Tuesday, November 6, 2007








யாரிவன்???.
===========


மாட்டிக்கொண்டேன், இன்று..வசமாக..
பெரிய அழகனாயிருந்தாலும் என் கவலை அதுவல்ல.


உன் பார்வை சரியில்லை என்று எத்தனை நாள் விலகி சென்றேன்...
நீ இருக்கும் திசை கூட வரமாட்டேனே!.


எல்லாருக்கும் உன்னை பத்தி தெரியும்..

ஆனால் அவர்களுக்கு உன்னைப்பற்றி கவலையில்லை.


நீயும் அவர்களிடம் நல்லவன்போல் பாசாங்கு செய்கிராய்..

அவர்களுக்கு உறுதுணையாகி விடுகிறாய் சில சமயம்..


என்னை அப்படி முறைத்து பார்க்காதே!..

தாங்க முடியாது அழுதுவிடுவேன், அசிங்கமாயிருக்கும்!.


நான் போகும் பாதை குறுக்கே நின்று என்ன விளையாட்டிது?

இன்று ஒரு நாள் மட்டும் வழி விட்டு விலகிவிடு,


உனக்கு இன்று வேலையில்லை என்றால் எனக்கென்ன?

என்க்கு அலுவல் செல்ல வேண்டும் புரிந்துகொள்!...









பெத்த கடன்.


உன் பிஞ்சு பாதம் பட்டு என் நெஞ்சு நிறைந்தது அன்று.
என் அஞ்சு பேரப்பிள்ளைகளின் பாதம் வேண்டி நெஞ்சு வலிக்குது இன்று.
என் கல்லறையிலாவது வந்து ஏறிவிளையாடச் சொல்,காத்திருப்பேன் என்றும்!.

Wednesday, October 31, 2007





மீண்டும் மீண்டும்!!!

=================


தென்றலாய் நுழைந்து ,

மண்வாசனை முகர்ந்து ,

குயில்களின் ஓசை பிடித்து ,

மர இலைகள் சலசலத்து,

தூரலில் ஆரம்பித்து,

வேகமெடுத்து புயலாய் மாறி,

சுனாமியாய் அனைத்தையும் எடுத்துச்சென்றாய் ,

படிப்பினை விட்டுச்சென்றாய்!!.


எல்லாம் முடிந்தது என்றிருந்த வேளையில்,

மீண்டும் தென்றலா????????
இது வரமா ? சாபமா?.

கெடுப்பினையா? கொடுப்பினையா?


இல்லையில்லை இதுதான் வாழ்க்கை!......

Friday, October 12, 2007





கல்லைக் கண்டா....................!!!!


காதலித்தபோது வேலையைக் காணோம்.

வேலைகிடைத்தபோது காதலியைக் காணோம்.!


குழந்தை கொஞ்ச நேரம் காணோம்.

வளர்ந்தான் அவனும் நேசம் காணோம்!


உறவினர் மகிழ செல்வம் காணோம்

செல்வம் வந்ததும் உறவுகள் காணோம்!


இளமையில் விவேகம் பொறுமை காணோம்

முதுமையில் வேகம் உடல்நலம் காணோம்!


வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது காணோம்

இழந்ததை நினைத்தால் இன்பத்தை காணோம்!

Tuesday, October 2, 2007






ஒரு வாழ்க்கை!

=============
ஒரு பாடல் மனதை ஆறுதல்படுத்தும்!.

ஒரு நட்ஷத்திரம் கப்பலை வழிநடத்தும்!

ஒரு மரம் தான் தோப்புக்கு வழிவகுக்கும்!.


ஒரு புன்னகை நட்பை ஆரம்பிக்கும்!.

ஒரு வார்த்தை அதை ஆழ்ப்படுத்தும்!.

ஒரு ஓட்டு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும்!.


ஒரு சூரியக்கதிர், உலகையே வெளிச்சமாக்கும்!

ஒரு மெழுகுவத்தி வீட்டின் இருளை நீக்கும்!.

ஒரு எட்டு தான் பயணத்தை தொடங்கும்!.


ஒரு சிரிப்பு சோகத்தையே கலைக்கும்!

ஒரு நம்பிக்கை வாழ்வையே வழிநடத்தும்!.


ஆகையால்,

உனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கு,

அதனை நன்றாக அமைக்க ஒரு மனதுமிருக்கு!.

பிரச்சனை, கவலையை ஓரமாக ஒதுக்கிவிடு!

ஒரு நிமிடம், ஒரு நொடி என் வாழ்ந்துவிடு!

Monday, September 24, 2007



காலமெல்லாம் காத்திருப்பு ..
=======================

பத்து மாதம் முடிந்த பின்னும் வெளிவர காத்திருந்தாள்.
பெண் என் தெரிந்ததும் அரளிக்கு காத்திருந்தாள்.

தம்பியுடன் பள்ளி செல்ல தவமாய் காத்திருந்தாள்.
கேள்வி ஞானம் மூலமாய் அறிவுபெற காத்திருந்தாள்.

பிஞ்சான பூ பின் கனியாக காத்திருந்தாள்.
கனியான்பின் திரு மணமாக காத்திருந்தாள்.

ஊரார் குறை சொல்ல தாயாக காத்திருந்தாள்.
பிரசவ வலியிலும் குழந்தை கொஞ்ச காத்திருந்தாள்.

விட்டுச் சென்ற மாமன் வீடு திரும்ப காத்திருந்தாள்.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் சிறப்பு பெற காத்திருந்தாள்.

அயல்நாடு தொலைபேசி அழைப்புக்கு காத்திருந்தாள்.
பேரப்பிள்ளை விளையாட ஊஞ்சலோடு காத்திருந்தாள்.

மகளாகி, தமக்கயாகி ,தாரமாகி, தாயுமாகி, காத்திருந்தவள்,
பாட்டியாகி தள்ளாத வயதினிலே கண்மூட காத்திருக்கிறாள்.


இணையத்து மாமா!.......
===================

அம்மா அடித்தால் அரவணைத்துக் கதை சொல்ல பாட்டி இல்லை
அப்பாவின் கோபத்தை தடுத்து சிரிப்பூட்ட செல்ல தாத்தா இல்லை

விதவிதமாய் சமைத்து ஒளித்து தர அத்தை இல்லை!
வித்தைகள் வாழ்க்கை முறை கத்துத்தர மாமன் இல்லை!

அன்போடு வீட்டுப்பாடம் சொல்லித்தர அக்கா இல்லை!
அடிச்சுப் பிடிச்சு பங்கு போட விளையாட அண்ணன் இல்லை!

ஊசிபோட்டால் வலிக்காது கண்ணுனு சொல்ல சித்தி இல்லை!
வலித்தாலும் ஆண்பிள்ளை அழாது ராசானு சொல்ல சித்தப்பா இல்லை!

விடுமுறை விட்டதும் காத்திருந்து தூக்கிச் செல்ல பெரியம்மா இல்லை!வயல்வெளி வாய்க்காலில் மீன் பிடிக்க கத்துதர பெரியப்பா இல்லை! ..

நீச்சல், சைக்கிள், தமிழ் சொல்லித்தர தமிழ் நண்பன் இல்லை!
மொத்தத்தில் இருப்பதுபோலிருந்தாலும் அன்பு செலுத்த ஆளிங்கில்லை!.

அம்மா சொன்னாள் கவலைப்படாதே எல்லோத்துக்கும் சேர்த்து இருக்கிறான்யா உன் இணையத்து மாமன்,ஈடிணையின்றியே!.

-------------------------------------------------------------..

என் இணைய சகோதரர்களுக்கு இக்கவி சமர்ப்பணம்.!