Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, May 1, 2011

மே தினம்


அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
குற்றம் குறை சொல்வதுமுனக்கு அழகல்ல...


பணக்கூலிபெற்றால் தொழிலாளிவர்க்கமாம்
பத்துதேய்ப்பவள் பட்டியலில் இல்லையாம்.:(

செவிலியரென்றால் ஊதியம் மரியாதை,
செத்துமடியும்வரை முடிவில்லாத வதை?..

பாட்டிலோடு ஓய்வுக்கு தேவை ஒரு டாஸ்மாக்
பாலியல் தொழிலாளி உன் தேவை ஒரு மாஸ்க்..

குடும்பத்துக்கு உழைக்கும் பெண்ணே உனக்கும்
குடிமக்கள் துயர்நீக்க உழைக்குமனைவருக்கும்


எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.




படம்: நன்றி கூகுள்..





.

Monday, February 14, 2011

விதவிதமான காதல்

.





பள்ளி படிக்கையிலே
துள்ளி விளையாட
வள்ளி அவளோடு
வந்ததம்மா ஒரு காதல்..

பருவம் எய்கையிலே
உருவம் குழப்பினாலும்
குருவின் நல்வழியில்
கருத்தாய் கல்விமேல் காதல்.

தேசிய மாணவபடை
தேர்ச்சி சுடுததிலே
தேகம், மனம் ,ஆணாகி
தேடுதலில் ஒரு காதல்

பொறியியல் கல்லூரி
பொறுப்போடு படிப்பிங்கே
பொருந்தாத பலகாதல்
புத்தகமே முழு காதல்

வேலையில் முன்னேற
வேகத்தோடு விவேகமுமே
எப்பொழுதும் உழைப்பென்றால்
எங்கே வரும் ஒரு காதல்

இருமனம் இணைந்திட்ட
திருமணமே முதல்காதல்
மழலைகள் வருகையிலே
மனதெல்லாம் சுககாதல்

எதுவெல்லாம் காதலிங்கே
எனசொல்ல இயலாதே
இடற்பாடும் காதலென்றால்
இனிமைக்கு குறைவுண்டோ?




இறைவனைக்காதலித்தால்
ஏழ்மையை நீக்கிடலாம்
மகேசனை சேவிப்போர் -சக
மக்களை காதலிப்பார்.

இயற்கையை காதலித்தால்
இனி இல்லை அழிவிங்கே
உழைப்பை காதலிப்பவன்
உலகை வெல்வான் காதலினால்



தப்பை தட்டிகேட்க
துணிவை நீ காதலி
ஏழ்மை, அடிமை நீங்க
ஏட்டை நீ காதலி
சமூகம் மேம்படவே
சம உரிமையை காதலி
அகிலத்தை உயர்த்திடவே
அறிவை நீ காதலி
சுகாதாரமான வாழ்வுக்கு
சுத்தத்தை நீ காதலி
மல்யுத்த போர் நீங்க
மழலை பேச்சை நீ காதலி



அநியாய கொலை மறைய
ஆபாசத்தை நிறுத்திடுவாய்
வன்முறையை நீக்கிடவே
வஞ்சகக்கூட்டம் சேராமல்
வரம்புகளை மீராமல்
வழிகாட்டியாய் வாழ்ந்திடுவோம்.


ஆதலினால் காதலிப்பீர்
ஆகாயம் இனி தூரமில்லை
ஆர்வத்தோடு பகிர்ந்தளித்தால்
ஆனந்தமான உலகமிங்கே,..








படம் : நன்றி கூகுள்..

Monday, September 6, 2010

பெண்ணே உனக்குத்தான் எத்தனை பெயர்.?























































ப‌த்துமாத‌ம் வ‌ய‌ற்றில் சும‌ந்து
- தாலாட்டி
வ‌ள‌ர்த்த‌ பெண்ணே உன்னை
அம்மா என்று அழைக்கிறேன்!!


என் உட‌னாய் பிற‌ந்து - பாச‌ம‌ழைப்
பொழிந்த‌ பெண்ணே உன்னை
ச‌கோத‌ரி என்று அழைக்கிறேன்!!




வெள்ளைத் தோல் உன்ன‌ழ‌கில் - ம‌ய‌ங்கி
வ‌சீக‌ரித்த‌ பெண்ணே உன்னை
காத‌லி என்று அழைக்கிறேன்!!




அடிமையாய் வ‌ந்து என‌க்கு - ப‌ணிவிடை
செய்யும் பெண்ணே உன்னை
ம‌னைவி என்று அழைக்கிறேன்!!



என்னைவிட‌ அதிக‌ம் ப‌டித்து - பொதுவில்
ஆணிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டுவ‌தால்
புர‌ட்சி பெண்ணே உன்னை
விப‌ச்சாரி என்று அழைக்கிறேன்!!



க‌டைசியில் சொன்ன‌து நிஜ‌மாய்
போனால்,
மேலே சொன்ன‌து பொய்யாய்
போகுமோ!!!!






Tuesday, August 24, 2010

எதுவெல்லாம் இன்பம்.?..








































கற்பனை

செய்யதெரிந்தவருக்கு காதல் இன்பம்

தியாகம்

புரிய துணிந்தவருக்கு சாதலும் இன்பம்..

வாழ்வை

ருசிக்கத்தெரிந்தவருக்கே கடமை இன்பம்

சாவை

அஞ்சாதவனுக்கு சாதிக்க இன்பம்

வளர

நினைப்பவனுக்கு வலியும் இன்பம்

மன்னிக்க

எண்ணுபவனுக்கு மறதி இன்பம்

தனிமையானவனுக்கு

உரிமையோடான கண்டிப்பும் இன்பம்

அனுபவிக்க

தெரிந்தவனுக்கே துன்பமும் இன்பம்..

இன்னும் வளர்க்கலாம் ..................

நன்றி : படம் கூகுள்











Friday, October 16, 2009

ஆமா, நானும் புகை பிடிக்கிறேன்






விடியற்காலையில் ஆதவன் வருகையை
விழிவைத்து பார்த்து ரசிக்கையில் விரைவாய் நாசி ஏறுது கீழ்வீட்டிலிறுந்து
விழுங்குவது போல் சிகெரெட் புகை


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


அரக்க பரக்க அலுவல் செல்ல

அள்ளிபோட்டதை வாயில் மெல்ல

அருகே புகை வர , பிடிக்கிறேன்

அஞ்சு பைசா செலவில்லாமல்


ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.


மனம் மகிழ சினிமாவுக்கு போனா
மப்போடு மனிதன் பின்னாலிருக்க

மயக்கமாய் வருது புகை நெளிந்து

மன்றாடினேன் , புகை பலமாய் வருது.


ஆமாம் நானும் புகை பிடித்தேன் விரும்பாமலே..



( கீழ் வீட்டில் இருந்து புகை வருது பால்கனி வழியே. புகைபிடிப்பவனை திட்ட முடியாமல் அவசரமாய் ஒரு கவிதை..:)) )

பாசிவ் ஸ்மோகிங் தான் அதிக ஆபத்தும்.. தயவுசெய்து நிறுத்துங்க மக்களே...:)

Wednesday, March 11, 2009

எப்படி அழைப்பேன் இனி ?

எப்படி அழைப்பேன் இனி ?


அதே கை, அதேபோல் கால்
அதேபோல் உடம்பும், உணர்வும்
அன்னைக்கும்தானே இருக்கு அண்ணா?

என் தோழியை விரசமாக எண்ணி
எனக்கெதிரிலேயே சரசமாட மனதில்
எப்படியண்ணா முடிந்தது உன்னால்?

தாய்மீது நீ கொண்ட பாசமும்
தங்கை என்மீது பொழிந்த நேசமும்
தவிடாகிடுமோ என அஞ்சுகிறேன்

தரணியில் இனி யாரை நம்பிட
தவிக்கின்றேன் சொல்ல வார்த்தையின்றி
தவக்கோலத்தில் நீ, நெருப்பில் நான்...

முடிவெடுத்தேன் முன்னிற்பேன்
முகமுடி களைவேன் மிருகத்திடமிருந்து
முன்வைத்த காலை பின்வாங்கிடமாட்டேன்

அதே சமயம் இறைபற்றால் மன்னிப்பேன்
அவற்றை நீ மனதாற தவறென உணர்ந்தால்
அன்றே நான் அழைப்பேன் அண்ணா என..

Saturday, February 14, 2009

பொது வாழ்த்து..

நல்லுலகம் படைத்தவனே!
நலமளித்த இறையவனே!!
சொல்லெடுத்து நான்வணங்க
சுகமளிப்பாய் தமிழாலே!


பாலோடு பண்பாட்டை;
பாசத்தை அளித்(த) தாயே
வாழ்வதனை எளிதாக்கி
வழிகாட்டும் தந்தையவர்
கலை,கல்வி , ஒழுக்கத்தை
கற்பித்த ஆசான்கள்
இன்பத்தில் துன்பத்தில்
இணைந்திட்ட நட்புகளே

அன்புக்கு காட்டாக
அகமகிழும் உறவுகளே
எங்கெங்கே போனாலும்
இனிமைக்குத் தமிழேயாம்
அனைவருக்கும் என்வணக்கம்
அழகான முகமன்தான்




கவியரங்கத்தலைவருக்கு நன்றி

கவியரங்க கச்சேரியில்
கருத்தாய் கலகலப்பூட்டி
ஆளுக்கொரு கவிபடைத்து
அசத்திய அசாத்திய ஆசாத்(ஜீ)
வாழ்த்திடவே தடைபோட்டு
வாய்ப்பினையே பறித்துவிட்டீர்
வணங்கி ஆசிபெற வர‌
வரவேற்று வழிநடத்துவீர்..
ஆனைகள் பெருமிதத்தில்
அசைந்தாடி களிக்குமிங்கு
பூனைக்கொரு மிடங்கொடுத்தீர்
பூரித்தேன் நன்றி ஐயா..

சபையோர்க்கு வணக்கம்..

மொக்கையே பிரதானமென
மொழிபழக கலந்துவந்தேன்
அரவணைத்தீர் அன்பொழுக,
பயிற்றுவித்தீர் பண்புடனே.
கவிதையை சமர்ப்பிக்க
கவியரங்கில் வாய்ப்பளித்தீர்
பயத்துடனே எண்ணத்தை
படைத்துவிட்டேன் சபையினிலே
பக்குவமாய் பிழைதிருத்தி
படிகளேற துணைசெய்வீர்..



இனி வரும் நாளில்.....



அருமையா தூங்குற பச்சபுள்ள‌
அழவிட்டு பள்ளி போவதென்ன.?
அலுவலகம் சென்ற அம்மாவோ
அவசரமாய் வருகின்ற‌ அவலமென்ன ?

நிதானமாய் ஒதுங்க இடமில்லை
நிழல்தரும் மரமோ செத்தொழிந்ததென்ன?‌
நித்தமொரு கட்சி கூட்டமுன்னு
நிலமுழுதும் குழியாய் ஆனதென்ன..?

அரசாங்க‌ வேலை செய்வதற்கே
அட்டைபோல் லஞ்சம் உரிவதென்ன?.
காசு பணமாய் காண்பித்தால்தான்
கட்டையுமிங்கு வேகுவதென்ன?

கன்னி தான திருமணத்தினிலே
கற்போடு பண‌ம் விலையானதென்ன?
சன்னிதான பூஜையிலுமிங்கு
சல்லிக்காசே பெரிதானதென்ன?

பொக்கிஷமான பெரியோரெல்லாம்
பொதிகளாகவே போன பொறுப்பென்ன?
வெட்கி வேதனை பட வேண்டியதும்
விதியாலே கலாச்சாரமானதென்ன ?

மதிக்க வேண்டிய மத சட்டமிங்கே
மதம்பிடித்து சின‌ வெறிகொண்டதென்ன?
சதிகார கும்பல் மும்பையிலே
சகோதரனை தொலைத்த‌ அவலமென்ன

இனமொன்று இழிநிலை அரசியலால்
இலங்கையில் இன்று அழிவதென்ன
தினம் உழைத்திட்ட விவசாயியும்
தற்கொலையையே நாடுவதென்ன ?..

பிரச்னை, துன்பம் பலவிருந்தாலும்
பிரிந்தே விலகிநின்றால் முடிவென்ன?
அன்பும் மனித நேயமுமே எம்
மதமாய் வாழ்ந்திட்டால் பயமென்ன?

இனிவரும் நாளில் பிறர்வாழ்வையுமே
தன்வாழ்வாய் நினைத்தால் தப்பென்ன?
துன்பத்தை இன்பமாய் மாற்றிடவே
துணிந்தே செயல்ப‌ட்டால் துயரென்ன?

சுற்றியுள்ளவர் வாழ வைத்திட்டால்
சுகமே பெற்றிடுவோம் வேறென்ன?
சுற்றுகின்ற பூமியை சுற்றமாக்கினால்
சுதந்தர வாழ்வினிமேல் தூரமென்ன?


முதியோர், குழந்தை பாசத்தையும்
முழுதுமே பயன்பட்டிட வழியென்ன?
குடும்பத்தின் சொத்தே அனுசரிப்பில்
கூடியே வாழ்ந்திட்டால் பழியென்ன?

அரசியலும் ஒருவித நல்தியானமே
ஆழம் கண்டுவிட்டால் வெறுப்பென்ன?
நற்செயல்கள் தீயாய் பரவிவிட்டால்
வன்முறை ஒழித்திடலாம் தோல்வியென்ன?

Friday, January 23, 2009

தேவை ஒரு தேவதையின் வதை...

(குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்கையில், ஹாக்கி மட்டையை வைத்து தெரியாமல் என் காலில் அடித்துவிட,

நான் வலியில் சிறிது கத்த, துடித்துவிட்டது பிஞ்சிக்குழந்தையின் மனசு...

உடனே ஓடிவந்து என் பாதத்தை தூக்கி தன் மேல் வைத்துக்கொண்டு பிஞ்சு விரல்களால் வருடிவிட்டதோடு, முத்தி செய்து,
சாரி சாரி என பலமுறை சொல்லிவிட்டு என் மன வலியை அதிகரித்தது...


என்னுடைய வெள்ளை உடுப்பை போட்டுக்கொண்டு ஒரு பெண் தேவதை போல செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது...)

இந்த தேவதைகள் வைத்து ஒரு கவிதை முயற்சி...


தேவையுந்தன் வதை தேவதையே......


தீவீரவாதியின் வீட்டில் புகுந்து
தீர்க்கமான உன் பார்வையால்
தீர்த்துகட்டிவிடு மனதின் வன்மத்தை
தீபமாய் வளரட்டும் உன்மேல் பாசத்தை
தீயவை தீண்டாமல் தேவதையே அருள்கொடு ..!!!


அரசியல்வாதிக்கொரு அருமருந்தாய்
அன்பைப்பொழிந்திட, லஞ்சம் வாங்கும் கையிலுன்
அழகிய பிஞ்சுப்பாதங்களை கொஞ்சிடக்கொடுத்திடு
அடுத்தவனுக்கு தீமை நினைக்குமுன், உன்பால்முகம்
அறிவுறுத்தி முளையிலேயே அழித்துவிடு...

கலப்படம் செய்பவனுக்கோ உன் கள்ளமில்லா புன்னகை
கலங்கடித்து , கருணை பிறந்திட ஆணையிடு....

வெறிபிடித்தலையும் மனிதம் தோற்றவரிடமும்
வெருப்பு நீக்கிடவே சிரிப்போடு நீ விளையாடிடு ..

ஏற்றத்தாழ்வு பாராட்டி, அடிமைத்தனம் பண்ணுவோரையும்
ஏங்கவைக்க உன் மழலை மொழியில் கவிபாடு...

உயிர்க்குலைக்கும் போருக்கு காரணமானவரை உன்
உமிழ்நீரால் முழுவதுமாய் மனஅழுக்கை கழுவிவிடு...

இடிஅமீன் பரம்பரை என பறைசாற்றுபவரையும் நீ
இருக கட்டியே இன்முகத்தோடு அணைத்துவிடு...

கோபம், காமம் காட்டும் தொலைக்காட்சியை பார்க்கும்போது
குசும்புகளை அதிகமாக்கி கவனத்தை திருப்பிவிடு...

சோர்வாய், பாரமாய் நகரும் நாள்களில், சுறுசுறுப்பாய், பூஞ்
சோலையாய் , கண்சுடரொளியால் நம்பிக்கையை ஊன்றிவிடு...


யாரும் மறுத்திடுவாரோ உன் அன்பை தேவதையே
யாவரும் கேளிராகிட தேவை உந்தன் வதையே...

ஊருக்கு போகலாமா மகனே?...

ஊருக்கு போகலாமா மகனே?...

ஒறவுகள பாத்து கண்குளிற‌
ஒருவருச விடுமுறையில்
ஒன்னையயும் அழைச்சுக்கிட்டு
ஒய்யாரமா போகப்போறேன் !

மாமன் மடி காத்திருக்க..
மறைஞ்சு ஒளிச்சு வெளயாட,
அத்தை சமையல் வாசனையும்,
அதுக்குள்ளே என்ன‌ இழுத்துடுச்சே!..

மச்சான்காரன் நீயும் ஊர்சுத்த
மறுபடியும் வண்டிய சரிசெஞ்சான்
மதினியும் நீ ஊஞ்சலாட,க‌யிற‌
மரத்தில பலகைபோட்டு காத்திருக்கா..!

பட்டணத்து வாழ்க்கையில‌
பாசத்ததான் தொலைச்சுபுட்டே!
பட்டிக்காட்டு சனங்ககிட்ட‌ பாடமும்...
படிச்சுபோட்டு மறு பிறவியெடு..

ஒத்தகுடிசை ஓட்டுவீடு
ஒத்துமையா இருக்காக ‍ ஆனா
ஒப்பனையா வீடிருந்தாலும்
ஒருத்தொருக்கொருத்தர் பேச்சில்ல..

கிழ‌க்கே குற்றாலம் ,பாப‌னாச‌ம்
தெற்கே க‌ன்னியா கும‌ரிகட‌ல்
மேற்கே திருச்செந்தூர், தூத்துகுடி‌
வ‌ட‌க்கே வ‌கைக்கொரு கோவிலென,

மாதமொரு சுற்றுலாவாம்
மாவிலை திருவிழாக்க‌‌ளாம்,
வ‌கைவ‌கையாய் ப‌ல‌கார‌ங்க‌ள்
வ‌ண்டிபோட்டு வரும் கிண்ட‌ல்க‌ள்..

வசதியான வாழ்விருந்தும்
வருத்தம்தான் மிச்சமிங்கு
வயக்காட்டு வசந்தமிங்கு
வந்திடுமா மனம் குளிர்ந்திடுமா?

வீட்டைவிட்டு வெளியிறங்க‌
விசாரிப்புகள் நூறாகும‌ங்கு..
வியாதிவந்து சொன்னாத்தேன்
விபரீதமும் விளங்குமிங்கு...

வாசல்விட்டு இறங்கியதும் குளிர்
வசதியோடு பள்ளி வாகனப்பயணம்...
வலிக்கலையே நெடுந்தூரம் நடந்தபோதும்
வடிவாக உடம்புதனில் உறுதிபெற்றோம்.

படிச்ச பள்ளி,ஆடிய தோட்டம்
ப‌ழ‌கிய‌ ந‌ட்பு, ஓட்டிய‌ சைக்கிள்
நீந்திய ஆறு, ப‌சிதீர்த்த‌ தோப்பு
நிச்ச‌ய‌மா நீயும் பாக்கோணும்.

சுத்த‌மான‌ ம‌னசோட‌ அன்பாய்
சுக‌ம்பேணும் ச‌ன‌ங்க‌விட்டு
போலியாய் இருக்கிற நாட்டுக்கு‍
போக‌ணுமாம்மா னு நீயும் கேக்கோணும்...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்


கனக்காம்புரம் பூ வெச்சு
கலகலன்னு பூவா நானும்
கலாய்ப்பு கலாட்டான்னு
கவுண்டரு அவரும்....

கொட்டாயி போகறச்ச
கொசுவம் வெச்சு சேலைகட்டி
கொய்யா, கடலை வாங்கியாயி
கொரிக்கத்தான் கொடுத்தாரே!..

பவுனு பவுன்னுன்னு
பாசத்த பொழிஞ்சாரே
பவுனெல்லாம் கழத்துவாருன்னா
பாவிமக கனவுகண்டேன்

சம்பளத்த வாங்கியாந்து
சக்களத்திக்கு தந்தாரே
சரக்குக்கே பாதிபோனா
சம்சாரம் வெளங்கிடுமா?

சாதகம் நாள் பாத்து
சமஞ்ச புள்ள அழகப்பாத்து
சாதிசனம் கூடி நீங்க
சகதியிலா தள்ளுனீக?


வெவரமில்லா வயசுப்புள்ள
வெட்கத்த வெலபேசி
வெறகுகட்ட வாழ்க்கைக்கு
வெற்றி வாக சூடுனீக?

வேதனைய ஒதுக்கிபுட்டேன்
வேற வேலை பாத்துகிட்டேன்
சோம்பேறிபய வீட்டுவாச
சோலிபாக்க போகமாட்டேன்

எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்னு வருத்தமில்ல
படிப்படியா படிச்சுகிட்டேன்
அடுப்படினாலும் ருசிப்பேனுல்ல...:)))


‍‍‍‍‍‍‍‍ ஆப்பக்கார ஆயா...

Monday, February 18, 2008

வலி நிவாரணி...
===============

எண்ணாது விண்ணப்பங்கள் போட்டு
எதிர்பார்த்து காத்துகிடந்தபோது
எதிர்பாராவிதமாய் வருகிறது உனது
எண்ணங்கள் மடலில் வாழ்த்துக்களாய்...


வேலை கிடைத்து பின் ,
வேதனையோடு உறவுகள் , நட்புகள் விட்டு
வேதாளக்கூட்டத்தில் சிக்கி ,
வேரருந்த போதிலே நலம் வருடியது உன்
வேடமில்லாத தொலைபேசி அழைப்பு வசந்தமாய்.......


இயந்திர வாழ்க்கையில்
இடைவெளியில்லாது அசதிமட்டுமே
இருந்த நிலையில் நித்திரை எனும் திரையில்,
இனிய நினைவுகளாய் வருடுகிறாய் மயிலிராகாய்....


விடுமுறை கிடைத்த நிமிடம் முதல்,
விரைவாய் ஊர் வந்து உனை பார்க்கும் வரை,
விடுதியில் பட்ட கஷ்டமெல்லாம் ஓடி மறைகிறது ,
விளையாட்டாய் தண்ணீர் ஊற்றும் உன் புன்னகையில்
விஷமாய் ஏறுது காதல் காட்டாற்று வெள்ளமாய்.......


அனைத்துமாய் மனதில் இருந்துவிட்டு ,
அன்பரே , வலிநிவாரணி மட்டுமே நான் ,
அன்னைபோல் சுகமான வலி தருவாள் ஒருத்தியென ,
அகப்படாமல் ,என் காதலை தடுக்கிறாயே,
அடியே வலிக்கவில்லையா உனக்கு நடிப்பதற்கு.....?
அதிகாரமாய் வலி தரவா நீ உண்மை சொல்வதற்கு..?


Monday, December 3, 2007

சர்வதேச ஊனமுற்றோர் தினம் .
----------------------------------------
ஒவ்வொரு நாளும் வியக்கிறேன்

உன் ஊனமுற்ற கால்களால்
தவழ்ந்து நீ நடப்பதை இங்கே

உடம்பில் ஊனமானாலும்
கவலையின்றிதைரியமாக
உன் பணியை செய்யும் நீ எங்கே??
அனைத்துமிருந்தும் குறைபடும் நான் எங்கே?

ஊனமுற்றவர்க்கு இரக்கம் மட்டும் படாமல்
அவர்தம் தேவையை சரிசெய்வதும் எம்பங்கே!!

எதுலும் குறை குற்றம் பார்ப்போர் இவரிடம்
நமக்கிடைத்த ஆசீர்வாதத்தை உணர முடியும் அங்கே

ஊனம் என்பது உடம்பில் மட்டும் இல்லை
மனதில் இருந்தால் அதுதான் பெரும் தொல்லை
பெரியோர் அனுபவத்தில் தந்திட்ட ஒவ்வொரு சொல்லை
மனிதநேயம் கொண்டு வாழும் வாழ்க்கையே இன்பத்தின் எல்லை!
யுத்தம் எமது வருத்தம்!
=====================
நித்தம் ஒரு போராட்டம்,

புத்தம் புது பிரச்சனைகள்,
சத்தமில்லா அழுகைகள்,
ரத்தம் உறையும் காட்சிகள்,
இத்தனையும் இனிய இலங்கையிலே..

பெத்தவர் ஒருபக்கம் வருந்திடவே,
மத்தவர் உறவினரானாராம்,
எத்தனை வசதிகள் வெளிநாட்டிலிருந்தும்,
அத்தனை தாய் மண்ணுக்கீடாகுமா?

பெற்றுக்கொண்டது போதாதென்போர்,
செத்துப்பிழைத்த அவரிடமிருந்து,
ஒத்துக்கொள்வோம் அவர் வாழ்க்கை கடினத்தை..
கத்துக்கொள்வோம் வாழ்க்கை பயணத்தை!..

---------சமர்ப்பணம் என் இனிய இலங்கைத்தமிழ் தோழர்,தோழியருக்கு!.
வெட்கி வேதனைப்பட்டு அவர் வலியுணர்கிறேன். =========================================
படிப்பை பற்றி பேசிய போது தம்பி வெட்கப்பட,.

ரொம்ப வெட்கப்படாதே பின் அழைத்துச்செல்வர்
கூத்தாண்டவர் கோவிலுக்கே கூவாகத்திருவிழாவுக்கு
என நான் கூற அவன் சிரிக்க !ஒரு கணம் எனை மறந்தேன்.

பின்னிரவு தான் வலியுணர்ந்தேன் தூக்கமின்றி..
நகைச்சுவை என நினைத்து பேசிடலாம் அச்சமின்றி.
வெளிநாட்டில் எவரும் அவரை நினைப்பதில்லை துச்சமாக
நானோ என் பிள்ளையோ பிறந்துணர்ந்திருக்கலாம் மிச்சத்தை.
எவர் உறைப்பர் அவர் சலுகை, தேவை, துயரத்தின் உச்சத்தை???
மன்னிப்பாயா கடவுளே?. இவ்வாழ்க்கையில் நீர் எனக்களித்த பிச்சையை!!!..

இக்கவிதை அத்தோழர்களுக்கு சமர்ப்பணம்.
நட்பு புரிந்தும் புரியாத போது..
=========================
அன்பாய் சில நேரம், நகைச்சுவையாய் பல விஷயம்,

அதிகாரமாய் விவாதிப்பு,இவற்றில் தெரியாத உன் நட்பு,
அதிக காரமாய் உன் கோபத்தில் ஆழமாய் தெரிகிறதே!.
வியக்கிறேன் நான்...

அருகிருந்தும் , அடிக்கடி பேசிக்கொண்டும்,
அடிவிழாத குறையாக உளரும்போதும் தேடாத என் நட்பு,
உன் பிரிவில் தேடுகிறதே !. உன் நலம் பற்றி எண்ணுகிறதே!
வியக்கிறாய் நீ..

நல்ல நட்பில் புரிதல் இல்லையெனின், பிரிதல் நலம் என நீ நினைத்தாய்..

நல்ல நட்பு பிரிந்தாலும், புரிதல் தரும், தூய்மையான அன்பு, என்கிறேன் நான்.
--
கடைக்குட்டியின் கதை (3) - இதென்ன புது சோதனை!! ==============================================
மருத்துவரை சந்திக்க கேள்விகளோடு மகன் கிளம்ப

35 வயதுக்குமேல் குழந்தைபேறுக்கு பரிசோதனை பரிந்துறைக்க
( டொளன் சிண்ட்ரோம் பரிசோதனை )
உருவமில்லாத கருவாயினும் உணர்ச்சியுண்டு என நான் மறுக்க,
மூளை வளர்ச்சி குறைய வாய்ப்பதிகமென மருத்துவர் விளக்க,
எதுவாயினும் படைப்பவன் தருவான் அதற்கான தெம்பு என முடித்தேன்..

மிகுந்த உற்சாகமாய் வந்த கணவரும் மகனும் கலக்கமாய்,
கலகலப்பை தொலைத்துவிட்டு கலங்கிய கண்களுமாய்,
அட! இது ஒரு சின்ன விஷயம் இது வேதனையா?
நம் கடவுள் நம்பிக்கைக்கு வந்த சோதனை மட்டுமே என அவர்களை திருப்திபடுத்தி முடித்துவிட்டாலும், என் குழப்பம் ஆரம்பித்தது..

RH -ve , ஜெஸ்டேஷனல் டயாப்டீஸ், அதிக வயது,வேலைப்பழுவின் சுமை என பலவிருந்தாலும், வயற்றில் ஒரு அதிசய சுமை, ஆனந்தப்பட்டேன். அம்மாமேல் கை போட்டு ,கால் போட்டு கோழிக்குஞ்சாய் தூங்கும் மகன், தனியே எனை படுக்கவிட்டு அன்று முதல் தனிமையிலவன்,
அவன் நினைப்பில் ,அரவணைப்பின்றி தூக்கத்தை நான் தொலைத்தேன்.

------------மருத்துவ பரிசோதனை பற்றி தவரேதும் இல்லை.. எனக்கு அந்த கருவில் ஊசியை செலுத்தி அதனை வலிக்கச்செய்வதற்கு பதில் ஆயுசுக்கும் மன வளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்த்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்....
----------உங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்,..............
கேள்வியும் பதிலும்..
================
தினம் ஒரு கனவு!. வேளைக்கொரு கேள்வி!.

இரவு படுக்குமுன் பரமனிடம், சில பல்லவி!

வீட்டை அலங்கரிக்க , கைவளை ,கால்கொலுசு பூட்ட,
பூச்சூட ஒரு பெண் தேவதை கேட்டு நான் மன்றாட!,

கிரிக்கெட், கால்பந்து, விளையாட ,சண்டைபோட ,
நீச்சலடிக்க அம்மாவிடம் கலாட்டா பண்ண தம்பியை அவன் கேட்க!,

மன்றாடி முடிந்ததும் சந்தேகமாய் கேட்கிறானய்யா ஒரு கேள்வி.?..
இருவர் ஜெபத்திலும் இறைவன் யாருக்கு சாய்ப்பான் செவி?
மடியில் அமர்த்தி குழந்தையிடம் தான் கேட்பான் இறைவன் முதலில்...!!

அப்படியென்றால் வீணாக நீங்கள் வேண்டாது,
கலராக குழந்தை கேளுங்கள் , நான் கறுப்பென
பள்ளியில் பட்ட கஷ்டம் தம்பி பட வேண்டாமே
என மடக்குகின்றான் என் பதிலில்..!!

பெற்றோரைவிட படைத்தவனையே நம்பு ஜெபம் மூலம், என் வளர்த்துவிட்டேனே கடவுளே பதில் உண்டு உன்னிடம்..

என உறங்கச்செல்கையில் அம்மா பிளீஸ் இன்னொரு கேள்வி?
தம்பிவந்ததும் யாரை துளியாவது அதிகம் நேசிப்பீர்கள்?
குழந்தைக்கே ஏன் நமக்கும் இன்றும் அன்பில் உள்ள போட்டி குணம்..

நீதானடா செல்லம், என இப்போதைக்கு சொல்லி வைத்தேன்,
கடைக்குட்டி விவரம் அறிந்து இக்கேள்வியை கேட்கும் வரை...

-------முதல் குழந்தையின் கேள்விகளுக்கு விடை சரியா?., அல்லது, நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் சொல்லுங்கள்,

Tuesday, November 6, 2007








கடைக்குட்டியின் கதை- பாகம் 1

-------------------------------------------

உதித்த அதிசயம்..

===============

பத்து வருடம் கழித்து,

பத்து மாதம் குடியிருக்க,

தவப்புதல்வனாம் தலைமகனின்,

இரண்டு வருட பிரார்த்தனைக்குபின்,

வேண்டுதலோடு ,அவதரித்தாய்..


பத்துமாதமென்ன பத்துவருடமாயினும்,

பத்திரமாய் தாங்கியிருப்பேன்!

.தலைக்குழந்தை கருவுற்றால்கணவரே தாயுமாவார்; புதிதல்ல!.

ஆனால் தம்பி வருவான் என்ற நம்பிக்கையில்,

என் தங்கமகன் நீயே எனக்கு தகப்பனானாய்.


அம்மா மருந்தெடுத்தீங்களா என ஒரு கண்டிப்பு!.

இனிப்பு சேக்காதீங்க டாக்டரிடம் சொல்வேன் என புன்சிரிப்பு!.

தம்பியோ?,தங்கையோ? பத்திரமாய் வரணும் என பரிதவிப்பு!.

அவன் அன்புத்தொல்லை தாங்கமுடியாத ஒரு பாதுகாப்பு!..


----------- தொடரும்..

search engine









யாரிவள்????????

===============
ஒவ்வொரு நாளும் உனை பார்க்காமல் கழியாது.

எனக்கு ஒரு சந்தேகமா , குழப்பமா நீ இருப்பாய்.

வேலை பல இருந்தாலும், உன், நினைப்பு நீங்காது

கவலையோடு வந்தால் நொடிப்பொழிதில் செய்துகுடுப்பாய்..

என் புகழ் அனைத்தும் உன்னையே சேரும்.

உன்னைவிட்டு என்னால் இருக்கவே முடியாது....

ஆனால் உனக்கது பற்றி கவலையில்லை!.









தீபாவளி வெடிகள்!!!

=================
பென்சில் வெடியில் ஆரம்பித்து, சண்டையும் சரமாய் வெடித்துவிட்டது..

விருட்டென்று அலுவல் சென்றுவிட்டார் தடித்த வார்த்தையுடன்,

தனியே இவளும், அணுகுண்டாய் குமுறினாள், கடிதத்தில் திட்டிதீர்த்தாள்.

பேசவோ, அழவோ கூடாது இனி என வீராப்பு , வெறுப்புடன்,

உண்ணாமல் உறங்காமல் தரைசக்கரமாய் தன்னையே தண்டித்தாள்.


மாலைதிரும்பினார் வெடிக்காத புஸ்வானம் போல் காட்டிக்கொண்டு,

அழக்கூடாதுன்னு நினைக்கும்போதே வருது கண்ணீர் முட்டிக்கொண்டு,
பரிமார விடாது கைபற்றினார் முகம் பார்த்துக்கொண்டு.

ஒத்திகையனைத்தும் வீணாகுது மனம் இழக்கம்கொண்டு.


ஏறுவானேன் பின் இறங்குவானேன் ?.. என்னால் முடியாது

என முறைத்தாள் கடிந்துகொண்டு.

அதுதான் பெண்ணே உன் கவர்ச்சி , போற்றினான்

கண்களால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு...


கடிதத்தை வாசித்து உன் அன்னைக்கு இதை அனுப்பவா??

என விளையாடினான் சிரித்துக்கொண்டு...

ஐயோ வேண்டாம் ! தடுத்த இரும்புக் கரங்களை

பிடித்துக் கெஞ்சினாள் மன்றாடிக்கொண்டு!!


வரட்டு கவுரவம், வீராப்பு தோல்வியோடு ராக்கெட்டாய்

வெளியேறியது பயந்துகொண்டு...

ஜெயித்தது நானே என காதல் மத்தாப்பாய்

சிதறியது வெட்கிக்கொண்டு.!