Wednesday, July 9, 2008

தொடர்ச்சி...- பாகம் 1.

அலீமாவின் வீட்டுக்கு சென்று பார்த்தோம் அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை... முதுகில் வலி.. மாத்திரை சாப்பிட்டும் நிற்கவில்லையாம்..

மேலும் பல பரிசோதனைக்கு பரிந்துரைத்தார்களாம்.. அவளுக்கு பயம் .. தண்டுவடம் டிஸ்க் விலகியிருக்கலாமோ என.. வாழ்நாளெல்லாம் கஷ்டப்படணுமே என கவலை..

சொல்லும்போதே கண்களில் நீர்த்துளி..எனக்கும்.." அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.. இருந்தாலும் மருத்துவ உலகில் இப்ப நவீன சிகைச்சையுள்ளது.. சரியாகிவிடும்.."

என ஆறுதல் சொல்ல, " இல்லை, ஆயுசுக்கும் இருக்குமாம்.. எனக்கு குழந்தைகள் பத்திதான் அதிக கவலை " என்கிறாள்..

" அப்படி ஒன்று நேர்ந்தால் ஆயுசுக்கும் நானிருக்கேன் அலீமா.." என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது...எனக்கு உள்ளே பயம் அதிகரித்தது...அவள் வேதனை குறித்தும், இன்னும் என்னை நல்ல நிலைமையில் வைத்திருக்கும் கடவுளை நன்றியோடு எண்ணியும்..நான் செய்ய வேண்டிய வேலை அப்ப நிறைய இருக்கு போல...

அவள் கணவரே எல்லா பணிவிடைகளும் செய்கிறார் அன்பு மனைவிக்கு...

--------------------------------------

3 வருடம் முன்பு.. சலீம் அழைக்கிறார்.. " சாந்தி ஒரு விஷயம். அலீமா வந்து சொல்வாள்.."

என்னவாயிருக்கும்.. வரும்வரை சஸ்பென்ஸ் தாங்கவில்லை.. உள்ளே நுழைந்தவளைப்பார்த்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. வாயும் வயறுமாய்..

அதே நேரம் நானும் அதே நிலைமையில் இருப்பதை பார்த்தௌம் அவளுக்கும் மகிழ்ச்சி..

இருவருக்கும் இரண்டாவது குழந்தை 3 மாத வித்யாசத்தில்.. பிரசவத்துக்குமுன் ஓர்நாள் அவளை பார்ப்பதற்காக நான் வருகிறேன் என்றபோது,

" என் கணவர் வந்து அழைத்து வருவார்.. வீடு மாற்றியுள்ளோம்... சிரமம் வேண்டாம் என்றாள்.."

அடுத்த 1 மணிநேரத்தில் பலத்த மழையில், அவர்கள் வண்டி வந்தது.. மூத்த மகன் ஓடிவந்தான் .. ஏறச்சென்றபோது அதிர்ச்சி...

ஓட்டுனர் இருக்கையில் அலீமா... " என்ன இது.. நீயேன் இந்த நேரத்தில் மழையில் வண்டியை ஓட்டிக்கொண்டு?" திட்டினேன்..

" என் கணவர், உங்களுக்காக இந்திய உணவு ( ரொட்டி ) தயாரிக்கிறார்.. அதனால்தான்..."

இப்படித்தான் 300 கிமீ பயணத்தைகூட சாதரணமாக ஓட்டிச்செல்வாள்.. அதுவே முதுகுவலி வந்திருக்குமோ?..

என் பையன் அதிசயிப்பான், அம்மா ஆண்டி உங்களவிட ரொம்ப ஸ்மார்ட் என்று .. பெருமையாயிருக்கும்...என் தோழியைபற்றி..

என்னவென்று சொல்வது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை, இல்லை, அன்புத்தொல்லையை...???இப்படித்தான் அதிகமா என்னை வருத்தப்படச்செய்வாள்

டெலிவரி சமயம் கண்டிப்பாக என்னை கூப்பிடு.. நான் வருவேன் உடனே என்றேன்.. குழந்தை பிறந்தபின் கூப்பிடுகிறாள்.. எனக்கு உதவ நினைப்பாளே தவிர,

என்னிடம் உதவி கேட்டு என்னை தொந்தரவு செய்துடக்கூடாது என்று நினைப்பாள்...

கணவருக்காக பாகிஸ்தான் உடையணிந்து முஸ்லீமாக மாறி, பாகிஸ்தான் சென்று உறவுகளையும் 2 மாதம் மகிழ்ச்சிபடுத்தி வந்தாள்..

இன்றும் அலுவல் விஷயமாய் மட்டும் தாய்லாந்து உடை, மற்றபடி பாகிஸ்தான் உடையில்.. .

சிலரிடம் அன்பு காட்டினால் ஏமாறலாம்.. ஆனால் அலீமா போன்றோர் அதை பன்மடங்காக்கி திருப்பித்தருகிறார்கள்....நான் இப்ப கடனாளியாய்..

-------------------அடுத்து நான் பார்த்து வளர்ந்த ( சரஸ் ஆன்டி) கடவுள்...------------------------------------------------------

வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர்கள்..


இந்த இழையில் என் வலைக்காகவும் பின்னாளில் நினைவுபடுத்திக்கொள்ளவும் நான் என் வாழ்நாளில் சந்தித்த அதிசயிக்கத்தக்க , அற்புதமானவர்களை பற்றி

எழுதுகின்றேன்.. என் வாழ்வையே மாற்றிய பங்குண்டு, என் வாழ்வை அர்த்தமாக்கியதும் உண்டு...மொத்தத்தில் இவர்களை சந்தித்தது நான் பெற்ற பெரும்பேறு..

இதில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே.. சம்பவங்கள் மட்டுமே உண்மை..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில் அலிமா.... ஐஸ்வர்யாராயைவிட அழகி.. இதுக்குமேல் வெள்ளையாக முடியாத கலர்..நடுத்ததர உயரம்...ஆனால் இவையெல்லாம் என்னை வசீகரிக்கவில்லை..

என்னை ஆட்கொண்டது அவளின் குழந்தைத்தனமான, வெகுளித்தனமான புன்னகை... என் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு குடியிருக்க வந்தார்கள், கணவனும், மனைவியும், 2 மாத

கைக்குழந்தையும்.. நான் யாரிடமும் வலிய சென்று பழகுவதில்லை பொதுவாக... வெறும் புன்னகை பறிமாற்றம் மட்டுமே.. கணவர் பாகிஸ்தான், அலிமா, தாய்லாந்து.

காதல் திருமணம்..பலத்த எதிர்ப்பில்..

என் மூத்த பையனுக்கு அப்ப 3 வயது.. அவனை மட்டும் கூப்பிட்டு விளையாடுவார்கள்.. ஒருநாள் ஒரு விளையாட்டு சாமானுடன் அவன் வீடு திரும்ப,

" அதைக்கொண்டு குடுத்துவிடு என நான் சொல்ல, அதற்குள் அவர் ( சலீம்) " அது அவனுக்குதான் வாங்கினேன் என்றார்... ஆரம்பித்தது எங்கள் நட்பு..

" அலீமாவுக்கு குழந்தை வளர்க்க கொஞ்சம் உதவ முடியுமா?."

" கண்டிப்பாக.. கரும்பு தின்ன கூலியா?.."

அன்றிலிருந்து அவன் எங்கள் வீட்டு செல்லக்குழந்தை...அம்மாவிடம் இருக்கும் குழந்தை நான் வேலைவிட்டு திரும்பியதும் கைபோட்டு என்னிடம் தாவும்..

அப்படியே அழைத்துச்செல்லணும் அவனை.. என் கணவரின் மீசை பார்த்து மட்டும் பயம்.. ( கொஞ்சம் குழந்தைகிட்ட சிரிச்சாத்தான் என்னவாம்னு சொல்லணும்) அனேக நாட்களில்

என் வீட்டில்தான் அவனுக்கு தூக்கம் சாப்பாடு எல்லாம்..இத்தனைக்கும் அலிமாவும் நானும் அதிகம் கதை பேசுவதுகூட நேரமிருக்காது.. எல்லாம் குழந்தை பற்றி தான் பேச்சு இருக்கும்...

என்னைவிட என் பையன்மேல் அவர்கள் இருவரும் அன்பு செலுத்துவதும், அவன் பள்ளிவிட்டு

வந்ததும், அவனுக்கு வேண்டிய பழங்களை நான் சொல்லாமலே அழகாக வெட்டி மேசையில் வைப்பதும், அவனுடன் விளையாடுவதும்... சந்தோஷமான நாட்கள்., அவை.

அதேபோல் நான் வாரம்தோறும் வெளியே போனால் அவள் குழந்தையில்லாமல் செல்லுவதில்லை.. அவனுக்கு வேண்டிய பாலுடன் ,டயப்பருடன் 2 மணிநேரம்

அமைதியாக எந்த குழப்பமும் இல்லாமல் வருவான்.. அவளுக்கோ ஆச்சர்யமாயிருக்கும்.. அவளிடம் அத்தனை குழப்படி..நான் சொன்னால் உடனே கேட்பான் குழந்தை..

அவளிடம் பிடிவாதம்.. இப்படியாக என் குழந்தை அவளிடமும், அவள் குழந்தை என்னிடமும்...

ஆனாலும் அவளிடம் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும்... கணவர் மிக அன்பானவர் என்றாலும் குடிகாரர்.. . அதனால் அடிக்கடி பிரச்சனை...வெளியில் காண்பிக்க மாட்டாள்.

அவள் கோபிப்பதும் அவர் அவளை கொஞ்சி கொஞ்சி ( ஹனி ஹனின்னு ) சமாதானப்படுத்துவதும் அற்புதமான ஓர் தாம்பத்யம்....

ஒரு நாள் இரவு 11 மணி. சலீமிடமிருந்து போன்.." அலீமாவை பார்த்தீர்களா?."

வீடு சென்று தட்டினால் ஆள் இல்லை... பதருகிறேன் நான்.." என்னாச்சு உங்க கிட்ட சொல்லலையா?.. போன் எடுக்கவில்லையா?.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு போனாளா?.."

" ஆமா.. கொஞ்சம் பிரச்சனை... ஆனா இப்ப எங்க போனான்னு தெரியலை.. பயமாயிருக்கு..."

" சரி நீங்க பயப்படாதீங்க . என் கணவர் சென்று தேடிப்பார்த்து கூட்டி வருவார்... வந்ததும் தகவல் தருகிறேன்..."

1 மணிநேரம் தேடியும் காணோம்.. அக்கம்பக்கத்தில் எங்கும் இல்லை..

பின்பு 2 மணிநேரம் கழித்து வந்தாள், அழுது முகம் வீங்கி....எனக்கு பயங்கர வருத்தமும், கோபமும்.. இத்தனை பழகியும் என்னிடம் கூட சொல்லாமல்..?

" ஏன் அலிமா, இந்த குளிருக்குள் குழந்தையையும் தூக்கிக்கொண்டு..?." அழுகிறாள்....

மறுநாள் பிரச்சனையை சொன்னபோது " இதெல்லாம் சகஜம் என்றும், நாளாக சரியாகிவிடும் என்று மட்டுமே ஆறுதலளிக்க முடிந்தது..செத்துவிடலாம் என்றுதான்

போனாளாம், பின் குழந்தையை கொல்ல மனமில்லாமல், ஒரு பேரூந்தில் ஏறி ஊர் முழுக்க சுற்றிவிட்டு வந்துள்ளாள்.. காதல் திருமணம் அதுவும் பாகிஸ்தானியருடன் என்பதால்

அவள் குடும்பத்திலும் மரியாதை இல்லையாம்.. குடும்பத்தில் மிகவும் பாசமுள்ளவள்... அன்றிலிருந்து என்னை அன்னையுமாக்கினாள்...எப்போதும் அவளை சந்தோஷப்படுத்தி

ஊக்கப்படுத்தி வெளியில் அழைத்துச்சென்று ஜாலியாக பார்த்துக்கொள்ளும் கூடுதல் மகிழ்ச்சியான பொறுப்பெனக்கு...

சலீம் குடும்பத்தில் மூத்த பையன், அப்பா கிடையாது. 3 தங்கை 2 தம்பி.. அனைவருக்கும் பணம் அனுப்பணும்.. பொறுப்புகள் அழுத்த அதிகம் குடிப்பார்.. ஆனால் மிகவும்

நல்லவர்...குடியை மட்டும் விடவே முடியவில்லை.. அவர்கள் புது வியாபாரம் ஆரம்பிப்பதால் வீடு மாற வேண்டிய சூழ்நிலை.. எனக்கு கவலையெல்லாம் அந்த குழந்தை

எப்படி என்னைவிட்டு பிரியும், நான் பிரிந்தாலும்.. என் பையனுக்கு சாம்பார் சாதம் ஊட்டும்போது என் கையை பிடித்து அவன் வாய்க்குள் வைப்பானே..என்மேல் படுத்து தூங்குவான்.

அதன்படியே பிரிந்தார்கள்..ஆனால் 1 மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் மறுபடியும் வந்தார்கள்... ஆனால், அடுத்த 3 மாதத்தில் வேலைநிமித்தம் நாங்கள் மாறவேண்டிய சூழ்நிலை..

இப்படி 8 வருட பழக்கம்.. மாறியபின் தொலைபேசியில் தொடர்பு.. சிலசமயம் 3 மாதம், 6 மாதம் கூட பேசாமல் இருப்போம், அவரவர் வேலை பழுவில்..

ஆனால் திடீரென்று அழைப்பு வரும்.. " இன்று வரலாமா.." ..

" என்ன கேள்வி அலீமா... உடனே வாம்மா.." என்ன வேலை இருந்தாலும் அலீமா குடும்பத்தினருக்கு முதலிடம்...பெரிய வண்டியை ( land rover) எடுத்துக்கொண்டு குழந்தையை அழைத்துக்கொண்டு

வந்திடுவாள்..சிலசமயம் கடற்கரை அல்லது குழந்தைகள் பூங்கா செல்வோம்.. மனம்விட்டு பேசுவாள்.. அவள் ஆறுதலைடைந்ததாக நினைத்துக்கொண்டு.. ஆனால்

நானல்லவோ மகிழ்ந்திருப்பேன் அவள் அன்பை கண்டு... இரக்க குணம் கண்டு...அழகு , அறிவு, வசதி எல்லாம் இருந்தும் அப்படி ஒரு எளிமை.. இன்னும் ஊருக்கு

போனால் அவள் அன்னையுடன் வயல் வேலையில் உதவி செய்வாளாம்.. அப்பா இல்லாமல் ஒத்தையாக அவள் அன்னை 4 பெண் , 1 பையனை படிக்கவைத்துள்ளார்.

ஒரு அக்கா அமெரிக்காவுக்கு அரசாங்கமே படிக்க அனுப்பியதாம்.. அமெரிக்கரை ( இந்திய வம்சம்) மணமுடித்து, விவாக ரத்தாகி 12 வயதில் ஒரு பையன்.. அவள் விடுமுறைக்கு

தாய்லாந்து வந்தால் 1 மாதம் புக்கெட் கடற்கரையில் வீடெடுத்து சொந்தங்கள் அனைத்தையும் சந்தோஷப்படுத்துவாராம்...எளிமையிலும் எளிமை..தன் அன்னையின்

மேல் , ஒரு மனநிலை சரியிலாத அக்காவின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பு என்னை அதிசயிக்கச்செய்யும்...எல்லாத்துக்கும் சேர்த்தாற்போல் அவள் சகோதரன் மட்டும்

சரியான ஜாலி பேர்வழி. அழிப்பதற்காகவே பிறந்தவன்.. ஆனாலும் மிக மரியாதைக்காரன் நான் பார்த்தவரையில்...20 வயதில் மணமுடித்து பின் மனைவியை

கைக்குழந்தையோடு அனுப்பிவிட, அவளை அலீமா அழைத்துவந்தாள் இங்கு...வெறும் 18 வயது.. அழகான குழந்தையுடன்.. ..அவளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தாள் வேலைக்கு அலிமா..

தன் சகோதரன் மனைவி என பார்க்காமல், ஒரு பெண் என மட்டுமே பார்த்து இளகிய மனம் அவளுக்கு...

( இன்று அலீமாவுக்கு முதுகுவலி.3 மாதத்துக்குபின் சந்திக்க செல்கிறேன்.. அவள் நினைவில் பதிவு..)

*************************************************தொடரும் *****************************************************

வீட்டுல விருந்தாளிகள்!!!!

" அம்மா தேர்வு முடிந்ததும் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன். மாட்டேன்னு சொல்லக்கூடாது"
இப்படியான பீடீகை, உருட்டல், மிரட்டல் ஏப்ரல் மாதத்திலிருந்து வர ஆரம்பித்தது...
தேர்வு முடிந்து ரிஸல்ட்டும் வந்தாயிற்று.... அலுவலிருந்து திரும்பியதும் ஓர்நாள்...
" அம்மா இன்னிக்கு கேப்பேன் .. ஆனா இப்ப இல்ல.. நீங்க சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்க அப்ப கேட்பேன்..."
" சொல்லு இப்பவே.."
" இப்ப சொன்னா கண்டிப்பா " நோ" தான் சொல்லுவீங்க.."
பையனுக்கு நம்பளோட பல்ஸ் தெரிஞ்சுருக்கே... பரவாயில்லையே...சரி.. அதுக்கே 10 மார்க் குடுத்தாச்சு..
" அம்மா தமிழ் படிக்கவா?..."
அட, என்ன ஆச்சர்யம்?.. வேப்பங்காய குடுத்தாகூட அப்படியே சாப்பிடுவான்.. தமிழ் படிக்கப்போறானா அவனேவா??????
ஹிஹி.. சரி 20 மார்க்...
படித்துக்கொண்டே, " அம்மா, அது ஒண்ணும் அவ்வள்வு விலையெல்லாம் இல்லை.. வேணுமின்னா என்னோட செலைவையெல்லாம்
குறைத்துக்கொள்கிறேன்.."
" இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?.. இதென்ன டிராமா?.."
" இல்லம்மா.. நீங்க ஹேப்பி மூட் வந்தப்புரம்.."
அட நான் எப்ப ஹேப்பி மூட்ல இல்லை?.. சரி பாவம்.. 30 மார்க் வரை கொடுத்தாச்சு.. ஆனாலும் உள்ளூர கலக்குது..
என்னத்த பிளான் பண்ணியிருக்கானோ?.. ஒருவேளை நண்பர்களை வீட்டில் தங்க அழைப்பானோ?..நேரம் ஒதுக்கமுடியாதே.
இல்ல மறுபடியும் அம்யூஸ்மெண்ட் விளையாட்டு ன்னு ஏதாவது?.. அய்யோ முடியாது..
பேசாம லீவுக்கு இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம்... எனக்கு வேணும்... சின்னவனுக்கு துணையிருப்பான்னு நினைச்சேன்...
எல்லா வேலையும் முடிந்ததும், பூனைகுட்டி போல மெதுவா, " அம்மா, அம்மா ன்னு " வழியுறான்...
" சொல்லு.."
" அம்மா நல்ல மூட்ல இருக்கீங்களா?.."
" அது முக்கியம் இல்லம்மா.. தேவைன்னா மட்டும்தான் கிடைக்கும் தெரியுமில்லையா?.. அம்மா மாட்டேன்னு சொன்னா
அழக்கூடாது...சரியா?."
இப்பவே பொத்துன்னு முகம் கீழே தொங்க ஆரம்பித்தது..
" சரி சொல்லு.. உதவ பார்க்கிறேன்.."
" அம்மா."
"ம்."
" அம்மா... ஒரு ஹெம்ஸ்டர் வேணும்...குட்டிதான் அம்மா.. நான் நல்லா பாத்துப்பேன்.."
" தம்பி..........."
" அம்மா இருங்க சொல்லி முடிக்கிறேன்... தயவுசெய்து அதுக்குள்ள " நோ" சொல்லாதீங்க...ஹேம்ஸ்டரால எந்த பிரச்சனையும் இல்லை.
அதுக்கு சாப்பாடு , சுத்தப்படுத்துதல் எல்லாம் நான் பார்த்துப்பேன்...யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன்..."
உனக்கே ஒருத்தர் வேலை செய்யணூம்.. இதுல ஹேம்ஸ்டர் வேறயா?..
" அம்மா, நாய் தான் வாங்கித்தரல, அட்லீஸ்ட் பூனை அதுவுமில்லை... எனக்கு போரடிக்குது..."
எப்படியோ நல்லா என்னை ஐஸ் வெச்சு அழுது, சாதிச்சுட்டான்.. அடுத்த பிரச்சனை அப்பாவை சமாளிக்கணும்..
மனத்தில் டயலாக் ஓடுது.. கேள்வியும் நானே... பதிலும் நானே...
அடுத்த நாள் அவனை அழைத்துச்சென்று வாங்கி வந்தாச்சு... ஒண்ணு மட்டும் கேட்டவன், அங்கு சென்றதும்,
பிளீஸ், என்று 1000 முறை கெஞ்சி, கடைக்காரர் என்னை மிக கொடுமைக்காரியாய் எண்ணுவதற்குள் வாங்கித்தரவேண்டிய
நிர்பந்தத்துக்குள் சதி செய்துவிட்டான்..
இப்ப 3 நாளா அதுகூடதான் .அதுக்கு சொக்கா போடாத குறை.. " அம்மா இந்த துண்டை எடுத்துக்கவா?.."
இணையத்தில் அது குறித்து அனைத்து செய்திகளையும்
வாசித்து, அதுக்கு ராஜ உபசாரம் நடக்குது வீட்டில்... அது என்னடான்னா, ஒரு சுற்றும் வீல் ஒண்ணில் ஏறி நாள்
முழுதும் ஓட்டிக்கொண்டிருக்கும்.. அதை தினமும் தோட்டத்துக்கு அழைத்துச்செல்வதும், அவனை சுற்றி ஒரு மழலைப்பட்டாள கூட்டமும்.
எப்படியோ பொழுது போகுது.. வீட்டை இரண்டு பண்ணுவதோடு, எப்பவும் அதைப்பற்றியே பேசிப்பேசி ..ஷ்ஷ்ஷ்ப்பப்பா..
நேற்று சின்னவனுக்கு காய்ச்சல் ( அதுதான் ரொட்டீனா வருமே..) அடுத்த தலைவலி ஆரம்பம்.. பாட்டுக்கள் ஆரம்பம் அப்பாவிடமிருந்து..
ஹேம்ஸ்டர் வந்ததால் காய்ச்சலும்.. இத்தனைக்கும் அவனை அதன்கிட்ட கூட நெருங்க விட மாட்டான் பெரியவன்..
மத்தளத்துக்கு 2 பக்கம் மட்டும்தான் இடி..
ஹிஹி.. எனக்கு எல்லா பக்கமும்...விருந்தாளிங்கள எப்படி அனுப்பமுடியும்???/

Tuesday, June 10, 2008






பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 4*


மலைமேலே விளையாட்டுகள்..
முதலில் நாங்கள் சென்றது, மலையிலிருந்து கீழே சருக்குவது.. ஒரு மிதவைமேல் படுத்துக்கொண்டு.. உண்மையிலேயே பயம் . ஏனேன்றால், அந்த மிதவை குப்புற கவிழுமோ என்ற பயம்.. பையன் மட்டும் சென்றான்..நான் உற்சாகப்படுத்தியதில்...மீண்டும் மேல வந்தவன் , " அம்மா நல்லாருக்கு " எனவும், சரி நீயேஇன்னோரு முறை எனக்கு பதிலாக போ என அனுப்பினேன்..
கிட்டத்தட்ட 7 மாடி உயரத்திலிருஃது நீண்ட பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதில் இந்த மிதவையை தள்ளிவிடுகிறார்கள், அது வழுக்கிக்கொண்டே செல்ல கூட தண்ணீரும் தெளிக்கிறார்கள் அங்கங்கே.. அதை கவனிப்பது ஒரு கர்ப்பிணி பெண்.. அவள் ஒருமுறை தண்ணீரி பைப்பை எடுக்க அது சீரிக்கொண்டு அவள்மேலேயே தண்ணீரை கொட்ட, அடுத்த பாவம்...கொஞ்சம் கவனக்குறைவென்றாலும் அவள் வழுக்கலாம்...
ஏன் இந்த இடத்தில் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு வருத்தம்..அதுவும் கர்ப்ப காலத்தில்..
அது முடிந்ததும் , அதே போல் ஒரு மிகப்பெரிய பந்து , அதனுள்ளும் தண்ணீர் செலுத்தி, ஆளையும் செலுத்தி, மூடி விட்டு மலையிலிருந்து சருக்கில் உருட்டி விடுகிறார்கள்.. இது பயங்கர சிரிப்பாயிருந்தது... உள்ளே உள்ள ஆள் கண்டபடி புரட்டி போடுது , முகத்தில் தண்ணீர் வேறு பாய்கிறது.. வேகம் வேறு.. விழுந்து விழுந்து சிரித்தேன், எல்லாரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தாலும்.. ( சில நேரம் சிரிப்பை அடக்கமுடியாது.. அடக்க அடக்க வெடிக்குது..ஏன் என தெரியலை..)
நேரமாச்சு குழந்தை பற்றி விசாரிக்க , தகவல் சொல்ல ,என கைபேசியில் கணவரை அழைத்தால் செல்லமாட்டேங்குது.. நெட் ஒர்க் பிரச்சனை போல..சோதனை இப்படித்தானே வரும்..
அடுத்து ஃபிளையிங் ஃபாக்ஸ் அன கயற்றில் மலை உச்சியில் இருந்து தொங்கிக்கொண்டே கீழே இறங்குவது...8 80 வயது வரை செல்லலாம் பயமில்லை...
அடுத்து நீரில் சருக்கு... மேலே ஒரு படகில் ஏறி சடாரென்று கீழே நீரில் இறங்குவது..இதெல்லாம் பழசு..
அடுத்து கார்ட் க்ராஸ்.. இதுக்கு பையனை அனுப்பலாம் என்றால்
" உங்க பையன் வயது என்ன?.18 க்கு மேலே கீழா?." ஒருவேளை இது சின்னப்பசங்களுக்கு மட்டும் போல என எண்ணி, " ஹிஹி 18 க்கு கீழே " என்றேன்..
" அய்யோ மன்னிக்கவும் , முடியாதே." எனவும்,
" ஆனா அவன் நல்லா ஓட்டுவான் " நம்பிட்டாங்க.. அவன் பார்க்க 20 வயசு பையன் போல் இருக்கான்.. , 12 வயதுக்காரன்..
" சரி அப்ப நீங்களும் அமருங்கள்.. "
"அடப்பாவமே இது என்ன சோதனை...சரியென்று நானும் ஹெல்மெட் போட்டு நானே ஓட்டினேன்..பையனுக்கு ஓட்ட முடியவில்லை என வருத்தம்...
ஒருவழியா முடிந்து மீண்டும் ரயில் வண்டி ஏறி வர, எதிர்வண்டியில் சின்னவனும் அப்பாவும்.. ஹஹஹா
திரும்பி அவர்கள் வரும் வரை கடையில் சென்று சூடா காஃபி குடிக்க சென்றோம்..
பையன் சூடா சூப், நான் 2 காஃபி தயாரிக்க, கணவர் குழந்தையுடன் வந்து சேர்ந்தார். அவரை படுத்தி எடுத்துவிட்டானாம், அம்மாவை தேடி..ஏன் போன் , பேசலை?. , 1001 கேள்விகள்...
" சரி எதுக்கு 2 காஃபி.?. எனக்கு வேண்டாம்.."
" ஹிஹி.. நன்றிங்க.. இது ஓட்டுனருக்கு.. பாவம்.. மழைவேறு..அசதியாயிருப்பாரே.."
" அவர் இதெல்லாம் குடிக்கமாட்டார்.."
நான் சென்று குடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்..பெரியவனுக்கு ரொம்ப சந்தோஷம்.. " ரொம்ப நன்றிம்மா. நீங்க ரொம்ப நல்ல அம்மா" , என கொஞ்சினான்..
" ஆமா , இப்ப இப்படி சோலு, படிக்க சொன்னா மட்டும், கோச்சுக்கோ"
" சாஆஆஆரிம்மாஆஆ"மறுபடியும் கொஞ்சல்..
அதோடு போட்டிபோட்டு சின்னது முத்த மழை பெய்து கொஞ்ச, அப்பாவுக்கு கோவம் வருது..
" என்னதான் நான் கவனித்தாலும் , பாரு 2ம் உன்கிட்டதான் வருது...என்னவோ வசியம் பண்ற..ஊரிலுள்ளவர்கள் மேலெல்லாம் பாவம் பார்க்க என்னவிடுத்து..என்கிட்ட இருக்காமல் அம்மா என்று தேடுகிறான் சின்னவன்.."
அங்கேயே தங்குவதற்கும் அழகான கூடரங்கள், விடுதிகள் உள்ளன.
எல்லாம் முடிந்து அசதியுடன் கிளம்பும்போது எஸ் எம் எஸ் வருது..
அலுவலகத்திலிருந்து, மடல் பார்க்கச்சொல்லி...
எல்லோரும் வீடு வந்து சேரும் வரை நன்றாக தூங்க, சின்னவன் ஏற்கனவே தூங்கிவிட்டதால் என்னுடன் விளையாடிக்கொண்டே ,பேசிக்கொண்டே வர, எனக்கு மட்டும் அசதி..
வந்ததும் மடல் பார்த்து பதில் அனுப்பி, குளித்து , ஒதுங்க வைத்து படுத்ததுதான் தெரியும்.. தூக்கம் இழுத்துக்கொண்டு சென்றது..
சில விளையாட்டுகள் ஆபத்தானவை, நம் உடல் நலம் தெரிந்து விளையாடணும்.. எனக்கு சிறு வயதிலிருந்தே இதில் ஆர்வமிருந்ததால் , பிள்ளைகளை பழக்கும் பொருட்டு, கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் செயல்பட்டேன். படிப்பவர்கள் தயவுசெய்து எளிதாக எண்ணவேண்டாம்... என்னுடைய network வேலையும் அப்படி, மேலும் , நானும், வீட்டுக்காரரும், விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்றதால் , அடிவாங்கியதால்,கொஞ்சம் பயம் குறைவு.. அவ்வளவே. குழந்தைகளை சிறு வயதிலேயே பயம் போக்கி, வளர்ப்பது நல்லது.. அதற்கான சிறு முய்ற்சி இது...
வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..





பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 3



அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடம், மலை அருவியிலிருந்து கயறு கட்டி கீழே இறங்குவது...தேடினோம் வந்தது... அப்போதுதான் ஞாபகம் வந்தது , பணம் எடுக்கவேண்டும்.. எடிஎம் இயந்திரம் அங்கு இல்லை.. ஊருக்குள் தான் வரணும்... 30 கி.மீ ஊருக்குள் வந்து திரும்பி சென்றோம்.. மலையழகை ரசிப்பதிலேயும், சரக்கொன்னை, பூமரங்கள் ( flame of forest ) வழி நெடுகிலும் பந்தல் போட்டதுபோல் இருந்த அழகும், வயல்வெளியும், அதில் உள்ள தனித்தனி பண்ணை வீடுகளும், குதிரை லாயங்களும், ஏறி இறங்கி மீண்டும் ஏறி இறங்கி வளைந்து செல்லும் சாலையும்,மிக அழகு..க‌ண்ணுக்கும் , ம‌ன‌துக்கும் குளிர்ச்சி..

அருவியிலிருந்து க‌ய‌று க‌ட்டி இற‌ங்கும் இட‌த்துக்கு வ‌ந்தால் அருவியும் இருக்கு, கீழே ஓடையும் இருக்கு ஆள்க‌ள்தான் இல்லை... காலில் ஷூ மாட்டிக்கொண்டு ப‌ந்தாவாக‌ இற‌ங்கி விசாரித்தால் வார‌த்தில் 3 நாள் ம‌ட்டுமே விளையாட்டு உண்டாம்... ச‌ரியான‌ ஏமாற்ற‌ம்...என‌க்கும் பெரிய‌வ‌னுக்கும்.. அப்பாவுக்கு குஷி கேக்க‌ணுமா?..
ச‌ரி இன்னும் இதே போன்று இட‌ம் வேறு க‌ண்டிப்பாக‌ இருக்கும் என்று ஆறுத‌ல்ப‌டுத்திக்கொண்டு, முய‌ற்சி உடையார் இக‌ழ்ச்சி அடையார் போல், பாதையெங்கும் விள‌ம்ப‌ர‌ப்ப‌ல‌கை பார்த்துக்கொண்டே வ‌ந்த‌தில் ஒரு விளையாட்டு (அம்யூஸ்மென்ட் ) பூங்கா க‌ண்ணில் ப‌ட்ட‌து..
குழ‌ந்தை தூங்கிவிட்டான்.. " பெரிய‌வ‌னுட‌ன் நீங்க‌ போறீங்க‌ளா , இல்லை நான்?."

" அய்யோ ஆள‌ விடும்மா... நான் காரிலேயே இருக்கிறேன் குழ‌ந்தை பார்த்துக்கொண்டு.."

நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு வ‌ந்தால் ஒரு நீள ர‌யில் வ‌ண்டி த‌யாராய்.. அங்கிருந்து ம‌லைக்குள் 3 கி.மீ செல்ல‌ணுமாம்.. பைய‌னுக்கு எங்கே உட்காருவ‌து என்று குழப்பம்... முன்னால‌, இல்ல‌ இல்ல‌ , பின்னால‌..
" வேண்டாய்யா, ந‌டுவில் உட்கார‌லாம், ம‌ழை வ‌ந்தாலும் வ‌ரும்..."
" இல்ல‌ம்மா, வாங்க‌ முன்னால்.."

ஏறி உட்கார்ந்து வ‌ண்டி கிள‌ம்பிய‌தும், ம‌ழை சோரென்று அடித்து பெய்த‌து, முக‌த்தில்.. முழுதும் ந‌னைந்தோம்.. என் கைபேசியை ம‌ட்டும் நனையாம‌ல் பார்த்துக்கொண்டேன்.. டிக்கெட், பணம் அனைத்தும் நீரில்.குளிர் தாங்க‌ முடியாம‌ல் டைப் அடிக்குது விர‌ல்க‌ளும், உத‌டுக‌ளும்..

.மேக‌ங்க‌ள் எங்கள்மேல்பட்டு விரைவாக‌ க‌ட‌ந்து செல்லுது...அடுத்த‌ சிறிது தூர‌த்தில் வெயில் அடிக்குது... ம‌ழை நின்று.. ஆச்ச‌ர்ய‌மாய் இருக்குது..வ‌ண்டி ஏற்ற‌ இற‌க்க‌த்தில் ர‌ம்மிய‌மான‌ தாய் பாட‌ல்க‌ளுட‌ன், க‌வ்பாய் ஸ்டைலில் போகுது..

அனைவ‌ரும் க‌வ்பாய் போல‌ உடையும்.. எதோ அவ‌ர்க‌ள் கூட்ட‌த்தில் இருப்ப‌துபோல‌ உண‌ர்ச்சி..

எல்லோரும் ம‌ழையிலும் பாட்டுபாடி கைத‌ட்டிக்கொண்டு..என‌க்கோ த‌லையிலிருந்து த‌ண்ணீர் (+ முகத்தில் அசடு) சொட்டுகிற‌து துடைக்க‌கூட‌ துணியில்லாம‌ல்...பைய‌னுக்கோ குஷி..ம‌ழையில் ந‌னைவ‌து... ( பின்னால் பாடு என‌க்குத்தானே?.)
இப்ப‌ எதை விளையாடுவ‌து என்று.????..

விட்டு விட்டு ம‌ழை.



ஆனாலும் விளையாட்டு ந‌ட‌க்குது...

கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே விளையாட்டை நடத்தும் பெண் ஊழியர்களும் ..பாவமாயிருக்கு .." "அம்மா, பாவம் 3 ஹிஹி."


ச‌ரி என்று ஒவ்வொன்றாக‌ போனோம்...
நாளை க‌டைசி பாக‌த்தில் விளையாட்டுக‌ள்....

*************************************தொட‌ரும் க‌டைசி பாக‌ம்********
ப‌ர‌ப‌ர‌ப்பூட்டும் காட்டாறு , ம‌லை , அருவி விளையாட்டுக‌ள் ‍ பாக‌ம் 2

தலை குப்புர விழுந்ததும் எழலாம் என்றால் தண்ணீர் இழுக்கிறது... அப்போதுதான் சின்னவன் ஞ்ஜாபகம் வருது.. எங்கே சத்தத்தையே காணோம்.. அப்பாவும் மகனும் சுமார் 30 அடி தூரத்தில் , பத்திரமாக எழுந்து நிற்கிறார்கள்...என்னையும் பெரியவனையும் மட்டும் இழுத்து வந்துள்ளது தண்ணீர்.. ( ஆமா கொஞ்சம் கனம் அதிகம்..)
அங்கங்கே வலிக்குது , ஆனா எங்கெங்கேன்னு தெரியலை..
தண்ணீரில் எதிர்த்து சின்னவன் கிட்ட போனோம்... பேயரைந்தது போல் அப்பா..

" அப்பா, ஒன்னுல்ல‌, அப்பா, ஒன்னுல்ல‌, " என்று ஆறுத‌ல்ப‌டுத்துகிறான் குழ‌ந்தை...
ஏதோ எல்லாரும் உயிரோட‌தான் இருக்கோம் என்று ச‌ந்தோஷ‌ம்...ஆழ‌ம் அதிக‌மில்லை...
அத‌ற்குள் க‌விழ்ந்த‌ ப‌ட‌கை திருப்பிப்போட்டு ஏறும்போது தேடுகிறான் ப‌டகின் துடுப்பை..
அது கோவித்துக்கொண்டு விரைவாக‌ செல்லுது.. மீன் போல் ஒரே பாய்ச்ச‌லில் நீந்தி அதை எடுக்கிறான் ப‌ட‌கோட்டி..
ஒருவ‌ழியாக‌ மீண்டும் ஏறி உட்கார்ந்தோம்.. அப்போதுதான் யார் யாருக்கு என்னென்ன‌ காய‌ம் என்று லிஸ்ட் த‌யாரித்தோம்.. பாவ‌ம் அவ‌ருக்கு கை முழ‌ங்கையில் அதிக‌ சிராய்ப்பு.. என‌க்கு காலில்... பிள்ளைகளுக்கு ஒன்றுமில்லை க‌ட‌வுள் கிருபையால்..( இருந்தாலும்தான் என்ன‌.. ப‌ழ‌க‌ட்டும்)
என் காலில் ர‌த்த‌ம் பார்த்து கூச்ச‌லிடுகிறான் ம‌க‌ன்..
" ஐய‌ இது ஜூஜூபி.. நானெல்லாம் சின்ன‌ வ‌ய‌சுல..."
" அய்யோ ஆஅர‌ம்பிச்சுட்டாளா உங்க‌ அம்மா?.. இதுக்கு நான் த‌ண்ணீரிலேயே இருப்பேனே.."

ச‌ரி ஏற்கென‌வே வெந்த‌ புண்ணில் வேல் , ஞாய‌மில்லைதான் என்று நிப்பாட்டிக்கொண்டேன் என் பிராத‌ப‌ங்க‌ளை..
ஒருவ‌ழியா இப்ப‌ அடுத்து வ‌ந்த‌ 10 ப‌டிக‌ளையும் உல‌க‌ க‌ட‌வுளை வேண்டிக்கொண்டு ம‌றுப‌டியும் விழாம‌ல் வெற்றிக‌ர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்.
அந்த‌ ஆற்றின் இரு க‌ரையிலும் வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌ன் அக‌ன்ற‌ கிளைக‌ளை , நீரில் ப‌ர‌ப்பி விளையாட‌, அத‌னூடே நாங்க‌ள் செல்லும்போது எங்க‌ளையும் கொஞ்ச‌ம் பிடித்து கொஞ்சிய‌தில், சின்ன‌வ‌னுக்கு க‌ன்ன‌த்தில் சிராய்ப்பு..
இடையில் திடீரென்று பெரிய‌வான் " அப்பா உங்க‌ க‌ழுத்தில் பூச்சி " என்று ஏதோ டைனோச‌ர் இருப்ப‌துபோல் க‌த்த‌, நானும் ப‌ய‌ந்துபோய் பார்த்தால் ஒரு சின்ன‌ வ‌ண்டு...
பிள்ளைக‌ளுக்கு பூச்சி, எறும்பு கூட‌ பார்ப்ப‌து அரிதாகிக்கொண்டே வ‌ருகிற‌தே...
ப‌ட‌கோட்டி ம‌ட்டும் துடுப்பு போட‌, என் அருகில் இருந்த‌ துடுப்பை எடுத்து நானும் போட‌,
" நீ பேசாம‌ இருக்க‌மாட்டியா.. உன‌க்கு தெரியாது.."
" இல்லீங்க‌ அவ‌ன் பாவ‌ம்... ஒரு ஆள் எப்ப‌டி த‌னியாக‌ "
" பாவ‌ம் பார்க்க‌ ஆர‌ம்பிச்சுட்டீயா...இனி எங்க‌ளை ஒழுங்கா போய் சேர்க்க‌ மாட்ட‌.." பாவ‌ம் 1 என்று எண்ண‌ ஆர‌ம்பித்துவிட்டார்.
" இல்ல‌ அங்க‌ பாருங்க‌ ம‌த்த‌ ப‌ட‌கில் எல்லாரும் துடுப்பு போடுராங்க‌..நாம‌ளும் போட‌ணும்.. என‌க்கு ஆசை என்று விடுங்க‌ளேன் " உண‌மையில் பாவ‌மாயிருந்த‌து.. நானும் போட‌ ம‌க‌னும் போட‌, எளிதாக‌ இருந்த‌து...
ப‌டிக‌ள் வ‌ரும்போது நான் கொஞ்ச‌ம் பேல‌ன்ஸ் ப‌ண்ணி ப‌ட‌கை திருப்ப‌, அது ச‌ரியாக‌ இற‌ங்கிய‌து.. ஆனா இவ‌ர்க‌ள் ப‌ய‌ம்தான் தாங்க‌முடிய‌வில்லை..." அம்மா, ஆடாம‌ அசையாம‌ இருங்க‌ என்று.."
ஒருவ‌ழியா க‌ரை வ‌ந்த‌தும் ஒரு வாலிப‌ கூட்ட‌ம் கொஞ்ச‌ம் எங்க‌ளை பொறாமையாக‌ பார்த்த‌து.. நாங்க‌ள் ப்ரிதாப‌மாக‌ பார்க்கிறாங்க‌ என்று நினைத்தால் அப்ப‌டியில்லையாம்..
ஆற்றில் விழுந்து எழுவ‌தே கிள‌ர்ச்சியாம்.. அந்த‌ வாய்ப்பு அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌வில்லையாம்... அத‌னால் இன்னொருமுறை போக‌லாமா என்று யோசிக்கிறாங்க‌ளாம்... ந‌ல்லா யோசிங்க‌ப்பா.உங்க‌ வ‌ய‌சு அப்ப‌டி... இருந்தாலும் என் க‌ண‌வ‌ருக்கு இப்ப‌ கொஞ்ச‌ம் திருப்தி... ஏதோ நாமும் கொஞ்ச‌ம் சாத‌னை ப‌ண்ணிட்டோம் என்று...( இல்லாட்டி திட்டு ம‌ழை பெய்திருக்க‌லாம் .. த‌ப்பித்தேன்..)

அடுத்து, சின்ன‌வ‌னுக்கு உடுப்பு மாத்தி சாப்பாடு கொடுக்க‌ணும் .. அது தான் பெரிய‌ வேலை.. ந‌ல்ல‌வேளை ஒரு நாய் க‌ட்டிப்போட்டிருந்தார்க‌ள்.. மேலும் அருகில் மாம‌ர‌த்தில் மாங்காய் காய்த்து ப‌றிப்பாரில்லாம‌ல் இருந்த‌து அருகில் துர‌ட்டியும் ( ச‌ரியா??) ப‌றிப்ப‌த‌ற்கு.
ஓட்டுன‌ர் மாங்காய் ப‌றித்து போட‌ ஒருவ‌ழியாய் சாப்பாடு சென்ற‌து...
அனைவ‌ரும் குளித்து உடுப்பு மாற்றி இப்ப‌ திரும்ப‌வும் அதே ஆற்றை க‌ட‌க்க‌ணும்.. இந்த‌ முறை த‌யாராக‌ அங்கிருந்த‌வ‌ர்க‌ள் இன்னோரு வ‌ண்டியில் வ‌ர‌, நாங்க‌ள் ஆற்றில் சென்று இற‌ங்கி த‌ள்ள‌ த‌யாராக‌ இருக்கும்போது ச‌ர்ரென்று எங்க‌ளை ஏமாற்றிவிட்டு கார் விரைவாக‌ மேலேறிய‌து... சே எங்க‌ அனைவ‌ரின் வீர‌மும் காட்ட‌ முடியாம‌ல் போய்விட்ட‌து..

ச‌ரி முடிந்த‌தா , வீட்டுக்கு போக‌லாமா"
" அட‌ என்ன‌ இப்ப‌தான் ம‌ணி 12 ஆகுது.. இன்னும் இருக்கு விளையாட்டுக‌ள்... முத‌லில் ச‌ன்னாவும் ச‌ப்பாத்தியும் சாப்பிடுங்க‌ள் " என‌ ஆசுவாச‌ப்ப‌டுத்தி அடுத்த‌ விளையாட்டான‌ அருவியில் க‌யிறு பிடித்து இற‌ங்கும் ஆபத்தான விளையாட்டை நோக்கி சென்றோம்..


" ஆமா ஓட்டுன‌ர் சாப்பிட்டாரா. பாவ‌ம் அவ‌ர்.."
" பாவ‌ம் 2..அப்ப‌வே ச‌ப்பிட்டார்."




பாகம் 1


ஞாயிறன்று சுமார் 200 கி.மீ தூரத்திலுள்ள சாராபுரி எனுமிடத்திற்கு சென்றோம்..இயற்கை சூழ்ந்த இடத்தில் பலவிதமான சாகச விளையாட்டுகள் அமைத்துள்ளனர்.. அதில் முக்கியமானது, விரைந்து ஓடும் காட்டாற்றில் மிதவை படகில் துடுப்பு போடுவது..சுமார் 6 மாடி உயரமுள்ள அருவியிலிருந்து கயறு பிடித்து கீழே இறங்குவது , போன்ற ஆபத்தான , அதே சமயம், கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்..
இது தாய்லாந்து வந்ததிலிருந்தே ஆசை .. இப்போதுதான் நிறைவேறியது...
ஓட்டுனரிடம் சொன்னால் அவருக்கு அப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாதாம்...கேக்கணுமா, பிள்ளைக்கும் , அப்பாவுக்கும், முணுமுணுப்புக்கு...
பேசாமல் வாருங்கள், நான் அழைத்துச்செல்கிறேன் என்று தைரியப்படுத்திக்கொண்டு, மலையில் வண்டியில் ஏற ஆரம்பித்தோம்...
கடைசியில் ஒருவழியாக கண்டும்பிடித்துவிட்டோம்...
அது ஒரு பள்ளத்தாக்கு, நடுவில் காட்டாறு.. அதில் ரோடு உள்ளது ரோட்டுக்கு மேல் முக்கால் அடி தண்ணீர்.. கடந்து அந்த பகுதி போனால் தான் விளையாட முடியும் ..யோசிக்கும்போதே எதிர் பக்கம் கார் வந்ததால், தைரியமாக ஓட்டுனர் காரை செலுத்த கார் சரியாக ஆற்றின் மையப்பகுதியில் சென்று நின்றுவிட்டது... கேக்கணுமா, எனக்கு விழுந்த வசவுகளை... ( எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில்...ஹிஹி.. பழகிவிட்டது..)
இப்ப காரை தள்ளணும்.. என் பக்கம் கதவை திறக்க முடியாது.. கணவரும் , ஓட்டுனரும் , இறங்கி காரைத்தள்ள, முடியவில்லை... ( பின்ன உள்ளே இருப்பது யாரு?..) இதை பார்த்துக்கொண்டிருந்த எதிர் காரிலிருந்தவர்கள் உதவ ஓடி வந்தார்கள்..
நான் இற‌ங்க‌லாம் என்றால் சின்ன‌வ‌ன் ப‌ய‌ப்ப‌டுகிறான்..ஒருவ‌ழியாக‌ நானும் இற‌ங்கி த‌ள்ளிய‌தும் கார் முன்னேறிய‌து... ந‌ன்றி சொல்லிவிட்டு மேட்டிற்கு சென்றோம்... குதிரை ப‌ழ‌க்கும் இட‌மும், சூரிய‌காந்தி தோட்ட‌மும், ம‌லைக‌ளின் ப‌ச்சை ப‌ட்டாடையும், அலுப்பு ச‌லிப்புக‌ளை நீக்கிய‌து..ர‌ம்மிய‌ம் தொற்றிக்கொண்ட‌து..
முத‌லில் எடிவி ( ATV- ALL TERRAIN VEHICLE/SPORT UTILITY )எனும் 4 ச‌க்க‌ர‌ மோட்டார்வாக‌ன‌ம்..க‌ர‌டு முர‌டான பாதையில் போக‌க்கூடிய‌து... நானும் என் பெரிய‌ ம‌க‌னும் ஏறிக்கொண்டோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ 4 கி.மீ ப‌ய‌ண‌ம், ம‌லைமேலே ஏற்ற‌மும், ச‌ர்ரென்று கீழே இற‌க்க‌மும்.களிமண் சகதியிலும், பாறைகளிலும். ப‌ய‌மாக‌த்தானிருக்குது, இருந்தாலும் பைய‌னிட‌ம் காண்பிக்க‌ முடியாதே...கீழே இற‌ங்கும்போது க‌த்துறான், " அம்மா ஆக்ஸிலேட்ட‌ரை போடாதீங்க‌, பிரேக‌ ம‌ட்டும் பிடிங்க‌ என்று.." சும்மாவே உத‌ற‌ல்..அக்க‌ம் ப‌க்க‌ம் பார்க்க‌க்கூடாது.. ப‌ள்ள‌த்தாக்கை பார்த்தால் போச்சு.! க‌ண்டிப்பாக‌ ஓட்ட‌ முடியாது...
ஒருவ‌ழியாக‌ ப‌த்திர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்... அடுத்து காட்டாற்றில் மித‌வை ப‌டகில் ப‌ய‌ண‌ம்.. தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை உட‌ம்புக்கும் , த‌லைக்கும் போட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு, ப‌ட‌கில் குடும்ப‌த்தோடு உட்கார்ந்தோம்..
"உன‌க்கு தெரிய‌மா, எப்ப‌டி போக‌ணும்னு"
" ம். அதெல்லாம் ப‌ய‌மில்லை , வாங்க‌ "..என்று தைரிய‌ம் சொல்லியாச்சு , இருந்தாலும் உள்ளுக்குள் உத‌ற‌ல்.. சின்ன‌ப்பைய‌ன் இருக்கானே என்று.. ப‌ட‌கோட்டியும் எங்க‌ளுட‌ன்.. ஆற்றில் ஆழ‌ம் அதிக‌மில்லை.. இடுப்ப‌ள‌வே த‌ண்ணீர், இருந்தாலும் இழுப்பு அதிக‌ம்...

நான் ( தைரியசாஆஆஆஆஆ...லி) முன்னால் உட்கார‌ அவ‌ர்க‌ள் மூவ‌ரும் பின்னால் ப‌ய‌ந்துகொண்டே..
ப‌டிப்ப‌டியாக‌ கீழே இற‌ங்கும் த‌ண்ணீர் பாய்ச்ச‌ல் மிக‌ அழ‌கு.. அழ‌குதானே ஆப‌த்தும்..?.
முத‌ல் ப‌டியில் மித‌வை அழ‌காக‌ இற‌ங்கிய‌து... தைரிய‌ம் வ‌ந்துவிட்ட‌து...
அடுத்தும்.... ப‌ர‌வாயில்லையே...
மூன்றாவ‌து கொஞ்ச‌ம் பெரிதும் சிக்க‌லான‌தும்...நேரே செல்ல‌ வேண்டைய‌ ப‌ட‌கு,
ஒரு பாறையில் முட்டி, மோதி, ச‌டாரென்று திரும்பிய‌து.. என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகுதோ என்று எண்ணும்போதே ப‌ட‌கு க‌விழ்ந்து அனைவ‌ரும் ப‌ட‌குக்கு அடியில்.....