இனி அண்ணா என்ற கோணத்தில்....
வருகிற மாப்பிள்ளையெல்லாம் பிடிக்கவில்லை
என் நீ தட்டிக்கழிக்கிறாயே அண்ணா..
சந்தேகமாயிருக்கு, உன் நண்பரான,
சோடாபுட்டியின் பார்வையும்,
நம் வீட்டு ஜன்னலை அரை மணிநேரம்
கடக்கும் யானைக்குட்டி அவனும்,
தெருவில் நின்றே உன்னை எட்டிப்பார்க்கும்
ஒட்டகச்சிவிங்கியும்
எனக்கு மாப்பிள்ளையாய் முடிவு செய்திட்டாயோ என.
தொடர்ச்சியாய் என்னால் கொடுமைப்படுத்த முடியாதென்றும்,
உன் தங்கை உன்னைப்போல் பொறுமைசாலி இல்லையெனவும்
சொல்லிவை அவர்களிடம்...
Friday, August 29, 2008
ஆண்மகனுக்கோர் கவிதை...
பல வேலை பல சுமைகளோடு
பள்ளி செல்லும் குழந்தை அனுப்பி
பகட்டாய் உடுத்தி அலுவல் வந்து
படபடப்புடன் வேலையும் பார்த்து
பத்திரமாய் வாகனம் ஓட்டி
பசியோடு போக்குவரத்தில் சிக்கி
பதில்பேச முடியாது தொலைபேசி செயலிழக்க,
பயத்தில் நேரமானதால் கற்பனை கொண்டு ,
பட்டம்பூச்சியின் பரிதவிப்புடன் திட்டுகிறாய் நீ.
பரபரப்பிலும் உன் பாசத்தைமட்டும் காண்கிறேன் நான்.

அதிக காரமாய் இருந்தாலும்
அதிராமல் சாப்பிட்டு
அளவோடு எடுத்துக்கொள்ள
அறிவுறைத்துவிட்டு
அருகேயே நின்ற பொழுதும் உரைக்கவில்லை
என் உறைப்புதாங்காமல்
தும்மும் போது
தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கவே
நின்றாய் எனும்போது
கண்ணீர் வந்தது
உறைத்ததால் அல்ல, நீ உரைக்காத( காத)லால்
அதிராமல் சாப்பிட்டு
அளவோடு எடுத்துக்கொள்ள
அறிவுறைத்துவிட்டு
அருகேயே நின்ற பொழுதும் உரைக்கவில்லை
என் உறைப்புதாங்காமல்
தும்மும் போது
தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கவே
நின்றாய் எனும்போது
கண்ணீர் வந்தது
உறைத்ததால் அல்ல, நீ உரைக்காத( காத)லால்
ஆண்மகனுக்கோர் கவிதை
எதைக்கேட்டாலும்
உனக்கொண்ணும் தெரியாது
என என்னிடம் சொல்லி
எல்லாமே நீயே செய்ய ஆசைப்பட்டாய்.:-)
ஆனால்
எல்லாம் தெரிந்த உன்னிடம்
உன் பிள்ளை வந்தால் மட்டும்
அம்மாவிடம் கேள் என்கிறாய்
புரியவேயில்லை இன்னும்..????
உனக்கொண்ணும் தெரியாது
என என்னிடம் சொல்லி
எல்லாமே நீயே செய்ய ஆசைப்பட்டாய்.:-)
ஆனால்
எல்லாம் தெரிந்த உன்னிடம்
உன் பிள்ளை வந்தால் மட்டும்
அம்மாவிடம் கேள் என்கிறாய்
புரியவேயில்லை இன்னும்..????
ஆண்மகனுக்கோர் கவிதை...
எனக்கான பொருளையும் நீயே சுமந்து வரும்போது பங்கு கேட்டால் தர மாட்டேன் என்கிறாய்.
காரணம் கேட்டால் என் பிள்ளையை மட்டும் நீ ஒத்தையில் சுமக்கிறாயே, எனக்கு பங்கில்லையா என்கிறாய்.

ஆண்மகனுக்கோர் கவிதை ...
அம்மா வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு
அருமையாய் பேசிவிட்டு என்னிடம் முகம் சுழிப்பு.
அக்கா வீட்டு விசேஷம் கூடமாட ஒத்தாசை.
எப்படியாவது தடுத்துவிட போடுகிறாய் பெரும் ஓசை.
மருத்துவமனையில் பக்கத்து வீட்டுக்கு சாப்பாடு.
உன்னைத்தவிர ஊராரைக்கவனிப்பதாய் கூப்பாடு.
உன் அக்கா குழந்தைக்குதானே காதுகுத்து
அரைப்பவுன் போதும் அதுக்கும் மேலென்றால் வீண் கத்து..
வேலைதேடும் கொழுந்தனுக்கு உபசரித்து கவனிப்பு
வேண்டாதவனாயிட்டேனா என ஒரு வீராப்பு...
எல்லாமே ஆண்சிங்கம், தானே முக்கியம் என்ற கர்வம்..
இருந்தாலும் காரியம் சாதிக்கிறேனே நீதான் என் தங்கம்...
Tuesday, August 26, 2008

பிடிக்கும் உன்னை பிடிக்கும்..:-))
" அட அவளேதான் வந்துட்டா... அவ கார்தான் ,. அதே சிவப்பு நிற மாருதி..."
இன்னிக்கு எப்படியாவது முந்திட வேண்டியதுதான்... தினமும் சரியாக 7.45 க்கு வந்திடுறா...?.. கொஞ்சம் குண்டாயிருந்தாலும் ஆப்பிள் மாதிரி கன்னங்கள் அழகாத்தானிருக்கு...
ஆனா அந்த தலை அலங்காரமும் அதில் உள்ள பூவும் தான் பிடிக்கவில்லை... சே சே, என்ன ரசனையோ...??.
அடுத்த சிக்னலில் அவள் வண்டிக்கு முன்னால் வந்து கிரீச்சுட்டு வந்து நின்னாச்சு... ஆனாலும் அவளை பார்க்காத மாதிரியே பார்த்தும் விட்டான்...அது அவனுக்கு மட்டும் கைவந்த கலையோ??... அட ஆமா அவளும் என்னைத்தான் பார்க்கிறாள்... பார்க்காத மாதிரி..புன்னகைக்கிறாளா என்ன?. இலை அவள் வாயே அப்படித்தானா?..
" வந்துட்டானா?.. ஆளைப்பாரு, அவனும் அவன் பொருத்தமில்லாத ஷுவும், சாக்ஸூம்...அதென்ன எண்ணெய் கடை சொந்தக்காரனா?.. தலையில் இப்படி வழியுது முகத்தின் அசடுக்கு போட்டியாக...?????
" அடிக்கடி கைக்கடிகாரத்தை ஸ்டைலாய் பார்த்துக்கொள்கிறான்.. ஹிஹி... ரொம்பத்தான்..."
' பெரிய சூப்பர்மேன் னு நினைப்பு.. சட்டை பட்டனை ஒழுங்கா போட்டா என்னவாம்... கையில் என்ன வளையலா இல்லை வளையமா?.. பம்பிளிமாஸ் மாதிரி.. கன்னம்...ஹிஹி...அழகாய்தானிருக்கான்..."
சிக்னல் போட்டதும் ஒரே சீராக பக்கத்தில் போகுது அவளது மாருதியும் , பைக்கும்...
ரோஸ் நிற உதடுகள்... லிப்ஸ்டிக்கா இல்லை இயற்கையிலேயே அப்படித்தானா?..
யோசித்துக்கொண்டிருக்கும்போதே வண்டி பள்ளத்தில் ஏறி இறங்கியதில் உடையில் தண்ணீர் தெறித்துவிட, உடனே அவளைத்தான் பார்க்கத்தோணுது...
வாயை மூடிக்கொண்டு கண்களால் சிரித்தாலும் கன்னக்குழி காண்பித்து கொடுத்துவிடுகிறதே...
இப்ப என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு... ?.. கைகுட்டை எடுத்து துடைத்துக்கொள்கிறான், முகத்தில் வழிந்த அசடை...
சரி அடுத்த சிக்னலில் திரும்பி விடுவாள்.. ஆமா அவள் பேர் என்னவாயிருக்கும்?... பத்மா, தேவி, திவ்யா?... என்ன இது என்னவா இருந்தா என்ன.. ராட்சசி....
" அட இன்னிக்கு என்ன ஆச்சர்யமா சிக்னலில் திரும்பாமல் நேரே வருகிறாள்?..அதுவும் இன்னிக்கு பார்த்தா?... ம் இருக்கட்டும்.. என்னை ஃபாலோ பண்ணுகிறாயா?...
சரி நான் திரும்பப்போகிறேன்... என் இடம் வந்துவிட்டது... கையசைத்து டாட்டா காண்பிக்கணும் போல் ஒர் உணர்வு...
என்ன ஆச்சர்யம், அவள் கையசைக்கிறாள்... எனக்கா, இல்லை என் பின்னால் யாருக்காவதா?.. இல்லை எனக்குத்தான்.. இப்ப ரொம்பவே அழகாய் தெரிகிறாள்..
என்ன இது நான் நுழையும் காம்பவுண்டில் அவளும் நுழைகிறாள்....
ம்.ம்.. எ...எ...எ.ன்னைப்பார்த்து மறுபடியும் சிரிக்கிறாள்.. நான் ஏன் இன்னும் முகத்தை கடுகடுன்னு வெச்சுக்கணும்..... என் உடடயைப்பற்றி இப்ப கவலைப்பட வேண்டாம்...
இனி தினமும் உன்னை இங்கு சந்திக்கப்போகிறேன் .. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குது..?
நானும் சிரிக்கப்போகிறேன் என் அப்பாவின் தோளில் சாய்ந்துகொண்டு...உன்னைப்போலவே...நீயும் எல்கேஜி யா..?

Subscribe to:
Posts (Atom)