Friday, September 21, 2007







கவலைப்படாதே சகோதரா.!!
==========================

அம்மா செய்த இனிப்புகளை ,
ஆசையுடன் எடுத்து வந்து,

இடைவெளியின்றி சாப்பிட்டு,
ஈடிணையின்றி ருசித்துவிட்டு,

உவகையோடு சவாலயும்,
ஊரார் வியக்கச் செய்திடலாம்.

எண்ணம் எதிலும் உண்பதிலே,
ஏற்றம் கொண்டு ருசிப்பதிலே,

ஐயம் இதிலே எதற்காக,

ஒல்லிபிச்சாண்டி சொல்லாமல்,
ஓடிடுவான் பயம் கொள்ளாமல்,

ஔவை கூட அசந்திடுவாள்,
ஃதே குண்டாய் ஆனதற்கு.!!!!!

No comments: