Friday, October 1, 2010

மதமும் மனித உறவுகளும்..1

































மதமும் மனித உறவுகளும்..


உளவியல் ரீதியாக கட்டுரை எழுதும் வரிசையில் பல விஷயங்கள் படித்தாலும் எதை எழுதுவது என்று நான் கேட்டிருந்த நேரத்தில்

நண்பரொருவர், " மதங்களும் மனித உறவுகளும் " என்ற தலைப்பில் எழுத சொன்னார்..

இது குறித்து தமிழமுதம் குழுமத்திலும் பல விவாதங்கள் நடத்தியுள்ளோம் 1000 மடல்களுக்கு மேல்..பல்வேறு மதத்தினரோடு , பார்வையோடு..

ஆக இதை எழுதுவதே ஒரு மகிழ்வான செயல்...

நன்றி அந்த நண்பருக்கு..

-------------------------------------------------------




"Doubling the rate of religious attendance raises household income by 9.1 percent, decreases welfare participation by 16 percent from baseline rates, decreases the odds of being divorced by 4 percent , and increases the odds of being married by 4.4 percent."


மதம் என்பது நான் இங்கு பொதுவாக மட்டுமே உபயோகிக்க போகும் வார்த்தை..

வாசிப்பவர்கள் அவரவருக்கு பிடித்த மதத்தை ( கவனிக்க அவரவர் மதத்தை அல்ல ) பற்றி நினைத்துக்கொள்ளலாம்.

மதம் என்பது மனிதன் உருவாக்கியது.. கடவுள் என்பது கட்டுக்கதை என்று நினைப்பவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் பல உள்ளது..

கடவுள் என்பது கட்டுக்கதை, கற்பனையா.?. இருந்துவிட்டு போகட்டுமே..

அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை .?.. தீமைகள் யாவை.?

எது அதிகம் என அலசுவோம்...

கேள்விகளை தொடுத்தால் தான் மற்றவரின் மாற்றுப்பார்வையை புரிந்துகொள்ள முடியும்..மாற்றுக்கருத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்..

கேள்விகள் கேட்காமலேயே தங்கிவிடுவதுதான் தோல்வியின் ஆரம்பம்.. எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கணும் என்ற கட்டாயமுமில்லையே.

மதம் தாண்டி அறிவியல் வளர்ச்சி அப்படித்தான் ஏற்பட்டது.. இருப்பினும் மதத்துக்கு ஏன் இந்த முன்னுரிமை தரப்படணும்.? அதைத்தான் நாம் அலச போகிறோம்.

மதம் அடுத்து சடங்குகள் , பழக்கவழக்கங்கள் என அக்காலத்துக்கு ஏற்ப பல நல்ல விஷயங்களை எழுதியும் செய்தும் வைத்துவிட்டு போனார்கள்..

சிலது எக்காலத்துக்கும் பொருந்தும்.. சிலது எல்லா மாற்றத்துக்கும் உள்ளாகும்...

அடிப்படையில் எல்லா மதமும் நல்ல விஷயங்களையே சொன்னாலும், நடைமுறைப்படுத்துவதில்தான் பல சிக்கல்கள் ..

இங்கு நாம் அறைத்த மாவையே அறைக்க வேண்டாம்.. மதத்தால் ஒரு தனிமனிதன் அடையும் உயர்வு என்ன..?

சிலர் ஏன் மதத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.. மதப்பற்று கூட மத வெறி ஆவது ஏன்.. அவர்களை எப்படி கண்டுகொள்ள?..

நாளொரும் ஏனியும் பொழுதொரு வண்ணமுமாய் கண்டுபிடிப்புகள் அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு

பயங்காட்டிக்கொண்டு மூலையில் உட்கார வைப்பதை தடுக்கணும்..அது எந்த மதம் என்றாலும்.. ஆனால் அதுவும் மென்மையான வழியில் , புரியவைத்து மட்டுமே..

கோபர்நிக்கன், டார்வின் கோட்பாடுகள் மனிதனுக்கு இயற்கையில் ஒரு முக்கிய இடத்தை அளித்திருந்தாலும் , மனிதனை மையமாகக் கொண்ட , மனித இனத்தையே இயற்கையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற ,மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற .விஷயத்தில் அதிகமின்றி , தனிப்பட்ட சுதந்திரம் உள்ளவனாய் , சிந்திக்க வல்லவனாய் படைக்கப்பட்டுள்ளான்..

அப்படியானால் எல்லாம் எனக்கே எனக்காய் படைக்கப்பட்டிருந்தால் , எது என் மகிழ்ச்சியில் குறுக்கிடுது.. ஏன் ..?

இங்குதான் மதச்சார்பற்றவரின் பார்வைக்கும் மதப்பற்றுடையவனுக்கும் உள்ள வித்யாசம் என்னென்ன உண்டு என பார்க்க போகிறோம்..

முக்கிய விஷயம் இது எல்லோருக்கும் பொருந்தும் என்பதல்ல.. அனேகருக்கு..என்கிறது ஆராய்ச்சிகள்..

ஒருவரை அவமானப்படுத்துவதில் கூட இதை காணலாம்.. ம.பற்றுடையவர் எளிதில் அவமானப்படுத்தமாட்டார். அதே நேரம் அவமானத்தை எளிதில் மன்னித்து

மறந்தும் விடுவார்..ம.சா.அற்றவரின் ஆசைகளும் கற்பனைகளும் எல்லையற்றவையாக இருப்பதினால் அவரால் தொடர்ந்து உயிர் வாழ்தல் என்பதே மிக வெறுப்பானதாகவும் கசப்புக்குறியதாகவும், திருப்தியற்ற வாழ்க்கையாகவுமே எல்லாவற்றையும் கேள்விக்குறிய ,சந்தேகத்துக்குறியதாக மாறிவிடுகிறது..

மாறாக ம.பற்றுடையவருக்கு , எதிர்பார்ப்புகள் அளவோடு இருந்தும், முதிர்ச்சியான புரிதலோடும், ஏமாற்றங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளும் தன்மையோடும் இருக்க பழக்கப்படுத்தப்படுகிறான்.


இரக்கம் , கருணை , தயவு போன்ற விஷயங்களில் ம.பற்றுடையவரின் சிந்தனை மிக உயர்வாக இருக்கும்..இத்தகைய குணநலன் பாரபட்சமின்றி அனைவருக்குமானது , என்ற நல்ல எண்ணம் இருக்கும்..

இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதே அடிப்படை மனித நேயம் என்று எண்ணுவர்.இவர்களை பொறுத்தவரை மனிதன் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்து , பாவத்தோடே வளர்ந்து அதை ஏற்கும் மனப்பக்குவம் அடைகிறான்..தவறுவது இயல்பாகிறதால் மன்னிப்பும் இயல்பாகிறது இங்கே..

மாறாக ம.சா.அற்றவருக்கோ, பிறக்கும்போது மனிதன் நல்லவனாய் பிறந்து சூழலால் கெட்டவானாய் மாறுகிறான் என்பதால் , இது அவனவன் தலையெழுத்து , அவனவன் மட்டுமே பொறுப்பு என்று எண்ணிடுவான்..ஆக இரக்கம், கருணை, தயவு , மன்னிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்..

ஆக ம.சா.அற்றவர் மனித குலத்தை இரண்டாய் பிரிக்கிறார்.

1. பாதிக்கப்பட்டவர்.

2. பாதிப்பு உண்டாக்குபவர்..

ஆனால் ம.பற்றுடையவருக்கு இத்தகைய பிரிவினை ஏதுமில்லை.. ஒன்றேதான் மனிதகுலம்..அது தவறு செய்யும் , திருந்தும் , பின் தவறு செய்யும்.. இதில் விதிவிலக்கென்ற பேச்சுக்கே இடமில்லை.. எல்லாருக்கும் இது ஏற்படும் யாரும் விசேஷமில்லை..

அதனால்தான் ம.பற்றுடையவருக்கு தன்னைப்போல் சக மனிதனை பார்க்க முடிகிறது,. நேசிக்க முடிகிறது.. ஏன் மன்னிக்கவும் முடிகிறது...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்னையே இல்லை.. நரகமா சொர்க்கமா என்றும் அதுக்கு பயந்த வாழ்க்கை என்றும் கூட அதிகமா எண்ண தேவையில்லை..

இந்த வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது..?. சக மனிதன் , நம்மை சுற்றி இருப்பவன் எல்லோருமே ஒற்றுமையாய் இருந்தால்தான் நம் மகிழ்ச்சி..

ஆக இந்த ஒற்றுமையை எப்படி கொண்டு வருவது.?

அதனாலேயே உருவாக்கப்பட்ட நீதி கதைகள்.. கட்டுப்பாடுகள்.. ஒழுக்கங்கள் என்ற விதிகள்..

எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் நீதி ஒன்றுதான்.. உன்னை போல அடுத்தவனையும் நினை..

எனக்கு கிடைத்த ஒரு நிம்மதியான , திருப்தியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணும் என்ற எண்ணத்தை நல்லதொரு மதமும் அதன் செயல்பாடுகளும் விளக்கும் விளக்கணும்..

இதில் சிலர் அரசியல் செய்தமையால் பலருக்கு வெறுப்பு ஏற்பட்டே மதங்களை வெறுக்கின்றனர்..

அது அவசியமேயில்லை..

எல்லா மதத்திலும் நல்ல விஷயங்கள் ஆராவாரமில்லாமல் அமைதியாக விளம்பரமின்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நல்வழிப்படுத்திக்கொண்டும் இருக்கின்றன..

ஆக அதை நாம் பார்க்கவேண்டும்.. நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை ஏதும் தடை செய்யவும் வேண்டாம்..

கண்டிக்கப்படவேண்டியதெல்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் மட்டுமே..

ஏனெனில் மதம் குடும்ப வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றது.. தனி மனிதனுக்கு அதிக பொறுமையை , தியாகத்தை கற்று தருகின்றது..

அதிலுள்ள இன்பத்தை சொல்லி தருகின்றது...சக மனிதனின் துன்பம் நம்மையும் பாதிக்க செய்கிறது..

ம.பற்றுடையவர் என்பதை விட ஆன்மீகவாதியால் சமூகத்துக்கு அதிக தொந்தரவு ஏற்படுவதில்லை..

ஆனால் ஆன்மீகம் பற்றி சிந்திக்காதவர் ( தன்னை பற்றி தன் பிறப்பு ஏன் என்பது பற்றியும் கூட ) எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைகொள்ளாமல், பிடிவாதமாய்

இருப்பதால் அதிகளவு தவறான நடவடிக்கையில் ஒரு வித வெறுப்பு மனப்பான்மையோடு நடந்துகொண்டு உலகையும் கெடுத்து வைப்பதாக சொல்கிறது ஆராய்ச்சிகள்..

இத்தகையவர்தான் ஆன்மீகவாதி என்ற போர்வையில் மறைந்துகொண்டும் மற்றவருக்கு தொந்தரவு தருவதும்..

ஒரு குழந்தை நல்லதொரு ஆன்மீக சூழலில் வளரும்போதே இத்தகைய நல்ல குணநலங்களை எளிதாக பெற்று வளர வைக்கப்படுவார்கள் ஆசிரியர்களால் ( அல்லது மத குருக்களால் )

நாம் ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாவிட்டாலும் வளரும் குழந்தைக்கு , புதிதாக உலகத்தை பார்த்து கேள்விகளோடு பிரமித்தும் , குழம்பியும் போயிருக்கும் குழந்தைக்கு

இத்தகைய ஆன்மீக கதைகள் , வகுப்புகள் அவர்களை நல்வழியில் வளர்க்க உதவிடும்..

உதாரணத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது தப்பு.,. அடுத்தவரை காயப்படுத்தும் என சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் எச்சூழலிலும் அதை சொல்வதை தவிர்க்கும்..

மாறாக தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை அடையும்.. அதை வைத்தே மற்றவரை மாற்றிடவும் செய்யும்...

இதை ஆன்மீகமற்றவரால் செய்ய முடியாதா என்றால் ஒருபோதும் முடியாது என்பதல்ல. அப்படியான ஒரு சூழல் உருவாக்குவது மதத்தால் செய்வது எளிது என்பதுதான்..

காதல் என்றால் கற்பனையை ஏற்றுக்கொள்ளும் நம்மால் , மனித குல மேம்பாட்டுக்காக ,ஒரு நல்ல விஷயத்துக்காக கடவுள், அதை சார்ந்த மத கதைகளை கற்பனைகளையும் ஏற்றுக்கொள்ளலாமே.?.முக்கியமா குழந்தைப்பருவத்திலாவது....

கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமாய் இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக தீங்கற்றது...வாழ்வதற்கான நம்பிக்கை தருகிறது ..


மேலும் பல்வேறு கோணத்தோடு தொடருவோம்..




படம் : நன்றி கூகுள்..




Tuesday, September 28, 2010

நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?

































புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக

Rumor travels faster, but it don't stay put as long as truth Will ரோகேர்ஸ்


//தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//


மேலே சொல்லியிருப்பற்கே ஆதாரம் கேட்டு தில் இல்லை. பாவம் இருந்தால் தானே அவரும் கொடுப்பார். ஆனால் என்னைப் பற்றி வக்கிரத்தோடு பொய்களை அள்ளி வீசுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்!

//இப்படிப் பேசியிருக்கிறார். என்ன வன்மம் & வக்கிரம் என்று பாருங்கள். ஒருவரின் புறத்தோற்றத்தைப் பார்த்துத்தான் அவருக்கு ஆதரவாக மற்றவர்கள் வருவார்கள் என்றால் உலகத்தில் யாருக்குமே ஆதரவாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பதிவர் சாந்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டா வினவும் மாதவராஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? இல்லை மதாரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர் மதாரின் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி வைத்தாரா?//

http://pithatralkal.blogspot.com/2010/09/blog-post_26.html#links


"அரவிந்த் அவ போட்டோ பார்த்து இருப்பானா "


http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html




இது எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ வார்த்தைக‌ள். நான் புனைவில் அடைந்த ம‌ன‌ க‌ஷ்ட‌த்தை விட‌ இதில் தான் அதிக‌மாக‌ உண‌ர்ந்தேன். எவ்வ‌ள‌வு கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ள். பெண்தானே என்ன‌ வேண்டுமானாலும் எழுத‌லாம் என்ற‌ ம‌னோபாவ‌ம்.




ஒரு கொலையை விட ஒரு கற்பழிப்பைவிட ஒரு குடும்பத்தையே , இனத்தையே, ஏன் சமூகத்தையே அழிக்க வல்லது இந்த ஆதாரமற்ற புரளிகள்.


ஈரம் படத்தில் புரளியால் ஒரு பெண் கொலைசெய்யப்படுவதையும் பின்னர் அப்பெண் பழிவாங்குவதையும் பார்க்கலாம்.


பொதுவெளியில் மிக துணிவாக ஆதாரமற்ற தகவலை போட்டு என்னை அசிங்கப்படுத்தியிருக்கும் இது ஒன்றே போதும் இவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க...இதை சட்டத்துறை வல்லுனர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..


இது ஒன்றே சொல்லும் முகிலன் எத்தனை பெரிய பொய்யன் என்று..முதலில் புனைவே எழுதவில்லை என பொய் சொன்னவர் , இப்ப இதை..

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பல இடங்களில் சொல்லி அதை உண்மையாக்கிடுவது..



ஒரு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பொய்கள்..



அதை நம்பி பல பின்னூட்டங்களும்...

வதந்திகள் எங்கே கொண்டு சேர்க்கும் ..

அதனால் விளையும் கெடுதல்கள் என்னென்ன?..

இவர்கள் தன் சொந்த லாபத்துக்காக யாரையும் எப்பொழுதும் காயப்படுத்தி அதில் மகிழ்ந்து வாழ்க்கையை ஓட்டக்கூடியவர்கள்.

பொய்யினால் வரப்போகும் பாதிப்புகள் பற்றி எவ்வித அக்கறையுமில்லை..

நான்கு பேர் சேர்ந்தார்போல் பின்னூட்டம் இட்டால் , ஆஹா நமக்கு ஆதரவு உள்ளது என நினைப்பது..

அந்த பின்னூட்டம் போட்டவர்களையும் ஏமாத்தி அவர்கள் அனைவரின் நேரத்தையும் செலவழித்து ஜோடனையான ஒரு புனைவையோ,புரளியோ செய்து

மகிழ்வதில் அப்படி என்ன லாபம்.?

தம்முடைய ஆளுமையை காண்பிக்க வேறு வழியே இல்லையா?..

இணையத்தில் எத்தனை எத்தனை கருத்துகள் குமிந்து கிடக்கின்றது நன்றாக வாசிக்கலாம் .. கருத்துகள் பகிரலாம்..

அதை விட்டு ஒருவரை கூட்டமாக சேர்ந்து தாக்குவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது மிக கேவலமான கண்டிக்கத்தக்க செயலும்.

நாமும் முன்னேறி நம்மோடு கூட சேர்ந்தவர்களும் முன்னேறும்படி செய்யலாமே ஆக்கபூர்வமாக.?.


எத்தனை எத்தனை கருத்தாடல்கள் செய்துள்ளேன்..எத்தனை எத்தனை விரைவான வாசிப்புகள்..

எத்தனை மாற்றுப்பார்வைகளை உள்வாங்கிக்கொண்டேன்...

எத்தனை பேருக்கு ஊக்கம் அளித்துள்ளேன் ..?


எனக்கென நான் பிளாகில் நேரம் ஒதுக்கி ஓட்டோ , பின்னூட்டமோ வாங்க எண்ணாமல் , ஒரு கூட்டு முயற்சியாக செய்திருக்கிறேன்..

பொது நல எண்ணம் வந்தால் இதுபோன்ற ஆதாரமற்ற புரளி பேசுவதும் , வக்கிர புனைவெழுதுவதும் ஒருபோதும் நடக்காது..

போட்டி இருக்கலாம்.. ஆனால் பொறாமை இருக்கக்கூடாது..


அறிவை தேடுபவர் தனியே நிற்பார்.. கூட்டம் கூட்டிக்கொண்டு அடிதடி நடத்த மாட்டார்..

இந்த பிரச்னையில் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத பலர் உதவினார்கள் என்றால் , நியாயத்தை மட்டுமே பார்க்க முடிந்தது அவர்களால்.


எல்லோரும் எல்லோரின் எழுத்தையும் பின்னூட்டத்தையும், டிவீட்டர், பஸ் , என எல்லா இடங்களிலும் கவனித்துக்கொண்டும் உள்வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்..


ஆக நாடகத்தனமான போலிகள் இங்கே எடுபடுவதில்லை...

பொய் விரைவாக உலகம் சுற்றி வந்தாலும் உண்மை அடிவாங்கிக்கொண்டாவது மெல்ல தன்னை நிலைநிறுத்தும்...


புரளி பேசுபவரை மிக எளிதாக கண்டுகொள்ளலாம்.. இதில் முக்கியமா அவர்களை அப்படி பேச சொல்லி தூண்டுபவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன்னால் செய்ய முடியாத அழிவு செயல்களை இவர்களை செய்ய வைத்து சாதித்து இன்பம் காண்பவர்.



இங்கே யாரவர்கள் என தனியாக சொல்லவேண்டியதில்லை.. அனைவருக்குமே புரியும்..

ஒரு பெண்ணாக தன்னை முன்னுறுத்திக்கொண்டு அலங்கோலத்துடன் அழுதால் எல்லாரும் ஓடி வந்து துக்கம் விசாரிப்பார்கள்தான்..

ஆனால் அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கணுமே...
மதாரை முன்வைத்து என்மீது ஏராளமான பொய்களை புனைவை விட கேவலமாக அள்ளி வீசினார்கள். நான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணை வைத்து என்னை கீழ்த்தரமாக சித்தரிக்க முயன்றார்கள். நான் சொன்னதாக பல விசயங்களை கற்பனை செய்து பரப்புகிறார்கள்.

சரி, உங்களால் முடிந்தது இதுதானே, தாராளமாக செய்யுங்கள், என்னை கேவலப்படுத்தித்தான் மகிழ்ச்சி அடைய முடியுமென்றால் மதார் தாராளமாக செய்யட்டும். ஆனால் அவரும் ஒரு பெண் என்ற முறையில் இந்த கூட்டத்தின் சதிகளை என்றாவது உணர்வார் என்று நம்புகிறேன்.


இப்படி இவர்கள் தொடர்ந்து எய்த அம்புகள் அனைத்தும் அவர்களுக்கே திரும்பிவிட்டது..


இனியாவது திருந்துவார்கள் என நம்புகிறேன்..

ஆகையால் முழுமனதோடு மன்னிப்பும் வழங்குகின்றேன்...

இந்த மன்னிப்புதான் மிக சிறந்த தண்டனை...

இந்த மன்னிப்பும் இனியும் காரணம் தேடி தம் நேரத்தை வீணாக்குவதோடு பதிவுலக்கினர் அனைவரின் நேரத்தையும் வீணாக்குவதால்...


ஆனால் இந்த பொய்யை நம்பி இவர்களுக்கு பின்னூட்டம் போட்டவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இவர்கள்.?

அவர்களின் நேரத்தை வீணடித்து அவர்களை வருத்தப்பட செய்தமைக்கு.?


ஆக்கபூர்வமாக நாம் வாசிக்கவேண்டியது எழுதவேண்டியது , கருத்துகள் பகிர எவ்வளவோ உள்ளன...

ஆரோக்கியமான போட்டிகள் உருவாகட்டும்.. இப்படி பொறாமையால் தம்மையும் அசிங்கப்படுத்தி மற்றவரையும் அசிங்கப்படுத்தி நிற்க வேண்டாம்...

வினவிடம் ஒரு பிரச்னை என சென்றால் எடுத்தோம் கவிழ்த்தொம் என அவர்கள் ஏதும் விசாரிக்காமல் போட்டுவிடுவதில்லை..

குழுமத்தில் நடந்தது என்ன என பலரிடம் விசரித்துள்ளார்கள்.. என்னைப்பற்றி என் எழுத்தை பற்றி அறிந்துள்ளார்கள்..

மிக நேரமையாக கொள்கைக்காக மட்டுமே செயல்படும் வினவு போன்றவரை விமர்சிப்பது மலையின் மீது சிறு கற்கள் எறிவதுதான்..

எறியப்பட்ட கற்கள்தான் சுக்கு நூறாக உடைந்து போகும்.. உடைந்து போனதையும் கண்டோம் இப்போது...

இப்பவும் சொல்கிறேன் எனக்கு எதிரிகள் யாருமல்ல...

ஆனால் என் எழுத்தை வைத்து என்னை எதிரியாக கருதுபவர்களை நான் ஒண்ணும் சொல்வதற்கில்லை..

எனக்கு இப்பிரச்னையில் ஆதரவளித்தவர்களை நான் முன்பே அறிந்ததில்லை..பழக்கமுமில்லை.. ஆனால் எதிராக கருத்தாடியதுண்டு..


ஆனால் அவர்களும் இப்பிரச்னையில் நியாயத்துக்காக என் பக்கம் நின்றது நியாயம் எப்போதும் வெல்லும் என்று நிரூபித்தது..

நாளையே எமக்குள் கருத்தாடலில் வித்யாசங்களும் வரலாம்..

இப்படி பலரும் எனக்காக தம் பொன்னான நேரத்தை வீணாக்கியமைக்கு மனதார வருந்துகிறேன்...

நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் முகதாட்சண்யம் பாராது ஊக்கமளிக்கலாம்.

அதைவிடுத்து நட்புக்காக துணை போனால் இதுதான் நிகழும்...என்பது பலருக்கான படிப்பினை..

நட்பை தேடாமல் , நல்ல விஷயங்களை தேடினால் நல்ல நட்புகள் தாமாகவே அமையும்..இதுவே என் அனுபவம்..

இப்பிரச்னையின் மூலம் பல மன வருத்தங்கள் வந்தாலும் , பல நல்ல மனதுகளை கண்டுகொண்டேன்.. நல்ல விஷயம் பல கற்றேன்..

எந்த மிரட்டலுக்கும் வதந்திக்கும் பயப்படாமல் துணிந்து நில்லுங்கள்.. குனியகுனியதான் குட்ட முடியும்..

நமக்கான நல்லவர்கள் பலருண்டு இங்கே..

இப்பிரச்னை குறித்து இதுவே என் கடைசி மடலாக இருக்கணும்..

இனியும் கத்துபவர்கள் கத்தட்டும்.. நாம் நம் சமூக முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்..

வினவுக்கும் அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..



----------------------

படம்: நன்றி கூகுள்.

Sunday, September 26, 2010

புரளிகளை நிரூபிக்கட்டும் வார்த்தைக்கு வார்த்தை.

தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?



--------------------



இப்படி நான் பேசியதாக என் மீது அவதூறு கூறி திரிவதோடு என்னை மீண்டும் மீண்டும் வம்பிழுக்கின்றனர்..

முடிந்தால் இந்த வார்த்தை ஒவ்வொன்றையும் நிரூபிக்க சொல்லுங்கள்..

என் மீது புரளிகள் வருவது புதிதல்ல ..இணையம் வந்ததிலிருந்து இதை சந்திக்கிறேன்.


இருப்பினும் இது போன்றவைகளை நிரூபிக்க சொல்வதே அவர்கள் நேர்மை வெளி கொண்டு வர மட்டுமே..


எனக்கு வார்த்தைக்கு வார்த்தை நிரூபணம் தேவை...


பதில் சொல்லட்டும் மதாரும் , முகிலனும்....



Saturday, September 25, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 5

































4. போதாமை , குறைபாடு, இயலாமை , ஊனம்

கவன ஈர்ப்பு, ஆளுமை, வேலை செய்யாமல் போனதால் எப்படியாவது பலம் சேர்த்து பழி வாங்கும் முயற்சியில் இறங்கினாலும்,

அதிலும் தோற்று போனதும் அவர்கள் இந்த இயலாமை நிலைமைக்கு தள்ளப்படுவர்..

தம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து முன்னேறாமல் அடுத்தவரை காயப்படுத்தி அதிலொரு இன்பம் காணுவதையே முழுநேர தொழிலாக செய்வதால் குறைபாடு

அதிகம் வளர்த்து ஒரு ஊனமான நிலைமைக்கு தம்மையே தள்ளுவர்..

செய்யவேண்டிய ஆக்கபூர்வமான காரியங்கள் எத்தனையோ இருக்க பழிவாங்குவதில் அத்தனை நேரத்தையும் செல்விட்டு அதில் தோல்வியும் அடைவதால் இனி என்னிடம் என்ன இருக்கு என்ற போதாமை

எண்ணம் வந்துவிடும்...

தம்பதியினருள் ஒருவர் தொடர்ந்து இந்த வித்தைகளை பயன்படுத்தும்போது அடுத்தவர் மிக கவனமாக முதல் நிலையிலேயே புரிந்துகொண்டு அங்கேயே பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளணும்..

சிலர் இயலாமை வரை வந்த பின்பே சரணடைவார்கள்..

அதையும் கணக்கில் கொள்ளாமல் ஊக்கப்படுத்தினால் மீண்டு வர வழிபிறக்கும்...

அராஜகமான முறையில் எப்போதும் நியாயம் கிடைப்பதில்லை என புரிந்துகொள்ளணும்..

அப்படியே கிடைத்தாலும் அது தொடர்ந்து நிலைப்பதில்லை..


நம்மை , நம் குடும்பத்தை சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள் , அவர்களுக்கு நம் மீதான நல்லெண்ணம் இருக்கிறதா இல்லை போலியான உறவுகளா என பார்த்து

விலகலோ, உறவாடுதலோ மேற்கொள்ள வேண்டும்...

நமக்கு தெரியமலே இந்த புதைகுழிக்குள் சிக்கிடும் வாய்ப்புண்டு..

ஆக நம் சூழல், நட்புகள், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன நம் குடும்ப நிம்மதிக்கும், குழந்தை வளர்ப்புக்கும்...

ஒருவரிடம் நட்பு கொள்ளும்போது முதலில் அவர் நோக்கம் நன்றாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளணும்..

அவருக்கு சமூகத்தின் மீதான பார்வை , உதவும் எண்ணம் எத்தனை உயர்வாக உள்ளது என்றும்..

சுயநலமாக இருந்து பாராட்டை பெற விரும்புபவரை விட பொதுநலத்துக்காக விமர்சனங்களை ஏற்பவராக இருப்பவர் நேர்மையானவர்.

அப்படி ஒரு கொள்கை கொண்டவரோடான நட்பு ஒருபோதும் நான் மேலே சொன்ன நான்கு வகை குணங்களை கொண்டிருக்காது...

அதாவது போலித்தனமான கவன ஈர்ப்பு , ஆளுமை , பழிவாங்குதல் இயலாமையில் தள்ளுதல் இருக்கவே இருக்காது..

மாறாக படிப்படியாக நம்மை உயர்த்துவதாய் இருக்கும்...அவர்களின் கொள்கை...

இல்லறத்தில் ஒருவர் இப்படியான குணத்தை கொண்டிருந்தாலும் கூட அக்குடும்பமே இத்தகைய குணம் கொண்டு வளரும்.. அவர் சார்ந்த சூழலும் சமூகமும்..

அப்படியும் பிடிவாதமாய் மாற்ற முடியாத ஒரு துணை அவருக்கு கிடைத்தாலும் அவர்களது விவாக ரத்தானது மிக நட்போடு பிரியும் எவ்வித கசப்பும் இல்லாமல்..

எனக்கொரு தோழி உண்டு இங்கே .. 10 வருடத்துக்கு பின் தம்பதியினர் இருவரும் நட்போடு, புரிதலோடு பிரிந்தார்கள்..

இப்பவும் மாதம் ஒருமுறை டென்னிஸ் ஒன்றாக விளையாடுவதுண்டாம்...

ஆக பிரிவும் தவறில்லை , ஒரு வித ஊக்கமான தொடர்பு நட்பாக தொடரும்போது...

அத்தகைய மன நிலைக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ளணும் என்றால், முதலில் நாம் துணை மீதான அக்கறையை வலிய சென்று அதிகப்படுத்தி

முன்னுதாரணமாய் இருக்கணும்...

திருமண வாழ்க்கையில் சில காரணங்களால் அலுப்பு தட்டலாம்.. சந்தேகம் வரலாம்.. ஆனால் அதை எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு அலட்சியம் செய்யாமல்

பிரச்னைகளை மனம் விட்டு பேசிடவும் பேச வாய்ப்புகள் தரவும் வேண்டும்...

துணை ஒருவர் கவன ஈர்ப்பு செய்ய ஆரம்பிக்கிறார், அன்புக்கு பதிலாய் ஆளுமை வருகிறது , பழிவாங்க தயாராகிறார் என்றார் மற்ற துணை உடனே அதை சரிசெய்திட வேண்டும்..

தெரிந்தோ தெரியாமலோ நாமும் காரணமாயிருக்கலாம்.. நம்மேல் நியாயம் என்றால் கூட புரிதலில் சிக்கல் இருக்கலாம் ..

ஆக நேரம் செலவழித்து புரிய வைப்பதும் நம் கடமைதான் என்னதான் அவர் மேல் நியாயம் இல்லையென்றாலும்..

ஏனெனில் இது குடும்பம் .. மற்ற உறவு நட்பு போல அல்ல..

பள்ளியில் ஒரு மாணவன்/வி இப்படி செய்தாலும் ஆசிரியர் அப்பிள்ளைக்கு தனி கவனம் செலுத்தி அவர் குறையை தீர்க்கலாம்..

நட்பு என்றாலோ , அலுவல் என்றாலோ கூட நாம் ஒதுங்கிடலாம் .. ஆனால் துணை அப்படியான விஷயமல்ல..

என்னால ஒண்ணும் முடியாது என்ற நிலைமைக்கு அவர்கள் வந்தாலும் , ( Helpless Stage ) , நாம் அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டியது ,
அவர்களால் எல்லாம் முடியும் .. என்ன பிரச்னை னா Self help less , சுயமா தம்மை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வில்லை என்பதை எடுத்து சொல்லி ,

எதிர்மறை எண்ணத்திலிருந்து விடுவித்து ஒரு முழுமையான தன்னம்பிக்கை கொண்டவராய் ஆக்கிடலாம்...இது கண்டிப்பாக முடியும்..

கொஞ்சம் பொறுமை தேவை.. முக்கியமா மூன்றாவது ஆளின் தலையீடு இல்லாமல் /குழப்பாமல் பார்த்துக்கொள்ளணும்...

இனிய இல்லறமே குழந்தை வளர்ப்புக்கு மிக அடிப்படை தேவை..

ஆக குழந்தைகளுக்காக தத்தம் ஆசைகள் , பிரச்னைகள் , சிலவற்றை தம்பதியினர் விட்டுக்கொடுப்பதில் தவறேயில்லை..


கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை.. இன்பமயமாக ஆக்கிக்கொள்வது நம் கையில்..


வாழ்க இனிமையாக...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த உளவியல் கட்டுரை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன் .. அனேகமாக அடல்ஸ் ஒன்லியாக இருக்கக்கூடும்...அல்லது பெண்ணின் தேவை என்ன ( what a women really wants ?. ) என்பதாக இருக்கலாம்...

அல்லது நீங்களே சொல்லலாம்.. எதை குறித்து எழுதலாம் என..:)

சந்திப்போம் ...நன்றி..





Friday, September 24, 2010

புர்கா போட்ட பெண்கள்.



















இந்த செவ்வாய் அன்று ஏற்கனவே எழுதியிருந்தேன் ஐடிசி க்கு சென்று அகதிகளை சந்தித்ததாக..


10 மணிக்கு வரிசையில் நின்று படிவம் நிரப்பி கொடுத்துவிட்டு அமர்ந்தால் எதிரே 2 வட இந்தியர் , ஒரு பாகிஸ்தான் பெண்மணி , 3 இஸ்லாமிய தாய் பெண்கள் ( கல்லூரி செல்லும்

பெண்களாயிருக்க கூடும்.. )

நான் சுவற்றை பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்ததால் எனக்கு பார்வையை செலுத்த வேறு வழியில்லை.. இவர்கள் 6 பேரையும் மாற்றி மாற்றி பார்த்தே ஆகவேண்டிய நிலைமை,..


அல்லது கண்ணை மூடிக்கொண்டு இருக்கணும்..

அந்த பாகிஸ்தான் பெண்மணி 6 அடி உயரம் , மெலிந்த தேகத்தோடு மிக அழகாக ஒரு மாடல் போல் இருந்தார்.. இஸ்லாமியர் என்பதன் அடையாளமாக

தலையில் துப்பட்டா மட்டுமே அனிந்திருந்தார்.. அது அவருக்கு மேலும் அழகூட்டியது என்றே சொல்லலாம்..

கால் மேல் கால் போட்டு மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார்.. ( கம்பீராமன பெண்மணிகள் எப்போதும் என்னை கவர்ந்திடுவார்கள்.:) )

கால் , கை விரல்களில் மிக பொருத்தமான நகப்பூச்சுகள்.. தன்னை அழகுபடுத்திக்கொள்ள எப்படி நேரம் செலவழிப்பார்கள் என்பது எப்போதுமே நான் வியப்பதுண்டு...

நான் செய்யாவிட்டாலும் அதை முழுமனதாய் ரசிப்பேன்.. இங்கே பார்க்கும் சில தாய் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த சம்பவமுண்டு..

கணவர் தான் " சைட் அடித்தது போதும் வா." என அழைத்து செல்லணும் அத்தனை அழகு பதுமைகள் பொருத்தமான அலங்காரத்தோடு , ஆப்பிள் கன்னங்களோடு

கன்ணை கவர்ந்ததுண்டு.. ( நல்லவேளை ஆணாய் பிறக்கவில்லை :)) ).. அதே போல திருநங்கைகளும் அத்தனை அழகு இங்கே...


அதே போல சிறுமிகளும் அவர்கள் உடுப்புகளும் தலை அலங்காரமும்..எப்போதும் ரசனைக்குறியவை..

காலில் அணியும் காலணியில் கூட பாருங்கள்.. பெண்களுக்கென்றால் அதில் கல் பதித்து , அழகான சம்க்கி , பூக்கள் கொண்டு அழகழகான வேலைப்பாடுகளுடன் .

ஒரு அலுவலில் , ஏன் காவல்துறை , நீதிமன்றம் , மருத்துவமனை போன்ற வெற்றிடமாக இருக்குமிடத்தில் கூட ஒரு பூந்தொட்டியையோ, பச்சை இலை செடிகளையோ வைத்து பாருங்கள்..

மனதுக்கு எத்தனை இதம்...

ஒரு பிரச்னையின் போது நாம் கேட்கும் மெல்லிய இசை?.. நல்ல திரைப்படம்./. கடற்கரையில் காலார நடை..?.

இப்படி ரசனைகள் நம் மனதினை மாற்றும் வல்லமை படைத்தவை..

"A THING OF BEAUTY IS JOY FOREVER " John Keats சொன்னது எத்தனை நிஜம்.?


அழகு படுத்திக்கொள்வது , அழகை ரசிப்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அதை வைத்து மட்டுமே எடைபோடுவதுதான் தவறான விஷயம்..

இப்படி இருக்க , எனக்கு மிக வேதனை தந்த விஷயம் என் முன்னால் அமர்ந்திருந்த அந்த 3 இஸ்லாமிய வாலிப பெண்கள்..

தலையில் வெள்ளை முக்காடு..

உடம்பு முழுதும் கருப்பு அங்கி போன்ற உடை..

கைகளுக்கும் , விரல்களுக்கும் கூட கருப்பு துணியால் மூடி, கால்களுக்கு சாக்ஸ் போட்டு கருப்பு ஷூ போட்டு மூடி...:(

கண்களை தவிர வேறெதுவும் காணமுடியாது..

ஏற்கனவே தாய் மக்கள் பேசுவது சத்தமே கேட்காது..ரகசியம் பேசுவது போல மிக மென்மையான சங்கீத மொழியில் பேசுவர்..

இப்ப அங்கியினுள் பேசுவது ?.

அதில் ஒரு பெண் உணவருந்த ஆரம்பித்தார்.. கை விரல் வரை இருந்த அந்த தலை முக்காடானது , அவர் சாப்பிட மிக இடைஞ்சலாக வந்து வந்து விழுது சாப்பாட்டின் மேல்..

அதை பொருட்படுத்தாது ஒரு கவளம் எடுத்து வாயில் போட மற்றொரு கையால் அந்த துணியை பிடித்துக்கொள்ள , இப்படியே ஒவ்வொரு வாய்க்கும் அவர் செய்வது பார்க்க கஷ்டமாயிருந்தது..

தண்ணீர் குடிக்கவும் அந்த பாட்டிலை துணிக்குள் எடுத்து சென்று கஷ்டப்பட்டே குடிக்கணும்..

அவர்களுக்கு அது பழகிப்போன ஒன்றுதான் இல்லையென சொல்லவில்லை..

ஆனால் இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பழக்கவழக்கத்தை வைத்து பெண்களை கஷ்டப்படுத்துவதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது..

எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய பெண் வெளிநாடு சென்று படிக்கும்போது விரும்பிய உடை , ஏன் ஜீன்ஸ் கூட அணிவார்.. விரும்பிய அணிகலனும் அப்பப்ப உள்ள பேஷன் பொருந்த்து.

ஆனால் ஊருக்கு வந்துவிட்டால் கருப்பு அங்கியில் முடங்கி விடுவார்.

எத்தனை எத்தனை ஆசைகளை விருப்பங்களை மற்றவருக்காக அவர் இருக்கும் சமூகத்துக்காக விட்டுக்கொடுக்கவேண்டியுள்ளது?..

இது போல எத்தனை பெண்கள் தம் ஆசைகளை துறந்து துறவி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளார்கள்..?

கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை .. அதில் பலதரப்பட்ட கட்டுப்பாடோடு உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்துகொண்டு ?..

இதில் திருமணம் செய்து வைத்துவிட்டு வெளிநாடு செல்வார் கணவர்.. , ஆயுசுக்கும் தொலைக்காட்சியை பார்த்து அதில் வரும் காதல் பாட்டுகளை கற்பனை செய்துகொண்டு

2 ஆண்டுக்கு ஒருமுறை கூடிக்கொண்டு , ஒரு நாடகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு...?????.. நல்லபெயர் எடுக்கவா?...

கடவுள்னு ஒருத்தர் இருப்பாரென்றால் அவருக்கு நம் மனம் புரியாதா?.. மனதளவில் நாம் சரியாக இருந்தால் போதாதா?..

இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே அப்பெண்களில் ஒருத்தி வந்து தாய் பாஷையில் அந்த படிவம் நிரப்பிட உதவி கேட்டார்..

அப்பதான் அந்த கண்களை சந்தித்தேன்.. அதிலேயே தெரியுது அவள் தாழ்ச்சி , புன்னகை...

உலகமெங்கும் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு?..

அப்படியானால் இஸ்லாமிய பெண்ணை தவிர மற்ற பெண்களை ஆண்கள் பார்க்கலாம் என்ற சமரசமா?..

இல்லை மற்ற பெண்களை பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு பேசுவார்களா?..

கண்களுக்கு கடிவாளம் போடலாம் ... மனதுக்கு... கற்பனைக்கு எப்படி போடுவது?..

யாரை ஏமாற்றுகிறோம்?.. யாருக்காக...

ஒரு இஸ்லாமிய பெண்ணை என்னை போன்ற மற்றொரு பெண் ரசித்து பார்க்க கூடாதா?..

ஒரு பாகிஸ்தான் பெண்மணி கம்பீரமாக இருப்பதாய் மகிழும் நான் , எனக்கு முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளும் நான் இப்படி புர்காவினால் எத்தனை பெண்களை இழந்துள்ளேன்.?

பாராட்டு எல்லோருக்குமே பிடிக்கும்.. புர்காவுக்குள் புழுங்கும் பெண்கள் மட்டும் விதிவிலக்காய் இருக்கணுமா?..

நடமாடும் சிறை கைதிகளாய் தோன்றினார்கள் எனக்கு...

உலகில் அடுத்து ஒரு மிகப்பெரிய மாற்றமோ, புரட்சியோ வருமென்றால் அது இந்த புர்காவிலிருந்து விடுதலையாக இருக்கணும் என்பது என் பேராசை..

நான் அணிவது என்னை நான் ரசிக்க, எனக்கு உற்சாகம் கொள்ளவே.. அதே உற்சாகம் அனைவருக்கும் கிடக்கணுமே..

நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..



வரணும்.. வரும்...


யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புகள்..

ஆனால் அதைவிட நான் அதிகம் காய்ப்படுகிறேன் ஒவ்வொரு முறை புர்காவினுள் ஒரு கைதியாக ஒரு பெண்ணை , சக மனுஷியை பார்க்கும்போது...:((




படம் : நன்றி கூகுள்..

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 4












Add Image

























மூன்றாவதாக பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..


3. பழிவாங்குதல் /வஞ்சம் தீர்த்தல்.


நான்கவனிக்கப்படவில்லை ( கவன ஈர்ப்பு வேலை செய்யவில்லை ) .. என் அதிகாரமும் பிரயோசனப்படவில்லை.. ( ஆளுமை எடுபடவில்லை ) எனும்போது கோபம் அதிகமாகி அடுத்த கட்ட நடவடிக்கையாக பழிவாங்குதல் / அல்லது வஞ்சம் தீர்த்தலில் வந்து நிற்பார்கள்..


அலுவலில் தாம் எதிர்பார்த்த புராஜெக்டில் தாம் இணைத்துக்கொள்ளப்படாவிட்டாலோ , இல்லை எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலோ இந்த நடவடிக்கை எடுக்க துணிவர்.
தம் மேல் உள்ள குறை என்ன என ஆராயாமல் , தன் ஈகோ பாதிப்படைந்துவிட்டதாய் எண்ணி பழிவாங்கினால் மட்டுமே பாடம் படிப்பிக்க முடியும் என மிக தவறான எண்ணத்தை ஆயுதமாக்கிக்கொள்வர்.


மாமியார் மருமகள் உறவிலும் எப்போதோ நடந்த பிரச்னையை மனதில் வைத்து மருமகளை தண்டிப்பது..
அதே போல மருமகளும் வயதான மாமியாரை தண்டிப்பது.. தம்பதியினர் இடையே பிரச்னைக்கு முக்கிய காரணமே ஈகோதான்..

ஆனால் தாம்பத்யம் என்ற மிக சிறந்த மருந்தானது இந்த ஈகோவை தவிடுபொடியாக்கிவிடும்..


இல்லற வாழ்வில் இருவர் மனமொத்து காமம் கொள்ளும்போது அங்கு நான் பெரியவன்/ள் நீ சின்னவன்/ள் என்பதற்கே இடமில்லை..
இருவரும் அடுத்தவரை திருப்தி படுத்துவதே முதன்மை என்ற எண்ணம் அங்கு மட்டுமே வருவதால் அங்கே ஈகோவுக்கு இடமேயில்லை..

அதனால்தான் எத்தனை பிரச்னை வந்தாலும் , சில நேரம் சண்டை போடுவதை பார்த்தால் அடுத்த நொடியே பிரிந்தால்தான் உண்டு போல என பார்ப்பவருக்கு தோன்றினாலும்,
தாம்பத்யமானது எல்லாவற்றையும் பொய்யாக்கிவிடும்..

சண்டைகள் வரலாம்.. அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்தும் கொள்ளலாம்.. ஆனால் ஒருபோதும் தாம்பத்யத்தை தள்ளி போடவோ இடைவெளி விடவோ கூடாது..


ஆனால் இதிலும் இடைவெளி வந்துவிட்டால் இந்த பழிவாங்கும் எண்ணம் அதிகரித்துக்கொண்டே செல்லும்..


ஒரு துணை அமைதியாக ஒதுங்கி சென்றாலும் அடிபட்டவர்/பாதிக்கப்பட்டவர் , அவரை சீண்டிக்கொண்டே இருப்பார்..
பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்..

" நீங்க அன்னிக்கு அப்படி செய்தீங்கல்ல.. அதுக்கு பலனா நான் இன்னிக்கு இங்கே இப்படி செய்கிறேன்.."


அவர் மறந்தே போயிருக்ககூடும் என்று என்ன செய்தார் என்று.. ?..

சரி மறந்துடு .. அத விட்டு வெளியே வா னு சொன்னா பிடிவாதமா வர மறுப்பார்கள்.


" உங்க அண்ணன்/அப்பா என்னை அவமதித்தார் ..." னு கணவனும் ,

" உங்க அம்மா என்னை கொடுமை படுத்தினாங்க . அதனால் உங்க ஊர் பக்கமே வர மாட்டேன் னு அமனைவியும் தத்தம் துணையையே பழிவாங்குவர்..


இதில் பாதிக்கப்படுவது தாமும் தம் வாரிசுகளுமே என எண்ணாமல்..
ஒரு நல்ல தம்பதி செய்ய வேண்டியது என்ன?.. நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் குழந்தைகளிடம் அவர்களை பற்றி குற்றம் குறை சொல்லாமல் கொஞ்சம் கவனமா வேணா இருக்க சொல்லிவிட்டு , உரிய மரியாதை கொடுக்க சொல்லி பழக்கணும்..

அக்குழந்தைகள் வித்யாசம் பாராட்டமல் செய்யும் மரியாதையே கூட குடும்பங்கள் மீண்டும் மனஸ்தாபம் இல்லாமல் ஒன்றுபட வழிவகுக்கும்.
அதே தான் துணைகளும்.

கணவனோடு மனஸ்தாபம் என்றாலும் அமைதியாக இருந்துகொண்டு , அப்பாவை குழந்தைகளிடம் விட்டுகொடுக்காமல் இருக்கவேண்டியது மனைவியின் கடமை.


அப்பா எத்தனை கஷ்டப்பட்டு உழைக்கிறார் என்று சண்டையிருந்தாலும் மிக நேர்மையாக ஒரு மனைவி சொல்வாரென்றால் அவர் வெற்றியை தன் பக்கம் வைத்துள்ளார்.


அதே போல மனைவி மீது சிறு மனவருத்தம் கணவர் பேசாமலேயே, குழந்தைகளிடம் , " இது அம்மாவுக்கு உதவும்னு வாங்கி வந்தேன்.. அல்லது அம்மாவை ஒய்வெடுக்க சொல். நாம் வெளியே உண்ணலாம்.. அல்லது அம்மா பேச்சை கேள் அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க " என்பாரானல் அவர் மிக நேர்மையாக பிரச்னையை சமாளிக்க தெரிந்தவர் மட்டுமல்ல முன்னுதாரணமாய் இருப்பார்.


அதைவிடுத்து மனைவியை பழிவாங்க கணவன் அடிப்பதும் , அதை மனதில் வைத்துக்கொண்டு கணவனை பழிவாங்க மனைவி தாம்பத்யத்துக்கு ஒத்துழையாமல் இருப்பதும்....பிரச்னையை அதிகரிக்கும்.
பிரச்னையை ஆரம்பித்தவர் ஈகோ பாராது இரங்கி வரணும்..

தாமொருவனின்/ளின் ஈகோ முக்கியமா இல்லை மொத்த குடும்ப முன்னேற்றம் முக்கியமா?..


கோபம் எல்லாராலும் பட முடியும் .. எல்லாரிடமும் ஒரு நியாயமும் இருக்கும்...


பிரச்னை எப்படி வருகிறது என்பதை ஆராயாமல் அந்த பிரச்னையை எப்படி தீர்த்தால் என்னென்ன விளைவுகள் /தீர்வு கிடைக்கணும் என்பதை கொஞ்சம் முன்கூட்டியே ஆராய்ந்தால் இந்த பழிவாங்கும் எண்ணம் வரவே வராது..


நேர்மையா கிடைக்கவேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லையா?..உங்க மேலதிகாரிக்கு உங்களை பிடிக்கவில்லையா?.. பொறாமையா.?
பொறாமையால் அவதிப்படாதவர் யாருமே இருக்க முடியாது... நாம் பொறாமைப்படும் அளவுக்கு நமக்கு ஆசீர்வாதம் கிடைத்திருக்கே என திருப்திகொண்டு அந்த பதவி உயர்வு ஏன் தனக்கு அளிக்கப்படவில்லை என நேரிலேயே சென்று விளக்கம் கேட்கலாம்..

பதில் எடக்கு மடக்கா இருந்தாலும் " எனக்கு உங்க பதில் திருப்தியில்லை.. மிக வருத்தம் .. இருந்தாலும் என் கடின உழைப்பு தொடரும் " என புன்சிரிப்போடு சொல்லி வர முடிந்தால் அதுதான் மிகப்பெரிய வீரம்..

அதை விடுத்து உன்னை என்ன செய்றேன் பார்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. ?.. உன்னை எப்படி , எங்கே போட்டுக்கொடுக்கணும் னு எனக்கு தெரியும் என வெறிகொண்டு பழிவாங்க பேசித்திருவது மிக மிக அல்பமான கோழைத்தனம்..


நியாபகமிருக்கட்டும் கெட்டவார்த்தையோ கெட்ட செயலோ செய்வது வீரம் அல்ல.. அதை தாங்கிக்கொண்டும் கண்டுகொள்ளாமல் முன்னேறுவதே வீரம்...


ஆக இத்தகைய வீரம் தம்பதியினருக்கு இருந்தால்தான் குடும்பம் அமைதிபெறும்..


இல்லறத்தில் தோற்றுப்போக தயாராக இருப்பவர்களே அதிக வெற்றி பெருகிறார்கள்..

அவர்களை சுற்றியே குடும்பம் வலம் வரும் சூரியனை சுற்றுவது போல..


அதிக அன்பும் , அறிவும் இருப்பவர்கள் எப்போதும் விட்டுக்கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்...

நீங்கள் எப்படி.?...:)

படம் : நன்றி கூகுள்.







Wednesday, September 22, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 3


































இந்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...


2. அதிகாரம் /ஆளுமை..- நீயா ?.. நானா.?..

எனக்கான மதிப்பும் மரியாதையும் நான் அதிகாரம் செய்தால் மட்டுமே கிடைக்கின்றது என்ற ஒரு தவறான புரிதல்..


அன்பாலேயே
ஆளுமை செய்ய முடியும்.. ஆனால் அதற்கு மிக அன்பும் பொறுமையும் தேவையாயிற்றே.. என்னால் பொறுமையால்லாம் இருக்க முடியாது..

நான் சொல்வதை உடனே இவர்கள் கேட்டாகணும்..அதற்கு ஒரே வழி அதிகாரம் செய்வது
ஆளுமையை கையில் எடுத்துக்கொள்வது.

பள்ளி என்றால் ஒரு குழந்தையின் வித்யாசமான போக்கை வைத்தே கவனிக்கலாம்..பிடிவாதம் , ஆசிரியையிடமே எதிர்த்து/மறுத்து பேசுதல் , கத்துதல் , போன்றவை.


துணை விஷயத்தில் அல்லது அலுவலகம் என்றால் , ஒரு முக்கிய விஷயம் குறித்து பேசுமுன்னரே அது தமக்கு பிடிக்கவில்லை என்றோ, தேவையில்லை என்றோ நடக்காது என்றோ எதிர்மறையாக மட்டுமே பேசுவது...

பேசுபவர் நியாயமான கருத்தை சொன்னாலும் கூட அதை மறுப்பதிலே ஒரு ஆனந்தம்..ஒரு வெற்றி..
சில நேரம் அதுவும் வேலைக்காகாவிட்டால் மிரட்டும் தோரணை ஆரம்பமாகும்..

ஏதாவது வைத்து மிரட்டல் விடுவார்கள்.. " அடிப்பேன் " ." கவைனிச்சுக்கிறேன் " போன்ற வார்த்தையோடு..அது தனக்கே ஆபத்தாக முடியும் என புரியாமல்... தன் ஆளுமையை நிரூபிக்க மட்டுமே வீண் நேர விரயம் செய்வார்கள்..

இவர்களின் தொடர் மிரட்டலால் அலுத்து போன அலுவலர்களோ துணையோ, சலிப்புடன் விலகிக்கொள்வார்கள்..
இதனால் இறுதியில் அதிக சந்தேகமும், அதிக பொறாமையும் அதனால் அதிக கோபமும் மட்டுமே விளையும்...


ஆரம்பத்தில் தன்னோடு கூட இருந்து தமக்கு ஆதரவளித்தவர்கள் தன் வீரத்தை மெச்சியவர்கள், விலக விலக , இன்னும் அதிக ஆளுமை காட்ட கூட இருந்தவர்களையே மிரட்ட ஆரம்பிப்பார்கள்..

கிட்டத்தட்ட ஒரு மனநோய் அளவுக்கு அவர்களின்
ஆளுமை பாதிக்கப்பட்டிருக்கும்..

வரம்பு மீறிய , முறைகேடான , கெட்டவார்த்தை பேச்சின் மூலமாவது அல்லது வதந்தி கிசுகிசு மூலம் கவன ஈர்ப்பு செய்து பின்பு அந்த
ஆளுமையை தக்க வைக்க போராடுவார்கள்...

அவர்களின் சுற்றமும் அப்படியே அமைவது ஆச்சர்யமல்ல..


ஆக அமைதியாக இதை எதிர்கொள்ளும் துணையோ அலுவலரோ , எத்தனை அமைதியானவரானாலும் , பண்புள்ளவரானாலும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் இவரது செயல்களை வெளிக்கொணருவார்..


தண்டனை வழங்கினால் மட்டுமே திருத்த முடியும் என ஆசிரியர்/பெற்றோர் கூட தண்டிப்பதுமுண்டு தாங்க முடியாமல்..


ஆக தாங்க முடியாத
ஆளுமை அதிகாரம் எத்தனை பொறுமைசாலியையும் கோபம் கொள்ள செய்யும்...எத்தனை தான் விலகி நின்றாலும்..

அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தாலும் ஆசிரியர் பெற்றோர் மேலுள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல் , " இந்த முறை அடங்கி போகிறேன்.. ஆனால் மீண்டும் என்
ஆளுமையை நான் காண்பித்தே தீருவேன் " என தன்னையே புரிந்துகொள்ளாமல் தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுவதுண்டு..

மற்றொரு வகையினர் உண்டு.. இவர்கள் மென்மையானவர்கள் தான்.. நியாயமானவர்களும்.. பள்ளியிலோ அலுவலகத்திலோ , வீட்டிலோ மிக பொறுமையாக , தாழ்ச்சியோடு அனுசரித்தே போகிறவர்கள்..

இவர்கள் தொடர்ந்து சிலரால் எரிச்சலூட்டப்படும்பொழுது , மட்டுமே தன் ஆளுமையை காண்பிப்பர்.. அதில் வெற்றியும் பெறுவர்..

" என்னடா இவரை ரொம்ப பண்பானவர், அமைதி னு எண்ணினோமே, இப்படி வெகுண்டெழுந்தாரே " னு ஆச்சர்யப்பட வைக்கும் அவரது செயல்கள்..


இது நேர்மறையான
ஆளுமை அல்லது அதிகாரம்.. முற்றிலும் ஏற்ககூடியதே.. உதாரணமாய் , எப்பவுமே தன் அம்மா வீட்டுக்கு போக பிரியப்படாத துணை ஒரு முக்கிய விஷயத்துக்காக போகணும் னு சொன்ன போது ஏதாகிலும் முட்டுகட்டை போட்டால் , மிக நிதானமாய் கிளம்பி ஊருக்கு பயணிப்பார்..தன் ஆளுமையை காண்பித்து..

எப்போதும் மனைவி பேச்சை கேட்கும் துணை, திடீரென மனைவி பேச்சை மீறி தன் நண்பரையோ , அல்லது பிடித்த பொழுதுபோக்கவோ செல்வது..


சமத்தா எது கொடுத்தாலும் சாப்பிடும் குழந்தை பிடிவாதமாக ஒருநாள் சாப்பிட மறுப்பது...


இது போன்ற நேரத்தில் கொஞ்சம் விட்டு பிடித்தே ஆகணும் புரிந்துகொண்டு...
அதுமட்டுமல்ல ஒருவரின் குணத்தை , போக்கினை முழுதுமாக மற்றொருவர் மாற்ற முடியாது என்பதையும் இதனால் புரிந்துகொண்டோமானால் , சகிப்புத்தனமையும் அனுசரிப்பும் வந்துவிடும்..

அதைவிட்டு ஒரளவு நியாயமாக யாருக்கும் தொந்தரவில்லாதவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் நாமும் அதிகாரத்தை கையிலெடுத்தால் அது விபரீதமாக முடியக்கூடும்...


ஆக
ஆளுமையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு... ஆனால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போதே பாதிப்புகள் அதிகம்...

இதில் சக்தி தேவையற்று வீணடிக்கப்படுகிறது..

இதுபோல் பல்வேறு நாட்டில் பல்வேறு அடிமைத்தனம் மூலம் பார்த்திருப்போம்..

பொதுவா தமிழ்நாட்டில் பெண்ணடிமை, கீழ் சாதி , பணக்காரன் ஏழை இத்யாதி...என்ற வித்யாசம் மூலமும் இதை நடைமுறைப்படுத்தியவர்கள் உண்டு..
இவை இப்ப வெகுவாக குறைந்தும் வருகிறது என்பது நல்ல விஷயம்..


அடுத்து பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..



படம் நன்றி : கூகுள்