Thursday, June 17, 2010

சிறை சந்திப்பு - தவறை உணர்தல்..-2










அந்த
பாகிஸ்தானிய இஸ்லாமியர் கூறியதை அப்படியே இங்கு பதிகிறேன்.

" நான் அடிக்கடி கார்மெண்ட் விஷயமாக பாங்காக் வழியாக ஹாங்-காங் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை செல்லும்போது என் விசா முடிவடைய நான் ஹாங்-காங் விமான நிலையத்திலிருந்து பாங்காக் டிடென்ஷன் செண்டருக்கு அனுப்பப்பட்டேன்..

அங்கு
ஒருநாள் இருந்துவிட்டு என்னை அதிகாரிகள் மீண்டும் விமான நிலையம் அனுப்பினர்..
நான் மீண்டும் பாகிஸ்தானுக்கு தான் அனுப்ப போகிறார்கள் போலும் என நிம்மதியாக இருந்தேன்..

திடீரெனெ
2 அதிகாரிகள் வந்து என் பேக்-பேக் பையை பரிசோதனையிட்டு
அதிலிருந்து சுமார் 200 கிராம் எடையுள்ள போதை மருந்தினை எடுத்தனர்..எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும்..

என்ன
நடக்கிறது என நான் புரிவதற்குள் , ஏதும் பேசாமல்
என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.. நான் ஹாங்-காங்கிலிருந்து வந்ததையும் டிடென்ஷன் செண்டரில் வைக்கப்பட்டதையும் எடுத்து சொல்லியும் யாரும் செவி மடுப்பதாயில்லை..

பிடிக்கணும்
னா பல சோதனைகளை தாண்டி வந்த போதே என்னை
பிடித்திருக்கலாமே. அல்லது நான் அப்படி போதை பொருள் கடத்தணும்னா , அதை என் லக்கேஜில் வைத்திருப்பேனேயொழிய கேரி லக்கேஜிலா வைப்பேன்..எல்லாரும் பார்க்கும்படி?..

எனக்காக
ஆஜரான அரசாங்க வக்கிலோ ஆமா, சரி என்ற இரு வார்த்தையை தவிர ஏதும்
பேசவில்லை.. எனக்கு தண்டனை குறைந்த பட்சம் 15 வருடம் என தெரியும்..

ஆனால்
இவர்களோ , ஃப்ர்ஸ்ட் டிகிரி, செகண்ட் டிகிரி, தேர்ட் டிகிரி என என்னெல்லாம் போட முடியுமோ அத்தனையையும் போட்டு 100 வருடம் தண்டனை என சொல்லிவிட்டனர்..கேட்டதும் அப்படியே பிரமை பிடித்தவனானேன்.. உலகமே இருண்டது..

கொஞ்சம்
வசதியான சூழலில் வளர்ந்து பழக்கப்பட்ட நான்
கைதிக்கான உடையணிந்து கூட்டத்தோடு அடைக்கப்பட்டேன்.. சிறைக்குள் பல விதமான குற்றவாளிகள்.. முரடர்கள்.. என பல்வேறு நாட்டினர்...

சிலர்
வெறி வந்து சண்டையிடுவதுண்டு.. அலறுவதுண்டு..மனசிதைவில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு.. இதெல்லாம் கண்டு ஆடிப்போனேன்..

நல்லவேளை
எனக்கு திருமணம் ஆகவில்லை.. ஆனாலும் என் சகோதர
சகோதிரிகளுடனும் அவர்கள் பிள்ளைகளுடனும் குடும்பமாக வாழ்ந்து வந்தேன்..குடும்பத்தின் மூத்த மகன் நான்..

இஸ்லாமிய
முறைப்படி வளர்க்கப்பட்டேன்..
என் பெற்றோர் , குடும்பத்தார் 5 முறை தொழுகை செய்பவர்கள்..நாங்கள் சொந்தமாக ஆடை தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தோம்..அடிக்கடி வெளிநாடு செல்வதால் என் பெற்றோரை அதிகமா நான் கவனிக்கவில்லையோ என்ற மனக்குறை எப்போதும் எனக்குண்டு.. ஆனால் என் தம்பியை பாராட்டணும்.

அமெரிக்காவில்
20 வருடம்
இருந்துவிட்டு பாகிஸ்தான் வந்து என் அன்னையை கவனித்துக்கொண்டார் அப்பாவின் மறைவுக்குப்பின்.. அந்த பாவம்தான் எனக்கு இத்தண்டனையை தந்திருக்கணும் என நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.. எனக்கு தண்டனை வழங்கும் காலம் பாகிஸ்தானுக்கும் தாய்லாந்துக்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லை..

ஆனால்
2 வருடம் கழித்து அந்த நல்ல விஷயமும் நடந்தது.. ட்ரீட்டி
மூலம் என் தண்டனை காலம் 30 வருடமாக குறைக்கப்பட்டது.. அதன்பின் ஒவ்வொரு வருடமும் தாய்லாந்து அரசரின் பிறந்த நாள் மன்னிப்பு என சொல்லி 15 வருடத்துக்கு தண்டனையை குறைத்தார்கள்..

இப்பதான்
கொஞ்சம்
வாழ்க்கையில், பிடிமானமும் நம்பிக்கையும் வந்தது.. பின்பு நன்னடத்தை காரணமாக என்னை இந்த வருடம் ( 11 ஆண்டுக்கு பின் ) விடுவிப்பதாக சொல்லியுள்ளனர்...காகித வேலைகள் முடிவடைந்ததும் என்னை பாகிஸ்தான் அனுப்பிடுவார்கள்..

முதலில்
என் குடும்பத்தாருக்கு கடிதம் போட்டேன்.. பதிலில்லை.. ஒருவேளை காவலர்கள்
முறையாக கடிதத்தை தரவில்லையோ என்ற எண்ணமுமுண்டு...

நல்லவேளை
எனக்கு சர்ச் மூலம் அறிமுகமானார் பிரிட்டனிலுள்ள தோழி ஒருத்தி..
அவர் திருமணமானவர்.. குழந்தைகள் இரண்டு..அற்புதமான பெண்மணி..

எனக்கு
வருடந்தோறும் 100 டாலர் அனுப்புவார்.. என்னைப்போல பலருக்கும்
அனுப்புவாராம்.. அவர் மூலம் என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டேன் பின்பு.. அதன்பின் யாரையும் தொந்தரவு படுத்த விரும்பவில்லை.. என்னால் அவர்களுக்கேதும் பிரச்னையும் வந்திடக்கூடாது..

சிறைக்குள்ளே அவர்கள் கொடுக்கும் உணவைதான் உண்ணணும்.. ஒரு கடை உண்டு.. அதில் கோக் , பெப்ஸி போன்ற பானங்கள் , பண்டங்கள் இருக்கும்.. ஆனால் விலை அதிகம்..

ஒரு கோக் வாங்க நான் ரொட்டி போட்டு விற்று தான் வாங்க முடியும்.. ஆக, கோக் குடிப்பது என்பது எமக்கு அதிகமான ஆடம்பரம்..மேற்படி தனிப்பட்ட செலவுகளை நம் காசில்தான் பார்த்துக்கொள்ளணும்..

என்னைப்போல் சொந்தம் ஏதும் இல்லாதவர்களை இப்படி உங்களைப்போல சர்ச் மூலமா வந்து பார்ப்பார்கள்.. அது எங்களுக்கு மிகுந்த உற்சாகமும் , ஆறுதலும்..

என்
தந்தையின் நிலமொன்று அரசு எடுத்தது.. ஏக்கர் கணக்கில்.. அது குறித்து கோர்ட்டில்
கேஸ் நடந்தது.. என்னாயிற்று என தெரியவில்லை.. என்னிடம்தான் பவர் ஆஃப் அட்டார்னி இருக்கிறது.. நான் சென்றுதான் குடும்பத்தார்க்கு சில விஷயங்களை செய்யணும்..

ஒருவேளை
அவர்கள் என்னை ஏற்காவிட்டால் என்ன செய்வது என நான் என் மனதை
திடப்படுத்திக்கொண்டிருக்கிறேன்..

சிறையில்
நாங்கள் 6.30 திறந்து விடப்படுவோம் ..பின்பு மதியம் 3 மணிக்கு
அடைக்கப்படுவோம்.. காலை 6.30 மணிக்கு சமையலறை சென்று நானும் சிலரும் பரோட்டா போடுவோம்.. நான் கறி பரோட்டா போடுவதில் வல்லுனர் .. இதை கவனித்த பிரிட்டன் கைதி ஒருவர், நான் விடுதலையானதும் கேமரூன் எனும் தீவில் எனக்கு ஒரு சின்ன உணவகம் அமைத்து தருவதாக சொல்லியுள்ளார்..

என்
குடும்பத்தார் என்னை நிராகரிக்கும்பட்சத்தில் அங்கு சென்று ஒரு புது வாழ்க்கையை
தொடங்கலாம் என்றுள்ளேன்..

உங்க
கூட வந்திருக்காங்களே அந்த சிங்கம் போன்ற சிங்களப்பெண்மணி, அவர்தான்
எனக்கு கேமரூன் தீவு பற்றி இணையத்தில் தகவல் எடுத்து அனுப்புவார் புத்தகம் போல.. நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..

சிறைக்குள் நூலகம் இருக்கிறது.. பல விதமான புத்தகங்கள்.. வாசிக்கவோ எழுதவோ நேரமின்று சுற்றிக்கொண்டிருந்த எனக்கு இங்கு அதுதான் முழுநேர வேலை.. அறையில் தொலைக்காட்சி உள்ளது உலக செய்திகள் அறிவேன்.. பகலில் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன்..

நான்
பாகிஸ்தானில் டென்னிஸ்
விளையாடியுள்ளேன்..மற்றவர்கள் , முக்கியமா தாய் காரர்கள் கால்பந்து ஆர்வமாய் விளையாடுவார்கள்..

தாய்லாந்து கைதிகளுக்கு மட்டுமே தையல் தொழில் கற்றுத்தந்து சம்பாதிக்கவும் வழி செய்கிறார்கள்.. வெளிநாட்டு கைதிகளுக்கு வேலை ஏதும் இல்லை.. எங்கள் குடும்பம் தையைல் தொழிலில் இருந்ததால் எனக்கு மிக ஆர்வமாய் இருக்கும் அதை காண..

இரவு எழுந்து எழுத தோணும் எழுதுவேன்..
ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென சில வார்த்தைகள் எழுத்து வடிவில் வந்து போனது..

எனக்கு அது புரியவில்லை.. ஆனால் உடனே காகிதம் எடுத்து எழுத தூண்டியது.. எழுதும்போது " நான் உன்னை மன்னித்தேன் .. எப்பவும் நேசிக்கிறேன்... " என்று என் அன்னை சொல்வது போல இருந்தது.. அதுவே எனக்கு மிகப்பெரிய விடுதலையாக இருந்தது...

இத்தனை
நடந்தும் நான் மனதளவில் துணிவா இருப்பதற்கு இறை பற்றே காரணம்.."


இவர்
பேசிக்கொண்டிருக்கும்போதெ பல கைதிகள் இவரிடம் வந்து கட்டியணைத்து
அன்பை தெரிவித்துக்கொள்கின்றனர்... விடுதலை ஆகப்போவது குறித்து ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தார் வரவேற்பை குறித்து கலக்கத்தோடு காத்திருக்கிறார்...

நான்
எடுத்து வளர்த்த குழந்தைகள்
எல்லாம் இப்ப திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறதாம்... என் சகோதர சகோதிரிகள் தாத்தா , பாட்டி ஆகிவிட்டனர் என சிரிக்கிறார்..

எல்லாம்
நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..
அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.. அதை சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்.. எமது வேலை குற்றத்தை மனதார உணர்ந்த/உணர வைக்க ஒரு மனித மனத்துக்கு மனிதாபிமானத்தோடு ஆறுதலளிப்பது மட்டுமே...

எல்லாம் நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..

அடுத்து டிடென்ஷன் செண்டரிலுள்ள கைதிகள் ( குற்றமிழைத்தவர்கள் அல்ல , விசா , பாஸ்போர்ட் இல்லாதவர்கள் ) முக்கியமா இலான்கை
அகதிகள் பற்றி பார்க்கலாம்...

(பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )

Friday, June 11, 2010

சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...


சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...

தலைநகருக்கு வெளியே கிட்டத்தட்ட 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்குது முக்கிய குற்றவாளிகளின் மிகப்பெரிய சிறை...பாங்குவாங் சிறைச்சாலை..

80 ஏக்கர் பரப்பளவில்..
சுமார் 8000 கைதிகள் இருக்கிறார்கள்.. வெளி சுவர் சுமார் 2400 மீட்டர் நீளமும் , 6 மீட்டர் உயரமும் , 1 மீட்டர் பூமிக்கடியில் ஹை வோல்டேஜ் வயர்கள் பதிக்கப்பட்டும் இருக்கிறதாம்....

இதில்தான் வெளிநாட்டவர் பலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..


ஆலயத்தின் மூலம் பலர் சமூக சேவையாக இச்சிறையிலுள்ள வெளிநாட்டவரை
சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பல காலமாக நானும் இதில் பங்கெடுக்க ஆவல் கொண்டிருந்தாலும் வேலை குடும்பம்
நிமித்தமாக அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமலே தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளேன்..

இந்த வாரம் தோழியர் இருவர் தாம் செல்லவிருப்பதாகவும் முடிந்தால் கலந்துகொள்ளுமாறும் சொல்லவே அதற்கான ஏற்பாடுகளோடு கிளம்பினோம்..

காலை 8 மணிக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு தயாரானேன்..கிட்டத்தட்ட 1
மணி நேர பயணம்.. மழை வேறு தூர ஆரம்பித்தது..தோழி ஃபார்சூனரை அதி வேகத்தில் ( 120-140 கிமீ )மோட்டார் வே யில் முன்னால் ஓட்ட, நான் அவரை பின்பற்றி ஓட்ட , சில நேரம் இடையில் புகும் வாகனங்களும் மழையும் தடுமாற செய்தது...இருப்பினும் அப்பப்போ தொலைபேசிக்கொண்டார்..புது இடம் ...புது வழி..

ஒருவழியாக 9 மணிக்கெல்லாம் அங்கு சென்று பாஸ்போர்ட் ( அல்லது ஓட்டுனர்
லைசென்ஸ் ) காண்பித்து நாம் சந்திக்கவிருக்கும் நபரின் முழு விபரங்கள் தந்து அங்குள்ள அலுவலில் சமர்ப்பித்து காத்திருந்தோம்.

தோழி ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருந்தார்.. பல நாட்டினர்..யாரை சந்திக்க விருப்பம் என
என்னை கேட்டார்.. எனக்கு என்ன தெரியும் நீங்களே யாரையாவது சொல்லுங்கள்.. என்றேன்.

சரி , ஒரு நபர், சீக்கிரம் விடுதலையாகிறார்.. பாகிஸ்தானியர்.. நன்றாக பேசுவார். என்றார்.


அவர் விபரம், அவர் தங்கியிருக்கும் அறை, கட்டிட எண், நாடு , எல்லா விபரமும்
அளித்தோம்..

தோழிகள் கடந்த 2 வருடமாக சந்தித்துள்ளதால் என்னை தயார்படுத்தினார்கள்..


நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம், எப்படி பேசுவது என்பதல்ல , எதெல்லாம்
பேசக்கூடாது, தவிர்க்கணும் என்பதை மட்டுமே..

அதற்கு அவர்கள் " நீ ஒண்ணுமே கவலைப்பட வேண்டாம்.. உன் காதுகளை, புன்னகை
படற விட்டு மட்டும் கொடுத்தால் போதும்.. அதுமட்டும்தான் அவர்களுக்கு தேவை.." என்றார்கள்..

உள்ளுக்குள் சின்ன பயம்..
நான் சந்திக்க விருக்கும் நபர் போதை மருந்து கடத்தலில் மாட்டிக்கொண்டவராம்.. எப்படி இருப்பார்.?.. என்ன பேசுவது?..

யோசித்துக்கொண்டிருக்கும்போதே 9.30 க்கு
அழைத்து அனுமதிக்கான படிவம் கொடுத்தார்கள்.. பின் ரோட்டை கடந்து எதிரிலுள்ள மிகப்பெரிய சிறைச்சாலைக்குள் வலது காலெடுத்து நுழைந்தோம்..

மிகப்பெரிய ராட்சத கதவுகள், ராட்சத பூட்டுகளோடு ..கொண்டிகளோடு.. பல காவலர்கள்
துப்பாக்கியோடு...

அருகில் புத்த பிட்சுகள் சின்ன மண்டபம் போன்ற இடத்தில் ஓதிக்கொண்டிருந்தார்கள்..
சுமார் 30 பேர்..

கையில் வேறெதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என சொன்னதால் எல்லாவற்றையும்
வண்டியிலேயே வைத்தேன்.. வாகன சாவியும் மொபைலும் மட்டும் கையில்..

அவர்கள் இருவரையும் பரிசோதித்துவிட்டு என்னை மட்டும் நிப்பாட்டினார் ஒரு பெண்..
தொலைபேசியை லாக்கரில் வைத்து விட்டு வர சொன்னார்..

மீண்டும் வெளியே சென்று
அங்குள்ள லாக்கரில் வைத்துவிட்டு வந்தேன்.

உள்ளே தாய்மக்களுக்கு என தனியாக இடமும், வெளிநாட்டவருக்கு என தனியாக இடமும் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்..

நீண்ட தாள்வாரம் . கிட்டத்தட்ட 50 தொலைபேசிகள்.. ஒவ்வொன்றிர்க்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது..

கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. பின் 3 அடி
இடவெளியில் நீண்ட தாள்வாரம்.. அதே போல அந்தப்பக்கமும் கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. இருவருக்குமான இணைப்பு தொலைபேசி வழியாக...

காத்திருந்தோம் . 10.30 வரை.. ஒவ்வொருவராக வந்தார்கள் ..

வந்தவரெல்லாருமே நம்மையும் பார்த்து சிரித்து
கையாட்டிவிட்டு சென்றார்கள்.. நம்மை தெரியாவிட்டாலும்..

மனிதர்களை பார்ப்பதே ஒரு குதூகலம் போல,...
மிக அழகாக ஆடை அணிந்திருந்தார்கள் சலவை செய்யப்பட்டு.. வாடிய முகம் ஏதுமில்லை..

முகச்சவரம் செய்யப்பட்டு தெளிவாக இருந்தார்கள்..
சினிமாவில் பார்ப்பதுபோல்.. ( நம்ம தமிழ்நாட்டு கைதிகள் தான் பாவமோ?.. இல்லை எனக்கு அவர்களைப்பற்றி தெரியவில்லையா..?)

எனது தோழியில் ஒருவர் சிங்களத்தவர், மற்றொருவர் டெல்லியை சேர்ந்தவர்,...
சிங்கள தோழி பன்னாட்டு சேவை நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்கிறாராம்... ( ரெட் க்ராஸ் மாதிரி ). ஆள் ஆஜானுபாகு தோற்றம் .. கம்பீரமான பெண்மணி,... அவர் காண வந்த நபர் சீக்கிரம் வந்துவிட சிங்களத்தில் இனிமையாக பேசத்தொடங்கினார்.. ஒட்டுக்கேட்டும் புரியவில்லை.:)

அடுத்த தோழிக்கும் ஆள் வந்துவிட்டார்.. அவர் மனைவி வெளிநாட்டிலிருந்து எழுதிய
கடிதத்தோடு தோழி வந்திருந்தார்..அதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்..அருகிலேயே..

நான் சந்திக்க வேண்டிய நபர் மட்டும் வந்த பாடில்லை.. வந்தால் மட்டும் அடையாளம்
தெரியுமா என்ன?.. செல்வோரையெல்லாம் இவராய் இருக்குமோ என பார்த்து கொண்டிருந்தேன்..

அதற்குள் அருகில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பஞ்சாபி நபர் ஒருவர், நீங்க
இந்தியரா, எனக்கு மேகசின் அனுப்பி தர இயலுமா என ஆசையோடு என் தொலைபேசி எடுத்து கிடைத்த சிறிது நேரத்தில் கேட்டார்..

தான் 16 வருடம் சிறையில் இருப்பதாகவும்
எம்பஸியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்.. நான் கேட்டுக்கொண்டேன்..

எவ்விதமான சத்தியமும் அவர்களுக்கு தந்துவிடக்கூடாது.. ஆனால் கேட்டுக்கொண்டு முயல்கிறோம் என மட்டும் சொல்லணும்..

இவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் சந்திக்க வேண்டிய நபர் வந்தார்..
வந்ததும் தோழி கண்டுகொண்டு என்னை அறிமுகம் செய்து வைத்தார்..இந்தப்பக்கம் உள்ள தொலைபேசியில்..

மிகுந்த மலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.. மிகுந்த மரியாதையோடு, வரிக்கு வரி என்
பேரை மரியாதையோடு உச்சரித்து பல வருடம் பழகிய நபரைப்போல் பேசினார்..

( அவர்கள் பெயர் இங்கே பதிய இயலாது...இஸ்லாமியர்.. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்..அடுத்த முறை பெண்கள் சிறைக்கு செல்லலாம் என இருக்கிறோம்..முக்கியமாக இலங்கை அகதிகள் இருக்கும் டிடென்ஷன் செண்டர்... )

தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.. போதை கடத்தல் என சொல்லி 100 வருட
தண்டனை கொடுத்தார்களாம் ...வெளிநாட்டவர் என்பதால்...

இங்கு போதை கடத்தல் என்றால் உடனே மரண தண்டனைதான்.. இப்படி
கொல்லப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இங்கே...


தொடரும்.................

( எனக்கு பின்னூட்டமிட நேரம் இருப்பதில்லை. அதனால் எதிர்பார்ப்பதுமில்லை.. ஆகையால் பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )

Saturday, June 5, 2010

பதிவுலக பந்து இப்ப பொதுஜனம் கையில்....





நர்சிம் , கார்க்கி செய்தது மிகப்பெரிய தவறே.. ஆனால் மனமாற மன்னிப்பு
கோரியுள்ளனர்..

அதை துச்சமென மதித்த சந்தனமுல்லை , தோற்று போக தயாராகிவிட்டார்..:(


தன் கையில் பந்து கிடைத்ததும் தாறுமாறாக விளையாட ஆரம்பித்துள்ளார் , சில கெட்டவர்களின் , கொலைகார எண்ணம் கொண்டவர்களோடு..( பின்னூட்டம் பார்த்தவருக்கு புரியும்..)

கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து ஒரு உன்னதமான காரியம் செய்திருக்கலாம்..தன்
மதிப்பை பன்மடங்கு அவர் உயர்த்தியிருக்கலாம்..

பதிவுலகமே அவருக்காக பரிதாபப்பட்டது. நர்சிம் மை எதிர்த்தது..

இப்ப நிலைமை தலைகீழாக மாறும்..


மனதார மன்னிப்பு கேட்ட நர்சிம்மை மன்னிக்க மெஜாரட்டி பதிவுலகத்தினர்
தயாராகவே உள்ளனர்..

பதிவுலகம் என்பது சந்தனமுல்லையும் வினவும் மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ளணும்..


பெண்ணியம் போற்ற மனிதநேயத்தை கீழே போட்டு மிதித்துவிட்டார்கள்..

ஒரே நாளில் பிரபலாமானவர் பிரபலத்தை தக்க வைத்துக்கொள்ள தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார்.. அவருக்கு தூபம் போடுபவர்கள் எத்தனை நாட்கள் அவரோடு இருக்காங்கன்னு புரிந்துவிடும்....:)

கண்டிப்பா மற்றோரு பெண்ணுக்கு இதே பிரச்னை வந்தாலும் வினவின் பக்கம்
தலைஎன்ன கால் வைத்து கூட படுக்க மாட்டார்கள்..

கொலைகாரன் ஒருவனுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் உலகில் கொலைகளே இல்லாமல்
செய்துவிடலாம் என்கிற இவர்களின் கண்டுபிடிப்பை என்ன சொல்ல?.. குழந்தைத்தனம் என்றா?,,.:)

பெண் என்பவள் முதலில் மனுஷி . மனிதநேயம் , தாய்மை உணர்வு கொண்டவள்..
பழிவாங்க துடிப்பவள் அல்ல..

உன் நண்பரை சொல் உன்னை சொல்கிறேன் என்பது சந்தனமுல்லை க்கு மிக பொருத்தம்..


படகு என நினைத்து முதலையின் முதுகில் பயணம் செய்ய நினைப்பதை என்ன சொல்ல..?????????


முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள்
, சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..

உங்க பழிவாங்கும் எண்ணம் என்ன முடிவை தரப்போகிறது என பொருந்திருந்து பார்ப்போம் ..


அரசியலில் கூட மன்னிப்பும் மறப்பும் அதிகமா இருக்கும்போது !!!!!!!!!!!

சந்தனமுல்லை இதுவரை வாசனை. இனி..????????

வருந்துகிறேன்... நர்சிம் ஐ / கார்க்கி யை அழைத்து நேரில் ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை அன்போடு கேட்டிருந்தாலே அவர்கள் ஒடிந்து போய் அழ வைத்திருக்க முடியும்..

அன்பால் கையாள வேண்டியதை அறிவாளால் கையாளப்போகிறீர்கள் கவனம் . உங்களை
பதம் பார்த்துவிடப்போகிறது...

பிரச்னைகளை தீர்ப்பதில் மிக தவறான வழியை தேர்ந்தெடுத்து தோற்றுபோக
தயாராகிவிட்டீர்கள்...

தமிழமுத குழுமத்தில் என்னை நேராகவே வேசி என்றும் தாய்லாந்தில் தொழில்
நடத்துபவள் , உனக்கு நல்ல மரணமே கிடையாது என்றும் சபித்தவர் பகலவன் என்ற நண்பர்.. அவரை மட்டுறுத்தி வெளியேற்ற மட்டுமே செய்தோம்.. எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..

பின்னர் அவராகவே புரிந்துகொண்டு ஒரு மாதம் கழித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்...

எல்லாரையும் திருத்த முடியாது திருத்த புறப்பட்டால் வேலைக்காவாது..

சிலர் சொன்னால் திருந்துவார். சிலர் உணர்ந்து திருந்துவார்..

மற்றொன்று எனக்கு வேசி , ஸ்த்ரீ லோகர் என்பவர்கள் கெட்டவர்கள் என்ற
எண்ணத்தையெல்லாம் தாண்டியவள் நான்..

அவர்களை சமமாகவே எண்ணுகிறேன்..


அதனால் என்னை வேசி என்பதால் நான் வேசியாகிடப்போவதுமில்லை.. தெய்வம்
என்பதால் நான் கடவுளாகப்போவதுமில்லை... :)

இங்கு தினந்தோறும் வேசி என நீங்கள் சொல்லும் தொழிலாளிகளை புன்னகையோடே
கடந்து செல்கிறேன் .. கூடவே பயணிக்கிறார்கள்.. என் குழந்தைகளிடம் ஆசையாக பேசுகிறார்கள் பொது இடங்களில்...அதே போல திருநங்கைகளும் .. வித்யாசம் ஏதுமின்றி..

நம் நாட்டு மக்கள் அப்படியான பார்வையை எப்போது விசாலப்படுத்துவோம்.?


சர்ச் மூலம் சிறைச்சாலையிலுள்ளவர்களையும் பாலியல் தொழிலாளிகளையும்
சந்திக்கிறோம்..மனிதர்களாகவே பார்க்க முடியுதே தவிர குற்றவாளிகளாய் அல்ல... அவர்கள் மாட்டிக்கொண்டவர்கள்/ உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள் அவ்வளவே...

நாட்டில் நல்ல மனிதராய் வேடமிடுபவர்களிடம்தான் கவனமாய் இருக்கவேண்டிய
காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்...

மன்னிப்பு கேட்டபின்னும் பழிவாங்க துடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்..
அதில் வீரமோ விவேகமோ இல்லை..காயங்களும் வலிகளும் மட்டுமே மிஞ்சும்...

தண்டனைகள் மட்டுமே மனிதர்களை திருத்துமென்றால் உலகமே ஊனமாயிருக்கும்..


புரட்சி என்றாலே வெறுப்பாயுள்ளது..:(


இத்தனைக்கும் நான் சந்தனமுல்லையின் பப்புவை பற்றிய பதிவுகளை ஆசையாக படிப்பேன். நானும் ஒரு குழந்தைப்பையித்தியம் என்பதால்..

நர்சிம் கார்க்கி எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள்..


-------- தொடரும்.... தொடரலாம் கண்ணியமாக மட்டுமே....பிரச்னைக்குரிய பதில்கள் பிரசுரிக்கப்படமாட்டாது...

Friday, May 21, 2010

முன்னாள் காதல்..சிறுகதை







மீரா
: ஹேய் ரகு ஆன்லைன்லயா இருக்க?.


ரகு : யெப் வாட்ஸ் த மேட்டர்...?

மீரா
: ஹேய் ஆன்லைன்ல பேசி எவ்ளோ நாளாச்சு..


ரகு
.: ம் . சோ ஹவ் ஆர் யூ..


மீரா
..: ஃபைன் டா. நீ?


ரகு
..: ம் வெரி ஃபைன்..


மீரா
: ம். பட் நாட் ஃபைன் டூ..:(


ரகு
.: அட இப்பத்தான் ஃபைன் னு சொன்ன..?


மீரா.: ம். ஆமாடா அவரால் ரொம்ப பிராப்ளம் டா..


ரகு
.: என்னாச்சு.?


மீரா.: நீ லாம் எவ்ளோ ஜாலி டைப்.. அவர் எப்பவும் மூடி டைப்தான்..


ரகு
.: ம்.


மீரா
.: ஒரு டிரெஸிங் சென்ஸ் இல்ல , வெளில கூட்டிட்டு போணும்னு அக்கறையில்ல..


ரகு
.: ம்.


மீரா
.: காலைல எழுந்தா ஒரே டென்ஷன்.. என் சாக்ஸ் எங்க வெச்ச டை காணோம் , ஃபைல்
எங்கன்னு.

ரகு
.: ம்.


மீரா
.: ஆனா ராத்திரி சாரி சொல்லிடுவார்..


ரகு
.: ஹாஹா.


மீரா
.: என்ன சிரிப்பு .. நான் சீரியஸா பேசிட்டிருக்கேன் டா..


ரகு
.: ம். சரி சரி சொல்லு..


மீரா
..: நீ லாம் எவ்ளோ அழகா டிரெஸ் பண்ணுவ.. இன் ஃபேக்ட் உன் டிரெஸிங் சென்ஸுல
மயங்கினவ தான் நான்...

ரகு
.: கம்பேர் பண்ணகூடாது மீரா.. டோண்ட் திங் அபவ்ட் பாஸ்ட்..


( அதற்குள் ரகுவின் காரியதரசி வடநாட்டு ரேஷ்மா வந்து அழைக்கவும் ,

" ரேஷ்மா , பிலீஸ் டூ எ
ஃபேவர் பார் மி.. ஜஸ்ட் பிரஸ் திஸ் லெட்டெர்

" எம் ".. ஐல் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்..திஸ்
இஸ் மை எக்ஸ் கேர்ல்பிரண்ட்..எ வெரி பொஸசிவ் கேர்ல் " . ஹோப் யு டோண்ட் நோ டமில்..ஹ?..:) ..

ரேஷ்மா
சிரித்துக்கொண்டே " சுயர்.." )


மீரா
.: என்னோட அப்பா அம்மாவுக்கு ஒண்ணுன்னா நீ எப்டி ஓடி வருவ.? ஆனா அவரோட அப்பா
அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போலாம்னு சொன்னா கூட " நீயே ஆட்டோ புடிச்சு போயிடேன் " னு சொல்றார்.. ஹவ் ரூட்..

ரகு
.: ம்.


மீரா
.: காலையில அலுவல் போகும்போது ஒரு ஹக் , ஒரு கிஸ், ஒரு ஐ லவ் யூ.. ம்ஹூம்.. சோ
அப்செட் டா.

ரகு
.: ம்.


மீரா
.: எங்கேயாவது விசேஷம்னா கூட நான் நிதானமா சேலை கட்டி நகை போட்டு சடை பின்னி
பூ வைத்தால் , " இதுக்கு இவ்ளோ நேரமா..? சிம்பிளா சுடிதார் இல்லையா "னு கேட்டு வெறுப்பேத்துறார்.

ரகு.: ம்.

மீரா.: நான் சேலை கட்டினா அன்னிக்கு பூரா என்னை ரசிச்சுட்டே இருப்பியேடா நீ.. அதுக்கு
மேட்சா ஜ்வெல்லரி வாங்க என்னை அழைச்சுட்டு போவ..ஐ மிஸ் ஆல் தட் டா.

ரகு
.: ம்.


மீரா.: உங்க வீட்டுக்கு என்னை அழைச்சுட்டு போனப்ப நான் என்ன கலர்ல புடவை கட்டியிருந்தேன்
?. சொல்லு பாப்போம்.?..

ரகு
.: ம்.


மீரா
.:ம் சொல்லு..


ரகு
.: ம்.


மீரா
.: யோசிக்கிறியா?.


ரகு
.: ம்.


மீரா.: டேய் என்ன நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கேன் சும்மா " ம். , " ம்" னு சொல்ற..
கோபப்படுத்தாதே ..

ரகு
.: ம்.


( அதற்குள் ரகு வந்துவிட , )


ரகு
.: அயோ சாரிமா.. ஸ்கை ப்ளூ கலர்தானே..


மீரா
.: அதான பார்த்தேன்.. உங்க வீட்டுல எல்லாருக்கும் என்னை பிடிச்சு போய் " ஏய் என்ன
சொக்குப்பொடி போட்ட " னு நீயே கேட்குமளவுக்கு எனக்கு ஆதரவு எல்லாரும் உங்க வீட்டில். இங்க என்னடான்னா தலைகீழ் .." பாவம் என் மகன் ஓடா உழைக்கிறான்"...னு அத்தையும், " எப்படி இருந்த என் தம்பி இப்படி ஆயிட்டான் னு அவர் அக்காவும் ..:((.. அழுகையா வருது டா.

ரகு.: ஹேய் அதெல்லாம் அவங்க ஒரு அக்கறையில சொல்வாங்க அதெல்லாம் சீரியஸா எடுக்காத..

மீரா
..: ஆமா நீயும் ஒரு ஆண்தானே.. உனக்கு எப்படி பெண்களை அவங்க மனதை புரியும்..?


ரகு
.: சாரி . அப்படி சொல்லல..சரி கோச்சுக்காத..


மீரா
,.: என்னமோ டா.. இப்படித்தான் இருக்கும்னா கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்..


ரகு
.: இப்ப என்ன டிவோர்ஸ் பண்ணிடலாமா..?


மீரா
.: அட சே.. நீயும் உன் ஐடியாவும்..


ரகு
.: இல்ல தற்காலிகமா கணவன் என்ற பதவியை டிவோர்ஸ் பண்ணிடலாமா னு சொல்றேன்..


மீரா
.: என்ன சொல்ற .. சும்மாவே நான் குழல்விளக்கு..ஏதாச்சும் இடக்கு மடக்கா சொன்ன
கொன்னுபுடுவேன் கொன்னு..

ரகு
.: அம்மா தாயே உன் கோபம் எனக்கும் நல்லா தெரியும்.. நான் சொல்ல வந்தது இன்னும் ஒரு
வருடம் கணவன் என்ற பதவியிலிருந்து விலகி காதலனாகப்போகிறேன் மீண்டும்..ஆமா டா நான் ஸ்டேட்ஸ் கு போகணும்னு இப்பத்தான் என் பாஸ் சொன்னார்.. சோ. நாம இனிமே போன்லயே காதலிக்க போறோம்.. வருட முடிவில் உன்னை அமெரிக்கா அழைத்து நம்ம இரண்டாவது ஹனிமூன் செரியா..?

மீரா..: ரகு நிஜம்ம்ம்ம்ம்மாவா சொல்ற..சந்தோஷமா இருக்குடா.. ஆமா ஏண்டா நீ மாறிப்போன கல்யாணத்துக்கப்புரம்..?

ரகு
.: அதுதாண்டா ரியல் லைஃப்.. நான் உன்னை கடிந்துகொள்வதோ திட்டுவதோ அன்பில்லைன்னு
ஆயிடாது மா.. ரொம்ப உரிமை எடுத்துகிட்டேன் போல.. இப்ப உன்னோட உள்ள குமறலை சொல்லிட்டல்ல. ஐ வில் டிரை டு சேன்ஞ்..சரி எனக்கு பிடித்த டின்னர் செய்து வை..

மீரா
.: பாத்தியா மீண்டும்..கணவராகிறியே.. என் காதலனாகவே இருடா..


ரகு
.: சரி சரி.. உனக்கு பிடித்ததே பண்ணும்மா என் ராட்சசி... குட்பை..


Thursday, May 20, 2010

பற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..








அமைதியான
, ஜாலியான எப்போதும் புன்முறுவலுடனேயே காணப்படும் தாய்லாந்து மக்கள்
முகங்களில் வழிந்தோடுது சோகம்..

ஆளுங்கட்சியினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் கடந்த 45 நாள் போராட்டம் ராணுவ தலையீடால் நேற்று முடிவுக்கு வந்தது..

செஞ்சட்டை தலைவர் ஒருவரின் அகால
மரணத்துக்குபின் போராட்டம் தீவீரமடைந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தார்கள்..

பொதுஜனத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி சட்ட திட்டத்துக்குட்பட்டே போராட்டம் நடத்தினார்கள்.. கிட்டத்தட்ட அஹிம்சை வழியில்..

இருப்பினும் பிரதமர் கண்டுகொள்ளாததினால் லிட்டர் கணக்கில் அனைவரின் ரத்தம் சேகரித்து பார்லிமெண்ட் வளாகத்தில் ஓடவிட்டனர்..அப்படியாவது இரக்கம் வரட்டும் என..

அதுவும் எடுபடவில்லை.. பின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான வேர்ல்ட் டிரேட் செண்டர்
அருகில் கூடாரத்தை அமைத்தனர்..

அவர்களின் முக்கிய கோரிக்கையான பாரளுமன்றத்தை கலைத்து புது தேர்தல் நடத்துவது குறித்த
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..( பேச்சுவார்த்தை நடக்கும்போது பார்த்தால் இருபக்கமும் கககுலுக்கி மிக தோழமையுடனே நடந்தது ஆச்சர்யப்பட வைத்தது.. )

பின் பிரதமர் ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற்ற அவசர கால சட்டம் போட்டார்..
போராளிகள் இடத்தை காலி செய்ய கெடு மேல் கெடு விதித்தார்.. பலமுறை இக்கெடு பயனளிக்கமல் போனதற்கு ராணுவத்திலும் காவல்துறையிலுமே செஞ்சட்டைக்காரர்களின் உறவுகள் இருந்தது முக்கிய காரணி..

இதில் செஞ்சட்டை தலைவரின் அகால மரணத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.. எங்கள்
அனைவரையும் ( சுமார் 6000 பேர் ) சுட்டாலும் நகரமாட்டோம் என பிடிவாதமாய் அமர்ந்திருந்தனர்..

ஆனால் வர்த்தகமும் டூரிஸ்மும் அதிக பாதிப்படைந்ததால் வேறு வழியின்றி ராணுவ தாக்குதல்
நேற்று அறிவித்தபடி நடந்தது..

இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ( வெளிநாட்டு பத்திர்க்கையாளர்கள் உட்பட) பலியாகியும்
1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் , போராட்ட இடங்களுக்கு அடிப்படை வசதிகள் நிப்பாட்டப்பட்டதாலும் வேறுவழியின்றி ஒருவழியாக செஞ்சட்டை தலைவர்கள் நால்வர் சரணடைந்தனர்..

அவர்களை சரணடைய செய்த கோபத்திலும் , வருத்தத்திலும் நகரத்தில் ஆங்காங்கே முக்கிய
கட்டடங்களீல் தீ வைத்துவிட்டனர்..

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வேர்ல்ட் டிரேட்
செண்டர் என புகழ்பெற்ற புதிய அழகான கட்டடம் தீக்கிறையானது..
நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது...

வீதியெங்கும் அவசரகால சட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்டது..


சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப புத்த மதத்தை தழுவி அதன் நெறியோடு
வாழ்ந்து வரும் மக்கள் இப்போராட்டங்களை கண்டு அலுப்படைந்துள்ளனர்..

( என் அண்டை வீட்டு தாய் பெண் கேத்ரீனா, ஐஸ்வர்யாராய் போன்ற அழகுடையவர்.. நேற்று
முழுதும் அழுது சிவந்த முகத்தை பார்க்கவே சகிக்கலை.. அப்பப்ப வந்து என் குழந்தை உங்க வீட்டிலேயே இருப்பதால் சிரமமேதுமில்லையே னு கேட்டுக்கொண்டார்..ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை..கைகளைப்பற்றி தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது.. குழந்தைக்கு தாய்லாந்து உணவு ( சூப்) செய்து கொடுத்தால் மிக மரியாதையாக அருந்தியது குழந்தை..சூழ்நிலை புரிந்து.. அதே போல் என் வேலையாளும் பலரும் செஞ்சட்டைக்கு ஆதரவு..அவர்களின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது..)

போராட்டக்காரர்களின் மீது ராணுவ ஆக்ரமிப்பு , துப்பாக்கி சூடு , கட்டாய வெளியேற்றம்,
வெற்றியல்ல என்பது செஞ்சட்டைக்காரர்களின் எண்ணம்..

பேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டிய பிரச்னை அழிவில் வந்து முடிந்தது..

இருப்பினும் மற்றொரு நாட்டின் உள்விவகாரம் எந்தளவு உள்ளது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.. நாம் பார்வையாளர் மட்டுமே.. எந்த பெரிய விபத்து நடந்தாலும் சிறிதும் கோபமோ , எரிச்சலோ காண்பிக்காது புன்னகையோடே வந்து கைகுலுக்கி விபத்து பற்றி பேசி அல்லது உடனே மன்னிப்பு கோரி நம்மை ஆச்சர்யப்படுத்தும் இம்மக்களுக்கா இந்த நிலை என்று நினைக்க தோணுது..

புத்த பிட்சுகள் காலில் செருப்பின்றி பிச்சை பாத்திரம் ஏந்தி வர அவர்களுக்கு பொருள்கள்
வழங்கும் மக்கள் பொது இடத்திலேயே உடனே முட்டிக்கால் போட்டு வணங்கி தம் கைகளில் பொருள்களை நீட்ட பிட்சுகள் எடுத்துக்கொள்வார்கள்.. தானம் வழங்கும்போதும் வழங்கும் கைகள் தாழ்ந்து இருக்கணும் என்ற கோட்பாட்டை இன்னமும் பின்பற்றி வருவதை பார்க்க அதிசயமாயிருக்கும்..

புத்த பிட்சுகள் நம்மை பார்க்க கூட மாட்டார்கள்.. ஒரே ஒரு காவி சீலை.. பிச்சை பாத்திரம்..
செருப்பில்லாத கால்கள்..அரசருக்கு மேல் மரியாதை செய்யப்படுபவர்கள் தேசத்தில் இப்படியும் ஒரு போர்க்களமான நிலை..

பிரச்னைகள் யாரை எந்த நாட்டை , மதத்தை விட்டது..? பிரச்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாய் பிரதமர் இன்று அறிவித்தார்...


படங்கள் நன்றி..: http://www.nationmultimedia.com/


Saturday, May 15, 2010

பள்ளிக்கு போமாட்டேன்..












பள்ளிக்கு
போமாட்டேன்..

" அம்மா, குஷி இன்னிக்கு வாட்டர் பாட்டிலை எடுத்து வெச்சிட்டா."

" நீங்கல்லாம் டேர்டி ( அசைவம் ) சாப்பிடுறீங்கன்னு சொல்றா குஷி.. "

" என் கலர் பென்சிலை எடுத்து லெட் ஒடிச்சிட்டு குடுக்குறா.."

" என்னைய குண்டு பச்சா ன்னு சொல்லிட்டா.."

இப்படி தினமும் புலம்பல்.. நாளையிலிருந்து பள்ளிக்கு செல்லமாட்டேன் னு அழுகையும்..

இதற்கு காரணமான குஷி குஷ்பு மாதிரி ஒரு அழகிய ராட்சச குட்டி சுட்டிப்பெண்..எங்கள் அடுக்ககத்திலேயே குடியிருந்தாலும், இப்பதான் இருவரும் ஒரே பள்ளிக்கு ஒரு மாதமாய் செல்கிறார்கள்..(இவனை வேறு பெரிய பள்ளியில் சேர்க்க இப்பள்ளி சிறப்பு பயிற்சிக்கு மட்டும்..)

குஷியின் சேட்டை தாங்காமல் வேன் டிரைவர் அவளை தனியா வைத்தாலும் அங்கிருந்தே ஏதாவது பேசி அழ வைக்கிறாளாம் எல்லா குழந்தைகளையும்..

இவனை விட ஒரு வகுப்பு மூத்தவள்..

இரட்டை குதிரை வாலோடு துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பாள்..

அவளை பார்த்து கொஞ்சம் அனுசரித்து போக சொல்லலாம்னு கீழே போனால் ,

" ஹாய் " னு நமக்கே வணக்கம் சொல்கிறாள்.. மனசு வருமா?.. அதுவும் பெண்குழந்தையை பார்த்து..?. கொஞ்சணும்னுதான் தோணுது..:)

நானும் , " ஹாய் குஷி.. எப்படி இருக்கே..? " னு ஒரு பேச்சுக்கு கேட்டதும் , சின்னவருக்கு கோபமாய் வருது..

" அம்மா யு ஆர் சோ பேட்... நீங்க குஷிக்கு சப்போர்ட் பண்றீங்க.?".

" இல்ல கண்ணே. கொஞ்சம் பொறு.. மெதுவா பேசணும் அவகிட்ட...குழந்தைதானே.."

எப்படியோ சொல்லியாச்சு..

ஆனா அம்மா மேல் நம்பிக்கை போச்சு..:(

படித்துக்கொண்டிருந்த அண்ணா கிட்ட போய் , " அண்ணா மா , ( தேவைக்கு மட்டும் அண்ணா மா னு ஐஸ்.... ) இந்த குஷி ரொம்ப டிஸ்டர்ப் பண்றா.."

" ஒஹ். அப்படியா.. டோண்ட் ஒர்ரி.. அவளை புடிச்சு ரேபிட் கூண்டுக்குள்ள போட்ரலாம்.."

" ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.." னு ஒரே சிரிப்பு..

அவளை பிடிப்பதாகவும் பிடித்து அடைப்பதாகவும் கற்பனை பண்ணி பண்ணி ஒரே சிரிப்பு அடக்க மாட்டாமல்..

" ஏண்டா இப்படிலாம் சொல்ற ?. " னு நான் கண்டிச்சா , விடுங்கம்மா ஒரு டெம்பரரி சொல்யூஷன்.. இப்ப பாருங்க நிம்மதியா பள்ளி செல்வான்..

" ஆமா , அவளை எப்படிண்ணா தூக்கிட்டு வருவது?.."

" ( மனதுள் - ஆரம்பிச்சுட்டான்யா ) . அத நான் பாத்துக்குறேன்.. நீ சமத்தா தூங்கு..."

இப்படியே தினம் தினம் குஷியால் குஷி இழந்து போனார்..

இன்று பள்ளி விழாவுக்காக நடன பிராக்டிஸ் செய்ய அழைத்தார்கள்.. பாங்காக்கில் பிரச்னை என்பதால் பள்ளி வேன் வரவில்லை.. சரி என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்..

எல்லா குழந்தையும் ஒழுங்கா ஆடியது 3 இடியட்ஸ் பாட்டுக்கு..இவனை தவிர.. ( நான் இருப்பதால் வெட்கமாம்.. நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு ).

ஆமா அது யாரு சின்னவர் பக்கத்தில் ரொம்ப மகிழ்ச்சியா ஆடுவது...?

அட, அதே குஷிதான்...

ஹாஹா..

இவருக்கு அவள்தான் பார்ட்னர்.. அதான் ஐயா இம்புட்டு வெட்கப்பட்டாரா..?

இவன் அவள் கையை பிடிக்க மாட்டேன் னு சொல்ல அவளோ அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க எனக்கு ஒரே சிரிப்பு.. ஆனா சிரிக்க முடியாதே.. இன்னிக்கு பூரா கோபப்படுவாரே ன்னு அடக்குவதற்குள்.. :)))

" அம்மா பள்ளியை மாத்த போறீங்களா இல்லையா?.. "

" அடுத்த 2 மாதம் கழித்து வேறு பெரிய பள்ளிக்கு போறார்.. சரி அதை காண்பித்திடுவோம்னு சொல்லி அங்கு அழைத்து செல்ல வேண்டியதாயிற்று..

பெரியவர் கதை வேற மாதிரி .. அது அடுத்த பதிவில்...

--------------------------------------------------------------

இதற்கு பின்னூட்டம் போட நேரம் செலவழிக்காமல் அந்நேரத்துக்கு வேறு உபயோகமான பதிவை படிங்கப்பூ..