எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
கனக்காம்புரம் பூ வெச்சு
கலகலன்னு பூவா நானும்
கலாய்ப்பு கலாட்டான்னு
கவுண்டரு அவரும்....
கொட்டாயி போகறச்ச
கொசுவம் வெச்சு சேலைகட்டி
கொய்யா, கடலை வாங்கியாயி
கொரிக்கத்தான் கொடுத்தாரே!..
பவுனு பவுன்னுன்னு
பாசத்த பொழிஞ்சாரே
பவுனெல்லாம் கழத்துவாருன்னா
பாவிமக கனவுகண்டேன்
சம்பளத்த வாங்கியாந்து
சக்களத்திக்கு தந்தாரே
சரக்குக்கே பாதிபோனா
சம்சாரம் வெளங்கிடுமா?
சாதகம் நாள் பாத்து
சமஞ்ச புள்ள அழகப்பாத்து
சாதிசனம் கூடி நீங்க
சகதியிலா தள்ளுனீக?
வெவரமில்லா வயசுப்புள்ள
வெட்கத்த வெலபேசி
வெறகுகட்ட வாழ்க்கைக்கு
வெற்றி வாக சூடுனீக?
வேதனைய ஒதுக்கிபுட்டேன்
வேற வேலை பாத்துகிட்டேன்
சோம்பேறிபய வீட்டுவாச
சோலிபாக்க போகமாட்டேன்
எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்னு வருத்தமில்ல
படிப்படியா படிச்சுகிட்டேன்
அடுப்படினாலும் ருசிப்பேனுல்ல...:)))
ஆப்பக்கார ஆயா...
Friday, January 23, 2009
தயக்கமா?..மனதிலே குழப்பமா?- குட்டிக்கதை.
இன்னிக்கு எப்படியாவது கேட்டுடணும் சதாவை...நானும் பார்க்கிறேன் ஒரு மாதமாய், அதற்கான சந்தர்ப்பமே கிடைப்பதாயில்லை.. இனியும் விடக்கூடாது.. அவன் அண்ணன் ,எனக்கு வில்லன் வேறு வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டான்..
அதென்னவோ அவனுக்கும் எனக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆவதில்லை... பின்ன என்னங்க , எங்க வீட்டு பேரழகியான ரதியை கண்ணு வெச்சா சும்மா விடுவேனா நான்...அப்ப சும்மா ஊரை சுத்திக்கொண்டிருந்தான், இப்ப அதிர்ஷ்டம் அமெரிக்கா பறந்துவிட்டான்..ரதியோ லண்டனில்.. இருக்கட்டும் அந்த கோபம்தான் அவனுக்கு...
அதுக்காக இப்போது நான் இழப்பதாயில்லை இந்த சந்தர்ப்பத்தை..
அதோ வருகிறாள் தேவதை.. என்ன அழகு.. ஆஹா இன்னிக்கு வெள்ளிக்கிழமையா?
அம்மணி தாவணி போட்டு நீண்ட கூந்தலில் பூ வைத்து... ம். நல்லாத்தான் வளர்க்கிறாங்கப்பா இந்த நாகரீக யுகத்திலும்... மத்த நாட்களில் ஜீன்ஸும் சுடிதாரிலும் வண்டியில் போகிறவள் , இன்று மட்டும் காரிலாமா, அதுவும் அண்ணனுடனா?..
அடப்பாவமே.. எப்படி போய் அவளிடம் பேச..?சம்மதிப்பாளா ?..திட்டுவாளா?..
அவன் அண்ணன் காரை எடுத்து வெளி வரும்வரை வெளி கதவினருகில் நிற்கப்போகிறாள்போல... இதோ ஓடிபோய் சொல்லிட வேண்டியதுதான்...
காலில் ஷூவையும் சாக்ஸையும் மாட்டிக்கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைக்கிறது...
யாராவது எடுங்களேன்... நான்தான் கிடைத்தேனா?.. அருகில் யாருமில்லையே... டக்கென்று அலறும் தொலைபேசியை எடுத்து கீழே வைத்துவிட்டு கள்ளப்பார்வை பார்த்துவிட்டு வேகமாய் வாசல்நோக்கி நகர,
" யாரது போன்ல.." அதிகாரமாய் குரல் உள்ளேயிருந்து..
" யாருமில்லை.. ராங் நம்பர்தான்" ஹிஹி..ஹி..
அப்பாடா மூச்சிறைக்குது... வியற்வையை துடைக்கும்போது சதா என்னைப்பார்த்துவிட்டாள்..வெட்கத்தோடு புன்னகைக்கிறாள்...தாவணி போட்டாலே நம்மூர் பெண்களுக்கு இலவசமா வெட்கமும் வந்துடுது...அட.. நல்லநேரம்தான்..நல்ல மூடில் இருக்கிறாள் போல..
மெல்ல அவளை நோக்கி நடக்கிறேன்... அவள் வீட்டு நாய் என்னைக்கண்டு கொண்டு இப்பவா கெஞ்சணும்... தர்மசங்கடமான சூழ்நிலை...எனக்கோ பேயைக்கண்டமாதிரி உள்ளுக்குள் உதறல்...
" டாமி உள்ளே போ.." கீழ்படிந்து , பின் திரும்பி என்னை அப்புரமா கவனித்துக்கொள்வதாக சேதி சொல்லிவிட்டு சென்றது..
என் தயக்கத்தை புரிந்தவளாய்...,
" என்னவோ சொல்ல வந்தீங்க போல..."
" இல்ல..வந்து...."
" வந்து ..."
" வந்து..."
" அதான் வந்துட்டீங்களே, சொல்லுங்க...சும்மா.."
" வந்து ... என் பேரனை கல்யாணம் செய்துக்குவியா?..."என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டேன்....

இல்லத்தரசனின் தீபாவளி
சாந்தி அக்காவின் கதை ஒன்று சிஃபி.காமில் மலர்ந்துள்ளது.
http://tamil.sify.com/fullstory.php?id=14781545
பாராட்டுகள் & வாழ்த்துகள்
*
இல்லத்தரசனின் தீபாவளி
"என்ன இவன் இன்னும் கிளம்பலையா..? என்ன சொல்றான்..? பெண் வீட்டுக்காரங்க எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்களே..?" - அம்மா அறைக்குள் வந்து சத்தம் காட்டிவிட்டுச் சென்றார்..
"இங்க பாருப்பா.. செல்லமா வளர்ந்துட்ட.. இனி அப்படியில்லை.. போகிற இடத்தில் நல்லபடியா நடந்துகிட்டு நம்ம குடும்பத்தைப் புகழும்படி நடந்துக்கணும்.. ஏன் இப்ப கண்ண கசக்கிற?" அப்பா.
"நான் கூட உங்க வீட்டுக்கு திருமணம் ஆகி வந்தப்ப ரொம்ப பயந்துட்டேன்.. ஆனா இப்ப பாரு, மாமனாரே மெச்சும் மருமகனாய், மனைவிக்கேத்த மணாளனாய் , குடும்பத்துக்கேத்த இல்லத்தரசனாய் மாறிட்டேனே.." அத்தான்..
"சரி சரி மசமசன்னு நிக்காம மறுவீட்டு பலகாரத்த எடுத்து வையுங்கோ" அக்கா அதட்டலுடன் உள்ளே நுழைய, பதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான் தண்டராமன்.. பாவம்.. கோதண்டராமனை அப்படித்தான் அழைப்பார் அவர் அக்கா.
"இத பார்டா, தண்டம், என்னை நம்பியும், 3 தலைமுறையா, சிறந்த இல்லத்தரசர் பரிசு வருடம் தவறாம, தீபாவளிக்கு நம் குடும்பத்துக்குப் பரிசு கிடைப்பதாலும்தான் நம் வீட்டில் மாப்பிள்ளை எடுத்துள்ளார்கள்.. என், மற்றும் நம் குடும்பப் பெயரை நீயும் கட்டாயம் காப்பாத்தணும்.. அதை விட்டுட்டு, அழுது வடிஞ்சுண்டு வந்து நிக்கப்டாது புரியுதா..?"
"என்னம்மா நீ, அவனே அரண்டு போய் இருக்கான், அந்த பெண்ணைப் பார்த்து..."
"இல்லப்பா, ஐ.நா சபை வரைக்கும் போயிருக்கு அந்தப் பொண்ணு... அவ மனசு நோகாம நடந்துக்கணுமே.. அவா சம்பந்தம் கிடைத்ததே ரொம்ப பெருமையா நினைச்சுண்டிருக்கேன் நான்.. நாழியாச்சு கிளம்பு, கிளம்பு..."
"அப்பா, எனக்கு இன்னும் சமைக்கக்கூடத் தெரியாதே.."
"அதெல்லாம் பயமா..? தொலைபேசியில் சொல்லிட்டாப் போச்சு... துணி துவைக்க, மடிக்க, சிறப்பு வகுப்புகள், நம்ம நாராயணன் ஆரம்பிச்சுருக்கான்.. அவன்கிட்ட சேர்த்துவிடுறேன்.. என்ன அந்தாத்து மாமனார் கிட்ட கொஞ்சம் பவ்யமா நடந்துக்கோ... மாமனார், மருமகன் சண்டைங்கிற பேச்சுக்கே இடம் கொடுக்காதே.. அவா வீட்டுல அந்தாளு வெச்சதுதான் சட்டமாம்..."
"மச்சினங்காரன் உன்னை மாதிரியே ஒருத்தன் கடைக் கண்ணிக்கு போக வர இருக்கான்.. அவனையும் அனுசரிச்சுக்கோ.. மத்தபடி பொண்ணு தங்கம். அலுவலிருந்து வந்ததும், சாமர்த்தியமா நடந்துக்கோ.. அவளோட ஓட்டுநர் பெண்ணிடம் மறுநாள் என்ன, எங்கு வேலை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேத்தாற்போல் தயார் செய்.."
"காலாகாலத்துல புள்ள குட்டின்னு வந்தா நீதான் மகராசன்.. பிள்ளை வளர்ப்பது எப்படின்னு அண்ணா சாலையில் கோர்ஸ் இருக்கு படிச்சுக்கோ.."
"என்ன, பிரசவத்துக்குன்னு அவளுக்கு 6 மாதம் விடுமுறை.. அப்பத்தான் உனக்கு கொஞ்சம் கஷ்ட காலம்... ஹிஹி..." அத்திம்பேர்..
"எனக்கு பயமாயிருக்கு... நான் போமாட்டேன்.."
"அட. இதென்ன பிடிவாதம்....? உனக்காவது பரவாயில்லை தம்பி, ஒரே பெண், என் மாமனார் வீட்டில் நாந்தான் மூத்த மருமகன்.. கீழே வதவதன்னு 8 பிள்ளைகள்.. ம். ஒழுங்கா படிச்சு நானும் பெரிய வேலைக்குப் போய் தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.." அண்ணன்.
"சரி சரி, அம்மா, அக்கா, அண்ணி எல்லாரும் மாடிக்கு வருவதற்குள், நாம சீக்கிரம் கீழே போகணும்.. இல்லாட்டி காதுல ரத்தம் வருமளவு பேசிடுவாங்க.." அண்ணன்.
"அப்பா இனி மறுபடியும் எப்ப நான் இங்கு திரும்பி வருவேன்?" அழுகையோடு..
"ஒண்ணும் கவலை வேண்டாம்.. தாலி பிரிச்சு கட்டுதல், 3ஆம் மறுவீடு, எண்ணெய்க் குளியல், குலதெய்வ வழிபாடு, ஆடி அமாவாசைன்னு மாதத்துக்கொண்ணு இருக்கு. சும்மா விடுவோமா...?"
"அப்படியே இல்லாட்டியும் மாமாவுக்கு நெஞ்சு வலின்னு சொல்லி வரவழைச்சுட மாட்டோமா, இல்ல மாமா?.." அசடு வழிகிறார் மருமகன்..
"இப்ப கேட்டோமா..? இல்ல... கேட்டோமா?.. மாமா எப்ப காலியாவான், மன்னர் எப்ப ஆகலாம்னு கனவு காணுறியா?.."மாமா.
"கோவில் குளம்னு சந்திக்காமலா போய்டுவோம்?.. அந்த ரகசியத்த நான் சொல்லித் தாரேன்டா தம்பி..."
"ஆமா, நீயும் கெட்டது போதாதுன்னு இவனையும் கெடுத்துரு.."
அலங்கரித்து கீழே அழைத்து வருகிறார்கள்.. பட்டுவேட்டி சரசரக்க, குனிந்த தலை நிமிரக்கூட தைரியமில்லாமல், அடிமேல் அடிவைத்து நடக்கிறார் மாப்பிள்ளை.. தெருவாசலில் சென்று காரில் ஏறும் சமயம் ஒரே சிரிப்பொலி... பக்கத்து வீட்டு வயசுப் பெண்கள், பல்சரிலும், யமஹாவிலும் உட்கார்ந்து கொண்டு கலாட்டா பண்ணுகிறார்கள்..
"பாருங்க இந்தக் காலத்துப் பெண்களை... அப்பப்பா, தெருவில் ஒரு பையனை நடக்க விடுறதில்லை... இதுங்க கிட்ட இருந்து பையனைக் காப்பாத்திக் கரை சேர்க்கும் வரையிலும் போதும் போதும் என்றாகிவிடுகிறது.." அம்மா பெண்ணின் தாயாரிடம் அலுத்துக்கொண்டார்..
"நீங்க நல்லா வளர்த்துருக்கீங்கன்னு கேள்விப்பட்டுத்தானே பையனே எடுத்தோம்.." பயப்படும்படி, பூமி அதிரும்படி சிரிக்கிறார் மாமியார். பயந்தே போய்விட்டான் கோதண்டராமன்.. ஒட்டுகிறான் வீட்டுக்குள், கைகளை விலக்கிக்கொண்டு.. எல்லோரும் பின்னாலே ஓடுகிறார்கள்..
"வேண்டாம், என்னை விட்டுருங்க," கத்துகிறான்..
தீபாவளிக்காக பட்சணம், அலங்காரம் செய்துகொண்டிருந்த எல்லாரும் கீழேயிருந்து மாடிக்கு விரைகிறார்கள்.. அங்கே கோதண்டராமன் கட்டிலிலிருந்து கீழே விழுந்து பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்..
"என்னாச்சுடா? என்ன வேண்டாம்...?" பரிவோடு அக்கா.
"கனவு எதாச்சும் கண்டியாப்பா?" கரிசனத்துடன் அண்ணி..
"இதுக்குத்தான் இரவு கண்ட கண்ட புத்தகம் படிக்காதேன்னு சொன்னேன்பா.." அன்போடு அம்மா.
அங்கும் இங்கும் சுற்றும் முற்றும் பார்க்கிறான்.. 'ஒண்ணுமே மாறலையா?.. ஹைய்யா, நான் இன்னும் மரியாதையான ஆண்பிள்ளைதானா?'
"சரி சரி.. சீக்கிரம் குளிச்சுட்டு விமான நிலையம் சென்று அவன் வருங்கால பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் வரவேற்று வரச் சொல்.." அத்தான்.
"அய்யோ அத்தான் வெளிநாட்டுப் பெண்ணா?.. வேண்டவே வேண்டாம் எனக்கு.. நம்மூர் கிராமத்துல நம் குடும்பத்துக்கு அடங்கின பெண்ணா பாருங்க போதும்"
"நீதானடா சொன்னே, ரொம்ப படிச்ச பெண்ணா, வெளிநாட்டில் வேலை பார்ப்பவளா இருக்கணும்னு.."
"அக்கா, அப்ப அப்படி சொன்னேன்.. இப்ப இப்படி சொல்றேன்... இல்லாட்டி எனக்கு கல்யாணமே வேண்டாம்"னு சொல்லிட்டு இன்னும் ஆண்மகனாய், கம்பீரத்தோடு அதட்டிவிட்ட சந்தோஷத்தோடு குளியலறைக்குள் புகுந்தான் கோதண்டராமன்.

நான் நேசித்த இலங்கை தமிழர்கள்.
நான் நேசித்த இலங்கை தமிழர்கள்.
பாங்காக்கில் அகதிகளாக வந்திறங்கும் அனேக தமிழர்கள் எங்கள் வீட்டருகில் தங்கிய போது அவர்களின் அருமையான , மரியாதையான் பேச்சுகள் என்னை மிக கவர்ந்தது...
யாராவது வீட்டில் ஒரு ஆள் மட்டும் வெளிநாட்டில் இருந்துகொண்டு இவர்களை எப்படியாவது வெளிநாட்டுக்கு அழைத்துக்கொள்ளும் பொருட்டு, பாஸ்போர்ட் . , விசா இல்லாமல் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டும், போலீஸுக்கு அப்பப்ப அழுதுகொண்டும் வாழவேண்டிய சூழ்நிலை..2 வேளை மட்டுமே சாப்பாடு...அதையும் அருமையாக செய்து பகிர்ந்து சாப்பிடுவார்கள்...
இதில் ஒரு குடும்பம் ரொம்பவே எனக்கு பழக்கம்.. சின்னபெண் 18 வயது இருக்கும் , அம்மா, அண்ணா, தங்கையோடு...இரு பெண்களுக்கும் நான் கட்டாயப்படுத்தி கணிதமும், ஆங்கிலமும் பாடம் எடுத்தேன்..
அருகிலிருந்த இன்னொரு வாலிபன் ஒருமுறை இந்த வாலிப பெண்ணை போலீஸ் பிடித்து செல்ல அவன் பணம் குடுத்து காப்பாற்ற, நன்றியோடு அங்கு பிறந்தது காதல்... 14 வயதில் பிறந்த காதல் பின் 4 வருடம் கழித்து அவன் பெற்றோர் விருப்பமின்றி திருமணம் நடந்தது...பாங்காக்கில்..
அவனுக்கு தொழில் திருட்டு பாஸ்போர்ட் செய்து ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது.. பலநாட்கள் எனக்கு தெரியாது .. பின் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்..
ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் அவனுக்கு வேறு வழியில்லை..அப்பா இல்லை.. 3 சகோதிரி , திருமண வயதில்.. ஒவ்வொன்றாய் கட்டி குடுத்தான் இந்த வருமானத்தில்..கடவுள் பக்தி அதிகம்..
பின் அன்னையை அழைத்து வந்தான் பாங்காக்குக்கு.. அவன் மனைவி என்னை ஆன்டி, என்பதுபோல் அவள் மாமி என்னைவிட 20 வயது மூத்தவரும் என்னை ஆன்டி என்றே அழைப்பார்.. ஏதாவது வருத்தம் என்றால் சிறு குழந்தை போல் என்னிடம் அழ ஆரம்பித்துவிடுவார்..அவர்களது வேதனை சொல்லி மாளாது..
அதேபோல் 10 வாலிப பசங்கள் அருகில் தங்கியிருந்தார்கள்.. நான் பேசுவதில்லை. ஆனால் என் அன்னை என் பேறுகாலத்துக்கு வந்த போது நட்பாகி விட்டார்... என் அன்னைக்காக தேநீர் போட்டு குடுப்பதும் பழக்கம் பேசுவதுமாக அன்னைக்கு பொழுது போயிற்று.. அவர்கள் வெளியில் செல்ல முடியாது வீட்டில்;ஏயே அடைஞ்சு கிடப்பதால் அன்னியார்தான் தோழி...அப்போது அவர்களின் ஒளிசித்திரம் என்ற கொடுமையான போர் வீடியோ கேசட்டுகள் பார்த்து கண்ணீர் வடித்துள்ளோம்...
ஒருமுறை தடுப்பூசி போட்டு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறான். அவர்கள் அனைவரும் மாறி மாறி தூக்கி வைத்துக்கொண்டு, " அக்கா, நீங்க ஓய்வெடுங்கோ, பிள்ளையை நாங்கள் பாத்துக்கொள்வோம்..." என சொல்லிவிட்டு எனக்கு சூடாக தேநீர் போட்டு எடுத்து வந்ததும் ரொட்டிக்கு சம்பல் செய்து தந்ததும் இன்றும் மறக்க முடியாதவை...
வெளியில் செல்வதானால் என் கைகுழந்தையை தூக்கி செல்வார்கள், போலீஸ் பிடிக்காதென்பதால்... மாற்றி மாற்றி என் குழந்தை வெளியில் செல்வான் அவர்களோடு.. அவர்களுக்கும் அவன்தான் பொழுதுபோக்கு..நான் குழந்தையை சாப்பாடு குடுக்கும்போது திட்டினால்கூட பொறுக்கமாட்டார்கள் அன்பு தம்பிகள். கண்ணீர் வந்துவிடும், பாசக்காரர்கள்..அதற்காகவே அவர்கள்முன் திட்ட முடியாது...என்ன செய்தாலும் எனக்கு ஒரு பங்குண்டு அவர்கள் உணவில்..மதியம் ஆனதும் எங்கள் வீட்டு தொலைகாட்சியில் படம் பார்ப்பார்கள்.. கிட்டத்தட்ட ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்கும் சந்தோஷம் இருக்கும்..ஆனால் என் கணவர் வந்ததும் எல்லாம் கப்சிப்...
அடுத்து இன்னொரு குடும்பம்.. அடில் ஒரு பெண்குழந்தை, 3 பசங்களும்...அந்த பெண் குழந்தை என் மகனை குளிப்பாட்டுவதிலிருந்து அவனுடன் விளையாடுவது எல்லாமே அவ்ர்கள் வீட்டில்தான்.. சிலசமயம் சப்பாடு கொடுக்க குழந்தையை அழைக்க சென்றால்,
" நாங்களே தீட்டிட்டோம். அவர் நல்லா சப்பு கொட்டி சாப்பிட்டார்.. எங்க சாப்பாடு அவருக்கு ரொம்ப இஷ்டம்..." என்பார்கள்..
இன்னொரு குடும்பம் 2 பெண் பிள்ளையோடு அன்னை.. அண்ணாவும் அப்பாவும் லண்டனில்..6 மாத காலம் இருந்தார்கள்..என் பிள்ளையை அப்போது காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வேன் காலை 6 மணிக்கு..ஆனால் இவர்கள் வந்தபின், காலையில் வந்து குழந்தையை எடுத்து சென்றுவிடுவார்கள்.. அவன் எழும்பியதும் சாவகாசமாக, குளிப்பாட்டி, சாப்பாடு குட்த்து சும்மா ஒரு மணிநேரம் மட்டும் அமர்த்திவிட்டு, பின் சாயங்காலம் வரை தம்முடனே வைத்து தூங்கப்பண்ணி..அய்யோ ரொம்பவே ஆசையாய் செய்தார்கள்...
இதில் பலர் வெளிநாடு எளிதாக சென்றார்கள், சிலர் மீண்டும் போலீஸில் மாட்டி டிடென்ஷன் சென்டரில்...நிலையில்லாத ஒரு வாழ்க்கை.. சொல்லவியலாத துயரங்கள், பிரிவுகள், பணக்கஷ்டங்கள்... வாழ்க்கையே வெறுத்துவிடும் இவர்கள் கதையை கேட்டால்...ஆனாலும் எப்போதும் கடவுள் நம்பிக்கையோடும் , லட்சியத்தோடும் , வாழ்க்கையில் போராடி வெற்றி பெற கனவுகளோடுமான பயணங்கள் இவர்களுடையது...
திடீரென்று தொலைபேசி அழைப்பு வரும்..
" அக்கா நியாபகமிருக்குதா நான் ரவி பேசுறன்...ஆஸ்திரேலியாவில் இருக்கன்.. சுகமெப்படி..பொடியன் என்ன செய்றார்..அங்கிள கேட்டதா சொல்லுங்கோ.."
இப்படி டென்மார்க்கிலிருந்து, கனடாவிலிருந்து , லண்டனிலிருந்து என அழைப்புகள் எப்போவாவது வரும்...யாரார் எங்கெங்கு இருக்கிறார்களோ... ஆனல் அவர்கள் விட்டுச்சென்ற சோகமும் அன்பும், என்றும் நெஞ்சிலிருப்பதோடன்றி, இலங்கை தமிழர் மீதான மரியாதையை அதிகரித்துச்சென்றுவிட்டார்கள்..

நேற்று காணாமால் போன கைப்பை..
நேற்று காணாமால் போன கைப்பை..
வெள்ளிக்கிழமையே வேலை முடிந்து வீடு வந்ததும் அனைவரும் சாப்பிட்டு , வார பொருள்கள் வாங்க கடைகளுக்கு
செல்லலாம் என சென்றோம்.. 8.00 மணிக்கு... எல்லா சாமான்களும் வாங்கிவிட்டு, கொஞ்சம் இலவசமாக நோட்டமும் விட்டு
ஒருவழியா பணம் கட்ட கணவரும் பெரியவனையும் பொறுப்போடு விட்டுவிட்டு, சின்னவன் சேட்டையை கவனிக்க நான்
பொறுப்பெடுத்துக்கொள்ள, என் கைப்பை, சாமான்கள் வண்டியில்...எப்போதும் என் கையில் இருக்கும் அல்லது வண்டியில் என்னுடனே..
இன்று பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு நான் அருகிலேயே நின்றிருந்தேன்..
பின்பு முடிந்ததும் சின்னவரை நான் தூக்கிக்கொள்ள , வண்டியில் என் கைப்பை..
பார்க்கிங் வந்ததும் சின்னவரை காரில் உள்ளே தள்ளி பெல்ட் போட்டு கட்டி வைத்துவிட, பெரியவனும் அப்பாவும் சாமான் எடுத்து வைக்க
நான் பின் காரை ஸ்டார்ட் செய்ய, கிளம்பிவிட்டோம்... நல்ல இருட்டு, மழை வேறு.. அந்த கவனம் தான் மனதில் இருந்தது...
இதுல தமிழ் பாட்டு போடு, ஆங்கிலம்தான் என அப்பாவுக்கும் , பிள்ளைக்கும் விவாதம் வேறு,..
சிறுவனோ பெல்டை அவுத்துவிட்டு என் தலைமுடியை பிடித்துக்கொள்ள நான் கிட்டத்தட்ட 40 அடி உயரத்திலிருந்து சரேலென
காரை கீழே சருக்கில் இறக்க, பிள்ளைகளுக்கு குதூகலம்... கணவரோ கண்டிக்கிறார்..
எப்படியோ பாதி வழியில் வந்ததும் எனக்கான தைராய்ட் மாத்திரை வாங்கினோமே பேக்கில் வைத்தேனா என பார்க்க பையை தேடினால்..
அய்யோ அம்மா, அப்பா, என ஆளாளுக்கு உதறல்..
" என்னது என் கைப்பையை யாரும் எடுத்து வைக்கலையா?.."
கேட்டுக்கொண்டே சடாரென காரை பக்கவாட்டில் ஒடித்து படாரென நிப்பாட்டினேன்..
பையன் பின்னால் திறந்து பார்த்து ஊர்ஜிதம் செய்தான் பை இல்லையென.. சந்தோஷம்...
" சரி நீ டென்ஷனாகாதே .. காரை பத்திராமா ஓட்டு.."
இரு காரை நிப்பாட்டு நான் எதுக்கு பார்க்கிறேன் என் மீண்டும் பார்த்து இல்லை என முடிவு செய்தோம்.
இப்ப திரும்பணும்... எங்க , எப்படி காரை ஒடிப்பது... சாரை சாரை யாய் கார்கள்..
மழை வேறு கொட்டுது...பெரியவன் கண்ணிலிருந்தும்..
" நீ ஏம்மா அழுற?.. போக வேண்டியது போகும்.. என்னுடைய தப்பும்தான்.. நல்ல பாடம்.. விடு.."
கொஞ்சம் வேகமாக போனால் ,
" 60 லேயே போ... 100ல போகாத.."
" 80 தான் அதுக்கு குறைந்து போனால் பின்னால் வருபவர் திட்டிருவார்..."
எப்படியோ ஒருவழியா திரும்பி அந்த பார்க்கிங் செங்குத்து மலைமேல் ஏறி ( நேர்த்திக்கடனோ என்னவோ)
உள்ளே சென்றால் ஒரு வேலையாள் சாமான் வண்டிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்...
வேகமாக மகன் அவரிடம் சென்று விசாரிப்பதுக்குள்ளேயே அவர் பச்சைக்கொடி காண்பித்தார்.. மகன் முகத்தில் சிரிப்பு..
அவர் கூட சென்று அந்த கைப்பையை வாங்கி வந்தான்..
அவ்ர்கள் பையை திறந்து சாமான் சரிபார்க்கச்சொன்னார்கள்.. எனக்கு அவர்கள் முன்னால் பார்ப்பது அவர்களை
சந்தேகிப்பது போலிருக்கலாம்.. இது மீண்டும் கிடைத்த அதிர்ஷ்டம்தானே அதனால் பரவாயில்லை, மிக்க நன்றி என சொன்னேன்.
அதற்குள் மகனுக்கு அவசரம்.. அம்மா பணம் குடுங்க என .. நானே குடுப்பேன் கண்ணே, என சொல்லி பணம் எடுத்து மகனிடம் கொடுத்து
குடுத்ததும் , இருவரும் விழுந்து விழுந்து வணக்கங்களை கூறி விடைபெற்றுக்கொண்டார்கள்..
கைப்பையில் உள்ள பர்ஸில்தான் என்னுடைய, வரிச்சீட்டு, எடிஎம் கார்டுகள். , லைசென்ஸ், மருத்துவ அட்டைகள் வீட்டின் அட்டைகள்
இப்படி பலவும்...
தொலைந்தால் போலிஸ், எப் ஐ ஆர், அங்கிங்கு என செம அலைச்சல்.அனுபவித்துள்ளேன்..
( ஏற்கனவே 1 முறை நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது என் கண்முன்னாலே பர்ஸை சுட்டுட்டார்...:-( )
கைப்பை மீண்டும் கிடைத்தது அதிர்ஷ்டமே..
கடவுளுக்கும் அந்த நல்ல மனிதருக்கும் என் நன்றி.

டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்.:-)) குட்டிக்கதை...
பாஸ்கர்: ம். அப்ப எப்ப வார விமானத்துல??கூட யார் வாரா?
அஞ்சலி: ம். கெளம்பியாச்சு.. நாளை காலை அங்கே இருப்பேன்.. எப்படா உன்னை பார்க்கப்போறோம்னு இருக்குடா..ம். பேபி வருவாங்க..அங்க எப்படி?
பாஸ்கர்.. : அதேதான் இங்கயும்... போட்டோ கூட பாக்கல... ரொம்ப ஆர்வமாயிருக்கு,..ம். கூட சின்னா வரலாம்.
அஞ்சு: ம்.. ஹிஹி.
********************************************************************************************************************************
"தாத்தா என்ன இது காலையிலேயே விமான நிலையம் போகணும்னு சொல்லிட்டு தண்டால் எடுத்துட்டு இருக்கீங்க... "
"படவா மெதுவா பேசு... தாத்தான்னு கூப்பிடாதன்னு எத்னி தடவை சொல்றது... கால் மி சின்னா..பாஸ்கி..ஐ வில் ஜாயின் யூ இன் 5 மின்."
" சரி அப்ப நான் ஸ்லோகத்தை சொல்லிட்டு வரட்டா?.."
" வராதே .. அப்படியே போய் உன் வேஷ்டி குர்தாவை கழட்டிட்டு ஜீன்ஸ் போட்டுட்டு வா.."
" தாத்தா , சாரி, சின்னா. என்ன இது... இந்த சென்னை வெயிலுக்கு இதுதான் இதமா இருக்கு..."
" நல்லாத்தேன் வளர்த்திருக்கா உன் அம்மா, அதான் என் மகள்... அதுவும் டெல்லியிலிருந்துகொண்டு.."
" ம். நல்லவேளை தப்பிச்சேன்... உங்ககிட்ட வளராமல்..:-))) "
"..ம்.. என்ன முனகுற?... சத்தமாத்தான் சொல்றது... அதான் ஏழு கழுத வயசாகியும் கல்யாணம் வேண்டாங்கிற..."
" அய்யோ தாத்தா கல்யாணத்த மட்டும் பத்தி பேசாதீங்கோ...ஆமா அதென்ன இப்படி கொட்டுறேள் தண்ணியை?"
" அட அது சென்டுடா .. நீ இன்னும் ஜவ்வாது போட்டுட்டு இரு... "
" தாத்தா இதென்ன ஜீன்ஸ் இப்படி கிளிசலா?.. அய்யோ நான் வரமாட்டேன்பா உங்களோட.."
" டேய் கருமம் பிடிச்சவனே...லைஃப்ப எஞ்சாய் பண்ண கத்துக்கோடா... கண்ணு வெக்காத..."
" அசத்துரீங்க தாத்தா.. ஆனா அந்த கருப்பு கண்ணாடிதான்.."
" டேய் கால் மீ சின்னா...டேய் அந்த செருப்பை போட்டுட்டு வந்து என் மானத்தை வாங்காத..."
" ஒகே..ஒகே.. சின்னா, இப்ப உங்களபாத்தா என் தம்பியாட்டம் தான் இருக்கு... ரிபோக் ஷோ என்ன, டிஷர்ட் என்ன, ...ஆனா பாத்து கண்ணு மண்ணு தெரியாம யார் மேலயாவது மோதிராதீங்க...எனக்கு அவமானம்..."
***************************************************************************************************************************************
தாத்தா சீக்கிரம் உன் தோழர்களை அழைத்துக்கொண்டு வந்து சேருங்க.. நான் மஹாபலிபுரம் போகணும் , ஆராய்ச்சிக்கு..."
" அடேய் பாஸ்கி, தோழர் இல்லைடா, தோழி...ஹி ஹி ஹி.."
" அய்யே.. இது வேறயா?.."
" நீ இந்த அட்டையை வைத்துக்கொண்டு இங்கே நில்... நான் அந்தப்பக்கமா போய் பார்க்கிறேன்.."
அட்டையில் அஞ்சுவின் பேரைப்பார்த்தபடி புன்சிரிப்புடன் வருகிறார் பாட்டி மட்டும் தனியே.
" ஹலோ என் பேர் பேபி.. நீங்கதான் பாஸ்கரா?.."
" ஹ.. ஆமா ஆமா.. இருங்க சின்னா வந்துடுவார் இப்ப..."
" வாங்க தம்பி , நாம் கொஞ்சம் பேசுவோம் ஓரமாய் போய்.."
யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, சட்டை காலரை பிடித்து,
" ஏண்டா ரஸ்கல், என் பேத்திகூடவா சேட்டிங் பண்ற .. நான் யார் தெரியுமா?.. அந்த கால கராத்தே வீராங்கனையாக்கும்..."
கராத்தேயை இலவசமா போட்டு காட்டுறாங்க பாட்டியம்மா.அம்மா, அய்யோ னு அலற தான் முடியுது... பேச விட்டாதானே???
அதற்குள் தாத்தாவின் கைபிடித்து சிரித்து பேசியபடி ரொம்ப பாசமாக மஞ்சு வந்து பார்த்து, அதிர்கிறார்கள் இருவரும்...
" அய்யோ பாட்டி என்ன இது இங்கயுமா?" மெல்ல கைபிடித்து தூக்கி மன்னிப்பு கேட்கிறாள்..
"அவனை ஏன் அடிக்கீங்க?.."கூலிங் கிளாஸை கூலா கழற்றிக்கொண்டே..சின்னா.
" ம். என் பேத்திகிட்ட சாட்டிங் பண்றான், திருமணம் பண்ணிப்பானாம்... சே சே.. "
" அய்யோ பாஸ்கருக்கு எதுவும் தெரியாதுங்க.. நான்தான் அவன் பேரில் சேட் பண்ணியது..அவன் திருமணமே வேண்டாமென்றும் பத்தாம்பசலித்தனமாய் இருப்பதாலும்...நான்தான் லண்டன் பெண் பார்த்தேன்..." கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டார்.கவனமாய்.
" ஆமா.. இதப்பற்றி மஞ்சு கூட ஒண்ணும் சொல்லலையே...?அவதான் என்கூட இஷ்டமா பேசினா??" சின்னா
" ஆமா .. அவளுக்கும் ஒண்ணும் தெரியாது .. அவள்பேரில் சேட் பண்ணியது நான்தான்... அவளும் தமிழ்நாடு , கலாச்சாரம் , இந்தியா ,சுதந்திர தினம் னு திரியுரவ...கல்யாணம் வேண்டாம்னு.."
" அட.." என்று பாஸ்கரும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, பார்வையை மீட்டெடுக்க முடியாமல்.
மாட்டிக்கொண்ட பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வெட்கம் கலந்த சிரிப்பு...
" சரி இனியாவது நீங்க இரண்டு பேரும் உங்க ஒரிஜினல் பேரில் சேட் பண்ணுங்க" மஞ்சு.
" அய்யோ அப்ப நீங்க?.. " கோரஸாக வருத்தத்துடன் பேபியும், சின்னாவும்...
" ம். இனி சேட்டிங் தேவையில்லைனு நினைக்கிறேன்...( மஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே) தேங்ஸ்டா தாத்தா , சாரி சின்னா..." பாஸ்கி.
**********************************************************************************************************************************************

Subscribe to:
Posts (Atom)