Saturday, August 28, 2010

உதவியே உபத்திரமாய் மாறியதுண்டா?..அனுபவங்கள்




























We must accept finite disappointment, but we must never lose infinite hope. - Martin Luther King, Jr.


அப்பதான்
இரண்டாவது குழந்தை பிறந்து 4 மாதம்..


பெரியவனும்
அவன் நண்பனும் பள்ளி முடிந்ததும் வேகமாய் வந்து குழந்தையை போட்டி போட்டு கொஞ்சுவார்கள்.


பெரியவன்
4 ம் வகுப்பும் அவன் நண்பன் 5ம் வகுப்பும்..


அவன்
நண்பனோ ஒரே பிள்ளை.. ஆக அவனுக்கு குழந்தைன்னா ரொம்ப இஷ்டம் . தினம் வந்திடுவான்..


அப்ப்டி
ஒருநாள் பள்ளி முடிந்ததும் நண்பன் என் மகனிடம் , "வா கடைக்கு சென்று மிட்டாய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம்" னு சொல்ல
என் மகனோ,

" அம்மா தேடுவாங்க.. திட்டுவாங்க "


" பக்கத்தில்தானே. லாபியில் பையை வைத்துவிட்டு , ஓடி போய் வாங்கி வருவோம்."


மறுக்க
முடியாமல் சென்றுள்ளான் இவனும்.
அங்கே சென்றதும் நண்பன் ஒரு பிஸ்கட் எடுத்து கால்சட்டைக்குள் போட்டானாம்.

அதை
கையும் களவுமாய் கடைக்காரன் பிடித்துவிட்டான்.
கூட சென்ற என் மகனையும் பிடித்து வைத்துவிட்டு எனக்கும் அவன் வீட்டுக்கும் தகவல் வந்தது.

அங்கே
சென்றதும், " உங்க பையன் ஒன்றும் செய்யலை. அவன் நண்பந்தான் பிடிபட்டான் " என்றார்கள்.
"நீங்கள் உங்க குழந்தையை அழைத்து செல்லலாம் ..அந்த பையன் எங்க முதலாளி வரும்வரை இருக்கணும்.."

யார் செய்தா என்ன?.. இருவருமே என் குழந்தைகள் போலத்தானே .. வித்யாசம் ஏதுமில்லையே என் மனதில்.. மென்மையா அந்த பையனிடம் விசாரித்தேன்.. " நான் எடுத்தது உண்மைதான். ஆனால் விளையாட்டுக்குத்தான் அப்படி செய்தேன் " என அழுதான்.

அதைப்பார்த்து
அன்னையும் அழ, எனக்கு மிகவும் பரிதாபமாக போய்விட்டது.
ஒரு பிஸ்கட் வாங்க முடியாத நிலைமையில் இங்கு யாருமே இல்லை என சொல்லலாம்.

சொல்லப்போனால்
அந்த பிஸ்கட் எல்லாம் குழந்தைகள் உண்ண கட்டாயப்படுத்தணும்..
அப்படி சாக்லேட் , பிஸ்கெட் என வெறுக்குமளவுக்கு அவரவர் வீட்டில் இருக்கும்.

ஆனா
சிறு குழந்தைகளுக்கு திருட்டும் ஒரு விளையாட்டு..
அதிலுள்ள சீரியஸ்நெஸ் , பாதிப்பு புரிவதில்லை.

அதற்குள்ளே
அந்த பையனின் தகப்பனார் எனக்கு போன் செய்து .
" என் மனைவிக்கு தாய் பாஷை தெரியாது.. தயவுசெய்து உதவிடுங்கள் " என்றார்.

" இதிலென்ன இருக்கு.. கண்டிப்பா இருப்பேன். கவலைப்படாதீங்க " னு சொல்லிட்டு காத்திருந்தோம்.

இதனிடையில்
வீட்டில் 4 மாத குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த வேலையாள் வீடு திரும்பும் வேளை.
அவள் டையப்பர் போடாமல் குழந்தையை கீழே என்கிட்ட வந்து கொடுத்துவிட்டு சென்றாள்.

அந்தக்கடையின் உள்ளே வைத்தே அழுத குழந்தைக்கு பாலும் கொடுத்தேன்..

ஏனெனில்
அந்த பையனின் அம்மா ஒரே அழுகை பயத்தில்..தன் பிள்ளையை கைது செய்வார்களோ என..
" அட அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது.. னு நான் தைரியம் சொல்லிக்கொண்டேயிருந்தேன்..

(இதற்கிடையில் நம் தமிழ்ப்பெண் ஒருத்தி கூட இருந்து இத்தனையையும் கவனித்துக்கொண்டே இருந்தாள். அப்பப்ப தொலைபேசி மூலம் மற்றவர்களுக்கும் கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டும் இருந்துள்ளாள். அதை பின்பு சொல்கிறேன். )

பின்பு
காவலர் வந்தனர்..
அழும் பையனை ஒருவர் அணைத்துக்கொண்டார் , சிரித்துக்கொண்டே..

காவலர்
மட்டுமல்ல இங்கு அனைவருமே குழந்தைகள் மேல் பாசம் கொண்டவர்கள்..
குழந்தைகளை கொண்டாடும் நாடு இது..

அதற்குள்
அந்த பையனின் தகப்பன் வந்துவிட்டார்..
வந்ததும் எனக்கு நன்றி சொல்வார் என பார்த்தால் , யார் யாருக்கோ போன் போட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்துக்கொண்டிருந்தார்.

கடைசியில்
35 பாட் ( தாய்லாந்து பணம் ) பிஸ்கட்டுக்கு 4000 பாட் பைன் கட்ட முடிவானது..
அந்த நேரம் பார்த்து என் கணவரும் வர, அந்த பையனின் அப்பா , என் கணவரிடம், " நாம் இருவரும் சேர்ந்து இந்த தொகையை கட்டிவிடுவோம்" என சொல்ல.

ஏதும்
கேட்காமல் என் கணவரும் 2000 பாட் கொடுத்துவிட ,
எனக்கோ அதிக கோபம்.. " ஏன் கொடுத்தீங்க " னு நான் கேட்க , " பிரச்னையை வளர்க்க கூடாது . விட்டுத்தள்ளு .. " னு எளிதா சொல்ல..

" என்ன சொல்றீங்க நீங்க.. பணம் பெரிதல்ல.. ஆனா நம்ம பையன் செய்த குற்றம் போல ஆனதே.. அதைவிட அந்த மனிதர் நான் இத்தனை நேரம் அவர் மனைவிக்கு துணையாக நின்றதுக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை.. " என நடந்ததனைத்தையும் விளக்கினேன் கணவருக்கு..

அப்பதான்
தவறு செய்ததை உணர்ந்தார்.
உடனே போன் போட்டார் அவருக்கு.. அவர் மனைவி எடுத்ததும் என்னை பேச சொன்னார். " நான் நினைத்திருந்தால் என் மகனை உடனே அழைத்து வந்திருக்க முடியுமே.. உங்க பையனையும் என் மகனாய் நினைத்ததனால் மட்டுமே அங்கே நின்றேன், பச்சக்குழந்தையை வைத்துக்கொண்டு..தயவுசெய்து இனி யாரையும் இப்படி புண்படுத்திவிடாதீர்கள் "

உடனே
அவர் அழுதார்.. தான் செய்தது தவறுதான் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கணவர் போன் பிடுங்கி ,
" நீங்க கடைக்காரரிடம் என் மகனுக்கு ஆதரவாய் பேசியதால்தான் பைன் கட்ட வேண்டிய சூழல்.. " னு அப்படியே என் மேல் பழியை போட்டார்.

உடனே
என் கணவர் போன் வாங்கி " என் மனைவிக்கு தேவையா .? நீங்க ஏன் உங்க மனைவிக்கு தாய் தெரியாது உதவுங்கன்னு கெஞ்சினீங்க.?
அதெல்லாம் தெரியாமல் எப்படி என்னிடம் 2000 பாட் கேட்டீர்கள் ?." என விளக்கம் கேட்டதும்,

இறுதியில்
மன்னிப்பு கேட்டுக்கொண்டு , அந்த 2000 பாட் உடனே அனுப்பி வைப்பதாகவும் தயவுசெய்து அடுக்ககத்தில் யாரிடமும் தன்
மகன் திருடி மாட்டிக்கொண்டதை சொல்லிவிடாதீர்கள் எனவும் கெஞ்சினார்..

உடனே நான் அவர் மனைவியிடம் போன் கொடுக்க சொல்லி , " இப்பவும் உங்க பையன் என் மகன் போலத்தான். அவன் மேல் எந்த தப்பும் பெரிதாய் எனக்கு தெரியலை.. குழந்தை அவன்.. ஆனா பெரியவங்க நீங்க செய்தது என்னால் மன்னித்தாலும் மறக்க முடியாது..தயவுசெய்து உங்க பாவப்பட்ட பணத்தை அனுப்பிடாதீங்க.. அதை கோவில் உண்டியலில் போட்டிடுங்க . அபிஷேக் எப்பவும் போல் என் வீட்டுக்கு வரலாம் " னு சொல்லி வைத்தேன்..

இத்தோடு முடிந்ததா?. அந்த தமிழ்ப்பெண் அடுக்ககத்தில் உள்ள எல்லாரிடமும் என் பையன் திருடி மாட்டி, நாங்க பைன் கட்டிய விபரத்தை சொல்லியுள்ளார்.

என்
மனது கஷ்டப்படும் னு யாரும் கேட்கலை.
ஆனால் இந்த தமிழ்ப்பெண் காலை கணவன் அலுவலகம் சென்றதும் வீடு வீடாய் சென்று ஒவ்வோரு வீட்டின் கதையையும் கேட்டு அடுத்த வீட்டுக்கு பறிமாறுவதே வேலை..

இப்படியே இங்குள்ள அனைவரையும் அழகாக பிரித்துவிட்டு அவள் மட்டும் எல்லோர் வீட்டுக்கும் நல்லவளாய் இருந்துள்ளாள். நான் வேலைக்கு செல்வதால் எனக்கு இது பற்றி ஏதும் தெரியாமல் இருந்தேன்.பல மாதம்.

நான் யார் வீட்டுக்கும் செல்வதில்லை.. என் வீட்டுக்கு கதை பேச என இதுவரை யாரும் வந்ததில்லை..15 வருடத்தில்..

அப்பவும்
அந்த தமிழ்ப்பெண் மாசமாய் இருக்கிறாள் என்று சில பலகாரமும் பழங்களும் வாங்கிக்கொண்டு பார்க்க சென்றேன்.
அப்ப அவள் இல்லாததால் பக்கத்து வீட்டு தமிழ் பெண்ணிடம் கொடுத்து கொடுக்க சொன்னபோது , அவர்கள் மெதுவாக விசாரித்தார்கள்...மகன் திருட்டு பற்றி..

அதிர்ச்சியானேன்.. அப்படியே அழகான ஒரு கதை.. சரி வாயும் வயிறுமாய் இருக்கிறாள் என விட்டுவிட்டேன். அப்புரம் மெதுவா ஒவ்வொருத்தரிடமா விசாரிக்கும்போது எல்லோரிடமும் என் மகனைப்பற்றி பொய் சொல்லியிருந்தாள்

எல்லோர் வீட்டு கதையும் முக்கியமா பிள்ளைகள் பற்றி சொன்னதும் எல்லோருக்கும் வருத்தம்,.

அதற்குள்
பிரசவத்துக்கு ஊருக்கும் சென்றுவிட்டாள்..
ஒருநாள் கட்டாயத்தின்பேரில் அவள் வீட்டுக்கு சென்று அவள் கணவனிடம் இது பற்றி மென்மையாக எடுத்து சொன்னோம். நல்ல மனிதர்.. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாய் சொன்னார். ( அவர்தான் அந்தோணி பற்றி நான் எழுதியதும் உடனே வீல் சேருக்கு 5000 ரூபாய் அனுப்பி வைத்தார்..முதலில் )

அப்புரம்
மொத்தமா எல்லாரிடமும் சொன்னேன், இந்த கதை பேசும் பழக்கத்தை தயவுசெய்து விடுங்கள்.. வெளிநாட்டில் தனியே இருக்கோம்
முடிந்தால் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்போம் னு சொல்லி , இரு விழாக்கள் எடுத்து நடத்தினேன் ..

ஒன்று
குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி.. மற்றொன்று பெண்களுக்கான ஸ்மார்ட் மம் போட்டி..
அப்புரம் முழுதுமாக நான் உண்டு என் வேலையுண்டு என ஒதுங்கிக்கொண்டேன்..

எத்தனை
அடிபட்டாலும் உதவும் பழக்கத்தை விடப்போவதில்லை.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்..
தவறு செய்கிறவர்கள் செய்துகொண்டே இருக்கட்டும்.. அதையும் தாங்க பழகிக்கணும்.. ..

நல்லவர்கள் பலரும் உலகில் இருக்காங்க என்ற நம்பிக்கையோடு நல்லவற்றை செய்வதை தொடரத்தான் வேணும்... அது மட்டுமே மனசுக்கு இதம்...

I don't at all like knowing what people say of me behind my back. It makes me far too conceited. Julchen Oscar Wilde quotes

It is necessary to help others, not only in our prayers, but in our daily lives. If we find we cannot help others, the least we can do is to desist from harming them.
Dalai Lama

Friday, August 27, 2010

புலித்திருட்டு லக்கேஜில்..

















2 மாத புலிக்குட்டி ஒன்றை குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்களோடு கலந்து ஈரான் நாட்டுக்கு
எடுத்து செல்ல துணிந்த பெண்மணி , பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக
அந்த புலிக்குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
விளையாட்டு சாமான்களோடு இருக்கும்போது பஞ்சு வைத்து அடைத்த புலிக்குட்டி போன்ற தோற்றம் ஏற்படுத்த கலந்து வைத்துள்ளார்..

விமான
நிலையத்தில் ஸ்கேன் செய்யும் போது புலிக்குட்டி மூச்சு விடுவது தெரிந்துவிட்டது..


பெட்டியை
திறக்க சொல்லி பார்த்த போது மிக அழகான அந்த 2 மாத குட்டி அமைதியாக அரை தூக்கத்தில் இருந்துள்ளது.


உடனே அப்பெண்ணை கைது செய்து 4 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்கள்....

புலிகள் தற்போது அழிகின்ற சூழலில் இருப்பதால் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது..

வனவிலங்கு
அதிகாரிகள் புலிக்குட்டியை எடுத்து சென்று மிக பாதுகாப்பாக வைத்துள்ளனர்..


புலியை
கண்டுபிடித்து மீட்டது குறித்து பெருமகிழ்ச்சி கொண்டனர் அதிகாரிகள்..

சமூகத்தில் முதல் காலடி பதித்தது எப்போது?




























பெற்றோருக்கு பிள்ளைகள் எப்பவும் குழந்தைகள்தான்..அவர்கள் வளர்ந்து அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தாலும் கூட.

ஆனால் பிள்ளைகளை நாம் மட்டும் வளர்க்கவில்லை. சமூகமும் சூழலும் சேர்த்தே வளர்க்கின்றது..

பல வருடம் நாம் சொல்லிக்கொடுக்காததை சில நொடிகளில் கற்று விடுவார்கள் ., அது நல்லதோ கெட்டதோ..

நாம் அவர்கள் கூடவே பயணித்துக்கொண்டிருக்க முடியாது..

ஆனால் இதை செய்தால் , இப்படியான விளைவுகள் என சொல்லி தயார் படுத்திக்கொள்ளலாம்..

ஏன் இந்த பீடிகை.. சொல்கிறேன் நேற்றைய சம்பவத்தை..

இரவு படுக்க போகுமுன் தொண்டையில் கிச் கிச்..

அதற்கான மிட்டாய் மருந்தை ( அதாங்க லொசெஞ்சஸ் ) வாங்கி வர சொல்லி பெரியவன் அறைக்கு சென்றால் படுத்துவிட்டார்.

" அம்மா தூக்கம் வருது காலையிலேயே எழும்பணும் வேற. பிளீஸ்."

" ப்ளீஸ் மா."

என்னோட ப்ளீஸ் வென்றது.. சோம்பிக்கொண்டே சட்டையை போட்டுக்கொண்டு கீழே சென்றார்.

போய்வர அதிகபட்சம் 10-15 நிமிடமே..

ஆனா 30 நிமிடம் ஆகியும் திரும்பவில்லை..கொஞ்சம் பயம்.

45 நிமிடம்... பயம் அதிகரித்தது.. ( இங்கு பொறாமைக்காரர்கள் சிலருண்டு :) . எப்படியெல்லாம் யோசனை வருது பாருங்க. )

50 நிமிடம் - எழுந்துவிட்டேன் . " என்னாச்சு போனவனை காணோம்.. கொஞ்சம் போய் பார்த்துட்டு வாங்க.."

"சின்ன குழந்தையா . வருவான்.. " பதிலில் அமைதியானாலும் குழப்பம்..

பின் 1 மணி நேரம் கழித்து வந்தார்.. வரும்போதே அம்மா அம்மா னு .. சத்ததிலேயே புரிந்தேன் ஏதோ பிரச்னைதான் என.

" அம்மா, நம்ம தமிழர்களுக்கும் வெள்ளைக்காரனுக்கும் சண்டை நான் உதவினேன்..."

படுத்திருந்தவள் சடாரென்று எழுந்தேன்.

" என்னாச்சு மா.?"

ஒரு வெள்ளைக்காரன் நம் இந்தியர் வீட்டை திறந்துள்ளார்.. அதை தடுத்த நம் தமிழரை அடித்துவிட்டார்..அவரை பிடிக்க வந்த காவலரையும் தடுத்துள்ளார்.. பின் அவனை செக்யூரிட்டி தள்ளியதில் சுவர் மண்டையில் முட்டி ஒரே ரத்தம்..

அவர்கள் காவல் துறைக்கு சொல்லிவிட்டனர்.

நான் வெளியே நின்றேன் . கட்டடத்தை விட்டு வெளியே ஓடி அவன் தப்ப நினைக்கையில் தமிழ் அங்கிள் ஜாடை காட்ட நான் என் கைகளை

கொண்டு அவனை தடுத்து நிறுத்தினேன்.. "

14 வயதிலேயே 6 அடி வளர்ந்திட்டாயே னு கவலை படாத நாளில்லை.. :(

ஆனால் முதன்முறையாக அது உதவியிருப்பது கொஞ்சம் திருப்தியாயிருந்தது..

இந்தியாவாய் இருந்திருந்தால் கண்டிப்பாக மாமாவை போல் ராணுவத்துக்கு அனுப்பியிருப்பேனடா..

" உனக்கு பயமா இல்லையா பா.?.. "

" ஹ. விட்டா அவனை அப்படியே ஒரு கையில தூக்கிருவேன் மா."

உடனே சின்னவர் , " ஹேய் , அப்ப நீ ஹீரோ ஆயிட்டியா.?" ( தமிழ்பட பாதிப்பு என்னத்த சொல்ல.?:) )

" அம்மா உங்ககிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.நீங்க பயப்படுவீங்கன்னு .. நான் திரும்ப போகணும்.."

" ஒண்ணும் போக வேண்டாம் உனக்கெதுக்கு வம்பெல்லாம்.பள்ளி செல்லும் வயதிலே.?" அப்பா.

" அம்மா , பிளீஸ்..அடி வாங்கியது என் தோழனின் அப்பா .. "

புன்னகைத்தேன்.. அதையே அனுமதியாக எடுத்துக்கொண்டு போனான்.. இந்த முறை மொபைலோடு..

" சரி நானும் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் " கிளம்பினார் இவர் 10 நிமிடம் கழித்து..

போன மச்சான் திரும்பி வந்தார்... ஒருத்தரையும் காணோமாம்..:))



நிம்மதியா உறங்க சென்றேன்..

அடுத்த அரை மணி நேரம் கழித்து மகன் வந்தார்..

இந்த முறை அனைத்தையும் படம் பிடித்து எடுத்து வந்து விளக்க என் அருகே அமர்ந்தார்..( அதுக்குத்தான் மொபைலை எடுத்தார் போல )

" என்னாச்சு அப்பா வந்தாங்க.. காணோமாமே. "

" ஆமா அனைவரும் காவலர் வந்த வேன் அருகில் சென்றுவிட்டோம்.. பல தமிழர்கள் காவல்துறை சென்றுள்ளார்கள்..பலர் படம் எடுத்தனர்..

அங்கிள் என்னையும் கூப்பிட்டார்கள்.. அம்மா கிட்ட கேட்கலை னு சொன்னேன்."

சண்டையை படம் பிடித்து ஃப்ரீலான்ஸ் புகைப்படக்காரர் போல விளக்க ஆரம்பித்தார்..

இந்த துணிவெல்லாம் எங்கிருந்து வந்தது?..

இப்பத்தான் பிறந்து , என் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்து , யாராவது வந்தால் என் முதுகின் பின்னால் எட்டி பார்த்துக்கொண்டு ,

தம்பியோடு டாம்& ஜெரி பார்த்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருந்த பிள்ளை , வளர்ந்துட்டாரா?..

" சரி எப்படினாலும் நீ இதில் தலையிடுவதெல்லாம் தப்பு..உனக்கேதும் ஆனால்.?." அப்பா.

விவாதமாகப்போனது..

தடுத்தே ஆகணும்..

" உனக்கு அந்த பிரச்னையை ஹாண்டில் செய்வோம்னு நம்பிக்கை இருந்ததா.?.அவன் ஏதாவது

கைத்துப்பாக்கி வைத்திருந்து சுட்டா என்ன செய்வே?."

" அப்படி செய்யும் சூழல் இல்லை மா.. ஆனால் என்னுடைய பிரசன்ஸ் ( தமிழ்?? ) மிகவும் தேவைப்பட்டது என்பதை புரிந்தேன் "

" அப்ப சரி.. தப்பு நடக்கும் இடத்தில் நம்மால் முடிந்த ஆதரவு கொடுக்கவே செய்யணும்.. ஆனால் பல நேரம் நாம் காயப்படுவோம்.

அதுக்கும் தயாரா இருக்கணும். இருப்பியா.?"

" காயத்த பாத்தா முடியுமா மா.?"


நிறைவாய் இருந்தது.. என்னிடமுள்ள போராட்ட குணம், துணிவு , தெம்பு , கேரிங் இப்ப என் வாரிசில்..

சின்ன வயதிலிருந்தே சொல்லிவருவேன்.

" நமக்காக மட்டும் வாழ்வதில் பெரிதாய் ஏதும் சுவாரஸ்யமேயில்லை.. அடுத்தவருக்காக ஏதேனும் எதையும் எதிர்பாராது செய்து வாழ்வதிலேயே நிறைவு உண்டு என.."

சொல்வதை விட நாம் செயலிலும் வாழ்ந்து காட்டணும்..மிருகங்களோடு அன்பு செலுத்துவது, இயற்கையை மதிப்பது.. இவை செயலில் இருக்கணும்..

சம்மர் பள்ளி , பண்டிகை கொண்டாட்டங்கள் , சிறைச்சாலை, டிடென்ஷன் செண்டர் சந்திப்புகள் என தனியே நான் எடுத்து செய்யும்போதெல்லாம் " ஏம்மா உங்களுக்கு வேண்டாத வேலை "

னு சொன்ன பிள்ளை இன்று நான் சொல்லாமலேயே சமுகத்துக்கு உதவணும்னு முதல் படி ஏறியிருப்பது மகிழ்ச்சியை விட அதிக பொறுப்பை தந்துள்ளது .

இனம் , மொழி, மதம் என எல்லாம் தாண்டி மனிதநேயத்தோடு மட்டுமே வளர்க்கணும் இக்காலக்குழந்தைகளை..

"நாளை நீ வளர்ந்தபின் என்னை கவனிப்பதை விட முடியாத வயோதிகர்களை கவனித்தால் நான் மிக மகிழ்வேன் " என அடிக்கடி சொல்வேன்..

மேலும் ஏதாவது பெரிய வியாதி வந்தால் கூட எனக்காக ஏதும் செலவழிக்க கூடாது.. என் வாழ்க்கை நான் நிறைவாய் வாழ்ந்துவிட்ட திருப்தி இருக்கு..ஆக அந்த

செலவை கூட உபயோகமாய் செலவழிக்கணும் " என சொல்லிவைத்துள்ளேன்..

மனிதனுக்கு எப்போதும் திருப்தி ஏற்படுவதேயில்லை.. திருப்தி வேறு உழைப்பு வேறு.

உழைப்பு ஆயுசுக்கும் , இறுதி மூச்சுவரை செய்துகொண்டே இருக்கணும்.. ஆனால் திருப்தி என்பதை நாமாக வழவழைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று..

அந்த திருப்தி ஏற்படும்போதுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களுக்கான நன்றி உணர்வு வரும்.. நன்றி உணர்வு வரும்போது மற்றவருக்காக ஏதாவது செய்யணும்னு தோணும்..

குழந்தைகள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.. நமக்கு ஓரளவுதான் உரிமை இருக்கின்றது அவர்கள் மேல்.

எல்லாவற்றையும் அட்வைஸ் சொல்லி வளர்க்க முடியாது. கவனிக்கின்றார்கள் நம்மை.. நம் போராட்டங்களை.. நம் வெற்றியை.. கடின உழைப்பை..

ஒவ்வொரு பிரச்னைகளையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே அவர்களுக்கான மறைமுக பயிற்சி..

பிரச்னைகளை அலசிடுங்கள் குழந்தைகளோடு..ஆனால் பயம்கொள்ளாமல்..

நாளைய உலகில் அவர்கள் சந்திக்க வேண்டிய மனிதர்கள் பல்தரப்பட்டனர்.. முக்கியமாக சைக்கோக்கள்., பொறாமைக்காரர்கள்....நல்லவர்களுக்கு சமமாக இருக்கின்றனர்..

செய்திகள் பார்க்க பழக்கணும். அதை விவாதிக்கவும் செய்யணும்..சில தினங்களுக்கு முன் பிலிப்பைன்சில் ஹாங்காங் சுற்றுலா பயணிகளை

ஹை-ஜேக் செய்த போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்.. சுமார் 5 மணி நேரம் இடத்தை விட்டு அகலாமல் பார்த்தார்..

நம்க்கு பொறுமையில்லை..ஆனால் அதிலும் கற்கிறார்கள்.. எப்படியெல்லாம் காவலர் உடனடி நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என..

நானும் மகனும் விரும்பி பார்ப்பது Fear factor எனும் தொடர்..

அதிலுள்ள உணவுகளை உண்பதை பார்த்து நான் முகம் சுழித்தாலும் மகன் இதிலென்ன இருக்கு என பார்ப்பார்..

மார்க்கெட்டில் உள்ள அனைத்தையும் சமைத்து தர சொல்லி கேட்கிறார். நமக்கோ உவ்வெ.. னு அருவருப்பாய் உள்ளது.

எங்கேயிருந்து கற்கிறார்கள்.. பள்ளியில் , நட்புகளிடமிருந்து..???

குடும்ப சூழல் 50% என்றால் வெளியில் 50% வளர்க்கப்படுகிறார்கள்..இது என்னைப்பொறுத்தவரை. இந்நாட்டைப்பொறுத்தவரை..

( மாறுபடலாம் மற்றவருக்கு )

நான் சமூக பிரச்னையில் காலடி எடுத்து வைத்தது எங்கள் NCC காம்ப்கள் மூலமாகத்தான்.

நீங்கள் முதலில் உங்களை இப்படி சமூக பிரச்னையில் இணைத்து எப்போது ..?

Wednesday, August 25, 2010

புனைவு எழுதுபவர் குறித்து...சட்டம்


இது தகவலுக்கு


திரவிய நடராஜன் ஐயா இத்தகைய புனைவு பற்றி

விரிவாக இங்கே எழுதியுள்ளார்கள்..

http://lawforus.blogspot.com/2010/07/blog-post_14.html


நன்றி-


பதிவுலக சண்டியருக்கு வைத்த ஆப்பு - இறுதிப்பகுதி.

சரி இப்பொழுது நமது கதாநாயகன் திரு கருப்பன் அவர்களின் திருவிளையாட லை பார்ப்போம். இவர் தன் வலைப்பக்கத்தில் (வேதாளம்), பதிவர் சுப்பனை பற்றி மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது திரு கருப்பனை மிகவும் மன உளச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அத்துடன் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது கவுரவத்தை யும் பாதித்துள்ளது.

திரு சுப்பன் சென்னையை சார்ந்தவர். அவர் தன்னைப்பற்றி அவதூறாக எழுதிய பதிவை, பிளாக்கிலிருந்து ஒரு காப்பி எடுத்து கொள்கிறார். தன்னைப்பற்றி அவதூறாக பதிவு போட்ட கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு புகார் மனுவை தயார் செய்து அத்துடன் பதிவின் காப்பியையும் இணைத்து சென்னையில் இருக்கும் சைபர் கிரைம் அலுவலகத்தில் பதிவு செய்கிறார்.

புகாரை பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸ். அதன் பின் தன்க்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த வலைப்பக்கத்தின் உரிமையாளர் யார்? அவர் வசிக்கும் முகவரி, நாடு முதலியவற்றை கண்டறிந்து, அவரின் மீது வழக்கை பதிவு செய்யும்.

Sec. 500.IPC
Punishment for defamation.
500. Punishment for defamation.--Whoever defames another shall be
punished with simple imprisonment for a term which may extend to two
years, or with fine, or with both.

மேலே குறிப்பிட்டுள்ள படி நீதிமன்றம் அவரின் குற்றச்செயல் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவற்றின் அடிப்படையில் அவருக்கு கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கும்

1. இரண்டு ஆண்டு வரையிலான சிறை தண்டனை
அல்லது
2. அபராதம் / நஷ்ட ஈடு
அல்லது
3. இவை இரண்டும் சேர்த்து.

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 2

தொடர்ச்சி -2
----------------


ஆரம்பத்திலிருந்தே ஆண்களோடான என் படிப்பு , என் கட்டட பொறியாளர் வேலை , அதன் பின் ஐடி வேலை எல்லாமே ஆண்களோடு மட்டும்தான்.

ஒரு நல்ல புரிதல் இருந்தது. சொல்லப்போனால் பெண்களை விட ஆண்களிடம் பழகுவது , கற்பது எளிதானது..

ஐடி வேலையில் தீயணைப்பு வீரனைப்போல எந்நேரமும் தயாராய் இருக்கணும் 24x7(x365 ).

இரவு நேர வேலைக்கு சென்று வந்தால் காதுபடவே ஏதோ பாலியல் தொழிலுக்கு சென்று வருவதை போல கிசுகிசு பேசும்

தமிழ்ப்பெண்கள் கூட்டம். ( பின்னர் அவர்கள் பிள்ளைகளுக்கு பாட விஷயமாக அணுகியதுமுண்டு )

வெளியூர் வேலை என்றால் பாஸ் கூட பயணம் செய்வது அவர் தங்கியிருக்கும் விடுதியில் தங்குவது என எப்பவோ நான் பெண் என்ற மன நிலை தாண்டியவள்.

42 வயதானவள்.. என் பிள்ளைகள் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கப்படவில்லை. நல்ல மனிதாபிமானமுள்ளவர்களாக மட்டுமே.

( மகனை வளர்த்தது ஈழத்தமிழ் சகோதர சகோதரிகள் பலர் )


99% நிர்வாணமான பெண்களோடு நீச்சல் குளத்தில் குளிக்க முடிந்த என் பிள்ளைக்கு தமிழ்படத்தை பார்க்க முடிவதில்லை.

எது ஆபாசம்.?..எது வக்கிரம்?..என புரிய முடியாத குழப்பும் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி போகப்பொருளாய் வைத்துள்ளோம்.

பெண் திறமையாயிருந்தால் இங்கு எடுபடாது..

அவள் சமையல் குறிப்புகளை மட்டுமே எழுதிவிட்டு நல்ல பிள்ளையாய் ஒதுங்கிடணும்..

தப்புகளை தட்டி கேட்கக்கூடாது. கேட்டால் அவளைப்பற்றி கதை கட்டுவோம். ஓட செய்வோம்..

[ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . அவனை தட்டி கேட்டதிலிருந்து ஆரம்பித்தது இந்த துவேஷம்.)


இப்படி பல்வேறு தரப்பினரின் பிரச்னைகளை ஆழமாக அறிந்தவள்..

வாழ்க்கையின் பல பிரச்னைகள் எனக்கு துணிவையும் போராடும் சக்தியையும் தந்துள்ளது..

அதனால் மட்டுமே என்னால் ஒரு பாலியல் தொழிலாளியையும் , கொலைகாரனையும் சகோதர நேசத்துடன் பார்க்க முடிகிறது.

ஆனால் எனக்கே இப்படி ????.. !!!!!

ஆனால் இங்கு வலையுலகில் நடமாடும் சில நச்சு மனிதர்கள் அவர்களையெல்லாம் விட பன்மடங்கு கொடூரர்கள்..

இவர்களை சகித்துக்கொண்டோ, ஒதுங்கிக்கொண்டே போகலாம் தான்.

ஆனால் எத்தனை மன உளைச்சலை தருகிறது இவர்களின் நடவடிக்கைகள்..

எல்லாராலும் திரும்ப அடிக்க முடியாது என்கிற தைரியம்தானே?..

எல்லாரும் பொறுமையா செல்ல ஒரு காரணம் இருக்குது..குடும்பம் , வேலை இருக்குது என்ற இளக்காரம் தானே?..

" பூக்காரி" என்று எங்கு வாசித்தாலும் அந்த நியாபகம் வருதே வலி தருதே.வார்த்தைகள்...

அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் .?. நமக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அடி பட்டவருக்கு?...

சரி மன்னிப்போடு முடிந்தது என பார்த்தால் மன்னிப்பு கொடுத்ததுதான் தவறு என்பது போல இப்ப புதுசு புதுசா முளைக்கும் காரணம் ?..

அதைவிட என்னைப்பற்றிய அந்தரங்கங்களை வெளியிடுவதாய் மிரட்டல் வேறு..

என்னதான் செய்துவிடுவீர்கள் ?. உங்கள் நோக்கம் என்ன?.

என்னைப்பற்றிய தனிப்பட்ட விஷயத்தில் நுழையும் உரிமையை யார் கொடுத்தது ?..

நான் அப்படி என்ன கொடுமை செய்தேன்?.

மிஷ நரி என எழுதியதை கண்டித்தேனே அதற்காகவா?..

ஏழை எழுத்தாளர்களை எள்ளி " கெண்டைக்கால் மயிர் பிடுங்காதவன் " என நகையாடியதை கண்டித்தமைக்கா?

அருவருப்பான வக்கிரமான ஜோக்குகளை , கதைகளை பொதுவில் வாசிக்க நேர்ந்ததை சொன்னதற்கா.?( அதை பிரைவைட் வீயுவிற்கு வைக்கலாமே )


சமீபத்தில் என்னைப்பற்றி வந்த 2 புனைவு..


[[ மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள்.
அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ்
கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே
இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
----------------------------------------------------------------------------
xxxxxxx பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு
போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு.
ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க.
நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன்.

]]

இதை குறித்து கருத்து சொல்ல அழைக்கிறேன்.. உங்கள் பெயர் பின்னூட்டத்தில் வராது....


இந்த மன உளைச்சல் இனி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது...

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 1




புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.

இணையத்தில் நுழையும்போது ஏதும் அறியாத வெகுளிச்சிறுமியாய் நான்..

என் 38 வயதில் நான் கற்றுக்கொள்ளாத விஷயங்களை நான் கடந்த 3 வருடத்தில் பன்மடங்கு கற்றுக்கொண்டேன்..

எத்தனை
நல்ல உள்ளங்கள் , ஆறுதல் தந்த இதயங்கள் , வழிநடத்திய ,
தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்..?

தனிமை
காரணமாக தமிழில் பேசினால் நல்லா இருக்குமே என்ற ஒரே காரணத்துக்காக இணையத்தில் நுழைந்தவள் நான்.


அதுவரை
குடும்பம் , குழந்தைகள் , வேலை மட்டுமே என் உலகமாயிருந்தது பரந்து விரிந்தது.


எத்தனை குழுமங்கள் , எத்தனை விஷயங்கள் , எத்தனை பெரியவர்கள்...? வயது வித்தியாசமின்றி எல்லோரும் குழந்தை போல பழகி, நம்மையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த , சிந்தனையை தூண்டிய ஆக்கபூர்வமான கருத்துகளை பறிமாறிக்கொண்டவை அளவிட முடியாதே..

முக்கியமா
சொல்லணும்னா , பாலர் பள்ளிக்கூடம் என்ற இழை அன்புடன் குழுமத்தில் ஆரம்பித்து 1000 தாண்டியும் ஓடிக்கொண்டே இருந்தது..
அதில் பங்கேற்ற சிறுவர்கள் யார் தெரியுமா?.. மதிப்பிற்குறிய சீனா ஐயா , கிரிஜா மணாளன் சார் , சக்தி ஐயா , சுரேஷ் அண்ணா, விசாலம் அம்மா , காந்தி அக்கா , தமிழ்த்தேனி ஐயா இப்படி எத்தனை அத்தனை பெரியவர்கள்..? ..

எங்கெங்கிருந்து
..
( அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ). என்றும் நீங்கா இன்பம் தரும் நிகழ்வு அது..

அடுத்து முத்தமிழ் குழுமத்தில் என்னை வளர்த்த வேந்தன் ஐயா, சீதாம்மா , செல்வன் , ஷைலஜா அக்கா, கீதாக்கா, சிவா , காமேஷ் இன்றும் தொடற்கிறது தமிழமுதம் குழுமம் மூலம்..( இங்கும் அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ).


நிற்க
..


இதெல்லாம்
ஏன் சொல்கிறேன் என்றால் இணையம் என்பது எனக்கு பாடசாலை... மிக அதிக பயனுள்ள இடம்.


1000 மடல்களை தாண்டி கருத்தாடல்கள் செய்த இடம்.. அதிகப்படியாக விரைவாக வாசிக்க கற்றுத்தந்த இடம்..
படிப்பதிலே போட்டியை வளர்த்த இடம்...

வேண்டாம்
என்று சொன்னாலும் வந்து குமிந்த நட்பு வட்டம்..

விடிகாலை
3 மணிக்கு விமானம் சென்னை வந்தாலும் குடும்பத்தோடு வந்து காத்துக்கிடந்த
நட்புகள்...

என் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டே ரயிலில் கூட வந்த நட்புகள்..

என்னை பிரமிக்க மட்டுமல்ல திகைக்க , செய்தது செழிக்க செழிக்க தந்த அன்பு..

நான்
என்ன செய்தேன் அவர்கள் அன்பை பெற.?
மிஞ்சிப்போனால் கொஞ்சம் ஆறுதலாய் இருந்திருப்பேன் அவர்கள் பிரச்சனைக்கு..

வெளியில்
சிரித்து பேசும் பலருக்கு உள்ளே எத்தனை எத்தனை பூகம்பம் என அதிர்ச்சியடைந்துள்ளேன்..


இப்படி
பல சூழலில், சந்தர்ப்பங்களில் எழுத வரும் நட்புகளுக்கு வலையுலகில் இப்ப புதிதாக வந்துள்ளது தான் இந்த புனைவு என்ற சோதனை..


முக்கியமாய்
பெண்களுக்கு...


தொடரும்
.....

Tuesday, August 24, 2010

எதுவெல்லாம் இன்பம்.?..








































கற்பனை

செய்யதெரிந்தவருக்கு காதல் இன்பம்

தியாகம்

புரிய துணிந்தவருக்கு சாதலும் இன்பம்..

வாழ்வை

ருசிக்கத்தெரிந்தவருக்கே கடமை இன்பம்

சாவை

அஞ்சாதவனுக்கு சாதிக்க இன்பம்

வளர

நினைப்பவனுக்கு வலியும் இன்பம்

மன்னிக்க

எண்ணுபவனுக்கு மறதி இன்பம்

தனிமையானவனுக்கு

உரிமையோடான கண்டிப்பும் இன்பம்

அனுபவிக்க

தெரிந்தவனுக்கே துன்பமும் இன்பம்..

இன்னும் வளர்க்கலாம் ..................

நன்றி : படம் கூகுள்