Saturday, November 20, 2010

லிவிங் - டுகெதர் + என் பயணமும். , ஜெனரேஷன் கேப்... பாகம் 2
































" நீ நல்லா இருப்பியா.?. உன் பெண்கள் நல்லா வாழ்ந்திடுவாங்களா?.. என் சாபம் உன்னை உன் குடும்பத்தை சும்மா விடாது..%$^*&*(&**"

என வீட்டு வாசலில் வந்து சபித்து விட்டு போனார்கள் ஒரு ஆண்ட்டி..

இது போதாதா ?. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்களெல்லாம் வரிசையா வந்து துக்கம் விசாரிக்க வந்தார்கள்..

எங்களுக்கே சங்கடமா இருந்தது .. அம்மாவுக்கு ஏன் எப்பவும் இந்த வீண் வேலைகள்..????????

அடுத்தவர் பிரச்னையில் ஏன் தலையிடுகிறார்கள்.. இதனாலேயே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எத்தனை சண்டைகள்..?.

அம்மா மேல கோபமா வரும்....:((((

ஆனா அம்மா இதையெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அண்ணாவை விட்டு மாங்காய் பறிக்க சொல்வதும் , முருங்கை காய் பறிப்பதும் , தெருவில் கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து அனுப்புவதுமாய்..சாதாரணமாய் இருப்பார்..காய்கறி விற்பவர், நெல் சுமப்பவர், பூ விற்பவர், பால் காரர், தபால் காரர் அனைவரும் இளைப்பாறும் இடம் எங்க வீட்டு முற்றம்.. அந்த மாமர நிழல்.. எல்லார் சோகத்திலும் தன் சோகத்தை மறந்தவர்..

அப்படி என்னதான் நடந்தது.?. ஒரு அக்காவின் சோக கதை இங்கே..

புது வீடு கட்டும்வரை அந்த அக்கா வீட்டில்தான் நாங்கள் சின்ன வயதில் குடியிருந்தோம். எங்களையெல்லாம் வளர்த்தவர்கள்..

எங்களுக்கு வேதாகமம் , கதை சொல்லி தந்தவர்கள்..

நாங்க வீடு கட்டியதும் இடம் மாறினோம். அக்காவுக்கு திருமணம் ஆனது..ஒரு வயதில் ஒரு மகன் இருந்தபோது பேரூந்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மூவரும் தூக்கி எறியப்பட்டு , கணவர் அந்த இடத்திலேயே மரணம்..

அடுத்த 9 ஆண்டுகள் எல்லா சோகத்தையும் சுமந்து கொண்டு தமிழ் ஆசிரியர் வேலைக்கு சென்றார் அக்கா.. கருப்பு என்றாலும் முத்துப்பற்கள் , முட்டு வரை கூந்தல் , இனிமையான பேச்சு கொண்ட பேரழகி அக்கா..

பார்க்கும் யாருக்குமே பிடித்து போகும் அக்காவை.. தமிழ் துள்ளி விளையாடும் கணீரென்ற குரலில்..

ஆக அவர் ஞாயிறுதோறும் குழந்தையை என் பக்கத்து வீட்டுக்கு ( அக்காவின் நெருங்கிய சொந்தம் ) அழைத்து வரும்போது அம்மாவிடம் வந்து கண்ணீர் சிந்துவார் எமக்கு தெரியாமல்..

இருவரும் ரகசியம் பேசுவார்கள் எம்மை வெளியே துரத்தி விட்டு..

அக்கா பூ வைக்க கூடாதாம் , ஆனால் அவர் அம்மா பூ வைத்து நகை போட்டுக்கொள்வார். கணவனோடு தனியறையில் படுப்பாராம்..

என்ன கொடுமை..?.. ( கலாச்சாரம் ? )

இவ்வேளையில் மனைவியை இழந்த ஒருவர் ( அவருக்கு 12, 10 வயதில் இரு குழந்தைகள் ) அக்காவை மணமுடிக்க ஆசைப்படுகிறாராம்..அக்காவை பள்ளியில் சந்தித்துவிட்டு ..

ஆனல் வீட்டில் பலத்த எதிர்ப்பு அக்காவுக்கு..எங்க பக்கத்து வீட்டினர் எங்களுக்கு ரொம்ப பிடித்தவர் மட்டுமல்ல ரொம்ப உதவியும் எல்லா விஷயத்திலும்..

ஆனால் அவர்களும் இதற்கு எதிர்ப்பு..மறுமணம் செய்ய கூடாது பையனுக்கு 10 வயதாகிவிட்டது என்று..( கலாச்சாரம் ?.. )

அம்மா உடனே தன் துணிவான இரு தோழிகளை ( ஒருவர் கவுன்சிலராக இருந்தார். மற்றொருவர் மலேஷியாவில் பல வருடம் வாழ்ந்தவர். ) அழைத்து ஆலோசித்து இத்திருமணத்தை மிக ரகசியமாக முடிக்க ஏற்பாடு செய்தனர்..

அப்பதான் என் இரண்டாவது அக்காவுக்கு பிரசவ நேரம்.. சம்பந்தி , நாத்தனார் என்ற கூட்டங்கள் வேறு..

மருத்துவமனையில் வைத்து ரகசிய கூட்டம் நடைபெறும்.. நான் அம்மா மடிமீது படுத்துக்கொண்டே கதை கேட்பேன்..

மேலும் நானும் ஒரு முக்கிய தூதுவர்...தகவல் அனுப்ப..:)

அக்காவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு உறவினரையெல்லாம் வழியனுப்பி வைத்துவிட்டு , அம்மா ஒருநாள் காலையிலேயே கிளம்பி போனார்கள்.. எங்கேன்னு கேட்டா சொல்லலை... ஆனா போய்விட்டு வந்ததும் மகிழ்ச்சியா இருந்தார்கள்..

பக்கத்து வீட்டு ஆண்டி அங்கிளை பார்க்க மட்டும் வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்..

(பக்கத்து வீட்டு ஆண்டி பற்றி " சந்தித்த அற்புதமானவர்கள் " பகுதியில் எழுதியிருக்கேன் பார்க்கலாம். அன்னை தெரசா அவர்..நாங்க நேரில் கண்ட தெய்வம்.. )

இரண்டு நாள் கழித்து அந்த அக்காவின் அம்மா வந்து மேலே சொன்னது போல அசிங்கமா கத்திவிட்டு போனதும் தான் தெரிந்தது , அக்காவுக்கு திருமணம் ஆன விஷயம்..

" ஏம்மா ஆண்டி இப்படி சபிச்சுட்டு போறாங்களே..?" னு நாங்க வருத்தப்பட்டா , அம்மா எளிதா சொல்வாங்க ,

" ஹ அடுத்த கிறுஸ்மஸ் க்கு பாரு .. எல்லாரும் குடும்பமா கேக் வாங்கிட்டு வருவாங்க... "

தீர்க்கதரிசியா அம்மா?.. இல்லை.. அவர் பார்த்த , சந்தித்த பிரச்னைகள் , அனுபவங்கள்..

அக்காவுக்கு திருமணம் ஆனதும் தான் பெரும் சோதனை காத்திருந்தது...

கணவனின் இரு குழந்தைகளும் தம் சொந்தங்களின் பேச்சை கேட்டு அக்காவை வெறுத்தனர்.. அக்காவின் மகனை ஏற்றுக்கொள்ளவில்லை.. அக்காவின் அன்பும் பொறுமையும் அவர்களையும் சில வருடங்களில் கரைத்தது..

And they lived happily ever after.. இப்ப பிள்ளைகள் மூவரும் அமெரிக்காவில்..

அப்புரம் ஒருநாள் அந்த ஆண்டி , எங்கம்மா கை பிடிச்சு அழுதுகொண்டே, '" சாந்தியம்மா , நீங்க மட்டும் அன்னிக்கு அப்படி ஒரு துணிச்சலான செயல் செய்யாவிட்டால் என் பொண்ணு நிலைமை என்னவாயிருக்கும்..? "

அப்பவே இப்படி பல புரட்சியை செய்தவர் சத்தமில்லாமல்.. இது ஒரு சாம்பிள் மட்டுமே..


பக்கத்து வீட்டு அங்கிள் கூட எங்க அம்மா மேல் கொஞ்ச நாள் வருத்தத்தோடு இருந்தாங்க..

ஆனா அம்மா சொல்வாங்க , ஒரு இளம் விதவையை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு பெற்றோர் மட்டும் எப்படி தனியறையில் வாழ முடிந்தது?..

ஊரில் எல்லாரும் சொன்னாங்க , உங்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருக்காங்க .நல்ல சம்பந்தம் கிடைக்காது... எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை என..

" என் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் நான் அவளுக்கு செய்தேன். யார் தடுத்தா என்ன என்ன சாபம் போட்டா என்ன.?. என் பிள்ளைகளை கட்டிக்க நான் , நீ ன்னு போட்டி போட்டு வருவாங்க.. யாரும் கவலைப்படவேண்டாம் " என வாயடைத்துவிடுவார்கள்..

பிரச்னை என வந்தபோது ஓடி ஒளிந்தவரெல்லாம் மெல்ல மெல்ல என் அம்மாவிடம் தத்தம் பிரச்னைகளை இப்ப துணிவா சொல்ல வந்தாங்க...

வீடே ஒரு பஞ்சாயத்து ஆல( மா ) மரம் ஆனது..

அக்கம் பக்க ஏழைகள் , கூலித்தொழிலாளிகள் எல்லார் வீட்டு பிரச்னைகளும் அம்மாவிடம்.. குடிகாரர்களின் மனைவி புகார் செய்தா அம்மா சென்று அதட்டி விட்டு வருவார்.. அப்போதைக்கு சரிம்மா சரிம்மா என பெட்டிப்பாம்பாய் அடங்கினாலும் நல்லா தண்ணி போட்டுவிட்டு வந்து இரவு கத்திவிட்டு போவான்.. :)).. அடுத்த நாள் மன்னிப்பு கேட்டு வேலைக்கு வந்தும் நிற்பார்..:)

ஏழைப்பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது , வேலை வாங்கி தருவது, திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து தருவது என இஷ்டமாய் உதவுவார்கள்..

எந்த வீட்டில் மரணம் என்றாலும் எங்க வீட்டுக்கு முதல் தகவல் வரும் ...வந்ததுமே காஃபி பெரிய பானையில் தயாராகும்..

எங்க வீட்டு முற்றத்தில் நாற்காலிகள் போடப்படும்..


எங்கள் தெருவில் கிறுஸ்தவர்கள் அனேகர்..

பின் தெரு தேவர் இனத்தவர்கள்.. பாசக்காரர்கள்.. ( இதை எழுதலாமா னு தெரியவில்லை தப்பென்றால் நீக்கிடுவேன் ) . ஆனா அவர்களுக்குள் சண்டைன்னு வந்தால் அறுவாள் , டியூப்லைட் என கிடைத்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு ஊரே வேடிக்கை பார்க்குமளவுக்கு நடக்கும்..எல்லாரும் எங்க வீட்டு மூன்றாவது மொட்டை மாடியில் ஆஜர்.. லைவ் ரிலே... தெரு முழுதும் பேர்ட்ஸ் ஐ வ்யூ..

பயமா இருக்கும் கொலை விழுமோ என.. அர்த்தமே புரியாத கெட்ட வார்த்தைகள் ..:))

அப்பவும் அம்மாவுக்குத்தான் தகவல் அனுப்புவாங்க..

" சாந்தியம்மா பேச்சுக்குத்தான் கட்டுப்படுவான்.. ஆள் அனுப்புங்க "

அப்பா இருந்தா அம்மாவால் போக முடியாது.. சில நேரம் பின்பக்கம் வழியா போவாங்க..சில வேளை அப்பா கண்டுக்கமாட்டாங்க..

நானும் முந்தானை பிடித்துக்கொண்டே அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ னு கூட போவேன்..

அப்பா வெளியூர் போயிருந்தா " என்னப்பா என்னாச்சு , னு மெதுவா பேசி சண்டையிட்டவரை வீட்டுக்கு அழைத்து வருவாங்க கையை பிடித்து .."

பார்க்கவே பயமா இருக்கும்..எங்க வீட்டு முன்னால் கூட்டம் கூடும்..வேடிக்க பார்க்க..எங்க அண்ணா இருவரும் கூட்டத்தை அனுப்புவார்கள்.. என் அண்ணா இருவரும் அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி..:)). ( ஆனா எனக்கு போய் அமைதின்னு பேர் வெச்சுட்டாங்களே..:)) )

வீட்டுக்குள் பெண் பிள்ளைகள் இருக்காங்களே னு அம்மா ஒருபோதும் பயந்ததில்லை..

அந்த அண்ணாமார் எல்லாம் எங்களை எங்கே கண்டாலும் மிக மரியாதை செலுத்துவார்கள் அம்மா மேலுள்ள மரியாதையால்...

ஆக தேவர் வீட்டு விசேஷத்தில் அம்மா எப்பவும் முன்னால் நிற்பாங்க.. அனேகர் எங்களை தேவர் என்றே நினைத்திருந்தனர்.. :)).

( இப்ப என் பிள்ளைக்கு தான் எந்த சாதின்னே தெரியாது.. சாதின்னாலே என்னன்னு தெரியாது.. )

அதே போல் எங்க வீட்டு விசேஷம் அனைத்திலும் அவர்களும்..

இது பலருக்கு ஆச்சர்யமான விஷயம் அப்போது...

இத்தனைக்கும் அம்மா இந்து.. அப்பா கிறுஸ்தவர்.. ஆனாலும் கிறுஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் பெற்று திருமணம் செய்ததால் கிறுஸ்தவ முறைப்படியே எம்மை வளர்க்க பிரியப்பட்டார் அம்மா.

ஏன்னா பெண்ணுக்கு கல்வி , உரிமை இங்கு அதிகம் என்பது அவர் எண்ணமாயிருந்திருக்கும்....

மனசுக்குள் அவர் இந்து என்பது மட்டும் அப்பப்ப வெளிப்படும்.. :)

இந்து கோவிலை தாண்டும்போது செருப்பை கழற்றிவிட்டு கன்னத்தில் போட்டுக்குவார்.. கையெடுத்து கும்பிடுவார்.. அப்பாவுக்கு தெரியாமல் வருடந்தோறும் குத்துவிளக்கு அனுப்பி வைப்பார் கோவிலுக்கு.. பின் தெருவில் கொடை விழாவுக்கு எங்க கிறுஸ்தவர் தெருவில் எங்க வீட்டிலிருந்து மட்டுமே பணம் தரப்படும்.. சாமியாடி வந்து எங்க வீட்டு முற்றத்தில் மட்டும் ஆடி விபூதி தருவார்..

எதையும் மறுக்காது ஏற்க பழக்கினார் அம்மா..


கிராமத்திலிருந்து பாளை பெரிய மருத்துவமனைக்கு யார் வந்தாலும் முதல் செய்தி தொலைபேசியில் அம்மாவுக்கு வரும்..

ரொம்ப தியாகி மாதிரி , " அதுக்கென்ன வர சொல்லு . தம்பியை வைத்து நல்லா பார்க்க சொல்வோம் . நம்ம வீட்டிலேயே இரவு தங்கிக்கலாம்.."

மாமாதான் பெரிய மருத்துவர் அப்போ..

விருந்தினர்களுக்கு என் தலையணை வரை நான் தானம் செய்யணும் ..முகத்தில் புன்னகை , அகத்தில் வருத்தம்..:)..

விருந்தினர் குளிக்க , தண்ணீர் வராத நாட்களில் 100 குடம் தண்ணீர் எடுக்கணும் அடி பம்பிலிருந்து..( ? ) அதெல்லாம் கஷ்டமாய் தெரிந்ததேயில்லை..

ஏன்னா பாராட்டு மழையில் நனைந்திருப்போம்.. மேலும் கிராமத்துக்கு போகும்போது பிரமாண்டமான வரவேற்பு இருக்கும்..


இதுக்கும் இடையில் நாங்க படிக்கணும்..தேர்வுக்கு .. வந்தவங்களுக்கு காஃபி போட்டு, டிபன் செய்து கொடுக்கணும்..

ஆக ஒரு காது வழியா சமூக பாடம் . மற்றொரு காதில் பள்ளி பாடம்...:).

இப்படிப்பட்ட அம்மாவை வெளிநாட்டில் கொண்டு வந்து வைத்தால் என்னாகும். பிரச்வத்துக்காக ஒரு வருடம் விசா எடுத்து வரவழைத்தால் குழந்தை பிறந்ததுமே என்னை அனுப்பிவிடு என அழ ஆரம்பித்தார்கள்..

அதே தான் அமெரிக்காவிலும் . ஒரு வருடம் என சென்றவர்கள் , மூச்சை பிடித்துக்கொண்டு மூன்று மாதம் இருந்தார்களாம்..அண்ணாவிடம்..

வாழ்நாளிலே அம்மாவுக்கு மிகப்பெரிய தண்டனை அதுதான்.. எது ?. ஆட்கள் இல்லாமல் இருப்பது..

அம்மா சென்னைக்கு சென்றாலே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தேட ஆரம்பித்திடுவார்கள்..

" தம்பி அம்மாவை சீக்கிரம் வர சொல்லுங்க ஒரு முக்கியமான பிரச்னை.." என அண்ணாவிடம் இன்றும் ஆட்கள் வருகிறார்கள்...


அம்மா பட்ட கஷ்டத்தை சொல்லணும்னா தனியா புத்தகம்தான் போடணும்..ஆனால் அதுதான் அவர் சக்தி..வசதியான வீட்டில் பிறந்து வசதியான வீட்டுக்கு மூத்த மருமகளாய் வந்து வேலை வேலை வேலைதான்...அம்மா திருமணத்தின் போது அவர் கடைசி தம்பி கைகுழந்தை.. அதே போல அப்பாவின் கடைசி தம்பியும்... ஒரே வீட்டில் மாமியார் மருமகள் , அம்மா, மகள் தொட்டில் .:))..

ஆனால் நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை..

அவருக்கு தெய்வம் , பிடிமானம் , மகிழ்ச்சி எல்லாமே மிக சாதாரண மனிதர்களே..மனிதன் கஷ்டப்பட கலாச்சாரம் ஒரு தடைன்னா அதை தூக்கி எறியணும் னு நினைப்பவர்.. இலக்கியமோ , புரட்சி புத்தகமோ படித்ததில்லை..

தாம் செய்வது புரட்சியா , என்பதெல்லாம் தெரியாது.. ஆனா ஒருத்தரோட துயர் துடைக்கணும் அது மட்டும்தான் கண்ணில் தெரியும்..அதற்கான விமர்சனங்களை சட்டை செய்யாதவர்.மகிழ்ச்சியா தாங்கியவர்...எத்தனை எத்தனை திருமணங்கள் நடத்தி வைத்தார்.?. பணம் செலவு செய்தல்ல , தன் நேரம் , துணிவு , அறிவை செலவழித்து.

அவர் தூங்கியே நான் பார்த்ததில்லை.. ஆனால் பொத்தென்று விழுந்து பார்த்துள்ளேன் பலமுறை.. குறைந்த ரத்த அழுத்தம் உண்டு..

பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுவார்.. ஆனாலும் மருத்துவரிடம் சென்று தன் உடம்பை காண்பிக்க மாட்டார்.. பிடிவாதம்..

மாமா அப்பப்ப திட்டி மருந்து கொடுப்பார்கள்.. அப்பவும் நக்கல் " என்னை பரிசோதித்தா 100 வியாதி லிஸ்ட் சொல்லுவாங்க.. எனக்கு தெரியாதா?.. " என ..

ஊரிலுள்ளவருக்கு மட்டுமல்ல டாக்டர் மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாட்டி கூட கைப்பக்குவ மருத்துவம் , சூப் ,ரசம், லேகியம்னு செய்துகொடுப்பார்..:)).

பிரசவத்துக்கு ,பாலூட்ட , வயற்று வலி , சளி இருமல் என பல்வேறு லேகியம் செய்ய ஆலோசனை வேறு..நாங்க அம்மா சொல்வதை கேட்காமல் மருத்துவரிடம் குழந்தை அழைத்து செல்வோம்.. கிண்டலடிப்பார்..

நான் சொல்றத கேட்டா 2 நாளில் சரியாகும்.. மருத்துவர் சொல்றத கேட்டா ஒரு வாரமாகும்.. குழந்தையை ஏன் இப்படி படுத்துற.? சாப்பாட்டை திணிக்காதே.. ஒரு நேரம் சாப்பிடாட்டி ஒண்ணும் செத்து போகாது.தன்ணி மட்டும் கொடு . என துணிச்சலாக பட்டினி போட சொல்வார்...

கல்லூரியிலோ பள்ளியிலோ எமக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே அங்கு இருப்பார்.. பருத்து சேலை என்றாலும் நேர்த்தியாக உடை அணிந்து கிட்டத்தட்ட எம்.எஸ்.சுப்புலஷ்மி மாதிரி மங்களகரமாக இருப்பார், அப்பா மரணத்துக்கு பின் எல்லாவற்றையும் இழந்தார் , அண்ணாக்கள் எத்தனை சொல்லியும்.. ( கலாச்சாரம் )


அவருடைய சக்தியே எளிமை.. சென்னையில் அக்காவிடமிருந்து தொலைபேசி வரும்.. அம்மா உடனே வாங்கன்னு..( அக்கா வீட்டுக்காரர் வெளிநாடு பயணம் செய்யும்போது ) ...இந்த 76 வயதிலும் ,

" அடுத்த டிரெயின் எப்ப தம்பி ?" னு ஒரு பையில் இரண்டு சேலைகளை எடுத்து வைத்து கிளம்பிடுவார்.. ரிசர்வேஷன் வேணுமே, படுக்கணுமே . என்ற கவலையெல்லாம் கிடையாது.. தாலி செயினை மட்டும் பையினுள் இரவு எடுத்து வைத்துக்கொள்வாராம்.. ".



ரயிலில் ஏறியதுமே எல்லாருடனும் சகஜமா பேசி அதுக்குள்ள நட்பாயிடுவாரே.. அவருக்கு என்ன கவலை.?..

சரி இந்த பதிவில் அம்மா பற்றி எழுதியதும் லிவிங்-டுகெதர் மறந்துட்டேன் மன்னிக்க..

( எடிட் செய்யாமல் அப்படியே போட்டிருக்கேன் . போரடிச்சா திட்டிருங்க.:) .)

அடுத்து அதை கொஞ்சம் பார்ப்போம்..


லிவிங்-டுகெதர் பற்றி




படம் : நன்றி கூகுள்..

Friday, November 19, 2010

லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதி






































லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதி..


25 வருசத்துக்கு முன்னால முதன்முறையா இருபாலினர் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் காலடி வைக்கும்போதே சொந்தங்கள் எல்லாம் வரிசையா வந்து

அறிவுறை என்ற பேரில் கலாச்சார அட்வைஸிட்டு போனாங்க..அதென்ன அப்படி?.

" நம்ம வீட்டு புள்ளங்க எல்லாம் இந்த பிகாம், பிஏ படிச்சா போதாதா?... பொறியியல்தான் படிக்கணுமா?.. படிச்சு என்ன செய்ய போறா ?..ஒருத்தனுக்கு பொங்கி ஆக்கி குடுக்க இதெல்லாம் தேவைதானா?..

அதிலும் ஆம்புள புள்ளங்க கூட சேர்ந்து படிக்கணுமாமே?.. "
கஷ்டப்பட்டு விடிய விடிய படிச்சு டியூஷனுக்கு எஸ்கார்ட்டோட போய் அதிக மதிப்பெண் எடுத்து அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்ததை விட அன்னையிடமிருந்து கிடைத்த அந்த பெருமிதமான நெற்றி முத்தம்.. இதெல்லாம் வீணாகிடுமோ னு கவலை பட்டாலும், பல எதிர்ப்புக்கிடையில் அன்னை மட்டுமே துணிந்து சொன்னார்.

" நீ பொறியியல் படிக்கிற .. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே.நான் இருக்கேன்.."

ஆனா ஒரே ஒரு கட்டளை மட்டுமே..

" இப்ப எப்படி உன்னை அனுப்புறேனோ , அதே மாதிரி நல்ல பிள்ளைன்னு பெயர் எடுத்து வரணும்... " ( அதாங்க நல்ல புள்ளன்னா காதல் கீதல் னு விழாம )

" கண்டிப்பா மா. நீங்க பெருமை படும் அளவுக்கே வருவேன்.. இது சத்தியம்.. " ( சத்தியத்தை காப்பாத்தி பெருமையும் படுத்தினோம்..நாம யாரு கோடு தாண்டாத சீதை பரம்பரையாச்சே.. )

அப்பாவுக்கு கூட சம்மதமில்லை.. என்ன மதிப்பெண் வாங்கியிருக்கேன் என்ற கவலையுமில்லை.( கட்டிகொடுக்கபோர பொண்ணு என்ன படிச்சா என்ன ) . ஆனால் நல்ல மதிப்பெண் என்று பள்ளி வந்து கையெழுத்திடும்போது தெரிந்ததும் மகிழ்ந்து உடனே விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் பார்லர் அழைத்து சென்றாங்க...மனம் மாறினாங்க.. படிக்கும்போது விடியக்காலை 4 மணிக்கே எழுந்து பால்காரனை துரத்தி எனக்காக பால் வாங்கி வந்து காப்பி போட்டு நாங்க இருவர் மட்டும் குடித்துவிட்டு என்னை 5 மணி ரெட்டியார்பட்டி பஸ் சில் பிஸிக்ஸ் டியூஷனுக்கு ஏத்திவிடுவார்..

பஸ் ல் நான் மட்டுமே,.,. பஸ் ஓட்டுனரும் கண்டக்டரும் பழக்கமானர் அப்பாவுக்கு..

அதுமட்டுமல்ல , அதிகாலை வேளையில் அங்குள்ள டீக்கடை டீ மாஸ்டரிலிருந்து பழக்கடை தாத்தா வரை..

யாரும் " ஏன் பெண்ணை இந்த நேரத்தில் இப்படி படிக்க அனுப்பித்தான் ஆகணுமா " னு கேட்காமல் எனக்கு உதவுவதிலேயே இருந்தார்கள்..

பஸ் முந்தி வந்துவிட்டாலும் எனக்காக காத்திருக்கும்..

டியூஷன் வாத்தியார் வீட்டுக்கு தூரத்தில்தான் பஸ் ஸ்டாப் ஆனாலும் பஸ் வாத்தியார் வீட்டு பக்கமே நிற்கும்.. நான் வீடு நுழையும் வரை கூட சில நேரம் ஓட்டுனர் வண்டி எடுக்க மாட்டார்.. ( மார்கழி மாசம் விடிந்திருக்காது ) ..

எனக்கு உதவி செய்த இவர்கள் யார்?..எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கின்றார்கள்..?

அதில் ஒருத்தருக்கு கூட பாலியல் வெறி இருந்திருக்குமானால் , நான் தப்பித்திருப்பேனா?..

சாயங்காலம் கெமிஸ்ட்ரி வகுப்புக்கு அக்ரகாரம் செல்லணும்.. கூடவே பாடிகார்ட் வாலிபர்கள் வருவார்கள்.. தொந்தரவோ கிண்டலோ கிடையாது.. ஆனா பின் தொடர்ந்து வருவதே எத்தனை எரிச்சல்.. வீட்டில் சொன்னால் பிரச்னையாகுமே , அய்யோ பாவமே அந்த பசங்கன்னு தோணும்.. ஆனால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் வீட்டிலும் சொல்லி வைத்தோம்..

அதிலிருந்து யாரோட அம்மாவாவது வந்து வாத்தியார் வீட்டில் காத்திருந்து கூட்டி செல்வார்கள்.. ( ஆனாலும் பசங்க விடாக்கொண்டன்கள்)

அப்புரம் அது யார் வீட்டு பசங்கன்னு விசாரிச்சு தகவல் அனுப்பி தடை போடப்பட்டது ஒரு கதை..

இப்படி ஒரு பெண் படிக்க செல்லவே ஏகப்பட்ட இடைஞ்சல்கள்..

இதையெல்லாம் நீங்க நம்புவீங்களோ இல்லையோ , என் பிள்ளைகள் நிச்சயம் நம்பமாட்டார்கள்.. ஏனெனில் அவர்கள் பார்க்கும் அம்மா இப்ப முற்றிலும் வேறு..

கிட்டத்தட்ட ஒரு லேடி ஜேம்ஸ்பாண்ட்..:)

எப்படி இத்தனை மாற்றம்.?.. நானும் உள்ளூரிலேயே இருந்திருந்தா கழுத்து நிறைய நகை போட்டுகிட்டு பழங்கதை பேசிகிட்டு ஜாலியா இருந்திருப்பேனாயிருக்கும்...

வெளிநாட்டு வாழ்க்கை என்னை முற்றிலும் புது கோணத்தில் சிந்திக்க வைத்தது..

காதல் என்ற சொல்லே சொல்ல முடியாது கதைக்குகூட டேஷ் டேஷ் போட்டே பேசிய காலம் அது...

ஒரு பையன் பெண்ணை பார்க்கிறான் என்றால் அது அந்த பெண்ணின் தவறே.. அவள் ஏன் இடம் தருகிறாள் என்றுதான் கேள்வி..

வருடத்துக்கு ஒரு படம் .. அதுவும் சங்கராபரணம் , அல்லது கடவுள் படம்.. அதுகூட இரண்டாவது காட்சின்னா பரவாயில்லை..

என் அன்னைக்கு படிக்கும் வாய்ப்பு 8ம் வகுப்போடு தடை பட்டதால் அவருக்கு தன் பிள்ளைகளை படிக்க வைக்கணும் என்கிற வெறி வந்தது..

அது மட்டுமல்ல , அப்பா குடும்பத்தில் ( படித்தவர்கள் ) எல்லாரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசியபோது தம் பிள்ளைகளும் அப்படி பேசணும் என ஆசைப்பட்டார்..

அதனால் நாங்கள் தப்பித்தோம்.. எல்லா கஷ்டத்திலும் இடைஞ்சலிலும் போராடி படிக்க வைத்தார்..

படிப்புக்காக யார் காலிலும் விழ தயாராக இருந்தார்.. ( இப்பவும் அதையே எமக்கும் சொல்லுவார்.. உங்களால் முடிந்த கல்வி உதவி செய்ய மறக்காதீர்கள்.. என்று )

பெண் பிள்ளைகளை படிக்க வைக்கணுமா என்ற கேலி பேச்சையெல்லாம் சட்டையே செய்யாதவர்..

கான்வெண்ட் கன்னியாஸ்திரிமார் அனைவருக்கும் நல்ல பழக்கம்.. அவர்களுக்கு சுகவீனம் என்றால் சூப் செய்து அனுப்புவார் என்னிடம்..

ஆக கான்வெண்டிலும் நாங்க பிள்ளைகள் 6 பேரும் கண்காணிக்கப்பட்டோம்.. அங்க இங்க திரும்பிட முடியாது கடிவாளம் போட்ட மாதிரி வளர்ப்பு..

பள்ளி அருகில் என்பதால் அனேக ஆசிரியர்கள் வீட்டை சுற்றி.. பலர் வீடு திரும்பும்போதே அன்னையிடம் வந்து பேசிவிட்டு காப்பி குடித்துவிட்டு செல்வார்கள்..

பிரசவம் வரை பார்த்ததும் உண்டு.. குழந்தைகளை விட்டு செல்வார்கள் எங்கள் வீட்டில்.. இப்படி பழக்கம் வைக்காதவரே இல்லை எனலாம்..

உதவின்னா ஓடி போய் முதலில் செய்வார்.. ஆக ஜாதி வித்யாசம் அதிகம் இருந்த எங்க ஊரில் இவர் எல்லோருடனும் பழகி வந்தார்..

அப்பவே எமக்கு ஜாதி மத வித்யாசமெல்லாம் பார்க்க கூடாது என கற்று தந்தார்..தன் செயல்கள் மூலம்..

படித்தவர்களோடு வலிய சென்று பழக்கம் வைத்துக்கொண்டார்.. ( அப்படியே ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களை சந்தித்ததும் தனி கதை )..

தினமும் செய்தித்தாளை வரி விடாமல் படிப்பார்.. அவர் மாதிரி அரசியல் , சமூகம் பேச முடியாது.. அப்படி ஒரு நியாபகசக்தி..

ஆக ஒரு நல்ல சூழலை உருவாக்கி தந்தார்..இப்ப அவரை தவறாக பேசியவர்களும் கூட தம் பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் அன்னையை பின்பற்றினர்..


இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் , தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எது நல்லது என்பதில் மிக தெளிவாக இருந்தார் ..

சமூகம் என்ன சொல்லும் , கலாச்சாரம் என்னாகும் , குடும்ப பெயர் கெடுமா என நினைத்து பயப்படவில்லை...

முதன்முதலாய் 15 வருடமுன்பு என்னை வெளிநாட்டுக்கு மணமுடித்து அனுப்பும்போதும் பலத்த எதிர்ப்பு ..

வெளிநாட்டு பையன் னா எப்படி இருப்பானோ , என்னென்ன பழக்கமோ னு குழப்பு குழப்புன்னு குழப்புவார்கள்...

துக்க வீடு மாதிரி வந்து விசாரித்து " அய்யோ பாவம் நீ ..எப்படி சமாளிக்க போற " என்று பார்த்து சென்றவருண்டு..

ஆனால் அப்ப எதிர்த்தவர்கள் குடும்பத்தில் இப்ப அனேகர் அமெரிக்காவிலும் பல நாடுகளிலும்..:).

முதன்முதலில் நான் வண்டி ஓட்டியதும் , ஜீன்ஸ் போட்டதும் , நடனம் ஆடியதும் , வந்த எதிர்ப்பு எல்லாத்தையும் அன்னைதான் சமாளித்தார்..

தன் 4 பெண் பிள்ளைகளை பற்றி சுமையாக நினைக்காமல் பெருமையாக நினைத்தார்..

அன்னையோட வெற்றிக்கு முதல் காரணமாய் நான் நினைப்பது அவரின் தாழ்ச்சியும் மரியாதையும்..

சின்னவர்களை கூட ஐயா, அம்மா என சொல்லி வாங்க போங்க என்று தான்அழைப்பார்.. சின்னவர்களிடம் கூட நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆவல்..

என் பிரச்வத்துக்கு இங்கு வந்தபோது எனக்கே தெரியாமல் இருந்த அக்கம் பக்க இலங்கை தமிழ்ர்களிடம் மிக நட்பாகி

தினமும் அந்த பொடியன்கள் அம்மாவை தேடி வருவதும், தேநீர் அருந்த அழைப்பதும்.. அம்மாவிடம் கதைக்க வருவதும்..அப்படித்தான் இலங்கைத்தமிழர்களே எனக்கு

பழக்கமானார்கள்...( நான் அப்பல்லாம் ரொம்ப பயந்த சுவாபம்.. ரிசர்வ்டு.. )

தாய் பாஷை தெரியாவிட்டாலும் கூட வேலையாளிடம் சைகையாலேயே சமாளிப்பார்.. கற்றுக்கொள்வார்.. இருவரும் சிரிக்க வைப்பார்கள்...

அவரிடமிருந்தே கற்க முயன்றேன் இந்த " கலாச்சாரம் எனும் அன்பை.."..

ஆனா என் பிள்ளை வளரும்விதம்?.. எனக்கே பல விஷயம் சொல்லி கொடுக்கிறார்கள்..

மார்க்கெட் சென்றால் , அங்குள்ள ஊர்வன , பாத்து நான் முகம் சுழித்தால் திட்டுவான் . " அம்மா அப்படி செய்யாதீங்க.. அவங்க ம்அனசு கஷ்டப்படும்.."

' சாரி மா. நான் வேணும்னு செய்யலை.. என்னால் பார்க்க சகிக்க முடியல.. அருவருப்பா இருக்கு.. மன்னிச்சுக்கோ.."

" இதுக்கே இப்படின்னா இதை நான் சாப்பிட விரும்புகிறேன் எப்ப சமைக்க போறீங்கன்னு "அடுத்த குண்டை தூக்கி போடுறார்..

" அய்யோடா சாமி.. வெளில வாங்கி சாப்பிட்டுக்கோ. வீட்டுக்குள்ள கொண்டு வராத.."

"பாட்டி ரொம்ப நல்லவங்க கோழி சாப்பிடாட்டியும் உங்களுக்கெல்லாம் சமச்சி தந்தாங்கல்ல..."

" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.."

இன்றும் கூட நாங்க தடுப்பதை பேரப்பிள்ளைகளுக்கு சாதகமா பேசுபவர்..


விட்டுப்பிடி என்பதே அவர் தத்துவம்..




தொடருவேன்..


படம் : நன்றி கூகுள்

Wednesday, November 17, 2010

கலாச்சார மாற்றம் - ஏற்பதும் மறுப்பதும்.


































கற்காலித்திலிருந்து மனிதன் தன் வாழ்க்கையை, முறைகளை கலாச்சாரம் , பண்பாடு என்ற பெயரில் மாற்றிக்கொண்டே வந்துள்ளான்.

புதிதாக ஒரு கலாச்சாரம் பரவும் போது ஏற்கனவே பழகிய கலாச்சாரத்திலிருப்பவனுக்கு அதை குறித்தான பயமே அவன் வெறுப்புக்கு முதல் காரணியாகிறது.

பயம் எதனால் ?.. முழுமையான புரிதல் இல்லாமை..

ஏன் புரிதல் இல்லாமை..?.. தீ என்றால் சுடும் என்று மட்டுமே நினைத்திருந்தால் தீயினால் அடையக்கூடிய நன்மையை யாரும் அடைந்திருக்க முடியாது..

கலாச்சாரம் கத்தி , தீ போன்றதுதான்.. ஆபத்துகள் நிறைந்தவைதான்..

நாம் விரும்பி இவ்வுலகத்துக்கு வரவில்லை.. விரும்பிய நாட்டில் பிறக்கவுமில்லை..

மனிதனின் மனமும் குணமும் அவன் வாழும் சூழலை ஒத்து தீர்மானிக்கப்படுகிறது..

இப்படியே ஒவ்வொரு இனத்துக்கும், நாட்டுக்குமான பண்பாடு கலாச்சாரம் அவர்கள் வசதிக்கேற்ப , சக மனிதனுக்கு தொந்தரவு செய்யாமல் வாழ ஏற்படுத்தப்பட்டது..

ஆக கலாச்சாரம் என்பது ஒரு ஒழுங்குமுறை..

நாம் பிறந்த நாட்டில் ஒருவிதமான கலாச்சாரத்தில் வளர்க்கப்படுகிறோம். பின் சூழலால் வேறொரு இடத்துக்கு புலம்பெயரும்போது அங்குள்ள கலாச்சாராம்

அதிக சுதந்திரத்தை தரக்கூடியதாகவும் எளிதாகவும் படுகிறது.. ஆக அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக்கொள்கிறோம்..

தவறில்லை.. நாம் நம் சுதந்திரத்தை தேர்ந்தெடுப்பதும் , நமக்கு மட்டுமே ஒத்துபோகக்கூடியதை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை..

ஏனெனில் பாதகமோ , சாதகமோ அதை நாம் தாங்க்கிகொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்வோம், அல்லது தயார்படுத்திக்கொள்ள வைக்கப்படுவோம்..

ஆனால் அதற்காக நாம் புழங்கும் ஒரு கலாச்சாரமே சிறந்தது என யாராலும் உறுதியாக கூற முடியாது..

குளிர் பிரதேசத்திலுள்ளவன் கோர்ட் போட்டால் அதையே வெயில் பிரதேசத்திலுள்ளவனும் பின்பற்றுவது எத்தனை முட்டாள்தனமோ அத்தனை முட்டாள்தனம் வேறொரு கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்றுவது..


நம் நாட்டு திருமண முறைகளிலும் சில தவறுகள் இருக்கத்தான் செய்கிறது.. மறுப்பதற்கில்லை..வரதட்சணை , சாதி , மதம் , இனம் , நிறம் என எத்தனை எத்தனை அழுக்குகளை தாண்டி ஒரு திருமணம் நடத்தவேண்டியுள்ளது..

அறிமுகமற்ற இருவரை அறையினுள் தள்ளி , " இன்றிலிருந்து நீங்கள் தம்பதிகள்... குழந்தை பெற்று அமோகமாக வாழுங்கள் . நாங்களும் பக்க பலமாய் இருப்போம்" என அனுப்பி வைப்பது காலங்காலமாய் தொடர்ந்து வருவது..

அவர்களும் வாழ தொடங்குகின்றார்கள் சுற்றத்தின் நம்பிக்கையில்..

அந்த தம்பதிகள் வாழவில்லையா வெற்றிகரமாக..?

அவர்களுக்குள்ளும் பிரச்னைகள் இருந்திருக்கும்.. ஆனாலும் அன்பு கொண்டு அனுசரித்தே போனார்கள்..

இடையில் பெண்கள் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் தம் சுதந்திரத்தை நிலை நாட்ட தாமே துணையை தேடிக்கொள்ள ஆரம்பித்தனர்.

அதற்கும் சமூகம் வளைந்து கொடுத்தது சில எதிர்ப்புகள் வந்தாலும்..

பின்பு வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு பிரச்னைகள் வர ஆரம்பித்தது .. அதனால் ஆணுக்கும்தான்..

அதுவரை வீட்டிலிருந்து தன் அப்பாவை கவனித்துக்கொண்ட அன்னையையே பார்த்து வளர்ந்தவனுக்கு இதை ஏற்க கடினமாயிருந்தது..

அனுசரிப்பில் , புரிதலில் பிரச்னைகள்.. பொறுமையோடு , பிரச்னையை விவாதித்தவர்கள்: சுமூகமாக இருவரின் குறைகளையும் ஏற்றனர்..

முடியாதவர்கள் விவாகரத்தாகி பிரிந்தனர்..

இதில் கூட நகைச்சுவை என்னவென்றால் , பூதாகரமான பிரச்னை உடையவர்கள் கூட ஒன்று சேர்ந்து வாழ்ந்தனர்.. சின்ன விஷயத்தை கூட அனுசரிக்க முடியாமல் ஈகோவால் நான் சொல்வதுதான் சரி என்பவர்கள் பிரிந்தனர்..

ஆக எப்படி இருந்தாலும் சேர்ந்து தான் வாழணும் என்ற கட்டாயத்தில் இருந்து பிரிந்தும் வாழலாம் என்ற முறையை கலாச்சாராம் அனுமதித்தது.. அல்லது ஏற்றுக்கொண்டோம்.. மெல்ல மெல்ல..

பெண் தனியே முடிவெடுக்க, வாழ பழகிக்கொண்டாள்.. ஆணும் அப்படியே..

திருக்குறள் அருமையா சொல்லிதருது..


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு..


இப்படித்தான் ஈகோவினால் அழிந்தவர்கள் உண்டு... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை அறியாமல் , நான் நினைப்பதே, சொல்வதே சரி என்ற மனப்பான்மையில் அடுத்தவரை மதிக்காது அல்லது அடுத்தவரை இழிவுபடுத்தி மேலே வர நினைப்பது..

இவர்களுக்கு இல்லற வாழ்க்கை மட்டுமல்ல வாழ்க்கையே கசப்பாகத்தான் இருக்கும்..


"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்."


திரு மு.வரதராசனார் உரை

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.


தன்னுடைய சக்தி என்ன , என தெரியாமலே , புரியாமலே வாழ்பவர் ஏமாற்றமடைவர்..


தன் சக்திக்கேற்ற துணையை தேடுவதில்லை.. அனுசரிப்பதில்லை... தன் சக்திக்கு மீறிய துணை கிடைத்தால் எவ்வகையிலாவது அடிமைப்படுத்துவது.. இர்து இருபாலார்க்கும் பொருந்தும்..


அடுத்து இல்லறத்தில் மிக முக்கியமான நபர் குழந்தைகள் தான்..

நமக்கு பிடித்த துணை அமைகிறார்களோ இல்லையோ, குழந்தைகள், அவர்கள் நல்வாழ்வுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்..

இப்படியான தியாகத்தினால்தான் நம் கலாச்சாரம் மேம்பட்டு சிறப்பாக உள்ளது..

குழந்தைகளின் முன்னேற்றம் குறித்தே தன் சுக துக்கங்களை மறைத்தவர்கள் பலருண்டு நம் நாட்டில்..முட்டாள்களா அவர்கள்.. இல்லை புத்திசாலிகள்..

மேல்நாட்டு கலாச்சாரம் என்றாலே மோசம் என நினைக்கிறோமே , அப்படியா?..

இல்லவே இல்லை.. நம் கலாச்சாரத்தில் உள்ள அழுக்குகள் ( வரதட்சணை , சாதி , மதம் , இனம் , நிறம் இத்யாதி ) அங்கில்லை.. அல்லது மிக குறைவாக..

அங்கேயும் திருமணங்கள் உண்டு..சட்டதிட்டங்கள் உண்டு.. சொல்லப்போனால் குழந்தைகளுக்காக மெனக்கிடுபவர்கள் அதிகம் அங்கே..

பொறுப்பற்ற குடிகார தகப்பன்களை இங்கே நாம் அதிகம் காணலாம்.. ஆனால் விவாகரத்தானாலும் , குழந்தைகளை அன்போடு கவனித்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் பெற்றோர் அனேகர் அங்கே..

பெண்ணடிமைத்தனத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்து கொண்டிருக்கும் சமூகம் நம்முடையது..

தன் தாய் ஒரு அடிமையான வாழ்வு வாழ்ந்ததை ஏமாற்றமாக நினைக்கும் , சொந்தக்காலில் நிற்கும் பெண்ணொருத்திக்கு இயல்பிலேயே திருமணம் /ஆண் என்ற வெறுப்பு இருப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லைதான்..அதே போல ஆணுக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கக்கூடும்..தன் சகோதரனை பணத்தால் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பெண் என பலவாராக,...

அவர்களின் எதிர்மறை எண்ணத்தை மாற்றவேண்டியது இச்சமூகமும் அவர்களுக்கு கிடைக்கும் துணையும்..

ஏற்கனவே அடிபட்ட பாம்பாக இருக்கும் இவர்கள் சிறிது இடைவெளி கிடைத்தாலும் சுதந்திரமாக இருக்க எண்ணுவதில் தவறேதுமில்லை..

ஆனால் அதற்காக ஒட்டுமொத்த கலாச்சாரமுமே தோல்வி என முடிவு செய்யக்கூடாது.. அதுதான் தவறு..

கமலஹாசனையும் கெளதமியையும் பற்றி இழிவாக பேசுகின்றனர் சிலர்..

நாம் அவர்கள் நிலைமையில் இருந்து யோசித்தால் மட்டுமே அவர்களின் நியாயம் நமக்கு புலப்படும்..

இருவருமே முறைப்படி திருமணம் செய்தவர்கள்தான்.. அதில் அடிபட்டவர்கள்தான்..மேலும் பிரபலங்களின் வாழ்வு எல்லாராலும் ஈவு இறக்கமின்றி அலசப்படுபவை..நம் வீட்டில் நடந்தால் அதை பற்றி மூச்சு விடமாட்டோம்...

தற்போதைய முடிவும் அவர்களுக்கு சரியானதே.. அது அவர்கள் வாழ்க்கை..

எத்தனையோ விஷயத்துக்காக அவர்கள் இணைந்து வாழலாம் . காமம் மட்டுமே பிரதானம் என நாம் முடிவு செய்ய கூடாது..

அதேதான் லிவிங்-டுகேதரிலும் .. கூட சேர்ந்து வாழ்க்கை . காமம் மட்டும் என்றால் நிலைக்காது எதுவுமே..



இப்படி ஒருவர் இருவர் செய்வதால் ஒட்டு மொத்த கலாச்சாரமே சீரழிந்துவிட்டதாய் பரப்பரப்புறை செய்வதுதான் ஆரோக்கியமற்றது..

எனக்கு நம் இந்திய கலாச்சாரம்தான் பிடிக்கும்.. முன்பின் தெரியாத ஒருவரை மணப்பதும் அவர்களை மெல்ல மெல்ல அனுசரிப்பதும் , புரிந்துகொள்வதுமே ஒரு சுவாரஸ்யம்..ஆனால் ஒருவேளை என் பிள்ளைகள் லிவிங்-டுகெதர் என்ற முறையில் வாழ்வார்களேயானால் அதையும் ஏற்கும் மனப்பக்குவமும் உண்டு..ஏனெனில் அவர்கள் பிறந்து பார்த்து வாழ்வது முற்றிலும் வேறொரு கலாச்சாரம்.. அதையும் நாம் புரியணும்..

வீட்டுக்குள் மட்டும் இந்திய கலாச்சாரம்... படி தாண்டினால் வேறு பல நாட்டு கலாச்சாரம்..

இப்படி செய்தால் இது அனுகூலம், இது நஷ்டம் என சொல்லுவதும் , நம் கலாச்சாரத்தில் வெற்றிகரமாய் வாழ்பவர்களை காண்பிப்பதும் மட்டுமே என் பொறுப்பு..

தீ என்றால் சுடும் என சொல்வோம்.. மீறி சுட்டு காயப்பட்டு வந்தாலும் ஏற்போம்..

வெளிநாட்டிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லற வாழ்வில் இணைவதோ, குழந்தை பெற்றுக்கொள்வதோ கிடையாது..

காமம் ஒரு பெரிய விஷயமே இல்லை..20 வயதுக்குள் காமத்தை பற்றிய அனைத்து புரிதலும் இருக்கிறது அவர்களுக்கு.. நம் நாட்டில்தான் காமத்துக்காக கல்யாணம் செய்பவர் உண்டு.. அதனாலேயே காமம் முடிந்ததும் திருமணமும் புளித்து போகிறது சிலருக்கு..

ஆக வெளிநாட்டில் திருமணம் வரை வருகிறார் என்றால் எல்லா பொறுப்புகளையும் சுமக்க தயாராகிறார்கள் என்றே அர்த்தம்..

இதிலும் சில விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை..

எந்த ஒரு திருமணத்திலும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாயிருக்கணும்..அது மட்டுமே வெற்றி பெறும்..

அங்கேயே அனுசரிப்புகள் , தியாகங்கள் , பொறுமைகள் தொடங்கும்..

அப்படி முடியாதவர்கள் , தயவுசெய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டாம்தான்..

நாட்டின் சட்டமே லிவிங்-டுகெதரை அனுமதிக்கிறது என்றால் அதிலும் உண்மையில்லாமலில்லை..

ஏதோ 10 வயது குழந்தைக்கான சட்டம் அல்ல. இது.

வயது வந்த இரு பெரியவர்களுக்கே இந்த அனுமதி.. அதன் பொறுப்புகளை அவர்கள் உணர்ந்தே அதில் ஈடுபடணும்..

ஆக அதிகமா பயந்து வெறுத்து ஒதுக்குவதை விட அதிலுள்ள லாப நஷ்டங்களை அவர்களுக்கு எடுத்து சொல்லலாம்..

பொறுப்புகளை தட்டிக்கழித்து ஓடாமல் பொறுப்புகளை சுமக்க பழக்கலாம்..

லிவிங்-டுகதரில் சம உரிமை இருப்பதாக நம்பலாம்..

காலம் மாறும் போது கலாச்சாரமும் மாறும் என்ற உண்மையை ஏற்கத்தான் வேணும் நமக்கு பிடிக்காவிட்டாலும் கூட..

ஏனெனில் உலகமயமாகிக்கொண்டு வரும் இந்நாளில் சிலவற்றை நாம் இழப்பதும் ஏற்பதும் தவிர்க்க முடியாதது...

அதிலொன்றுதான் முதியோர் இல்லங்களும்..

இருப்பது ஒன்றோ இரண்டோ பிள்ளைகள்...வேகமாக ஓடும் வாழ்க்கையில் உறவுகளை அறிமுகப்படுத்தக்கூட மற( று)க்கிறோம்..

பிள்ளைகளை வெளிநாடு அனுப்பணும் என்ற ஆசையோடு நாமும் மூட்டை முடிச்சுகளோடு முதியோர் இல்லம் செல்ல தயாராகிக்கொள்ளணும்தான்..:)


ஆனால் காலங்காலமாய் தொடர்ந்து வரும் நம் கலாச்சாரத்தை இழிவாக மட்டுமே பேசுபவர்களுக்கு , பார்ப்பவர்களுக்கு கீழே உள்ள குறள் பதில்..



அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.


படம் : நன்றி கூகுள்..

Saturday, November 13, 2010

கூடைப்பந்து டோர்னமெண்ட்.

















பெரியவருக்கு இன்று கூடைப்பந்து டோர்னமெண்ட்.. தாய்லாந்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 குழந்தைகள் பங்கேற்கும் போட்டி...

இவன் பள்ளியில் இருந்து நால்வர்...

இதுக்கான ஏற்பாடு கடந்த 1 மாதமாய் ..

நேற்றும் , அம்மா சீக்கிரம் தூங்குங்க.. காலை 4 மணிக்கே எழுந்து கிளம்பணும்... னு என்னை ஒரே தொந்தரவு..

3 மணிக்கு தூங்கினாலும் 4 மணிக்கு எழும்பிடுவேன் கவலைப்படாதே ன்னு சமாதானம் சொல்வதற்குள்..

காலை 5.30க்கெல்லாம் அந்த இடம் தேடி கண்டுபிடித்தோம்.. 6 மணிக்கு பதிவு..

ஜெகஜோதியாய் இருந்தது கூட்டம்.. வந்தவர் அனைவருக்கும் விடாமில்க் சார்பாக சட்டை கொடுத்தார்கள்.. எண்ணோடு.. பின் டீம் பிரித்து அனுப்பப்பட்டார்கள்... 8 கூடைப்பந்து மேட்ச் ஒரே நேரம் நடக்கும்.. ஒவ்வொரு பகுதியிலும் 12 மேட்ச்..

அதை பார்க்க எதை விட என தெரியாமல்...அத்தனை நன்றாக இருந்தது...

பெண் பிள்ளைகளும் அத்தனை அருமையா விளையாடினார்கள்.. ( நான் கல்லூரியில் பேட்மிண்டன் டோர்னமெண்ட் விளையாட கோவை சென்ற நியாபகம் வந்தது.. )

விளையாடும்போது அவ்வளவு வெறியோடு பந்தை கடத்தி கூடையில் போட்டாலும் , புன்னகை மாறாத குதூகலத்துடன் விளையாடினார்கள் ..

ஏற்கனவே சானல் 3 இதை ஒளிபரப்ப படம் எடுத்துக்கொண்டிருந்தது.. நான் என் மகனின் நட்புகளுக்கு , உணவு , ஜூஸ் என வாங்குவதில் பிஸியானேன்..

மகனின் நண்பரின் அப்பா, என் மகனுக்கு மிக அழகாக பாடம் எடுத்தார் பந்தை எப்படியெல்லாம் போடணும் என.. ( நல்ல தாய்மக்கள் )

இன்னொரு அம்மா , ஆங்கிலம் பேச தெரியாததால் அமைதியா புன்னகையோடு இருந்தார்..

எல்லா மேட்சும் பார்த்து ரசித்தாலும் வித்யாசமான பந்து கூடைக்குள் போடும்போது என்னை மீறி கைதட்டிக்கொண்டிருந்தேன்..

சிலர் ஆச்சர்யமா பார்த்தார்கள்.. இந்த பெண்மணி யார் டீம்.. எல்லா டீமுக்கும் கை தட்டுதே னு.. ஆமா , விளையாட்டை விளையாட்டாய் ரசித்தேன் ..

( நான் பள்ளி படிக்கும்போது கூடைப்பந்துக்கு செலக்ட் ஆனதுமே , அம்மா உடற்ப்யிற்சி ஆசிரியரிடம் கண்டிப்பா சொல்லிட்டாங்க, பிளஸ் 2 வில் மார்க் எடுக்கணும்.. ஆக இவளை விட்ருங்கன்னு.. தப்பிச்சேன்.. கான்வெண்ட் உடற்பயிற்சி ஆசிரியர்கள்னா , சாதம் ஹுசைனுக்கு சமம் அக்காலத்தில்..ஆனால் அது நல்லதுன்னு அப்புரம் புரிந்ததும்.. ) .

முதலில் ஆரம்ப விழாவில் பசங்களின் பிரேக் டான்ஸ் அசத்தல்.. கொரிய பசங்க மிக அற்புதமாய் நடனம்.. சான்சே இல்லை...

அடுத்து பாலே டான்ஸ் பெண்கள்.. பெண்களா அன்னங்களா வந்து போனது என இன்னும் சந்தேகம்.. அத்தனை அருமை...நளினம்..

எல்லாருக்கும் தேவைக்கதிகமாய் வைட்டா மில்க் வழங்கப்பட்டது...

மகன் பள்ளி விளையாடும் நேரம் வந்தது.. அருமையான போராட்ட ஆட்டம்.. இருவருமே போட்டி போட்டு மாத்தி மாத்தி எடுத்தார்கள்.. இறுதியில் எதிரணி வெற்றி பெற்றது ஒரு எண்ணிக்கை வித்யாசத்தில்.. நேரமும் முடிந்தது...அதிர்ஷ்டமில்லை.:)

எனக்கு பங்கு பெறுவதே போதுமானது. என்றாலும் சிறுவர்கள் மனது வருந்தியது . ஆறுதல் படுத்தினோம்.. இன்னும் பல டோர்னமெண்ட் அனுப்புவீர்களா என கேட்டுக்கொண்டார்கள் ( புத்திசாலிகள் .. )

சில சுவாரஸ்யம்..

1. ஒரு பையன் ஒரு காலில் கருப்பு ஷூ, மற்றொரு காலில் பிரவுண் ஷூ.. நான் சிரித்துக்கொண்டே யொசித்தேன்.. ஒருவேளை இருட்டில் போட்டதால் தெரியாமல் மாற்றி போட்டுட்டானோ என.. ஆனா யாரும் கண்டுக்கலை என்னை தவிர.. . சிறிது நேரத்தில் விடை கிடைத்தது.. அவன் தோழனும் அதே போல போட்டிருந்தான்.. நண்பேண்டா.....

2. அறிவிப்பாளர் ஒருவருக்கு கூந்தல் ( ஆண்தானுங்க ) நீளமாயிருந்தது.. ஒருவர் 2 ரப்பர்பேண்ட் எடுத்து வந்து மிக சீரியஸா தலையை சீவி குடுமி போட்டு விட்டார்... சத்தமாவா சிரிக்க முடியும்..?..

3. நாற்காலி கிடைத்தது என ஒரு இடத்தில் எடுத்து வந்து போட்டுவிட்டு தண்ணி எடுக்க காருக்கு போய்விட்டு வருவதற்குள் ஒரு சிறுவன் அருமையா குரட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான் அதில்...

4. எல்லார் வாயிலும் பபுள்கம்...

5. ஒலிபெருக்கியில் டான்ஸ் மியூசிக் பாட்டு போட்டது மிக உற்சாகமாயிருந்தது...அனைவருக்குமே ஆட தோன்றியிருக்கும்..

6. தேசிய கீதம் போட்டதும் , எல்லாரும் போட்டது போட்டபடி , எடுத்தது எடுத்தபடி, சிலையாக அசையாமல் அங்கங்கே நின்றது , கண்ணீர் வரவழைக்கும் ஆனந்தம்...

7. பசங்க முதலில் பிரக்டிஸ் பண்ணும்போது அந்த கூடை உய்ரம் குதித்து அதை பிடித்து தொங்கும்போது விழுந்துருமோன்னு அடிக்கடி பயப்பட வைத்தார்கள்.. :)

( மகன் மேட்ச் முடிந்ததும் ஒருத்தர் மைக் தூக்கிகிட்டு அருகில் வந்துட்டார்..தாய் பேச தெரியுமான்னு ஆங்கிலத்தில் கேட்டார்.. தாய் பாஷையில் பதில் சொன்னேன் ஆமான்னு.. ரொம்ப மகிழ்ந்துட்டார் போல.. பையன் வயது படிப்பு பள்ளி பெயர் எல்லாம் கேட்டார்,.. கொஞ்சம் நம்பிக்கையில்லை போல.. மகன் உயரம் பார்த்து...

அடப்பாவமே தொலைக்காட்சியில் வருவேன்னு தெரிஞ்சா மேக்கப் லாம் போட்டிருப்பேனே ..அவ்வ்வ்..)


இப்ப தூக்கம் வருது .. 1 மணிநேரம் தூங்கினா அடுத்து சின்னவர் வருவதற்குள் அவரை கூட்டிட்டு வெளியே போகணும்.. )

இதுக்கெல்லாம் பின்னூட்டம் + ஓட்டு போடாம அந்த நேரத்துல நல்ல பதிவை படிங்க... :)

நன்றி
.

படம் : நன்றி..கூகுள்






..

Friday, November 12, 2010

"சரக்கு சேவர் " ஐ வாழ்த்துவோம் வாருங்கள் :ஜெய் சாக்கி!


ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்...பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே.. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------




"சரக்கு சேவர் " ஐ வாழ்த்துவோம் வாருங்கள் :
--

நாமெல்லாம் பெருமை படும்படியா நம்ம "சரக்கு சேவர் "அலெக்சாவுல வந்துருக்காராம்ல..நாட்டுக்கு எவ்வளவு முக்கியமான விஷயம்..? ஏன் இன்னும் பாராட்டு விழா எடுக்கவில்லை..?..நட்புகள் சொல்லிதான் சேதி தெரியும்..

மோகன்ராஜ் அலையஸ் மோகனகிருஷ்ணன் உருவாக அண்ணாவின் சேவை மகத்தானது..

மோகன்ராஜ் எப்படி உலகம் பூரா புகழடைந்தாரோ அதே புகழ் நம்ம சரக்கு சேவரும் அடைந்திருக்கிறார் என்பதில் பெருமகிழ்ச்சியடைவதோடு இதை உலகெங்கும் பரப்பும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கு இருக்கிறது என்பதை இங்கே நியாபகப்படுத்துவதில் நித்யானந்தம் அடைகிறேன்..

எதிர்காலத்தில் அண்ணா அவர்கள் ஆசிரமம் அமைத்து தம் பின்னூட்ட சீடர்களுக்கு முன்னுரிமை தருமாறு வேண்டிக்கொள்கிறேன்..

ரோட்டில் போகும் பெண்களின் முதுகை, அங்கங்களை , மழையில் நனையும் குழந்தைகளை இன்னும் தெள்ளத்தெளிவாக நோக்கிட ரசிகர்களை காத்திட , கண்பார்வை நன்றாக இருக்குமாறு மட்டுமல்ல எக்ஸ்ரே கண் கொடுத்தாலும் நன்று என எல்லாம் வல்ல பிதாவை வேண்டிக்கொள்கிறேன்..

பாலியல் வன்புணர்ச்சிகளை கூட மிக அருமையாக வர்ணணையோடு நகைச்சுவை கலந்து அந்த நிகழ்வோடு தம்மை ஈடுபட செய்யும் அண்ணாவின் சேவைக்கு ஆஸ்கார் அவார்ட் பரிந்துரைக்கிறேன்..ஏனெனில் இதை பார்த்து இன்னும் பல மோகன்ராஜ்கள் விவரமாக தெரிந்துகொள்ள அண்ணா உதவுகின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது..


அண்ணா சூரியன் என்றால் அவரை சுற்றும் ரசிகர்கள் நட்சத்திரம் என்றால் மிகையாகாது..

உங்க வீட்டு பெண்கள் ஸ்கூட்டியிலோ பைக்கின் பின்னாலோ சென்றால் அண்ணாவுக்கு ஒரு சின்ன தகவல் அனுப்பினால் போதும்.. அங்கம் அங்கமாக அலசி ஆராய்ந்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிப்பார்.. இத்தனைக்கும் இது இலவசம்.. உடனே முந்துங்கள் .. ( ஆனால் அண்ணி பற்றி அப்படி ஆராய்ச்சிகள் கிடக்குமா னு யாராச்சும் கேட்டுராதீங்க.. மூச்.. )

இந்த நல்ல வேலையை இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன் ... கெட்ட வேலைகள் நிறைய இருக்கு..

பிட்டு படம் போடாமல் , அலெக்சாவில் இடம்பிடிக்க கொஞ்சம் கூட முயற்சிக்காமல் , கடவுளேன்னு சில நாட்டுக்கு இப்ப தேவையற்ற கட்டுரைகளை ஜெயபாரதன் சார் ( அறிவியல் ) , என். கணேசன் ( ஆன்மீகம் ) , செல்வகுமார் ( தமிழ் விக்கி ) போன்றவர்கள் எழுதி வருவதை கடமையேன்னு படிச்சுபோட்டு வாரேன்.. வேலையத்த வேலையாய் இவர்கள் இப்படி பலர் சமூகத்தை முன்னேற்றிட கட்டுரைகள் எழுதி வருவதை என்ன சொல்ல.... என என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்...


வாழ்க சாக்கி .. ஜெய் சாக்கி...ஜெய் மோகன்ராஜ் என்ற கிருஷ்ணன்..

இன்னும் பல பல பலான ரேங்கிங்கில் முதலில் வந்து நம் நாட்டுகே பெருமை சேர்க்க வாழ்த்துவோம் வாருங்கள்....

"A" ஜோக் போட்டே முன்னால் வந்தவரை " A " கிரேடு தமிழர் என பெருமைபடுத்துவோம்...


( சாக்கி என்பது பிணம் அழுகிய சாக்கு மூட்டையை திறந்தால் வருமே..அந்த வாசம்.. ஆஹா என்ன மணம் என்ன மணம்...தமிழையே மணக்க செய்யும் சரக்குக்கு சாக்கி என்பது பொருத்தம்தானே?...)


சாக்கு மூட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள் இருப்பதாக நியாபகம் வந்தால் சாக்கு கும்பெனி பொறுப்பாகாது...

படம் : நன்றி கூகுள்...






.

Wednesday, November 10, 2010

என்கவுண்டர் சரியா தவறா?.






















பலவிதமான அலசலுக்கு பின் சில விஷயம் எழுதலாம் என நினைத்தேன்.


குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆயுசுக்கும் அந்த வலி இருக்கும்.. அது என்கவுண்டரினாலோ , நீதி கிடைப்பதாலோ கொஞ்சமும் குறையப்போவதில்லை.

ஆனால் இந்த என்கவுண்டர் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கும் அவ்வளவே...

குழந்தைகள் திரும்ப கிடைப்பார்களா?.. இல்லை அவர்களின் அந்த மரண நேரங்கள் தினமும் வந்து போகாதா மனதில்..?


ஆனாலும் கோவை மக்கள் வெடி போட்டு கொண்டாடும் அளவுக்கு இச்சம்பவம் இருந்திருக்கு என்பதை யோசித்து பார்க்கும்போது பொதுமக்களின் கோபம் புரிகிறது..

தப்புகள் உடனே தண்டிக்கப்படவேண்டும் என்ற ஆவல் புரிகிறது...

இந்த என்கவுண்டர் பின்னால் நிஜமான குற்றவாளி தப்பித்திருக்கலாம் என்ற ஒன்றை தவிர தப்பு செய்தவன் இவந்தான் என்ற பட்சத்தில் யாருக்குமே அவன் கொல்லப்பட்டது நியாயமாகத்தான் தோன்றும்..


ஏன் இந்த கொலைக்கு மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் , ஊடகத்தில் வருவதைத்தான் மக்களால் அறிய முடிகிறது..

பல கொலைகள் மறைக்கப்படுகின்றன..பல சம்பவங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதே நிஜம்...

மற்றபடி ஒரு சாதாரண மனிதனுக்கு உணர்ச்சிகள் ஒன்றுதான் அவன் ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும்..

எல்லா கொலைகளுக்கும் மக்கள் இதே வருத்தம்தான் அடையக்கூடும்...

எல்லா தவறுகளுமே இவ்விதத்தில் தண்டிக்கப்பட்டாலும் கூட மக்கள் கொண்டாடுவார்கள்.. அதற்காக அவர்களை தவறாக நினைக்க கூடாது..

அவர்கள் எண்ணமெல்லாம் தப்பு செய்தவன் தண்டனை பெற்றான் என்பதாகவே புரிந்துகொள்ள படுகிறது.

அதற்குள் உள்ள நிஜ அரசியலை புரியமுடியாத அப்பாவி ஜனங்களாக மக்களை ஆக்கி வைத்தது யார் ?..

பல பின்னூட்டங்களை பார்க்கும்போது , " உங்க வீட்டு பிள்ளைன்னா , இப்படி சொல்வீர்களா.?" என்றுதான் பலரும் கொதிக்கிறோம் .. ஏன் .?. ஏனெனில் உணர்ச்சிகளே முன் நிற்கிறது..

அதிர்ச்சியளிக்கிறது குழந்தைகளின் கடத்தலும் , பாலியல் கொடுமைகளும், கொலைகளும்.. மக்களின் இயலாமையே இத்தகைய என்கவுண்டர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைமை..

என் வாழ்வில் நடந்த எடுத்துக்காட்டு..இங்கே பகிர்கிறேன்..

என்னை பற்றி புனைவு எழுதினர் ..அதை வ்எளிகாட்டினேன்..

அதனை தொடர்ந்து மதாரும், மணி , அர்விந்த் , இன்னும் சிலர் மிக வக்கிரமாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தனர்..

அதற்கு முடிவு கட்டும் விதமாக நட்புகள் என்னையும் அவ்வாறே எழுத சொன்னர்..

நானும் அவர்கள் எழுதிய கதைகள் , படங்கள் , வைத்தே அவர்களை திருப்பி எழுதினேன்..

அவர்கள் உபயோகப்படுத்திய அதே வார்த்தைகள்.. :) , நாய் , பிச்சைக்காரி, இத்யாதி...

ஏன் அதே பெயரான அமர் என்றுகூட..அமர் இங்கே தாய்லாந்தில் எங்கள் பக்கத்து அடுக்ககத்தில் இருந்தவர்.. அவர் பற்றி கூட தகவல் சொல்லும் உளவாளி இருக்கார் பாருங்க... :). நான் பேசியதுகூட இல்லை.. அவரிடம்.. :) . ஆனால் பெண் என்றால் இப்படி சொன்னால்தானே பயந்து ஓடுவாள்...?..

ராஜி என் நண்பரின் மனைவி பெயர்.. :)) . நான் இந்தியா வந்தபோது குடும்பத்தோடு விமான நிலையம் அனுப்பி வைத்தார் குழந்தைகளை விடிகாலை 3 மணிக்கு..

எப்படியெல்லாம் பெண்ணை பலிகடா அக்குகின்றார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ளவே இதை கூறுகின்றேன்..

இந்த சைக்கோக்கள் பற்றி..


ஆனால் நாம் திருப்பி எழுதியதும் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது..

அவர்கள் வீட்டு பெண்ணை சொன்னால் வலிக்கின்றது..

இதே வலிதான் மற்றவருக்கும் இருக்கும் என ஏன் புரியலை..?

ஆக இங்கு வலியை பொறுத்தே சில விஷயங்கள் நடக்கின்றது...

இன்றும் கூட சந்தனமுல்லையால் தன் குழந்தையை பற்றிய விமர்சனத்தை மறக்க முடியவில்லை.. மறக்கவே முடியாது ..கண்டிப்பாக...

ஆக ஊடகம் , காவ்ல்துறை அரசியல் என அனைத்தின் செயல்பாடுகளும் , பொதுமக்களுக்கு எளிதில் புரிவதில்லை..

என்னை பற்றி தினமணியிலும் மிக தவறான தகவல் கொடுத்துள்ளனர்.. :)

தினமணியிடம் பேசியபோது ,

" ரொம்ப சாரிம்மா.தவறு செய்துவிட்டோம் " என சொன்னார்கள்..

ஆனால் அதற்குமுன் யாரோ ஒருவர் அதை மறுத்தும் சொல்லியுள்ளார் ( அவருக்கும் எம் நன்றிகள் )

"மலேசியாவில் வேலை பார்க்கும் ஒரு சைக்கோத்தனமான நபரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு டீசண்ட் ஜென்டில்மேனும், தாய்லாந்தை சேர்ந்த அப்பெண்ணை பற்றி கண்டபடி புனைவு எழுதி மன உளைச்சல் கொடுத்த கதையை அறிவோம். இதற்கு முன்னரும் இதே போன்று தன்னை சாதாரணமாக ஒரு பெண் பதிவர் கிண்டல் செய்ததை பொருக்க முடியாமல் அவரையும் அவர் மகளையும் பற்றி பாலியல் ஒழுக்கம் மற்றும் சாதி ரீதீயாக கீழ்தரமாக எழுதி பின்னர் எதிர்வினை வந்தவுடன் பதிவுலகத்தை விட்டு சில நாள் ஓடிப்போன முன்னார் பிரபல பதிவர் பற்றிய செய்தியையும் நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பெண்களை இணைய வெளியிலும் நிம்மதியாக இயங்க விடா சமூகமிது. By எஸ்.கே"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதார் , அர்விந்த் , மணி என்னை பற்றி எழுதிய புனைவு விபரம் கீழே...இதெல்லாம் சொல்ல வேண்டாம் என பார்த்தால் பலருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை..ஏன் நான் பதிலுக்கு எழுதுகின்றேன் என்றும்..

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டியது பதிவுலக சாபக்கேடு..:)

இங்கு நீதி நியாயம் , சட்டம் ஏதும் செல்லுபடியாகாது.:)

ஆக துணிந்து நின்று போராடுங்கள்... அவர்கள் வழியிலேயே.. அது மட்டும்தான் அவர்களை நிப்பாட்டும்...

மணி என்னையும் வினவையும் இனைத்து பிச்சைக்காரி என எழுதினார்.. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட ஏதும் பிரச்னையில்லை..:))

நான் எழுதினதும் அவர்கள் அழித்துவிட்டார்கள்.. ..உடனே.. .. ஆனால் நான் எழுதினதை வைத்து மட்டும் தியாகு அரசியல் செய்ய பார்த்து அதிலும் தோற்றார்...:)

இருதியாக நாடோடி என்ற பதிவரிடம் மாட்டினார் அர்விந்த்..தன் வாய்க்கொழுப்பால்... :)


-----------------------------------------------------------------------------

நமக்கே இதுபோன்ற நேரங்களில் என்கவுண்டர் சரியென தோன்றுவது இத்தகைய காரணிகளால்தான்..

மெல்ல மெல்ல என்கவுண்டரின் அரசியல் புரியும்போது மக்களும் புரிவார்கள்...





----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





மதார் பட்டாணி - Buzz - Public - Muted
எல்லா இடத்திலையும் போய் வாந்தி எடுக்கிறது தான் ஒரு நாய்க்கு வேலை.அந்த நாயோட ஜோடி முத்தம் கூட தராதாம் அதனால வர்ற போற எல்லோரையும் கூப்பிடுமாம் .வரலைன்னா கடிச்சி வைக்குமாம்.அந்த நாய்க்கு பிறந்தது யார்க்கு பிறந்ததுன்னு இன்னும் தெரியலையாம்.அப்படி சம்பந்தமே இல்லாம இருக்குமாம்.

வெளிநாட்டில் இருந்து ஆம்பிளைங்க யாராவது போனா அவங்க வாங்கி தர்ற தண்ணிக்காவே நிறைய பேர் சுத்துவாங்கன்னு அந்த நாய் சொல்லுமாம். அந்த நாய் வர்றப்போ என்ன தரும்னு அதுக்கு மட்டும் தான் தெரியும்.அதான் அந்த நாய்க்கு பிறந்த நாய் சம்பந்தமே இல்லாம இருக்காம்.அந்த நாய் இருக்கிற மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்கன்னு அந்த நாய்க்கு ஒரு நினைப்பு. பாத்ரூம்ல கேமிரா கூட வைக்க சொல்லும்.அந்த நாய்க்கு பேரு இப்போ வாந்தியாம்.EditOct 14




மணியின் புனைவு..வினாவையும் என்னையும் இணைத்து எழுதினது..

http://www.thandora.in/2010/10/5.html

அர்த்தமில்லாத கதைகள் ...5



அவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன ? பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .


http://www.thandora.in/2010/10/5.html

-------------

இக்கதை குறித்து என்னை பிச்சைக்காரி என விமர்சனம் செய்கிறார் மதார். பஸ் ல்.
------------------------------
-------------------------------------------------------------------------

ஒரு மாசம் கழிச்சி சேலையை எல்லாம் கிழிச்சிக்கிட்டு புனைவு எழுதிட்டாங்க ஓடி வந்தாலும் வரலாம் இந்த பிச்சைக்காரி.

http://www.thandora.in/2010/10/5.html
சீனு ¢ ђ є È η υ - விடமாட்டீங்க போல... ;)Oct 13DeleteUndo deleteReport spamNot spam
மதார் பட்டாணி - @seenu , ithu veru voru kathaiOct 13DeleteUndo deleteReport spamNot spam
குளிகன் ஜி - இதை போன்ற நரகல்களை யாராவது ஒருவர் தானாக முன்வந்து நிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியான வன்மம் அவதூறு குரூரத்தில் முடிவடையும்.

மன்னிப்பும் மறப்பும் மனிதர்களால் முடிவதுதான்.
Oct 13DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - எனக்கே புரியலைOct 13DeleteUndo deleteReport spamNot spam
குளிகன் ஜி - அன்பின் மணி உங்கள் வயதுக்கான நிதானத்துடன் இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது செய்தால் என்னOct 13DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - என் வயது என்ன?12:00 am

நீ கேளேன்....



இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் மலேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு தொடர்வதாக இருந்தால் மொராக்கோ ஜீரிடிக்‌ஷனில் தொடரவும் .ஏய்...ஆதிவாசி...அடக்கிவாசி...

நான் பஸ்ஸ்க்குள்ள இருந்து பாக்கறேன்...ஒரே பொகை மயமா இருக்கு..Sep 28DeleteUndo deleteReport spamNot spam
aravind அரவிந்த் - ஏவாள் வேண்டாம் ஆதாரம் தான் வேணும்Sep 28DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - அமைதிக்கு பெயர்தான் சாந்திSep 28DeleteUndo deleteReport spamNot ஸ்பாம்


aravind அரவிந்த் - ராஜி என்ற பெயரில் யாரும் சண்டைக்கு வந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.அமர் கிட்ட கேக்கணுமா அவன் கிடக்குறான்.S




அடுத்து மணியின் மிரட்டல்..
-------------------------------------
[[ அம்மணிக்கு ஆப்பு அப்புறம்....(இதில் ரெண்டு அர்த்தம் இருக்கிறது...இரண்டாவது அர்த்தத்தை சரியாக கண்டு பிடிப்பவருக்கு பட்டயாவில் ஒரு இரவு இலவசம்) ]] -------------------------

இது மணியின் பொது மிரட்டல் எனக்கு.




-----------------------------------------------------------------

இதை ஆதரவு தேடி பதியவில்லை.. சிலருக்கு நிஜத்தை விளங்க வைக்க சொல்லி நட்புகள் பதிவாக போட சொல்லியதால் மட்டுமே..

பதிவுலகில் இப்படியும் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளவும்..எப்பவும் பதிவை படித்து தெரிதுகொள்ளவும்.. என் பக்க விளக்கம் மட்டுமே...

ரெளத்திரம் பழகியே ஆகணுமோ பதிவுலகில் இருப்பதென்றால்.?:)


-------------

மற்ற முக்கிய என்கவுண்டர் பதிவுகள் ,
http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/

http://villavan.wordpress.com/2010/11/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF/

http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_09.html



படம் : நன்றி கூகுள்..







,

Monday, November 8, 2010

பூச்சிக்கடியும், கடவுளும் , சூப்பர்மேனும் - குழந்தையின் கும்மி.





























நேற்று ஆலயம் முடியும் தருவாயில், விளையாட செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்ற சின்னவர் சிறிது நேரத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு வந்தார்..

கையில் ஏதோ பூச்சி கடித்துள்ளது சருக்கு விளையாடும்போது.

சின்ன சிவப்பு வட்டமும் நடுவில் ஒரு சின்ன கரும்புள்ளியும்..

ஆனால் முள் ஏதும் இல்லை..

அந்த இடத்தை பார்த்துவிட்டு பூச்சியை தேடினால் ஒன்றுமில்லை..

உடனே வீடு வந்து மருந்து போட்டதும் மறந்துவிட்டார்..நாங்களும்..

ஞாயிறு என்பதால் கொஞ்சம் பக்கோடா செய்வதில் பிஸியானேன்..

சின்னவர் தூங்கி எழுந்ததும் வெடி போடணும் என சொல்ல அருகிலுள்ள காலி இடத்துக்கு சென்று மத்தாப்பு மட்டும் கொளுத்தி வந்தோம்..

அப்பவும் வலி இல்லை.. வாந்தி , தலை சுற்றல், உண்ண , குடிக்க மறுத்தல் ஏதுமில்லை....ஆக பயமின்றி இருந்தோம்..

இன்று காலை எழுந்து பார்த்தால் கைவிரல் மூன்று வீக்கம் பெருவிரலோடு சேர்த்து..சிவந்தும் காணப்பட்டது..

உடனே ஐஸ் பேக் போட்டோம்..

வலி பிராதானமாக இல்லையென்ப்தால் பள்ளிக்கும் தகவல் அனுப்பிவிட்டு அனுப்பி வைத்தோம்..

வந்ததுமே வீக்கம் வற்றியபாடில்லை.. உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றேன்..

போகும் வழியில் ஆரம்பித்தாரே பார்க்கலாம் , கடவுள் பற்றி கேள்விகளை..

நான் சும்மா இருக்க கூடாதா, நீ ஆலய நேரத்தில் விளையாடியதால் ஜீஸஸ் குட்டி தண்டனை கொடுத்திட்டார் போல னு விளையாட்டாய் சொல்ல ,

வந்தது வினை..

" அம்மா ஜீஸஸ், பாயா, கேர்ல் ஆ?.."

" கடவுளுக்கெல்லாம் பாய் கேர்ல் இல்லை "

" ஜீஸஸ் கு அம்மா அப்பா இருக்காங்களா?. '

" ஆமா. அம்மா பெயர் மேரி.. அப்பா ஜோசப் . மாட்டுக்கொட்டகையில் பிறந்தார்.."

" அவரையும் ஏஞ்சல்தான் கொண்டு வந்து தந்தாங்களா என்னை மாதிரி,.? அவர் எப்ப கடவுள் ஆனார்.? " ஏன்.?"

" அவர் மனிதனா பிறந்து வந்தார்.."

" எங்கிருந்து ?"

" பிதாவால் அனுப்பி வைக்கப்பட்டார்."

" பிதா எப்படி பிறந்தார்.. யார் வயற்றில்.?"

" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. போதும் கேள்வி கேட்டது.. என்னை ஒழுங்கா கார் ஓட்ட விடும்மா.. உனக்கு இப்ப புரியாது சொன்னாலும்."

" இல்ல சொல்லுங்க எனக்கு புரியும்.. முதல் கடவுள் எப்படி பிறந்தார்...அவங்க அம்மா அப்பா எப்படி பிறந்தாங்க.."

" அது பற்றி நாம யோசிக்க நமக்கு மூளை வைக்கல.."

" இல்ல எனக்கு இருக்கு .. சொல்லுங்க.."



" அய்யோ கடவுளே.. காப்பாத்துமய்யா."

" அம்மா உச்சா வருது.."

அப்பாட.. தப்பிச்சேன்.. இனி பேச்சை மாத்திடலாம்.. என மணி பார்க்க சொன்னேன்.. 4.01 .

"4.10 க்கு மருத்துவமனைக்கு சென்றிடலாம்.. கொஞ்சம் பொருத்துக்கோ...."

அப்புரம் காரை நிப்பாட்டியதும் ஓடிய வேகத்தில் நல்லவேளை மறந்துட்டார்..

மருத்துவமனைக்கு செல்வதென்றால் குஷி.. அவருக்கு பிடித்தமான ஒரு திராட்சை ஜூஸ் இங்குதான் கிடைக்கும்.. ( புளிக்கும்.. அவருக்கு இனிப்பே பிடிக்காது ) .

வீக்கம் பார்த்து உடனே ஸ்பெஷலிஸ்ட் வர வைத்தார்கள்..

பயப்படும் சிம்டம்ஸ் இல்லையென்பதால் மருந்துகள் தந்தார்.

ஏகப்பட்ட மாத்திரை மருந்துகளை அள்ளிக்கொண்டு வந்தோம்.. ( ஆண்டிபயாடிக், இன்ஃப்ளமேஷனுக்கு, அலர்ஜிக்கு, காய்ச்சல்+வலிக்கு என . நான் எப்போதும் எல்லாம் கொடுப்பதில்லை... குழந்தை உடல்நலம் பொருத்து நிப்பாட்டுவேன் ..ஆண்டிபயாட்டிக் தவிர..)

வீடு வந்ததும் யு- டியூபில் சில பைபிள் கதைகளை போட்டுவிட்டேன் வீட்டுப்பாடம் செய்து முடித்ததும்..

இருந்தாலும் அந்த கேள்விகள் பெண்டிங் இருக்கு... எனக்கு அசைன்மெண்ட் ஆக..!!!!!!!!:(

இதற்கிடையில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பொன்று வந்தது..( வாலண்டியர் பணிதான் )/ முடிந்தால் ஜனவரியில் வருவதாய் சொல்லியுள்ளேன்..

( முக்கியமா தமிழ் குழந்தைகள் )

குழந்தைகளோடு வேலை செய்வது மிக பிடித்தமான ஒன்று.. அவர்களின் கள்ளங்கபடமற்ற உலகமும் ,கேள்விகளும் , சிரிப்பும்..( ஆனா இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்ன செய்ய ?... )

முக்கியமா சொல்ல வந்த விஷயம் என்னன்னா ,

நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும்போது ஓடி விளையாடாத இடமேயில்லை.. அப்பப்ப கட்டெறும்புகள் , தேனிக்கள், குழவிகள் என கடித்ததும் , கொட்டியதுமுண்டு..

ஒரு வீட்டில் மொசுக்கட்டான் பூச்சு வந்தால் அந்த தெரு முழுதும் பரவிடும்.. ( இன்றும் அலர்ஜி அதை நினைத்தாலே )

அதிகபட்சம் சுண்ணாம்பு தடவுவார்கள்..( சாவதற்குள் சரியாயிடும் என பாட்டிமார் கிண்டல் வேறு.. சுண்ணாம்புக்கு அவங்ககிட்டதான் போய் கெஞ்சணும் .:)) .)

ஆனால் ஒருமுறை ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த குழவி ஒன்று 3 சிறுவர்களை கடித்ததில் ஒரு சிறுவன் மரணம் அடைந்துவிட்டான்..

அத்தனை விஷமாம்..

நாங்க காடு மேடெல்லாம் சுற்றிய போது கடிக்காத பூச்சு இப்ப மிக ஆரோக்கியமான இடமான ஆலயத்தில் குழந்தையை கடித்துள்ளது..

என்ன கடித்தது என்றும் தெரியவில்லை.. ( "அம்மா சூப்பர்மேன் கிட்ட சொன்னா கண்டுபிடிச்சுருவானா ?.." -" நான் சூப்பர்மேன் ஆகணும்னா என்ன செய்யணும்.?, என்ன படிக்கணும்...?" அந்த நேரமும் இந்த கேள்விதான் குழந்தைக்கு.. )


எல்லார் கிட்டேயும் , " என்னை பம்பிள் பீ ( Bumble bee ) கடிச்சிருச்சு னு சொல்லிட்டார்..

மருத்துவர் என்னிடம் பேசும்போது , நான் எனக்கு சரியா தெரியலனு சொன்னா, இவர் , " என்னை பம்பிள் பீ தான் கடிச்சிருச்சு " னு சொல்றார்..

" நீ பார்த்தியா?.எப்படி இருந்தது னு அவர் கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்க ,

" ப்ளூ கலர்ல இருந்தது...டூ விங்க்ஸ்...அப்புரம்..., அம்மா 'ப்ளூ கலருக்கு' தாய் பாஷை ல என்ன ?.."

" ஏய் குட்டி கத வுடாத..கதை இரவு வெச்சுக்கலாம் " னு சொல்லி கதையை முடித்தேன் ஒரு வழியா..

இதுபோன்ற சில விபத்துகளை தவிர்க்க முடியாதென்றாலும் , முதலுதவி தெரிந்துவைத்துக்கொள்ளணும்...

நான் பார்த்தவை இதோ உங்கள் பார்வைக்கும்...



Reactions that stay localized to the sight of the bite or sting are usually not serious.

More serious signs and symptoms of anaphylaxis, a type of life threatening reaction, can include trouble swallowing, throat and chest tightness, low blood pressure (hypotension), diaphoresis (sweating), dizziness, weakness, itching, hives, wheezing and difficulty breathing. These symptoms usually develop fairly quickly and usually within 30 minutes of being stung. You should seek immediate medical attention or activate your local emergency services if your child has these symptoms following an insect bite or sting.


http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte.htm

http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte_3.htm


What to Do About:

Bee and Wasp Stings

http://kidshealth.org/parent/firstaid_safe/emergencies/insect_bite.html


Should Your Child See a Doctor?
Insect Bites


http://www.seattlechildrens.org/medical-conditions/symptom-index/insect-bites/



------------------------------

படம் : நன்றி கூகுள்..