த மதத்தை ( கவனிக்க அவரவர் மதத்தை அல்ல ) பற்றி நினைத்துக்கொள்ளலாம். மதம் என்பது மனிதன் உருவாக்கியது.. கடவுள் என்பது கட்டுக்கதை என்று நினைப்பவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் பல உள்ளது.. கடவுள் என்பது கட்டுக்கதை, கற்பனையா.?. இருந்துவிட்டு போகட்டுமே.. அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை .?.. தீமைகள் யாவை.? எது அதிகம் என அலசுவோம்... கேள்விகளை தொடுத்தால் தான் மற்றவரின் மாற்றுப்பார்வையை புரிந்துகொள்ள முடியும்..மாற்றுக்கருத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்.. கேள்விகள் கேட்காமலேயே தங்கிவிடுவதுதான் தோல்வியின் ஆரம்பம்.. எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கணும் என்ற கட்டாயமுமில்லையே. மதம் தாண்டி அறிவியல் வளர்ச்சி அப்படித்தான் ஏற்பட்டது.. இருப்பினும் மதத்துக்கு ஏன் இந்த முன்னுரிமை தரப்படணும்.? அதைத்தான் நாம் அலச போகிறோம். மதம் அடுத்து சடங்குகள் , பழக்கவழக்கங்கள் என அக்காலத்துக்கு ஏற்ப பல நல்ல விஷயங்களை எழுதியும் செய்தும் வைத்துவிட்டு போனார்கள்.. சிலது எக்காலத்துக்கும் பொருந்தும்.. சிலது எல்லா மாற்றத்துக்கும் உள்ளாகும்... அடிப்படையில் எல்லா மதமும் நல்ல விஷயங்களையே சொன்னாலும், நடைமுறைப்படுத்துவதில்தான் பல சிக்கல்கள் .. இங்கு நாம் அறைத்த மாவையே அறைக்க வேண்டாம்.. மதத்தால் ஒரு தனிமனிதன் அடையும் உயர்வு என்ன..? சிலர் ஏன் மதத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.. மதப்பற்று கூட மத வெறி ஆவது ஏன்.. அவர்களை எப்படி கண்டுகொள்ள?.. நாளொரும் ஏனியும் பொழுதொரு வண்ணமுமாய் கண்டுபிடிப்புகள் அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு பயங்காட்டிக்கொண்டு மூலையில் உட்கார வைப்பதை தடுக்கணும்..அது எந்த மதம் என்றாலும்.. ஆனால் அதுவும் மென்மையான வழியில் , புரியவைத்து மட்டுமே.. கோபர்நிக்கன், டார்வின் கோட்பாடுகள் மனிதனுக்கு இயற்கையில் ஒரு முக்கிய இடத்தை அளித்திருந்தாலும் , மனிதனை மையமாகக் கொண்ட , மனித இனத்தையே இயற்கையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற ,மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற .விஷயத்தில் அதிகமின்றி , தனிப்பட்ட சுதந்திரம் உள்ளவனாய் , சிந்திக்க வல்லவனாய் படைக்கப்பட்டுள்ளான்.. அப்படியானால் எல்லாம் எனக்கே எனக்காய் படைக்கப்பட்டிருந்தால் , எது என் மகிழ்ச்சியில் குறுக்கிடுது.. ஏன் ..? இங்குதான் மதச்சார்பற்றவரின் பார்வைக்கும் மதப்பற்றுடையவனுக்கும் உள்ள வித்யாசம் என்னென்ன உண்டு என பார்க்க போகிறோம்.. முக்கிய விஷயம் இது எல்லோருக்கும் பொருந்தும் என்பதல்ல.. அனேகருக்கு..என்கிறது ஆராய்ச்சிகள்.. ஒருவரை அவமானப்படுத்துவதில் கூட இதை காணலாம்.. ம.பற்றுடையவர் எளிதில் அவமானப்படுத்தமாட்டார். அதே நேரம் அவமானத்தை எளிதில் மன்னித்து மறந்தும் விடுவார்..ம.சா.அற்றவரின் ஆசைகளும் கற்பனைகளும் எல்லையற்றவையாக இருப்பதினால் அவரால் தொடர்ந்து உயிர் வாழ்தல் என்பதே மிக வெறுப்பானதாகவும் கசப்புக்குறியதாகவும், திருப்தியற்ற வாழ்க்கையாகவுமே எல்லாவற்றையும் கேள்விக்குறிய ,சந்தேகத்துக்குறியதாக மாறிவிடுகிறது.. மாறாக ம.பற்றுடையவருக்கு , எதிர்பார்ப்புகள் அளவோடு இருந்தும், முதிர்ச்சியான புரிதலோடும், ஏமாற்றங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளும் தன்மையோடும் இருக்க பழக்கப்படுத்தப்படுகிறான். இரக்கம் , கருணை , தயவு போன்ற விஷயங்களில் ம.பற்றுடையவரின் சிந்தனை மிக உயர்வாக இருக்கும்..இத்தகைய குணநலன் பாரபட்சமின்றி அனைவருக்குமானது , என்ற நல்ல எண்ணம் இருக்கும்.. இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதே அடிப்படை மனித நேயம் என்று எண்ணுவர்.இவர்களை பொறுத்தவரை மனிதன் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்து , பாவத்தோடே வளர்ந்து அதை ஏற்கும் மனப்பக்குவம் அடைகிறான்..தவறுவது இயல்பாகிறதால் மன்னிப்பும் இயல்பாகிறது இங்கே.. மாறாக ம.சா.அற்றவருக்கோ, பிறக்கும்போது மனிதன் நல்லவனாய் பிறந்து சூழலால் கெட்டவானாய் மாறுகிறான் என்பதால் , இது அவனவன் தலையெழுத்து , அவனவன் மட்டுமே பொறுப்பு என்று எண்ணிடுவான்..ஆக இரக்கம், கருணை, தயவு , மன்னிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.. ஆக ம.சா.அற்றவர் மனித குலத்தை இரண்டாய் பிரிக்கிறார். 1. பாதிக்கப்பட்டவர். 2. பாதிப்பு உண்டாக்குபவர்.. ஆனால் ம.பற்றுடையவருக்கு இத்தகைய பிரிவினை ஏதுமில்லை.. ஒன்றேதான் மனிதகுலம்..அது தவறு செய்யும் , திருந்தும் , பின் தவறு செய்யும்.. இதில் விதிவிலக்கென்ற பேச்சுக்கே இடமில்லை.. எல்லாருக்கும் இது ஏற்படும் யாரும் விசேஷமில்லை.. அதனால்தான் ம.பற்றுடையவருக்கு தன்னைப்போல் சக மனிதனை பார்க்க முடிகிறது,. நேசிக்க முடிகிறது.. ஏன் மன்னிக்கவும் முடிகிறது... கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்னையே இல்லை.. நரகமா சொர்க்கமா என்றும் அதுக்கு பயந்த வாழ்க்கை என்றும் கூட அதிகமா எண்ண தேவையில்லை.. இந்த வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது..?. சக மனிதன் , நம்மை சுற்றி இருப்பவன் எல்லோருமே ஒற்றுமையாய் இருந்தால்தான் நம் மகிழ்ச்சி.. ஆக இந்த ஒற்றுமையை எப்படி கொண்டு வருவது.? அதனாலேயே உருவாக்கப்பட்ட நீதி கதைகள்.. கட்டுப்பாடுகள்.. ஒழுக்கங்கள் என்ற விதிகள்.. எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் நீதி ஒன்றுதான்.. உன்னை போல அடுத்தவனையும் நினை.. எனக்கு கிடைத்த ஒரு நிம்மதியான , திருப்தியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணும் என்ற எண்ணத்தை நல்லதொரு மதமும் அதன் செயல்பாடுகளும் விளக்கும் விளக்கணும்.. இதில் சிலர் அரசியல் செய்தமையால் பலருக்கு வெறுப்பு ஏற்பட்டே மதங்களை வெறுக்கின்றனர்.. அது அவசியமேயில்லை.. எல்லா மதத்திலும் நல்ல விஷயங்கள் ஆராவாரமில்லாமல் அமைதியாக விளம்பரமின்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நல்வழிப்படுத்திக்கொண்டும் இருக்கின்றன.. ஆக அதை நாம் பார்க்கவேண்டும்.. நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை ஏதும் தடை செய்யவும் வேண்டாம்.. கண்டிக்கப்படவேண்டியதெல்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் மட்டுமே.. ஏனெனில் மதம் குடும்ப வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றது.. தனி மனிதனுக்கு அதிக பொறுமையை , தியாகத்தை கற்று தருகின்றது.. அதிலுள்ள இன்பத்தை சொல்லி தருகின்றது...சக மனிதனின் துன்பம் நம்மையும் பாதிக்க செய்கிறது.. ம.பற்றுடையவர் என்பதை விட ஆன்மீகவாதியால் சமூகத்துக்கு அதிக தொந்தரவு ஏற்படுவதில்லை.. ஆனால் ஆன்மீகம் பற்றி சிந்திக்காதவர் ( தன்னை பற்றி தன் பிறப்பு ஏன் என்பது பற்றியும் கூட ) எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைகொள்ளாமல், பிடிவாதமாய் இருப்பதால் அதிகளவு தவறான நடவடிக்கையில் ஒரு வித வெறுப்பு மனப்பான்மையோடு நடந்துகொண்டு உலகையும் கெடுத்து வைப்பதாக சொல்கிறது ஆராய்ச்சிகள்.. இத்தகையவர்தான் ஆன்மீகவாதி என்ற போர்வையில் மறைந்துகொண்டும் மற்றவருக்கு தொந்தரவு தருவதும்.. ஒரு குழந்தை நல்லதொரு ஆன்மீக சூழலில் வளரும்போதே இத்தகைய நல்ல குணநலங்களை எளிதாக பெற்று வளர வைக்கப்படுவார்கள் ஆசிரியர்களால் ( அல்லது மத குருக்களால் ) நாம் ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாவிட்டாலும் வளரும் குழந்தைக்கு , புதிதாக உலகத்தை பார்த்து கேள்விகளோடு பிரமித்தும் , குழம்பியும் போயிருக்கும் குழந்தைக்கு இத்தகைய ஆன்மீக கதைகள் , வகுப்புகள் அவர்களை நல்வழியில் வளர்க்க உதவிடும்.. உதாரணத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது தப்பு.,. அடுத்தவரை காயப்படுத்தும் என சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் எச்சூழலிலும் அதை சொல்வதை தவிர்க்கும்.. மாறாக தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை அடையும்.. அதை வைத்தே மற்றவரை மாற்றிடவும் செய்யும்... இதை ஆன்மீகமற்றவரால் செய்ய முடியாதா என்றால் ஒருபோதும் முடியாது என்பதல்ல. அப்படியான ஒரு சூழல் உருவாக்குவது மதத்தால் செய்வது எளிது என்பதுதான்.. காதல் என்றால் கற்பனையை ஏற்றுக்கொள்ளும் நம்மால் , மனித குல மேம்பாட்டுக்காக ,ஒரு நல்ல விஷயத்துக்காக கடவுள், அதை சார்ந்த மத கதைகளை கற்பனைகளையும் ஏற்றுக்கொள்ளலாமே.?.முக்கியமா குழந்தைப்பருவத்திலாவது.... கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமாய் இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக தீங்கற்றது...வாழ்வதற்கான நம்பிக்கை தருகிறது .. மேலும் பல்வேறு கோணத்தோடு தொடருவோம்.. படம் : நன்றி கூகுள்..