skip to main |
skip to sidebar




பள்ளிக்கு போமாட்டேன்.." அம்மா, குஷி இன்னிக்கு வாட்டர் பாட்டிலை எடுத்து வெச்சிட்டா."" நீங்கல்லாம் டேர்டி ( அசைவம் ) சாப்பிடுறீங்கன்னு சொல்றா குஷி.. "" என் கலர் பென்சிலை எடுத்து லெட் ஒடிச்சிட்டு குடுக்குறா.."" என்னைய குண்டு பச்சா ன்னு சொல்லிட்டா.."இப்படி தினமும் புலம்பல்.. நாளையிலிருந்து பள்ளிக்கு செல்லமாட்டேன் னு அழுகையும்..இதற்கு காரணமான குஷி குஷ்பு மாதிரி ஒரு அழகிய ராட்சச குட்டி சுட்டிப்பெண்..எங்கள் அடுக்ககத்திலேயே குடியிருந்தாலும், இப்பதான் இருவரும் ஒரே பள்ளிக்கு ஒரு மாதமாய் செல்கிறார்கள்..(இவனை வேறு பெரிய பள்ளியில் சேர்க்க இப்பள்ளி சிறப்பு பயிற்சிக்கு மட்டும்..)குஷியின் சேட்டை தாங்காமல் வேன் டிரைவர் அவளை தனியா வைத்தாலும் அங்கிருந்தே ஏதாவது பேசி அழ வைக்கிறாளாம் எல்லா குழந்தைகளையும்..இவனை விட ஒரு வகுப்பு மூத்தவள்..இரட்டை குதிரை வாலோடு துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பாள்..அவளை பார்த்து கொஞ்சம் அனுசரித்து போக சொல்லலாம்னு கீழே போனால் ," ஹாய் " னு நமக்கே வணக்கம் சொல்கிறாள்.. மனசு வருமா?.. அதுவும் பெண்குழந்தையை பார்த்து..?. கொஞ்சணும்னுதான் தோணுது..:)நானும் , " ஹாய் குஷி.. எப்படி இருக்கே..? " னு ஒரு பேச்சுக்கு கேட்டதும் , சின்னவருக்கு கோபமாய் வருது.." அம்மா யு ஆர் சோ பேட்... நீங்க குஷிக்கு சப்போர்ட் பண்றீங்க.?"." இல்ல கண்ணே. கொஞ்சம் பொறு.. மெதுவா பேசணும் அவகிட்ட...குழந்தைதானே.."எப்படியோ சொல்லியாச்சு..ஆனா அம்மா மேல் நம்பிக்கை போச்சு..:(படித்துக்கொண்டிருந்த அண்ணா கிட்ட போய் , " அண்ணா மா , ( தேவைக்கு மட்டும் அண்ணா மா னு ஐஸ்.... ) இந்த குஷி ரொம்ப டிஸ்டர்ப் பண்றா.."" ஒஹ். அப்படியா.. டோண்ட் ஒர்ரி.. அவளை புடிச்சு ரேபிட் கூண்டுக்குள்ள போட்ரலாம்.."" ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.." னு ஒரே சிரிப்பு..அவளை பிடிப்பதாகவும் பிடித்து அடைப்பதாகவும் கற்பனை பண்ணி பண்ணி ஒரே சிரிப்பு அடக்க மாட்டாமல்.." ஏண்டா இப்படிலாம் சொல்ற ?. " னு நான் கண்டிச்சா , விடுங்கம்மா ஒரு டெம்பரரி சொல்யூஷன்.. இப்ப பாருங்க நிம்மதியா பள்ளி செல்வான்.." ஆமா , அவளை எப்படிண்ணா தூக்கிட்டு வருவது?.."" ( மனதுள் - ஆரம்பிச்சுட்டான்யா ) . அத நான் பாத்துக்குறேன்.. நீ சமத்தா தூங்கு..."இப்படியே தினம் தினம் குஷியால் குஷி இழந்து போனார்..இன்று பள்ளி விழாவுக்காக நடன பிராக்டிஸ் செய்ய அழைத்தார்கள்.. பாங்காக்கில் பிரச்னை என்பதால் பள்ளி வேன் வரவில்லை.. சரி என நானே அழைத்துக்கொண்டு சென்றேன்..எல்லா குழந்தையும் ஒழுங்கா ஆடியது 3 இடியட்ஸ் பாட்டுக்கு..இவனை தவிர.. ( நான் இருப்பதால் வெட்கமாம்.. நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு ).ஆமா அது யாரு சின்னவர் பக்கத்தில் ரொம்ப மகிழ்ச்சியா ஆடுவது...?அட, அதே குஷிதான்...ஹாஹா..இவருக்கு அவள்தான் பார்ட்னர்.. அதான் ஐயா இம்புட்டு வெட்கப்பட்டாரா..?இவன் அவள் கையை பிடிக்க மாட்டேன் னு சொல்ல அவளோ அவன் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க எனக்கு ஒரே சிரிப்பு.. ஆனா சிரிக்க முடியாதே.. இன்னிக்கு பூரா கோபப்படுவாரே ன்னு அடக்குவதற்குள்.. :)))" அம்மா பள்ளியை மாத்த போறீங்களா இல்லையா?.. "" அடுத்த 2 மாதம் கழித்து வேறு பெரிய பள்ளிக்கு போறார்.. சரி அதை காண்பித்திடுவோம்னு சொல்லி அங்கு அழைத்து செல்ல வேண்டியதாயிற்று..பெரியவர் கதை வேற மாதிரி .. அது அடுத்த பதிவில்...--------------------------------------------------------------இதற்கு பின்னூட்டம் போட நேரம் செலவழிக்காமல் அந்நேரத்துக்கு வேறு உபயோகமான பதிவை படிங்கப்பூ..
மூளையில்லையா டா உனக்கு.. ?.." ப்ளைட் எத்தனை மணிக்குடா?..மதன் "" காலையில 8 மணிக்கு தான்க்கா.. பொண்ணு பார்க்கிறேன் .. புஜ்ஜு குட்டி டான்ஸ் அட்டெண்ட்பண்றேன் சாயங்காலம் .. உடனே அடுத்த பிளைட் புடிச்சு வந்தாகணும் .. "" ஏண்டா எப்ப பாத்தாலும் காலுல வெந்நீர் ஊத்திகிட்டு..நீ ஆசப்பட்ட மாதிரியே அழகு படிப்பு,இளமை எல்லாம் நிறஞ்ச பொண்ணுடா..21 வயசுதான் ஆகுது..அவ அக்கா , உன் அத்தான்கூடதான்வேலை செய்யுறா.. ரொம்ப தெறமைசாலியாம்..அனேகமா அவதான் வருவா ஏர்போர்ட்டுக்கு..அப்படியே நீ பொண்ணு பார்க்க வந்துடு அத்தான் கூட .."" எப்படியோ அக்கா. நம்ம சொந்த ஊருல நீ ஆசப்பட்ட மாதிரியே, வேதமெல்லாம் ஓதி சொந்தபதங்களையெல்லாம் அழைத்து கொண்டாடணும்..என்னோட வெளிநாட்டு நண்பர்களுக்கெல்லாம்நம்ம கலாச்சாரம் புரியிற மாதிரி விமர்சையா நடத்திடுவோம்...சந்தோஷம்தானே?.."" பொண்ணு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா.."" உனக்கே பிடிச்சாச்சா..அப்ப எனக்கும் பிடிக்கும்னு சொல்ற..?"---------------------------------------------------------------------------------------" ஐயம் சாரி.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேனா?..பிளைட் லேட்.."" நோ..நோ. நோ பிராப்ளம்..அக்சுவலா ரொம்ப நாளா படிக்கணும்னு நெனச்சுட்டிருந்த புத்தகத்தைபடிச்சு முடிச்சுட்டேன்..ஐ ஷுட் தேங் யூ ஃபார் தட்.." 40 வயதான நந்தினி, அட்டகாசமானபுடவையில் மிக நேர்த்தியான மேக்கப்புடன் வீடு சேரும்வரை கலகலப்போடு பேசி வந்தாள் உலகவிஷயம் அனைத்தையும்..நீண்ட விமானப்பயண அலுப்பையும் மறந்து ஆச்சர்யத்தில் சிரிக்க கூட மறந்து கேட்டான் மதன்..இடையில் வந்த தொலைபேசி அழைப்புகளையெல்லாம் மிக நாசூக்காக பேசி சமாளிப்பதையும்,அவளின் நகைச்சுவை கலந்த பேச்சையும் ரசித்தவன், பெண்ணும் இப்படி இருப்பாள் என கற்பனைசெய்ய ஆரம்பித்தான்...பெண் பார்க்கும் படலம் நிறைவாய் நடந்தது.. பெண் ப்ரியா அமைதியாய் அடக்கமாய் வந்துவிட்டுபோனாள்.. தான் நினைத்த கனவுக்கன்னிக்கும் மேலாகவே இருந்தாள் அழகில்.. நந்தினியை விடஅதிக அழகாயும்..நந்தினிதான் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தாள்..-----------------------------------------------------------------------------------வீடு வந்ததுமே அக்கா ," என்ன நான் சொன்னேன்ல .. பொண்ணு ஒக்கே தானே?.."" ம்.."" என்னடா.?.. சம்மதம்தானே..?. புடிச்சுருக்கா.?""ம். புடிச்சுருக்கு.."" என்னது இவன் மந்திரிச்ச கோழி மாதிரி இருக்கான்..?..என்னங்க நீங்க கேளுங்க.."" என்னடா அப்ப அவங்க கிட்ட தேதி குறிக்க சொல்லிரலாமா?..""ம்."" என்னடா என்ன கேட்டாலும் தலைய மட்டும் ஆட்டுற.. மயக்கத்துல இருக்கியா என்ன?.."" ம்."" அட .. என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.. வாய தொறந்து சொல்லுடா.. அவங்க பொண்ண கட்டிக்க சம்மதம்தானே?..""ம். .ஆமா. ஆனா பிரியாவ இல்ல.. நந்தினிய.."" பைத்தியாமா மூளையில்லாயா டா உனக்கு.?. உன்ன விட 8 வயது மூத்தவ.. விதவை.."" நந்தினிய பார்த்து பேசுற வரைக்கும் எனக்கு அப்படி ஏதும் எண்ணமில்லைக்கா.. ஆனா அவளை மாதிரி ஒரு பொண்ணோடு வாழ்க்கைன்னா அது பெரிய அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்..அவள் உடம்புக்கு வேணா வயசாயிருக்கலாம்.. அவ மனதுக்கு வயது 20 தான்.. அறிவுக்கோ 60 வயது..கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அப்படி ஒரு பெண்ணோடு வாழணும்னு முடிவு பண்ணிட்டேன் கா.."" நம்ம சொந்தம்லாம் " முடிப்பதற்குள் தடுத்தான் மதன்.." யார பற்றியும் எனக்கு கவலையில்லை அக்கா.. எந்த சம்பிராதயமும் வேணாம்,...நந்தினியோட சம்மதம் மட்டும் முடிந்தா வாங்கித்தா...இல்லாட்டி நான் பேசுறேன் நந்தினி கிட்ட....ப்ரியா மாதிரி இளமையான பொண்ணு என்னோட பசிகளை வேணா நிரப்பலாம்.. ஆனா நந்தினி மாதிரி பொண்ணுங்க கூட வாழ்வதே ஒரு உற்சாகம்..நந்தினி தவிர வேறு யாரையும் இனி நெனச்சு கூட பார்க்க முடியாது.."திறந்த வாயை மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அக்கா..



சொந்தக்காரரின் பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை ஒனிடாவுக்கு மட்டுமில்லீங்க,செல்லப்பிராணி வளர்த்தாலும்தான்.பக்கத்து வீட்டு சிறுவன் மிக பெருமையாக இரண்டு வெள்ளெலிகளை தூக்கி வந்து எம் அனைவர்மடியிலும் விளையாடி மகிழ்ந்தான். போதாதா?.. பழைய நியாபங்களை குழந்தைகள் மனதில்கிளறிவிட்டது..சிறுவன் சென்றதுமே நச்சரிப்புகள் தொடங்கிவிட்டது.." அம்மா , பிளீஸ் , ஒரு முயல் வாங்கித்தாங்களேன்.."" அம்மா, எனக்கும்." சின்னவர்.." இருக்கிற வேலை போதாதா இன்னும் அது வேறயா?.. "" இல்லம்மா, எல்லாத்தையும் நானே பாத்துப்பேன்.."" அதுக்கு கூண்டு வாங்குவது பெரிய செலவாச்சே..கூட முயலும் அதிக விலைதானே?.."" என்ன வேலைனாலும் சொல்லுங்க செய்யுறேன்.. பாக்கெட் மணி தாங்க அதை சேர்த்து வெச்சுமுயல் வாங்கிடலாம்.."" என்ன வேலைனாலும் செய்வியா?.."" சரிம்மா.."" சரி மொதல்ல அடுப்படியில் பாத்திரம் கழுவணும்.."" ங்ஏ..........ஏஏஏஏஏஏஏஏஏ........ வேற ஏதும் வேலை இல்லையா மா.. இந்த வாஷிங் மெஷின் லபோடுற மாதிரி.?.."" இல்லை.."சரி என அனைத்து பாத்திரத்தையும் கழுவி முடித்தார்...அப்பாவுக்கு பிடிக்கவில்லை மகன் வேலைசெய்வது...ஏன் ஆண் குழந்தைகள் வேலை செய்ய கூடாதா என ஒரு கருத்தாடல் மேகம் சூழ்ந்ததுஆனால் மழை பெய்யவில்லை.. ஏனெனில் பையனே மிக ஆர்வமாய் வேலையில் இறங்கியதால்..வேலை முடிந்து மகிழ்வோடு பணம் பெற்றார்..அடுத்த நாள் என்ன வேலை செய்யட்டும் என அதிக ஆர்வமாய்.." சரி இன்னிக்கு சப்பாத்தி போடுறியா?.. "" சரிமா. ஹ அதென்ன பெரிய வேலையா..? .. பாருங்க ஐந்தே நிமிஷத்தில் போட்டு தருகிறேன்.."மாவு பிசைவதிலிருந்து உருண்டை பிடித்து தேய்ப்பது வரை பாடம் எடுத்தேன்..தேய்த்து தட்டில்அடுக்கினார்.என்ன ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவத்தில் அமைந்தது..சரிபரவாயில்லை..வெட்டிக்கொள்ளலாம் னு சொல்லியதும் திருப்தி..கடாய் காய்ந்ததும் ஒவ்வொண்ணாக எடுத்து போட முயன்றால் எல்லாம் ஒட்டிக்கொண்டு வரவேமாட்டேன் னு பிடிவாதம்..கடைசியில் அத்தனையையும் சுருட்டி மொத்தமாக பந்தாக்கினேன்.. மீண்டும் நானே தேய்த்துகாண்பித்தேன் விரைவாக.." அட இவ்வளவு கஷ்டமா மா, சப்பாத்தி தேய்க்க..?." னு ஒத்துக்கொண்டார் ஒருவழியாக..:)அடுத்து வீடு கூட்டுவது.. என்னவோ ஜன்னலை தூசு தட்டுவது போல நினைத்துக்கொண்டார்.அவர் தூக்க தூக்க தூசி எஸ்கேப் ஆகுது.." இந்த வேக்கூம் கிளினர் எங்கேயிருக்கும்மா..?"" ஹ. அதெல்லாம் வேலைக்காரிக்கு கொடுத்தாச்சு எப்பவோ.. கொஞ்சம் குனிந்து வேலைசெய்தால் எளிதாயிருக்கும் முயன்று பாரேன்.."" அய்யோ . வேற வேலை தாங்க.. "" சரி வெங்காயம் வெட்டுறியா..?"" ஹ அது ரொம்ப ஈஸி.. அதோடு இன்னிய பாக்கெட் மணி வரும்தானே?."" கண்டிப்பா... ஆனா 3 பெரிய வெங்காயத்தையும் உரித்து நறுக்கணும்.."கண்ணில் கண்ணீரோடு வெங்காயத்தை வெட்டி முடித்து வந்தார் , பரிதாபமாக..சரி இதுக்கு மேலும் கொடுமை படுத்தக்கூடாது என 4 முயல் கடைக்கு அழைத்து சென்றுஎல்லாவற்றையும் எல்லா கலரிலும் பார்த்து கடைசியாக வெள்ளை வெளேரென்ற சிவப்புகண்கள் , ரோஸ் நிற காதுகள் கொண்ட முயல் வாங்குவதாய் முடிவெடுக்கப்பட்டது..காசு கொடுக்கும்போது ," அம்மா, அது தனியா இருந்தா போரடிக்கும்.,.. அதுக்கு துணையா இன்னொண்ணு பிளீஸ்மா.."கெஞ்சல்.." மொதல்ல இதை ஒழுங்கா பராமரிக்கின்றாயா னு பார்க்கலாம்.. ஒரு மாதம் கழித்து அடுத்து.."அரை மனதோடு அடுத்து கூண்டு வாங்க சென்றால் முயலை விட 3 மடங்க்மு கூண்டும் ,உபகரணங்களும்..( அதுக்கெல்லாம் பாக்கெட் மணி பத்தலைன்னாலும் கண்டிப்பா வேலை செய்துபணம் கொடுப்பதாய் சொல்லிட்டார்..)வீட்டுக்கு வந்ததும் கேரட்டையும் கீரைகளையும் கழுவு கழுவு னு கழுவி, வெட்டிப்போட்டு, அதைமெதுவாக தொடுவதெப்படி என வகுப்பெடுத்தார் அனைவருக்கும்.. பவ்யமாககேட்டுக்கொண்டோம்.. சிறுவனுக்கு வாய் ஓரமா லேசா சிரிப்பு.. " ஹ நீ ஸ்கூலுக்கு போனதும்நாந்தானே தூக்க போறேன்." னு நினைத்தாரோ என்னவோ..கை இரண்டும் குறுகுறுன்னு எப்படாதூக்கலாம்னு.. பெரியவர் விட்டாதானே?..தரை வழுக்கியதால் முயல்குட்டியால் நடக்க முடியவில்லை.." அம்மா, கார்பெட் விரிக்கலாமா?.."" விட்டா பஞ்சு மெத்தை போடுவாய் போல.. அது பழ்கிக்கும்.." இப்ப அது ஓடுது..தரையில்..துள்ளிதுள்ளி..இண்டெர்நட்டில் முயல் பற்றிய விபரம் அனைத்தையும் விடிய விடிய படித்து காலங்காத்தாலயேஎமக்கு பாடம் ..:(முயல் எப்படி மலம் கழிக்கும் என்றும் அதில் எத்தனை வகை என்றும்..முயல் மகிழ்வாக இருக்கின்றதா என அறிவது எப்படி ..?முயலை காது பிடித்து தூக்கணும்னு நான் வேற சொல்லிட்டேன்.அது மிக தவறுன்னு அதற்குண்டான கட்டுரைகளை அனுப்பி என் மெயில் பாக்ஸை நிரப்பிட்டார்...வேணுமா எனக்கு.?..இப்படி ஒரு ரிசர்ச் க்கு உண்டான அனைத்து தகவல்களும் அத்துப்படி.. இப்படி படிப்பில் இந்தஆர்வத்தை காண்பிக்கப்டாதா?.. நம் தொண்டை கத்துவதாவது மிச்சமாகுமே..:(முயலுகுக்கு விளையாட பெரிய பெரிய தெர்மாகோல் பெட்டிகளை வெட்டி நீள குகை போலசெய்து பல வாசல்கள் வைத்து அதை விளையாட செய்தால் அதுவும் மிக சுவாரஸ்யமாகஒருவழியாய் நுழைந்து மறுவழியாய் துள்ளி ஓடி வந்து மீண்டும் மீண்டும் விளையாடுது..பள்ளி புராஜக்ட் னா நாம உதவணும்.. முயலுக்குன்னா நாம தூங்கின பிறகு இண்டெர்நட்லவாசிச்சே இவரா செய்வாராம்...எப்படியோ முயலார் வந்ததில் பையன் கொஞ்சம் வீட்டு வேலை செய்ய கத்துக்கிட்டார்..காலியில் எழுப்ப இனி நான் சுப்ரபாதம் பாடவேண்டியதில்லை.. முயல் தண்ணி பத்தல போல னுபோற வாக்கில் சொல்லிட்டா போதும்.. அடித்து பிடித்து பெட்ஷீட் போர்வையோட முயல் முன் 5மணிக்கே ஆஜர்..மூன்று காலில்..முயலுக்கு மூணு காலோ இல்லையோ , இப்ப வீட்டில் எல்லோருக்கும் மூணு கால் அதுசோபாவின் பின்னால் ஒளிந்துகொண்டால் தேட..இப்ப பள்ளிக்கு போயாச்சு இருவரும்.. நானும் முயலும் வீட்டில்..அது வேற ஆர்டர்போட்டிருக்கார்.. " அம்மா சும்மா இருக்கும்போது முயலை தோட்டத்துக்கு அழைத்துசெல்லுங்கள்.." என.." ஆமாப்பா , அடுத்து ஜிம், நீச்சல் குள்ம், டென்னிஸ், இதுக்கும் அழைத்து போக சொல்லுவியே.."எனக்கும் முயல் வளர்க்கும் ஆசை சின்ன வயதிலிருந்தே உண்டு.. நாய்கள் மட்டுமே இருந்ததுவீட்டில் அப்போது..எப்படியோ என் ஆசையும் ஒருவழியா தீர்ந்தது.. இந்த விஷயம் பசங்களுக்குதெரியாது..:)முயல் பின்னங்காலில் நின்றுகொண்டு, முன்னங்காலால் விளையாடுவது பார்க்க நன்றாகத்தான்இருக்கின்றது...பக்கத்து வீட்டு சிறுவன் வெள்ளெலியை கொண்டு வந்து கூண்டினில் விட அதைமுயல் கொஞ்சுவதை பார்ப்பது இன்னும் அழகு..செல்லப்பிராணி வளர்ப்பு மனதுக்கு குதூகலம்தான், சிறுவர்/சிறுமியர் இருக்கும் வீட்டில்..